• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
இதில் அத்தனை தகவல்களையும் நாளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்..


அந்த கேஸானது நந்தனது மாத்திரமில்லையே! வைஷுணவிக்கும் அந்த கேஸுடன் தொடர்பிருப்பதனால் தான், அதில் தன் முழுகவனத்தையும் காட்டினான்.



நாளைய தீர்ப்பை எதிர்பார்த்திருந்தவன் மனதில் இனம்புரியாத பதட்டம்.


இதில் அவளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கவும் வாய்ப்பிக்கிறது.


இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை தான்... ஆனால் அதற்கு பதிலாக ஆயுள் தண்டனை கொடுத்து, காலத்துக்கும் கம்பி எண்ண வைத்து விடுவார்கள்.



அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்து விட்டால், அதன் பின் தன்னுடைய நி
லை..?
என அதைப்பற்றியே சிந்தித்திருந்தவன் காதினில் பல காலடித்தடங்களின் ஓசை கேட்க,


தலை நிமிர்த்தி பார்த்தவன், வெளியே சென்றுவரும் குடும்பத்தினரை கண்டான்
.


"அப்போ இவ்வளவு நேரம் யாருமே வீட்டில இல்லையா? எல்லாரும் எங்க போயிட்டு வரீங்க?"



"என்னடா இது கேள்வி? வைஷூக்கு சுயநினைவு திரும்பிடிச்சு... அவளை தான் பாத்துட்டு வறோம்.. ஆமா உனக்கு எத்தனை தடவை போன் போட்டும் போன் போகலையே! ஏன்?" என்றார்.



"ரொம்ப வேலைம்மா! சரி சொல்லுங்க... வைஷூ எப்படி இருக்கா?
உங்க கூடல்லாம் நல்லா பேசினாளா?" என்றவன் முகமானது என்றுமில்லாது வாடிப்போயிருந்தது.


"இப்போதைக்கு அவ உயிருக்கு எதுவுமில்ல ஆதி..! அவ்ளோ தான் சொல்லமுடியும்.
அவளால சரியா பேசக்கூட முடியல. கொஞ்சம் அசைஞ்சாலும், நெஞ்சு வலிக்குதுன்னு அழ ஆரம்பிச்சிடுற?


பாவம் என் புள்ளைக்கு மட்டும் அந்த கடவுள் ஏன் இத்தனை கஷ்டத்தை கொடுக்கிறாரோ...." என கலங்கிய கண்களை அழுத்தி துடைத்தவரை, ஆறுதலாக நெஞ்சோடு அணைத்து கொண்ட பிரகாஷ்,




"ஆதி...! சுதாகர் சார் ரொம்ப நேரமா உன்னை தேடிட்டே இருந்தாரு... நேரடியா கேக்கலன்னாலும், வைஷுவும் உன்னை தான், ஆர்வமா தேடினா... ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்தேன்னா, எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்." என்றார்.



"இப்போவா? இல்லப்பா.... இன்னைக்கு பூராவும் அலைஞ்சே சோர்ந்து போனேன்.


அதோட நாளைக்கு முக்கியமான கேஸ் கோர்ட்டுக்கு வருது. அந்த கேஸ் என் தலமையில இருக்கிறதனால நானும் போயாகணும்.. இப்போ தூங்கினாத்தான், நாளைக்கு சீக்கிரம் எந்திரிக்க முடியும்.
வைஷூ எங்க போயிடப்போறா?
நான் அப்புறமா பாத்துக்கிறேன்." என்றவன், தன்னறை போய்விட்டான்.



அங்கு நின்றவர்களுக்கு இவனது நடவடிக்கைகள் புதிதாகத்தான் இருந்தது.


மனதில் எதையோ வைத்துக்கொண்டு வெளியே எதையோ உளறுவது அப்பட்டமாக தெரிந்தாலும், அவன் இருக்கும் நிலையில் எதையும் கேட்டு குடையமுடியவில்லை.



ஆனால் ஆதியும் என்ன செய்வான்? இந்த நிலையின் தன் உயிரானவளை ஆவனால் காணமுடியுமா?
சூடுபட்டு மூச்சின்றிக்கிடந்தவளை கைகளில் ஏந்தும் போது, அவன் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டும்தானே தெரியும்
.


பதின்னான்கு வருடங்களின் பின் தன்னவளின் தொடுகையில், எந்தளவிற்கு இருவரும் மெய் சிலித்திருக்க வேண்டும்.



ஆனால் ஜடம் போல் கிடந்தவளை தூக்கியபோது, அவனது சப்தநாடியும் அவளை உயிருடன் மீட்டிடுவேனா என பதறியதை யார் அறிவார்?
இந்த வலியானது அவளுக்கு மட்டும் வேதணையினை தரவில்லையே!



அதுவுமில்லாது அவள் வழக்கு நாளை கோர்ட்டுக்கு வந்து, அதன் தீர்ப்பு வரும்வரை அவள் முகத்தில் எப்படி முழிப்பான் அவன்
?



அங்கு தன்மேலான வழக்கை தொடுத்துவிட்டு, இங்கு வந்து நடித்திருக்கிறான் என்று நினைத்திடமாட்டாளா?
எதுவாயிருந்தாலும் வழக்கின் முடிவின் பின்னரே, வைஷூவை பார்ப்போம். என இப்போதே அவளை பார்க்க வேண்டுமென்ற மனதினை அடக்கி, நாளைய நாளினை எதிர்பார்த்திருந்தான்.



வழமையின் விடியல் தான்.. ஆனால் இன்று ஏனோ அவனுள் பயத்தினை விதைத்திருந்தது.



வேளையோடு எழுந்து.. தயாராகி கீழே வந்தவனை, அந்த நேரம் எதிர்பாக்கவில்லை ரஞ்சனி.



வழமைக்கும் அவன் கீழே வர மணி எட்டைத்தாண்டும்.
கணவனுக்காக ஆத்திய காஃபியினை கையில் ஏந்தி நின்றவர்,




"என்ன ஆதி இவ்ளோ வேளையோட ரெடியாகிட்ட?" என நேற்று அவன் கூறியதை மறந்து வினவ.


"நேற்றே சொன்னனேம்மா! கோர்ட்டுக்கு போகணும்னு... அதான்." என்றான்.




"அதெல்லாம் சரிடா!
ஆனா எதுக்கு இவ்ளோ சீக்கிரம்?
"



"தெரியலம்மா! ரொம்ப பதட்டமா இருக்கு.. இங்கேயே நின்னு பதற்றத்துக்கு, அங்கே போயிட்டாளாவது அமைதியாகிடுவேன்." என்றவன் பதில் அவருக்கே வித்தியாசமாகிப் போக.




"நீ இவ்ளோ பதட்டப்படுற அளவுக்கு அப்பிடி யாரோட கேஸ் ஆதி?"
தாயை அப்பாவியாக நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் சொன்னது.. அவன் வலியினை.



"ஆதி!" என உள்ளே போன குரலில் அழைத்தவர், அவனது வித்தியாசமான நடவடிக்கையிலேயே கண்டுகொண்டார்.



ம்ம்.... என தலையசைத்தவன்,
"பயமா இருக்கும்மா! என்னால முடிஞ்சவரைக்கும் பண்ணிருக்கேன். ஆனா கோர்ட்.. நமக்கு சாதகமா தீர்ப்பு வழங்கும்ன்னு இல்லையே!"




"நீ ஏன்யா அவசரப்பட்ட? அந்த கொலையெல்லாம் எதார்த்தமா நடந்தது மாதிரி தானே வைஷூ பண்ணியிருக்கா! அதை அப்பிடியே விட்டிருக்கலாமேடா!" என்றார்.



"தப்பும்மா.... பொறுப்பான இடத்தில இருந்துட்டு. சட்டத்தை எனக்கு சாதகமாக்குறது ரொம்ப தப்பு!
இப்போ நான் இதை செய்யப்போனா.. நாளைக்கு அவனவன், சட்டத்தை தனக்கு சாதகமா பயன்படுத்த ஆரம்பிச்சிடுவான்.



அப்புறம் என்னால கூட அதை தட்டிக்கேக்க முடியாது.
நானும் அதே தப்ப பண்ணிருக்கேன் என்கிற குற்றவுணர்வினால ஒதுங்க வேண்டியிருக்கும்.




அதவுமில்லாம.. நந்தனை என்கவுண்டர் பண்ணதுக்கு உண்மைய சொல்லுறத தவிர, வேற காரணம் கிடைக்கலம்மா! அரசியல்ல இருக்கிறவனை சுட்டு கொள்ளுற அளவுக்கு என்ன காரணம்ன்னு கேட்டு குடையா குடைஞ்சிட்டாங்க.


அதுக்கு பதில் சொல்லுறத்துக்குள்ள நான் போதும் போதும்ன்னு ஆகிட்டேன்.


நீங்க கும்பிடுற சாமி எப்பவும் நம்மள கைவிட மாட்டாருன்னு நம்புங்க. முடிஞ்சா பெரிய அளவில வைஷூக்கு தண்டனை கிடைக்க கூடாதுன்னு ஒரு வேண்டுதல வையுங்க." என்றவன் வெளியேறினான்.



அவன் வரவை எதிர்பார்த்து. வேலுவும் ஜூப்போடு வாசலில் நிற்க, அதில் ஏறி அமர்ந்தவன்.




"ஹாப்பிட்டலுக்கு வண்டிய விடுங்கண்ணா!" என்றவன் சொல்லை மீறாது, வண்டியை அங்கேயே கொண்டு போய் நிறுத்தினான்.



இவர்கள் ஜூப்பினை கண்டுவிட்டு சுதாகரும் ஓடிவந்து ஏறி.., தன் கையிலிருந்த பைலை அவனிடம் கொடுத்தார்.
அதை வாங்கி பிரித்து பார்த்தவன்.




"ரொம்ப நன்றி சார்." என்றான்.



"எதுக்கு நன்றி? இது என்னோட கடமை!" என்றவருக்கு அதற்குமேல் பேச எதுவுமே கிடைக்கவில்லை.



ஆதிக்கு அவரிடம் பேச நிறைய இருந்தாலும், அவனாலும் எதையும் மனம்விட்டு பேசமுடியவில்லை. பேசும் நிலையிலும் இருவரும் இல்லை.



கோர்ட்டுக்குள் வாகன அனுமதியில்லை என்பதால் வாசலிலேயே இறங்கினார்கள்.




"வேலண்ணா... எங்களோட கேஸ் ஏழாவது தான். உங்களுக்கு வேற வேலையிருந்தா, முடிச்சிட்டு பத்து மணியளவில வந்திடுங்க." என்றுவிட்டு, சுதாகரனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவன்.



தன் கையில் வைத்திருந்த கோப்பினை சமர்க்கிக்கவேண்டிய இடத்தினில் சமர்ப்பித்து விட்டு, நீதாவான் வருகையினை எதிர்பார்த்து, பார்வையாளர் இடத்தினில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.



நீதவான் வரும்வரை ஆமைபோல் அசைந்த கடிகார முற்கம்பியோ, அவர் வருகையின் பின்னர் ஒரு மணித்துளிகளுக்கு பதிலாக இரண்டு மணித்தளிகளை கடப்பதைப்போல் வேகமாக சென்று மறைந்தது.




பன்னிரண்டு பக்கங்களுடைய அந்த கோப்பினை மிக நிதாணமாகவே பிரித்துப்படித்தவர்,




"குற்றவாளியினால் நீதிமன்றத்தில் ஆயராகமுடியவில்லை என்பது, மருத்துவ அறிக்கையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.



அவரது சார்பில் யாராவது வந்திருந்தால், கூண்டில் வந்து தம் தரப்பு நியாயத்தை கூறலாம்.. அரச வழக்கறிஞர் உங்களுக்காக வாதாடுவார்." என்றார்.


சென்று கூண்டில் நின்று கொண்டார் சுதாகரன்
.


"குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நீங்கள் என்ன முறை உறவு?"


"அவளது வளர்ப்பு தந்தை." என பதிலுரைத்தவரிடம்,


"நடந்த கொலைகளை பற்றியும், அந்த கொலைகளை செல்வி வைஷ்ணவிதான் செய்தார் என போலீஸாருக்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றியும் மாற்றுக்கருத்து உண்டா? இருந்தால் தாராளமாக உங்கள் தரப்பு நியாயத்தை கூறலாம்." என்றார் அவர்.



"இல்லை சார்! போலீஸ் தரப்பினரால் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே உண்மை தான்."
அதை தன் குறிப்பேட்டில குறித்துவிட்டு.



"நீங்கள் போகலாம்." என்றவர், ஐந்து நிமிட தாமதத்தின் பின்னர், தன் குறிப்பேட்டில் குறித்தவற்றை படிக்க ஆரம்பித்தார்.




"கடந்த ஒரு மாத காலங்களுக்குள் மூன்று சடலங்களானது வெவ்வேறு இடங்களிலிருந்து போலீஸாரால் மீட்டப்பட்டுள்ளது.



முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் விஷம் அருந்தி இறந்ததாக கருதப்பட்ட திரு. மணிகண்டன் கொலையும்.. கோவில் கேணியில் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட திரு.



மாணிக்கத்தின் உடலையும்.. பாம்பு தீண்டி இறந்ததாக கூறப்பட்ட கோதண்டத்தில் கொலையும் சந்தேகமே இல்லாது.. செல்வி வைஷூணவி தான் செய்தார் என்பது போலீஸார் தகவல்களின் அடிப்படையில் நிரூபனமாகின்றது.


என்னதான் கொலையுண்டவர்கள் சட்டத்திற்கு புறம்பான பல தொழில்களை செய்து.. செல்வி வைஷ்ணவியின் பெற்றோரை அவர் கண்முன்னே கொடூரமாகக் கொன்று அநீதியே இழைத்திருந்தாலும்.. அதை சட்டத்தின் பார்வையிலும், போலீஸாரின் கவனத்திற்கும் கொண்டுவரவேண்டுமே அன்றி..
தனி நபர் சட்டத்தை கையிலெடுத்து மூன்று உயிர்களை காெல்வதென்பது நாட்டுக்கும்.. சட்டத்திற்கும் புறம்பான ஒன்றாகும்.



ஆகவே இன் நீதிமன்றமானது குற்றவளியென நிரூபிக்கப்பட்ட செல்வி வைஷ்ணவிக்கு ஆயுள் தண்டனையினையே அழிக்கவேண்டும்.



ஆனால் வைஷ்ணவியின் மனநிலையானது சிறுவயதில் தன் கண்முன்னால் இடம்பெற்ற கொடுரக்கொலை காரணத்தினால்.. நல்ல நிலையில் இல்லை என்பதும், அப்போதே அவர் மனநலம் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாகவும், அவரது வளர்ப்பு தந்தையாரான.. உயர் திரு வைத்தியரும், மத்திய சுகாதார அமைச்சருமான சுதாகரன் அன்றைய காலப்பகுதியில வைஷ்ணவிக்களித்த மருத்துவ அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆகையால்... இக் கொலைகள் அனைத்திற்கும், பாதிக்கப்பட்ட அவரது மனநிலையே காரணம் என தெளிவாக தெரியவருகிறது.


மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் செயலுக்காக அவரை தண்டிப்பதென்பது சட்டத்தில் இல்லை என்பதாலும்.



குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர், கல்லூரி மாணவி என்பதாலும், அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு.. அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்து.. அவர் மனநிலை சரியாகும் வரை, அங்கேயே வைத்து மருத்துவம் அளிக்குமாறு இவ்நீதிமண்றம் உத்தவிடுகிறது.



அத்தோடு.. குடோனிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட வைஷ்ணவியின் பொற்றோர்களின் எச்சங்களை, அவர்களது உறவினர்களிடம் சரியாக முறையில் அடக்கம் செய்ய ஒப்படைக்குமாறும்,


அவர்கள் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த லிங்கேஷை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் இந்த கோர்ட் உத்தரவிடுகிறது." என தீர்பளித்து தன் கையொப்பத்தை இட்டு பைலினை மூடிக்கொண்டார்.


தீர்ப்பின் பின்
ஒரு வாரம் ஓடியிருந்தது,
கோர்டின் உத்தரவின் பெயரில் வேகவேகமாக கவிதா, ரமேஷ் எச்சங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட, அடக்கமும் செய்யப்பட்டது.



லிங்கேஷை பிடியாணையில் கைது செய்து கோர்டில் ஒப்படைத்து ஐந்து ஆண்டுகள் சிறையும் வாங்கிக்கொடுத்தாயிற்று.
மோணியின் தம்பியை மீட்டு வந்த ஆதியிடம்.. மோணி தன் செயலுக்காக மன்னிப்பு கோர, அவளை மெச்சுதலாக பார்த்தவன்,




"உன் நிலமையில இருந்தா.. நான் கூட இதை தான் செய்திருப்பேன். கேட்க யாருமில்லாதவங்க நிலை இதுதான்.



ஆட்டிவைக்கிறவன் கை பாவையாகிடுவாேம்.. நீ மன்னிப்பு கேக்கவேண்டியது என்கிட்ட இல்லை. அனிக்கிட்ட தான்." என்றான்.



"ஆமா..! நான் அவளுக்கு தான் ரொம்ப கஷ்டம் குடுத்திட்டேன்." என அவளிடம் திரும்பினாள்.


அனியோ இப்போதெல்லாம் எல்லோரிடமும் இருந்து ஒதுங்கியே இருந்து கொள்வாள். தன் தந்தையால் ஒரு குடும்பமே அழிந்து போய்விட்டது. அந்த அழிவுக்கு தானும் ஒரு வகையில் காரணம் எனும்போது அவளால் அங்குள்ளவர்களிடம் சரியாக பேசமுடியவில்லை.




அவள் கையினை பற்றி மன்னிப்பு வேண்டியவள் கையினை தான் ஆதரவாக பற்றிக்கொண்டவள்,




"என்கிட்ட ஏன் மன்னிப்பு கேக்கிற மோணி?
அதுக்கு நான் தகுதியே இல்லாதவ... உன்னை விட ரொம்ப தாழ்வு நிலையில நான் இருக்கிறேன்.



அப்பாவோட சொத்து ஆசையினால தானே.. வைஷூ அம்மா அப்பா இறந்து போனாங்க.



அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் மோணி.
ஆனா அவர் ஆசைக்கு நான் ஒரு முதலீடா இருந்திருக்கேன்னு நினைக்கிறப்போ, எரிச்சலா வருது.




நீயாவது உன் தம்பி உயிரை காப்பாத்தணும்ன்னு தான் என்னை கஷ்டப்படுத்தின.. ஆனா என் அப்பா!" என அழத்தொடங்கியவளை ஓடிவந்து கட்டிக்கொண்ட ரஞ்சனி.




"என்னடி..! பெரிய மனுஷிமாதிரி பேசுற? அவரு செய்த தப்புக்கு நீ என்ன பண்ணுவ?. இங்க பாரு!
யாரு என்னவும் பண்ணிட்டும் போகட்டும்... நீ எப்பவும் எங்களோட குட்டி தேவதை! உன்னை யாருகிட்டையும் விட்டு தரமாட்டோம்."




"அப்போ என்னை நீங்க வெறுத்திட மாட்டிங்கல்ல!" என பாவமாக கேட்டவள் மண்டைமேல் செல்லமாக கொட்டியவர்.




"நீ என்னடி பண்ண?
பெரிய மனுஷியாட்டம் பேசுறத விட்டுட்டு.., முதல்ல போய் முஞ்சிய கழுவிட்டு படிக்கிற வேலைய பாரு!" என துரத்திவிட.


ரஞ்சனியினை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தவள்.



"எனக்கு நீங்க தான் அத்தை இனி எல்லாமே! இது தான் என் வீடு! இங்கயிருந்து எங்கயும் போகமாட்டேன்." என தன்னறை போய்விட.
அதன் பின் மோணியையும் அவன் தம்பியையும் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்ட ரஞ்சனி
,



"உனக்காக என் வீட்டு கதவு எப்பவும் திறந்திருக்கும். எது தேவைன்னாலும்.. அம்மாவை கேளு" என்றவர் விடைபெற்றார்.


ஆனால் வைஷூவை மருத்துவ நிர்வாகம் விடுவதாக இல்லை.
அவ்வளவிற்கு வைஷூவின் உடல் நிலை தேறவில்லை..


கலைவாணியும், சுதாகரும் அவள் அருகிலேயே இருந்து கவனிக்க,


ரஞ்சனி குடும்பத்திலிருந்து மூன்று வேளையும் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.



ஆனால் இத்தனை நாட்களில் ஒரு தடவைகூட ஆதி அவளை பார்க்க வரவில்லை.



வைஷூவின் விழிகள் அவனை ஆர்வத்தோடு தேடி ஓய்ந்து போகும். ஒரு கட்டத்திற்கு மேல் அவனை எதிர்பார்ப்பதையே விட்டுவிட்டாள்.



தன் செயல் பிடிக்காமல் தன்னை முழுவதுமாக வெறுத்துவிட்டான் என எண்ணிக்கொண்டாள்.


மனதின் ஓரத்தில் வலியிருந்தாலும், அதை அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.



ஒரு மாதங்கள் கடந்திருந்த நிலையில், கொஞ்சமாக தேறி வந்தவளை நீதீமன்றத்தின் உத்தரவின்படி, படுக்கையிலேயே மனநல மருத்துவமனை பிடித்துக்கொண்டது.



அவளுக்கு அங்கு செல்வதில் எந்தவித வருத்தமும் இல்லை.


சட்டத்திற்கு கட்டுப்பட்டு மனநல மருத்துவமனை செல்வதிலும் அவளுக்கு வருத்தமில்லை. இதைவிட பெரிய அளவில் தான் தண்டனையை எதிர் பார்த்திருந்தாள்.




ஏனெனில் சட்டத்தை எந்தளவிற்கு ஆதி மதிக்கிறான் என்பதை நன்கு அறிந்திருந்தாள். அதனால் நிச்சயம் தண்டனை வாங்கித்தருவான் என்பது அவளுக்கு அப்போதே தெரியும்.



வழக்கம் போல வாரம் இருவர் அவளை வந்து பார்த்து வருவார்கள்.
அப்போதும் ஆதி வரவே இல்லை.


வீட்டிலும் எவ்வளவோ எடுத்து சொல்லியாகிவிட்டது.
ஆனால் அவன் தான் ஒரே பிடியாக மறுத்து விட்டான்.


கிட்டத்தட்ட ஆறு மாதகாலங்கள் கடந்திருந்தது.


மருத்துவர்களின் சான்றுப்படி வைஷூ முழுமையாக குணமடைந்து விட்டாள். அவளை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்போகின்றோம். அவளை வந்து அழைத்துப்போக கூறி வீட்டிற்கு தகவல் சொல்லி அனுப்பி வைக்கப்பட்டது.


அந்த தகவலை கேட்டதும், கலைவாணி தன் கணவனோடு ஊரிலிருந்து வந்துவிட, ரஞ்சனியின் மொத்தக் குடும்பமும் அங்கு ஒன்றுதிரண்டு விட்டனர்.



இம்முறை ஆதி உற்பட,
விடுதலையாகி அவர்கள் முன் வந்தவள், தன் வளப்பு பெற்றோர் ஒரு புறமும், அத்தை குடும்பம் மறுபுறமென நிற்க.


அவர்களை கவனிக்காது
அத்தை என ஓடிச்சென்று ரஞ்சனியை கட்டிக்காெண்டவளை பார்க்கும் போது, சுதாகர் தம்பதியினருக்கு ஏமாற்றமாகிப்போனது.


இத்தனை நாள் தம்மை பிரிந்திருந்த ஏக்கத்தை, ஆரத்தழுவி தீர்த்தக்கொள்வாள் என எதிர்பார்த்திருக்க, வைஷூ தன் இரத்த உறவுகளை நாடியதும் முகம் வாடிப்போயிற்று.



இந்த ஒரு செயல் போதுமே! இனி தம் பொண்ணு தமக்கில்லை என்பதை புரிந்துகொள்ள.
அவள் இனி தன்னுடைய உறவுகளோடே போய்விடுவாள். தாம் இனி யாரோ என
செய்வதறியாது அவர்கள் பாசப்பரிமாற்றத்தை ஏக்கத்தோடு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருந்தார்கள்.



அவர்களது ஏக்கம் புரியாது வைஷூவோ,

"உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணேன் அத்த. கொஞ்ச நாளா உங்க எல்லார் கூடவும் இருந்துட்டு, தனியா வந்து இங்க இருக்கிறது எவ்ளோ கஷ்டமாச்சு தெரியுமா?" என க கண்கலங்கியவள், வதனத்தை கைகளில் தாங்கியவர், அவள் நெற்றிமேல் தன் இதழ் ஒற்றி,




"உன்னை பிடிச்ச கஷ்டகாலம் இன்னையோட முடிஞ்சுதுன்னு நினைச்சுக்கோடா!
இனி உன் வாழ்க்கையில எந்த துன்பமும் நெருங்காது." என மீண்டும் அவளை அணைத்துக்கொள்ள,



"போதும்.... போதும்... மாமியாரு மருமகள் கொஞ்சல். இப்பிடியே தெருவிலயே நின்னு கொஞ்சிட்டிருந்தா.. எல்லாரோட கண்ணும் உங்க மேல விழுந்து, மறுபடியும் ஏதாவது ஆகிடப்போகுது.




கிளம்புங்க வீட்டுக்கு போய் மீதிய கொஞ்சிக்கலாம்." என பிரகாஷ் கேலி செய்ய,
அங்கு பெரும் சிரிப்பொலி எழுந்து அடங்கியது.




"ஆமா ஆமா..! மாமியாரும் மருமகளும் கொஞ்சுறத பாத்துட்டா மாமனாருக்கு பொறுக்காதே!
எப்போடா பிரிக்கலாம்ன்னு வந்திடுறது." என குறைபட்டவர்.




"நீ வாடா..! நாம வீட்டுக்கு போயிடலாம்." என்றவர், அப்போது தான் தம்மையே ஏக்கமாக பார்த்தவாறு ஒதுங்கி நின்றவர்களை கவனித்தார்.



"அட... உங்களை மறந்திட்டேன் பாத்திங்களா? நீங்களும் எங்க கூடவே வீட்டுக்கு வந்து, ஒருவாரம் பத்துநாள் தங்கிட்டு போகலாமே?" என அவர்கள் ஏக்கம் புரிந்து வினவ,



"இல்லங்க.. நாளைக்கு இவருக்கு ரொம்ப முக்கியமான வேலையிருக்குன்னு சொன்னாரு.. நான் தான் வற்புறுத்தி கூட்டிட்டு வந்தேன்.


இன்னைக்கே ஊருக்கு கிளம்பினாத்தான், நாளைக்கு போகமுடியும். வைஷூ நல்லா இருக்காளான்னு பாக்கத்தான் வந்தோம்.. அவ நல்லா தான் இருக்கா.. அதுவே எங்களுக்கு போதும்... நாங்க இப்பிடியே கிளம்பிடுறோம்." என்று அதே இடத்தில் தேங்கி நின்றுவிட்டனர்.



"ஓ... சரி சரி! கிளம்புறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க. வீட்டுக்கு வந்து என் கையால ஒரு கப் காஃபி சாப்பிட்டு போறது.



நீங்க எங்களுக்கு செய்த உதவிக்கு சின்ன ஒரு உபகாரமாகவது செய்யணும்ன்னு ஆசைப்படுறோம். மறுக்காம நீங்க கண்டிப்பா வரணும்." என்று கட்டாயப்படுத்த,
அதற்குமேல் மறுக்க முடியாமல் ம்ம் என தலையசைத்து, அவர்களோடு போக இருந்தவர் கையினை தன்னை கடப்பதற்கு முன்னர் பற்றிக்கொண்டாள் வைஷூ.



அவள் தொடுதலில் என்னவென கலைவாணி திரும்பி பார்க்க,


"வேண்டாம்." என தலையசைத்தவள்,


"ப்பா.. நம்ம வீட்டுக்கே போயிடுவோம்ப்பா! எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, உங்கள நான் பிரிஞ்சிருந்ததே இல்லை.


ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை எல்லாம் பிரிஞ்சு தனியா இருந்திட்டு வீட்டுக்கு வரப்போறேன்.


அந்த வீடு. நம்ம வீடா இருக்கணும்ன்னு ஆசையா இருக்குப்பா! நான் வீட்டுக்குள்ள வரத்துக்கு முன்னாடி, என்னை ஆலாத்தி எடுத்து உள்ள கூப்பிடுங்க.



அப்போ தான் என்மேல இருக்கிற கெட்டதெல்லாம் போய்.. உங்ககூடவே காலத்துக்கும் சந்தோஷமா இருக்க முடியும்." என்றவள ஆனந்தக் கண்ணீரோடே வாரி அணைத்து முத்தமழை பொழிந்தவர்,



"சரிடா! எங்கேயும் போகாம நம்ம வீட்டுக்கே போயிடலாம்." என்றவர் கண்கள் தான் கலங்கியிருந்ததே தவிர, மகளின் வார்த்தை கேட்டு மனசு நிறைந்திருந்தது.



பின்னே சுயநலமற்ற அன்பு எங்கேயாவது பொய்ததுண்டா?
சுதாகரும் தன் பங்கிற்கு அணைத்து முத்தமிட்டவர், அதிர்ந்து நின்ற ரஞ்சனி குடும்பத்தினரிடம் கண்களால் மன்னிப்பு வேண்டினார்.



"என்னை மன்னிச்சிடுங்க அத்த! எனக்கு நீங்க முக்கியம் தான்.
ஆனா உங்க எல்லாரையும் விட, என்னை வளர்த்தவங்க எனக்கு ரொம்ப முக்கியம்.



அவங்க தான் எனக்கு எல்லாமே! அவங்கள தவிக்க விட்டுட்டு.. என்னால உங்க கூடல்லாம் வரமுடியாது. ஒருவேளை நான் உங்ககூட வந்து, நாளைக்கு இங்க இருக்கிறவங்க யாராவது ஒரு வார்த்தை தப்பா பேசிட்டா.


அதை என்னால தாங்கிக்க முடியாது.

என் அம்மா, அப்பா மட்டும் தான் என்னோட குறை நிறைகளை அப்பிடியே ஏத்துப்பாங்க.


நான் அவங்க கூட போறது தான் சரியாவும் வரும்." என்றவள் பார்வையானது ஆதியிடம் ஒரு முறை சென்று மீண்டது.


அவள் பேச்சை கேட்டு அதிர்ச்சியானவர்கள், அவளை எப்படியெல்லாமோ தம்மோடு வரவைக்க வார்த்தைகள தேடிப்பிடித்து பேசிப்பார்த்தார்கள்.



அனி ஒரு படி மேலே சென்று அழுதே விட்டாள். ஆனால் எதற்கும் மசிந்து கொடாமல், தன் பிடிவாதத்திலே வைஷூ நிற்க.


அதற்குமேல் கட்டாயப்படுத்த முடியாது அவள் விருப்பப்படியே விட்டுவிட்டனர்.


வீட்டுக்கு வந்து ஒருவாரம் ஓடியிருந்தது. அவளால் பழைய வைஷூவாக இருக்க முடியவில்லை.
என்நேரமும் ஆதியின் நினைவு தான்.


தான் இல்லாத சமயம் தன் புகைப்படத்தை வைத்தே, தன்னை அவ்வளவு காதலித்தவன், பின் எதற்காக தன்னை வெறுத்தான்?


'நான் ஒரு கொலைகாரி என்று தானே! சரி என்னை காதலிக்க வேண்டாம்.. மாமன் மகள் சாவுடன் போராடி மீண்டிருக்கிறாள்.. அந்த முறையிலாவது, ஒரு தடவை என்னை வந்து பார்த்திருக்கலாம். தவறு செய்யாதவர்கள் யாரும் இருக்கவே முடியாதே! அதற்கு மொத்தமாக வெறுத்துவிடுவதா? முகத்தை பார்க்கக்கூட பிடிக்காத அளவிற்கு நான் வேண்டாதவளாக போனேனா?


இதற்கு அவள் உயிர் பிழைக்காமலே இருந்திருக்கலாமே! பின் எதற்கு என்னை காப்பாற்றினான்?' என்ற வாசகமே அவள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.



திரும்பத்திரும்ப அதை தனக்குள் கூறி அவனை வெறுப்பதற்கு முயற்சி செய்தாள்.


ஆனால் அவன் மேல் காதல் கூடியதே தவிர, அவனை வெறுக்க முடியவில்லை.


எங்கு பார்த்தாலும் அவன் தன்னை பார்த்து சிரிப்பதும், முறைப்பதுமாகவே நிற்பதை கண்டவளுக்கு பைத்தியம் பிடிப்பதைப்போல இருந்தது.


அதனாலேயே அதிகளவான நேரம், தாயுக்கு உதவியாக சமையல் வேலைகளை செய்து கொண்டே சமையல் பழக ஆரம்பித்தாள்.



அந்த வேலைகள் முடிய, தனிமை என்றானதும்.. மீண்டும் அவன் நினைவுகள் ஆட்கொள்ளும்.


பெற்றவர்கள் முன்பு என்னதான் சந்தோஷமாக இருப்பதாக நடித்தாலும், அவளால் தத்துரூபமாக நடிக்க முடியவில்லை.


அறையே கதியென கிடந்தவளை கண்டு இருவருமே கவலையுற்றனர்.


ஒரு தடவை ரஞ்சனி வீட்டுக்கு போய் வருவோமா என கேட்டதற்கு, வேண்டாம் என மறுத்துவிட்டாள்.



அதற்குமேல் கட்டாயப்படுத்தாதவர், வீட்டிலிருந்தால் தானே தனிமையில் யோசனை ஆட்கொள்ளும் என நினைத்து,
புதுதாக ஒரு கல்லூரியில் சேர்த்து விடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ள தொடங்கினார்.




தொடரும்......
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
ரெண்டு பேரும் அவவங்க எண்ணத்துல இப்படி விலகி இருக்காங்களே 😳😳😳😳😳
 
Top