• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

46. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அங்கு நின்றவளை கண்டதும் விழிகள் சந்தோஷத்தில் விரிய,



ஓடிவந்து அவளை இறுக்கிக் கொண்டுடவள் ஆரவாரத்தில் பெரிதாக புன்னகைத்தாள் மைலி.




"வகிட்டிலும் பெரிய குங்குமம் என்ன? தலை நிறைய மல்லிகை பூ என்ன?



வீட்டுக்கே பட்டு புடவை என்ன.... சும்மா சீரியல்ல வர குடும்ப குத்து விளக்கு போலவே டக்கரா இருக்கடி♦♦
எனக்கே உன்னை இப்படி அழகா பாத்ததும் கட்டிக்கிட்டே நிக்கணும் போல இருக்கே!



உன் புருஷன் இந்த அழகியை விட்டுட்டு எப்படித்தான் வேலைக்கு போராரோ...?



விட்டுட்டு போறாரா.... இல்ல போகமாட்டேன்னு அடம்பிடிக்கிறவரை, நீ தான் ஸ்கூல்க்கு போகமாட்டேன்னு அடம்பிடிக்கிற பையனை தூக்கிட்டு போய், விட்டுட்டு வருவரது போல விட்டுட்டு வரியா?" என மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாது தேனு தன் தோழியை சீண்டினாள்.



மைலிக்குத்தான் என்ன பதில் சொல்வதென சங்கடமாக போயிற்று.



"ஓய்...! என்ன ஆத்துக்காறரை பத்தி சொன்னதும் வெக்கம் வந்திட்டுது போல? தலை தானாவே கவிழுது.



ஆமா..... எங்க என்னோட மாம்ஸ்? எனக்கு என் மாம்ஸ ஒரு தடவைகூட காட்டவே இல்லையேடி!



அது சரி! உன்னோட பயமும் நியாயம் தானே.
எங்க என்னை அறிமுக படுத்தி வைச்சா.. என்னோட அழகினால அவர வளைச்சு போட்டுடிவேன்னு தானே ஒரு கல்யாண போட்டோ கூட அனுப்பி வைக்கல?



என்ன செய்ய....! என்னை அழகா படைச்சது கடவுளோட தப்பு." என்று தாடைக்கு விரல் கொடுத்து நிமிர்த்தியவளை சங்கடமாக பார்த்தவள்,



ஜனாவையும், விஜயாவையும் திரும்பி பார்த்தாள்.



அவளது பார்வை போன திசையில் திரும்பியவள் தான்,



அங்கு நின்றவர்களை கண்டு,



தன் தலை மீது தட்டியவள்,



"மண்ட மேல இருக்கிற கொண்டைய மறநனதுட்டோமே... ஏதாவது வம்பு வந்திடுமோ!" என முணுமுணுத்தவாறே...



"சாரி ஆர்ன்டி.. இவளை கண்ட சந்தோஷத்தில கவனிக்காம " சங்கடமாகனவள் உடனே,



"நான் தேனு ஆர்ன்டி... இவளோட உயிர்தோழி... மாணிக்கத்தோட ஒரே பொண்ணு.



அப்பா கூட வந்தேன்... இவளுக்கு சப்றைஸ் பண்ணலாம்ன்னு தான் இங்க வந்தேன்.



கண்டதும் உங்களை கவனிக்காம கண்டதை எல்லாம் பேசிட்டேன்.



சாரியான்ட்டி...." என்றவளை புன்னகையோடு பார்த்தவர்.



"நட்புன்னா எனக்கும் தெரியும்மா...



இந்த மாதிரி கூட வாரலனா என்ன நட்பு?



ரொம்ப நாளைக்கப்புறம் சந்திச்சிருப்பீங்க.... நிதானமாவே பேசிட்டு வாங்க. நான் போறேன்" என்றவர்.



"ஜனா...! அவங்க பேசிகட்டும் நீ என்கூட வாம்மா!" என்று மைலியை பார்த்தவாறே விலகிச் சென்றார்.




"இவங்க தானே உன்னோட மாமியாரு?" என்று அவரது நிலையினை தந்தை சொன்னது நினைவில் வர அடையாளம் அறிந்து கேட்டவளிடம்.



ஆம் என்பது போல் தலையசைத்தவள் பார்வையோ போகும் அவரையே பார்த்திருந்தது.



"ரொம்ப நல்லவங்களா இருக்காங்க... கடவுளையும் பாரு... நல்லவங்களைத்தான் சோதிப்பான்." என்றவாறு மைலியிடம் திரும்பியவள்.



"சரி அவங்கள விடு! நீ எப்பிடி இருக்க..
உன் புருஷன் உன்னை நல்லா வச்சு பாத்துக்கிறாரா?." என்க.



"அதை நீ தான் என்னை சொல்லணும்." என்று மற்றவைகளை தற்காலிகமாக மறந்து, தோழியை கண்ட குதூகலத்தில் துடுக்காக கேட்டாள்.




"எரும.. நான் அலங்காரத்த கேக்கல.



அத்தானை மறந்து சந்தோஷமா இருக்கியான்னு கேட்டேன்."



"அத்தானை மறக்கிறதா? ஆமா.... அது யாரு?" என்றவளை மற்றவள் முறைக்க.



"ஏய் ச்சீ முறைக்காத...



நான் எதுக்கு அவரை மறக்கணும்? சுத்தமா அவரை நான் மறக்கிறதுக்கான எந்த முயற்ச்சியுமே பண்ணல." என்றவளை இம்முறை சீரியஸாகவே முறைத்தாள் தேனு.

அவள்


கையினை பிடித்து இயற்கை விரித்திருந்த புற்தரைமேலே தானும் அமர்ந்து அவளையும் அமரும்படி செய்தவள்,



"அப்பிடி ஒருதரு இருக்கிறாரு என்ற நினைப்பே இல்லாதப்போ.... எங்கயிருந்துடி மறக்க முயற்சி பண்றது?" என்றவள் பேச்சை சுத்தமாகவே தேனுவால் நம்ப முடியவில்லை.



விபரம் அறிந்த வயதிலிருந்து அவனையே கணவன் என நினைத்திருந்தவளால் எப்படி ஒன்றரை மாதத்துக்குள் மறக்க முடியும்?







"நீயே மறந்திருக்கிறவன் பேச்சை நானே ஆரம்பிச்சு விட்டுட்டேன் போல.



பிறகு நீ தான் அவனோட நினைப்பில கஷ்டப்படனும்." என்க.



"நீ நினைக்கிறது போல அவரு பிரிவினாலயோ நினைப்பினாலையோ ஏங்கி எல்லாம் இல்லடி!



உண்மைய சொன்னா... அது ஒரு உடன்படிக்கை உறவு தோணுது.



பெரியவங்க எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு.... அவரை கணவனா நினைச்சிட்டிருந்தேனே தவிர,



ஒரு நாளும் அவர் கூட தனிமையில ஒரு நிமிஷம் பேசினது கிடையாது.



பேசணும்னு ஏக்கம் கூட வந்ததில்லை. அவ்வளவு ஏன்...? அப்பா இறந்தப்போ கூட, அவரை என்மனசு தேடல...
மூனாவது நாள் தான் நினைப்பே வந்திச்சு... அது கூட அப்பா இறந்த தகவல் அவருக்கு தெரியுமா..? தெரியாதா...? அப்பிடிங்கிற நினைவே தவிர, எனக்கு அவர் ஆறுதல் சொல்லணும்ன்னு என் மனசு எதிர் பார்க்கவே இல்லை...

எப்போ அத்தானை இன்னொரு பொண்ணு கூட பாத்தேனோ.... அப்போ எது உண்மைனு புரிஞ்சிச்சு.....



முன்னாடி அழுதேன்.... இத்தனை நாள் ஒரு ஏமாத்து காரனை கணவனா நினைச்சிட்டு இத்தனை வருஷம் இருந்திருக்கிறேன் என்கிறதே ஏமாற்றமே தவிர,



என் காதலை இழந்துட்டேன்னு ஒரு நாளும் அழல.



சொல்லப்போனால் அவருமேல எனக்கிருந்தது காதலே இல்ல. வெறும் உடன்படிக்கையிலான ஈர்ப்பு"



"நீ எத்தனையோ தடவை என்னோட அத்தான் நல்லவனில்லன்னு வெளிப்படையா சொல்லலனாலும், புரிஞ்சுக்கிறது போல சொல்லியிருக்க தேனு...



ஆனா நான் அதை எல்லாம் நம்பாததுக்கு காரணம். அவன் மேல உள்ள நம்பிக்கையினால இல்ல.



அப்பா முடிவு எப்பவுமே தப்பாகாதுன்னு அவரு மேல இருந்த நம்பிக்கையினால..



அதனால தான் அவரு முடிவை ஏத்து, அவரு கூட சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன்.

எனக்கும் சரி... அத்தானுக்கும் சரி...



காதலில்லை எனும்போது எதுக்கு நடந்ததையே நினைச்சு கஷ்டப்படணும்..?



பொய்யான எந்த உறவுமே ரொம்ப நாளைக்கு நிலைக்காது.



அது தான் என் விஷயத்திலும் நடந்திருக்கு.

மத்த பொண்ணுங்கள போல


நடந்ததையே நினைச்சு, சுத்தியிருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்தி எங்களையும் கஷ்டப்படுத்தி, வாழறது கேக்கவும், படிக்கவும் தான் சுவாரஷ்யமா இருக்கும்.



ஆனா அதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதோட வேதனை புரியும்.



என்னை சார்ந்தவங்களுக்கு அதை நான் கொடுக்க விரும்பல." என்றவள்,



தேனு முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தில்,



"எதுக்கு சனியனே இந்த மாதிரி பாக்கற?" என்றாள்.



"இல்லை.... உண்மைக்கும் இது நீ தானானு சந்தேகமா இருக்குடி! அத்தான் அத்தான்னு நாளுக்கு முன்நூறு தடவை அவன் புராணம் பாடினது நீதானான்னு சந்தேகமா இருக்கு.



அது எப்படிடி உன்னால மட்டும் சாத்தியமாகுது?



உண்மைய சொல்ல போனா.. ஒரு உண்மையான அன்னை உன் அத்தான் இழந்துட்டான்." என்க.

"அதை விடு! உன் காலேஜ் வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது?"



"சுத்த போர்டி! ஸ்கூல்ல உன்னை தவிர வேறு யார் கூடவும் நான் பெருசா ஒட்டலையா...



நீ இல்லாதது காலேஜ் போகவே பிடிக்கல...



எல்லாமே சூணியம் மதிரி இருக்கு."



"நம்ம ஸ்கூல்ல பண்ண சேட்டைகளை நினைக்கும் போது அந்த வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்றேன்.


அதுவும் ட்டேம் டெஸ்ட் வந்திட்டா போதும்.... எப்படா எக்ஸாம் முடியும்.... மாமரம் புளியம் மரம்ன்னு வீட்டுக்கே போகம, குரங்கு போல மரத்துக்கு மரம் தாவி, தோப்புக்கு சொந்தகாரங்க கிட்டை கல்லடி வாங்கி,



மறு நாள் பிறின்ஸி ரூம் வாசல்ல மணிக்கணக்க முட்டி போட்டு நின்ன காலமெல்லாம் சொர்க்கம்.



இப்போ நினைச்சாலும் பசுமையான நினைவாத்தான் இருக்குதே தவிர, இப்பிடில்லாம் ஏன் சேட்டை பண்ணோம்னு நினைக்க தோணல.



ஆனா இன்னைக்கு எதுவுமே நிரந்தரமில்லாம போச்சு.. நினைவுகளை தவிர." என அன்றை நினைவில் பேசிக்கொண்டிருந்தவள் பேச்சினை கேட்காது மாலைச் சூரியனை வெறித்துக்கொண்டிருந்த தன் தோழி ஏதோ சிந்தையில் இருப்பதை உணராமல் உலறிக்கொண்டிருந்தவள்,



அவளிடமிருந்து ம்.. என்ற உடன் பாட்டு வார்த்தை கூட வரவில்லை என்பதை உணர்ந்து திரும்பி பார்த்தாள்.

இந்த உலகில் தான் இருக்கின்றேன் என்பதை கூட உணராது


எங்கோ வெறித்திருந்தவள் தோள்களில் கைவைத்து அழுத்தியவள்,



"என்னடி வானத்தையே முறைச்சிட்டிருக்க?



இங்க நான் எவ்ளோ பீல் பண்ணி பேசிட்டிருக்கேன். நீ என்னடான்னா... காதிலையே வாங்காம இருக்க." என்றவாறு அவளது முகத்தினை தன்புறம் திருப்பியவள், அவள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டு,



"மைலி.." என்றாள் உள்ளே போயிருந்த குரலில்.



"என்னடி....? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? இல்லை அந்த ரஞ்சித்தை நினைவு படுத்தினதனால இந்த மாதிரி இருக்கியா?" என்று தன்னால் தான் மைலி அழுகிறாள் என நினைத்து கவலையோடு வினவ.

இல்லை என்பதாக அழுத்தமாக விழிகளை மூடித்திறந்தவள்
இதழ்களில் மெல்லிய புன்னைகை படிந்திருந்தது.



"உன் பேச்சுக்கெல்லாம் வருந்தப்பட முடியுமா?



இது வேற.. என்னை சுத்தி என்ன நடக்குதுனே எனக்கு புரியலடி!
புரியலை என்கிறதை விட எல்லாமே குழப்பமா இருக்கு என்கிறது தான் உண்மை." என்றவள்



முகத்தினையே புரியாது பார்த்திருந்தவள்.ட,



"என்னாச்சு... என்ன குழப்பம்?" என்றாள்.



மீண்டும் சூரியனில் பார்வையை பதியவிட்டவள்,



"எதை சொல்லுறது..? அப்பா எப்போ என்னை விட்டு போனாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச குழப்பம்...



இன்னைக்கு வரை நீண்டுட்டே போகுதே தவிர, தீர்ந்தபாடில்ல.." தான் இங்கு வந்த நாளிலிருந்து சற்று முன்னர விஜயாவுடன் நடந்த உரையாடல் வரை கூறியவளையே அதிர்சி விலகாது பார்த்திருந்தவள்,



"அதெல்லாம் சரிடி! இப்போ என்ன குழப்பம்...? அதை சொல்லு" என்றாள்.



"குழப்பமே ஸ்ரீ தான் தேனு." என்றாள்.



"அவன் என்ன உன்னை குழப்பினா? இப்போ தான் மாறிட்டான்ல. அதை அவனோட அம்மா கூட நம்புறாங்களே!" என்றாள் புரியாது.



"அதை எப்படி தேனு முழுமையா நம்புறது..? என்னை அடையிறதுக்காக இந்த பந்தத்துக்குள்ள தள்ளிருக்கலாம்ல...





இவ்வளவு நாளும் யாருக்குமே எங்க உறவில சந்தேகம் வரல.. அந்தளவுக்கு நடிச்சிட்டிருக்கோம்.. ஆனா இன்னைக்கு


விஜயாம்மா இந்த மாதிரி பேசுறாங்கன்னா என்ன அர்த்தம்?



நம்ம ரெண்டு பேருக்குள்ளையும் நடந்த ஒப்பந்தத்தை யாரோ அவங்களுக்கு சொல்லியிருக்காங்கனு தானே அர்த்தம்.



நான் சொல்லல... அப்பிடினா அவன் தானே சொல்லியிருக்கணும்...



அப்படி சொன்னா விஜயா அம்மா என்கிட்ட இதே போல விசாரிப்பாங்க... அப்போ தன் ஆசை நிறைவேறும்ன்னு நினைச்சிருப்பான்ல" என்றாள்.



"ஏன் மைலி...! உனக்கு உன் புருஷன் தான் சொல்லிருப்பாருன்னு தோணுதா?



எனக்கு அந்த மாதிரி எதுவுமே தோணல....



உன் புருஷனுக்கு உன் உடம்பு தான் தேவைன்னா... அதை கல்யாணம் ஆன அன்னைக்கே அடைஞ்சிருக்கலாமே.



ஏன்னா உன்னை உன் விருப்பம் கூட இல்லாமல் தொடுறதுக்கான முழு உரிமையும் உன் புருஷனுக்கு இருக்குறப்போ, அன்னைக்கு உடலுறவை பத்தி ஒரு வார்த்தை கூட பேசாம, இப்படி ஒரு ஒப்பந்தத்தை வைச்சு, நாகரீமா நடந்துகிட்டவர் இந்த மாதிரி அம்மாவை தூது அனுப்புவாருனு நீ நினைக்கிறியா..?" என்றவள் இல்லை என்பதாக தலையசைத்து..



"நிச்சயமா இருக்காதுடி" என்றவளை குழப்பம் தீராமலே பார்த்த மைலி.



"அப்போ எப்படி அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும்னு நீ சொல்லற?" என்றாளன.



"அது தான் மைலி தாய்மை! பெத்தவங்களுக்கு தெரியாதா...? பிள்ளைங்க அசைவோட அர்த்தம்." என்றவளை முறைத்தவள்.



"என்ன நீ புதுசா உலர்ற?



என்னை மட்டும் இந்திரா கழிவு வாய்க்கால்க்குள்ள இருந்தா தூக்கினாங்க?



அம்மா எங்க நடிப்பை உண்மைன்னு தானே நம்புறாங்க.. அப்பிடின்னா



அவங்களுக்கு மட்டும் தாய்மை உணர்வில்லை என்கிறியா?" என்றாள் கோபமாய்.



"இருக்கலாம்.... யாருக்கு தெரியும்? உன்னை கழிவு வாய்க்காலுக்குள்ள இருந்தும் எடுத்தாங்களா? இல்லன்னா கோவில்ல தொலைச்சிட்டு கூட போயிருக்கலாம்.. அவங்களத்தான் கேக்கணும்" என்றவள் தொடையில் இறுகக் கிள்ளியவள்.



"உன்னோட கேலி பேச்சை கேக்கிற நேரமா? என்னோட கேள்விக்கு பதிலை சொல்லு!" என்றாள்.



"அதுக்கு ஏன்டி நாயே தசைய கிள்ளி எடுத்த?" என்றவாறு அவள் கிள்ளிய இடத்தில் வலி போக தேய்த்தவள்,



"நீ அடிப்படையிலையே குடும்ப குத்து விளக்குடி! எந்த சந்தர்ப்பத்திலையும் யாருக்காகவும் எதுக்காகவும் நடிச்சது இல்ல.



அதனால அம்மாவுக்கு சந்தேகம் வராது.



ஆனா ஸ்ரீ அப்பிடி இல்லையே...! அவன் வாழ்க்கை முழுக்க நடிச்சிருக்கான்... அதோட உனக்கும் அவனை பத்திய உண்மை தெரியும்.



அந்த உண்மையினால இதுவரை அவன் கூட நீ ஒரு தடவை கூட நின்னு பேசினது இல்லை.



அது போக.... ஒரு இக்கட்டில கல்யாணம் பண்ணவங்க, அடுத்த நாளே இந்த மாதிரி ஒட்டிட்டு வந்து நின்னா.... விஜயா அம்மாவுக்கில்ல. ஒரு புத்தி சுவாதீனம் இல்லாதவனுக்கு கூட சந்தேகம் வரும்.



அதனால உங்க நடவடிக்கைகளை ரொம்ப உன்னிப்பா கவனிச்சிருப்பாங்க.



அப்போ தான் உங்க ட்ராமா புடிபட்டிருக்கும்." என்க,



"ஆமால்ல.... அவங்க இந்த மாதிரில்லாம் யோசிச்சிருப்பாங்கல்ல." என்றவறிடம்.



"சந்தேகமா எல்லாம் கேட்காத... உண்மை அது தான்.



ஸ்ரீ நிச்சயமா சொல்லிருக்க மாட்டாரு.
ஏன்னா உன்னோட விஜயா அம்மாக்கு ஸ்ரீயை பத்திய உண்மை முன்னாடியே தெரிஞ்சிருக்கு.



அதுவுமில்லாமல் ஸ்ரீயாவே போய் நான் இப்பிடி தான்னு அவங்க அம்மாக்கிட்ட சொல்ல மாட்டாரு.



தான் இப்பிடித்தான்னு சொல்லுறவரா இருந்தா... எதுக்கு இத்தனை வருஷம் நடிக்கணும்.



யாராசும் நான் கெட்டவன் தான்னு வலுகட்டாயமா ஒத்துப்பாங்களா லூசு?" என்று உறுதியாக கூறியவள்.



"அப்புறம் இப்போ என்ன முடிவெடுத்திருக்க?." என்றாள்.



"என்ன முடிவு எடுக்கசொல்லுற?" என்றாளன மைலி புரியாது.



"ஏய்...! உண்மையிலயும் நீ நட்டுக்கழண்டவ தான்டி!
விஜயாம்மா இப்போ உன்கிட்ட என்ன பேசிட்டு போனாங்க?



அதை தான் கேக்கிறேன்." என்று கடு கடுத்தாள்.



அவளது கேள்வியில் விஜயாவின் பேச்சும் நினைவில் வ,ர மீண்டும் அமைதியாகி தரையில் இருந்த புல்லினை புடுங்க ஆரம்பித்தவளை,



"என்ன ஸ்ரீக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு, இந்த தோட்டத்திலையே புல்லு புடுங்கிற வேலைக்கு சேந்திடுறதா முடிவெடுத்துட்டியா...? " என்று கேலி செய்தவளை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கண்ணீரில் கலங்கியிருந்தது.



"அழு மைலி தப்பில்ல... எந்த முடிவெடுக்கிறதா இருந்தாலும், அழுது நிதானமானதுக்கு அப்புறமா முடிவெடு!



அந்த முடிவுதான் உன்னோட வாழ்க்கைக்கு நல்ல முடிவாயிருக்கும்.
முடிவெடுத்ததுக்கு அப்புறம் அவசரப்பட்டுட்டமோன்னு நினைச்சு அழறதில பிரியோசனமும் இல்ல.



அதே சமயம் உன் முடிவு கால தாமதமில்லாமலும் இருந்திட்டா இன்னும் நல்லா இருக்கும்." என்றவளை,நிமிர்ந்து பார்த்தவள்,



"எனக்கு தெரியலடி! எந்த முடிவு நல்ல முடிவுன்னே தெரியல..



விஜயாம்மா வேற என்னை ரொம்ப குழப்பி விட்டிட்டாங்க.



நான் ஸ்ரீயை விரும்புறேனாம்.... அவன் மேலான என்னோட பார்வையில அதை அவங்க உணர்ந்தாங்களாம்." என்றவள் கையினை பற்றிக்காெண்ட தேனு



"மைலி...! நான் ஒரு சில விஷயம் சொல்லுறேன்... அதுக்கப்புறம் எந்த முடிவு உனக்கு சரின்னு படுதோ எடு..! சரியா...?



ஸ்ரீக்கு இப்போ வேறு பெண்களோட தொட.... " என்பதற்குள் அவள் கேள்வி புரிந்தவளாய்,



"ச்சே ச்சே... இப்போ அப்பிடில்லாம் சுத்தமா இல்லடி!



இந்த வீட்டுக்கு வந்தது, ஒரே ஒரு தடவை தான் ஒரு பொண்ணு கூட பாத்தேன். அதுக்கப்புறம் எதுவும் இல்லை." என்றவளது அவசர பதிலில், இதழ்களில் தன்னையறியாது வந்த புன்னகையினை மறைத்து.



"அது எப்படி நீ சொல்லலாம்.... ஸ்ரீக்கு வேற பொண்ணுங்க கூட தொடர்பு இல்லன்னு?
உனக்கு தெரியாம வெளிய இருக்கலாம்ல."



"வெளிய...". என யோசனையாக இழுத்தவள், பின் தெளிவானவளைப் போல்,
"இல்லை இல்ல... நிச்சயம் அந்த மாதிரி ஸ்ரீ செய்ய மாட்டாரு... என்னை தவிர வேற பொண்ணுங்கள அவரு பார்க்க மாட்டாரு.." என உறுதியாக கூற.



"ஏய்! அது எப்படி நீ சொல்லுவ?
நீ என்ன அவர் பின்னாடியேவா திரியுற....? இல்லல்ல....! அப்புறம் எப்படி இந்த உறுதி?"



"அது.. அது..." என தடுமாறியவள்,



"அவரு தான் காலேல ஒன்பது மணிக்கு வேலைக்கு போறவரு, சாயந்தரம் ஏழு மணியானதும் வீட்டுக்கு வந்துடுறாரே..! அப்புறம் எப்பிடி பொண்ணுங்க கூட....? அதனால தான் சொன்னேன்." என்றவளை,



"பைத்தியம் போல பேசாத...!



காலையில போற உன் புருஷன்... இரவு ஏழு மணிக்குத்தான் வறான்.



இடையில பத்து மணித்தியாளம் இருக்குடி..! அவன் ஆஃபீஸ் தான் போறான்னு உனக்கு எப்பிடி தெரியும்?
அந்த இடைப்பட்ட காலத்தில இந்த மாதிரி இருக்கலாம்ல." என்றவள் பேச்சினில் குழம்பி மீண்டும் தெளிந்தவள்.



"என்ன நீ! எனக்கு தெளிவு படுத்த பாக்கறியா? இல்ல குழப்ப பாக்கிறியா?



நீ என்ன சொன்னாலும்... ஸ்ரீ இப்போல்லாம் அந்த மாதிரி இல்லை. அது எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு அவரு துறோகம் பண்ண மாட்டாரு." என்று உதட்டை பிதுக்கு குழந்தை தனமாக கூறினாள்.



அவளது பதிலில் இம்முறை வெளிப்படையாகவே சிரித்த தேனு.



"அப்புறம் என்னடி உனக்கு குழப்பம்? அது தான் நீயே ஒத்துக்குறியே!
ஸ்ரீ மாறிட்டாருன்னு.. இனி என்ன தயக்கம்? அவரு கூட சேர்ந்து உன் அத்தையம்மா சொன்னதைப்போல வதை வதையா பெத்து போடு!" என்றவள் பேச்சினையும் அவளால் ஏற்க முடியாமல் தலை குனிய,



"இன்னும் என்னடி யோசிக்கிற?



நான் ஒன்னு சொல்லவா?



விஜயா அம்மா சொன்னது நிஜம் மைலி!



நீயும் உன் ஸ்ரீயை காதலிக்குற.



அதுவும் சாதாரண லவ் எல்லாம் இல்லை. உன் உயிர் தோழி... நான் அவனை குறை சொல்லுறதை கூட ஏத்துக்க முடியாத அளவு லவ்வு.



அது உனக்கே இன்னும் புரியல... அது தான் உண்மை.



முதல்லை உனக்குள்ள ஒழிஞ்சிருக்கிற காதலை கண்டு பிடி.!



அப்புறம் உன்னோட குழப்பங்களுக்கு தானாவே விடை கிடைக்கும்." என்றவள்.



"அதுக்காக ரொம்ப நாள் எடுத்துடாதடி..! ஏன்னா விஜயாம்மாவ போல, இந்திரா அம்மாவும் உண்மைய தெரிஞ்சிச்சுக் கிட்டாங்கன்னா, விருப்பமில்லாத வாழ்க்கையை தன் பொண்ணுக்கு திணிச்சுட்டோம்ன்னு உடைஞ்சு போயிடப்போறாங்க." என்று கூறியவளின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவள்.



தேனுவை இறுக தழுவி விடுவித்து,



"தாங்க்ஸ்டி....! தக்க சமயத்தில என்னோட குழப்பங்களை தீத்து வைச்ச" என்றாள்.



"நான் சொல்லுறேன்னு வாழ்க்கையோட முடிவை எடுத்திடாத மைலி. மனச கேள்.!



அது சரி எனும் பட்ஷத்தில... உன் வாழ்க்கைய சரிசெய்!



ஆனா நீ ஸ்ரீயை விரும்பறேன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.



நானும் உன் ஆத்துக்காரனை பாத்தேன்னா அவனோட நடவடிக்கையை வைச்சு, ஆளு என்ன மாதிரினு சொல்லுறேன்.
அப்புறம் மீதிய யோசிச்சுக்கலாம்....



இப்போ இந்த குழப்பத்தில இருந்து வெளிய வா!" என்றவள் வானத்தில் மின்னிய நட்சத்திரக் கூட்டமதை அப்பேது தான் கண்டவளாய்,



"ஏய் அங்க பாருடி! ஒரு நட்சத்திரம் கீழே விழுது." என காட்ட.



"என்னது...! நட்சத்திரமா?" என அதிர்ந்தவள், அப்போது தான் சுற்றும் முற்றும் பார்த்தாள்.



அத்தனை இடமும் மின் விளக்குகளின் ஔியால் பகல் போல் காட்சி தர,



"ஐய்யோ... இந்தளவுக்கு இருட்டிடுச்சா? உன்கூட பேசினதில இருட்டினது கூட தெரியாம இருந்திருக்கேன்." என்று வேகமாக எழுந்து கொள்ள.



"என்னடி என்மேல பழியை தூக்கி போடுற? நானா உன்னை புடிச்சு வைச்சிருந்தேன்." என்றவாறு தானும் எழுந்தவள்,



"நல்லதுக்கு காலமில்லப்பா!" என்றவாறு மைலி பின் தொடர்ந்தாள்.



தாவும்.......
 
Top