• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அவனை பார்த்ததும் எனக்கும் பதட்டமா போச்சு.


என்னன்னு கேட்டதுக்கு
.
முண்டி விழுங்கிட்டே இலைக்குள்ள பாடி.... ரத்தம்ன்னு பினாத்த ஆரம்பிச்சிட்டான். என்னன்னு இன்னும் இரண்டு பேரை ஏத்தி பார்க்க சொன்னேன்.


அவங்க ஏறி பாத்திட்டு.. ஆமா சார்.
.!

உள்ள ஒரு பாப்பா... உடம்பு பூரா ரத்த கறையோட கிடக்குதுன்னாங்க.


வாணி என் கையை இறுக்கி பிடிச்சிட்டு பயப்பட ஆரம்பிச்சிட்டா
..
சீக்கிறம் பாடிய இறக்குங்க, பார்க்கலாம்ன்னு இறக்கி நாடிய செக் பண்ணேன்.



உயிர் இருக்கிறது தெரிஞ்சிச்சு. இவ்ளோ ரத்தம் எங்க இருந்து வருதுன்னு ஆராஞ்சு பார்த்தா. உடம்பில எந்த காயமும் இல்ல.


ஆனா காது மூக்கு வாயால ரத்தம் கசிஞ்சு.. காய்ஞ்சு போயிருந்திச்சு.



சாதாரண மயக்கத்தில இருந்திருந்தா இவ எப்பவோ எழுந்திருந்திருக்கணும்... ரத்தம் காய்ஞ்சு போயிருக்குன்னா இதே நிலையில ரொம்ப நேரம் மயக்கத்தில கிடந்திருக்கான்னு,
உடனேயே ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ்ஸ வரவைச்சு, அட்மிட் பண்ணி பரிதோசிச்சு பாத்ததில, அவ கோமாக்கு போயிருக்காங்றது தெரிஞ்சிச்சு.



இவ யாரு என்னன்னு தெரியல... வாலை இலை கொண்டுவந்த வண்டிக்காரங்கள கூப்பிட்டு விசாரிச்சப்போ,


அவங்களுக்கும் அந்த பாப்பா எப்பிடி வண்டிக்குள்ள வந்தான்னு தெரியல.
பல ஊர்ல இருந்து வாலையிலை ஆடர் எடுத்திருக்காங்க.. எங்களை போல நிறையப்பேருக்கு சப்ளையும் பண்ணிருக்காங்க... அதோட வரப்போ வழியில நிறைய இறத்தில வண்டிய நிறுத்தி சாப்பிட்டிருக்காங்க, அதனால இவ எப்பிடி வண்டிக்குள்ள வந்திருப்பான்னு யாருக்கும் தெரியல.



சரி...! இவ சரியானதும் போலீஸ்க்கு தகவல் சொல்லலாம். இந்த நிலையில இவளை பெத்தவங்க பார்த்தா உயிரையே விட்டிடுவாங்கன்னு யாருக்கும் தகவல் சொல்லவும் இல்லை. சொல்லுறத்துக்கு யாரையும் அனுமதிக்கவுமில்லை.



(ஆம் சுதாகர் ஒரு பிரபல வைத்தியர், அந்த அரச வைத்தியசாலையின் நிர்வாகியும் கூட.



முதலில் சாதாரண வைத்தியராக கடமை ஆற்றத்தான் வந்தான். பின் தன் தகமையினை உயர்த்திக்கொண்டவன்,


வைத்தியத்துறையில் நேர்மையும், கடமை தவறா குணமும், சக வைத்தியர்களின் கடமை தவறல்களை கண்டிக்கும் மனத்திடமும், அவன் தகமையினை இன்னும் உயரச்செய்தது.


அதன் அடிப்படையிலேயே அந்த மாகாணத்திலே உள்ள பெரும் அரச மருத்துவமனையின் நிர்வாகி என்கின்ற பெரும் பொறுப்பினை அவனுக்கு அழித்திருந்தது.)


இவளுக்கே என் மொத்த நாளையும் செலவு பண்ணி, ரீட்மென்ட் பண்ணினேன்... சரியா பதினெராவது நாள் கண்ணு முழிச்சா.



இவ சுயநினைவு இல்லாம இருக்கிறப்போல்லாம் வாணி தினமும் இவளை வந்து பாக்கிறதும், இவளையே பாத்திட்டு சிலமணிநேரம் அங்கேயே இருக்கிறதும்ன்னு என்னன்னே தெரியாம இவமேல அதிக அக்கறை காட்ட ஆரம்பிச்சா.



அன்னைக்கு தினமும் செக்கப் பண்ற டாக்டஸ் செக்கப் பண்ணிட்டிருக்கிறப்போ, தான் கண் முழிச்சிருக்கா.



தன்னை சுத்தி இருந்த கூட்டத்தை பாத்ததும் பயத்தில முழிச்சிட்டிருந்தாளாம்... அப்புறம் பயத்தை தெளிய வைக்கிறத்துக்காக அவங்க சாதாரணமா அவகூட விளையாடிட்டே அவயாரு, என்னன்னு கேள்வி கேட்டிருக்காங்க.



ஆனா யாருகேட்ட கேள்விக்கும் அவளால பதில் சொல்ல முடியல்லை. ஆனா எல்லாத்தையும் கிரகிக்க முடிஞ்சிது.



அவ பதில் சொல்லாததுக்கு இரண்டு காரணம் இருந்திருக்குன்னு அப்புறம் அவளை நல்லா டெஸ்ட் பண்ணதுக்கபுறம் தான் தெரிஞ்சிச்சு.




ஆமா! அவளால பேசவும் முடியல்லை. தான் யாரு? என்ன பெயர்ன்னு கூட அவளக்கு நினைவில்லை.
அந்த நேரம் பார்த்து.. வைஷூவ பாக்க வாணி அங்க வந்திருந்தா! வாணியை கண்டதும், அவங்களை எல்லாம் கடந்து ஓடிப்போய் வாணியோட காலை இறுக்கி கட்டிப்பிடிச்சு பாதுகாப்பு தேடியிருக்கா.
அப்புறமென்னா.. வாணியும் அவளோட அந்த செயலை பாத்துட்டு.. தாய்மை உணர்வினால நம்மளே வளர்த்துப்போம்.. யாராச்சும் தேடிவந்தா தந்திடுவோம்ன்னா.
.



நானும் நமக்கு தான் பிள்ளை இல்லையே! இவளை நம்ம பிள்ளையா வளர்த்துப்போம்ன்னு வாணி சொன்னதுக்கு சம்மதிச்சிட்டேன்.



நாம எதிர் பார்த்த மாதிரியே யாரும் வைஷவ தேடி வரல.. பேப்பர்லயும் சரி, டீவீயிலயும் சரி நியூஸ் இல்லை.


இவ வந்த ராசியோ என்னமோ! எனக்கும் அந்த சமயத்தில மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி தேடி வந்திச்சு..




அதில விருப்பமே இல்லன்னாலும்... என் மகளை பாக்குறவங்க எல்லாரும் ஊமைச்சிய எடுத்த வளர்க்கிற... ஏன் உனக்கு சொத்தைதான் கண்ணுக்கு தெரிஞ்சிச்சா? எடுத்து வளர்க்குறது தான் வளர்க்குற.. குறையில்லாதத வளர்க்க வேண்டியது தானே!
நாளைக்கு இவளை எவன் கட்டிப்பான்..? இவளுக்காக எவன் எவனோ கால்லயா விழப்போறன்னு ஊர் பேச்சு கேடக முடியல.



இப்போ என்ன சொன்னாலும் இவளுக்கு புரியாது.


வளரவளர இவங்க சொல்லுறது புரிய ஆரம்பிச்சிடும்.. அவ வளர்ப்பு பிள்ளைன்னு தெரிஞ்சா.. அவமனசில பாதிப்பு வந்திடும்ன்னு தான், வேலைய காரணம் காட்டி நீர்கொழும்பு போனோம்.


அதுக்கப்புறம் அந்த ஊர்பக்கம் நானும் வாணியும் போனதே இல்ல.


கொண்டாட்டம் அது இதுன்னு சொல்லுவாங்க... நான் மட்டும் போயிட்டு வந்திடுவேன்.


வாணியையோ... என் பொண்ணையாே அழைச்சிட்டு போகமாட்டேன்.

எங்க அவ காதுபட பேசி இந்த உண்மை தெரிஞ்சிடுமோன்ன பயம்." என்றவர்,




"ஒரு மாதத்துக்கு முன்னாடி தான் என்னோட சின்னவயசு பொருள் ஏதாவது வைச்சிருக்கியாம்மான்னு வாணிய கேட்டிருக்கா.


நிறைய பொருளுங்களோட அந்த மோதிரமும் வைச்சிருந்தோம். அதை எடுத்து தன்னோட செயின்ல மாட்டி, நல்லா இருக்கான்னு கேட்டா.. நாங்களும் உண்மை தெரியாம.. நல்லா இருக்குன்னோம்.. சிரிச்சிட்டு போயிட்டா.




இப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி.... தம்பி போன் போட்டு உங்ககூட பேசணும்... நேரில வந்தா பேசலாமான்னு கேட்டாரு.



இது தான் விஷயம்ன்னு தெரியாம, வாங்கன்னு அட்றஸ் கொடுத்தேன். அப்போ தான் வைஷூவ பத்தி விசாரிச்சாரு.



எதுக்கு இதைகேக்குறீங்கன்னதுக்கு... தன்னோட போலீஸ் ஐடிய எடுத்து காமிச்சு.. உண்மை எல்லாம் சொன்னாரு.
அதுக்குமேல உண்மைய மறைக்க முடியல... எல்லாத்தையும் சொல்லிட்டோம்.



அதுக்கப்புறம் தான்... ஊரில நடக்கிற கொலையும்... அந்த கொலையில வைஷூக்கு தொடர்பிருக்கோன்னு சந்தேகமா
இருக்கு... நீங்க ஒருவாட்டி ஊருக்கு வரமுடியுமான்னு கேட்டாரு.


எனக்கு பயம் வந்திட்டுது... அவசர அவசரமா ஆஃபீஸ்க்கு கால் பண்ணி.. ஒரு மாதம் மெடிக்கல் லீவ் போட்டிட்டு வைஷூக்கு பொய்யா தகவல் சொல்லிட்டு தம்பி கூடவே வந்திட்டோம்.


இத்தனை நாளா யாருக்கும் தெரியாம, இதே மாதிரி ஒரு பங்களாவில தங்கவைச்சிருந்தாரு.
எப்பவுமே வைஷூ எங்களுக்கு கிடைச்ச நாள் அன்னைக்கு.. அவ பர்த்டேய ரொம்ப பெருசா கொண்டாடுவோம்.


இத்தனை வருஷமா இந்த நாள்ல அவளை விட்டு பிரிஞ்சதே இல்லையா? அதனால தான் தம்பிக்கிட்ட கேட்டு அவளை பார்க்க வந்தோம்.


ஆனா வந்த இடத்தில இப்பிடி ஆகிடிச்சு." வருத்தமாக கூறி முடித்தவர் பேச்சினை கேட்டு வைஷூ குனிந்த தலை நிமிராது இருக்க,


" என்னடா இதெல்லாம்? இவங்க சொல்லுறது தான் உண்மைன்னா... அப்போ இவ யாருடா?" என்றார் அம்முவாக வந்திருப்பளை காட்டி.


"அதை நான் சொல்லுறனே! உங்களுக்கு எதுக்கு சிரமம்?" என ஆதி பதில் கூற வாயெடுப்பதற்கு முன்னர், வாசலில் இருந்து வேறொரு குரல் அவனை முந்திக்கொண்டு ஒலிக்க, அனைவர் தலையும் குரல் வந்த திசைக்கு திரும்பியது.



ஆம் அந்த குரலுக்கு சொந்தக்காரன் நந்தனே தான்.


பாதுகாப்பு கருதி தன்னுடன் மூவரை அழைத்து வந்தவன் நடுநாயகமாக முன்னே நடக்க.. அவன் வேகநடைக்கு ஈடுகொடுத்து அவன் பின்னால் அந்த தடியர்களும் ஓடி வந்தனர்.
அதில் பொண்ணுசாமியும் உள்ளடக்கம்.



அவனை அந்த நேரம் எதிர்பாராத அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சியின் உச்சம் தெரிந்தது.



அவனோ அது எல்லாம் தனக்கு ஒன்றுமில்லை என்பதுபோல் அவர்கள் முன் வந்து நின்றவன்.




"ஆதிய பெத்தவங்க தானே நீங்க? அவரை பாத்தா உங்களுக்கு பாவமா இல்லை?
ரொம்ப நேரமா தம்பியே பேசிட்டு இருந்தா கஷ்டமா இராது?


அதான் நானே நேர வந்திருக்கேன்." என்றவனை கண்டதும், அவன் பின்னால் ஓடிப்போய் நின்றவள் செயலே சொன்னது அவள் யாருடைய ஆள் என்பதை.


அவளை வெற்றிப்புன்னகையோடு திரும்பி பார்த்தவன், அதே பார்வையினை ரஞ்சனியிடம் திருப்பி,



"இதுகப்புறம் நானும் சொல்ல வேண்டியதில்லன்னு நினைக்கிறேன்.
அப்புறம் தம்பி பெரிய திறமைசாலிதான்!


நான் மோப்பம் பிடிப்போம்ன்னு லைட்டா மூக்க உறிஞ்சுறதுக்குள்ள.. தம்பி வேகமாப்போயி தூக்கிட்டே வந்திட்டீங்களே!" என வஞ்சகமாய் புகழ்ந்தவன்,


நான் ஒரு மடையன்... யோசிக்காம பேசிட்டு...

திறமை இல்லாமலா... இந்த வயசிலயே பெரிய பதவிய தூக்கி தருவாங்க?"என்றவாறு வைஷூவின் முன் போய் நின்றவன்,



"எப்படிபட்ட குடும்பத்தில பிறந்திட்டு.. என்ன காரியம் பண்ணிருக்க?" என பல்லை கடித்தவாறு உறுமியவன் கைகளோ, யாரும் எதிர்பாக்காத நேரம் அவள் தொண்டை குழியை திருக ஆரம்பித்தது.




"எபபிடி எப்படி? நீ என்னை கொல்லுற வரைக்கும், நான் பூப்பறிச்சிட்டிருப்பேன்னு நினைச்சிட்டிருந்தியா? இல்ல முன்னாடி கொன்னவங்கள போல, நானும் பொட்டைப் பயல்னு நினைச்சியாே?
எங்க இப்போ உன் கண்முன்னாடி தான் நிக்குறேன்.... கொல்லடி பாப்போம்." என பற்களை நெருமியவன், அவள் கழுத்தினை இன்னமும் நெரித்தான்.





அருகில் நின்றிருந்த பிரகாஷாே அவன் கையினை இழுத்து, அவனை விலக்கியவர், எதற்கும் அஞ்சாதவளாய் அப்போதும் இறுமாப்புடன் நின்றவளை மறைத்தவாறு போய் நின்று,




"பண்ற பாவத்தையெல்லாம் பண்ணி... எங்க குடும்பத்தை சீரழிச்சிட்டு.. இப்போ எங்க கண்ணு முன்னாடியேு இவளையும் கொலை பண்ணப்பாக்கிறியா?
ரமேஷ் இந்த ஊருக்கு நல்லது தானேடா பண்ணான்.


அப்புறம் ஏன் அவன் குடும்பத்தை கொன்ன?" என்றார் வைஷூவின் இந்த நிலமைக்கு காரணமானவனிடம் கோபமாக.




வைஷூவிடமிருந்து விலக்கியவரை, அனல் தெறிக்க நோக்கியவன்.



"நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.. உன்னால தான்.. உன் பொஞ்சாதியோட அண்ணன் குடும்பத்த கொல்லவேண்டி வந்திச்சு.



அப்புறம் எதுவும் தெரியாதவனாட்டம் என்கிட்ட கேக்குற?" என சொன்னவன் பதிலில் பிரகாஷோ ஒருநெடி மிரண்டுவிட்டார்.


"என்ன உளர்ற? நீ பண்ண கொலைக்கு.. என்னை காரணம் காட்டி, என்மேல பழிபோட நினைக்கிறியா?"




"நான் உளர்றேனா? நீ ஒரு கேனபயல்.. அதனால தான் அவங்க செத்து போனாங்க." என இழக்கமாக பேசியவன்.




"உன்னோட மச்சினன் உங்களுக்கு கட்டி தந்தானே ஒரு பங்களா... அது உன்னோடதுன்னு நினைச்சிட்டிருக்கியா?" என பலமாக சிரித்தான்.
பிரகாஷக்கு அவன் கூற்று புரியவில்லை. அவனை இமைகள் இடுங்க பார்க்க.



"நான் சொல்லல்ல... நீ ஒரு கேனபயன்னு." என மீண்டும் பொய்யாய் நகைத்தவன்.




"அந்த பங்களா பதின்னாலு வருஷத்துக்கு முன்னாடியே, உன் தங்கை புருஷன் பெயருக்கு மாறிடிச்சு."




"ஒருவாட்டி உன் தங்கை புருஷன், அதான் உன்னோட மச்சினன், புதுசா பிஸினஸ் ஆரம்பிக்க போறேன்... ஒரே ஒரு வாரண்டி கையெழுத்து மட்டும் போடுங்க.. பேங்கில லோன் எடுக்க போறேன்னு கேட்டானே நினைவிருக்கா.?




நீயும் வீட்டோட மாப்பிள்ளையா வந்தவன், ரமேஷ்கிட்ட கேட்டா உன் கௌரவம் குறைஞ்சிடும்னு நினைச்சிட்டு, பெரிய தியாக செம்மலாட்டம், பத்திரத்தை படிச்சு பார்க்காம,


கையெழுத்து போட்டு குடுத்தியே! அதில என்ன எழுதியிருந்திச்சு தெரியுமா?
ரொம்ப நாளா உன் மச்சினனுக்கு உன் சம்சாரத்தோட சொத்து மேல கண்ணு.. அதில பாதியாவது தன் பெயருக்கு மாத்திடணும்னு சந்தர்ப்பம் பார்த்திட்டிருந்தான்.




அதோட முதலாவது படியாத்தான் அந்த பங்களாவ தன்னோட பெயர்ல மாத்திறத்துக்கு ப்ளான் போட்டு..



பத்திரமெல்லாம் ஏற்பாடு பண்ணி, உன்கிட்டையும், உன் சம்சாரத்துக்கிட்டையும் கையெழுத்து வாங்கின முட்டளுக்கு தெரியல்ல...
அந்த வீடு ரமேஷுக்கு அடுத்த படியாத்தான் உங்களுக்கு சேரும்னு எழுத்து மூலம் இருந்தது.



அதாவது ரமேஷ் அந்த பங்களாவ உங்களோட பெயருக்கு முழுவதுமா மாத்துறத்துக்கு முன்னாடி, உன் மச்சினன் அவசரப்பட்டுட்டான்.



அவனோட அவசரத்தினால இந்த தகவல் ரமேஷ் காதுக்கு அவனோட வக்கீல் மூலம் போய் சேந்திருக்கு."



"உன் மச்சினனை வரவைச்சு, விசாரிச்சப்போ முழிக்க ஆரம்பிச்சிட்டான்.



இதோ இப்பவே பிரகாஷ்கிட்ட உண்மையெல்லாம் சொல்லி உன்னோட முகத்திரைய கிழிக்கிறேன்.




உனக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவருக்கு, நம்பிக்கை துரோகம் பண்ண நினைக்கிறியே... என்னமாதிரியான மனுஷன்டா நீ?" என கேட்டவனது கையினை இறுகப்பற்றி,



"ரமேஷ் ஏதோ ஆசையில இந்தமாதிரி பண்ணிட்டேன்...
மச்சான்கிட்ட சொன்னிங்கன்னா, அவரு நிச்சயமா என்னை மன்னிக்க மாட்டாரு. அவரு தங்கையையும் என்கிட்ட இருந்து பிரிச்சு.. கூட்டிட்டு போயிடுவாரு, அவவேற இப்போ நிறை மாசமா இருக்கா,



தன்னோட அண்ணனையே நான் ஏமாத்திட்டேன்னு தெரிஞ்சு, அவ கவலைப்பட போய், குழந்தைக்கு ஏதாவது ஆகிடப்போகுது. ப்ளீஸ் ரமேஷ்!



என்னோட தப்ப நான் உணர்ந்திட்டேன். அத சரிபண்ணிக்க ஒரு வாய்ப்பு தாங்க." என அவன் கையினை கண்களில் ஒற்றி கெஞ்சியவனை அப்படியே நம்பிவிட்டான் அவன்.




"சரி சரி...!" என்றவனுக்கோ தன் வயதை ஒத்தவன் தன்னிடம் மன்னிப்பு வேண்டுவது ஒரு மாதிரியாகிப்போனது.




"இத பாருங்க லிங்கேஷ்.. நீங்க இந்த மாதிரி கெஞ்சினதால தான், சும்மா விடுறேன். அதவிட ஒன்னுக்குள்ள ஒன்னுவேற.... நீங்களே மாப்பிள்ளைய ஏமாத்துறது தெரிஞ்சா, ஊருக்குள்ள கேவலமா பேசுவாங்க.




அவரு கையெழுத்து போட்ட பத்திரத்தை என்கிட்ட கொண்டுவந்து தர வழிய பாருங்க... நானே அதை கிழிச்சு போடுறேன்.. இல்லன்னா போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவேன்."



"அப்பிடில்லாம் பண்ணிடாதிங்க ரமேஷ். பத்திரம் ஊரில தான் இருக்கு,
அடுத்த வாரம் மாப்பிள்ளைய பார்க்க திரும்ப வருவேன். அப்போ தந்துடுறேன்" என கூறியதும், அதற்குமேல் அவன் வற்புறுத்தவில்லை.




ஏன் என்றால் ஒவ்வொரு வாரமும் பிரகாஷை தேடி வந்துவிடுவான் அவன்.



ஆம்....! பிரகாஷின் குடும்பம் நடுத்தரத்து குடும்பம்.
தங்கள் தகுதிக்கு தகுந்தாற்போலவே, அவள் தங்கைக்கு வரன் பார்த்து கட்டிக்கொடுத்தருந்தனர்.

சொந்தமாக வேலையில்லாமல் தெருவில் ஊர்சுற்றித் திரிந்தவனை, அவன் தங்கை தலையில் கட்டித்தொலைத்து விட்டிருந்தனர் அவன் பொற்றோர்.




அவர்களுக்கு அவர்கள் பொறுப்பு கழிந்திடவேண்டும். இது தான் அவர்கள் நோக்கம். அதன் பின்னர் மகளின் வாழ்க்கையை என்னாகும் என நினைத்து பார்க்க விரும்பாதவர்கள்.



திருமணமாகி பத்துவருடங்களுக்கு பின்னர் தான் அவள் தாய்மையே அடைந்திருந்தாள்.


லிங்கேஷ் குடும்பத்தின் மேல் அக்கறையற்றவன்.


வேலைகளுக்கு சரியாக போகமாட்டான். இன்று ஓர் வேலையில் இருந்தால்... மறு வாரம் வேறெரு வேலைக்கு செல்வதாக கூறுவான்.




எந்த வேலையிலும் நிதந்தரமில்லை. அவன் மனைவி கேள்வி கேட்க போனால், நீ கொண்டு வந்த வரதட்சனையோட பாரத்தில, எனக்கு எங்க நல்ல வேலை கிடைக்கும்? என்று அதற்கும் மனைவி மீதே பழிபோடுவான்.




இத்தனை வருடங்கள் ஏதோ குடும்பத்தை கொண்டு போகட்டும். என கண்டுக்காது விட்ட பிரகாஷ்.



தங்கை கருவுற்றதும் அந்த குழந்தையாவது இந்த உலகத்திற்கு நல்லபடியாக வந்து சேரவேண்டுமென்ற நோக்கத்தோடே, என்ன உதவி வேண்டுமென்று கேட்கும்படி ஒரே ஒரு வார்த்தை விட்டுவிட்டான்.




அதன் பிறகு வாரம் ஒருமுறை உதவிகோரி அங்கு ஆயராகிவிடுவான் லிங்கேஷ்.


அதனாலேயே ரமேஷ் எப்படியும் வந்துவிடுவான் என நம்பி அனுப்பி வைத்தான்.



அன்று ஊருக்கு போனவன் தான். இரண்டே நாளில் அனி பிறந்துவிட, அதை காரணம் கூறி வர மறுத்தவன்.


ஒரு மாதகாலம் ஆகியும் வரவில்லை.
அன்றுதான் அம்முவின் பிறந்தநாள்.




தங்கையின் குழந்தை பிறந்து முப்பத்தியோராம் நாள் கொண்டாட்டத்திற்கு செல்பவர்களிடம், "அந்த பத்திரத்தை ஒரு கவருக்குள் மறைத்து வைத்து, என்னிடம் தரச்சொல்லு!" என போனில் கட்டளையிட்டவனிடம்.




சரி எனக்கூறி போனை வைத்தவன் தான், மறுநொடியோ போனில் வேறொரு இலக்கத்தை அழுத்தி,


"ரொம்ப டார்ச்சல் பண்றான். இவன் இருக்கிற வரைக்கும், நான் நினைச்சது நடக்காது.

அதனால குடும்பத்தோட போட்டுத்தள்ளிடு! என்னோட பெயர் எந்த இடத்திலும் வராம பாத்துக்கோ!" என தகவல் கூறி வைத்தான்.



ஆம்..! அவன் அழைத்தது நந்தனுக்கு தான். ஏற்கனவே தீர்க்கப்படாத ஒரு வஞ்சத்தை மனதில் வைத்திருந்தவன், உதட்டில் கர்வமாய் ஒரு புன்னகை.



"என்னை யாருமில்லாத அநாதையாக்கின உன்னை, எப்பிடி பழிவாங்குறதுன்னு தெரியாம, தக்க சமயத்தை எதிர்பாத்திட்டிருந்தேன்.


ஆனா பாரு உன் வீட்டுக்காரங்களாலயே, உன் சாவு என்னை தேடி வந்திருக்கு." என உறுமியவன் நினைவுகளே ஐந்து வருடங்களுக்கு முன் பயனித்தது.



அன்று மழையோ வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.
தங்கையின் பங்களா கட்டுமான பணியினை பார்வையிட வந்தவன்,

திரும்பும் போது பாதி வழியிலேயே மழை பிடித்துக்கொண்டது.



தூறலின் போதே ஒதுங்க இடம் தேடியவன், கண்களில் பாதையின் ஓரமாக பாழடைந்த வீடொன்று தென்பட, தன் பைக்கினை தள்ளிக்கொண்டு வந்து, அந்த வீட்டின் தாழ்வாரத்தினின் மழைபடாதவாறு பக்கவாட்டில் விட்டுவிட்டு, தானும் ஒதுங்கிக்கொண்டான்.



அந்தவீட்டின் அமைப்பினை ஆராய்ந்தவனுக்கு உள்ளுக்குள் பயம் ஒட்டிக்கொண்டது.
அதே நேரம் மழையும் வேகமெடுத்தது.



'வீட்டை பாராத்தா ரொம்பகாலம் பயன்படுத்தாம இருக்கும் போலயே!' என தரையில் சிதறியிருந்த மாஞ்சருகுகளை அராய்ந்தவாறு,



'போய் பிசாசு குடியிருக்கிற வீடா இருக்குமோ?
'
என வீட்டின் வெளிபுற தோற்றத்தை அளந்துவிட்டு, வானத்தை நிமிர்ந்து பார்த்தான்.


நேரமென்னமோ மாலை நான்கு மணிதான். ஆனால் ஆறுமணியினைப்போல் சூரியனை மேகம் கௌவிக்கொண்டு, பூமியினை தழுவும் சூரியக்கதிர்களை தன் கருநிற தாவணிக்குள் மறைத்திருந்தது.



அதுவே மழை ஓய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை வெளிப்படுத்த,





'இங்கேயே நின்னு பீதியில சாகிறத விட, மழையில நனைஞ்சு செத்தாலும் கௌரவமா இருக்கும். பேய் பயத்திலயே செத்தேன்னு தெரிஞ்சா சிரிப்பாங்க.' என புலம்பியவனாய் பைக்கினை தள்ளப்போனவன், காதுகளில் யாரோ கிசுகிசுப்பதைப்போல் கேட்க.


அந்த சத்தத்தில் பயம்கூடிப்போனது.


அசையாது நின்றவன் காதுகளில் மீண்டும் அதே கிசுகிசுப்பான குரல். ஆனால் அது அமானுஷ்யம் போல் தெரியவில்லை... உள்ளேயிருந்து யாரோ ரகசியமாக பேசுவது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தெள்ளத்தெளிவாக தெரிய,




'இந்த மாதிரியா இருக்கிற வீட்டுக்கு வெளிய நிக்கவே குடல் நடுங்குதே! கொஞ்சம் கூட பயமில்லாம உள்ள யாரு இருப்பாங்க?' என உள்ளே சென்று பார்க்க பீதி கொண்டவனாய், அருகே இருந்த சாளரத்தை கொஞ்சமாக திறந்து பார்த்தான்.


தரையில் கிடந்த மாராப்பினை எடுத்து தன் மார்பினினை மூடியவள், முட்டிக்காலுக்கு மேலே ஏறிப்போயிருந்த புடவையினை இருந்தவாக்கிலே சரி செய்துகொண்டிருந்தாள்.



அவளின் அருகே இருந்தவனின் பார்வையோ, அவளது மேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் மேய்ந்து கொண்டிருந்தது.
அவன் பார்வை போக்கை அறிந்தவளோ!


"ச்சீ... கெட்டபயலே..! இன்னமுமா உன் ஆசை அடங்கல? ஒரு நாளைக்கு ஒருவாட்டி போதும்." என்றாள் சிணுங்கலாய்,




"சரி சரி.... சீக்கிரம் எனக்காக கொண்டுவந்த பரிச தா...! புல்லுப்புடுங்க போனவள காணல. மழையில மட்டிக்கிட்டனோன்னு நினைச்சு என் புருஷன் தேடிட்டு வந்து, நம்மள இந்தமாதரி பாத்தாருன்னா, அப்புறம் உன் பொஞ்சாதி புள்ளங்களோட சேத்து எனக்கும் நீதான் கஞ்சி ஊத்தவேண்டி வந்திடும்." என சற்று கண்டிப்போடு கூறியவள் உதட்டினில் கோபமில்லை.


மாறாக புன்னகையே அரும்பியிருந்தது.



"என்னது நானா? ஏற்கனவே வீட்டில மூனு பொட்டச்சிங்களுக்கு கஞ்சி ஊத்த வழியில்லாம இருக்கேன்.



இதில உனக்குமா? தாங்காதும்மா!" என்றவன், அருகில் கிடந்த தன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு, சின்னதாய் கடதாசியில் சுத்தப்பட்டிருந்த பொதியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.



"இந்தா.... இது தூங்கிட்டிருந்த என் பெரிய பொண்ணு காதில கிடந்தது. அவளுக்கே தெரியாம கழட்டிட்டு வந்துட்டேன்." என பெருமை பாடியவன் கையிலிருந்ததை ஆர்வத்தோடு வாங்கி பார்த்தவளோ!



"நீ தோட்ட கழட்டுறப்போ உன் சம்சாரம் பாக்கலையாக்கும்." என்றாள்.


"அவதான் கூலிக்கு போயிட்டாளே!" என தன் வீரத்தை பெருமை பாடியவனை புன்னகையோடு ஏறிட்டவள்.



"அதானே பாத்தேன்.. நீயாவது உன் பொஞ்சாதியோட சண்டை போடுறதாக்கும். அவமேல உனக்கு எங்க ஆசை போகப்போகுது."


"உன்மேலயே இத்தனை ஆசை வைச்சிருந்தா, கட்டினவமேல இருக்காதா?" என அவள் கன்னத்தை பிடித்திழுத்து கொஞ்சியவன் கையினை தட்டிவிட்டவள்,



"அடுத்த ரவுண்டாக்கும்." என அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்தவளை கண்டு, மா மரத்தின் பின்னால் ஒழிந்துகொண்டான் ரமேஷ்.
மழை நீருக்கு அஞ்சி புடவையினை மொட்டாக்காக போட்டிருந்தவள் பார்வையில், அவனும் அவனது பைக்மும் அகப்படவில்லை.


போகும் அவளையே மழையில் நனைந்தவாறு பார்த்திருந்தவன் உதடுகளோ, அருவெருப்பில் கோணிப்போனது.



"இதுக்கெல்லாம் கட்டினவனுக்கு துரோகம் செய்ய எப்பிடித்தான் மனசு வருதோ!" என நினைத்தவன் விழிகளோ அந்த வீட்டின் வாசலிலேயே வருபவனை எதிர்பார்த்து காத்திருந்தது.

ஆம்.. அவன் எதிர்பார்த்திருப்பது வேறு யாருமல்ல. தன் வயலில் வேலை பார்க்கும் ராசாத்தியின் கணவன் நந்தனையே தான்.


அவள் குடும்பத்தை பற்றி ரமேஷ் நன்கு அறிவான். இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுவிட்டு, குடி, சூது என பொறுப்பற்று திரியும் கணவன்.


கணவனின் பெறுப்பற்ற நடவடிக்கையினால், தான் பெண் என்று கூட இல்லாது, உடல் வருத்தி தினமும் கூலித்தொழிலுக்கு செல்லும் ராசத்தியை பலதடவைகள் புத்திகூறி விட்டான்.


"பெண்களோட உடம்பு ரொம்பவே மென்மையானது.. இந்தமாதிரி சின்னவயசிலயே தோட்டம் காெத்துறது, கல்லு தூக்கிறதுன்னு என்ன வேல வந்தாலும் கூலிக்குப்போறியே.. நாளைக்கு உனக்கேதாவது ஆகிட்டா, அந்த பச்சப்பாலன்களோட நிலமைய நினைச்சு பாத்தியா?" என்றால்,




"என் தலைவிதி அவ்ளோ தான்னா யாராலையா மாத்தமுடியும்? நான் பெத்திருக்கிறது ரெண்டும் பொட்டச்சிங்களாச்சே! இப்பவே நான் ஒடுங்கி கிடந்திட்டா.. வயசுபோன நேரத்தில அதுகளுக்கு ஏதாவது சேர்த்து வைக்க முடியுமா?"
என சொல்லிவிட்டு செல்பவளையே பார்த்து நின்பவன் மனதில் இவன் கணவன் என்ன செய்கிறான் என்ற கேள்வி எழுவதுண்டு.


ஆனால் இவனைபற்றிய குறையாக எந்த ஒரு தகவலையும் அவள் கூறியதில்லை.



அவன் கேள்விப்பட்ட வரை நந்தன் ஒரு பொறுப்பற்றவன். என்பது மாத்திரமே!


ஆனால் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தோட்டினையே திருடிக்கொண்டுவந்து, ஆசை நாயகிக்கு பரிசாக வழங்கும் அளவிற்கு கீழ்த்தனமானவன் என்று நினைக்கவில்லை.


ராசாத்தி உண்மையில் பாவம் தான்.. வேகாத வெயிலில் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பாடுபட்டு சேர்க்கும் பொருற்களையெல்லாம், இப்படி திருடிக்கொண்டு வந்தால்.. அவள் காலத்துக்கும் வெயிலடிக்க வேண்டியது தான்.



இதற்கு இன்றோடு முடிவு கட்டவேண்டும் என்றால், இவனுக்கு புத்திகூறி இவனை பொறுப்பானவனாக்க வேண்டும். என அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவனை, ஏமாற்றாது வந்தவன் முன் தொப்பலாக நனைந்து நின்றவனை கண்டதும் தயங்கிப்போனன்.
 
Top