• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

44. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"நம்மளுக்குள்ள என்ன சார் நின்னுட்டு..?" என கேட்டவாறு இருக்கையை இழுத்து வந்து



"உக்காருங்க சார்." என்றாள்.



'இதற்கெல்லாம் மசிஞ்சு போறவனா?' என்பதுபோல் கைகள் இரண்டையும் நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு,



அவள் கொடுத்த இருக்கையை கூட கண்டுகொள்ளாது நின்றிருந்தான்.



"குட்....



இப்பிடித்தான் இருக்கணும். எப்பவும் பாடம் சொல்லிதரவங்க இருந்திட்டும், கேக்கிறவங்க நின்னுட்டுதான் கேக்கணும்.



பரவாயில்ல நல்ல பண்பு கூட இருக்கே" என்றவள்
,



"எப்பிடி ஆரம்பிக்கலாம்." என்றவள்,



"ஒரு முனிவர் இருந்தாராம். அவரு பேரு...



ஐய்யைய்யோ...... மறந்திடுச்சே!



அக்கா உனக்கு அந்த முனிவர் கதை தெரியும்னு நினைக்கிறேன். அவரு பேரு என்னக்கா." என்
றாள்.



'அடி பாவி.....!



தெரிஞ்ச கதைனு தெரிஞ்சுமாடி என்கிட்ட அதை சொல்லுற?



ஒருவேளை இது நமக்கில்லையோ...!



இவ பண்றத பார்த்தி என்னையும் சிக்க வைச்சிடுவா போலயே!" என
நினைத்தவாறு அவளை பார்க்க,



அவளோ மேகலாவை கண்டுகொள்ளாது தன் கதையை அவுத்துவிட தொடங்கினாள்.



"சரி அந்த முனிவர் பெயர் நமக்கெதுக்கு? நமக்கு கதை தான் முக்கியம்."



"அவர் காட்டில் வரம் வேண்டி தவம் செஞ்சாரம்
,



கடவுளும் நீ பண்ண தவத்துக்கு பலனா, நானும் வரம் தரேன் வைச்சுக்கோன்னு கொடுத்தாராம்,



ஒருநாள் தியாணத்தில கண்மூடி இறைவனை நினைச்சிட்டு இருந்தப்போ, மரத்தில இருந்து கொக்கு எச்சம் போட்டிச்சாம்...,



உடனே தியாணம் கலைஞ்ச அந்த முனிவர், எச்சத்தையும் கொக்கையும் பார்த்ததும் தலைக்குமேல கோபம் வந்திடிச்
சாம்,



உடனே கொக்கை கோபமா பாத்திருக்காரு,



கொக்கு புசு புசுனு எரிஞ்சிச்சாம்,



அட நம்மளுக்கு இவ்வளவு சக்தி இருக்கானு நினைச்சவரு, தவத்தை முடிச்சிட்டு ஊருக்குள்ள போயிருக்காரு....



சரியான பசி.... சரி சாப்பிடலாம்னு ஒருதங்க வீட்டு முன்னாடி நின்னிருக்காரு.



உள்ள இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கு, இவரை பார்த்ததும், சாப்பிடத்தான் வந்திருக்காருன்னு புரிஞ்சுக்கிட்டு இப்பிடி உக்காருங்க சாமி,



நான் சாப்பாடு எடுத்திட்டு வரேன்னு போனவ, அவ புருஷன் வரவும் முனிவரை மறந்திட்டு கணவனுக்கு செய்ய வேண்டியதை செய்து அவனை அந்தப்பக்கம் அனுப்பினதுக்கு பிறகுதான், முனிவர் பசியில இருந்தது நினைவு வந்திருக்கு.




அவசர அவசரமா ஓடிப்போய் முனிவரை பார்த்தா அந்தாளுதான் கோபகாரனாச்சே!



இந்தம்மாவை தன்னை காக்க வைச்சதுக்காக கொக்கை பார்வையாளயே எரிச்சது போல இவங்களையும் எரிச்சிடலாம்ன்னு பாத்தாராம்
,



அந்தம்மா எரியாமல் அப்படியே நின்ற இடத்திலேயயே



கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா
ன்னாங்களாம்.



இதில இருந்து என்ன தெரியுது? யாரு முறைச்சாலும் நம்ம எரிஞ்சிட மாட்டோம்.



எரிஞ்சு போக நாங்க என்ன கொக்கா? அதுவும் இந்த பானுவை முறைச்சிக்கிட்ட சேதாரம் அவங்களுக்குத்தான்." என்றவள் மயூரனிடம்,



"கதை நல்லா இருந்திச்சா சார்..." என்
றாள்.



அவனோ உதட்டை ஒரு பக்கமாக இழுத்து வேண்டாவெறுப்பாக நகைத்தவன்,



"அண்ணி.... நீங்க எந்த பள்ளிக்கூடத்தில படிச்சிங்க?



இவளும் அங்க தான் படிச்சாங்களா?." எ
ன்றான்.



"ஆமா....



ஏன்? என் திறமைய பாத்து அசந்து போய், நீங்களும் அங்க படிக்கலாம்னு நினைக்கிறீங்களா?



சாரி சார்.....! எனக்கு தெரிஞ்சு முதியோர் கல்வி இன்னும் அந்த ஸ்கூல்ல கொண்டுவரல.



வேணும்னா உங்க பையனையோ, இல்லனா பெண்ணையோ படிக்க வைச்சா அவங்க கிட்ட இருந்து நீங்க கத்துக்க வாய்ப்பிருக்கு." என்
றவள் தொடர்ந்து,



"அவ்ளோ காலம் எதுக்கு அந்த மூளைய துருப்பிடிக்க விடுறிங்க?



கொஞ்ச நாளைக்கு இங்கே தான் நான் இருக்க போறேன், இஷ்டம் இருந்த வாங்க சொல்லித்தாரேன்.



நான் எப்போ ஃப்றீன்னு சொல்ல தெரியல.., என் வேலைகள் முடிச்சதும் சொல்லித்தரேன்.




அப்புறம் சொல்லித்தா சொல்லித்தான்னு நச்சரிக்க கூடாது ஓகேவா...?" என்றவளை அருவருக்க பார்த்தவன்,



"நீங்க நல்லா தானே இருக்கிங்க அண்ணி?



அப்போ ஏன் இந்த ஜந்து மட்டும் ஏன் வித்தியாசமா நடந்திக்குது?



இதுகிட்ட எதுக்கு நான் ஸ்கூல் விசாரிச்சேன்னா, அந்த ஸ்கூல மூட வைக்கத்தான்.



இப்படி ஒரு அடிமட்டமான ஸ்கூல் இலங்கையில இன்னும் இருக்கிறதே
தப்பு.



ஆமா அங்க என்ன மூளை வளர்ச்சி இல்லாத பசங்களா அங்க படிக்கிறாங்க?"



"கதைசொல்ல வந்தா போதாது..



அர்தம் தெரிஞ்சு சொல்லணும்.



கொக்காம்....., கொங்கணவாவாம்.?



இதில அந்த முனிவர் கௌசிக முனிவர்னு கூட தெரியாது.



அந்த பொம்பள எதுக்கு கௌசிகமுனிவர் கோப பார்வைக்கு பொசுங்கல என்கிறதாவது தெரியுமா?



அவள் ஒரு பத்தினி, கணவனை கடவுளாக நினைக்கிறவ
,



அவனுக்கு செய்யிற கடமைகளை கடவுளுக்கே செய்றது போல கனிவோடு மனம் விரும்பி செய்யறவ. அதனால தான் முனிவரோட சாபம் பலிக்கல.



தவத்தால கிடைச்ச வரத்தை விட, ஒரு பெண்ணோட பத்தினி தன்மை பெருசுன்னு உலகிற்கு எடுத்துகாட்டத்தான் அந்த கதை.



இது தெரியாம வந்திட்டாங்க கதை சொல்லுறேன், காதை குடையிறேன்னு.. அரை வேக்காடு..



இதுகங்களுக்கு சொன்னாலும் புரிய
ப்போறதில்லை.



அது தான் வரப்போ அண்ணாவ தப்பா பேசிட்டிருந்திருக்கு" என்றான் கடுப்போடு.



"ஓ...... சாரு ஒட்டு கேட்டாங்களாம்... அதை பெருமையா சொல்லுறாரு!" என அவள் முடிப்பதற்குள், அவளை நெருங்கியவன்,



"அடிச்சேன்னா........" என கோபமாக அமர்ந்திருந்தவளை நோக்கி கையோங்கினான்



எங்கு உண்மையில் அடிக்க தான் போகிறான் என நினைத்து பயந்தவள்,



கண்களை இறுக மூடி, அடி படாதவாறு இரு கைளாலும் முகத்துக்கு நேராக பிடிப்பதை கண்டவன் அவள் செய்கையில் அசந்து தான் போனான்.



பனிக்கட்டியில் சறுக்கும் கால்களை போல்



முதல் முதலில் ஒரு பெண்ணின் பால் அவன் இதயமோ அவனை அறியாமலே சறிக்குண்டு தான் போனது.



சிறு குழந்தை தாயின் அடிக்கு பயந்து இருக்கையின் மேல் இரு கால்களையும் தூக்கி வைத்து தன்னை குறுக்கி கொண்டவள்,



அடிபட்டதும் வலித்து விடுமோ என்ற பயத்தில் கண்களை மூடி, இதுவரை வந்தறியாத அத்தனை சுருக்கங்களையும் முகத்தில் கொண்டுவந்து, உதட்டை பிதுக்கியவாறு கைகளை திரையிட்டவள் செய்கைகள் அனைத்துமே குழந்தைக்கு நிகரானது தானே?



ஒரு குழந்தை தன்மேல் பிழையில்லை என ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.



தான் செய்தது அதற்கு சரி. அதை சரியான விதத்தில் இது தவறுதான் என்று தன்மையாக விளக்கம் கொடுத்தால் அன்று அதை ஏற்றுக்கொள்ளாது. அது போல தான் பானுவினுடைய செயற்பாடுகளையும் அந்த நொடியே குழந்தையுடன் ஒப்பிட்டு பார்க்க தொடங்கியது மயூரன் மனம்.



எங்கு கையை ஓங்கியவன் அடித்து விடுவானோ என மேகலாவுமே பயந்துதான் போனாள்.



ஆனால் இவள் வாய்க்கு வாங்கி கட்டினால் தான் அடங்குவாள் என்று தோன்றினாலும், தன் முன்பே தங்கையை அடிப்பதை அவளாள் பார்த்துகொண்டிருக்க முடியாது.



அவளாள் எழுந்து தடுக்க முடியாமல் ,



"மயூ...." என அவனை தடுப்பதற்காக குரல் கொடுத்தாள்.



கையோங்கி நீண்ட நேரமாகியும் அடி விழாததை உணர்ந்து, கைகளை விலக்கி பிடித்து ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள் அவன் அப்படியே நிற்பதை கண்டு.




'ஷாக் ஏதாவது அடிச்சிடிச்சோ? அப்பிடியே அந்தரத்திலயே நிக்கிறானே?



கடவுள் எப்பவுமே என் பக்கம்டா!.. முறால் முஞ்சி வாயா" என திட்டி முன்னையது போல இருந்தவ
ள்,



"அஇங்க கறண்ட் ஏதாவது லீக் ஆகுதாக்கா...?. பாரு சார் அப்பிடியே நிக்கிறாரு." என்றவள் பேச்சில் முன்னர் போல ஆனவன்.



"இவ வாய பெரிய பூட்டு வாங்கி பூட்டி வையுங்க. இல்லனா யார்கிட்டயாவது செம்மையா வாங்கி கட்ட போறா" என்றான்.



"ஆமா இவரு பெரிய சாதனை பண்ணிட்டாரு?



ஒரு பொண்ணை அடிக்க கையோங்கிறது பெரிய சாதனை!



ரொம்ப நல்ல முயற்சி. இன்னும் தேற்றம் வேனும்." என கேலிசெய்ய
,



"பானு வாய மூடுடி....! எப்ப பாரு ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு..." என பானுவை அடக்கினாள் மேகலா.



"ரகசியம் பேசுறத இருந்தா கதவை சாத்தி வைச்சிட்டு பேசுங்க. இப்பிடி ஆ..ன்னு திறந்து வைச்சுட்டு பேசினா செவிடனுக்கு கூட கேக்கும்.



எனக்கு யாரோட பேச்சையும் ஒட்டு கேக்கணும்னு ஆசையுமில்ல. அவசியமும் இல்ல. இந்த மேடமும் ஐ.நா ரகசியமும் பேசல!." என்றவன்
,



"நான் வரேன அண்ணி." என்றான்.



"ஏன் வந்ததும் ஓடுறிங்க? இவளை விடு்ங்க மயூ.... இவ எப்பவுமே இப்பிடி தான், பேசியே வாங்கி கட்டிபபா"



"இல்லண்ணி முக்கியமான வேலையிருக்கு. நான் போய் பாக்கணும்." என்றவன்
,



பானுவிடம் திரும்பினான்.



அவளோ எதுவுமே நடவாததை போல. ஒற்றை கண்ணை மூடி, சின்னிவிரலை காதினுள் நுழைத்து, காதை அழகாக குடைந்து கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு அவனையும் அறியாது சிரிப்பு வந்தது.



'இது என்ன இனமுன்னே தெரியல.



இத்தனையும் பண்ணிட்டு, எதுவுமே தெரியாதவளாட்டம் நடந்துக்கிறத பாரு' என்று நினைத்தவன். அவளை கடசியாக ஒரு தடவை வம்பிழுக்கும் நோக்கோடு.



மேகலாவின் புறம் திரும்பியவன்
,



"அண்ணி முக்கியமான வேலைன்னு சொன்னா என்னன்னு கேக்க மாட்டிங்களா?" என ஓரப்பார்வையை பானுமேல் வீசி மயூ கேட்க.



அவன் பார்வை பானுமேல் இருப்பதை பார்த்தவள்
,



'இவங்க போதைக்கு நானா ஊறுகா? எல்லாம் இந்த எருமைய சொல்லணும்,



வாயை வச்சிட்டு சும்மா இருந்தா எதுக்கு பிரச்சினை லைன் கட்டிவந்து அடிக்க போகுது.'



"சொல்லுங்க மயூ! என்ன முக்கியமான வேலை." என்றாள்.



"ஆஸ்திரேலியா காடு பத்தி எரிஞ்சிட்டிருக்மாம், தெரியும் தானே உங்களுக்கு?"



" ஆமா அது தான் இப்போ எல்லா மீடியாவிலயும் காமிக்கிறாங்களே! அதுக்கு இப்போ என்ன? "



"இல்லை..! எப்பிடின்னு தெரியல கடல் தாண்டி இங்க ஒரு பெயரே தெரியாத காட்டு விலங்கொன்னு தப்பிச்சு நம்ம வீட்டுக்குள்ள புகுந்திடிச்சாம்...



அதை பார்க்க கிட்ட தட்ட கங்காரு போல தான் இருக்குமாம். என்ன அதோட பெயரை இதுக்கு வைச்சு கூப்பிட்டா அதோட இனத்துக்கு அசிங்கம்னு பார்க்குறேன்.



அது தான் இதை புடிச்சு விலங்குகள் சரனாலயத்தில் குடுக்கணும். முதல்ல மாணகரசபையில போய் என்ன செய்யணும்னு கதைச்சு, அவங்க கிட்டை குடுத்திட்டா நிம்மதியா இருக்கலாம். அவங்களா பார்த்து இந்த விலங்குக்கு எந்த பெயர் பொருத்தம்னு யோசிச்சு பெயரை வைச்சுக்கட்டும்."



"அட... ஆமா சார்..! நானும் அதையே தான் நினைச்சேன்.



அது இப்போ நடந்த தீ விபத்தில இல்லை. நான் நினைக்கிறேன் கிட்ட தட்ட இருபத்தைந்து வருஷமிருக்கும்
,



இலங்கைக்கு குட்டியா வந்திருக்கு.



சுந்தரியத்தைக்கு தான் அது என்ன விலங்குன்னு தெரியாம மனுஷ ஜாடையில இருந்ததினால மனுசன்னு நினைச்சு வளர்க்கிறாங்க.



முதல்ல அவங்கள கூப்பிடுங்க.



அந்த கருமத்தை புடிச்சு குடுத்திடலாம்."



"என்ன இத்தனை நாள் அரசாங்கத்துக்கு அறிவிக்காம வளர்த்ததுக்கு அத்தையையும், மாமாவையும் தான் புடிச்சு உள்ள வைக்க போறாங்க.



பறவாயில்லை.... எப்பிடியாவது வெளிய கொண்டுவந்திடலாம், ஆனா வீட்டுக்குள்ளவே அந்த விலங்கு இருந்தா ஆபத்தாச்சே" என்
றாள்.



"அண்ணி இவ வாயை அடக்கி வையுங்க,



இல்லை இருபது வருசத்துக்கு முன்னாடி வந்த விலங்கு அந்த வாயைக் கடிச்சு வைச்சிடும்." என்றவன் கோபம் போல் முகத்தை வைத்துககொண்டு வெளியேறினான்.



"அடியே எருமை.... ஏன்டி அவன்கூட மல்லுக்கு நிக்கிற? கொஞ்சம் அடங்கித்தான் போயேன்?." என்
க=



"யாரு நானா?... அவன் தான்டி வந்ததில இருந்து முறை பையனாட்டம் முறைச்சிட்டே நின்னான்.



அது தான் சின்ன கதை சொன்னேன். அதுக்கு அவன் ரியூஷன் எடுப்பானா?



இத பாரு நீ தான் இந்த வீட்டுக்கு மருமக... நான் கிடையாது
,



இவனை பார்த்து பயந்திட்டு என் குணத்தையும் மாத்திக்க முடியாது."



என சூ
டாக,



"உனக்கு கட்டம் சரியில்லனு நினைக்கிறேன். அது தான் வாய் வண்ணார் பண்ணை பக்கம் பேய்வருது." என்றாள்.




"இங்க பாரு நீ எனக்கு சப்போர்ட் பண்ணலனாலும் பறவாயில்லை, உன் கொழுந்தனாருக்கோ, இல்லை கொளுத்திவிட்ட பீருக்கோ சப்போர்ட் பண்ணேன்னு வையி..., அப்புறம் நான் ருத்ர தாண்டவமாடவேண்டி வரும் சொல்லிட்டேன்." என மிரட்டினாள்.



"அவன்கிட்ட பல்ப்பு வாங்கியும் பத்தலையா?



எல்லாத்தையும் பக்குவமா வைச்சிருந்து வீட்டில கொண்டுபோய் எரிய விடு! சும்ம திருவிழா போல ஜொலிக்கும்." என அவள் கேலிபேச.



"அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா
...



சண்டை எண்டு வந்திட்டா சட்டை கிழியத்தான் செய்யும்." என்றவள்,



"இருடி..! எப்பவும் என்னோட பல்பு மட்டும் எரியும்னு நினைக்காத, அவன் பக்கம் கனெக்ஷனை மாத்திவிடல... நான் பானு இ்ல்லடி!" என தன் மார்மீது தட்ட,



"இப்பிடியே அடிச்சு செத்துகித்து போயிடாத.... மேய்கிறது எருமை இதில பெருமை வேற,"



"எது வேனாலும் சொல்லிக்காே.



எருமை மேக்கிறதை தப்பா பேசினா எனக்கு கொட்ட கோபம் வந்திடும்."



" உன் இனத்தை குறை சொன்னா கோபம் வருதோ?"



"அந்த பேச்சை
விடு!



ஏன்டிஅத்தை இப்பிடி பிள்ளங்களை வளர்த்து வைச்சிருக்காங்க..?



சின்னவயசில யாருக்குமே சிரிப்பை கத்துக்குடுக்கலையா?



அம்புட்டும் வில்லனாட்டம் நெஞ்ச நிமித்திட்டு, கிட்ட வந்தா வெட்டுவேன் என்கிறமாதிரியே திருயுதுங்க.



இதுங்க ரெண்டுந்தான் அப்புடியா மாமாவும் இதுங்க போல தானா?



எனக்கென்னமோ நீ இங்க வாழ வந்தவ மாதிரி தெரியலடி?



ஏதோ கத்தி முனையில கடத்திட்டு வந்து அடைச்சு
வைச்சிருக்காறிமாதிரியே தோணுது.



உன்னை பாக்கிற ஆசையில நானும் இந்த வில்ல குடும்பத்துக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டேன் போலயே."



"அத்தைய தவிர இங்க யாரும் சிரிக்கிறது போல தெரியல.



எல்லாமே எண்பது காலத்து வில்லனாட்டம் முறிக்கிகிட்டே திருயிதுங்க.



அத்தானாவது பறவாயில்லை. இப்போ போச்சே அதுக்கு என்ன போரு?



கியூவோ? மயூவோ... அந்த விலங்க முதல்ல காட்டுக்குள்ள கொண்டுபாேய் விட சொல்லுடி.!" என்றாள்.




அமைதியாக உள்ளே வந்த முகிலன் பானுவின் பின்புறம் நின்று மேகலாவிடம் வாயின் மேல் விரல் வைத்து சத்தம் போடாதே என எச்சரித்தவன்,



பானுவின் காதை பிடித்து திருகியவ
னோ,



"என் வீட்டுக்கு வந்து என் குடும்பத்தையே கேலி பண்றியா?



என்ன சொன்ன..? எல்லாமே எண்பது வில்லங்கமாதிரி விறைப்பா திரியுறோமா?



இங்க நடந்தது எல்லாத்தையும் ஓரமாய் நின்னு கேட்டுட்டு தான் இருந்தேன்.



என் தம்பியையே வம்புக்கிழுக்கிறியா?



அவன் உனக்கு அனிமல் மாதிரியா தெரியுறான்?
நாத்தனாரு தானே பாவம், சும்மா விளையாடுறான்னு பாத்தா, அவன் போனதுக்கப்புறமும் அவனை திட்டிட்டு இருக்கியா?". என்று அவன் காதை
இன்னமும் இழுத்தான்.



"அத்தான் ஃப்ளீஸ்...... ரொம்ப வலிக்குது விடுங்க.



ஐயோ... வலிக்குதே, விடுங்கத்தான்.... இனி இந்த மாதிரில்லாம் பேசமாட்டேன். எல்லார் கிட்டையும் மரியாதையாவே நடந்துக்கிறேன்.
விடுங்கத்தான்...." என்
றாள்.



அவனோ விடுவதாக இல்லை.

வலியில்


அவன் புறம் தலையை சரித்தவள்,
"என்ன செய்த விடுவிங்கத்தான்? சீக்கிறம் சொல்.....
ஆஆஆ.... வலிக்குதே.... அம்மா.....



உன் பொண்ணை கூட்டிவந்து கொடுமை படுத்துறான்ம்மா.. உன் மருமகன வந்து என்னன்னு கேளு!" என கத்த..



"என்ன... என்ன..? இப்போ என்ன சொன்ன....? கொடுமை படுத்துறானா..? அத்தான்னு மரியாதை இல்லாம இவன் அவன் எண்டுவியா.....?".



"ஐயோ தெரியாம வலியில சொல்லிட்டேன் அத்தான். விடுங்க ஃப்ளீஸ்....." என ஞெ்சியவள், மேகலா வேடிக்கை பார்தவாறு நிற்க.



"அடியோ.. நீயெல்லாம் அக்காவாடி? உன் புருஷன் என் காதை சாவியை திருகிறது போல திருகிறாரு, பாத்து ரசிச்சிட்டு நிக்கிற, சொல்லுடி உன் வீட்டு காரன்கிட்டை விடசொல்லி.....". என மேகலாவில் எரிந்து விழ.



"போனா போகுது. நீ செய்த காரியத்தால எனக்கு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருக்கான்னு மன்னிச்சி இங்க கூட்டிவந்தா, நரித்தனம் பண்ணுறியா நீ?" என மீண்டும் திருக.



"ஐயோ காது பிஞ்சு வரப்போகுது. அடியே ராட்சஷி!. உன் அத்தானை பிறகு ரசிக்கலாம். இப்போ சொல்லுடி! நான் பாவம் இனி இப்பிடி பண்ண மாட்டேன்னு. விடச்சொல்லு."



அவள் வலியை உணர்ந்தவளாே
"விடுங்க அவள் பாவம்... அவளுக்கு வலிக்க போகுது.." என அவள் கொஞ்ச.



"நீ எதுக்கு டார்லிங்க் இவளுக்காக கெஞ்சுற? இவ வாய் இன்னையோட அடங்கணும்." என்றான்.



"ஃப்ளீஸ்ங்க விடுங்க... பாவம் இனி இப்பிடி பேசமாட்டா. நான் அதுக்கு பொறுப்பு." என அதே மாடலேஷன் மாறாமல் கேட்கவும்.



அவள் செய்கையையே ரசித்த
வனோ,



"அப்பிடி என்கிற...? உனக்காக மன்னிச்சிடுறேன்." என கண்ணடித்தன்.
அவளும் அவன் பார்வையில் முகம் சிவந்து போக தலை குனிந்து கொண்டாள்.



அந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி. அவன் கையை தன் காதிலிருந்து விடுவித்தவள், மெதுவாக கதவருகில் போய் நின்று.



"அடடடடடா..... என்னவொரு ரொமான்ஸ்?



இதை பாக்கிறதுக்கு ஊரில் இருக்கிறவங்க கண்ணெல்லாம் கடன் வாங்கி வந்தாலும் போதாது போலயே.



அடியே அக்கா..... உனக்கு முன்னாடியே சொன்னேன்ல்ல.
வெக்க படாத.. மாமா இதனால தான் மயங்குறாருன்னு.
சும்மா சொல்ல கூடாது. ரெண்டத்தையும் பார்க்க என் கண்ணே பட்டிடும்.



அவசரம் வேண்டாம். உங்க ரொமான்ஸ வயித்தில இருக்குதே குட்டி வில்லன்ு அவனை பெத்து எங்கிட்ட தந்திட்டு அடுத்த ரொமான்ஸ தொடங்குங்க." என்றவளை நோக்கி அடி எடுத்து முகிலன் வைக்க
,



"ஐயோ நான் இல்லப்பா...." என்று ஓடி விட்டாள்.



மேகலாவின் அருகில் வந்தவன்
,



"ஏன்டி இவ இப்பிடி இருக்க? கொஞ்சம் கூட வெக்கமே இருக்காதா.?. உண்மையை சொல்லு அவ உன் தங்கை தானா.... இல்லை எங்கேயாச்சும் இருந்து தூக்கிட்டு வந்தாங்களா...?" என்றாள்.



அவன் பேச்சில் சிரித்தவள்,



"அவ அப்பிடித்தாங்க. கொஞ்சம் குறும்பு , ஆனா மனசுக்க எதுவும் வச்சுக்க மாட்டா, நான்னா உயிரு." என்றவளை நெருங்கி.



"நீன்னா எனக்கும் தான் உயிரு. இப்போ என் உயிரும் உனக்குள்ள இருக்கிறதனால ரெண்டுயிரு." என காதல் மொழி பேச.



"க்கூம்..". என்ற செருமல் சத்தத்தை தொடர்ந்து.
"இப்பிடியே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க. அம்மாவும், அப்பாவும் இவளை பாக்க வராங்க.
உங்க ரொமான்ஸ் பார்த்து அவங்களுக்கே வெக்கம் வந்திட போகுது." என்றவும்.



"அடிங்க்...." என்று முகிலன் எழுந்து கொள்ள.



"அய்யோ!.... அம்மா!... காப்பாத்து...." என்வாறு கதவை சாத்தியவாறே ஓடி மறைந்தாள் பானு.......



சங்கமிப்பாள்....
 
Top