• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

44. என்னாளும் உன் பாென்வானம் நான்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அவள் விழிகளையே குடையும் பார்வை பார்த்தவனோ,
“என்ன நிபர்ந்தனை” என்றான்.

“அது... கல்யாணமானாலும் நான் என் வீட்டில தான் இருப்பேன், அம்மாவைத் தனியா விட்டு எங்கேயும் வரவும்மாட்டேன், அம்மாவ என்கூட அழைச்சிட்டு உங்க வீட்டுக்கும் வர சொன்னாலும் வரமாட்டேன்.
நீங்களும் என்கூட அந்த வீட்டிலயே வந்து இருப்பீங்கன்னா எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம்” என்றாள் குரலில் சற்று இறுக்கத்தை கொண்டுவந்து ஒரே முடிவாக,


இதை ஏற்கனவே எதிர்பார்த்தவன் போல,
“ஓகே துளசி! நீ எந்த நிபந்தனை போட்டாலும் நான் கட்டுப்படுவேன், இப்போ மட்டுமில்ல கல்யாணத்துக்கு அப்புறமும் தான்” என்றான்.


“அப்போ ஓகே தான். கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என சம்மதம் தெருவிக்க.

“பண்ணிடலாம், ஆனா எனக்கு இப்போ உன்னோட உண்மையான பதில் வேணும்.

உனக்கு மனப்பூர்வமா இந்த கல்யாணத்தில சம்மதம் தானா? இல்லை உங்க அம்மாவோட சூழ்நிலையினை மனசில வைச்சிட்டு இதுக்கு நீ சம்மதிக்கிரியா? என்மேல நம்பிக்கை வைச்சு தானே சம்மதிக்கிற?” எனக்கேட்டான்.


ஒரு நிமிடம் பேச்சற்று நின்றவள், என்ன நினைத்தாளோ,

“இல்லை மனசாரத் தான் சம்மதிக்கிறேன்” என்றாள்.


“அப்போ கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட சொல்லவா?” என்றவன் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

அதை கண்டவள் முகத்திலும் கொஞ்சமாக வெட்கம் எட்டித்தான் பார்த்தது.
அதன் பின் சொல்லவா வேண்டும்? பழையபடி பார்வையால் அவளை விழுங்கும் காதல் மன்னனானான்.


அன்றிலிருந்து பதினைந்தாவது நாள் முகூர்த்த நாளாக அமைந்துவிட,
அன்றைய தினமே இருவருக்கும் மூகூர்த்தம் குறிக்கப்பட்டது.


இரண்டாவது திருமணமே என்றாலும் முதல் வாரமே ஊர் திருவிழா போல் எங்கும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு பெருத்த கொண்டாட்டமாகவே இருந்தது.
துளசியை ஒவ்வொரு சடங்கிற்கும் தயார் படுத்திய மதுவும், வேணியும் கிண்டல் பேசிப்பேசியே அவளை சிவக்க வைத்தனர். இதில் அவள் உடன் பிறந்தவன் வேறு,


குடும்பமே எதிர் பார்த்திருந்த திருமண நாளும் வந்து குறித்த முகூர்த்தத்திலே அவள் சங்குக்கழுத்தில் தாலியை கட்டியவன் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள முதலில் அவளை அழைத்து சென்றது அன்னபூரணியிடம் தான்.

பின் தன் பெற்றவர்கள் காலில் விழ அழைத்து சென்றவன் ஏனோ துளசியை அவர்கள் காலில் விழ அனுமதிக்காது தான் மட்டும் விழுந்து எழும்பினான்.

அத்தனை பேர் முன்பும் அவமானமாக போனாலும் அதை முகத்தில் பிரதிபலிக்காது சிரித்த முகமாகவே வளைய வந்தனர் இருவரும்,
மதுவும் வேணியும், துளசியை ஆரத்தழுவி வாழ்த்து சொல்ல, ராம் மைத்துனனை தழுவி கண்ணீர் வடித்தான்.

அன்றைய பொழுது, ஆனந்தத்திலும், கண்ணீரிலும் கழிந்தது.

“வீடு செல்ல நேரமாகிறது வீட்டுக்கு வாங்க விளக்கு ஏத்தணும்” என அவன் அன்னை அழைக்க,

அத்தனை நேரம் இலகுவாக இருந்தவன் முகம் இறுகி,
"இல்லம்மா! ருத்ரா அங்க தங்க மாட்டா! அவ மட்டுமில்ல நானும் தான். வாழாத வீட்டில எதுக்கு அவ விளக்கு ஏத்தணும்? இதை நானும் ஏற்கனவே ஒத்துக்கிட்டு தான் அவ கழுத்துல தாலியே கட்டினேன்.
வாழ்கையோட அடிப்படையே நம்பிக்கை மட்டும் தான். என்னோட ஒத்தை வார்த்தைய நம்பி கழுத்த நீட்டினவ நம்பிக்கைய நான் கெடுத்துக்க விரும்பல. அதனால மண்டபத்தில இருந்து நேரா அவங்க வீட்டுக்கு தான் போறோம்” என கூறினான் முரளி.


“ஆனா முரளி அங்க உன்னால இருக்க முடியாதுடா! உனக்கு அது கஷ்டம்” என ராதாகிருஷ்ணனின் சொன்னதற்கு உதட்டை மட்டும் இழுத்து வெறுமையாய் சிரித்தவன்,


“பரவாயில்லப்பா! நான் பழகிக்கிறேன். என்னோட வாழ்க்கையே ருத்ரா எனும்போது இத பழகிக்கிறது ஒன்னும் எனக்கு கஷ்டமில்ல” எனக் கூறிய அவனை நம்பாது துளசி ஆச்சரியமாக நோக்கினாள்.


“என்ன டார்லிங்க்! எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? உன் புருஷன் உனக்காக எதையும் தாங்குவேன்னு நம்புற தானே?” என அவள் காதகே குனிந்து கேட்டவனையே கண்களில் கண்ணீரோடு பார்த்திருந்தவள் தலையானது ஆம் என்பதாக அசைந்தது.


அவள் கண்ணீரினை துடைத்து விட்டவன்,“இனிமே நீ அழவே கூடாது ருத்ரா, அதையும் மீறி நீ அழுதா என் காதல் தோத்து போயிடும்” என்றவனது வார்த்தையை கேட்கும் போது அவள் அனுமதி கேளாது உண்மையில் ஆனந்தத்தில் கண்ணீர் கோர்வையாக தொடங்கியது.

“இது துக்கத்தில வர கண்ணீர் இல்லங்க, ஆனந்தத்துல வருது. இனி ஆனந்தத்துல கூட அழமாட்டேன்” என கண்களை துடைத்துக்கொண்டாள்.


அதன்பின் வீட்டுக்கு அழைத்து வந்தவர்கள் சடங்குகள் இனிதே நிறைவடைந்து பொழுது கவ்வத் தொடங்கியிருந்தது.

திருமண அலைச்சலினாலும், அசதியினாலும் அனைவருமே ஆளாளுக்கு பாயினை இழுத்துப்போட்டு உறங்கிவிட, துளசியும், முரளியும் அந்த வீட்டிலிருந்த ஒரே அறையில் தனித்து விடப்பட்டனர்.

பால் பழம் என்று எந்த சம்பிரதாயமும் வேண்டாம் என்று மறுத்து விட்டான் முரளி.

துளசிக்கும் அவனோடு அதுவும் ஒரே பாயில் படுப்பதென்பது சங்கடமாக இருப்பினும், வேறு வழியற்று அவனருகில் தயக்கமாகவே சென்று அமர,
அவளை பார்த்து சிறிதாய் புன்னகைத்தவன், “நான் என்ன பூச்சாண்டி மாதிரியா இருக்கேன் ருத்ரா?” என அவளையே பார்த்தவாறு கேட்டான்.

இல்லையென தலையசைத்தவள் முகமோ அப்பட்டமாக பயத்தினை பறைசாற்ற,
அவள் கைகளை பிடித்து தன் கைகளுக்குக் பொத்திக்கொண்டவன்,

“என்னை பாத்து பயப்படவே தேவையில்ல ருத்ரா! முன்னாடி நான் எப்பிடி வேணாலும் இருந்திருக்கலாம். இப்போ நான் முழுசா மாறிட்டேன். அதாவது இன்னையோட என் பெயரோட உங்க பெயர சேர்த்துட்டேன்.
இனி உங்களுக்காக மட்டுமே வாழணும்னு ஆசைப்படுறேன்,
முன்னாடி நீங்க என்ன கஷ்டம் அனுபவிச்சிருந்தாலும் அதை எல்லாம் மறந்திடுங்க. இன்னையில இருந்து நாம புது வாழ்க்கையத் தொடங்கலாம்” என அவளை நெருங்கி அமர்ந்தவனை இன்னும் அவள் தயக்கமாக நோக்க,


சட்டென விலகி அமர்ந்தவன், “நெருங்கி உக்காந்தது குத்தமா? பச்சை பிள்ளை கையில இருந்து மிட்டாய பிடுங்கி திண்ணா மாதிரியே பாவமா பாக்குறீங்க.

நம்புங்க ருத்ரா! உங்க சம்மதமில்லாம என் சுண்டுவிரல் கூட தப்பான எண்ணத்தில உங்களை தீண்டாது” என்றான்.

அவனது அந்த வார்த்தை கேட்டு, இன்னும் பேயறைந்தது போல் அவன் கண்கள் இரண்டையும் மாறி மாறி பார்த்தவாறு துளசி முழிக்க.
அவள் முழிப்பதன் அர்த்தம் புரிந்து போனவன் உதடுகளோ பெரிதாய் விரிந்து சிரிப்பலையாக மாறி அறையினை நிறைத்திருந்தது.


“எதையுமே வாயால பேசமாட்டிங்களா ருத்ரா!
அது சரி பேசுறத்துக்கு தான் இந்த அழகான கண்ணிருக்கே! அதுவே இத்தனை அழகா பேசுறப்போ எதுக்கு வார்த்ததை?” என்றவாறு அவள் எதிரே கால்களை சம்மாணமிட்டு நெருங்கி வந்தவன், அவள் கண்களையே பார்த்தவாறு,


“நீங்க நினைக்கிறது போல எனக்கு எதுவுமில்ல ருத்ரா!
நமக்குள்ள இருக்கிற அந்த சின்ன கேப் கூட நீங்க ம்..ன்னு சம்மதம் சொல்லுற வரைக்கும் தான்.
ம்ம்ன்னு சொன்ன பத்தாவது மாதம் நம்ம பொண்ணையோ இல்லை பையனையோ உங்க அம்மாவ பாத்துக்க சொல்லி கொடுத்திட்டு, அடுத்த பிள்ளைக்கு நாம தயாராகிடுவோம் ஓகே..?” என புருவம் இரண்டையும் மேலிழுத்து குறும்பாய் வினவினான்.


அவனது அத்தகைய பேச்சும் நெருக்கமும், பார்வையும் முதலில் விழிவிரித்து கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு இறுதியாக அவன் கூறியதை கேட்டதும் அவளையே அறியாது நாணம் வந்து ஒட்டிக்கொள்ள கன்னங்கள் சிகப்பேறி விழிகளை தாழ்த்திக்கொண்டவள் விரல்களோ பாயினை நோண்டத் தொடங்கியது.
அதை கவனித்தவன் உதடுகள் இனிதாய் புன்னை சிந்த,


“ருத்ரா......!” என ஹஸ்கி வாய்ஸில் அழைத்தான்.

அவளிடமிருந்து “ம்ம்..” என முணகல் மட்டுமே திரும்ப கிடைக்க.

“ரொம்ப நேரமா நீங்க இப்பிடியே தரைய நோண்ட, நான் உங்க முகத்தையே பாத்திட்டு இருக்கணுமா?” என்றவன் கேள்வியில் அவள் திடுதிடுப்பென தலையினை நிமிர்த்தி அவனை கேள்வியாய் பார்த்தாள்.


“ஐய்யே.....! எப்ப பாரு சந்தேகம்.
நான் கேட்டது தூங்குவோமான்னு? நீங்க எதுக்கு சந்கேமாவே என்னை பாக்குறீங்க? கொஞ்சமாச்சும் நம்புங்க ருத்ரா!
நானும் நல்லவன் தான்” என்றவன் தன் தலையணையை இழுத்துப் போட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.


அவன் செயலை கண்டவள் இதழ்களும் லேசான புன்னகையினை சிந்த,

“என்னைப் பாத்து சிரிச்சது போதும், பேசாம கண்ண மூடி தூங்குங்க” என அவள் புறம் திரும்பாமலே கூறியவனை நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும் மறு வார்த்தை பேசாது படுத்துக்கொண்டாள்.


கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தை கடந்திருந்தது.
உறங்குவதற்காக எவ்வளவாே முயற்சி செய்தவனால் பொட்டுக்கூட உறங்க முடியவில்லை.

எங்கே உறங்குவது? மெது மெது மெத்தைமேல் ஏசியின்றி உறங்கி அறியாதவனுக்கு கட்டாந்தரையில் காற்றுக்கூட புகமுடியாத அறையினில் உறங்கச் சொன்னால் உறங்கிட முடியுமா? இதில் கொசுத்தொல்லை வேறு.
ஏதோ அவன் பாடச்சொல்லி ஒற்றைக்காலில் நின்றது போல் அவன் காதுக்குள்ளேயே வந்து காணம் இசைக்க தட்டித்தட்டி விட்டவன் ஒரு கட்டத்துக்குமேல் முடியாது என எழுந்து உக்கார்ந்து விட்டான்.


எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. மூளையின் ஓரேத்தே மங்கல் வெளிச்சமாக மின்னிய மின்விளக்கின் ஔியினை கண்டதும் தான் மூச்சையே இழுந்துவிட்டவனாய் திரும்பிப் படுத்தவன் கண்களில் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கும் மனைவியின்
முகம் தெரிய அவளை பார்த்தவாறே சரிந்தான்.


சடங்கின் போது அவன் வைத்துவிட்ட குங்கும் தூக்கத்திலும் கலையாது அவள் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்க,
அவள் கூந்தலில் புதிதாய் மொட்டவிழ்ந்த மல்லிகை மலர்கள் யாவும் அவன் நாசியினை நிறைத்து அந்த இராப்பொழுதினில் அவனை மோனநிலைக்கு தள்ளியது.


காலையில் பூசிக்குளித்த மஞ்சள் இன்னமும் அவள் முகத்தினில் ஒட்டியிருப்பது மங்கள் வெளிச்சமானாலும் தெளிவாகவே தெரிய,
இதுவரை அவளில் அவன் கண்டிராத கோலம் இன்று அவனை பித்தனாக்க,
அவள் முகத்தினையே ரசித்திருந்தவன் ரசனை கலைப்பது போல் காற்றே இல்லாத அறையில் எப்படி அவள் முடி கலைப்பதற்கென்று தென்றல் உற் புகுந்ததோ?

கன்னத்தின் மேற்புறத்தில் கலைந்த ஒற்றை முடிக்கற்றை அவள் கன்னங்களை உரசி உரசியே அவள் தூக்கம் கெடுக்க நினைத்ததுமில்லாது, திருட்டுத்தனமாய் ரசிக்கும் ரசிகனை காட்டிக்கொடுக்கவும் தீட்டிய திட்டம் புரிந்தவனுக்கு அதன் மேல் சிறிதான பொறாமை உண்டாகத்தொடங்கியது.

இருக்காதா பின்னே! அவள் கன்னத்தை உரசும் வரம் அவனுக்கே இதுவரை கிடைக்கவில்லை, ஆனால் அவன் கண்முன்னே இது உரசுவதா?

தன் இதழ் குவித்த அந்த முடிக்கற்றை ஊதி பின் தள்ளியதன் பின்பு தான் அவன் மனதே ஆறியது.

நங்கையவள் தூக்கத்தில் என்ன கனவு கண்டாளோ! இதழ்கள் சிறிதாய் விரிந்து அவள் கனவில் புன்னகைப்பதை வெளிப்படுத்த,
அவளை பார்த்திருந்தவன் இதழ்களும் இன்பமாய் விரிந்தது.


'பக்கத்தில இப்பிடி ஒருத்தன் உன்னையே ரசிச்சிட்டிருக்கேன் என்கிறது கூட தெரியாம எவ்ளோ அழக தூங்கிட்டிருக்க பாரு..?' என செல்லமாக கோபித்தவன் மனமோ 'இதுக்காகத்தானே இங்கேயே தங்க சம்மதிச்சேன்.
இதுவே என் வீட்டுல தங்கியிருந்தா இவளால நிம்மதியா தூங்கியிருக்க முடியுமா? எப்போ என்ன ஆகும்னே பயந்து பயந்து வாழ்ந்திட்டிருப்பாளே தவிர, சந்தோஷம் என்கிறது இருக்காது.

என் ருத்ராவுக்கு நானே எவ்வளவு கொடுமை பண்ணிருக்கேன்.
இந்த விஷயம் மல்லிகாக்கா மட்டும் எனக்கு சொல்லலன்னா இப்பவரை இவளை புரிஞ்சுக்காம தான் இருந்திருப்பேன்' என்றவன் நினைவுகளோ இரண்டு மாதங்களுக்கு முன்னர் பயனமானது.


அன்று ஞாயிற்று கிழமை. வெளியே அலுவலாக சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து ஷோபாவில் விழுந்தவனுக்கு சூடாக ஒரு காஃபி குடித்தால் நன்றாக இருக்குமென்றே தோன்றியது.

அதே சமயம் எப்போதும் சாதாரண புடவையில் இருக்கும் வேலைக்கார பெண் மல்லிகா இன்று கொஞ்சம் தரமான புடவை உடுத்தி, கையில் கைப்பையை எடுத்துக்காெண்டு வேகமாக வந்தவளை கண்டவன்,

“அக்கா தலை ரொம்ப வலியா இருக்கு, சூடா காஃபி போட்டு தரமுடியுமா?” என கெஞ்சுபவனாட்டம் கேட்க, சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவள், அரை மனதாகவே சம்மதித்தவாறு கிச்சன் சென்றாள்.


'இன்னைக்கு மல்லிக்காக்கா ஏன் ஒரு மாதிரியாவே நிக்கிறாங்க?' என நினைத்துக் கொண்டவனுக்கு துளசி வந்த அன்றைய நாளும் நினைவில் வந்தது.

'அட இத்தனை நாள் இதை எப்பிடி மறந்து போனேன்? இப்போ வரும்போது கேட்போம்' என நினைத்தவாறு இருந்தவன் முன் காஃபியை மல்லிகா நீண்ட.

“தேங்க்ஸ்கா” என்று வாங்கியவன்,
“உங்க கூட கொஞ்சம் பேசணுமே!” என்றான்
.

“ஐய்யோ இப்பவா தம்பி! நான் அவசரமா வெளிய கிளம்பிட்டிருக்கேனே! எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசுவோமா?” என அவசரப்பட்டாள்.

“அவசரமா அப்பிடி எங்க போறீங்க?”

“வேற எங்க துளசிய பாக்....” என அவசரத்தில் விடும் வார்த்தையை மறந்து உண்மையினை உலறிவிட்டு பாதியோடு நிறுத்தி முழித்தவள்.

“அது.... அது தம்பி...! பக்கத்தில.... பக்கத்தில ஊர் எல்லையில இருக்கிற கோவிலுக்கு.
என்னோட சொந்த காரங்க ஒருத்தங்க அந்த அம்மனுக்கு வேண்டுதல் வைச்சாங்களாம், அந்த வேண்டுதல செய்ய வந்திருக்காங்க, அதனால உதவிக்கு போறேன்.” என கூறிக்கொண்டிருக்கும் போதே அவள் செல்போன் அலறியது.

கையினில் பொத்தியிருந்த செல்போனினை பார்த்தவள் விழிகள் பதட்டத்தில் இன்னும் விரிந்தது.
அவசரமாய் அதை அணைத்தவள்.

“அவங்க தான் கூப்பிடுறாங்க. நான் பாேயிட்டு வரேன்” என ஓடியவளை பார்த்தவனுக்கு அவள் பதட்டம் சந்தேகத்தை வரவழைத்தது.

அத்தோடு அவன் அவசரமா எங்கே? என கேட்ட கேள்வியில் துளசியை பார்க்.... என்றவள், பின் தான் விட்ட வார்த்தைகளை சுதாகரித்து கோவிலுக்கு என்று பொய் கூறியது இன்னும் அவன் சந்தேகத்தை உறுதி செய்தது.

ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு சந்தேகமே இல்லை. அவள் சந்திக்க செல்வது துளசியை தான் என்பது உறுதியானது.

அவளுக்கு அறியாமலே பின்னால் ஓடினான். வாசலில் நின்று அவள் ஆட்டோவில் ஏறிச்செல்வது தெரிய, தானும் ஓடிச்சென்று காரில் ஏறி அவள் அறியாமலே அவளை பின் தொடர்ந்தான்.


கோவிலுக்கு வந்து சாமி தரிசனத்தை முடித்தவளுக்கு கோவிலின் கிழக்கு திசையில் இருந்த தெப்பக்குளம் நினைவில் வர, அதை நாடிச்சென்றாள் துளசி.


ஒரு சில சிறுவர்களை தவிர அந்த குளத்தின் அருகே பெரியவர்கள் என்று கூறும் அளவிற்கு யாருமில்லை.
பாதங்கள் நீரில் மூழ்குவதை போல் அடிப்படிக்கட்டில் சென்று அமர்ந்து கொண்டவள், நீரில் நீந்தி விளையாடிய மீன்களையே சிறிது நேரம் ரசித்தவள்,

“என்னை வரச்சொல்லிட்டு இவங்க எங்க போயிட்டாங்க?” என முணுமுணுத்தவளாய் செல்போனினை எடுத்து அழைப்பை தொடுத்தாள்.


“இரண்டே ரிங்கில் எடுத்தவள், எங்கடி நிக்கிற? கோவில் பூரா தேடிட்டேனே உன்னை காணல்லயே” என்க.


“நான் கிழக்கு பக்கமா இருக்கிற தெப்பகுளத்தில நிக்கிறேன்க்கா! யாரும் இல்ல நீங்க இங்க வந்திடுங்க” என அழைப்பை துண்டித்து இரண்டே நிமிடத்தில் எதிரே வந்து அமர்ந்தாள் மல்லிகா.


அவளை கண்டு சந்தோஷமாய் புன்னகைத்தவள்.

“சாரிக்கா அன்னைக்கு பாக்குறப்போ எதுவுமே பேசமுடியாத சூழ்நிலை.
சரி இப்பாே சொல்லுங்க, எப்பிடி இருக்கிங்க? ஏன் உங்க போன் நம்பர காஃபி கப்புக்கு கீழ வைச்சு, கண்டிப்பா கூப்பிட சொல்லி, நான் கூப்பிட்டதும் எங்கேயாச்சும் தனிமையில சந்திச்சு பேசணும்ன்னு வரச்சொன்னீங்க?” என கேட்டாள்.
 
Top