• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

45. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
ஓ... நான் அன்னைக்கு நடந்த தப்பைத்தான் சொல்லிட்டியோன்னு நினைச்சேன்ணா" என்றாள்.



"ஐயோ துர்கா! நீ எதுவும் அவகிட்ட உலறிகொட்டலையே!"



"இல்லண்ணா நான் சொல்லல."



"நல்லவேளை உலறிக்கொட்டல.



ஆனா துர்க்கா அவ பாவம்டி! பெத்தவங்க அவளை ரொம்ப டாச்சல் பண்றாங்கன்னு கேள்வி பட்டேன்
,



அவ இங்க இருக்க வேண்டாம்.
நீ ஒரு உதவி செய்யேன். கீதாவை நுவரெலியாக்கே அனுப்பி வைச்சிடுவோம். அங்க நம்ம அத்தை இருக்காங்க, கொஞ்ச நாளைக்கு அவங்க வீட்டில தங்கட்டும்,



அதுக்கப்புறமா உதயா வீட்டிலையே அவளை சேத்துடலாம்." என்றான்.



"ஏன் அவளை இப்பவே அவன் ஏற்க மாட்டானாமா?" என்று கோபமானவள் மண்டையில் கொட்டியவன்,



"அவன் அப்படி மோசமானவன் கிடையாது, நிலமைய சொன்னா புரிஞ்சுப்பான்.

ஆனா


என்ன ஆச்சுன்னு தெரியல. போனதும் கால் பண்ணுறேன்னு சொன்னவனை காணோம்.



நான் பண்ணா ரீச் ஆகல. அவங்க அம்மா அவசரம வேற வரச்சொன்னாங்கன்னான். என்னாச்சோ?



"இப்போ இருக்கிற சூழ்நிலையில எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதுவும் செய்ய முடியாது. அவன் பெத்தவங்கள வேற சமாளிக்கணும். அதுக்கு கொஞ்ச காலம் தேவை துர்கா.



முதல்ல இவளை இங்க நடக்கிற கொடுமையில இருந்து காப்பாத்தணும். அதனால இவளை அனுப்பி வைப்போம், அப்புறம் நான் உதயாவை சந்திச்சு நடந்ததை சொல்லி அவனை சேத்துவைக்க பாக்கிறேன்."



என்றவன் அவள் கையில் ஒரு பேப்பரை திணித்து,



"இதை கீதாக்கிட்ட குடுத்து இங்கே போக சொல்லு." என்றான்.



துர்காவிற்கும் கீதா குடும்பத்தவரை பற்றி தெரிந்ததால் அவள் இங்கிருப்பது சரியில்லை என்றே பட்டது,
'தமையன் சொன்னது போல கேணியடிக்கு முதலில் போய் பார்க்கலாம்,



இல்லை என்றால் அவள் வீட்டிற்கே செல்வோம்.' என்று வந்த போது தான் அவள் கேணிக்குள் தற்கொலை பண்ணப்போவது தெரிந்து வேகமாக ஓடிவந்து தடுத்தாள்.



அதன் பிறகு கீதா தான் அனுப்பிய இடம் செல்லவில்லை என்றும், அவள் ஊரிலையே காணவில்லை என்றும் கூறியவன்.
'சரி உதயவையாவது பார்த்து அவனிடமாவது கீதாவின் நிலை கூறுவோம்.' என உதயாவைத்தேடி நுவரெலியா வந்தான்.



உதயா அன்றே விபத்தாகி இறந்து விட்டான் என்றும், நீ சுயநினைவை இழந்து உயிருக்கு போராடியவாறு இருக்கிறாய்! என்று உன் வீட்டவர்கள் கூறியதாகவும் தனக்குத் தொரிந்தவற்றை சொல்லி முடித்தவன் விக்ணேஷ்.



"ஆனா ஊரில காணாமல் போனவ, இங்கேயே அதுவும் உன்கூடவே இருப்பான்னு நினைச்சுக்கூட பாக்கலடா." என்றான்.



நடந்தவற்றை மனக்கண் முன் ஓடவிட்ட சூரிய,



"ரொம்ப நொந்து போயிருப்பால்ல." என்றவன், நினைவு வந்தவனாய்,



"ஆமா....



உனக்குத்தான் அவளை தெரியும்ல்ல, அப்புறம் எதுக்கு அவளை தப்பா பேசின?"



"அப்பிடி பேசாமல் வேற என்ன மாதிரி பேச சொல்லுற?



ஒரே ஒரு தடவை தான் அவளை பாத்திருக்கேன், இப்போ அவ உருவத்தில வேற ரொம்ப மாறியிருக்கா, ஒரு வேளை அவ கீதா இல்லாம இருந்து, கீதாவா நீன்னு கேக்கப்போய், அடி ஏதாவது விழுந்திச்சுன்னா. யாரு வாங்கிக்கிறதாம்?



இதில அவ பெயர் என்னன்னு கேட்டா வதனின்னு சொல்லுற. ஒரு மூக்குத்தியை வைச்சு எதையும் உறுதி செய்யமுடியாது மாப்பு.....



அதனால தான். அவளைச் சீண்டி பாத்து உறுதி செய்துகிட்டேன்.



அவ என்னை அறைஞ்சதிலேயே பாதி சந்தேகம் போச்சு. பெயர் இடிக்குதேன்னு யோசிச்சப்போ தான், சும்மா ஒரு போட்டோவைக் காட்டி இது கீதாஞ்சலியான்னு கேட்டேன்.



அப்பிடி நான் அந்த பெயரை சொன்னதும் அவ முகம் அப்பிடியே மாறிச்சு.



சந்தேகமே இல்லாமல் அவதான்னு முடிவே பண்ணிட்டேன்." என்று தன் கண்டு பிடிப்பை மார்பை நிமிர்த்தி சொன்னவன்.



" ஆனா என்ன?? ரொம்ப நாளாவே ஒரு பட்சி சொல்லிட்டே இருந்திச்சு. நட்பென்று எவன் கூடவும் சேராத, உனக்குத்தான் சேதாரம் அதிகமாகும்ன்னு.



பாரு ஒரு பக்க பல்லு குறடே போடாம கழட்டிட்டா!



என வாயினை திறந்து காட்டியவன் மண்டைமேலே கொட்டு வைத்த சூரிய.



"இப்போ என்னடா பண்றது?



இது என் அண்ணன் குழந்தைன்னு கேட்டா கொடுப்பாளா?.. "



"இதில என்னடா உனக்கு சந்தேகம்?" என்று அவனுக்கு சாதகமாக பேசுவதைப்போல் முகம் மலர்ந்து சொன்னவன்.



"சத்தியமா கொடுக்க மாட்டா." என்றான் சப்பென்று
.



"உனக்கு எல்லாம் விளையாட்டா போச்சாடா? நீ பாட்டுக்கு காமடி பண்ணிட்டிருக்க." என்றான் சினந்து



"பின்னே...! உன் அறிவு மேல ஆணி வைச்சு அடிக்க
,



பைத்தியக்காரனாட்டம் கேட்டா, என்ன சொல்லட்டும்?



சாதாரணமா உங்கிட்ட தூக்கி கொடுக்கிறத்துக்காகவா இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி அவளை பெத்துக்கிட்டா?



"ஏன்டா!



அப்பிடி என்னடா தப்பா கேட்டுட்டேன்? உதய செய்த தப்புக்கு அவ எதுக்கு தண்டனையை அனுபவிக்கனும்?. அவளுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாமா?



அவ ரொம்ப சின்ன பொண்ணுடா! அந்த பாப்பா அவ கூட இருக்கும் வரைக்கும் அவளுக்கு நல்ல வாழ்கை அமையாது, அதனால தான் அவளை நாங்களே வளர்த்துக்குறோம். அவ பழையபடி பெத்தவங்ககிட்ட போய் சேரட்டும்" என்றான்.



கேலிபோல் சிரித்தவனோ,



"அப்புறம் என்ன எல்லாம் உலறணுமோ உலறிக்கடா!



ஏன்னா இந்த பைத்தியக்கார பேச்சை எல்லாம் நான் ஒருதன் தான் காது கொடுத்துக்கேப்பேன்.
அவளை சின்ன பொண்ணுன்னு சொல்லிட்டு, நீ தான்டா சிறுபிள்ளை தனமா பேசுற.



எப்பிடி..... எப்பிடி....? இழக்கக்கூடாதது எல்லாம் இழந்து, ஒரு பிள்ளையை அவ பெத்துப்பாளாம், அதை வளர்க்க வீடுவீடா பாத்திரம் கழுவி அவளை கண்ணுக்குள்ள வைச்சு மூணு வருஷமா வளப்பாளாம், நீ நோகாமல் அண்ணான் பொண்ணு தானே, தான்னு கேட்டதும் தந்திடுவாளாம்.



என்னடா பேசுற?



உருவம் தெரியாம இருந்தப்பவே அந்த குழந்தையை இழக்க கூடாதுன்னு ஊரைவிட்டே ஓடி வந்தா, இப்போ தன்னோட வாழ்க்கையே அவதான்னு வாழுறப்போ, கேட்டா தருவாளாடா?
"



"ஆனா அவ பாவமில்லையாடா! ஒரு சின்னப்பெண்ணோட வாழ்க்கை நம்மளால கெட்டுப்போகுதுன்னு தெரிஞ்சும், கண்டுக்காம இருக்கிறது ரொம்ப தப்பு,



அதுவும் என் குடும்பத்து ரத்தம் வேற அவகிட்ட வளருது. இவளோட பிடிவாதத்தினால அதனோட எதிர்காலமும் வீணாகிடக்கூடாது.



நடந்ததை சொல்லி எங்க வீட்டு வாரிசை கேக்கபோறேன்." என்றான்.



"உனக்கு ஏன்டா நான் சொல்லுறது புரியுதில்லை?



அவ எவ்வளவு பிடிவாதகாரின்னு சொல்லியும், அவகிட்ட போய் கேக்கபோறேன்னு பைத்தியக்காரனாட்டம் பேசுற
,



இப்போ என்ன அவங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் நல்லா இருக்கணும் அவ்ளோ தானே! அதுக்கும் ஒரு வழி இருக்கு"



"என்ன வழி?"



"நீ ஏன் அவளை கட்டிக்க கூடாது?." என்றவனை முறைத்து விட்டு சூரிய திரும்பி நின்று கொள்ள
,



அவன் அருகில் வந்த விக்னேஷ்,



"ஏன் சாருக்கு கெட்டுப்போன பொண்ணை ஏத்துக்க மனம் வரலையோ?.." என்றான் கோபமாய்.



"யாருக்கு நானா?" என ஆவேசமாய் திரும்பியவன்,
"அவ குழந்தையோட இருக்கும்போ தான் அவளை நான் விரும்பினதே. அவ கெட்டுப்போனதில எந்த தயக்கமும் எனக்கில்லை. ஆனா?" என்றவன் எச்சிலை கூட்டி முழுங்கி,



"அவ என் அண்ணன் சம்சாரம்டா! எப்பிடி நான்........?"



"பைத்தியக்காரனாடா நீ?



சம்சாரமாமே சம்சாரம்.



சம்சாரம் என்கறதோட அர்த்தம் தெரியுமா உனக்கு?



உன் அண்ணன் முறைப்படி தாலிகட்டி அவகூட குடும்பம் நடத்தினான் பாரு.



எதுவுமே தெரியாத சின்ன பொண்ணு போதையில இருக்கிறப்போ ரேப் பண்ணியிருக்கான்டா.



நீ என்னடான்னா உங்கண்ணன் அவகூட முறைப்படி வாழ்ந்த மாதிரி பேசிட்டிருக்க,




இத பாருடா! நடந்து முடிஞ்சது எல்லாமே ஒரு விபத்து. அவளுக்கு உதயா என்கிறது யாருன்னு கூட தெரியாது. அவனை தெரிஞ்சுக்கவும் அவ விரும்ப மாட்டா?



இப்போ கேள்வி என்னன்னா
நீ அவளை உண்மையா காதலிக்கிறியா?"



"ஆம்" என்பதாய் தலையசைத்த சூரிய,



"ஆனா இது தப்பில்லையா?"



"இல்லையே! நீ அவளை விரும்புறப்போ அந்த பாப்பாவோட அப்பா உதயா என்கிறது தெரிஞ்சா விரும்பின? இல்லை தானே!



ஒன்னும் வேண்டாம்,



அந்த குழந்தைக்கு அப்பா உதயா இல்லாம இருந்திருந்தா நீ அவளை ஏத்துக்கிட்டிருப்பியா? இல்லையா?"



"இது வரைக்கும் அப்பிடித்தான்டா நினைச்சிட்டு, அவளை நேசிச்சேன்."



"பிறகென்னா? இப்பவும் அப்படியே நினைச்சுக்கோ.



மறுபடியும் மறுபடியும் சொல்லுறேன், தாம்பத்தியம் என்கிறது ரெண்டு மனசும் சேரணும்,



உதயா அவமேல இருந்த ஈர்ப்பினால இந்த தவற செய்திருக்கான், அவளுக்கு தெரிஞ்சு அவன்கூட கீதா போகல,



இப்ப கூட விதியேன்னு வாழ்ந்திட்டிருக்காளே தவிர, தன்னை கெடுத்தவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், அவன் எப்பவாச்சும் தான் செய்தது தப்புன்னு தெரிஞ்சு தேடிவந்து ஏத்துப்பான்னு எதிர்பார்க்கல,



அப்பிடியான பழமை வாதியும் அவ இல்ல.



இதுவும் உனக்கு புரியலனா, எப்படி சொல்லி எனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியல." என்றவன்.



"சரி அது வேண்டாம், உன் வழிக்கே வரேன்.



இப்போ ஒரு பையனுக்கு கல்யாணமாகி, அவனுக்கு ஒரு குழந்தை இருக்கிறப்போ அவானோட மனைவி இறந்திட்டானா என்ன பண்ணுவோம்?, குழந்தை எதிர்காலத்தை மனசில வைச்சிகிட்டு அவளோட தங்கையை கட்டிக்கிறதில்ல? அது போலத்தான்டா இதுவும்.



ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதியா? பொண்ணுங்க மனசு என்ன கல்லாலையா செய்திருக்கு?"



நான் சொல்லுறது தான்டா சரி.
நீ எப்பிடித்தான் கேட்டாலும் அவ தன்னோட குழந்தையை தரமாட்டா, குழந்தையோட எதிர்காலத்தில உனக்கு அக்கறை இருந்துதுன்னா, இதை விட்டா உனக்கு வேற வழியில்லை.



உன் அண்ணானால ஏற்பட்ட கறைய நீ துடைக்க பாரு!" என
கூறி யோசிக்க இடம் தந்து ஒதுங்கி நின்றான்.



"ஆனா விக்ணேஷ், அவ ஒத்துப்பாளாடா?"



" நிச்சயமா மாட்டாடா!,



இப்போதைக்கு எந்த விஷயமும் அவளுக்கு தெரிய வேண்டாம், ஏதாவது ட்ராமா பண்ணித்தான் இதை நடத்தணும், அதுக்கு உன்னை பெத்தவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியாதே!"



"அவங்களை அப்புறமா சமாளிச்சுக்கலாம்டா, எனக்கு கீதா வேணும். அதுக்கு நீ என்ன சொல்லுறியோ செய்யிறேன்
, ஆனா எதுவா இருந்தாலும் பத்து நாளைக்குள்ள செய்! ஆத்திரேலியா திரும்பணும்." என்றான்.



அதன் பின் ஒவ்வொன்றாக திட்டம் போட்டவர்களுக்கு சொல்லி வைத்ததைப்போல திட்டமும் நிறைவேறியது.



அவனது ஆத்திரேலியா பயணமும் அவள் தன்னை கணவனாக ஏற்றுக்காள்வதற்கான அவகாசம் என தப்பாக கணித்து விட்டான்.



அவள் தான் கண்ணில் படாதது எதுவும் கருத்தில் இருந்து மறைந்துவிடும் என்பதைப்போல, சூரிய என்றொருவன் இருக்கிறான் என்பதாக கூட எண்ணவில்லையே
!



அஞ்சலியுடன் இரண்டு வருடங்களாக போனில் பேசுபவன், தூரத்தில் எங்கேயாவது வதனி தெரிகிறாளா? ஒரு முறை அவளை பார்த்து விடமாட்டோமா? என ஆவலுடன் அவன் விழிகள் தேடும்.



இரண்டு வருடத்தில் ஒரு நாள் கூட அவள் தரிசனம் தந்ததில்லை. அவள் மாறுவாள், தன்னை ஏற்றுக்கொள்வாள் என காத்திருந்த பொறுமை இழந்தவன்,



இப்படியே இருந்தால், ஒருகட்டத்தில் பௌத்த துறவியாகத்தான் போகவேண்டும் என நினைத்து நாட்டுக்குத் திரும்பினான்.



என நடந்தவற்றை கூறியவன்,



"நீ இத்தனை நாள் கேவலமா பாத்த இந்த குழந்தை வேற யாருமில்லம்மா! உன்னோட பேத்தி, உன் செல்ல மகனோட பொண்ணு,



எங்க இப்போ அவளை தப்பா பேசு பாக்கலாம்? கீதா ஒன்னும் கேவலமாவ கிடையாது, உன் பையன் செய்த செயலால தான் இவளை இந்த உலகம் கேவலமா பாக்குது.



எப்பவும் சொல்லுவியே, இவ எங்க குடும்பத்துக்கு அசிங்கம், அவளை விட்டுட்டு வான்னு, இப்போ சொல்லும்மா! இவளை விட்டுட்டு வந்துடவா?" என்றவன் அவரது கண்களை பார்த்து.

வதனியே


தனக்கு நடந்த கொடுமைகளை சூரிய வாயினால் கேட்டு சிலைபோல அமர்ந்திருக்க,



"பாரும்மா......!



தன்மேல தவறே இல்லன்னு தெரிஞ்சும், உன் பேச்சை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல், ஊருக்கு முன்னாடி தலை குனிஞ்சு இத்தனை நாள் பொறுமையா இருந்து உன் பேத்திய வளர்த்திருக்கா,



பார்க்கப்போனா தலைகுனிய வேண்டிய அவசியமே அவளுக்கு இல்லை, உன் பிள்ளையை நினைச்சு நீ தான் தலைகுனியணும், என் அண்ணனை நினைச்சு நான் தலைகுனியணும்." என்றவன் சொல்வதைக்கேட்டு, கண்கங்களில் வழியும் கண்ணீரைக்கூட துடைப்பதை மறந்து அப்படியே சமைந்து அமர்ந்திருப்பவளை பார்த்த கமலி, தன் தவறு என்ன என்று உணர்ந்து தலை குனிந்தாள்.



'கடந்த காலத்தில் தன் அனுமதியின்றி நடந்தவற்றையும், தன் நிலையினை தமக்கு சாதகமாக்கி நாடகமாடியிருக்கிறார்கள்.



இதை எதையும் அறியாமல் இத்தனை காலம் பைத்தியக்காரியாட்டம் இருந்திருக்கிறேன்.' என வேதனை கொண்டவளாய், அவனை பேசவிட்டு அமைதியாக இருந்தவள்,



இறுதியில் அடக்கிவைத்த ஆதங்கள் இயலாமையாய் வெடித்து கதறியழத்தொடங்கினாள்.



அதை தாங்கிக்கொள்ளாத சூரிய அவளருகில் ஓடிவர,



அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தவளாய், இருக்கையை விட்டு வேகமாக எழுந்து,



அழுகையினூடே அவனை தன் கிட்டே வராதே! என்பதைப்போல் முறைத்தவள், மற்றவர்களின் முன் காட்சிட்பொருளாய் நின்று அழுவதை விரும்பாது அறையுள்ள புகுந்து கொண்டாள்.



என்ன ஆனாலும் பரவாயில்லை, அவளுக்கு இந்த சமயம் ஆறுதலாக இருக்கவேண்டும் என நினைத்து, அவள் பின்னாலே சென்றவன் கையினை பிடித்து தடுத்து துளசி.



"இப்போ அவகிட்ட போகவேண்டாம்."என்றாள்.



"அவ அழுதிட்டு போறா துளசி" என்றான் வருத்தமாய்.



"அழட்டுமேன்......! அதுக்கு என்ன வந்திச்சு?" என்றாள் சூடாக.



"துளசி.......!



"அவ அழுகிறது ஒன்னும் புதுசில்லையே?



சின்ன வயசில எவ்வளவு தைரியமானவளா, குறும்புக்காரியா இருந்திருக்கா,



ஆனா இதை எதையும் நான் வதனிகிட்ட பார்த்ததில்லை, இப்போ அழுதிட்டு போனாளே இவளைத்தான் இந்த ஆறு வருஷமா பார்த்திட்டிருக்கேன்,



அழறா அழறான்னு அவ பின்னாடி ஓடுறீங்களே! அழாமல் அவளால என்ன பண்ண முடியும்? "



"அவ வாழ்க்கையிலேயே அவளோட அனுமதியில்லாம



தெரிஞ்சவன், தெரியாதவன்னு எத்தனைபேரு விளையாடியிருக்கிங்க, அவளை நம்ப வைச்சு மொத்த பேருமே ஏமாத்தியிருக்கிங்க,



யாருமே அவளுக்கு உண்மையா இல்லையே!



துர்கா உட்பட நீங்க வரைக்கும்."



"துளசி அது.. நான்..." என்று சூரிய எதுவோ கூற வர,,



"தெரியும்ண்ணா, நீங்க என்ன சொல் வாரிங்கன்னு.....



உண்மை தெரிஞ்சா உங்க தரப்பு நியாயத்தையும் புரிஞ்சுக்க மாட்டா, கூடவே உங்க காதலையும். அதை தானே சொல்ல வரீங்க.



உண்மை தான். அவ இடத்தில நானே இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்.



ஆனா அவளும் மனுசி தானே! அவளுக்குள்ளையும் மனசுன்னு ஒன்னு இருக்குன்னு யாரும் ஏன் நினைக்கல?



நடந்த சம்பவத்தில பாதி விதின்னா, பாதி உங்க சதிதானே?



இப்படி ஒரு தவறு நடந்திருக்குன்னு விக்னேஷ்க்கு தெரிஞ்சும் அதை அவகிட்டை இருந்தும் மறைச்சதனால இவ்வளவு கஷ்டம்?"



"சரி...! முன்னாடி மறைச்சவரு, அவ கற்பமா இருக்குறப்போதாவது உண்மை இது தான்னு அவ பெத்தவங்ககிட்ட சொல்லியிருக்கலாம், அதை சொல்லிருந்தாலே அந்த நேரத்தில அவளுக்கு பெத்தவங்ககிட்ட இருந்து கிடைக்க வேண்டிய அரவணைப்பு கிடைச்சிருக்கும்.



அதோட நிம்மதியா அவங்க கூடவே இருந்திருப்பா! இந்த சம்பவத்தினால அவ இழந்தது ஒன்னு ரெண்டில்ல, அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும் என்டும் இல்ல,



நீங்களும் அவளுக்கு வாழ்க்கை குடுத்து நல்லது தான் செய்திருக்கிங்க, ஆனா உண்மை தெரிஞ்சும் அதை மறைச்சதனால, தன்மேல இரக்கப்பட்டுத்தான் நீங்க தனக்கு வாழ்க்கை குடுத்ததாக நினைக்க நிறைய வாய்ப்பிருக்கு.



அதோட நீங்க அத்தனை பேரும் அவளுக்கே தெரியாமா, அவளோட அனுமதி இல்லாமலே அவ வாழ்க்கையில நிறைய மாற்றத்தை கொண்டுவந்ததிருக்கிங்க. எனக்கே அது கோபத்த உண்டு பண்ணுது.



அவளுக்கு கோபம் வராதா? என்னமோ கடவுள் இதைத்தான் விரும்பியிருக்காருன்னா அது தான் நடக்கும். நடந்ததை நினைச்சு வருத்தப்படுறதிலயும் பலனில்லை."



"இப்போ அவகிட்ட பேசுறது நல்லதில்லை. அவ வாழ்க்கையில அவளையும் மீறி இத்தனை நடந்திருக்கு தன்னால தடுக்க முடியலையே என்கிற ஆதங்கம் அவளுக்கு.



இப்போ அவமுன்னாடி போனிங்கன்னா நிச்சயம் உங்க மேல கோபப்படுவா,



அவ மனசு விட்டு நல்லா அழட்டும். அவ அழுகிற கடசி அழுகை இதுவா இருக்கட்டும்,



இனியாவது தான் யாரு, தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க இந்த அழுகையும், தனிமையும் அவளுக்குத் தேவை." என்றவாறு



கமலியிடம் திரும்பியள்.



"அம்மா.... நீங்க இங்க வந்ததில ரொம்ப சந்தோஷம், நீங்க இன்னைக்கு இங்க வரலைனா நிச்சயம் கீதாவோட வாழ்கைக்கு பின்னாடி இருக்கிற மர்மங்கள் தெரியாமலே போயிருக்கும்,



இன்னைக்காவது சூரிய உண்மையை சொன்னதில சந்தோஷம், இதுவே அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழும்போது தெரிஞ்சிருந்தா முடிவு பயங்கரமா இருந்நிருக்கும்,
இயலாமையில தற்கொலை கூட அந்த பைத்தியக்காரி பண்ணியிருப்பா."



"அவ இப்போ ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா,
இன்னும் நீங்க இங்கேயே இருந்திங்கன்னா அவளுக்கு சங்கடமா இருக்கும்,



நீங்க கிளம்புங்கம்மா!
வீடு தேடி வந்தவங்கள துரத்துறேன்னு தப்பா நினைக்காம, அவங்க வாழ்க்கை சரியாகணும் என்கிற நல்ல எண்ணத்துக்காகத்தான் உங்களை அனுப்புறேன்னு நினைச்சிட்டு கிளம்புங்கம்மா," என்று கையெடுத்து கும்பிட்டவள் அருகினில் வந்த கமலி.



"யாருனே தெரியாத ஒருத்திக்கு அடைக்கலம் தந்து, அவளுக்கு ஓரு கஷ்டம் என்டதும் துடிச்சு போற பாரு, நீ தான்ம்மா பெரிய மனுச.
நாங்க உன்கிட்ட பிச்சை கேக்கணும்மா. அந்தளவு பக்குவமானவ நீ" என்று அவள் கன்னத்தை வருடி குட்டிமாவை அவளிடம் கொடுத்தவள்,
"என் மருமக இதுவரைக்கும் பட்ட கஷ்டம் போதும், சீக்கிரமா அவ மனசை மாத்தி என் பையன் கூட சேத்து வைச்சிடும்மா!, இந்த அம்மாக்காக இதை செய்திடுறியா?." என கைகூப்பி கெஞ்சியவர் கைினை பற்றியவளோ!




மன்னிச்சிடுங்கம்மா! இது அவளோட வாழ்க்கை.
அவ முடிவில் தலையிட எனக்கு உரிமையில்லை, ஏற்கனவே அவளோட வாழ்க்கையை நிறையப்போரு அவளுக்கு பதிலா வாழ்ந்திட்டிருக்காங்க,



அதே தவற நானும் செய்யிறதா இல்லை,



அவ மனசு என்ன சொல்லுதோ அதையே செய்யட்டும், வேணும்னா எனக்கு தப்புன்று தோனுறதை செய்யவிடாமல் தடுக்க முடியும்.



அவமனசு மாறுறதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து காத்திருப்போம்.
மறுக்கிறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க" என்றாள்.

வலிநிறைத்த புன்னகையினை உதிர்த்தவர்கள்,
"தப்பு முழுக்க எங்க மேல இருக்குறப்போ, உன்னை எப்பிடிம்மா தப்பா நினைப்போம். நாங்க கிளம்புறோம்." என விடை பெற்றனர்.





ஔிரும்.......
 
Top