• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

48. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நாட்கள் அதன் பாட்டில் கழிய, மயூவோ பானுவை பார்ப்பதற்காகவே அவளது வீட்டிற்கு ஒவ்வொரு காரணம் காட்டில் தமையனிடம் கூட சொல்லாமல் சென்றுவருவான்.



புஷ்பா அவனை கேள்வியாக பார்த்தால், பக்கத்தில் ஒரு வேலை, அதனால் உங்களையும் பார்த்து விட்டு போக வந்தேன் என்பான்.



மறுநாள் வருவனை காரணங்கேட்டால் நான் தினமும் வரும்போது மாமாவை காண்பதில்லை இன்றாவது இருக்கிறாரா? இருந்தால் பேசிவிட்டு போவோம் என்று வந்தேன் என்பான்.



ஏதோ தன்னால் முடிந்த காரணங்களை சொல்லி பானுவை பார்க்க வருவது வழமையாக,



புஷ்பாவிற்கும் சாதுவாக புரிபட,



பானுவையும் கவனிக்க தொடங்கினார்.



அவளோ எப்போதும் போல் யார் வந்தால் எனக்கென்னவென்று, தானுன்டு தன் வேலையுண்டு என இருக்கவும், அவரும் அவன் வருவதற்கு தடைபோடாமல் அவனையே கவனித்திருந்தார்.



இப்படியே ஒருவாரம் கழிந்துவிட,



மதியின் விடையம் பற்றி வீட்டில் பேசிய முகிலன் பெண்பார்க்க ஏற்பாடு செய்தான்.



அன்று அவசரமாக கல்லூரி கிளம்பியவளிடம்,



"இன்னைக்கு நாலு மணிக்கு பொண்ணு பார்க் வராங்க மதி. அதனா இன்னைக்கு காலேஜ் லீவ் போட்டிடு" என்றான் முகிலன்.



'இது மேகலா வேலை' என நினைத்தவள், அவளிடம் திரும்ப,



அவளோ இது எதற்கும் தனக்கு சம்மந்தமில்லை என்பதைப்போல் நகத்தினை சப்பித்துப்பியவாறு இருந்தாள்.



'செய்யிறதெல்லாம் செய்திட்டு எதுவும் தெரியாதவ போல இருக்கிறத பாரு!' என முறைத்தவளன,



"அது வந்துண்ணா? முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் இருக்குண்ணா. கட்டாயம் போயாகணும், இல்லன்னா அந்த புரபசர் திட்டி தீர்த்துவிடுவார்." என்றாள் கெஞ்சலாய்



"அதை நான் பார்த்துக்கிறேன் மதி! பொண்ணு பார்க்கிறதுக்காகவே ஊரிலிருந்து மினக்கட்டு கிளம்பா வரவங்கள திருப்பி அனுப்ப முடியுமா? "



என்றான் வேறு பேச்சுக்கு இடமற்று.



"அப்புறம் பொண்ணு பார்க்க வரவங்க உடனேயே திரும்புறது கஷ்டம், தங்குறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணணும்." என்றான்.



"ஆமாடா! நான் அதை யோசிக்கவே இல்ல. சரி அதை ஏற்பாடு பண்ணுகிறேன்." என்று சுந்தரி அந்த பொறுப்பை எடுத்து கவனிக்க சென்றார்.



மதிக்குத்தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



ஒரு வார்த்தை தன்னை கேட்காமல் அவர்களே முடிவெடுத்து விட்டதை எண்ணியவாறு தனதறைக்குள் திரும்பியவள் மனதோ ஒரு நிலையில் இல்லை.



'இதுக்குத்தான் அவன்கிட்ட முன்னாடியே சொன்னேன். கல்யாண பேச்சு ஆரம்பிக்கிறப்போவே வீட்டுக்கு வந்து பேசுன்னு.



கேட்டானா அவன்? உன் படிப்பு முடியட்டும் அது இதுன்னு ஆயிரம் காரணம் சொன்னான்,



இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க.



இப்போ நான் என்ன செய்யிறது? அண்ணன்கிட்ட சொல்லிடவா நான் தீபன விரும்புறேன்னு' நினைத்தவள்,



அதுவும் வேணாம்ன்னு சொன்னானே!ஏன் அப்பிடி சொன்னான்...?. ஒருவேளை மேகலா அவனை பத்தி சொன்னது உண்மையாக இருக்குமோ?



ச்சேச்சே.... அவன் அப்படி பட்டவனில்லை. பானு பண்ண தப்பை மறைக்குறதுக்கு தான் அவனை இவ தப்பா சொல்லியிருக்கா.' என நினைத்தவள்.



இப்போ பிரச்சினை அதுவா? நான் இப்போ என்ன செய்றது?



தீபனை ஏமாத்திட்டு இன்னொருத்தனுக்கு என்னால கழுத்த நீட்ட முடியாது.



பாவம்....! ஏற்கனவே ஒருத்திகிட்ட ஏமாந்து என்னால தான் அந்த கவலையில் இருந்து மீண்டிருக்கிறான்,



இப்போ நானும் அதை பண்ணா உடைஞ்சிடுவான்.



ஆனா என் வீட்டுக்காரங்களுக்கு நம்ம விஷயத்தை சொல்ல வேண்டாம் என்டுட்டானே!



இப்போ நான் என்ன தான் பண்றது?



அவன்கிட்டையே தீர்வ கேட்டா என்ன?' என்று அவன் இவளுக்கு விரித்திருக்கும் சதி வலை புரியாமல் அவனிடமே போய் சிக்கிக்கொள்வதற்கு தானாகவே முன்வந்தாள் மதி.



அவனுக்கு அழைப்பு தொடுத்தவள், அவன் முதல் தடவை எடுக்கவில்லை என்றதும்,



இரண்டாவது தடவை அழைதாதாள்.



"சொல்லு டார்லிங்க்" என்றான் எடுத்த எடுப்பில்,



"இப்போ நீ ப்ப்றீயா தீபன்?" என்றாள் பதட்டமாக,



"என்ன மதி எதுக்கு பதறுற? என்ன..?? மறுபடியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று கேலி போல் கேட்டவன் அதை தான் எதிர்பாத்திருந்தான்.



"ஆமா தீபன்!



மாப்பிள்ளை பார்த்தது மட்டுமில்ல. இன்னைக்கே பாெண் பார்க்க ஏற்பாடு பண்ணிட்டாங்க, நீ இப்பவே வந்து பேசு தீபன்.



நீ பேசினா தான் இந்த பொண்ணு பார்க்கிற ஏற்பாட்டை நிறுத்திட்டு,



நம்ம கல்யாண பேச்சை ஆரம்பிப்பாங்க." என்றாள்.



"அப்பிடியா மதி? நான் இப்போ வவுனியாவுக்கு ஒரு வேலை வந்திருக்கேனே!



போனில உன் அண்ணாகூட பேசலாம் தான்,



ஆனால் போனில நம்ம காதல் விஷயம் பேசினா என்னை கோழைன்னே நினைச்சிடுவாரு,



அதுவுமில்லாமல் இது போனில பேசுற விஷயமும் இல்ல. அது அவருக்கும் மரியாதையாக இருக்காது." எனறவன்,



"எப்படியும் நான் யாழ்ப்பாணம் வர நாலு மணி தாண்டுமே மதி! என்ன செய்யிறது?" என்று பொய் பேசினான்.



"இப்படி ஒரு இக்கட்டில சிக்ககூடாதுன்னு தான் முன்னாடியே உன்னை வந்து பேச சொன்னேன், இப்போ பாரு எப்பிடி மாட்டிக்கிட்டோம்ன்னு"



'இதுக்கு தானே நான் காத்திருந்ததே! இப்படியொரு சந்தப்பம் வரும்ன்னு ஏழு மாதத்து தவம், இன்னைக்கு நிறைவேற போது. என்னை மட்டும் உன் அண்ணன் பார்த்தா, என் திட்டம் என்னாகிறது?



உன் அண்ணனை பழி வாங்க எனக்கு கிடைத்த கடைசி துருப்பு சீட்டு நீ தான், என்னை வெளிப்படுத்தி, இத்தனை நாள் நான் போட்ட வேஷம் ஒரே நொடியில கலைஞ்சு போறதுக்கா?



அவன் முன்னால் நிக்கணும்னா, உன்னை என் பொண்டாட்டி ஆக்கினதுக்கப்புறம் தான் நிற்கணும்.



இத்தனை வருஷத்து என்னோட தோள்விகளுக்கு அந்த ஒரு நாள் தான் வெற்றியா இருக்கும்.



அவன் ஆசை தங்கை, தினம் தினம் என்னால் அனுபவிக்க போற வேதனைய அவன் பார்த்து ரத்த கண்ணீர் வடிக்கணும்.' என்று நினைத்தவன்,



"மதி! நான் ஒரு ஐடியா சொன்னா தப்பா நினைக்க மாட்டாயே!"



"நமக்கு இதைதவிர வேறு வழியில்லைடா! எனக்கு நீ வேணும்... நீயும் அந்த பானுவைப்போல என்னை ஏமாத்திடாத,'என்று கெஞ்சியவன் குரலில் உருகியவள்,



"சொல்லு தீபன்! நான் என்ன செய்யணும்" என்றாள்.



"நீ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரப்போ வரும் நேரம் உன் வீட்டில் இருந்தால் தானே மதி பெண் பார்க்க முடியும்?



அந்த நேரம் வீட்டில நிக்காம ஓல்ட் பார்க் வந்துடு மதி.



நானும் வேலையை முடிச்சிட்டு இங்கயிருந்து கிளம்பி நேராக அங்க வந்திடுறேன்.



கொஞ்சநேரம் அங்கேயே இருந்து பேசிட்டு ஆறு மணியப்பிடி உன்கூட நானும் வீட்டிற்கு வரேன்.



அந்தநேரம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் போயிருப்பாங்க, அப்போ நம்ம காதலை சொல்லி சம்மதம் வாங்கிடலாம்" என்றான்.



"நீ நினைக்கிறது போல இல்லை தீபன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்கை்கே கிளம்ப மாட்டாங்க, நாளைக்கு கிளம்புறதா தான் அண்ணா சொன்னாரு" என்றாள்.



அதுவும் நல்லது தான். அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா இனிமே பொண்ணு கேட்டு வரமாட்டாங்க." என்றவன்,



"நீ இதை பத்தி எதுவும் யோசிக்காத மதி! என் காதலை காப்பாத்திக்க எனக்கு தெரியும்.



உன்னை யாருக்கும் நான் விட்டுக்கெ்டுக்கிறதா இல்லை." என்று தேன் வடிய போசியவன்,



"நான் சொன்னதை போல வந்திடு" என்றவன்,



"இப்போ எனக்கு கொஞ்சம் வேலை அதை சீக்கிரம் முடிச்சா தான் நாலு மணிக்கு ஓடி வர முடியும், நான் வைக்கிறேன்." என வைத்து விட்டான்.



தான் செய்வது சரியா என்றிருந்தது மதிக்கு.



'தான் செய்யும் இந்த காரியத்தால் குடும்ப மானம் போய் விடுமோ?' என நினைத்தவள்.



' நான் என்னை வீட்டை விட்டு ஓடியா போறேன்? பொண்ணு பார்க்கிறதில எனக்கு விருப்பமில்லை, அதனால் அதை தவிர்க்கிறேன்.



இரவுக்கு தான் தீபன் வீட்டில பேசிறதா சொல்லியிருக்கானே!



பானு செய்ததை போல, கல்யாணம் செய்துக்கிறேன்னு சொல்லிட்டு, யாருக்கும் தெரியாம மண்டபத்தில இருந்து ஓடிப்போகலையே!'
என்று தான் செய்யவிருக்கும் தவறிற்கு தானே நியாயம் தேடிக்கொண்டிருந்தாள் மதி.



பாவம்....! தான் எடுக்கும் முடிவு தவறு என்று புரிவதற்குள், எத்தனை பெரிய சிக்கலில் தானும் மாட்டி, மேகலாவையும் சிக்க வைக்க போகிறாள் என்பது தெரியாமல் தனக்குள் ஒரு முடிவோடு மாலையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.



மதி அமைதியாக போவதையே பார்த்தவாறு இருந்த மேகலா அவளது ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவள் அறியாமல் கவனிக்க தொடங்கினாள்.
அப்போதாவது கணவனிடம் கூறியிருக்கலாம் தீபனை பற்றி,
குறியிருந்தால் வர இருக்கும் மற்றுமொரு அவப்பெயரிலிருந்து தப்பியிருப்பாள்.



மாலை மூன்றுமணி தாண்டிருக்க, இதுவரையில்லாத பயம் மதியை தொற்றிக்கொண்டது.
யாரமே் அறியாது வீட்டிலிருந்து வெளியேறவேண்டும்.
இன்னும் சிறிது நேரத்தில் அலங்காரம் அது இது என்று தன்னை தயார்படுத்த சுந்தரி உள்ளே வந்துவிடுவார் என்பதை தெரிந்தவள்,



அறையின் வெளியே வந்து எட்டிப்பார்த்தாள்.
வெளியே யாருமில்லை என்பதை உறுதி செய்தவள், பூணை போல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வெளியேறி, ஓட்டோவை எதிர்பார்த்து அதே இடத்தில் நிற்காமல் மெதுவாக நடந்து வீட்டவர் கண்களில் படாமல் அந்த தெருவை தள்ளி நடந்தாள்.



இங்கு மேகலாவோ உண்டகளைப்பில் சற்று உறங்குவோம் என்று உறங்கியவள், திடீர் என்று தூக்கம் கலைந்து எழுந்து நேரத்தை பார்க மூன்றை தாண்டியிருந்தது.



இதற்குமேல் தூங்கினால் சரிவராது என்று நினைத்து, கட்டிலிலிருந்து இறங்கியவள்,
"நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய போறேன், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர முன்னாடியே வந்திடுவேன், அதுக்குள்ள எல்லா வேலையையும் முன்ன நின்னு கவனிச்சிடு" என்று கணவன் கூறிச்சென்றது நினைவில் வர.



இயற்கை காற்றை சிறிது சுவாசித்தால் இயல்பாக வேலையில் ஈடுபடலாம் என்று நினைத்தவள்,



தோட்டத்துப்பக்கம் தனியாக நடக்க அலுப்பில், அறையின் கண்ணாடி ஜன்னலை திறந்து சுத்தமான இயற்கை காற்றை சுவாசித்தவள் கண்ணில் பட்டாள் தெருவில் வீட்டையே பல முறை திரும்பி வீட்டையே பார்த்தவாறு பயந்து பயந்து போகும் மதி.

'


இவள் இப்போ எங்க போறா?
இன்னும் ஒருமணி நேரத்துக்குள் பொண்ணு பார்க வந்திடுவாங்களே!
ஒருவேளை......" என்றவளுக்கு,



தன் தங்கை செய்தது நினைவு வர,

"


ஐயைய்யோ...." என்றவள், பிள்ளை வயிற்றைக்கூட கருத்தில் கொள்ளாது இருந்த உடையுடனே வந்தவள் கண்களில் யாருமே தென்படவில்லை என்றதும்,

"


இப்போ இவங்களை கூப்பிட்டிருந்தா, மதி எங்க பே்றான்னே தெரியாம போயிடும், முதல்ல அவளை பார்ப்போம்." என நினைத்தவள்,



வேகமாக ஓடிவந்து தெருவை தாண்டிய மதியை கண்டுவிட்டாள்.

"


மதி......" என்று அழைப்பதற்குள் அவளோ மேகலாவை காணாது,
வந்த ஆட்டோவை மறித்து ஏறிச்செல்ல,
மதி... மதி...



அவள் அழைத்தது மதி காதில் விழுந்தது?
ஒருவேளை அழைத்தது காதில் விழுந்திருந்தால் நின்றிருப்பாளோ என்னவோ?



வேறு வழியில்லாமல் பின்னால் வந்த ஆட்டோவை மறித்து ஏறிக்கொண்டவள், முன்சென்ற ஆட்டோவை பின்தொடர சொன்னாள்.



அந்த ஆட்டோ ஓல்ட் பார்க்கில் போய் நின்றதும் ஆட்டோவிலிருந்து இறங்கிய மதி உள்ளே புகுந்து கொண்டாள்.



"இவ எதுக்கு இங்க வந்தா?" என்று நினத்தவள், தானும் இறங்க காலினை எடுத்து வைக்கும் போதுதான் தன் உடையை கவனித்தாள்.

"கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கே,


இதே ட்ரெஸ் எப்பிடி உள்ள போறது? என்று நினைத்தவள், ஓட்டோவிலேயே இருந்தவாறு மதியை கவனிக்க தொடங்கினாள்.



நேரம் நான்கு மணியை தொட்டிருக்கும்,
'போன் கூட எடுத்திட்டு வரல்ல, எடுத்திட்டு வந்திருந்தா மதியிற்கு போன் பண்ணி இங்க வரவைத்து பேசியிருக்கலாம்,



முகிலனை கூப்பிட்டு சொல்லிடுவோமா? வேண்டாம்....., தேவையில்லாமல் பயந்தி பிரச்சினையாகிடும்,



இப்போ என்ன தான் செய்யிறது?



யாரையுமே காணல்ல, ஆனா ஏன் பதட்டாம வந்து இங்க மறைஞ்சிருக்கா இவ? எப்படியும் வீட்டுக்கு தானே வந்தாகணும்' என்று மதியை கவனித்திருந்தாள்.



அவளோ பல முறை போனை எடுத்து பார்ப்பதும், யாருக்கோ அழைப்பு விடுப்பதுமாக இருந்தவள் போனை எதிர்புறம் தூக்கவில்லை போல, பயத்தில் முகமும் வியர்த்து கொட்டியது.
நேரம் ஐந்து மணியை நெருங்க தொடங்க,







மேகலா வந்த ஆட்டோ டிரைவரோ, "இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே காத்திட்டிருப்பீங்க?" என்றான்.

"


சாரிண்ணா.... கொஞ்சம் முக்கியமான விஷயம், நீங்க வெயிட்டிங்க் சார்ச் எவ்வளவு வேணும்னாலும் கேளுங்க பிரச்சினையில்லை. கொஞ்சம் முக்கிய வேலை ப்ளீஸ் அண்ணா"

"


வரவேண்டிய காசுவந்தால் சரிதான்." என்றவர் அமைதியாகினார்.



சிறிது நேரத்தில் மதியினுடைய போன ரிங்க்காக, அதை காதில் வைத்தவள்,
"எங்க நிக்கிற தீபன்? உன்னை எவ்வளவு நேரமா கூப்பிடுறது?
உனக்கா ரொம்ப நேரமா
வெயிட் பண்ணிட்டிருக்கேன் நிக்கிறேன்." என்றாள் கோபமாய்.



சாரி மதி.... அவசர வேலைடா, சொன்ன நேரத்துக்கு வர முடியல.... இப்பா கொஞ்சம் முன்னாடி தான் புங்குடுதீவு பக்கம் வந்தேன், இப்போ வேலை முடிஞ்சிடும்,
நீ ரொம்ப நேரம் அங்க இருக்க வேண்டாம், யாராவது பார்த்தா சந்தேகப்படுவாங்க, கிளம்பி இங்க வாயேன். இங்கயிருந்தே சேர்ந்து உன் வீட்டுக்கு போயிப்போம் என்றான்.



"


உன் பேச்சை நம்பிட்டேன், இனி என்ன சொல்லுறியோ அதை த்னே செய்தாகணும், வீட்டில வேற என்னை காணலன்னு தேட ஆரம்பிச்சிருப்பாங்க, இங்ககூட தேடிட்டு வர வாய்பிருக்கு,
இடத்தை சொல்லு வந்து தொலையிறேன். என்றவள், அவன் சொன்ன இடத்தை மனதில் பதித்துக்கொண்டு ஆட்டோவிற்காக காத்திருக்க,



மேகலாவோ அவளை தூரத்தில் கண்டுவிட்டு ஆட்டோவில் இருந்தவாறே மதியை அழைத்தாள்,
வாகன இரைச்சலில் மதி காதில் விழவில்லை.

அந்த பார்க்


பானு வீட்டு அருகில் என்றதனால் கடைக்கு வந்த பானு அதை கவனித்து விட்டு, வீதியை கடந்து தமக்கையிடம் போகையிலே அவள் உடையை கவனித்து விட்டாள்.

"இங்க இந்த


கோலத்தில என்ன பண்றா? அதுவும் இந்த நிலமையில ந எதுக்கு தனிய வந்திருக்கா," என்று அவளை நோக்கி வருவதற்குள் மதி ஆட்டோவில் ஏறிக்காெள்ள,



அவளை பின்தொடர்ந்தாள் மேகலாவும்.



பானுவிற்கு மேகலாவினது பதட்டத்தை காணும்போதே எதுவோ சரியில்லை என்று தோன்ற,



அருகில் நின்ற ஆட்டோவில் ஏறி அமந்ததும் தான் கண்டாள், அந்த ஆட்டோ டிரைவர் அவளுக்கு ரொம்பவே பழக்கமானவர் என்பதை.



அவளது குடும்பத்தின் அவசர தேவைக்கு அவரை தான் அழைப்பார்கள்.
"நீங்களாண்ணா?" என்றவள்,
"அதோ போகுதே ஆட்டோ அதை பாலோ பண்ணுங்க." எனஅவசரப்பட்டவளிடம்,

"


யாரும்மா அது? எதுக்கு நீ அவங்கள பாலோ பண்ற?" என்று வண்டியை ஓட்டியவாறே கேட்டார்.

"


அதில அக்கா தான்ணா போறா, ஆனா அவ முகம் சரியில்லை. ஏதோ பிரச்சினை போல, அத்தான் வேற அவகூட இருக்கிறது போல தெரியல. எனக்கு எதோ தவறா படுது. என்றாள்.

"மேகலாவா


ஏன் இந்த நேரத்தில இந்த பக்கம் போகணும்? இந்த றோடு ஆறுமணிக்கு பின்னாடி பிளக்கமிலாலாத றோடாச்சே!
போர் முடிஞ்சும் குடியிருப்பே குறைவா இருக்கும்.
எல்லாமே குடி தண்ணி பிரச்சினையால இங்க இருக்கிறதில்லை.



இப்போ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஸ்கூல் போயிட்டிருந்த வித்தியா கூட இங்க இருக்க ஒரு காட்டிற்குள் கடத்திட்டு போய் பன்ரெண்டு பேர் கொடுரமாக கற்பளிச்சு கொலை செய்தாங்க மறந்திட்டியாம்மா?"



என்றார்.

"


ஐயோ அண்ணா.... எனக்கு பயமா இருக்கு. இப்பவே இருட்டிட்டு இருக்கே. கொஞ்சம் வேகமா பேங்கண்ணா. அவளை கூட்டிட்டு போயிடலாம்" என்றாள் பதட்டாம.

"


பயப்பிடாதம்மா... நாம தான் போறோம்ல, அவளுக்கு எதுவும் ஆகாது. இந்த றோட்டில வேகமால்லாம் வண்டி ஓட்ட முடியாது, நீ தைரியாமா இரு! என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம்." என்றவர்.



இன்னும் பேசினால் பானு பயந்துவிடுவாள் என்று அமைதியாகவே வந்தார்.



அவர் சொன்னதை போல்தான், ரெண்டு ஏக்கருக்கு ஒரு வீடு என்ற அளவிலேயே வீடுகள் காணப்பட்டது.
அதுவும் இடிந்த நிலையில் ஏதோ இருக்ககூடியளவு அதை திருத்தியே அங்கு வசித்து வந்தார்கள்.



எங்கு பார்த்தாலும் பனைமரங்களும், அரலிக்காடுளும் தான், அந்த ஊரின் அமைதியே இல்லாத பயத்தை தூண்டிவிட்டவாறு இருந்தது.
இருளும் மெல்லமெல்ல வெளிச்சமதை முழுங்கிக்கொண்டிருக்க,



ஒன்றரை மணிநேர பயணத்தின் பின் மதி ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்தினாள்.
அவள் நிறுத்திய இடத்திற்கு பக்கம் பெரிய அரலிக்காடு.



தான் வந்த ஆட்டோவை அனுப்பியவள், சுற்றுமுற்றும் பார்க்க யாரையும் காணவில்லை.



போனை எடுத்து தீபனுக்கு அழைப்பை விடுக்க, பக்கத்தில் அதன் ஒலி கேட்டது.



"வந்திட்டியா டார்லிங்க்...?" என்வாறு அவள் அருகில் நெருங்கியவன்,
"களைச்சே போயிருப்ப, உள்ள வா! ஒரு வீடிருக்கு ஒரு காஃபி சாப்பிட்டு போகலாம்." என்று அந்த காட்டுக்குள் இறங்க.



அவளோ அவனை நம்பாத பார்வை பார்த்து,
"காட்டுக்குள் வீடா...?" என்றவளை பார்த்து சிரித்தவன்,

"


லூசு மதி....! இந்த பக்கம் தான் காடு. றோட்டால நான் சொன்ன வீட்டிற்கு போகணும்னா சுத்தணும்,

காட்டுக்குத்ளால


போனா வீட்டு பின்பக்கமா போயிடலாம்." என்று கூறி அவளை அந்த காட்டுபகுதியால் அழைத்துச்சென்றான்.



அவன் கூறியது போல காட்டின் வழியால் நடந்து செல்ல ஒரு பாழடைந்த வீடு யாருமே பாவிக்க முடியாதவாறு தேசப்பட்டு இன்னும் சில மாதங்களில் தன் ஆயுளை முடித்துக்கொள்ள போகிறேன் என்பதை போல் தென்பட்டது.
ஆனால் அவன் கூறியது போல் அவளை உபசரிக்க யாருமே இல்லை.



தீபனை திரும்பி பார்த்தவள்,
"என்ன தீபன் இது...? இங்க யாரு உபசரிக்க போகிறாங்க?" என்க,

"


நான் இல்லையா மதி செல்லம்" என்று அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்,



அவளை தன் பேச்சினால் கொஞ்சிக்கொண்டிருக்க,



ஏதோ விபரீதம் நடக்க போவதாக இப்போது தான் மதிக்கு புரிந்து, இதயம் படபடக்க அவனை தன்னிடமிருந்து விலக்கியவள்,

'


உங்க விளையாட்டு போதும் தீபன், நேரமாகுது வாங்க வீட்டுக்கு போகலாம்" என்றாள்.

"


வேண்டாம் மதி! இன்னைக்கு ஒரே ஒரு நாள் இங்கேயே தங்கிட்டு, நாளை பக்கத்தில இருக்குற அம்மன் கோவில்ல தாலிகட்டி கூட்டிச்செல்கிறேன்." என்றான்.



அவன் கூறுவதை கேட்டவள்,

"


தீபன்... என்னை பயமுறுத்தினது போதும், வாங்க நாம போவோம்." என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.



அவனோ அவள் இழுப்புக்கு அசையாது கண்கள் சிவக்க விறைத்து நின்றிருந்தான்.



அவன் தன் இழுப்புக்கு வராததை உணர்ந்து திரும்பி பார்த்தவளை கொலைவெறியுடன் பார்த்தவன்,



இதுக்காகவாடி ஏழுமாதமா உன் பின்னால நாயை போல அலைச்சேன்?



மத்தவங்களை கெட்டவங்களாக்கி, இந்த உலகத்தில் என்னை தவிர நல்லவனே இல்லை நடிச்சேன்?



இதுவரைக்கும் காமத்தை தவிர, காதலையே அறியாதவன்டி நான், ஆனா என்னையே உருகி உருகி காதலிக்கிறது போல நடிக்க வைச்சிட்டியே!" என்றவன் தான் முகிலன் மேல் கொண்ட ஒன்பது வருட பகையையும் சொல்ல தொடங்கினான்.



சங்கமிப்பாள்......
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
Top