• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

47. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வந்ததும் களைப்பு தீர குளித்து விட்டு லுங்கிக்கும், பனியனுக்கும் தன்னை மாற்றிக்கொண்ட மாணிக்கத்தோடு சாகாவாசமாக பேசும் பெரியவர்கள் பேச்சினுள் புகாமல் ஓரமாகவே ஒதுங்கி நின்றார்கள் தோழிகள்.



அவர்கள் நடுவில் அமர்ந்து எதையோ நோட்டியவாறு இருந்தவள்,



"ஐய்....... வந்தாச்சே!.." என குதூகலித்து எழுந்து ஓட..



"என்னடி உன் தொங்கச்சிக்கு ஆச்சு? திடீர்னு பைத்தியம் புடிச்ச பனி கரடி மாதிரி பண்ற...



எதுக்கு இப்போ தொங்கிட்டு வெளிய ஓடுற? பைத்தியம் முத்திப்போய் எதிலயாச்சும் விழுந்து செத்திடப் போறாளோ....!" என்றவள் தலையில் தட்டியவள்,



"அவளுக்கு எதுவுமில்ல.... நீ மூடு!" என்றாள் மைலி.



"எதுவும் இல்லை என்கிற... அவளை பாரு! இருட்டுக்குள்ள ஓடிறா.." என்றாள் புரியாது.



" அவ எதிர்பார்த்தவங்க வந்தாச்சு.. அவங்கள வரவேற்கத்தான் ஓடிப்போறா.." என்றாள் ஆர்வமே அற்றவள் போல்.



"யாரை அப்படி எதிர்பாத்திட்டு இருந்திருப்பா..? " என வாசலை எட்டி எட்டிபார்த்தவளுக்கு ஜனாவை தவிர யாரயைும் தெரியவில்லை.



"யாரையுமே காணல்லையேடி!" என்றாள் அவள் கண்ணில் எவரும் விழாததால்.



"ஏய்...! அவ வண்டி சத்தத்தை கேட்டு ஓடினா. இரு வருவாங்க." என்க.



"வண்டி சத்தமா? எனக்கு அப்பிடி எதுவும் கேக்கலையே!



இத்தனை பேச்சிரைச்சலுக்கு நடுவிலயும் வண்டி சத்தத்தை கிரகிச்சி இறங்கிப்போய் வரவேற்கிறான்னா... ரொம்ப வேண்டப்பட்டவங்களோ..?" என தேனு வினவ.



மைலியும் கூற வாயெடுக்கும் சமயம், அழுத்தமான காலடி தடங்களோடு உள்ளே வந்தான் ஸ்ரீ.



அவன் வரும் சத்தமறிந்து வாசலை பார்த்தவள் பார்வையை தொடர்ந்து தேனுவும் பார்க்க,



"மாமா..." என்று ஓடியவளை



"ஜனா.." என்று இதழ்களில் புன்னகைத்தவாறு எதிரில் வந்தவன்,



"என்ன மேடம் ரொம்ப நேரம் எனக்காக காத்திருக்கிற போல."



அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தவள் செயலில் இயல்பாக பற்கள் தெரிய சிரித்தவனை கண்டவளோ,



ஒரு நொடி அவனை உற்று நோக்கியவளுக்கு அவன் யார் என்பது தெரிந்து போக.



"இவன் கோவில்ல...



ஏய்! இவன் என்னோட ஆளுல்ல......?



உன்னைக்கூட.... இவன் தானேடி உன்னை தாங்கி பிடிச்சான்." என்றார் ஆச்சரியமாய்.



"இவ எப்படி இங்க? இவனை தான் ஜனா எதிர் பாத்திட்டு இருந்தாளா?



முன்னாடி பார்த்ததை விட.. இப்போ ரொம்ப அழகா இருக்கா இருக்கான்."



என்றவளை மைலி முறைக்க,



"எதுக்கு இப்போ முறைக்கிற?



ஓ... இவனை தான் உனக்கு சுத்தமா புடிக்காதுல்ல...



? உனக்கு புடிக்கலனா என்ன? எனக்கு என் ஆளு ஓகே தான்." என்றவளை மீண்டும் முறைத்தாள் மைலி.



"என்னடி.....? ஓ... புரியுது புரியுது புரியுது...



இவன் எப்போ என் ஆளானான்னு தானே!!



மறந்திட்டியா மைலி? அன்னைக்கே சொன்னேனே! இனிமேல் இவன் தான் என்னோட ஆள்ன்னு.



அன்னைக்கு பாத்தது. அதுக்கப்புறம் இவனை எங்கேயாச்சும் கண்டுட மாட்டேனானு போய் வர இடலெ்லாம் தேடுவேன்.



பலன் என்னமோ பூஜ்ஜியம் தான்." என கவலையாக கூறியவள்,



"இத்தனை நாள் என்னை ஏங்க வைச்சான்ல.



இப்போ பாரு என் திறமையை...



இன்னைக்கே இவனை மயக்கி என்கிட்ட லவ் சொல்ல வைச்சு.... போறப்போ என்கூடவே கூட்டிட்டு போறனா இல்லையானு" என்றவளை முக்கு விடைக்க பார்த்து வைக்க.



"என்னடி.....! திரும்ப திரும்ப முறைக்கிற.. நான் என் ஆளு கூட நான் சேருறதில உனக்கு இஷ்டமில்லையா?" என்றாள் ஆதங்கமாய்.



"அது உன் ஆள் இல்லை. என் புருஷன்.



அந்த ராமருக்கு இந்த மைலி தான். சும்மா சூர்ப்பணகையாட்டம் இடையில புக நினைச்சே....! இந்த தடவை மூக்க அறுக்கிறது ராமர் இல்ல.. நானாத்தான் இருப்பேன்." என்றாள் கோபமாக,



"என்னடி சொல்ற? இவனா உன் புருஷன்?" என அதிர்ந்தவள்,



"மைலி..! நான் உனக்கு சொன்ன அட்வைஸ் எல்லாம் எச்சி தொட்டு அழிச்சிடுடி!



உனக்கு இவன் வேண்டாம்..



பாரு நீ எந்த மாதிரியான பொண்ணு? உன்னை எல்லாம் சாமி ரூம்ல வைச்சு பூஜை பண்ணுற அளவுக்கு தெய்வ பொண்ணுடி..



இவன் அப்பிடியா பேபி? நீ கூட இவனை முதல் முதல்ல பாத்தப்போ.... பொறுக்கினு தானேடி சொன்ன? அப்போ சொன்னது என்னமோ இப்போ உண்மையாச்சுல்ல...



பேசாமல இவனை நீ டிவோர்ஸ் பண்ணிடு பேபி.



உன்னால அது முடியலனா சொல்லு.... நான் அதுக்கு ஏற்பாடு பண்ணுறேன்." என்று நல்லவள் போல் முகத்தை வைத்து தேனு கூற.



"ம் நீ சொல்லுறது போலவே பண்ணிடுவோம்.. அப்புறம் என்ன செய்யணும்....?" என்ற மைலியின் அலட்சியமான பேச்சில்,



"அப்புறம் என்னா? உன் ராமன் பாவமில்லையா? நீ இல்லாம துடிச்சிட மாட்டாரு.



உன் இடத்தில இருந்து அவருக்கு ஒரு நல்ல மனைவியா ஆறுதல் சொல்லுறது என் பொறுப்பு மைலி!



நீ கவலைப்படாத சரியா" என்று முகத்தில் பொய்யாக சோகம் காட்டி பேசியவளை எரிப்பது போல் முறைத்தவள்.



"எங்க கடமையை நாங்களே செய்துக்கிறோம். நீங்க உங்க வேலையை பாருங்க." என்றாள்.



"ஏய் அவன் கேரக்டர் சரியில்லடி! அப்புறம் உன் வாழ்க்கை சரியா அமையாது.. உனக்கு அவ செட்டும் ஆகமாட்டான் புரிஞ்சுக்கோ." என்று வேண்டும் என்றே வம்பு வளர்க்க.



"என்மேல உள்ள உங்௧ கரிசனை போதும்....



என் வாழ்க்கைய நானே சரியா அமைக்கிறேன். அவரு எனக்கு செட்டாகலன்னா பரவாயில்லை... அவருக்கு ஏத்தமாதிரி என்னை நானே மாத்திக்கிறேன்.



நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.. மூடுங்க." என கூற,



'இப்போ வரியா வழிக்கு' என மர்மமாய் புன்னகைத்தவள் சிந்தைையை கலைத்தது ஜனாவின் குரல்.



"தாங்க மாமா.... எனக்காக தானே வாங்கிட்டு வந்திங்க? குடுங்க மாமா... நான் போகணும்." என்றவள் கைகளில் எட்டாதவாறு சாக்லட்டை உயர்த்திப் பிடித்து போக்கு காட்டியவாறு இருக்க.



"என்னடி இவ? இதுக்கு தானா இத்தனை பரபரப்பா உன் ஊட்டுக்காரனை வரவேற்றா?



இருந்தாலும் உன் புருஷனுக்கு ரொம்ப தான் குறும்பு... சின்னை பொண்ணை ஒரு சாக்கலேட்டுக்காக தொங்க விடுறானே!



பாரு...! அவ எவ்வளவு உரிமையோட அவன்கிட்ட நடந்துக்குற.. நீயும் இருக்கியே.... பழையா காலத்து ஹீரோயின் கணக்கா தூணுக்கு பின்னாடி மறைஞ்சிருந்து சைட் அடிச்சிட்டு.



ஊவாக்.......



இந்த கண்றாவிங்ல்லாம் என்ன பார்க்க வைச்சிட்டியே ஆண்டவா!



இந்த லச்ஷணத்தில இந்த பண்ணாடைக்கு அந்த ஹீரோ சாரை, தான் இன்னும் லவ் பண்ற மாட்டார் கூட தெரியலையாம்.



இதெல்லாம் அறுபது கால சீன்ல கூட இல்லையேடா!" என்று தம் இருவருக்கு மட்டும் கேட்டுக்குரலில் புலம்பியவள் பேச்சை கேட்கத்தான் மைலி தயாராக இல்லை.



அவளது பார்வையோ கோபத்தில் யாரையோ எரித்து விடுவது இருக்க.



'என்னடா இது! நம்மா தானே இவளை கலாச்சோம்... இவ யாரை மாெறைக்குற?' என நினைத்தவளாய் அவள் பார்வை சென்ற திசையில் திருப்பியவள் கண்களுக்குள் மைலியை பார்த்து அசடு வழிந்தவாறு பாவமாக பார்த்திருந்த ஸ்ரீயை கண்டவள்.



"என்னடா நடக்குதிங்க? எதுக்கு இவ இவனை மொறைக்குறா..? அவனும் இவளோட முறைப்புக்கு அடங்கி போறானே....!



இதுங்க கண்ணாலையே சண்டை போடுதுங்க. ஏன் எதுக்குன்னு எனக்கு மாத்திரம் புரிய மாட்டேங்குது?" என குழம்பி நின்றவள்



அறிய வாய்ப்பில்லை.



அவர்கள் இருவரின் பார்வையின் பொருள்.



ஆம்.. நடந்தது இது தான்.



தினமும் வீட்டிற்கு ஸ்ரீ வரும்போது ஜனாவிற்காக டைரி மில்க் சாக்லேட் வாங்கி வருவது வழக்கம்.



அவளுக்கு மாத்திரம் அவன் வாங்கி வருவதில்லை.



ஜானாவிற்கு வாங்கி வருவதைப்போல மைலிக்கும் வாங்கியே வருவான்.



என்ன? தன் மனைவிக்கு கொஞ்சம் வித்தியாசமாக டைரி மில்க் சில்க் சாக்லேட்டாக வாங்கி வருபவன்,



எங்கு அதை எல்லோர் முன்பும் கொடுத்தால்,



அவளுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலாக என்று கேட்டு ஜானு பறித்து விடுவாளோ என்ற பயத்தினில்,



யாருக்கும் தெரியாமல் அறைக்குள் எடுத்து சென்று, அவள் கண்படும் இடத்தில் வைத்து விடுவான்.



அவன் இருக்கும் போது அன்று முழுவதும் அதே இடத்தில் இருக்கும் அந்த சில்க் சாக்லேட்டானது,



மறு நாள் இவன் அலுவலகம் சென்றதும் வைத்த இடத்தினில் இல்லாமல் போய் விடும்.



அதை அவள் எடுக்கிறாளா? சாப்பிடுகிறாளா? இல்லை அது எங்கு தான் போகிறது என்று தெரியாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில் தினமும் வாங்கி வந்து, அதே இடத்தில் வைத்தும் விடுவான்.



இன்றும் அதே போல் தான் வாங்கி வந்தவன் ஒரு தவறை செய்துவிட்டான்.



வழயைமாக இடது புற பாக்கேட்டினுள் ஜானுவிற்கும், வலது புற பாக்கெட்டினுள் மைலிக்குமான சாக்லெட்டை வைப்பவன். இன்று என்ன சிந்தையில் நின்றானோ மாறி வைத்து விட்டான்.



அதை அவளுக்கு போக்கு காட்டும் போது கூட கவனிக்கவில்லை. ஒரே கலர் எழுத்து மட்டுமே வித்தியாசமாமக இருக்கும் சாக்லேட்டில் எப்படி அதை அவ்வளவு உன்னிப்பாக கவனித்திட முடியும்?



அவனது போக்குக்காட்டும் விளையாட்டில் ஏமாற்றமடைந்த ஜானு,



தூக்கி பிடித்திருந்த அவனது கையினில் குரங்கு போல் தொங்கி அதை எப்படியோ பிடித்தும் விட்டாள்.



பிடித்தவள் சாக்லேட்டை பார்த்தும்..



"சூப்பர் மாமா....! இன்னைக்கு சாக்லேட் வித்தியாசமா இருக்கே!" என துள்ளிக்குதிக்கும் போது தான், அவளது கையிலிருந்த சாக்லேட்டை கண்டு தவறை உணர்ந்தான்.



மைலியை முறைப்பதை கண்டதும், என்ன செய்வதென்று தெரியாது முழித்தவன்.



'இவ வேற இன்னைக்குன்னு புதுசா முறைக்கிறாளே!' என நினைத்தவனுக்கு ஏனோ அவளது உரிமையிலனா கோபம் இனம் புரியாத இதத்தினை தந்தது.



அவளை சமாதான படுத்தும் முகமாய்,



"ஜனா அது உன்னோடது இல்லடா! அது இன்னொருதங்களோடது. உன்னோடது இங்க இருக்கு.. அதை தரியா..?" என்றவாறு மறு பாக்கெட்டினில் இருந்து அவளுக்குரியதை எடுத்து நீட்டவும்,



அதையும் சட்டென பறித்து எடுத்தவள்,



"இதுவும் எனக்குத்தான்



நான் தரமாட்டேன்." என பின்புறம் ஒழித்தவளிடம்.



"ஜானும்மா....! மாமா உனக்கு நாளைக்கு வாங்கி தரேன்டா! இன்னைக்கு அதை குடுத்துடு" என்க.



"முடியாது.........



எப்பவுமே எனக்கு தானே சாக்லேட் வாங்கிட்டு வருவீங்க. இன்னைக்கு என்ன புதுசா?



இன்னொருங்களோடதுன்னு சொல்றீங்க?" என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தலையை செரிந்தவாறு மைலியை பாவமாக பார்த்தவன்..



'ப்ளீஸ்..' என கண்களால் கெஞ்சியவனை முறைத்து விட்டு,



திருப்பிக்கொண்டவளது அத்தனை செயல்களுமே இதுவரை மைலி தன்னிடம் எடுத்துக் கொள்ளாத உரிமைகள்.



இன்னும் இன்னும் அதை அனுபவிக்க வேண்டும் என்று அவனது மனம் பரபரக்க,



அடுத்து என்ன செய்து அவளை சமாதானம் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தவனை கலைத்தது, நடப்பவற்றை வேடிக்கை பாத்துக்கொண்டிந்தவர் குரல்.



"என்ன ஸ்ரீ! மச்சினிச்சி கூடவே பேசிட்டிருந்தா.... வீடு தேடி வந்தவங்ஓ கூடல்லாம் எப்போ பேசுவீங்க?." என்ற மாணிக்கத்தின் குரலில் தான்... அவரை கவனித்தவன்,



"ஓ... சாரி.... நான் கவனிக்கவே இல்ல. எப்போ வந்திங்க அங்கிள்?" என்று அவரருகில் சென்றவன் விழிகளோ லைியையை மேய்ந்தது.



அவள் தான் கோபத்தில் திரும்பிக் கொண்டாளே!



அவரை பரஸ்பரமாக விசாரித்தவன், நீங்க பேசிட்டிருங்க... நான் ரெப்ரெஸ் ஆகிட்டு இப்போ வந்திடுறேன்." என்று மாடிக்கு தாவிக்குதித்து ஓடினான் ஸ்ரீ.



கூறியதைப்போல சில நிமிடங்கள் கழிந்து வந்தவன்,



மாணிக்கத்திடம் சிறிது ஊரை பற்றியும், அங்குள்ள நிலமைகளையும் விசாரிக்க,



அவர்களது உரையாடலின் சுவாரசியத்தில் நேரம் கடந்து செல்வதை ஈஸ்வரி தான் கவனித்தார்.



"பேசின வரைக்கும் போதும்... வாங்க சாப்பாட்டுக்கு நேரமாச்சு. சாப்பிட்டதுக்கு அப்புறம் நிதானமா உக்காந்து பேசக்கலாம்.



விஜயா சரியான நேரத்துக்கு மருந்து எடுத்துக்கணும்.... சாப்பிட்டா தான் மருந்தே எடுத்தக்கலாம். இல்லனா செரிமான பிரச்சினை வந்தா, பாவம் அவளுக்கு தான் கஷ்டமாகிடும்." என்று நினைவு படுத்தியவர்,



"யம்மாடி! உன் பேரு என்னடா... தேனு தானே?" என அவளிடம் வினவ ஈஸ்வரியிடம்.



ஆம் என்பதைப்போல் தலையசைத்தாள் அவள்.



"பயணக்களைப்போடயே நிக்கிறியே... உடம்புக்கு அசதியா இருக்காது.? அதுவுமில்லாமல் இன்னைக்கு நைட்டுக்கு இங்க தான் தங்கிறதா அப்பா ஒத்துக்கிட்டாரு.



அசதி தீர போய் குளிச்சிட்டு வா" என மைலியிடம் திரும்பியவர்,



"மைலி குளிச்சிட்டு இவ மாத்திக்க உன்னோட ட்ரெஸ்ல ஒன்னு குடும்மா!." என்றவர் பேச்சை மறுக்காமல் மைலியும் தன் அறையினில் சென்று எடுத்து வந்துகொடுத்தாள்.



குளித்து விட்டு பத்தே நிமிடத்தில் அவளும் வந்து விட்டாள்.



"மாணிக்கம் பொண்ணு வந்தாச்சு. வாங்க சாப்பிடலாம்." என்று



அழைத்து உணவினை பரிமாற தயாராக.



"பாட்டிம்மா.....! நீங்க உக்காந்து சாப்பிடுங்க. நானே பரிமாறுறேன்." என்றவள்,



முன்பிருநத ஸ்ரீயை கண்டு கொள்ளாது கடந்து சென்று அனைவருக்கும் பரிமாறி இறுதியாகவே அவனிடம் வந்தவள்,



ஒரு இட்லியை மட்டும் அவன் தட்டில் வைத்து சாம்பாறை ஊற்ற,



'என்ன இது' என பரிதாபமாக பார்த்தவனை கண்டு கொள்ளாது விலகி நின்று கொண்டாள்.



எதேர்ச்சையாக திரும்பிய இந்திரா கண்ணில் ஸ்ரீயின் தட்டிலிருந்த இட்லியையும், ஸ்ரீயின் பரிதாபமான பார்வையையும் கண்டவர்,



'மாப்பிள்ளைக்கு ஒரு இட்லி வைச்சிருக்கா.



ஏன் வேற இட்லி இல்லையா?' என நினைத்தவராய் இட்லி பாத்திரத்தை எட்டி பாத்தவர், பாதி பாத்திரம் நிறைய இட்லி தெரிய.



"இட்லி தான் தாராளமா இருக்கே மைலி...! வைம்மா." என்க.



"அதானே!" என்பது போல் தனக்கு பரிந்து பேச வந்த அத்தையின் பேச்சுக்கு வேகமாக தலையசைத்த ஸ்ரீயினை முறைத்த மைலி.




"ஆ.... இவரு கேட்டதும் தந்திடுவேனா! இவரு செய்த வேலைக்கு இப்பிடி பட்டினி போட்டா தான் சரியா இருக்கும்மா!



இனிமேல் என்ன செய்யிறதா இருந்தாலும் நல்லா யோசிச்சு செய்யணும்.



நியாயமா பாத்தா... இந்த ஒன்னே இவருக்கு வைச்சிருக்க கூடாது.



பாவம் வெறும் வயித்தோட படுக்க கூடாதுனு தான் இதையே போட்டேன்." என்றவள் பேச்சு புரியாத இந்திரா,



"என்ன மைலி சொல்ற..? என்னத்தில விளையாடனும்னு இல்லையா?



சண்டைனா... சாப்பாட்டில தான் பழி தீர்கணுமா? பகல் முழுக்க சம்பாதிச்சிட்டு வந்து சாப்பிடனும்னு உக்காந்தா.. இந்த மாதிரித்தான் செய்வியா?



ஒழுங்கா சாப்பாட்டை வை..!" என்று கோபமாக மைலிக்கு கட்டளையிட்ட தாயிடம் குற்றவாளியாக நி
ன்றவள் மனமோ..



'ஆ.. ஊ... னா என்ன குத்தம் சொல்லுங்க. இவரு மட்டும் என்னவும் செய்வாரு... நான் பாத்திட்டு இருக்கணுமா?



என்னோட சாக்லேட்ட பெரிய பாசமான அத்தான் கணக்கா தூக்கி அவளுக்கு வழங்கினாருல. பட்டினியே கிடக்கட்டும்.



ஒரு நாளைக்கு ஒரு இட்லி திண்ணா ஒன்னு உயிர் போயிடாது.



அவளுக்கு தான் வேற சாக்லேட் வாங்கி கொடுக்குறார்ல.



இன்னைக்கு மட்டும் என்ன புதுசா என்னோடத அவளுக்கு குடுக்கணும்?



அது எனக்குனு வாங்கிறது.



எனக்குனு மட்டும் இருக்கிற உரிமைய யாருக்கும் நான் விட்டு தரதா இல்ல.



என்ன தைரியமிருந்தா... என்னோடத தூக்கி அவளுக்கு குடுத்திப்பாரு.



அப்பிடினா அவளுக்கு அப்புறம் தான் நானா?



மூஞ்சிய பாரு...! எதுவுமே தெரியாத பாப்பா மாதிரி அப்பாவியா வைச்சிகிட்டு.



இப்பிடி இருந்தா மட்டும் அதிகமா சாப்பாடு போட்டிடுவேனா?



அம்மா இல்ல ஆண்டவனே சொன்னாலும் இன்னைக்கு இந்த ஒரு இட்லியை தவிர எதுவுமே தரதா இல்லை.' என்று கடித்திருந்த பற்களுக்கு நடுவே முணுமுணுத்தவள் பேச்சு அருகிலிருந்த ஸ்ரீயிற்கு தெளிவாகவே கேட்டது.




'அடிபாவி! ஒரு சாக்லேட்டுக்காடி இந்த வெறி....? நான் தெரிஞ்சு செய்தவன் மாதிரில நடந்துக்கிறா' என நினைத்தவாறு அவளை கெஞ்சுவது போல பார்க்க.



"சொல்லிட்டிருக்கேன்ல மைலி... சாப்பாட்டை வை!" என
கண்டித்தார்.



"என்னம்மா நீ! சும்மா வை வை என்கிற? உனக்கென்ன தெரியும். எனக்குத்தான் என்னோட வயித்தெரிச்சல் தெரியும்." என்று மைலியும் கொஞ்சம் சத்தமாகவே கூறினாள்.



"என்ன வயித்தெரிச்சல்? வர வர உனக்ஙு சேட்டை கூடித்தான் போச்சு. " என்ற இந்திராவையும், தங்கள் வாதத்தினையே கேள்வியோடு வேடிக்கை பார்த்தவாறு உண்டவர்களையும் கண்டவளுக்கு



தனது பிழை என்னவென்று புரிய.



என்ன சொல்லி தன்மேல் தான் தவறு என்பது போல் பார்ப்பவர்களை திசை திருப்பலாம் என யோசித்தவள்,



சற்று முன் விஜயாவிற்கு செரிமான பிரச்சினை என்று கூறிய பாட்டியின் நினைவு வர,



"என்னங்க.... எதுக்கு பேசாம அமைதியாவே இருக்கிங்க? அம்மா நான் தான் உங்கள நான் பழிவாங்கிறது போல, பேசுறது உங்களுக்கு தெரியலையா..?



ஏன் ஒரு இட்லி வைச்சேன் என்கிற காரணத்தை உங்க வாயல தான் சொன்னா என்ன?" என்று அவன் மேல் குறைபடுவது போல ட்ராமாவை அரங்கேற்றியவளை,




'என்னத்தடி சொல்ல....? இத்துப்போன சாக்லேட்டை மாத்தி குடுத்துட்டேன். அதனால தான் வைச்சு செய்றான்னு சொல்லவா..?' என்பது போல் அவளையே பார்த்தான்.



"என்னங்க சொல்ல சொன்னா என்னையே பாக்கிறீங்க? சொல்லுங்க." என்றவள்,
"இப்போ என்ன?... என் வாயலையே அதையும் சொல்லணுமா? சரி நானே சொல்லுறேன்.



நைட்டு புல்லா நெஞ்சு கரிக்குதுன்னு ஒரு கண் தூங்கவே விடலம்மா...!
லைட்டை போட்டு சுடுதண்ணி குடு! அதை எடு! இதை எடுன்னு ரொம்பவே தானும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டபடுத்திட்டாரு.



அது தான் லைட்டா சாப்பிடா.... இந்த பிரச்சினை வராது. என்னால தினமும் இவரு கஷ்டபடுறதை பார்க்க முடியாதுன்னு தான் ஒரு இட்லி வைச்சேன்." என்றவளை தேனுவும், இந்திராவும் நம்பாத பா
ர்க்க.



"என்னங்க.... நான் சொன்னா இவங்க நம்பவே மாட்டாங்க. நீங்களே சொல்லுங்க." என்றவளை பாவமாகவே பார்த்தவன் ,



தன்னை பட்டினி போட தன்னையே துணைக்கு அழைப்பவளை மீறி உண்மையை தான் ஸ்ரீயால் சொல்லிட முடியுமா?



அப்படி சொன்னாலும் அதன் காரணம் இது தான் என தெரிந்தால்,



ஒரு சாக்லேட்டுக்காக சண்டை போட்டுக்கொள்கிறீர்களே! இது தான் உங்கள் அன்னியோன்னிய தம்பதிகள் லட்ஷனமா? என கேட்டு விட்டால், அவனால் என்ன சொல்லி அவர்களை சமாதானம் செய்ய முடியும்.
?



இதே போல தானே மைலியை பல தடவைகள் எல்லோர் முன்பும் மாட்டிவிட்டு திணறடித்திருக்கிறான்.



இன்று தான் தன்னால் அவள் அனுபவித்த கஷ்டம் அவனுக்கும் புரிந்தது.


"ஆமாத்தை நைட்டு ரொம்ப மைலியை படுத்தி எடுத்திட்டேன்.



அது தான் அவ பயத்தில வைக்க பயப்படற." என்று அந்த இட்லியை பிட்டு சாப்பிட ஆயத்தமானான்.



அவனை பார்த்து அது என்பது போல் உதட்டினுள் சிரித்தவள் மனதின் ஓட்டம் புரியாமல்
,



"என்னதான் இருந்தாலும் ஒரு இட்லி என்கிறது கொடுமைடி! இன்னொன்னு வையி! அப்புறம் நடு சாமத்தில பசி எடுக்க போகுது." என்க.



"அது ஒன்னும் பசிக்காதும்மா! தூங்கும் போது பால் குடிச்சிட்டு தானே தூங்குவாரு.... நீ சாப்பிடும்மா." என்க.



ஸ்ரீயை பாவமாக ஒரு பார்வை பாத்தவாறே உண்டார் இந்திரா,



விஜயா மட்டும் இவர்களது கண்ணாம்பூச்சி ஆட்டம் அறிந்ததனாலோ, இல்லை அவர் இருந்த மனநிலையினாலோ எதுவும் பேசாமல் சாப்பிட்டவர், கையினை கழுவிக்கொண்டு தனது அறையினுள் முடங்கிவிட,



உண்டு முடித்தவர்கள் முன்வந்த ரங்கசாமி.



"மாணிக்கம் உனக்கு பயணக்களைப்பா இருக்கும்... உன் பொண்ணை அழைச்சிட்டு போய் தூங்கு.



மீதியை நாளைக்கு பேசிக்கலாம்." என்றார்.



உண்மையில் மாணிக்கத்திற்கும் அசதியாகவே இருந்ததனால் மறுக்காமல்,



இரவு வணக்கம் கூறியவர் தனக்கு ஒதுக்கியிருந்த அறையினில் தேனுவையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.



விஜயாவிற்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்த மைலி,



"அம்மா எதையுமே மனசில போட்டு குழப்பிகிட்டு, வருத்தத்தை சம்பாதிக்காதிங்க. எல்லாமே நீங்க ஆசைப்பட்டது போல சீக்கிரம் சரியாகிடும்." என்று போர்வையை அவர் இடை வரை இழுத்து விட்டவள்,



"அப்புறம் சீக்கிரம் யாரோட உதவியும் இல்லாமல் எழுந்து நடக்கிற வழியை பாருங்க.



என்னாலல்லாம் தனியா உங்௧ பேரனோட மல்லுக்கட்ட முடியாது." என்று வெட்கம் கலந்த புன்னகையோடு கூறியவள் வெளியேற திரும்ப,



அவள் விலகிச் செல்வதை உணர்ந்த விஜயா அவளது கைகளை பற்றி அவளை நம்பாத பார்வையோடே.



"மைலிம்மா...! நீ உண்மையா தான் சொல்றியாடா?" என்று அவரை மீறி கசிந்த கண்ணீருக்கு மத்தியில் புன்னகையோடு வினவ.



தன் மேல் இருந்த அவரது கையினை அகற்றியவாறே,
"ம்ம்ம்..." என்று தலையசைத்தவாறு வெளியே ஓடியே விட்டாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
வாவ் சூப்பர் தேனு மைலி மனச களைச்சு விட்டு நாரதர் கழகம் நன்மையில் முடியும்னு சொல்லாம சொல்லிட்டா 😀😀😀😀😀😀😀😀
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வாவ் சூப்பர் தேனு மைலி மனச களைச்சு விட்டு நாரதர் கழகம் நன்மையில் முடியும்னு சொல்லாம சொல்லிட்டா 😀😀😀😀😀😀😀😀
Thanks akka
 
Top