• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

47. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
"அதுக்கு ஆறு வருஷ தண்டனை அதிகம் தான் மாப்பிள்ளை! எங்க தப்பு என்ன எங்கிறதை துர்கா பொண்ணே புரிய வைச்சிட்டா,



அப்பவே நாங்க எங்க தவறை உணர்ந்துட்டோமே! அதுக்கு அப்புறமாவாவது அந்த ஆண்டவனுக்கு என்க மேல கருணை பிறக்கலையே! என் பொண்ணை எந்தளவு வருத்தியிருக்கான்." என்று அழுதவரை தூரத்தே நின்று கவனித்தாலும், அதை கருத்திலே வங்காது அவர்களிடம் வந்து, காஃபி நீட்டியவள்,



"எடுத்துக்கங்க," என்றாள்.



அவளை நிமிர்ந்து பார்த்தவர்கள் அவளது கவனம் தங்களை தவிர்த்து தட்டிலேயே இருக்கவும்,



கவலை கொண்டவராய்!,



"எங்கள மன்னிக்க மாட்டியாடாம்மா?" என்றார் சோர்வான குரலில்.



இப்போதும் அவர்கள் முகத்தை நேர் கொண்டு பார்க்க விரும்பாது துளசியிடம் திரும்பியவள்,



"அக்கா காஃபிய எடுத்துக்க சொல்லுங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள் உதாசீனமாக,



"தப்புத்தான்ம்மா! உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்ன்னு ஒத்துக்கிறோம், நீ வீட்டை விட்டு போன மூணாவது நாள் தான் தெரிஞ்சிது, மிகப்பெரிய பொக்கிஷத்தை இழந்துட்டோம்னு,



அன்னையில இருந்து மாப்பிள்ளையை பாக்கும் வரை, ஊர் பேர் தெரியாத இடத்தில வந்து ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம்டா! எப்பிடியாவது நீ கிடைச்சிடுவேன்கிற நம்பிக்கை தான் நாங்க உயிரோட இருந்ததுக்கு காரணம்.



கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோவில்ல குடும்பத்தோட உன்னை பாத்தோம், மாப்பிள்ளைக்கு நாங்க யாருன்னு புரிஞ்சு போய், அப்போ தான் தன்னோட போன் நம்பரை தந்தாரு. நாங்களும் அவருக்கு போன் பண்ணி விசாரிச்சப்பதான் எல்லா உண்மையும் சொன்னாரு,



ரொம்பவே நொந்துட்டோம்டா!



உண்மை எல்லாம் சொன்னதுக்கப்புறம் எங்களை உங்கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லி, ஒரு பாதுகாப்பான இடத்தில தங்கவைச்சவரு,
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் இங்க நடந்த பிரச்சினைகளை சொல்லி, அழைச்சிட்டு வந்தாரு." என்றவர்,



"எங்களுக்கு மன்னிப்பே கிடையாதாம்மா?" என்று தளர்ந்துபோய் கேட்டவரை பார்க்க தைரியமில்லாதவளோ,



"சார்....! பேசி நேரத்த மினக்கடுத்தாதிங்க" என அவர் யாரோ என்பதுபோல் பேசியவளின் மனமோ, அன்று தானும் இப்படித்தானே அவர் தன்னை நம்பிட மாட்டாரா என ஏக்கத்தோடு பார்த்தாள்.



அப்போது அவர் தன்னை நம்பவில்லையே! அவர்களே கதியென இருந்தவளுக்கு கிடைத்ததென்னவோ உதாசீனமும், ஏமாற்றமும் தானே!



அவ்வளவு ஏன் அன்னை தன்னை உடல் சுகம், அது என்று பேசும் போதுமே அமைதியாக இருந்தாரே.



மகள் முகத்தையே பாவமாக பார்த்து நின்றவர் முன் தட்டை ஏந்திக்கொண்டிருக்க பிடிக்காது முன்னால் இருந்த டீப்பாவின் மேல் வைத்து விட்டு திரும்பி நடந்தவள் காலினை விடாது இறுகப்பற்றியவர்,



"போதும்டா..... இதுக்குமேல எந்த தண்டனையும் என்னால தாங்க முடியாதும்மா!. என்னோட தப்பு என்னன்னு அப்பா நல்லா உணர்ந்துட்டேன் கீதாம்மா!



என்னை நீ வேற்று மனுசனா பாக்கிறதையே என்னால தாங்க முடியலையே, சார் அது இதுன்னு வேற பேசுறியேடா! உன்னால என்னை மன்னிக்க முடிலன்னா நீயே கொன்னுடும்மா! நான் சந்தோஷமா செத்துடுறேன்." என கெஞ்சிய



கணவனை ஓடி வந்து தடுத்தவர்,



"இது என்னங்க வேலை? இத்தனை பேரு இருக்கிறப்போ பொண்ணு காலை பிடிச்சிட்டு?" என்று சேலைத் தலைப்பை வாயில் திணித்து கதறினார்.



கீதாவாலும் தந்தை அவ்வாறு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாவில்லை,



"அப்பா..... என்னப்பா.....? எந்திரிக்க" என அவசரமாக அவரை எழுப்பியவள் கண்களும் ஆறு கண்டிருந்தது.



அவள் கண்ணீரை துடைத்து விட்டு, கன்னங்களை கைகளில் தாங்கி, "அப்பாவ மன்னிச்சிடுடா!" என்று மீண்டும் மன்னிப்பு வேண்டினார்
.



"அப்பா.....!" என குரல் தளுதளுக்க தந்தையை இறுகக்கட்டிக்கொண்டு,



அவர் மார்பு மீது விழுந்து விம்ம, அங்கு நின்றவர்கள் விழிகளும் குளம் கட்டியிருந்தது.



"அப்பா பெரிய தப்பு பண்ணிட்டேன்டா! என் பொண்ணு அப்பாகிட்ட எதுவும் மறைச்சதில்லன்னு தெரிஞ்சும், உன்னை சந்தேகப்பட்டிருக்க கூடாது, நான் ஒரு பாவிம்மா!" என அவரும் தன் பங்கிற்கு கரைய,



"இல்லப்பா நீங்க தப்பு பண்ணல, உங்க நிலையில இருந்து பாத்தா நீங்க செய்தது தப்பில்ல, ஆனா ஒரு தடவை என் பேச்சயும் கேட்டிருந்தா இவ்ளோ ஆகியிருக்காது." என்றவளை இன்னும் இறுக அணைத்தவர்,



"அப்பாக்கு மூளை மழுங்கிடிச்சுடா, இல்லனா என் பத்தரை மாதத்து தங்கத்தை சந்தேகப்பட்டிருப்பேனா?" என அவள் நெற்றியில் முத்தம் வைத்தவர்,



"ஆளே அடையாளம் தெரியாம பெரிய மனுஷயாட்டம் மாறிட்ட" என மகளை மேலிருந்து கீழ்வரை பார்த்து பூரித்துப்போனார்
.



அப்போது தான் எதிரே நின்று தம்மையே ஏக்கமாக பார்க்கும் மனைவியின் நிலை புரிந்தவராய்,



"கீதா அம்மாடா........!" என்றார் மனைவியை காட்டி.



"அம்மா....!" என்று ஆனந்த கண்ணீரோடு ஓடிச்சென்று இறுக அணைத்தவள்,



"சாரிம்மா....! இப்பல்லாம் உன்னைத்தான் அதிகமா நினைச்சுப்பேன், உன்பேத்தி ரொம்ப படுத்தி எடுக்குறாம்மா!



எப்பிடித்தான் என்னை நீ சமாளிச்சியோ! இப்போ தாம்மா உன் வலி என்னன்னு புரியிது." என அழுகையினூடே சிரித்தவள்,



"நீ எப்பவும் கிரேட்ம்மா, மனசுக்க இவ்ளோ அன்ப வைச்சிட்டு, வெளிய எப்பிடித்தான் வில்லியாட்டம் நடிக்கிறியோ?



எனக்கு உன் மேல கோபமே இருந்ததில்லை, ஏன்னா நீ எப்பவுமே ஒரே மாதிரி இருந்ததனால என்னை நீ திட்டினப்போ கஷ்டமா இல்ல,



அப்பா மேல தான் என் கோபமே!



என்னை முழுசா புரிஞ்சுகிட்டவரே என்னோட பேச்சை காது குடுத்து கேக்க கூட விரும்பல, அப்புறம் உன்மேல எதுக்கு கோபப்பட முடியும்" என கூறியவளின் தலையினை வருடிய சங்கரர்,



"இப்பவும் கோபமாடா?" என்றார் குரலில் சோகம் காட்டி.



அவர் வருடிவிட்ட கைகளை பற்றி தன் கைகளுக்குள் பத்திரப்படுத்தி கொண்டு,



"கோபம் எல்லாம் இல்லப்பா,



இத்தனை பேர் முன்னாடி என் கால பிடிச்சு, என்னை குற்றவாளியாகிட்டிங்களே என்கிற வருத்தம் தான்"



"என் பொண்ணு தான் பிடிவாதக்காரியாச்சே! அப்பா வேற என்ன செய்யமுடியும்." என்று கூறி சிரிக்க,



"போங்கப்பா....." என்று செல்லமாக போபித்தவளை கண்டு இம்முறை உல்லாசமாக நகைத்தவருக்கு தன்னுடைய மகள் மீண்டும் கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷம்.



"சரி சரி......! சிரிச்சது எல்லாம் போதும், இனியாவது அந்த ஆறிப்போன காஃபியை குடிங்க" என்று துளசி அவ்விடம் தான் நிற்பதை உணர்த்தினாள்.



அவளை கேள்வியாய் சங்கரர் பார்க்க,



"இவ கீத்துவோட அக்கா! இவ இல்லனா கீத்து இன்னைக்கு இல்லை" என்றான் சூரிய,



அவளை கையெடுத்து கும்பிட்ட தம்பதியினரிடம்,



"என்னப்பா நீங்க? சும்மா சும்மா கும்பிட்டிட்டு" என்று அவர்கள் தன்னை வணங்குவது சங்கடமாகிப்போக,



"இனிமே இங்கதானே தங்குவீங்க." என்றாள் பேச்சினை மாற்ற
.



"இல்லாம....? இத்தனை நாள் என் பொண்ணை பிரிஞ்சு இருந்ததே போதும், இனி காலம்பூரா என் பேத்து கூடவே இருக்க போறேன்." என்றவர் சந்தோஷத்தை பார்த்துக்கொண்டிருந்த சூரியவின் பார்வை கீதாவிடம் திரும்பியது.



அவளோ அவன் பாராத நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவனது பார்வை தன்னிடம் திரும்புவதை உணர்ந்து சட்டென தன் பார்வையை மற்றிக்கொண்டாள்.



அவள் குடும்பத்தோடு சேர்த்து வைத்தற்கு ஏதாவது சொல்வாள் எதிர்பார்த்தவன், தன்னை ஒரு பொருட்டாக நினையாது அவர்கள் பேச்சில் மூழ்கியிருக்கவும், சூரியவிற்கு ஏமாற்மாகிப்போக
,



"நீங்க பேசிட்டிருங்க நான் வரேன்" என்று மற்றவர்களை பார்க்காது சென்றவனைப்பார்க்க துளசிக்கு ஒருமாதிரியாகிப்போனது.





பெற்றவர்களுடன் சிறுவயதில் தவறவிட்ட சேட்டைகளை இப்போது செய்துகொண்டு அஞ்சலிக்கு நிகராக வலம்வந்தாள் கீதா.



சூரிய தான் அவனையும் அறியாது உள்ளே ஓர் நெருடல்.



கீதாவின் அலட்சியமும், பாராமுகமும் அவனை நிம்மதியற்று சுற்ற வைத்தது.



எப்போதாவது ஒரு நாள் ஒரு முறையாவது பேசுவாள் என நம்பிக்கையில் இருந்தவனது நம்பிக்கையும் நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டே போனது.



அவளாே அவனை ஓரப்பார்வை என்ன, கோரப்பார்வை கூட பார்க்கவில்லை. இனியும் பார்ப்பாள் என்று நம்பிக்கையும் அவனுக்கில்லை.



நாட்களாே வாரங்களாகி மாதங்களையும் கடந்திருந்தது.



அவளை பெற்றவர்களும் இருவரின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அவனுக்காக அவளிடம் பேசிப்பார்தாயிற்று,



"இது என் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் தலையிட வேண்டாம்" என சொல்லிவிட்டாள்.



அவளது பிடிவாதத்தினால் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பயம் எழுந்தாலும், விதியின் மேல் நொந்தவாறு அமைதியாகவே இருந்து விட்டனர்.



நாட்கள் கடந்து ஆறாவது மாதத்தை தொட்டாயிற்று,



இனியும் தன் எதிர்பார்ப்பு மெய் ஆகாது என உணர்ந்தவன்,



தொலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு எதையோ உறுதி செய்து கொண்டு வீடு வந்தவன் உள்ளே புகுவதற்கு முன்பு, துளசி தன் வீட்டு முற்றத்தை பெருக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.



'இவளிடம் முதலில் கூறுவோம், அவளே மற்றவர்களுக்கு கூறட்டும்.' என நினைத்தவனாய், அவள் கேட்டுக்குள் நுழைந்தான்.



அதே நேரம் கீதாவும் மாலை வேளை தேனீர் குடிப்போம் என நீரை சுட வைத்தவள், தேயிலையினை எடுக்கும் போது தான் டப்பா காலியாக இருப்பது தெரிந்தது
.



"ஐய்யே....! இதை கவனிக்காம விட்டுட்டேனே!



நாளைக்கு கடைக்கு போறப்போ இதையும் லிஸ்ட்ல சேத்துக்கணும்" என்றவள்,



"நாளைக்கு வாங்கிறது இருக்கட்டும், இப்போ தேயிலைக்கு எங்க போக?" என உதடு சுழித்தவள்,



'இப்போ என்ன வந்திச்சு? இருக்கவே இருக்காங்க துளசியக்கா'



"அம்மா தேயிலை முடிஞ்சு போச்சும்மா!, நான் துளசியக்கா வீடுவரைக்கும் போயிட்டு வந்திடுறேன்" என தாயிற்கு கேட்குமாறு கத்திவிட்டு,



துளசியின் வீட்டை நோக்கி செல்லும் போது தான் சூரியவைக்கண்டாள்.



அவனது வாடிய முகம் எதையோ உணர்த்த,



"என்னாகிடிச்சின்னு முகத்தை சோகாா வைச்சிருக்கானாம்? எஸ்டேட்டில ஏதாச்சும் பிரச்சினையா இருக்குமோ?" என எண்ணியவள் கவனமோ அவனிடமே சொன்றது.



வாசல் வரை வந்தவனாே, திரும்பி துளசியின் வீட்டுக்குள் நுழைந்ததும்,



"கேட்டு வரைக்கும் வந்திட்டு, அக்காகிட்ட ஏன் போறான்?" தன்னை தானே கேட்டவள், அவன் அறியா வண்ணம் அவன் பின்னாலேயே சென்று, மறைவான இடம் பார்த்து நின்று கொண்டாள்.



அவனை கண்ட துளசியோ,



"வாங்கண்ணா.....!



என்ன இன்னைக்கு வேளையோட வந்திட்டிங்க?, வீட்டுக்கு போகாம நேர இங்க வரீங்க போல."



"ஆமா துளசி...!



உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." என தடுமாற,



" என்ன அதிசயம்? அப்போ உங்க மௌனவிரதம் ரத்தாகிடிச்சா?" என்றவள் கேலி புரியாமல்,



"புரியலையே துளசி?" என்றான்.



"இல்ல.... அன்னைக்கு உங்க வீட்டில நடந்த பிரச்சினைக்கு பிறகு, யார் கூடவும் சரியா நீங்க பேசி பாக்கல, இன்னைக்குத்தான் பேசி இருக்கிங்க.



"ஏன் அண்ணா, நான் என்ன பண்ணேன்? என்மேல என்ன கோபம்?" என்றவளுக்கு அவன் முகத்தில் சோர்வு தெரியவும்
,



"இப்போ தான் வீட்டுக்கே வந்திருப்பிங்க, போய் குளிங்க, நானும் என் வேலைய முடிச்சிட்டு வந்திடுறேன்."



"இல்ல துளசி!



நான் உன்னைத்தேடி வந்ததே உங்கூட தனியா பேசணும்னு தான்."



"சொல்லுங்கண்ணா! அப்பிடி என்ன விஷயம் ஒழிச்சு பேச?" என்று கையிலிருந்த துடப்பத்தை போட்டுவிட்டு கேட்டாள்.



"அது துளசி.....
நீ முன்னாடி கீத்துவையும், குட்டிம்மாவையும் பாத்துக்கிட்டது போலவே எப்பவும் பாத்தக்கணும்,



அவ இப்பவும் சின்னக்குழந்தை போல தான் துளசி நடந்துக்கிறா, இன்னும் அவளுக்கு அனுபவம் பத்தல, அவ தேவைகளை கூடவே இருந்து பாத்துக்கோ துளசி!



அவளே கோபபட்டாலும் தப்பா எடுத்துக்காம நிதானமா பேசு, அவ குணம் தான் உனக்கு தெரியுமே.....!



அத்தையும் மாமாவும் இருக்கிறதனால இப்போ முன்னாடி போல தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்." என சொல்ல வந்ததைச் சொல்லாது வதனியை பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.



"இருங்க.... இருங்க...



ஏதோ பொண்ணை கல்யாணம் கட்டிக்கொடுத்துட்டு, அவளை பெத்தவங்க மாப்பிள்ளைக்கிட்ட சொல்லுற வசனம் எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்கிங்க, என்ன என்னை அவகிட்ட மாட்டி விட்டிட்டு சந்திர மண்டலத்துக்கு போக போறவரு மாதிரி பேசுறீங்க?" என்றாள் துளசி நக்கலாய்.



"
அப்பிடி மட்டும் என்னால முடிஞ்சிருந்தா நிச்சயமா அங்க போயிருப்பேன், பட் அங்க எல்லாம் போக முடியாததனால தான், நான் ஆத்திரேலியா போகலாம்னு இருக்கேன்." என்றான் விரக்தியாக.



"புரியல நீங்க என்ன சொல்லுறீங்க?"



"ம்ம்....... நான் அங்கேயே திரும்பவும் போகலாம்னு இருக்கேன்,



இன்னும் ஒரு வாரத்தில போயிடுவேன்.



ஃப்ளைட் டிக்கட் கூட போட்டாச்சு, ஏற்கனவே நான் பாத்த வேலை தான். எப்பவேனாலும் ஜாய்ண்ட் பண்ணிக்கலாம்."



" ஏன் இந்த திடீர் முடிவு?.." என கூர்மையாக கேட்டவள், எதுவோ தோன்ற கோபமாக அவனை முறைத்து,



"ஓ... அப்போ கீதா சொன்னது தான் உண்மையா?



உங்க அண்ணன் செய்த தப்பு சரி செய்யத்தான் அவ கழுத்தில தாலி கட்டினிங்களா? இப்போ அவ உங்களை ஏத்துக்கலன்னதும், இது தான் தருணம்ன்னு நாட்டை விட்டு ஓடுறீங்க,



அங்க போய் வேற ஒரு பொண்ணோட வாழப்போறீங்க,



அப்பிடின்னா நான் நினைச்சது போல நீங்க அவளை விரும்பி அவ கழுத்தில தாலி கட்டல, நாங்க தான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டோம், அப்பிடித்தானே!" என்றாள் கோபமாக.



அவளது கேள்வியில் அவனது கட்டுப்பாட்டினையும் மீறி கண்கள் கலங்க,



அதை அவளிடம் இருந்து மறைக்கும் விதமாய் மறுபுறம் திரும்பி கண்ணீரை அவசரமாக துடைத்தவன் உதடுகளோ அதற்கு எதிராய் வெறுமாய் புன்னகைத்தது.



"நீயாவது என்னை புரிஞ்சு வைச்சிருப்பேன்னு நினைச்சேன். நீயே இப்பிடி சந்தேகபட்டா, சிறுபிள்ளை தனமா நடந்துக்கிற அவ என்னை தப்பா நினைக்கினதில தப்பே இல்லை.



ஏன் துளசி! நீ சொல்லுறது போல நான் நினைச்சிருந்தா, முன்னாடி ஆஸ்திரேலியா போனப்பவே இவளுக்கு மாதம் பணத்த அனுப்பிச்சிட்டு இன்னொருத்தி கூட சந்தோஷமா வாழ்ந்திட்டிருப்பனே!



அப்பாே மட்டும் இவ என்னை ஏத்துக்கலையே!
இந்த ரெண்டு வருஷம் ஏன் நான் இவளுக்காக காத்திட்டு இருக்கேன்னு யோசிச்சியா?



என் கீத்து எப்பாேவாச்சும் என்னையும், என் காதலையும் புரிஞ்சுகிட்டு ஏத்துப்பான்னு ஒரு நப்பாசையில தான் அவளை பாக்க ஓடிவந்தேன்." என தன் பேச்சை நிறுத்தி மூச்சினை சீராக எடுத்து விட்டவன்.



"ஏதோ நான் நாடகமாடினதால தான் அவ என்மேல கோபமா இருக்கான்னு நினைச்சிட்டு இத்தனை நாள் காத்திட்டிருந்தேன்,



ஆனா என் காத்திருப்பு வீண்ணு இப்போ தோணுது,



என்னை பாத்தாலே அவளுக்கு சுத்தமா பிடிக்கல, அவ எனக்கு கிடைக்கணும்னு தான் இதெல்லாம் செய்தேன்னு அவளுக்கு புரியுதில்ல, எதுக்காகவும் என்னை நம்ப அவ தயாரா இல்லை.



இப்போ தான் அவளோட அப்பா, அம்மா வந்திட்டாங்களே! இனி நான் அவளுக்கெதுக்கு?" என்று பேசிக்கொண்டு போனவன் குரல் உடைந்து, அடுத்த வார்த்தை கூற முடியாமல் நிறுத்தியவனை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.



"அப்போ நீங்க சொல்லுறது தான் உண்மைன்னா, உங்க காதலை அடையற வரை போராடி பிரச்சினையை தீர்க்கிறது, எந்த முயற்சியும் பண்ணாமல் பாதியிலேயே பயந்து ஓடுனா பிரச்சினை தீர்ந்திடுமா?"
விரக்தியாக புன்னகைத்தவனோ,



"பிரச்சினை எதுன்னு தெரிஞ்சா போராடி என் காதலை அடைஞ்சிடுவேன் துளசி!



அந்த பிச்சினையே அவளுக்கு நானா இருக்குறபோ, என்ன செய்ய முடியும் சொல்லு?



அவளுக்கு என்னைக்கண்டாலே பிடிக்குதில்லை.



ரொம்ப சந்தோஷமா பெத்தவங்ககிட்டை பேசி சிரிச்சிட்டு இருப்பா, என்னை அந்த நேரம் கண்டுட்டா போதும், அவ முகத்தில இருந்த சந்தோஷம் முழுமையா வடிஞ்சு, விரோதியை கண்டதைப் போல முகத்தை திருப்பி வைச்சிட்டு அந்த இடத்திலேயே நிக்காமல் போயிடுறா,



இதெல்லாம் என்னால தாங்க முடியல துளசி,



என் கீத்துவே என்னை வெறுக்கிறத என்னால பாக்க முடியல," என்றவனது பேச்சை அவளால் ஏற்க முடியாமல் இல்லை..



துளசிக்கும் நடப்பவை தெரியும் தானே!


"


அவ என்னையும், என் காதலையும் ஏத்துக்கலைனாலும் கவலையில்லை, என்னை விரோதி போல நடத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு,



அதனால தான் நைட்டில எல்லாரும் தூங்கினதுக்கப்புறம் வீட்டுக்கு வரேன், விடியிறதுக்கு முன்னாடி கிளம்பிடுறேன்.



ஒரே வீட்டில இருந்துட்டு அவளை பாக்காம என்னாலயும் இருக்க முடியல, சரி வீட்டை விட்டு போயிடலாம்னு நினைச்சாலும் அவளை இந்த உலகம் தப்பா பேசும்,



ஏற்கனவே வெந்து போயிருக்கிற அவ மனச இன்னும் காயப்படுத்த எனக்கு விருப்பமில்ல, அதனால யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன்.



இதுக்கு மேலேயும் என்னால அவ கஷ்டப்பட வேண்டாம் துளசி! என்னை பிரியிறது தான் அவளுக்கு சந்தோஷம்னா, இந்த சந்தோஷத்தையாவது அவளுக்கு குடுத்தேன் என்ற திருப்தியோட நான் கிளம்புறேன்."
என்றான்.



"எனக்கென்னமோ நீங்க அவசரப்படுறீங்களோன்னு தோணுதண்ணா!"



"இல்ல துளசி! ரொம்பவே லேட் பண்ணிட்டேன். இன்னும் ரெண்டே வாரம் தான் என் வீசா முடியுற காலம். அடுத்த வாரமே கிளம்பணும், இல்லனா திரும்ப வீசாக்கு அலைய வேண்டியிருக்கும்" என்றான் தெளிந்தவனாய்.



அவன் தெளிவே அவளை மேலே பேச விடாது தடுக்க,



"அப்புறம் எப்போ திரும்புவீங்கண்ணா?" என்றாள்.



"தெரியல துளசி! வருவேன்னு நம்பிக்கையில்லை என்கிறத விட, வர எனக்கு இஷ்டமில்லை.



அப்பாவும், அம்மாவும் அடிக்கடி அஞ்சலிய பார்க்க வருவாங்க, அதனால அவங்கள நீ கண்டுக்காம விட்டுடாத,



உன் கடமைய நீயாவது சரியா செய்." என்றவனிடம்.



"சொல்லுறத பாத்தா போன் கூட பண்ண மாட்டிங்க போல" என்றாள் சந்தேகமாய்.



"போன் போட்டா குட்டிம்மா வான்னு அடம் பண்ணுவா, அது என் கீத்துக்கு பிடிக்காது,



அவளுக்கு புருஷனா இருந்து நான் தரப்போற சந்தோஷம் இது ஒன்னு தான், அதை அவளுக்கு முழுமையா குடுக்கணும்ன்னு நினைக்கிறேன்,



என் தொல்லையில்லாமல் சந்தோஷமா இருக்கட்டும்,



இதை அவங்ககிட்ட சொல்ல என்னால முடியல. சொல்லுறப்போ எங்கேயாவது ஒரு இடத்தில என்னையும் அறியாம அழுதுடுவேனோன்னு பயமா இருக்கு,



நீயே இதை சொல்லிடு! இதை கேட்டா கீத்து சந்தோஷபடுவா" என்றவன், கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க திரும்பி பாராமல் சென்றுவிட்டான்.



துளசிக்கு அவனது மனம் புரியாமலில்லை. அவளாலும் வருந்துவதை தவிர என்ன செய்ய முடியும்?



இத்தனையையும் செடி மறைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த கீதா,



கடைசியில் கண்ணீரை மறைப்பதற்காக திரும்பியும் பாராது கேட்டினை தாண்டி செல்பவனையே பார்த்தவளுக்கும் புடுவங்கள் சுருங்கியது.



தொடரும்......



 
Top