• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

46. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
"சரிண்ணா நானும் வாரேன்." என துளசி திரும்ப,

"துளசி....!" என்று விட்டு தயங்கி நிற்பவனது மனநிலை புரிந்தவளோ,


"தப்பா எடுத்துக்காதிங்கண்ணா!
உங்க அம்மாவுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்....
அவ மனசு மாறி உங்களை ஏத்துப்பான்னு நம்புவோம், அதுக்காக கடவுளைக்கூட வேண்டிக்கிறேன்.
ஆனா அவ முடிவில தலையிட விருப்பமில்லண்ணா."

"அதுக்கில்ல துளசி, கீத்துக்கு உண்மை தெரிஞ்சு அவ ரொம்ப உடைஞ்சு போய் இருப்பா, இந்த நேரத்தில அவகூட நீ....."


அவன் வதனியை கீத்து என்று செல்லமாக அழைத்ததை அப்போது தான் கவனித்தவள், குறுநகை உதட்டில் ஒட்டிக்கொள்ள,


"இப்போ தனிமை அவளுக்கு வேணும்ண்ணா,
அந்த தனிமை தான் தெளிவான முடிவை எடுக்க சரியா இருக்கும்,
நான் அப்புறமா வரேன்.
நீயும் அத்தை கூட வரியா குட்டிம்மா!
ஆஷாக்காவும் இன்னைக்கு ஸ்கூல் போகல. அவகூட விளையாடலாம், அப்பா வேலைக்கு போகட்டும்" என்று அவளை அழைத்தாள்.


சின்னவளுக்கும் ஏனோ அங்கிருக்க பிடிக்கவில்லை.


"அப்பா நான் அத்தைக்கூட போறேறேன்." என்று துளசியுடன் சென்றாள்.


சூரியவிற்குத்தான் எல்லோரும் தன்னை மட்டும் தனிமையில் தவிக்க விட்டுச்செல்வதைப்போல இருந்தது.

அவன் தவறு செய்திருக்கிறான் தான், ஆனால் அவன் இதை வேண்டும் என்று செய்யவில்லையே....!
உண்மையை கூறி தன் காதலை தெரிவித்தால் நிச்சயம் அவள் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்பதால் தானே அப்படி செய்தான்.


அவளும் தன் காதலை கூறிய அடுத்த நிமிஷம் உண்மையை கூறுவதென்று தானே இருந்தான்,
அதன் பின் தன்னை அவள் ஏற்று கொள்வதும் விலகிப்போவதும் அவள் விருப்பம்.
அவள் மனதில் தனக்கென ஒரு இடம் கிடைத்தாலே அவனுக்கு போதும் என்பது தானே அவன் எண்ணமே.


ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் உண்மையினை கூறவேண்டி வரும் என அவன் நினைக்கவில்லை.
வதனியின்
இப்படியானதொரு ரெண்டும் கெட்டான் முடிவை அவன் எதிர்பார்க்கவில்லையே!

'துளசி கூறியதை போல அவளுக்கான தனிமையினை கொடுப்பதை தவிர அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
இனி நடப்பவை அணைத்தையும் விதியின் கையில்' என நினைத்தவனாய், இங்கேயே நின்று வதனிக்கு கோபத்தை அதிகரிக்க விரும்பதவன் வெளியேறினான்.



தனிமையில் கரைந்தவளுக்கோ,
இத்தனை நடந்திருக்கிறது, எதையும் உணரமுடியாத அளவிற்கு கிணற்றுத்தவளையாக இருந்திருக்கிறோமே! என வெட்கமாகி போனது.


துர்காவில் இருந்து, சூரிய வரை தனக்கு நல்லது தான் நினைத்திருக்கிறார்கள் என்று எல்லோரயுமே கண்மூடித்தனமாக நம்பினாளே!

'ஒருவரை நம்புவது அவ்வளவு பெரிய குற்றமா?
எங்காவது ஒரு இடத்தில் துர்காவாவது நான் குற்றமற்றவள் என கூறியிருந்தால் இவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்காதே!
கடசியில் அவளும் என்னை ஏமாற்றிவிட்டாள்.


இந்த சூரிய என்ன மாதிரியாக நாடகம் ஆடி என் கழுத்தில் தாலியை கட்டியிருக்கிறான், நானும் அதை உண்மையென நம்பி இப்போது நானும் அவனை.........
ச்சீ......


எல்லாமே அண்ணன் வாரிசிற்காகத்தானா?
நானும் சராசரி மனுஷி என்பதை மறந்துவிட்டு, எல்லோருக்குமே என்னிடம் சுயநலத்தோடு தான் நடந்திருக்கிறார்கள்.

எனக்குள்ளும் ஆசாபாசம், உணர்வுகள் இருக்குன்னு ஏன் யாரும் நினைக்கல?
எல்லாரையும் நம்பினேனே!
சூரிய கூட.........


இல்லை என்மேல தான் தப்பு!
அன்னைக்கு அந்த படத்த பாத்ததும், அந்த கண்ணை எங்கோ பார்த்ததைப்போல இருந்திச்சு,
கொஞ்சம் ஆழமா யோசிச்சிருந்தா துர்கா வீட்டில பார்த்த கண்ணுக்கு சொந்த காரன் இவனோடதுன்னு தெரிஞ்சிருக்கும்.
அப்பவே சுதாரிச்சிருப்பேன்.
ஆனா என்னோட அலட்சியத்தினால தானே யோசிக்க இடம் தராம எடிட்டிங்க்ன்னு திசைதிருப்பினான்.


அண்ணன் செய்த பாவத்துக்கு தம்பி விமோட்சனம் தேடுகிறானா?

என்ன தைரியமிருந்தா என் பொண்ணை என்கிட்டையே தரமாட்டேன் என்பான்?
இங்கேயே இருந்தா தானே அஞ்சலிய உரிமை கொண்டாடுவ,
கண்காணத தேசம் போயிட்டோம்னா எப்படி நீ உரிமை கொண்டாடுறேன்னு பாக்குறேன்.' என தனக்குள்ளேயே சபதம் மேற்கொண்டவளுக்கு தன் நிலையினை நினைத்து கலங்காது இருக்க முடியவில்லை.


ஒரு மணிநேரம் கடந்திருக்க வந்த துளசியோ இன்னும் வதனி அழுதவறு குறுகி கிடப்பதை கண்டு,


"போதும்டி....!
இதுக்கே சோர்ந்துட்டேன்னா, அப்புறம் சூரிய கிட்டருந்து எப்பிடி அஞ்சலிய போராடி வாங்கிப்ப?"


"முடியலக்கா!
நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவங்களே என்னை நம்பவைச்சு ஏமாத்திட்டாங்களே! " என்று கேவியவளை அணைத்துக்கொண்டவள்,


"இங்க பாரு வதனி!
இப்போ நடந்தது எல்லாமே உன்னை பொறுத்த வரைக்கும் முடிஞ்சு போன கதை
,
அதனோட மறு பக்கம் தான் இப்போ தெரிஞ்சிருக்கு,
இதெல்லாம் தெரியுறத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்பிடியே இரு கீதா!
ஒரே விஷயத்துக்கு எத்தனை வாட்டி அழுதிட்டே இருப்ப?


உன்னோட நிலமை எனக்கு புரியாம இல்லை, ஆனா அஞ்சலிய கொஞ்சம் யோசிச்சு பாரு! அவளுக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியலனாலும். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஏதோ சரியில்லணு தெரிஞ்சிருக்கும்,

அவ எப்போவும் இப்படியே இருந்திடவுமா மாட்டா,
வளர்ந்து வரப்போ இதெல்லாம் அவளோட மனநிலைய பாதிக்கணுமா?
இது தான் உனக்கு வேணுமா சொல்லு?
குட்டிம்மாக்கு சந்தேகம் வரமாதிரி அழுதிட்டிருக்காத வதனி." என்றாள் தேற்றும் விதமாய்.


"ஏன்க்கா அவளுக்கு உண்மை தெரியட்டுமேன், அவளோட அப்பா யாரு? எப்படிப்பட்டவன், இப்போ அப்பான்னு சொல்லி உறவு கொண்டாடுறவன் அவளோட சித்தப்பன்னு." என்றவள் உடனே,


"இல்ல..... அவன் சித்தப்பனும் கிடையாது, அப்பனும் கிடையாது.
அவ என்னோட பொண்ணு,
அவளை யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன்.
என் பொண்ணையே எங்கிட்ட தரமாட்டானாமா? பாதியிலையே வந்து இவன் புடுங்கிட்டுப்போறதுக்கா இத்தனை கஷ்டப்பட்டேன்?"
என்று பொங்கியனாள்
.


"ஆமாம்டி! அண்ணா இன்னைக்கு செய்யது எனக்கேபிடிக்கல,

சரி விடு! நீ தாலிய கழட்டி வீசிட்டேங்கிற ஆதங்கத்தில அப்பிடி நடந்திருப்பாரு, நீயும் அப்படி செய்திருக்க கூடாதுல்ல, நீ செய்ததும் தப்பு தானே"


"எதுக்கா தப்பு? அந்த தாலி என் கழுத்தில இருந்திருந்தா தான் தப்பு, அந்த கல்யாணமே ஒரு நாடகம்.
கத்தி முனையில நிக்க வைச்சு கட்டின தாலிக்கு முக்கியத்துவம் குடுக்கணும் எங்கிற அவசியமும் எனக்கில்ல,


என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு, எனக்கும் உணர்வுகள் இருக்கன்னு நினைச்சு என் சம்மதத்தை அந்த தாலியை கட்டியிருந்தா, நீங்க சொல்லுற முக்கியத்துவத்த குடுத்திருப்பேன்.


ஆனா அப்பிடி எதுவும் நடக்கலையே! அண்ணன் செஞ்ச தப்ப, இவன் சரி பண்ணுறதுக்காக கட்டிட்டு, இப்போ குட்டிமாவை உறவு கொண்டாடப்பாக்கிறான்,
அவ என் பொண்ணு, அவளை பங்கு போடுற உரிமை யாருக்கும் இல்ல.


இத்தனை நாள் என் நிலமைக்கு காரணமானவன் யாரா இருக்கும்ன்னு தேடினதும் இல்லை, அதே சமயம் அவனை நான் என் வாழ்நாளில பாக்க கூடாதுன்னு இருந்தேன், அவனும் இப்போ உயிரோட இல்ல.

அவன் உயரோடயே இருந்திருந்தாலும் அவன்கிட்ட நான் போயிருக்க மாட்டேன்.
அவனுக்குப்பதில் இவன்னு யாரும் என்கூட குப்பையும் கொட்டவும் தேவையில்ல." என மூச்சு விடாமல் கண்ணீரின் மத்தியில் கத்தியவளையே பார்த்திருந்த துளசி.


"சரிடி! உனக்கு தான் குட்டிம்மா பிறந்ததுக்கு காரணமானவன் எவனா இருந்தாலும் கவலையில்லையே!
அப்புறம் அண்ணாவ ஏத்துக்கிறதில என்ன வந்திச்சு?


"யாரும் போடுற வாழ்க்கை பிச்சை எனக்கு தேவையில்லக்கா,
குட்டிமாவை கூட்டிட்டு எங்கேயாவது போயிடுபோறேன்." என்றவளை முறைத்தவள்,


"கூட்டிட்டு போயி.....?" என்று இதுவரை அவளுக்கு சாதகமாக பேசியவள்,

"சொல்லு கீதா? கூட்டிட்டு போயி, ரெண்டு பேரும் சீரளிய போறிங்களா? இல்லை இவளை வைச்சு பிச்சை எடுக்க போறியா......?

நானும் போனா போகட்டும்ன்னு விட்டா, எப்போ பாத்தாலும் கூட்டிட்போவேன் போவேன்கிற,
இந்த உலகம் நல்லவங்களால மட்டும் அமையல, அண்ணாவும் உன்னை அந்த மாதிரி விட்டுட மாட்டாரு, காலையில அவரோட கோபத்தை பாத்தால்ல,
உலகத்தோட எந்த மூலைக்கு நீ போனாலும் அஞ்சலிய தேடி வருவாரு,


இப்போவாவது நின்மதியா அஞ்சலிகூட இருக்க, இதுவே வழக்கு போட்டாருன்னு வைச்சுக்கோ, நூறு தடவை வாய்தா வாய்தான்னு கோட் வாசலுக்கு ஏறி இறங்கியே வெறுத்து போயிடும்.


அதுவுமில்லாமல் அஞ்சலிக்கு அப்பான்னா உயிர்.
யாருகூட போக போறேன்னு கோட்ல கேட்டாங்கன்னா, அப்பான்னு அவ ஒரு வார்த்தை சொன்னான்னு வைச்சுக்கோ, அவன்கிட்டையே அவளை குடுத்துடுவாங்க.
இதைத்தான் நீ எதிர் பாத்தேனா தாரளமா நீ போ!" என்று கோபமாக சொன்னவளை மிரட்சியாய் பார்த்தவள்,


" குட்டிம்மா என்னை வேணாம்ன்னு சொல்லவே மாட்டா" என்றாள்.


"குழந்தைங்க குணம் எதுன்னு சொல்ல முடியாது கீதா!
இன்னைக்கு ஒன்னு சொல்லுவாங்க, நாளைக்கு இன்னொன்னு சொல்லுவாங்க, அந்த நேரத்தில என்ன தோணுதோ அதை மட்டுந்தான் செய்வாங்க,
அவங்கள நம்பி ஒரு விஷயத்தில இறங்கிறது தப்பு.


உனக்கு என்ன பிரச்சினை? சூரிய உனக்கு வேண்டாம் அவ்வளவு தானே?
இத்தனை நாள் எப்படி இருந்தியோ, அப்பிடியே இரு!

அவன் அவனோட பாட்டுக்கு ஒரு மூலையில இருந்திட்டு போகட்டுமேன், வீட்ட விட்டு போறேன்னு நீயே புது பிரச்சினைய இழுத்து வைக்காத" என்றாள் தெளிவாக.


அவன் தம்மோடு தங்குவது விருப்பமே இல்லை என்றாலும் வேறு வழியில்லையே என உணர்ந்தவள்,


"சரிக்கா...." என்றாள்.

"சரி எழுந்து சாப்பிட வா!.."

" எனக்கு பசியில்லக்கா வேணாம்."

"அடிச்சேன்னா....! என்ன....? சாப்பிடச்சொல்லி கெஞ்சுவேன்னு நினைச்சியா? முகத்தை கழுவிட்டு வீட்டுக்கு வர, அவ்வளவு தான்." என்று சென்றுவிட்டாள்.


இரண்டு நாட்களை எப்படியோ கடத்திவிட்டாள்.
அவளுக்கும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு முறுக்கிக்கொண்டு திரிவதில் விருப்பமில்லை தான்,
ஆனால் இதுதான் வாழ்க்கை எனும்போது அதற்கு பழகித்தானே ஆகவேண்டும்.


முன்னர் போல அவன் நிழலை கண்டாலே தூரவே ஒதுங்கி விடுவாள்.

சூரியவும் பலமுறை அவளுடன் பேசுவதற்கு முயற்சி செய்து விட்டான். அதற்கு அவள் இடங்கொட வேண்டுமே!
அவ்வளவு ஏன் கோபமாகக்கூட அவனை ஒரு பார்வை பார்க்கவில்லை.
எதேட்சையாக கண்ணில் அவன் விழுந்தாலும் தெரியாதவளைப் போல் சென்றுவிடுகிறாள்.


அவனுக்க மன்னிப்பு கோரக்கூட இடம் தராது விலகிச்செல்பவள் முன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டும் நின்றுவிட்டான். அத்தனையும் அவளிடம் எடுபடவில்லை.


இறுதியில் எப்போது தன்னை மன்னிக்க தோன்றுகிறதோ அப்போதே மன்னிக்கட்டும் என்று விட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினான்.


இரண்டு நாள் கடந்த நிலையில் அன்று வழமைக்கு மாறாக வீடு பரபரப்பாக இயங்குவதைப்போலிருந்தது.


கிச்சனில் காஃபி தயாரித்துக் கொண்டிருந்த துளசியின் அருகில் வந்த கீதாவிற்கே அன்றைய பரபரப்பின் காரணம் தெரியவில்லை.


"என்னக்கா நடந்திட்டிருக்கு? அவனோட பெத்தவங்க எதுக்கு காலையிலேயே நடுவீட்டில வந்து குந்திட்டிருக்காங்க?
நீங்க என்னடான்னா மணக்க மணக்க சமையல் வேற செய்து வைச்சிருக்கிங்க, அப்பிடி எந்த விருந்தாளி வராங்களாம்?" என கப்களில காஃபியினை நிரப்பிக்கொண்டிருந்தவளிடம் வினவினாள் கீதா.


"எனக்கும் தெரியலடி!
யாராே முக்கியமானவங்க மதியம் வராங்க , ருசியா சமைச்சு வைக்க சொல்லி நேற்றே அண்ணா என்கிட்ட கேட்டாரு, என் குடும்பத்துக்கும் இங்க தான் சாப்பாடாம், சரி ஒரு நாள் செலவு மிச்சம்ன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்.
இங்க வந்து பாத்தா அவர பெத்தவங்களும் வந்து நிக்கிறாங்க, அப்பிடி யார் தான் வராங்கன்னு பாத்திடுவோமே!" என்றவாறு தட்டினை அவள் புறம் திருப்பி விட்டவள்,


"இந்தா இதை கொண்டு போய் அவங்களுக்கு கொடு!" என்றாள்.


"இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம், அவங்களோட எந்த உறவும் எனக்கு தேவையில்ல, நீங்களே கொண்டுபோய் குடுங்க" என்று ஒதுங்கி நின்றவளை
செல்லமாகவே முறைத்த துளசி.


"இது எல்லாம் தமிழர் கலாச்சாரம் இல்லடி!
வீடு தேடி வந்தவங்க விரோதியா இருந்தாலும் கூப்பிட்டு குடிக்க தண்ணி குடுக்கிறது தான் பண்பாக்கும், அவங்க வந்து எவ்வளவு நேரமாச்சு? குடிக்க ஏதாச்சும் குடுக்கணும்ன்னு தோணிச்சா உனக்கு? நான் தான் சமைச்சிட்டு இருந்தேன்னா, மூலையில இருந்து இந்த முழிய பிதுக்கிட்டுத்தானே இருந்த, அவங்க கூடவாவது இருந்து பேசினா உன் வாயா கோணிக்கும்?" என்றவாறு தட்டினை தூக்கிவள்,


"அம்புட்டு கௌரவம்.? பாக்கிறேன்டி எத்தனை நாளைக்கு இந்த கௌரவம்ன்னு?" என்றவளை கீதா எரிப்பதுபோல் பார்க்க, அப்படியே நழுவிவிட்டாள்.



"தப்பா எடுத்துக்காதிங்க,
அவளுக்கு கோபம் போகல. கொஞ்ச நாள் ஆனா சரியாகிடுவா." என்றாள், கீதாவை அவர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது என்று.


"பரவாயில்லம்மா! அவ அனுபவிச்ச வலி அந்தமாதிரி, நிதானமாவே எங்களை மன்னிக்கட்டும்." என்றவர்களை பெருமையாக பார்த்தாள் துளசி.


கீதா நிலையில் இருந்தும் யோசிக்கும் மாமன், மாமியார் யாருக்கு கிடைக்கும்? 'இந்த விஷயத்தில் இவள் கொடுத்து வைத்தவள் தான், ஆனா அதை தக்க வைச்சுக்கணுமே இந்த லூசு!
விதி இவளுக்கு இன்னும் என்ன வைச்சிருக்கிகோ?' என மனதுள் நொந்தவள்,


"அது சரிம்மா! எதுக்கு அண்ணா உங்களை வரவைச்சாரு?" என்றாள் பேச்சினை திசை திருப்ப,


"தெரியலேயேம்மா! முக்கியமானவங்க யாரோ வராங்களாம், நாங்க அவங்களை கட்டாயம் பாத்தே ஆகணும்ன்னு சொன்னான்,
அதான் யாருன்னு பாத்திட்டு போலாம்ன்னு வந்திட்டோம்." என்ற நேரம் வெளியே ஓட்டோ சத்தம் கேட்டது.


"அண்ணா வந்திட்டாரு போல?" என்று வாசலை எட்டிப்பார்க்க,
அங்கு வந்துகொண்டிருந்த நடுத்தர வயது தம்பதிகளைக்கண்டதும் அவர்கள் தோற்றத்தில் முதலில் குழம்பியவள், இறுதியில் அது யார்? என்பது தெரிந்தது.


அவளுக்கும் அவர்களிடம் கோபம் தான், இருந்தாலும் அதை முகத்தில் காட்டாது சிரித்து வைத்தவள், வழிவிட்டு ஒதுங்கி நின்றாள்.


உள்ளே வந்தவர்களை,
"இருங்கோ மாமா!" என ரவீந்திர பக்கத்து இருக்கையினை இழுத்து பாேட்டு அமர வைத்த சூரிய,


"இவங்க தான் மாமா என்னை பெத்தவங்க" என அறிமுகப்படுத்த,
கண்களில் நீர் சுரக்க, கை கூப்பி வணக்கம் சொன்னவர்கள் சூரியவிடம் தம்மை அறியமுகப்படுத்துமாறு கேட்டனர்.


அவ்வளவு நேரம் யார் அவர்கள் எனக்குழப்பத்தில் இருந்த ரவீந்திர, சங்கரர் சிங்களத்தில் கேட்டதும்,

"ஆமாடா! எங்களுக்கும் இவங்களை தெரியல" என்றார்.


"இருங்கப்பா! வேண்டப்பட்டவங்க இப்போ வந்து சொல்லுவாங்க" என்றவன்,
துளசியிடம் "கீத்துவ கூட்டிட்டு வா துளசி!" என்றான்.


"ம்..." என்பதாய் தலையசைத்தவள்,
'இவங்களைப் பாத்ததும் என்ன பண்ணி தொலைய போறாளோ?' என நினைத்தவாறு, உள்ளே சென்றவள்,


"வெளியே பேசினது கேட்டுச்சில்ல வா!" என்றாள்.


"யாரு வந்திருக்காங்க? அவனோட ரிலேட்டிவ்வா? நான் வரல்ல." என்று முறுக்கி கொள்ள,


"அவங்கள பாத்தா உன்னோட சொந்தக்காரங்க போல தான் இருக்கு" என்ற துளசியை வினோதமாக பார்த்தவள்,


"என்னோட சொந்தமா? அதுவும் இங்கேயா? எப்பிடி? "என வினவியவாறு, துளசியை விலக்கிவிட்டு அவர்கள் யார் என்பதை பார்த்துவிட ஆர்வம் கொண்டவளாய் கிச்சனில் இருந்து, ஹாலுக்கு வந்தவள் கண்களில் முதலில் பட்டார் அவள் தந்தை சங்கரர்.


அவரைக்கண்டு ஒரு நொடி இத்தனை வருடப்பிரிவின் காரணங்கள் அணைத்தையும் மறந்து, தந்தையை கண்ட சந்தோஷத்தில் பசுவைக்கண்ட கன்றினை போல்,


"அப்பா.....!" என ஏக்கமாக உதடுகள் பிரிந்தாலும், குரளோ உள்ளே மழுங்கிக்கொள்ள, ஆவலாய் அவரிடம் ஓடிச்சென்றவள் நினைவுகளோ அவரது இறுதியான சுடு சொற்களை நினைவுறுத்தியது.


தன் சுயத்தை மறந்து ஓடிய கால்களுக்கு சட்டென கடிவாளம் இட்டவள், தன் தவறை உணர்ந்து, திரும்பிபோக நினைத்து நிரும்பியவளினது கையினை விடாது பிடித்து அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்தினாள் துளசி.


மூவர் விழிகளிலும் கண்ணீர் அருவி.

மகளை அத்தனை வருடங்கள் கடந்து பார்க்கிறார்கள், ஆனால் அவளை ஆசையாய் வாரி அணைக்க முடியவில்லையே என்ற தவிப்பு.

இத்தனை நாள் பிரிவில் தாவி ஓடிவந்தவள், இறுதி நிமிடத்தில் திடீரென இறுகி நின்றதன் காரணம் புரிந்தது.

அவர்களை கண்டதும் சந்தோஷமாக விரிந்த விழிகளோ, இப்போது அவர்களை அலட்சியம் செய்வது போல் வேறு திசை நோக்கினாலும், அவளது அனுமதியின்றி கன்னம் தீண்டிய நீர் துளியினை ஒற்றை விரலால் தட்டி விட்டவள்,


"வந்தவங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் விடுங்கக்கா." என துளசியின் கையினை விடுவித்து கிச்சன் உள்ளே சென்றாள்.


தனிமையை கண்டதும் அழுகையினை அடக்க முடியாது வாய் பொத்தி கரையந்தவள்,


"எனக்கு மட்டும் ஏன் இந்த நிலமை? என் மேல உயிரையே வைச்சிருந்த என் அப்பா வந்து நிக்குறப்போ ஆசையா என்னால அவரை நெருங்க முடியலையே!

எதை எல்லாம் மறக்கணும்ன்னு நினைக்கிறனோ அதை எல்லாம் என் கண்முன்னாடி கொண்டுவந்து ஏன் என்னை கஷ்டப்படுத்துறான் இந்த சூரிய? " என கரைந்தவள்,

உள்ளே வந்த சில நிமிடங்கள் ஆகியதனால், யாராவது தேடி வரக்கூடும் என நினைத்து கண்களைத்துடைத்து விட்டு,
காஃபியை கலந்துகொண்டு வெளியே வந்தாள்.


சங்கரன் மடியினில் அமர்ந்திருந்த அஞ்சலியோ, அவர் முடியினை
இழுத்தவள்,


"ஏன் தாத்தா நீங்க மட்டும் இவ்ளோ வளர்த்திருக்கிங்க," என்றாள்.


அவளது மழலை மொழியில் சின்ன வயது கீதா நினைவடுக்களில் வந்து போக, அவள் கன்னத்தை கிள்ளியவர்,


"அம்மாவ போலயே இருக்கியேடா!
உன் அம்மாவும் உன்னோட வயசில இப்பிடித்தான் சேட்டை பண்ணுவ, பாட்டி இருக்காங்கல்ல, அம்மா சேட்டை தாங்க முடியாம திட்டிட்டே இருப்பாங்க,

அப்பவும் உன் அம்மா தன்னோட சேட்டையை நிறுத்தமாட்டா," என கூறிக்கொண்டே இருக்கும்போது அவரது குரல் பிசுறு தட்டிவிட, தன் பேச்சை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.


பேசிய தாத்தா திடீரென பேச்சை நிறுத்தியதும் நிமிர்ந்து பார்த்த அஞ்சலி அவரது கண்கள் கலங்கியிருப்பதை கண்டு, தன் பிஞ்சு கரங்களால் துடைத்து விட, அவள் கையினை பற்றி இதமாகவே
இதழொற்றி மீட்டவர்,


"உன் அம்மா செய்த தப்புக்களுக்கே தண்டனை கொடுக்காத தாத்தா, அவ செய்யாத தப்புக்கு பெரிய தண்டனை குடுத்துட்டேன்ம்மா, அதுக்கு அந்த ஆண்டவன் எங்களுக்கு கொடுத்த தண்டனை தான் இந்த ஆறு வருஷ பிரிவு.


தோடாத இடமில்ல, ஏறாத கோவிலில்லை.........." என முன்னேற,


"போதும் மாமா.....! இன்னும் எதுக்கு நடந்ததையே நினைச்சிட்டு,
நடந்தது எல்லாமே நம்ம தவறுகளை சரிசெய்யிறதுக்கான காரணம்ன்னு நினைச்சுப்போம் மாமா" என்றான்.



ஔிரும்.....



மீதிய நாளைக்கு பாப்போம்......
 
Top