• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

48. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அவன் சென்றதும் மறைவில் இருந்து வந்தவளைக் கண்ட துளசி,

"ஏய் நீ என்ன இங்கயிருந்து வர? கேட் அந்தப்பக்கம் தானே!" என்றாள் கேள்வியாய்.


"நான் வரது இருக்கட்டும்........ என்ன உங்கண்ணன் அருவிய திறந்து விட்டு போறாரு?" என கேலி பேசினாலும், அவன் கலக்கம் அவளுக்கும் வருத்தத்தை தந்து என்பதை போகும் அவனையே ஆராய்ந்தவாறு கேட்டவளது விழிகளே கூற,


"ஏன்..... அண்ணா பேசினது எல்லாத்தையும் நீயும் மறைஞ்சிருந்து கேட்ட தானே! அப்புறம என்ன கேள்வி?" என்றவளது எகத்தாளமான பேச்சோ சூரிய இந்தகைய முடிவுக்கு காரணமானவள் மேல் அவள் கோபம் திரும்பியது.

"நான் என்ன பண்ணேன்?" என ஒன்றும் அறியாதவள் போல் கேட்டவள் மேல் எரிச்சல் உண்டாக,

"ஆமாடி ஆமா.......! நீ பேபி பாரு,
இன்னும் ஒரு வாரத்தில உன் வாழ்க்கையே நாசமா போகப்போகு, இன்னும் எதுவுமே தெரியாம இருந்துக்கோ!

தெரியாமல் தான் கேட்கிறேன், உனக்கு இப்போ என்னதான்டி வேணும்?
எதுக்கு இப்பிடியே பண்ணி எல்லாரையும் சாகடிக்கிற? உனக்கு ஒரு நல்லதாவது நடக்கணும்ன்னு நினைக்கிற என் தப்பா....? இல்லை ஒரு ஆம்பளயா இருந்தும், தன் சுயத்தை இழந்திட்டு, நீ அவமானபடுத்துறேன்னு தெரிஞ்சும் உன்மேல வைச்சிருக்கிற காதலினால எப்பவாச்சும் தன் காதலை புரிஞ்சுப்பேன்னு உன்னை சுத்தி சுத்தி வந்தவரு, இப்போ தன்னை உனக்கு பிடிக்கல, இனியும் தான் உனக்கு தொந்தரவா இருக்க கூடாதுன்னு உன்னை மறக்க முடியாம, நாட்டை விட்டு ஓடுறானே அவனோட தப்பா?


உனக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பா? எப்பவுமே உன்னை பத்தி மட்டுமே யோசிப்பியா? என்னைப்பொறுத்தவரை நீ ஒரு சுயநலவாதி.
உன்னை மட்டுமே யோசிக்கிறியே! குட்டிம்மா நிலமையை யோசிச்சு பாத்தியா?
நாளைக்கு அப்பான்னு அவ கதறுறப்போ யாரை கூட்டிவந்து நிறுத்துவ?


அவளுக்காக இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டிட்டு அப்பான்னு அடையாளம் காட்டுவியா.....? அப்பிடியே ஒருத்தன் வந்தாலும் அவனால அவளுக்கு அப்பனாத்தான் இருக்க முடியுமா?

சூரிய தப்பு பண்ணிருக்கான் தான்,
ஆனா நல்லா யோசிச்சு பாரு!
அவன் அப்பிடி நடந்துக்கலன்னா நீ அவனோட காதலை ஏத்திட்டிருப்பியா?
காதலை என்ன.....? அவனிருக்கிற திசை பக்கமே போயிருக்க மாட்ட, அஞ்சலிக்கும் நல்ல அப்பா கிடைச்சிருக்க மாட்டான்.


அஞ்சலி விஷயத்தில ஒரு சித்தப்பன் மாதிரியாடி அவன் நடந்துக்கிட்டான். ஆஸ்திரேலியாவில இருக்குப்போ ஒரு நாளாவது பேசாமா இருந்திருக்காரா?


சரி அவங்கள விடு!

உன் மனசில அண்ணா இல்லன்னு ஒரு வார்த்தை சொல்லு, இந்த பேச்சை இத்தோட விட்டுர்றேன்." என்றாள் அவளை குடையும் பார்வையோடு.

சட்டென அவள் பார்வையிலிருந்து தன்னை திரும்பி கொண்டவளால் பதில் கூறமுடியாது அமைதிகாக்க,


"உன்னால பொய்க்கு கூட அவனை விரும்பலன்னு சொல்ல முடியலல்ல.

அண்ணா நல்லவன்டி!
அஞ்சலி அவன் அண்ணன் மகள் இல்லன்னாலுமே உன்னை ஏத்திட்டிருந்திருப்பாரு.
ஏன்னா....... உன்னை அவர் உண்மையா நேசிச்சாரு,
உன்னை கட்டிக்கிறதுக்கு அவருக்கு தேவைப்பட்டது தான் இந்த காரணங்கள்.


ஒன்னுமே வேண்டாம்டி!
இதை மட்டும் சொல்லு, அவர் உன்னை பார்க்கிறப்போ ஒரு வாட்டியாவது யாரோ மாதிரி உன்னை உணர வைச்சிருக்காரா?

நான் அடிச்சு சொல்லுவேன்.
தன்னோட மனைவி நீ எங்கிற கர்வம் மட்டுந்தான் இருந்திருக்கு.

வார்த்தையே இல்லாம கண்களால காதலை உணர்த்திட முடியுமான்னு அண்ணனை பாக்கும் வரை யாராவது கேட்டிருந்தா சாத்தியமா இல்லன்னு தான் செல்லிருப்பேன்.

உன்னை பாக்கிறப்போ அவர் கண்ணில அவ்ளோ காதல் வழியும், காதல் மட்டுமில்லை,
என்னை மன்னிச்சு ஏத்துக்க மாட்டியா என்கிற ஏக்கமும் கலந்திருக்கும்,

என்னடி உனக்கு வேணும்? அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டது போல, சூரியவும் பண்ணணுமா?
அப்பிடி இருந்தா வாயை திறந்து சொல்லி தொலை!

இதுக்குமேல உனக்கு புரிய வைக்கிற சக்தி எனக்கில்லடி!
தூங்கிறவங்கள மட்டும் தான் எழுப்பலாம்.

இது உன் வாழ்க்கை, நீதான் முடிவு பண்ணணும்,
ஆனா ஒன்னு மட்டும் மறந்திடாத, கையில கிடைச்ச பொக்கிசத்தை இழந்திட்டு, அப்புறம் கவலைப்பட்டு எந்த பலனும் இல்லை.
உனக்கும் இன்னும் ஒரே வாரம் தான் டைம் இருக்கு. அதுக்கப்பறம் அழுது புலம்புறது வேலைக்காகாது.
ஏன்னா அண்ணா ஒரு வாரத்தில பழைய படி ஆஸ்திரேலியா போகப்போறாராம்." என தன் கடமை முடிந்தது என இரண்டடி நகர்ந்தவள், சட்டென நின்று திரும்பி,


"இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டேன், திரும்பவும் இலங்கைக்கு வரமாட்டாராம்."
என்றவள் விறு விறு என வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.


ஒவ்வொன்றாக துளசி எடுத்து சொன்னதும் தான் தன் தவறை உணர்ந்தவள்,
கண்கள் குளங்கட்டி இதோ இமையுடைத்து விடுகிறேன் என்று இருந்த கண்ணீரினை உள்ளிழுத்துக்கொண்டவள்,
வேகமாக தன் வீட்டை நோக்கி நடக்க, அவளை காணாது முற்றம்வரை வந்த வள்ளியம்மாள்,

"என்கிட்ட தா...... நானே தேனீர் போட்டுக்கிறேன்......
மாப்பிள்ளையும் வீட்டுக்கு விந்துட்டாரு, வேலையில ஏதோ பிரச்சினை போல, கண்ணும் கலங்கியிருக்கு.....
கேட்டா தலை வலின்னு சொல்லுறாரு....
தலைவலிக்கு சூட தேனீர் குடிச்சா நல்லா இருக்கும் குடு." என கையினை நீட்டினார்.


துளசி வீட்டில் நடந்த சம்பாசனையில் தான் எதற்கு அங்கு போனேன் என்பதை மறந்து விட்டு, வெறுங்கையோடு வீடு வந்தவளுக்கு, தாய் ஏதோ புரியாத பசை பேசுவது போலிருக்க,
என்ன? என்பதாக முழித்தாள்.


அவள் விழிப்பதை கண்டவருக்கோ அவளது கண்கள் கலங்கி, முகம் வெழுத்திருப்பதைப் பார்த்தும், எதுவோ ஒன்று சரியில்லை என்றே தோன்றியது இருந்தும்,


"துளசி வீட்டுக்கு தேயிலை வாங்கத்தானே போன? என்ன கொடுமையோ? மாப்பிள்ளை தேயிலை பயிர் செய்கிறார். ஆனால் வீட்டில் தேயிலை இல்லை." என கேலி செய்தவாறே,
"கொடு சீக்கிரம்." என்று மீண்டும் கையினை நீட்ட,
அவர் கூறியதன் பின்னர் தான், எதற்காக துளசி வீடு சென்றேன் என்பது நினைவு வந்தவளாக,


"அ.... அது... அக்.. அக்கா வீட்டிலையும் தேயிலை தீந்திடிச்சாம்..... நீங்க காஃபியே போடுங்கம்மா" என்று தட்டுத்தடுமாறி கூறியவள்,


"எனக்கும் தலை வலிக்குதும்மா..... நான் கொஞ்சம் படுத்துக்கிறேன். என்னை தொந்தரவு பண்ணாதிங்க." என்றவாறு உள்ளே சென்றவள்,
சூரிய தன் பெட்டியினை துடைப்பதைக் கண்டவள், துடைத்துக்கொண்டிருக்கும் அவனையே நின்று பார்த்தாள்.


தன் வேலையிலேயே கவனமாக இருந்தவன் அவளை காணவில்லை.


நிமிர்ந்து மட்டும் பார்த்திருந்தானேயானால் நிச்சயம் ஊருக்குத் தயாராகி இருந்திருக்க மாட்டான்.


ஆம் அவள் பார்வையில் 'என்னை விட்டு உன்னால் போய்விட முடியுமா?' என்ற ஏக்கமே இருந்தது.


அவளை கவனியாமல் தன் வேலையில் மூழ்கிப்போயிருந்தவனையும் வதனி தவறாக நினைத்தாள்.
'தன்னைப்பார்க்க பிடிக்காது தான் நிமிர்ந்து பார்ப்பதை தவிர்க்கிறான்.' என்று.


இயலாமையில் அறையினுள் புகுந்து கொண்டவள் கதவினை அடித்துச்சாத்தினாள்.

கதவு சாத்தும் சத்தத்தில் நிமிர்ந்தவன அப்போதே தான் அவளைக்கண்டான்.

அவனும் அவள் தன்னை கண்டதும் தன்னை பார்த்த கோபத்தில் தான் இப்படிச்செய்கிறாள் என்று நினைத்து விட்டு, வீட்டிலே நின்று அவளுக்கு எரிச்சலை உண்டு பண்ண விரும்பாதவனாக, வள்ளியிடம் சென்றவன்,

"நான் வெளியே போய் வரேன் அத்தை. சின்ன வேலை இருக்கு" என்று புறப்பட நினைக்கையில்,


"இருங்க மாப்பிள்ளை. தலைவலின்னே சொன்னிங்க..... காஃபி ஊத்திட்டேன் குடிச்சிட்டே போங்க" என்றார்.

"ம்ம்....." என்ற தலையசைப்புடன் வாங்கியவன், இரண்டு மிடர் குடித்து விட்டு,


"போதும் அத்தை... நான் வரேன்." என்று வெளியேறினான்.


அறையிணுள் நுழைந்தவளுக்கே கோபமாக வந்தது.

"அவ்வளவுக்கு வந்திட்டாரா சார்....? ரொம்பத்தான் ஓவரா பண்றாரு, நானே பாத்தாலும், முகத்தை திருப்பி வைச்சிக்கிட்டு நிக்கிறாரு.....
ஏன் அவர் கண்ணு முன்னாடி நின்ன என்னை தெரியலையாமா?


என்னை தான் சார் தனிய விட்டு ஓடிப்போறதா முடிவு பண்ணிட்டாரே..! அப்புறம் எதுக்கு நான் அவருக்கு?
என்னையும், பொண்ணையும் விட்டுட்டு எப்படி அவரு மட்டும் தனியா அவ்வளவு தூரம் போகணும்னு நினைக்கலாம்....? இது தான் அவரோட லவ்வா..?


நான் தான் பழச நினைச்சிட்டு கோபத்தில கொஞ்சுண்டு பிடிவாதமா இருந்திட்டேன்...., அதுக்காக என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுவாரா? அவரோட காதல் தான் உண்மையான காதலாச்சே...... கொஞ்சம் பொறுத்து போனாதான் என்ன?
எல்லாத்துக்கும் அவசரப்பட்டா எப்பிடி?" என்று புலம்பியவளுக்கு அவளது மனச்சாட்சியே பதில் கூறியது.


"பொறுத்திருந்தா மட்டும் நீ அவனை ஏத்திட்டு இருப்பியா?
துளசி மட்டும் சரியான நேரத்துக்கு எடுத்து சொல்லலன்னா இந்த மாதிரி புலம்பிட்டிருப்பியா?

அப்புறம் அவனா உனக்காக காத்திட்டிருக்க மாட்டேன்னான்....?
ரெண்டரை வருஷம் காத்திருந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை.

நீ ஏத்துப்பியா எங்கிறது தான் கேள்வியே......,
அவனை பாக்கிறப்பல்லாம் முறுக்கிட்டு திரிஞ்சா, எந்த நல்லவனா இருந்தாலும் இதைத்தான் செய்வான்......
முதல்ல அவனை பாத்ததும் முறுக்கிட்டு போறதை நிறுத்து.


அவன் துளசிகிட்ட பேசினதை எல்லாம் கேட்டதுக்கப்புறமாவுமா இந்த மாதிரி பேசற?
இப்ப கூட உன் சந்தோஷத்துக்காகத்தின் நாட்டை விட்டே போறான்...... அதைக்கூட புரிஞ்சுக்க தெரியாத நீயெல்லம் ஒரு பிள்ளைக்கு அம்மா....,
உனக்கே ஒன்னும் புரியலையே, உன் பொண்ணுக்கு எப்படி நாளைக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுப்ப?


சிங்கம் போல சுத்திட்டு திரிஞ்சவனையே அழவைச்சிட்டியே!' என அவள் மனச்சாட்சியே அவளை குற்றம் சுமத்தியது.


'நான் தான் தப்பு பண்றேன்னு தெரியுதுல்ல, நாலு அடி போட்டு புரிய வைக்கிறது.' என்று மீண்டும் முறுக்கிக்கொண்டாள்.

'யாரை உன்னை அடிக்கவா? ஒரு தடவை அடிச்சதுக்கே அவன் ஆயுசுக்கும் பாடம்,
எதுக்கு இந்த விரட்டு கவுரவம்? உன் மனசிலயும் சூரிய மேல காதல் இருக்கு..... அதை உனக்கே தெரியாமல் மறைச்சிட்டிருக்க..... அதை முதல்ல வெளிக்கொண்டு வா...! அப்போ தான் அவனோட உண்மையான அன்பை உன்னால புரிஞ்சுக்க முடியும், அவனை விட உன்னை சந்தோஷம வைச்சுக்க யாராலும் முடியாது.

'இது வரைக்கும் நீ எப்படி வேணாலும் இருந்திருக்கலாம் கீதா!
ஆனா இனி உனக்கு யோசிக்கிறத்துக்கான நேரம் ஏழே நாள் தான்,

இப்போ கூட நீ உணரலனா நிச்சயம் காலம்பூர நீ வாழவெட்டியாத்தான் இருக்குணும். அவனை போக விடாமல் தடுக்க ஒரே வழினா அது உன் காதல் ஒன்னு தான்.' என்று அவளது மனச்சாட்சி அவளுக்கு புரிய வைத்தது.


உண்மை தானே! அவளும் அவன்மேல் காதல் இல்லாமலில்லையே!
ஆனால் அவன் தன்னுடன் இருக்கப்போகும் காலம் வெறும் ஏழே நாள் என்று நினைக்கும் போது தான் அவளாள் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


காலம் முழுவது தன்னுடனே அவன் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.
'எதுக்கு ஒரு வாரம் வரை காத்திருக்கணும்? இப்பவே என் காதலை சொல்லி அவனை நிறுத்துறேன்.' என நினைத்தவளாய், வேகமாக கதவை திறந்து வெளியே வந்தாள்.


முன்பிருந்த இடத்திலா அவனில்லை என்றதும், வீடு முழுவதும் தேடியவளுக்கு அவன் கிடைக்காமல் போகவே, அன்னையிடம் கேட்போம் என வந்தவள்,


"ம்மா..." என்றாள்.

அவளால் சட்டென சூரிய எங்கே என்று கேட்க முடியவில்லை. பின்னே இத்தனை நாட்கள் அவனை கண்டுகொள்ளாதவள் திடீரென அவனை கேட்டால் தவறாக நினைப்பார்களோ என தயங்கி,

"வீட்டில யாரையுமே காணலயே...." என்றாள் பொதுப்படையாக.


"என்னடி...! தலை வலி சரியாகிடிச்சா?" என்க.


"ம்மா..... நான் என்ன கேக்கிறேன், நீ என்னமா என்னை திரும்ப கேள்வி கேட்கிற?.." என்றாள் சினத்தினை காட்டி.


"இப்போ எதுக்குடி சினக்கிற?. நீ தானே தலை வலின்னு சொன்ன...... அதுதான் கேட்டேன்." என்று வள்ளியும் தன் பங்கிற்கு கீதாமேல் சினக்க,


"அது எப்போவோ சரியாகிடிச்சு. நீ சொல்லு. எங்க யாரையும் காணல,"


"யாரையும் காணலனா? அப்போ நான் என்ன பேயா?"

"புஸ்..." என மீண்டும் சினந்தவள்,
உன்னை யாரும்மா கோட்டா? மத்தவங்க எங்க?"


" எதுக்கெடுத்தாலும் எதுக்கு கத்துறது எருமை! குட்டிமா ஏதோ கேட்டு அடம் பண்ணான்னு உன் அப்பா தான் கடைப்பக்கம் கூட்டிட்டு போயிட்டாரு....., மாப்பிள்ளைக்கு வெளிய ஏதோ வேலைன்னு அவரும் கிளம்பிட்டாரு....


அது சரி....! நானும் கேக்கணும்ன்னு நினைச்சேன்...., மாப்பிள்ளை எதுக்கு பெட்டியை துடைக்கிறாரு..., எங்கயாச்சும் கிளம்ப போராரா?" என கேட்ட வள்ளியிடம்.


"ஆ.... உன் மாப்பிள்ளை நாட்டை விட்டு ஓடிடப்போறாராம்." என அவனை காணவில்லை என்ற கோபத்தில் கத்திவிட்டு போய்விட்டாள்.


'என்னாச்சு இவளுக்கு? என்ன கேட்டுட்டேன்னு இப்போ என்மேல எரிஞ்சுவிழற? ஏதோ நான் தான் நாட்டை விட்டு ஓடப்போறது போல, ஏதாவது வேலை விஷயமா அவரு போகப்போறாரு, அதுக்கு இது எங்கிட்ட பொங்கிட்டு போகுது.' என்றவாறு, அவரும் தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.
 
Top