• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நாட்கள் தானாக நகரத்தொடங்கியது. அன்று விடுமுறை நாள்.

காலை உணவினை உண்டுவிட்டு, தன் அறையினில் அடைந்துவிட்டாள் வைஷூ.





டீவியினை ஆன் செய்து செய்திச்சேனலில் சுதாகர் மூழ்க,



வீட்டின் அழைப்பு மணியோ பலமுறை அடிப்பதை, சமையல் அறையில் பாத்திரம் உருட்டிக்கொண்டிருந்த வாணியின் காதினில் கேட்டதே அன்று, அருகில் இருந்த சுதாகரன் காதினில் விழவே இல்லை.





கணவன் இருக்கிறார், அதை கவனித்துக்கொள்வார் என நினைத்து, வாணியும் சிறுது நேரம் பொறுத்துப்பார்த்தார்.

அதற்குமேல் சரிவாராதென நினைத்து.. வெளியே வந்து எட்டிப்பார்த்தார்.







சுதாகரனோ டீவியில் மூழ்கியிருப்பதை கண்டு,





"ஏங்க...! ஹாலிங்க் பெல் அத்தனை தடவை அடிக்குதே... பக்கத்தில தானே இருக்கிங்க. எட்டிப்போய் யாருன்னு தான் பாக்கிறது...? அதையும் நான் வந்து தான் பாக்கணுமா?" என கணவனை ஏசியவாறு, கதவினை திறந்தவர் வாசலில் நின்றவர்களை கண்டு அதிசயத்தே போனார்.





" நீங்களா? உள்ள வாங்க உள்ள வாங்க." என மிகுந்த சந்தோஷத்தோடு வரவேற்றவர் குரலில், யாரென திரும்பி பார்த்த சுதாகரன், கையில் தாம்பூலத்தட்டோடு நின்றவர்களை கண்டு,



மனதில் கேள்வி எழுந்தாலும், அதை தூரப்போட்டுவிட்டு,

தானும் அவர்களை வரவேற்று.. நலன்களை கேட்டறிந்தவர்.





" அப்புறம் என்ன திடீர்ன்னு குடும்பத்தோட இவ்ளோ தூரம்? வீட்டில ஏதாவது விசேஷமா?"







"ம்ம்..... அதுக்குத்தான் வந்திருக்கோம்." என்ற ரஞ்சனி.





"வைஷூ எங்க காணோம்?" என கண்களால் வலைவிரித்தவாறு வினவ.







"அவ இப்போ தான் சாப்பிட்டு ரூம் போன.. இருங்க கூட்டிட்டு வறேன்." என படியேற போனவரை,





"இல்லை வேணாம்.. அவ நிதானமாவே வரட்டும்.. நாங்க உங்கள பார்க்கத்தான் வந்திருக்கோம்." என்ற ரஞ்சனியை அவர்கள் புரியாது நோக்க.







"அது... வந்து.. உங்க பொண்ணை எங்க பையனுக்கு பேசி முடிக்கலாம்ன்னு தான் வந்திருக்கோம்." என்றவர் வார்த்தை கேட்டு கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,







"என்னடா..! இவங்க வைஷூவ விட்டுக்குடுக்கிற மாதிரி விட்டு குடுத்துட்டு.. இப்போ பொண்ணுகேட்டு வந்திருக்கோம்ன்னு தப்பா நினைக்காதிங்க.





இது எங்களோட ஆசை மட்டும் இல்லை... வைஷூவ பெத்தவங்களோட ஆசை..



அவ பிறந்தப்பவே ஆதிதான் வைஷூவ கட்டிக்கணும்ன்னு அப்பவே முடிவு பண்ணிவைச்சிருந்தோம்.







இடையில என்னன்னமோ ஆகிப்போயிடிச்சு.

ஆனா இப்பவரைக்கும் ஆதியும், வைஷூவும் ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சிட்டு தான் இருக்காங்க.





அதை அவங்க வாயால சொல்லலைன்னாலும், பெரியவங்க நாங்க தானே அதை புரிஞ்சிக்கிட்டு அவங்க ஆசைய நிறைவேற்றி வைக்கணும்." என எடுத்துக்கூற.





ஆதியை திரும்பி பார்த்தார் சுதாகரன்.



அவர் பார்வை தன்னை நோக்கி திரும்பியதும், வெட்கத்தில் தலைகுனிந்து கொண்டவன் செயலே கூறியது வைஷூவை அவன் விரும்புவது.







இது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.



அந்த நந்தன் வைஷூவின் நெஞ்சுப்பகுதியை குறிபார்த்து சுடும்போது அவள் குண்டினை தான் வாங்கியதும், சூடுபட்டு சுயநினைவின்றி கிடந்தவளை, தானும் காயம்பட்டதை மறந்து,



பதட்டத்தோடு அவளை தூக்கிக்கொண்டு ஓடியதும்,

தன் சிகிச்சையை பாதியில் விட்டுவிட்டு, தன் சோர்ந்த உடலினை கூட பொருட்படுத்தாது, அவளுக்கு சாதகமான ஆதாரங்களை திரட்டியது. என அவன் அவளுக்காக துடித்த துடிப்பே கூறியது வைஷூவின் மேல் ஆதி உயிரையே வைத்திருக்கிறான் என்பதை.







ஆனால் அதே அளவிற்கு வைஷூ வைத்திருப்பாள் என்பது அவருக்கு சந்தேகமாகவே இருந்தது.

ஏனென்றால் அவள் எந்த இடத்திலும் ஆதி தனக்கு முக்கியமானவன் என்பதை உணர்த்தவில்லை.







அவ்வளவு ஏன்? மனநலமருத்துவ மனையிலிருந்து விடுதலையாகி வரும் போது கூட, ஆதியை அவள் காதலா ஒரு பார்வை பார்க்கவில்லையே!





அன்று ரஞ்சனி தம்மோடு வரும்படி அழைக்கும் போது கூட, அவர்கள் எல்லோரையும் விட தாம் தான் முக்கியமென கூறினாளே!



இவர்கள் கூறுவத போல் ஆதிமேல் காதல் இருந்திருந்தால், அந்த வார்த்தை கூறியிருக்க மாட்டாள். என்றே தோன்றியது.







"நீங்க சொல்லுறது உண்மையாவே இருக்கட்டும். ஆனா வைஷூ மனசில ஆதியிருக்காருன்னு எப்பிடி சொல்லுறீங்க? அவ அப்பிடி எங்கேயும் காமிச்சுக்கலையே!"





"உங்ககிட்ட அவ காமிச்சுக்காம இருக்கலாம் சுதாகர். ஆனா பலதடவை நான் பாத்திருக்கேன். வைஷூ வீட்டுக்கு வந்த புதுசில, ஆதி அனிகிட்ட நெருக்கமா இருக்கிறப்பல்லாம், அவ கண்ணில தான் அந்தமாதிரி இருக்க முடியலங்கிற அந்த ஏக்கத்த பலதடவை பாத்திருக்கேன்.







அதுவுமில்லாம.. ஆதி அவளை பலதடவை நெருங்கியிருக்கான்.





ஆனா அதுக்கு வைஷூ தடை போடல்ல.. ஏன் ஒரு கண்டிப்பான பார்வை கூட பாக்கல.. ஒருவேளை ஆதிமேல விருப்பமில்லன்னா, எங்ககிட்ட வந்து.. ஆதி தப்பா நடந்துக்கிறான்னு சொல்லியிருப்பாளே....!





ஆனா அவ அப்பிடி பண்ணல... அந்த மோதிரத்தை எந்த சந்தர்ப்பத்தில கண்டுபிடிச்சான்னு, ஆதி சொல்லும்போது தானே எங்களுக்கே அந்த விஷயம் தெரிய வந்திச்சு.







அவமனசில ஆதிதான் தன்னோட கணவன்னு எப்பவோ பதிஞ்சிடிச்சு சுதாகர். அதனால தான் அவனோட ஒவ்வொரு தொடுகையையும் அவளால தப்பா எடுத்துக்க முடியல.





ஆதி சின்னவயசில அவளுக்கு போட்டுவிட்ட மோதிரத்தை விரல்ல மாட்ட முடியாததனால தான், கழுத்தில மாட்டியிருக்கா... இதை விட வைஷூ மனசில ஆதியிருக்கான் என்கிறத நிரூபிக்க என்ன வேணும் சொல்லுங்க?" என்றார்.









அப்படி என்றால் தன் உறவுகளை பிடிக்காது, அவர்களை விட்டு தம்மோடு வரவில்லை. தங்கள் மனம் வருந்தக்கூடாதே என்பதற்காகத்தான் தன் காதலைக்கூட மறைத்துவிட்டு வந்திருக்கிறாள்.







'தன் இரத்த உறவை காட்டிலும், தன்னை யாரென தெரியாதபோதே ஆதரவளித்து, உண்மையான அன்பை பொழிந்த தாம் தான் அவளுக்கு முக்கியமென அந்த இடத்தில் நிரூபித்தருக்கிறாள்.' என நினைக்கும் போதே அவர்கள் மனம் குளிந்து தான் போனது.







தாம் எந்த இடத்திலும் அவளிடம் காட்டிய அன்பில் பொய்யில்லை என்பதை உணர்ந்தால் மட்டுமே, அத்தனை அன்பான சொந்தங்களையும் தமக்காக உதறி எறிந்துவிட்டு வரமுடியும்.







இப்படி முழுமையாக தம்மையே நம்பும் அவளுக்கு, அவர்களால் என்ன செய்ய முடியும்? அவள் ஆசைப்பட்டவனை வாழ்க்கை துணையாய் அமைத்து தருவதை அன்றி...





"இன்னும் என்ன யோசிச்சிட்டிருங்கிங்க?. இதில யோசிக்க எதுவுமில்லையே!"





" இங்க பாருங்க சுதாகர்! ரஞ்சி சொன்னது போல, எங்க வீட்டு பொண்ணா வைஷூவ கூட்டிட்டு போக நாங்க இங்க வரல்ல...



ஆனா உங்க வீட்டு பொண்ணை.. எங்க வீட்டு மருமகளா முறைப்படி அழைச்சிட்டு போகத்தான் வந்திருக்கோம்.





இன்னைக்கு இல்லன்னாலும், என்னைக்கோ ஒரு வீட்டுக்கு வாழப்போறவ தானே! அது ஏன் எங்க வீடா இருக்க கூடாது?" என்றவர் பேச்சை கவனித்திருந்த இருவருக்கும் அதே தான் தோன்றியது.





"ம்ம்...." என சிந்தனையிலிருந்து தெளிந்தவராய்,





"அப்புறமென்ன.. வந்த வேலைய விட்டிட்டு சும்மா பேசிட்டிருக்கிங்க. வாணி...! நீயும் சீக்கிரம் ஒரு தட்டை ரெடி பண்ணி.. எடுத்திட்டு வா..! நல்ல நேரம் முடியுறத்துக்குள்ள தட்டை மாத்திக்கலாம்." என்று தன் சம்மதத்தை சுதாகரன் வெளிப்படுத்த,

அத்தனை பேர் முகத்திலும் சந்தோஷம்.





அனி ஒரு படிமேல சென்று,



"ஆன்ட்டி நானும் உங்களுக்கு உதவி பண்ண வரலாமா? ஏன்னா என்னோட அக்காவ கையோடயே கூட்டிட்டு போகணும்." என்றாள்.







"அதெப்பிடி? தட்டை மாத்தினா எல்லாம் சரியாச்சா? அதெல்லாம் முடியாது. என்க வீட்டில இருந்து முறைப்படி தான் பொண்ணை அனுப்பி வைப்போம்.





அதுவரைக்கும் அவ எங்க வீட்டு பொண்ணு." என பொய்யாக முறுக்கிக்கொண்ட சுதாகரனின் தோள்களில் செல்லமாக தட்டிய வாணி.





"அவதான் சின்னப்பொண்ணு..! விபரம் தெரியாம பேசுறா! அதை எடுத்து சொல்லித்தராம, ரொம்பத்தான் காறார பேசுறீங்க.





என்ன உங்க வீட்டு பொண்ணுன்ன திமிரா?" என கணவனின் வம்புப்பேச்சு புரிந்தும் அனிக்காக பொய்யாக வாதாடியவர்,







"நீ வாம்மா! ஆன்ட்டிக்கு வந்து உதவி செய்! என்று தன்னுடன் அழைத்துசென்று.. தட்டுடன் வெளிவந்தார்.





"நாள் பாத்து தானே வந்திருக்கிங்க?"





"ம்ம் நாள் மாத்திரமில்ல நேரமும் பாத்திட்டு தான் வந்திருக்கோம். பத்தரையில இருந்து.. பன்னிரண்டு வரை நல்ல நேரம் தான்.. தட்டை மாத்திட்டு, இங்கேயே சாப்பிட்டு தான் ஊருக்கும் கிளம்புவோம்.







அதனால சீக்கிரம் தட்டை மாத்திட்டு, சமையல் வேலைய ஆரம்பிங்க." என பிரகாஷ் அவசரப்படுத்த,

அவரது பேச்சிலிருந்த கேலியினால் புன்னகைத்தவர்கள், தட்டினை ஒருவரை ஒருவர் மாற்றிக்கொண்டனர்,







"சரி நீங்க பேசிட்டிருங்க. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வறேன்." என சமையலறை புகுந்தவர் பின்னாலே.







"நானும் வரேன் ஆன்ட்டி!" என அனியும் வால் போல் தொற்றிக்கொண்டாள்.







"அப்புறம் எப்பிடி சம்மந்தி வேலை எல்லாம் போயிட்டிருக்கு.?"





"சும்மா வழக்கம் போலதான் பிரகாஷ்." என தங்கள் பேச்சை ஆரம்பித்திருந்தனர் இருவரும்,

ஆதிக்கு ஏனோ அங்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் யாரை காண ஆவலோடு வந்தானோ.. அவள் இதுவரை அவன் கண்ணில் விழவில்லை.



அழைத்துக்கொண்டு வருகிறேன் என சொன்ன கலைவாணியையும் தடுத்துவிட்டார் பிரகாஷ்.



இப்போது தன்னவளை காணாத கவலையில் அமர்ந்திருந்தவனுக்கு, வீட்டுக்கு போவதற்கு முன்னர் பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கை இல்லாது போனது.









"க்ஹூம்..." என செருமி பேச்சில் மூழ்கியிருந்தவர்களிடம், தானும் அங்கு இருக்கிறேன் என அடையாளப்படுத்தியவன்,







"வீடு அழகா இருக்கே! நான் வீட்ட சுத்தி பாக்கலாமா?" என்றான்.





"இதென்னா கேள்வி.? இதுவும் உங்க வீடுதான் மாப்பிள்ளை.! தாராளமா பாக்கலாம்.

சொல்ல மறந்திட்டேன் மாப்பிள்ளை! மாடியில இருக்கிற ரெண்டாவது அறைக்கதவை மட்டும் தட்டிடாதிங்க, ஏன்னா. அங்க தான் வைஷூ அறையிருக்கு." என கூறியவருக்கு தெரியும், அவன் வைஷூ எங்கிருக்கிறாள் என அறியத்தான் வீட்டை சுற்றிப்பார்பதாக கேட்கிறான் என்று.





அவரும் வந்ததிலிருந்து அவனை கவனித்துக்கொண்டு தானே இருக்கிறார்.





எங்கேயாவது வைஷூ தெரிந்து விடமாட்டாளா? என பார்வையால் அந்த வீடு முழுவதும் அளந்ததை.

அதனால் தான் மகள் இருக்குமிடத்தை பூடகமாக கூறினார்.





"அப்பிடியா சார்? நீங்க சொன்னது நல்லதா போச்சு..



ஏன்னா நானும் அவளை தான் ரொம்ப நேரமா தேடிட்டிருந்தேன்." என சுதாகரனின் கிண்டல் புரிந்து, உண்மையை கூறயவன், மாடிப்படி ஏறப்போக,





"இது தப்பு மாப்பிள்ளை! கல்யாணமாகிறத்துக்கு முன்னாடி, பொண்ணை தனிமையில காணப்போறது தப்பு."







"எனக்கும் அது தெரியும் சார்.

நான் இப்போ பார்க்க போறது. உங்க பொண்ணு வைஷூவ இல்ல.



நான் ஏற்கனவே பெரியவங்க சாட்சியாவும், மழை சாட்சியாவும் மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட என் பொண்டாட்டி அம்முவ..." என ஓடியவனை பார்த்து பெரிதாக நகைத்தவர்,







"மாப்பிள்ளை..! இனி இந்த சார் என்கிறது வேண்டாம். மாமான்னே கூப்பிடுங்க. அப்போ தான் என் பொண்ண உங்களுக்கு கட்டித்தருவேன்." என சிரிப்பினூடே கூறியது அவன் காதில் விழுந்தால் தானே!





வைஷூ அறை கதவை திருகிக்கொண்டு உள்ளே சென்றான்.





அங்கு யாருமில்லை.. ஆனால் பெரிதான சத்தத்தில் டீவியில் இடைக்கால பாடல் ஓடிக்கொண்டிருந்தது.





"டீவிய இவ்ளோ சத்தத்தில போட்டிட்டு எங்க போனா?" என கதவின் வெளியே எட்டிப்பார்த்தவன் கண்களில் யாருமே விழவில்லை.





யோசனையோடு கதவினை சாத்திவிட்டு, உள்ளே வந்து டீவியின் சவுண்டினை குறைத்து விட்டவன் காதில், பக்கத்து அறையிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.





அதை வைத்தே அவள் பாத்ரும் சென்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்.

அவள் வரவை எதிர் பார்த்து, கட்டிலில் அமர்ந்து ஓடிக்கொண்டிருந்த டீவியில் கவனத்தை பதித்தான்.





ஈரமான முகத்தினை டவலினால் துடைத்தவாறு வெளியே வந்தவள், கட்டிலில் இருந்தவனை கண்டுவிட்டு, உதட்டை ஓரம் இழுத்து பழிப்பு காட்டியள், முகத்தினில் எவ்வித சலனமும் இருக்கவில்லை.







முகம் துடைத்த டவலினை அவன் அருகில் கொண்டு வந்து போட்டவள்,





"இப்போ என்ன பிரச்சினைன்னு என்னையே சுத்திட்டிருக்கிறீங்க?

என்னை தான் மொத்தமா வெறுத்திட்டிங்கல்ல..



அப்பிடியே விட்டுடவேண்டியது தானே! இந்த மாதிரி ஒரு நாளைக்கு எத்தனை ட்ரஸ் தான் மாத்திட்டு.. என் முன்னாடியே சுத்துவீங்க?"





"எங்க பாத்தாலும் உங்க உருவம் தெரியிறதனால, என் கண்ணில தான் பிரச்சினையோன்னு.. நூறு தடவை மூஞ்சிய கழுவிட்டேன்.

இதுக்கு மேல முடியாது..



முதல்ல என் முன்னாடி வராம போயிடுங்க." என கண்ணாடியின் முன் நின்று பொட்டை வைத்தவாறு, நிழலென நினைத்து நிஜத்தினை திட்டத்தாெடங்கினாள்.







அவளது பேச்சில் உண்டான புன்னகையினை அதிகமாக வெளிக்காட்டாது, குறு நகையுடன் அவளை நெருங்கியவன், கண்களையே மாறிமாறி பார்த்தவள்,





"என்ன? இப்பிடி நெருக்கமா வந்து நின்னா.. பயந்திடுவேனா? இப்பிடித்தான் பயமுறுத்துறது போல கிட்டவருவீங்க.





நானும் பயந்துபோய் கண்ணை மூடுவேன்...



அப்புறம் கண்ண மூடினதும் காணாம போயிடுறீங்க.

இன்னைக்கு நீங்க காணாம போறத நான் நேர பாக்கணும்." என அவளை நெருங்கியவனிடமிருந்து அசையாது, அவன் கண்களையே நேருக்கு நேர் பார்த்தவாறு நின்றவள்,

இடையினை தன்னோடு இறுக அணைத்தவன்,





அவளை தன் அணைப்பிலேயே வைத்தவாறு, பின்னோக்கி நகர்த்திச்சென்று, சுவற்றோடு சாய்த்து நசிப்பது போல் நெருங்கி நின்றவன் பார்வையோ, அவளை முழுங்குவதுபோல் இருந்தது.





தன்னை இன்னும் கனவென நினைத்து கேள்வியாய் பார்த்து நின்றவளிடம், புருவங்களை உயர்த்தி.





"எப்படி?" என கேட்டவன் செய்கையில்,





"க்ஹூம்..." என மீண்டும் உதடு சுழித்தவள்,





"என்ன..? இன்னைக்கு இன்னும் மறைஞ்சு போகல?" என்றாள்.





"மறைஞ்சு போறத்துக்கா இவ்ளோ தூரம் வந்திருக்கேன்? அப்பிடியே உனக்குள்ள கரைஞ்சு போகணும்." என்றவன் விழிகளோ அவள் சுழித்த உதட்டினையே வண்டாய் மொய்த்தது.





அவள் இடையிலிருந்த கைகளை விடுவித்து முகத்தினை தாங்கிப்பிடித்தவன்,



பெருவிரல்களில் ஒன்று அவளது சிவந்த உதட்டினை மென்மையாக வருடி, ஒத்திகை பார்த்த மறுநொடியே.. தன் உதடுகளால் அவள் இதழ்களை மென்மையாக, அவள் கண்களை பார்த்தவாறே வருடியவன்,





இறுதியில் அவள் தேனிதழ்களை கவ்வி.. தேன் பருக ஆரம்பித்தவன் கைகளானது, அவள் இடைப்பகுதியை பற்றி.. தன்னோடு இறுக்கிக்கொள்ள, முரட்டுத்தனமாக அவள் இதழ்களில் தேன் பருக ஆரம்பித்தான்.







முரட்டு முத்தத்தில் மூச்சுக்கு திணற ஆரம்பித்தவள், இடையினில் இறுக கிள்ளி விடுவித்தவன்,

தானும் மூச்சினை ஆழமாக எடுத்து விட்டுவிட்டு,







"இப்போ நம்புறியா.? இது கனவில்லன்னு." என்றான்.

அவனது முரட்டு்தனமான முத்தத்திலேயே கனவில்லையென அறிந்தவள், அவன் கேட்ட கேள்வியில் கோபம் கூடிப்போக.. கட்டிலில் கிடந்த தலகணியை எடுத்து அவன் மேல் எறிந்தவள்.





"பொறுக்கி..! யாரை கேட்டுடா.. என் ரூமுக்கு வந்த? வெளிய போ!" என கோபம் கொண்டவள் செயலானது ஆதிக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை.





மாறாக எறிந்த தலகணியை லாவகமாக பிடித்து புன்னகைத்தவன்,



"இது எந்த ஊர் நியாயம்டி? வாங்கிற வரைக்கும் வாங்கிட்டு..., உனக்கு தேவையானது கிடைச்சதும் துரத்துறியா?

இந்த பொண்ணுங்களையே சுத்தமா புரிஞ்சுக்க முடியலடா சாமி!





தூர இருக்கும் போது ஏங்குறது. பக்கத்தில வந்தா.. விரட்டி அடிக்கிறது. என்னமா நடிக்கிறாங்க." என்று சலித்துக்கொள்ள,





"யாரு? யாரு நடிச்சா? நானா? நீங்களா?." என பழையபடி ஒருமையில் இருந்து பன்மைக்கு மாறிக் கேட்டாள்.





"நான் எங்க நடிச்சேன்? நான் எப்பவும் போல தானே இருக்கேன்." என்றவன் பதிலில்.





"ஆமா ஆமா! சொன்னாங்க.. நீங்க எப்பவும் போல தான் இருக்கிங்க. நான் தான் பைத்தியமாச்சே!





உங்க தொடுதலோட அர்தத்தை எப்பவும் தப்பா நினைச்சிட்டிருந்திருக்கேன்.



நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிங்க... நாலு பேரோட பழகியும் இருக்கிங்க.







இதெல்லாம் உங்களுக்கு சகஜமா இருக்கலாம். ஆனா நான் நகரத்தில வளர்ந்தாலும் எனக்கிதெல்லாம் பிடிக்காது.





என்னோட ஆதியத்தான் தொட்டதும், என்மேல இருக்கிற காதலினால தான் தொடுறாருன்னு தப்பா நினைச்சிட்டேன்." என கண்ணை கசக்கியவளை நெருங்க போனவனை தள்ளிவிட்டு,





"என்கிட்ட வராதிங்க.. முதல்ல வெளிய போங்க." என சத்தமிட,





"வைஷூ..! இப்போ எதுக்கு கோபபடுற? நீ கோபபடுறதில அர்த்தமே இல்லையே!."





"ஆமா நான் யாரு உங்ககிட்ட கோபப்பட? எனக்கு உங்ககிட்ட பேச எதுவுமில்லை. பேசவும் விருப்பமில்லை... நீங்க முதல்ல வெளிய போங்க." என சத்தமாக கூற,







"என்னை நீ சரியா புரஞ்சுக்காம பேசிட்டிருக்க வைஷூ. மனசில எதையாே வைச்சிட்டு, என்மேல கோபப்படுற? எதன்னாலும் வெளிப்படையா பேசும்மா!" என சாந்தகாம கேட்டான்,





பொய்யாக ஒரு புன்னகையினை சிந்தியவள்,

"நல்லாவே உங்களை புரிஞ்சுக்கிட்டேன்... ஹாஸ்பிட்டல்ல சாகக்கிடந்த என்னை கொண்டுவந்து போட்டதோட உங்க கடமை முடிஞ்சுதுன்னு போனவரு தானே நீங்க.







அதுக்கப்புறம் செத்துட்டாளா..? உயிரோட இருக்காளான்னு ஒரு தடவை வந்து பாத்திங்களா?





சரி அந்த நேரம் என்னோட கேஸ் விஷயமா ஓடித்தரிஞ்சதனால வரமுடியாதுன்னு வைச்சாலும், ஆறு மாசமா அனாதையா அந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில கிடந்த என்ன, ஏன் ஒருதடவை கூட பாக்க வரல? உங்களையே நினைச்சிட்டு கிடந்தவளை பார்க்க ஒரு நாள்ல. பத்து நிமிஷம் பார்க்க வராதவங்கள என்னன்னு நினைக்கிறது?





நல்லாவே நான் உங்கள புரிஞ்சுக்கிட்டேன். சின்ன வயசில அம்முவா என்னை பிடிச்சிருந்திச்சு உங்களுக்கு.

அதே அம்மு கொலைகாரி வைஷூவா மாறினதும் வெறுத்துட்டிங்க.







அதனால தான் இத்தனை நாளா என்னை நீங்க பார்க்க விரும்பல. இதை கூட புரிஞ்சுக்க தெரியாத முட்டாளில்ல நான். என்னை பார்க்க விரும்பாதவங்க யாரும், யாரோட கட்டாயத்திலயும் என்னை தேடி வரவேண்டாம். வெளிய போங்க." என சத்தமிட்டுவிட்டு முகத்தை மூடி அழு ஆரம்பிக்க.





"அம்மு.....!. நீ என் அம்மு தான்டி! ஏன்டி இந்த மாதிரி பேசுற? உன்னை எப்பிடி நான் வெறுப்பேன்னு நீ நினைக்கலாம்.







இத்தனை வருஷம் உன்னை பாத்திடமாட்டேனான்னு இரவும் பகலும் துடிச்சிட்டிருந்தவன், எப்படி உன்னை வெறுத்து ஒதுக்குவேன்னு நினைச்சா? நான் உன்னை பார்க்க வராததுக்கு ஒரே ஒரு காரணம் தான் அம்மு.





என்னால உன்னை அந்த நிலையில பாக்க முடியாது.

எங்க அந்த நிலையில பாத்தேன்னா மொத்தமா நான் உடைஞ்சு போயிடுவேன்.





அப்புறம் உன்னை சட்டத்தில இருந்து காப்பாத முடியாம போயிடும். இறந்தவங்க பக்கமிருக்கிற குற்றத்தை வெளிய கொண்டு வந்தாத்தான், உன்னை காப்பாத்தலாம் என்கிற நிர்பந்தம். அதனால தான் பார்க்க வரல்லை.







அப்புறமும் பாக்க வராததுக்கும் காரணம் அதே தான் அம்மு. உன்னை அந்த நிலையில பாத்தேன்னா அதை நினைச்சு நினைச்சே செத்திடுவேன்.







எப்படி உன்னை பார்க்காம இத்தனை வருஷம் நீ வந்திடுவேன்னு நம்பிக்கையோட இருந்தேனோ, அதே நம்பிக்கையோட தான் இந்த ஏழு மாசமா இருந்தேன்.







ஆனா நீ மொத்தமா என்னை வேண்டாம்ன்னு தலை முழுகிட்டு வந்திட்டல்ல.





முன்னாடி எப்பிடி உன்னையே நினைச்சிட்டு இருக்கிற என்னைப்பத்தி கவலைப்படாம அத்தனை கொலைகளை செய்தியோ, அதே போல தான் இப்பவும் என்மனச புரிஞ்சுக்காம, என்னை தனிய விட்டிட்டு வந்திருக்க.





நீ ஒரு சுயநலவாதி அம்மு.." என உச்சக்கட்ட விரக்தியில் பேசியவனை ஓடிச்சென்று கட்டிக்கொண்டவள்."







"ஐய்யோ ஆதி..! அப்படில்ல ஆதி! நான்.... நான் நீங்க என்னை பார்க்க வரல்ல. அதனால வெறுத்திட்டீங்களோன்னு நினைச்சுத்தான் திட்டிட்டேன்.



சாரி ஆதி!.". என அவன் நெஞ்சின் மேல் விழுந்து கெஞ்சியவளை சிறிது நேரம் கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்தவன்,



பின் அவளை தானும் இறுக கட்டிக்கொண்டு,



"அப்போ என்னை நம்புறல்ல அம்மு." என்றான்.





"ம்ம் நம்புறேன்." என அவன் முகம்பார்த்து பதில் கூறியவளை விடுவித்தவன்,





"நீ என்னை நம்புறேன்னு எப்படி நான் நம்புறது?" என எதையோ எதிர்பார்த்து கேட்டவன் செயல் புரிந்து போக,





"ச்சீ போட நீ..! எப்போ சான்ஸ் கிடைச்சாலும் விடுறது கிடையாது. திருட்டு பையா!" என தள்ளிவிட்டவளை சிரித்தவாறு கட்டிக்கொண்டவன்,





பட்டாம்பூச்சியாய் மீண்டும் அவள் இதழ் நோக்கி தேன்குடிக்க ஆரம்பித்தான்.

இம்முறை அவளுக்கு மூச்சுவிட இடம்தந்து தானும் சுவாசித்து நிதானமாகவே அந்த மலரை கையாண்டான்.







அதே சமயம் வைஷூ அறை கதவு தட்டுப்படவே, சட்டென விலகிக்கொண்டாள் வைஷூ.
 
Top