• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

44. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
போனில் கேட்ட தகவலினால் உடலென்கும் நடுக்கம் பரவ, கதற ஆரம்பித்தவர்கள்,



போனில் வழங்கப்பட்ட தகவலின்படி ஹாப்பிடல் சென்றவர்கள்



அங்கு கும்பலாக நின்ற போலீஸை கண்டு



அந்த இடம் விரைந்தார்கள்



"சார் நான் ரவீந்திர,



இவ என் மனைவி கமலி" என தங்களை அறிமுகம் செய்து,



"மூணு மணிநேரத்துக்கு முன்னாடி என் பையனோட போனில பேசிட்டு இருக்கும் போது பெருசா ஒரு சத்தம் கேட்டிச்சி, அப்புறம் என் பையனோட குரலைக் காணல. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தான் நான் லைன்ல இருக்கிறத பாத்திட்டு, அங்க நின்னவங்கள்ல ஒருத்தரு தகவல் தந்தாங்க " என்று நடுங்கியவாறு கூற.



"ஆமா ஆக்சிடன்ட் ஆனது உண்மைதான். நீங்க யாரு?" என்றார் சினத்தில் இருந்த அதிகாரி.



"அவங்க எங்க பசங்கதான் சார்!" என்றார் குரலானது கரகரத்து வெளியே வர,



ஆக்சிடன்ட் ஸ்பாட்டில் நடந்த கோர நிகழ்வை பார்த்தவரால், 'பெரிய இழப்பை சந்திக்க போபவர்களிடம் போபத்தை காட்டுவது மனிதாபிமானமான செயலல்ல.' என நினைத்தவர்,



"ஓ... உன்க பசங்களா?



ஏன் சார்! வண்டி ஓட்டத்தெரியாதவங்க கிட்ட வண்டியை கொடுத்து விடுறீங்க? நீங்க பண்ணுற தப்பினால எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?"



"சார்.....! அவங்க ரெண்டு பேருமே நல்லா வண்டி ஓட்டுவாங்க சார்!"



"எப்பிடி...... ? இருட்டில வண்டிய ஓரமா நிறுத்தினால் சிக்னல் போடணும் என்கிற சாதாரண அறிவு கூட இல்லாமலா?" என கேலி பேசினாலும் கொஞ்சம் கராராகவே கேட்டார்.



"இப்போ வீணாக ரெண்டு உயிர் போச்சு. இதுக்கு யாரை நாங்க குத்தம் சொல்ல முடியும்?" என தொடர்ந்து பேசியவர் பேச்சை கேட்டு நம்ப முடியாதவளாக, காதிரண்டையும் பொத்தி கொண்ட கமலி,



"என்னங்க......., நம்ம பசங்க நம்மள விட்டு போயிட்டாங்களா?" என கதறியவளை



அடக்கிய அந்த காவல் அதிகாரி,



"இது ஹாஸ்பிடல்.



பல நோயாளிங்க வந்து போற இடம், இப்பிடி நீங்க கத்தினா அவங்களுக்கு தொந்தரவா இருக்காதா?



உங்க ரெண்டு பசங்கள்ல ஒரு பையன் ஸ்பாட்லயே இறந்துட்டான். வண்டி ஓட்டினவனுக்கு ரொம்ப சீரியஸ்ன்னு டாக்டாஸ் பேசிக்கிறாங்க, இப்போ ஐசியூல டிரீட்மண்ட் நடந்திட்டு இருக்கு
,



பின்னாடி இருந்த பையன் உருவமே தெரியாத அளவுக்கு உடல் நசுங்கிடுச்சு.



இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள முடிக்க வேண்டிய பார்மாலிடிஸ் எல்லாம் முடிச்சிட்டு பாடியை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம், ரொம்ப நேரம் மினக்கடுத்தாமல் சடங்குகளையும் பண்ணிட்டு, மூணு மணிநேரத்துக்குள்ள பாடியை அப்புறப்படுத்திடுங்க.



பாடிய காரில இருந்து எடுக்குறப்போவே வண்டி ரொம்ப சேதமானதால சிரமப்பட்டு தான் பாடிய எடுத்தோம், அதனால பாடி ரொம்ப சிதைஞ்சிடிச்சு" என்றவர் பேச்சில் கமலி அதை நினைத்துப்பாத்திருப்பாள் போல,



உடனேயே மயங்கி விட்டாள்.



ரவீந்திர தான் ரொம்பவே சிரமப்பட்டுப்போனார்.



ஒருபுறம் ஒரு மகனை இழந்த துக்கம், மறுபுறம் மற்றவன் உயிருக்கு போராடுகிறான், இன்னொரு புறம் கமலியை எவ்வாறு ஆறுதல் படுத்துவேன் என்ற கவலை.



ஆனால் அழுது கொண்டு இருக்க நேரமில்லை.



கமலியை தண்ணீர் தெளித்து எழுப்பி ஓரமாக இருந்த இருக்கையில் அமர்த்தி தானும் அமர்ந்தவர்,



"இங்க பாரும்மா!



ஒருதனையே நினைச்சு அழுதுட்டு இருந்தா, மற்றவனையும் காப்பாத்த முடியாது.



அழாம சீக்கிரம் இவனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்திட்டு, மற்றவனை கொழும்புக்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பண்ணலாம்." என்றார்.



"எவன் இறந்தான்னு கூட தெரியலைங்க." என கலங்கியவரிடம்,



"ரெண்டுபேருமே நம்ம பசங்க தானேடி! யாரா இருந்தாலும் காப்பாத்துவோம் கமலி" என்றவனை இயலாத பார்வை பாத்தவள்.



"நீங்க அப்பவும் சொன்னீங்களேங்க, அவங்களை கண்பார்வையில இருந்து தூர அனுப்ப வேண்டாம்ன்னு, நான் தான் அடம்புடிச்சு அனுப்பினேன். இப்போ ஒரேயடியா உலகத்தை விட்டே போயிட்டானே!



இப்பிடி பிணமாப்பாக்கவா இத்தனை வருஷம் பொத்திப்பொத்தி வளர்த்தோம்" என கதறினார்.



"ஆம்...... இருவரும் பிறந்த கையோடு இருவர் ஜாதகத்தை எழுதிவிட்டார் ரவீந்திர.



இருபத்தி ஐந்து வயதுக்குள் இருவருக்கும் கண்டம் இருப்பதாகவும், இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் இருவர் உயிரில் ஒருவர் உயிருக்கு ஆபத்து நேரும், முடிந்தளவு ஊர் எல்லையை தாண்ட வேண்டாம், பெற்றோர் கண் பார்வையில் இருந்தால் ஆபத்தில்லை.



இருபத்தி ஐந்து வயதை தாண்டி விட்டால் யார் நினைத்தாலும் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது என்றதன் காரணமாகத்தான், ரவீந்திர அவர்கள் எங்குமே அனுப்புவதில்லை.



புத்திரர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்ற கமலியின் வேண்டுகோளுக்கு இனங்கத்தான் அரை மனதாக சம்மதித்து விட்டு, அது தொடர்பாக யோசியரை சந்திக்க சென்றார்.



ஆனால் அவருக்கு கிடைத்த தகவல் என்னமோ, இப்போது யோசியர் ஊரிலில்லை. அவர் வருவதற்கு ஒரு வாரமாகும் என்பதே!



சரி வந்த பிறகு கேட்டுக்கொள்ளலாம். என அவரும் விட்டுவிட்டார்.



இவர்கள் திருகோணமலை சென்ற அன்று மாலை ரவீந்திரவுக்கு அழைப்பு வர, யாரென்றே தெரியாமல் அழைப்பை ஏற்று காதிலின் பொருத்திக்கொண்ட ரவீந்திர "ஹலோ" என்றார்.



"சார் வீட்டுக்கு வந்தீங்களாமே!



என் சம்சாரம் இப்போ தான் சார் சொன்னா, என்ன விஷயமா வந்திங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என கேட்டவரிடம்.



அவர் குரலை வைத்து யாரென கண்டு கொண்டவரோ,



"ஆமா சாமி!



என் பசங்க திருகோணமலைக்கு போகப்போறாங்கன்னு சொன்னாங்க, அதான் அவ்வளவு தூரம் விடலாமான்னு கேட்கிறதுக்காக வந்தேன்
."



"ஓ..... அப்பிடியா? இப்போ உங்க பசங்களுக்கு என்ன வயசாகுது?"



"இருபத்தியிரண்டு ஆகுது சாமி"



"அதற்குள்ள இருபத்தியிரண்டு ஆகிடிச்சா....?



இந்த வயசு தான் ரொம்ப கவனமா இருக்கணும். எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கண் பார்வையிலயே வைச்சிருக்க பாருங்க.



ஏன்னா இருபத்தி ஐந்து வயசு மட்டும் ரெண்டு பேரில ஒருதனுக்கு கண்டம் இருக்கு. ஆனா இந்த கட்டத்தில எந்த உயிர் போனாலும் மற்ற உயிருக்கும் ஆபத்து.



முடிஞ்சவரை போன உயிர் மற்ற உயிரையும் அழைச்சிட்டு போகத்தான் பார்க்கும்." என்றதும் தான் ரவீந்திரவுக்கு வியர்த்துக் கொட்டத்தொடங்கியது.



"ஐயோ சாமி... என்ன சொல்லுறீங்க?. இப்போ அவங்களை நான் ஊருக்கு தனியா அனுப்பிட்டனே!" என்று பதற.



"என்ன சார் நீங்க? படிச்சு படிச்சு சொல்லியும் அலட்சியமா இருந்திருக்கிறீங்களே! அவங்களை உடனே கூப்பிடுங்க." என்றவர் போனை வைத்துவிட்டார்.



ரவீந்திராவிற்கு மூளை அப்படியே அடுத்த கட்டத்தை செயற்படுத்த முடியாமல் சம்பித்தது.



கமலி போன் பேசிய கணவன் ஒரே இடத்தினில் பேய் அறைந்ததை போல் அமர்வதை பார்த்து, என்ன ஏது என்று விசாரிக்க. யோசியர் சொன்னதைச் சொன்னதும் தான்.



"என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு, முதல்ல சூரியவிற்கு போன் போட்டு கூப்பிடுங்க." என்றார் பதறிப்போய்.



"என்ன கமலி சொல்லி கூப்பிடுவேன். பொழுத வேற சாய்ஞ்சிடிச்சு, இந்த இருட்டில எப்பிடி அவங்க வரமுடியும்?.."



"இல்லங்க...., யோசியர் என்ன சொன்னாரு? எங்க கண்பார்வையில இருக்காற வரை ஆபத்தில்ல என்று தானே! கூப்பிடுங்"க என்றவர் அறியவில்லை தன் நிர்பந்தத்தினால் தான் அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று.



"என்னால தாங்க எல்லாமே!



யோசியர் சொன்னதை மீறி அவங்கள அனுப்பி வைச்சதுமில்லாமல். இருண்ட நேரத்தில வான்னு அடம்பிடிச்சதனால தான் ஒரு பையனை இழந்துட்டு நிக்கிறோம்.



இப்போ மற்றவனுக்கு வேற என்னாகும்ன்னு தெரியலையேங்க. இவனும் யோசியர் சொன்னதுபோல எங்களுக்கு உயிரோ....." என்பதற்கு முன்னர் கமலி வாயினை மூடியவர்,



"எல்லாமே விதியோட விளையாட்டு கமலி, நம்ம தப்புன்னு எதுவும் இல்ல. உன்னால தான் நடந்திச்சுன்னு சொல்லி உன்னை நீயே வருத்திக்காத! அப்புறம் எனக்கு இருக்கிற ஒரே ஆறுதலான உன்னையும் இழந்திட்டு தனிமரமா நின்னுடுவேனோன்னு பயமா இருக்கு.



ஒரு பையனைத்தான் கொடுத்திட்டேன்.



நிச்சயமா மற்றவனையும் விட்டுக்கொடுக்கிறதா இல்லை. அந்த விதியோட போட்டி போட்டு அவனை காப்பாத்துவேன்.



அதுக்கு நீ என்கூடவே இருக்கணும்.



கண்டதை நினைச்சு புலம்பி என் தைரியத்தையும் இழக்க செய்யாத கமலி" என்று ரவீந்திர கெஞ்சவும்,



முதல் முதலாக கணவன் கலங்குவதை தாங்கி கொள்ளா முடியாது



அவனை அணைத்து சில நிமிடங்கள் கதறியவள்.



பின் திடமானவராய் தன் கண்களைத்துடைத்து விட்டு, "இறந்தவனோட சடங்குகளை முதல்ல முடிச்சிட்டு, இவனை இங்க வைச்சிருக்காம கொழும்புக்கே கொண்டு போகலாம்."



என்றார்.



சம்மதமாக தலையசைத்தவர், உதயாவினது பாடியினை வெள்ளை துணியொன்றில் மூட்டை கட்டி கொடுத்ததும்,



பாதி விடியலின் பாேதே அன்புலன்ஸ் மூலமாக பாடியுடன் ஊர் போய் சேர்ந்தவர். பல கதறல்கள் மத்தியில் உதயாவின் உடலை தகனம் செய்து விட்டு, அதே கையுடனே மற்றைய மகனின் நிலை என்னவென்று பார்க திரும்பிவிட்டனர்.



இரண்டு கால்களினது முட்டிப்பகுதியிலும் உடைந்து, தலையில் பலத்த அடியினால் இரத்தம் அதிகளவில் வெளியேறி, கோமா நிலைக்கு சென்று விட்டான் என்றும் மருத்துவர்கள் கூற,



"இவனை நாங்க கொழும்புக்கு அழைத்துச்சென்று வைத்தியம் பாக்கலாமா?.." என்றனர்.



"தாராளமா..... ஆனால் பதில் என்னவோ பூச்சியமாகத்தான் இருக்கும். ஏன்னா அங்க பாக்கிற டாக்டர் தான் உங்க பைனுக்கு டிரீட்மன்ட் குடுத்திருக்காரு." என்றவர் அதற்கான பார்மாலிட்டிகயை முடித்து, ஆன்புலன்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தார்.



உடலின் வயிற்றுப்பகுதியில் ஓட்டை துளைத்து அதன் மூலமே திரவ உணவு, செயற்கை சுவாசம், இன்னும் எத்தனையோ வயர்கள் அவன் உடலினில் பொருத்தி அவன் உயிரை பிடித்து வைத்திருந்தனர் வைத்தியர்கள்.



அவனது உடல் நாளுக்கு நாள் உடைவுகள், சிதைவுகளில் இருந்து தேர்ச்சியாக ஆக ஒவ்வொரு இலத்திரனியல் கருவிகளை அகற்றிக்கொண்டு வந்தவர்களால் சுயநினைவை மட்டும் வழமைக்கு கொண்டு வரமுடியவில்லை.



வழக்கம் போல் திரவ உணவு சென்று கொண்டிருந்தது.



எத்தனையோ தடவைகள் வைத்தியரும் கேட்டு விட்டார்,




'விபத்து நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது,



சில வேளைகளில் நினைவு திரும்பாமலும் போக வாய்ப்பிருக்கிறது. இப்போதே கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டீர்கள்,



இதற்குமேலும் காத்திராமல் கருணைக்கொலை செய்து விட்டு, உடலுறுப்புகளை தாணம் தந்தால், உங்கள் மகன் ஏதோ ஒரு மூலையில் உயிரோடு இல்லை என்றாலும், உடலால் வாழ்வான்.' என்று



இன்னும் எத்தனை கோடி செலவானாலும் பறவாயில்லை. அவனை மீட்கும் வரை ஓயமாட்டோம் என்ற திடதடமாகவே சொல்லிவிட்டனர் இருவரும்.



கிட்டத்தட்ட ஆறு மாத காலம் கடந்திருக்க, கோவிலுக்கு சென்று வந்த கமலி அவனது நெற்றி மீது குங்குமத்தை கோடாக இழுத்தவர்.



"சீக்கிரம் எழுந்து வந்திடு ராசா!



இதுவரைக்கும் புத்தர் மாத்திரம் தான் கடவுள்ன்னு இருந்தேன்.



இப்போ எந்தக்கடவுளையும் விடாம வேண்டிக்கிட்டிருக்கேன்.



அம்மாவை ஏமாத்தாம எழுந்திடுடா!" என்று அவனது நெஞ்சின் மீது விழுந்து அழுதவள் தலையினை யாரோ வருடுவது போல் இருக்க,



நிமிர்ந்து பார்த்தவள்



அதிசயத்து போனாள்.



ஆறு மாதங்கள் அசைவின்றி கிடந்தவன் கமலியை விழிதிறந்து பார்த்ததும்,



"சூரிய....!" என ஏக்கமாக அழைத்தவருக்கு விழித்திரையினை வைத்தே அது சூரிய என்பது விளங்கிப்போனது.



"ம்மா...." என்றவன் வலியில் முணங்கலாய்,



"ரொம்ப வலியா இருக்கா?, இரு இப்போ வந்திடுறேன்." என்றவாறு வெளியே ஓடியவள், வரும் போது வைத்தியர்களுடனே வந்தாள்.



சூரியாவை வைத்திய பட்டாளமே சூழ்ந்து கொள்ள,



அவனிடம் சில கேள்வி கேட்டவர், இறுதியாக ஊசி ஒன்றை ஏற்றி அவனை தூங்க வைத்து விட்டு.



கமலியை தனிமையில் அழைத்தவர்
,



"நாங்க இதை எதிர்ப்பாகல. உங்க பையன் சரியாகிட்டான்.



இப்போதைக்கு அவனை எந்த கேள்வியும் கேட்டு தொல்லை பண்ணாதிங்க.



நல்ல தூக்கம் தான் இப்போ அவருக்கு மருந்து. மனசப்போட்டு குழப்பிக்கிற செய்தி எதுவும் சொல்லாதிங்க. இப்போ தான் சரியாகிடிச்சே! இனிமே சாதாரணமாவே சாப்பிடலாம். சின்ன சர்ஜரி பண்ணிட்டா முடிஞ்சுது.



மத்தம்படி அவனுக்கு ஒன்னுமில்ல, என்ன?? எலும்பு உடைஞ்சதனால நடக்கிறது கஷ்டம் தான். அப்புறம் நார்மலாகிடும்.



இன்னும் ரெண்டே நாள்ல உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்" என்றார்.



வைத்தியருக்கு நன்றி சொல்லி அனுப்பியவளோ, கணவருக்கு போன் மூலம் தகவலைக்கூறினாள்.



மூன்று நாட்கள் அவனை மயக்கத்திலே வைத்திருந்தவர்கள் மூன்றாம் நாள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.



மயக்கம் தெளிந்து எழும்பியவன் பெற்றவர்களோடு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு,



"உதயா எங்க காணல்ல?" என கேட்டதும் தான். கமலி முழிக்கத் தொடங்கினாள்.



'உண்மையை சொல்லலாமா? சொன்னால் ஏதாவது ஆகிவிடுமோ!' என்ற பயம் அவளுக்கு.



"அவன் வெளிய போயிருக்கான்டா, வந்திடுவான், நீ கொஞ்சம் தூங்கு" என்றவள் கையினை பற்றியவன்,



"உண்மையை சொல்லும்மா! அவன் எங்க?" என்ற கேள்வியில் கலங்க ஆரம்பித்து விட்டாள் கமலி.



" எதுக்கும்மா அழுற? சொல்லு அண்ணா என்னை விட்டு போயிட்டானா?" என்க.,



ம்ம்... என கண்ணீரினூடே தலையசைத்தாள்.



"இல்ல....!" என இரண்டு கையிலும் தன் தலை முடிகளை இறுக பிடித்தபடி கத்தியவன்.



"நீ பொய் சொல்லுற, அவன் என்னைவிட்டு எங்கேயும் போகமாட்டான். நான் இல்லாம ஒரு நிமிஷம் கூட அவனால இருக்க முடியாது.



உதயாவை கூப்பிடும்மா! அவனை நான் பாக்கணும்." என கத்தி ஆரவாரம்செய்யும் மகனில் குரலில் ஓடிவந்த ரவீந்திர,



கமலியை கண்ஜாடையால் வெளியில் அனுப்பி விட்டு, அவன் அருகில் அமர்ந்தவர்,



அவன் தலையினை நெஞ்சோடு சாய்த்து கதறியவன் கன்னம் வருடியவர்.



"சூரிய அப்பா சொல்லுறத நிதானமா கேளுடா!



உதயா நம்மள விட்டு எங்கேயும் போகல, நம்ம கூடத்தான் இருக்கான்.



இந்த ஆறுமாசமும் நானும் உன் அம்மாவும் ரொம்ப அழுது நொந்துட்டோம்.



இனியும் எங்களால முடியாது.



நீயும் அவனைக்கேட்டு எங்கள கஷ்டப்படுத்தாத சூரிய.



என்னை விடு! அம்மா தினமும் சாப்பிடுறாளோ இல்லையோ இதையே நினைச்சு கலங்கிட்டிருக்கா,



திரும்ப திரும்ப நடந்து முடிஞ்சதை நினைச்சா கவலை மட்டுந்தான்டா மிஞ்சும்.



கஷ்டம் தான், இருபத்தியிரண்டு வருஷம் ஒன்னா இருந்திட்டு, இப்போ இல்லை என்கிறது இழப்பில்லை.... கொடுமை!.



ஆனா உண்மைய இல்லை என்க முடியுமா? அதுக்கு மனச பழகிக்கணும். வேற வழியே கிடையாது" என்றவரை நிமிர்ந்து பாத்தவன்.



"இனி உதயா வரமாட்டானாப்பா!.." என குழந்தைபோல் கேட்டவனை இறுக அணைத்து கதறியவர்
,



"வரமாட்டான்டா! நம்மள அழ வைச்சிட்டு அவன் போயிட்டான்.



இன்னைக்குத்தான் நீ அழுறது கடசியா இருக்கணும், இனி அழுது உனக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு, நீயாவது எங்களுக்கு வேணும்டா!"



என கெஞ்சியவரை பாவமாக பார்த்தவன்.



"தலை வலிக்கிற மாதிரி இருக்குப்பா, நான் தூங்கவா?" என தந்தை மார்பிலிருந்து எழுந்து, தலகணியில் படுதனது கண்களை மூடிக்காெண்டவன் மனமறியாதவரில்லை அவன் தந்தை.



இதை ஏற்றுக்கொள்வதற்கு நிச்சயம் தனிமை தேவை என புரிந்து கொண்டவர்.



"தூங்குப்பா...." என அவன் தலையை கோதிவிட்டு வெளியே
வந்தவர்,



"அவனை தொல்லை பண்ணாத கமலி, அப்பப்போ எட்டி மட்டும் பாத்துக்கோ!" என வெளியேறினார்.



பெற்றவர்கள் வருத்தவும் விரும்பாமல், அவர்களுக்கு முன் கலங்குவதை தவிர்த்தவன், இரவு வேளைகளில் தன்னையும் மறந்து கதறுவான்
.



யாரிடமும் பேசாமது அறையே கதியென கிடந்தான்.



கேட்டவற்றுக்கு மாத்திரம் பதில். அனாவசியமான பேச்சுகள் என்றால் சினக்க தொடங்குவான்.



அடிக்கடி உதயாவோடு எடுத்த போட்டாேஸ்களின் முன்பு போய் நிற்பவன் அவனுடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருப்பான்.



அவனது நடவடிக்கையை கண்டவர்கள்,



"கமலி சூரியவை வெளி நாட்டுக்கு அனுப்பி வைப்போமா? இங்கயிருந்தா உதயவை நினைச்சிட்டே இருக்கிறவனையும் இழந்திடுவோம்ன்னு பயமா இருக்கு
,



புது இடம், புது மனிதர்கள் என்று மாறுபட கொஞ்சம் கொஞ்சமா அவனை மாத்திக்க முயற்சிப்பான்." என்றார்.



"எப்பிடிங்க.... ? அவன் தான் வெளியவே வரான் இல்லையே! அப்பறம் எப்படி?"



"அவனை சும்மா அனுப்ப வேண்டாம் கமலி. இங்க விட்ட படிப்பை அங்க போய் தொடரட்டும். " என்றவர்,



சூரியவிடம் " உன்னை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பப்போறோம். உனக்கு சம்மதம் தானே!" என்றார்.



அவனுக்கும் இங்கு இருப்பதில் சற்றும் விருப்பமில்லை. தமையன் இல்லாத ஊரில் அவனும் இருக்க இருப்பும் கொள்ளவில்லை.



அவனை மறப்போம் என்று முயற்சித்தாலும் எல்லவாற்றிற்கும் முன் வந்து நிற்பவன் நினைவுகளால் அவனால் என்ன செய்ய முடியும்?



ரவீந்திர இவ்வாறு கேட்டதும் யோசிக்காமல் சம்மதம் கூறிவிடடான்.



அவன் சம்மதம் தந்த ஒரு வாரத்திலேயே ரவீந்திர அவனை ஆஸ்திரோலியாவிற்கு பார்ஷல் பண்ணிவிட்டார்.



அங்கும் தமையன் நினைவுகள் வராமலில்லை. அதை உதறி தள்ளிவிட்டு படிப்பிலேயே முழுமையாக கவனத்தை செலுத்தினான்.



அதன் பலனாக அவனிற்குள்ளும் சற்று மாறுதல் உண்டானது. காலம் கரையக்கரைய உதயா என்ற ஒருவன் இருந்ததையே மறந்தும் போனான்.





இங்கு விகனேஷ் ஊர் சென்ற நண்பன் தொடர்பு கொள்வான் என்று எதிர்பார்த்து நாட்கள் கரைய, அவர்களது இலக்கத்திற்கும் அழைப்பு விடுத்து பார்த்தான்.



அதில் சொன்ன தகவல் என்னமோ நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியாதுள்ளது. மீண்டும் முயற்ச்சிக்கவும்.



இதற்கு மேல் எப்படி முயற்ச்சித்தாலும் அழைப்பு கிடைக்காது என்று உணர்ந்தவனாய் தன் முயற்சியையும் விட்டுவிட்டான்.



அப்படி இருக்கும் போது தான். துர்கா ஒரு நாள் கீதா பள்ளியில் திடீர் என மயங்கி விட்டாள் என கவலையில் தமையனிடம் சொன்னவள், பேச்சில் இமைகள் சுருங்க பார்த்த விக்னேஷ்



"என்ன சொல்லுற?"



"ஆமாண்ணா! எதுக்கு நீ ஒருமாதிரி கேக்கிற? இதில என்ன ஆதிசயம் இருக்கு?"



"ஆ.... அது ஒன்னுமில்ல, சும்மா விசாரிச்சேன்." என்றவன் காதுகளிலும் ஒருவாரத்திற்கு பின்னர் கீதா கர்பமாகி இருக்கிறார் என்ற செய்தி எட்டியது.



இதை அறிந்த மறுகணமே துர்க்காவிடம் வந்தவன்,



"துர்கா உன் தோழிக்கு......" என்று அவளது நிலையினை கூறியவன்,



"அவளுக்கு யார் காரணம்ன்னு தெரியாது துர்கா.



பாவம் அவ எதுவும் தெரியாம நொந்து போய் இருப்பா" என்றான் கவலயாய்.



"அவளுக்கு தான் யார்னு தெரியும்னு சொன்னாளேண்ணா!" என்க.



"என்னது அவளுக்கு தெரியுமா?.. எப்படித்தெரியும்?. நீ சொன்னியா?"



"இல்லண்ணா நான் எதுவும் சொல்லல்ல, நீ தான் அவங்க அப்பாவுக்கு சொன்னேனு சொன்னா?."



"நான் எதுவுமே சாெல்லலையே! நான் எப்போ சொன்னேன்.

நான் சொன்னது அவ குடிச்ச கூல் டிரிங்க்ல போதை கலந்திருக்குன்னு தானே சொன்னேன்." என்றான் விக்னேஷ்.
 
Top