• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

49. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
உன்னை தான் விரும்புறேன்னு தெரியாதப்பவே உனக்கு ஒன்னுனா தாங்கிக்காதவரு. இப்போ நீ தான் தன்னோட உலகம்னு வாழுறப்போ பழிவாங்கிடுவாராடி?

இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல. நல்லா யோசிச்சு முடிவெடு!" என்றவள்,



"சரிடி! நான் ஊருக்கு கிளம்பணும் வா! நம்மள எதிரிபார்த்து வெளில காத்திட்டு இருக்க போறாங்க." என்றவள் அவளை இறுக அணைத்து,



"ஸ்ரீ நல்லவரான்னு கேட்டா எனக்கு தெரியாதுடி!
பட் இப்போ சுத்தமான மைலி புருஷனா மாறிட்டாரு என்கிறது மட்டும் உண்மைன்னு நேத்து உங்க ரெண்டு பேரையும் பாத்து புரிஞ்சுகிட்டேன்.


கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தான் என்கிறது முக்கியமில்லை மைலி.


கல்யாணத்துக்கு அப்புறம் உண்மையா இருக்கிறானா என்கிறத மட்டும் பாரு!


ஸ்ரீயோட கடந்த கால நிகழ்வுகளை மனசில வைச்சிட்டு, உன் நிகழ்காலத்தை கெடுத்துக்காத!
எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் அதை கல்யாணத்துக்கு முன்னாடி யோசிச்சு எடுத்திருக்கணும்.


எப்பிடியும் நீ அவனை பிரிஞ்சு போனாலும், உன்னோட அடையாளம் என்கிறது மாறப்போறது கிடையாது மைலி.


நிதர்சனம் புரிஞ்சு நடந்துக்கோ.
இனி மாறவேண்டியது ஸ்ரீ இல்ல. நீ தான்." என அவளை விடுவித்தவள்,


"சரி வா போகலாம்." என்றாள்.


" இன்னைக்கே கிளம்பணுமா தேனு?" என சிறுபிள்ளைபோல் கேட்ட மைலியை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.


ஏனென்றால் அவள் குழப்பத்திற்கு தற்போதைய மருந்து தேனு தான் என்பதை தேனுவும் நன்கு அறிவாள்.
ஆனால் அவளும் தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கு மட்டும் தன் தோழி அருகில் இருந்து தைரியம் கூறி வழிநடத்த விருப்பமில்லையா என்ன?

"ஆமாடி! போயாகணும் மைலி. இன்னைக்கு நாலு மணிக்கு ஹாஸ்டல்ல நிக்கணும்டி! இல்லனா அந்த வார்டன் வாயிலையே அரைபடணும்.



உன்னோட கல்யாணத்துக்கு வரமுடியல்லனு எவ்ளோ கவலை பட்டேன் தெரியுமா?.
சரி விடு! இப்போ எதுக்கு அது? அதனால தான் ரெண்டு நாள் ஹாலிடேயா? உன்னை பாக்க பர்மிஷன் வாங்கிட்டு ஓடியந்துட்டேன்."
என்றவாறு ஹோலுக்கு வந்து சேர்ந்தனர்.


"என்னம்மா இவ்வளவு நேரம்? வயிறு சரியாச்சா?" என்ற ஈஸ்வரியின் கேள்வியில் முழித்தாள் மைலி..

"உன் புருஷன் இதை சொல்லித்தான் இவ்வளவு நேரம் எங்களை சமாளிச்சிட்டு இருந்தான். நீ முழிக்கிறத பாத்தா அது இல்ல போலயே!


அடி பாவி! அப்போ நீ இத்தனை மணிநேரம் தூங்கினியா?
ஏன் இவ்ளோ நேரம் தூங்கின...? நேத்துக்கூட உங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை ஓடிட்டிருந்திச்சுல்ல.... நீ கூட சாப்பாடு போடாமல் உன் புருஷன காயபோட்டியே!" என்றவளிடம் மைலி எதுவோ சொல்ல வாயெடுக்க.


"அம்மாவுக்கு சொன்ன மாதிரி நெஞ்சு கரிசல் அது இதுன்னு கதையளந்தன்னா, வாயிலையே குத்து விடுவேன் பாத்துக்கோ!

பாவம்டி அந்த மனுஷன். எல்லா வழியிலையும் இந்த மாதிரியா காயப்போடுவ?
நைட்டு சண்டை. காலையில எழுந்தது லேட்..
ஆமா நைட்டு ஊடல் மட்டும் தானா? இல்ல கூடலும் நடந்திச்சா?" என வம்பிலுத்தவள் பேச்சில் உண்டான வெக்கத்தை மறைக்க,


" சும்மா வாய மூடிட்டு இருக்கியா? நீ நினைக்கிறது போல எதுவுமில்லை" பதில் கூறினாலும், அவள் பார்வை என்னமோ ஸ்ரீயிடம் தான் இருந்தது.


"நடக்கட்டும் நடக்கட்டு...ம். நீ நடத்தும்மா!" என்றவள் மைலியின் கன்னச்சிவப்பையும், ஸ்ரீமேலான பார்வையையும் கவனிக்காமல் இல்லை.
கேட்ட கேள்விக்கு மைலியிடமிருந்து பதில் வராமல், அவள் ஸ்ரீயினையே பார்த்திருப்பதை கண்ட ஈஸ்வரிக்கும் எதுவோ புரிபட.

"சரி சரி பேசினது வரைக்கும் போதும். அது தான் எல்லாரும் வந்தாச்சே! வாங்க சாப்பிடலாம். வேணும்னா சாப்பிட்டே பேசுவோம்." என்று சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்ல.

சாப்பாட்டு மேஜைக்கு அனைவரும் வந்து அமர்ந்ததும்.


"நானே பரிமாறுறேன் பாட்டி!" என்று இன்றும் முன்வந்த மைலியை கண்ட ஸ்ரீக்கு தான் அய்யோ என்றானது.


தேனுவோ மற்றவர்கள் அறியாது வாய் மீது கை வைத்து சிரித்தே விட்டாள்.


தட்டினை வைத்து விட்டு,
நேற்றைய இரவினைப்போலவே ஸ்ரீயைக் கடந்து அனைவருக்கும் பரிமாறிகொண்டிருந்தாள்.


'இன்னைக்கு என்ன காரணங்காட்டி காயப்போட போறாளாே...?' என நினைத்து அவளையே பார்த்தான்.


அவனது பாவமான கோலத்தை கண்ட ஈஸ்வரி,



"மைலிம்மா..! ஸ்ரீயையும் கவனியடா!பாவம்.... நைட்டும் சரியா சாப்பிடல..
பசியில இருப்பான்.... அவனுக்கு வைச்சிட்டு எங்களுக்கு வைம்மா.. " என்றார் அக்கறையாய்.



"நான் பாத்துக்கிறேன் பாட்டி! நீங்க சாப்பிடுங்க." என்றவாறு சட்னியை அள்ளி பாட்டியின் தட்டில் வைத்தாள்.
மற்றவர்களுக்கு பரிமாறல் வேலை எல்லாம் முடிந்ததா? என ஒரு தடவை சுற்றி பார்த்து,
முடிந்தது என உறுதி செய்து கொண்டு.


ஸ்ரீ அருகில் வந்தவள்,



"உங்களுக்கு என்ன வைக்கட்டும்?" என இதுவரை அவளே அறியாத குரலில் இதமாக கேட்டவளை நம்ப முடியாது தலையை நிமிர்த்து அவளை ஒரு தடவை பார்த்தான்.


அவனது பார்வை தன்னை ஆராய்ச்சியாய் பார்ப்பதை உணர்ந்த மைலிக்கும் இதுவரை எங்கோ சென்று ஒழிந்திருந்த வெட்கம் எல்லாம் திரண்டு வந்து டன் கணக்கில் அவளிடம் வந்து ஒட்டிக்கொள்ள,


அவனது விழி வீச்சு தாங்காதவளாய்,


சிவந்து போனவள் விழிகளே தரையை தழுவிக்கொண்டது.
ஏனோ அதை கண்டதும் குஷியானவன், மறு கணமே இது எந்த நாடகத்தின் ஆம்பமோ..?' என மூளை அவசரமாக எச்சரிக்க..

'இன்னைக்கு என்னத்தையடி வைச்சு காத்திருக்காளோ?
இவ எதை செய்தாலும் பயமா இருக்கே! நீ ஆரம்பி.... நைட்ல தான் கடைக்கு போய் சாப்பிட முடியால...


காலையில பரவாயில்ல.. ஆரம்பிம்மா?' என அவளையே பார்த்திருக்க.



அவள் வெட்கத்தோடு தரையையே பார்த்ததையும்,
ஸ்ரீ அவளையே வைத்த கண் இமைக்காமல் பார்த்திருப்பதையும் கண்டால் இவர்கள் இடம் பொருள் அறியாது ரொமான்ஸ் நடத்துவதைப்போல் தான் இருந்தது மற்றவர்களுக்கு.


பெரியவர்களோ அதை கண்டும் காணாதவர்கள் போல்
இருக்க,


தோழியின் மாற்றம் மகிழ்ச்சியை தந்தாலும்,

வேண்டுமென்றே அருகில் இருந்த கரண்டியை தட்டி விட்டு, எதுவும் அறியாதவள் போல் சாப்பிடத்தொடங்கினாள்.
பெரும் சத்தத்தேடு
அது விழ, தரையிலிருந்து கவனததை மீட்டவள்,


ஸ்ரீயை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து.


"என்.. என்ன வைக்கட்டும்?" தடுமாறியவாறே பாத்திரங்களை அவனருகில் நகர்த்தி வைத்தாள்.


'சொன்னா மட்டும் தாராளமா வைச்சிடப் போற? எல்லாமே உன் இஷ்டபடி தானே நடக்குது. எதை வேணும்னாலும் வை
!' என்பது போல் ஸ்ரீ அமர்ந்திருக்க.
அவனிடமிருந்த பதில் வராது போகவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



"எதுன்னாலும் வை மைலி! சாப்பிட்டு கிளம்பனும். டைம் ஆச்சு." என்று ஏனோ தானோ என்றவன் பதிலில் கஷ்டமாக இருந்தாலும்,
இருந்த சாப்பாட்டில் இரண்டிரண்டு வைத்து தட்டினை நிறைத்தவளையே நம்பமுடியா
து பார்த்தான்.



"என்ன?" என்பது போல் மைலி புருவத்தை உயர்த்த.
கண்களிலேயே,



"கிட்ட வா!" என்பது போல் செய்கை செய்தவன் செயலுக்கு கட்டு பட்டவள் போல், அவன் முகத்திற்கு நேராக காதை கொண்டு போனாள்.



"ஆமா.... என்ன இத்தனை கரிசனை? சாப்பாட்டுக்க எதையாவது கலந்திட்டியா? மனம் போல ரொம்ப அள்ளி வைக்கிற..." என கிசுகிசுத்தவன் பேச்சில் காண்டாகியவள்,



"அப்போ இது உங்களுக்கு வேணாம்..." என கேட்டு தட்டினை இழுக்க போனவளுக்கு முன் தட்டினை பிடித்தான்
.


அவனுக்கிருக்கும் பசிக்கு கேள்வியே கேட்க நேரமில்லை. இதில் அதை விட்டு கொடுப்பானா...?
வேகவேகமாக சாப்பாட்டினை உள்ளே தள்ளியவனுக்கு புரை ஏறிப்போக.


தலைமேல் மெல்லமாக தட்டியவள்,
தண்ணீரை கொடுத்து,


"குடிங்க...." என்றாள்.
நம்ப முடியாது அவ ள நிமிர்ந்து பார்த்தவாறு,
அவள் தந்த நீரை பருகியவன், போதும் என்று விட்டு உணவில் மீண்டும் கவனம் காட்டியன் அருகில் வந்தவள்,




" பிச்சைக்காரன் போல வாய்க்குள்ள இருக்கிறத முழுங்குறதுக்கு முன்னாடி அவசரம அடுத்த வாய் சாப்பிடுறிங்க..? உங்களோடத யாரும் கேட்டுட மாட்டாங்க மெதுவா சாப்பிடுங்க" என அவனுக்கு மட்டும் கேட்பதாய் சொன்னவள் பேச்சில் நின்ற புரை மீண்டும் ஏற, தலைமேல தட்டியவள்,


"யாராச்சும் கண்ணு வைச்சிட போறாங்கனு சொல்லுறேன்ல... மெதுவா தான் சாப்பிடுங்க" என அக்கறையோடு பேசியவளை இம்முறை ஆழமாக பார்த்தவன் பார்வை அவளையே முழுங்குவது போலிரு
ந்தது.




அந்த பார்வையில் வெட்கமதை முகம் முழுவதும் பூசிக்கொண்டு மீண்டும் தரையை பார்த்தாள்.


'இதுங்க அடங்காதுங்களா? முன்னாடி நம்மளை வைச்சிட்டு பயபுள்ளங் பண்ற ரொமான்ஸ் தாங்க முடியலடா!' என நினைத்தவள்,


இம்முறை புரை ஏறியது போல் நடிக்க.
அவசரமாய் தரையிலிருந்த பார்வையை மீட்ட மைலி,


" தண்ணி குடிச்சுக்கோடி" என்றாள்.


"அது அங்க இருக்கு... இங்க கொண்டு வந்து குடு!" என்றவள் வார்த்தையில் கோபம் தெறித்தது.
கேட்ட நீரினை அவளிடம் எடுத்து வருவதற்குள் அவசரமாய் அவள் கையினை பிடித்த தன்னருகில் இருந்தவள்.



"என்னடி பண்ணிட்டிருக்க? இது என்ன உங்க பெட்ரூமா? ரொம்ப வடிஞ்சோடிட்டிருக்கு.... பாக்க செம காண்டாகுது..
இங்க பாரு...! இந்த மாதிரி பண்ணி என்னை போல கல்யாணமாகாதவ சாபத்தை வாங்கி கட்டிக்காத.


என்ன பண்றதா இருந்தாலும், ரூம்ல வைச்சுக்கோ.
வயசான நேரத்தில இந்த கறுமத்த எல்லாம் பாக்க வைச்சு இவங்கள சாவடிக்காத" என்றவள் பேச்சில் தம்மை அவள் கண்டு கொண்டாள் என்ற வெட்கத்தில், ஆட்காட்டி விரலால் மேசையில் படம் வரைந்தவள் கையினை தட்டி விட்டவள்,



"எப்பிடி எப்பிடி..? எங்களுக்கு புரை ஏறினா, நாங்களே தண்ணிய எடுத்து குடிக்கணுமாம்... அதுவே அவனுக்கு புரை ஏறினா கிளாஸ்ல ஊத்தி பருக்கி விடுவாங்களாம்.


ஏன் சாருக்கு கிளாஸை பிடிச்சு கூட குடிக்க தெரியாதோ?" என கேலி செய்ய,


"ச்சீ போடி.." என்றவள் இதற்கு மேல் அங்கே நின்றால் பேச்சை கொடுத்தே அப்பட்டமாக தன் மனதினை படம் போட்டு காட்டி விடுவாள். என நினைத்து உள்ளே ஓடியே விட்டாள்.


தோழிகள் கேலி பேச்சு புரியாதவர்கள் இல்லையே அங்கே இருந்தவர்கள்.



அவர்களும் இவர்கள் வயதினை தாண்டி வந்ததனால், மைலி ஓடியதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தமக்குள் சிரித்து விட்டு அமைதியாகிக்கொண்டனர்.


ஸ்ரீக்குத்தான் எல்லமே புதிதாக இருந்தது.



சாப்பாடு முடிந்து எழுந்து கொண்டவர்களை ஊருக்கு வழி அனுப்பி வைக்க, தன் தோழியை இறுக அணைத்து விடுவித்தவள்.



"இனி எப்போ உன்னை பாக்க வருவேன்னு தெரியலைடி.... அதிகமா அடுத்த வருஷந்தான் வருவேன்னு நினைக்கிறேன்.



அப்போ இந்த மாதிரி ஆளுக்கு ஒரு மூலையா நிக்காம, எனக்கு ஒரு குட்டிப்பாப்பாவை ரெடி பண்ற வேலைய பாருங்க." என்று விடைபெற்று காரில் ஏறியவளை முகம் முழுவதும் சந்தோஷத்துடனேயே வழியனுப்பி வைத்தால் மைலி.




இருக்காதா பின்னே! இத்தனை நாள் தனக்குள்ளேயே குழம்பிக்கொண்டிருந்தவளை தெளிய வைத்திருக்கிறா
ளே..!
இப்போது தெளிந்த நீரோடை போலிருந்தது அவளது மனது.



வழமைபோல் வேலைக்கு சென்றவன், மாலை வீடுவந்து ஜனாவினுடனான செல்லச் சண்டைகள் குறும்புகள் என நேரத்தை
போக்கி விட்டு, தனதறைக்குள் முடங்கியவனுக்கு அறையில் மாற்றம் நடந்திருப்பதைப்போல் தோன்றியது.


சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு அது என்ன மாற்றம் என்பது மட்டும் பிடிபடவில்லை.


மைலியை கேட்போம் என நினைத்தால்,
அவளும் இன்னும் அறைக்கு வரவில்லை
.


யோசனையோடு அறையினை ஆராந்து கொண்டிருந்தவனை கடந்து சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள் மைலி.


"ஏய்!! என்ன பண்ற? கட்டில்ல நீ படுத்தா... நான் எங்க படுக்கிறது?"



"எங்க வேனாலும் படுங்க.... நான் என்ன வேண்டாம்னா மறுக்க போறேன்." என்று துடுக்காக பேசிட.


"என்ன இன்னைக்கு புதுசா கட்டில்லை? வழக்கமா நீ சோபா மேலதானே படுப்ப... போய் படுத்துக்கோ... என்னோட இடத்தை விடு!" என்க.



"சோபாவா? அது எங்க இருக்கு?" என்றவள் கேள்வியில் அது இருந்த இடத்தை பார்த்ததும் தான் ஸ்ரீயிற்கே புரிந்தது.
அறையின் மாற்றம் அது தான் என்று.


"எங்க இங்க இருந்த சோபா...?"


"அதை வெளிய தூக்கி போட்டுட்டேன்." என்றாள் அலட்சியமாக.



"யாரை கேட்டுடி என்னோட அறையில இருந்த சோபாவை வெளிய தூக்கி போட்ட?" என்றான் கோபமாக,


"யாரை கேட்கணும்? அது நடுவில இருக்கிது பிடிக்கல.. அதான் தூக்கி போட்டேன்.
அப்புறம் இது உங்க அறை மாத்திரமில்ல.... என்னோடதும் தான்.

எனக்கும் சரி பாதி உரிமை இருக்கு.


எனக்கு எது பிடிக்கலையோ தூக்கி போட்டிடுவேன்." என்றவளிடம் அடுத்து என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறிடவன்.



"என்னடி இப்பிடி இரக்கமே இல்லாம ஒவ்வொரு நாளும் திணுசு திணுசா பழி வாங்குற
...
இப்போ கட்டிலுமில்ல... சோபாவும் இல்லன்னா, நான் எங்கடி படுப்பேன்?


தரையில சத்தியமா பிறந்ததில இருந்து தூங்கி பழக்கமில்லடி!"
என பாவமாக கெஞ்சியவனை அலட்சியம் செய்வதைப்போல் திரும்பி படுத்து, அவனது போர்வையையே இழுத்து போத்தி கொண்டவள்,


"தரையில படுக்க முடியலன்னா.. கட்டில்ல படுக்காறது." என்றாள்.


"அப்போ நீ தரையில படுத்துக்க போறியா?" என ஆர்வமாக
கேட்க.
தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தவள்,



"ஆசை தான்..... நான் ஏன் தரையில படுக்கணும்? என்னால இந்த ஏசி குளிரில தரையில படுக்க முடியாது.


கட்டில்ல தான் இவ்ளோ இடம் இருக்குல்ல..... கட்டில்லயும் ரெண்டு பேருக்கும் சம உரிமை இருக்கு... அந்தப்பக்கம் நீங்க படுங்க. இந்த பக்கம் நான் படுத்துக்குறேன்." என்றவளை நம்ப முடியாது ஸ்ரீ பார்க்க.


"யோவ்....! லூசு பயலே... எப்பவுமே என்னை நம்பாம தான் பாப்பியா? நான் மனசு மாறினாலும் நீ நம்ப மாட்ட போலயே!
வாய பிளந்து என்னையே பாத்துட்டு நிக்காமல் வந்து படுய்யா!


தூக்கம் வருது." என்று திரும்பிப்படுத்தவள் பேச்சை கேட்டு ஆடிப்போனவனாய், கால்கள் தன்னிச்சையாய் கட்டிலை நாடிச்செல்ல.


வாய் பிளந்தவாறு வந்து ஓரமாக படுத்தவனுக்கு,


'நேத்தையில இருந்து ஒரு மார்க்கமாத்தான் இருக்கா...
என்னாச்சு இவளுக்கு? ஆவி ஏதாவது பூந்திடிச்சோ!' என நினைத்தவாறு மின்குமிழை அணைத்து விட்டு படுத்தவன் கண்கள் செருவி உறங்கிப்போனான்.


நல்லிரவில் தன்னையறியாது கண்விழித்தவனுக்கு அந்த அறையின் மங்கலான வெளிச்சத்திலும் எதுவோ அசைவது போல் தோன்ற.


அசைவு தெரிந்த இடத்தை கண்களை கசக்கி பார்த்தவனுக்கு அந்த அசைவானது யாரோ நிழல் என்பது தெளிவாகத்தெரிந்தது.


'யாரோட நிழல் இது?' என கட்டிலின் மறு புறம் பார்க்க. மைலி தான் கைகளை காற்றில் அசைத்துக்கொண்டு தனக்குள்ளேயே பேசியவாறு இருப்பதை கண்டவன்.

படுத்திருந்தவாறே மின்விளக்கை போட்டான்.


மின்குமிழ் பிரகாசமாய் எரியவும். தலை சரித்து அவனை பார்த்தாள்.




" தூங்காமல் சின்னக்குழந்தை போல கையை ஆட்டி விளையாடிட்டிருக்க. நான் நிஜமாவே யாரோ வீட்டுக்குள்ள புகுந்துட்டாங்கன்னு பயந்துட்டேன்."



"தூக்கம் வந்தா தூங்க மாட்டோமா? நானும் கண்ணை மூடி பாத்திட்டேன்.. தூக்கம் தான் வருதில்ல" என்றாள்.


"எதுக்கு தூக்கம் வரல்ல? நீ தான் படுத்ததும் தூங்குற கும்பர்னி ஆச்சே! இன்னைக்கு என்ன புதுசா?" என கேட்டவ
னை ஒட்டிப்வந்து அவன் கையினை பற்றி, விரல் நகங்களை கடித்தவளது செய்கையில் கூசியவன்,



"கொஞ்சம் தள்ளியே படுத்துக்கோ தரை! ஒரு மாதிரியா இருக்கு. அப்புறம்......." என்றவன் சொல்ல வந்ததை பாதியோடு நிறுத்தி, தன் கையினை இழுத்துக்கொண்டு
, நகர்ந்து படுத்துக் கொண்டான்.

மீண்டும் அவனை நெருங்கி படுத்தவள் செய்கையில்.


"தாரை பிளீஸ்..... ரொம்ப டாச்சல் பண்ணாத.... தள்ளி படு!" என்றான் சின
ந்தவனாய்.



"ஏன் சினக்குறீங்க? ஒட்டிப்படுத்தா இப்போ என்ன செய்யிது?" என்றவள்,
அவனது காலில் கால் போட்டு, அவன் நெஞ்சின் மேல் தலை வைத்து படுத்துக்கொண்டவள் செய்கையில், அவசரமாய் எழ முயன்றவன் அவளது இறுக்கமான பிடியில் தோற்று,



"தாரை நிலமையை புரிஞ்சிக்கிட்டு நீயா விலத்தி படுத்தேனா நல்லதுடி! இல்லனா வர பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது." என அவன் குரல் திக்குதிணறி சூடாக வந்த மூச்சுக் காற்றின் நடுவே கூறியவன் நெஞ்சின் மேல் படுத்திருந்தவாறு நிமிர்ந்து பார்த்தவள்,


"எனக்கு தூக்கமே வருதில்லங்க... எல்லாத்துக்கும் உங்க அம்மா தான் காரணம்.
நடு சாமத்தில தனிமையில பேய் போல புலம்ப வைச்சிட்டாங்க." என குறை பட்டவளை,

அவளது உரிமையான இந்த செயலில் தன் உணர்வுகள் எல்லை மீறினாலும்,
அதை கடும் சிரமத்தோடு கட்டுப்படுத்தியவன்.


"என்ன தாரை சொல்ற? அம்மா என்ன பண்ணாங்க? உன்கூட எப்பவுமே அன்பா தானே இருப்பாங்க... நான் கூட உங்க பாசத்தை பார்த்து பொறாமை கூட பட்டிருக்கேன்.


நீ இப்போ குறை படுறத பார்த்தா.... உன்னை திட்டிட்டாங்களா என்ன?" என அக்கறையோடு கேட்க,
அவன் நெஞ்சின் மேல் இருந்த தலையினை ஆம் என்பது போல் அசைத்தாளன மைலி.




"சும்மா எல்லாம் திட்ட மாட்டாங்கனு எனக்கு தெரியும்....
என்ன தப்பு செய்த நீ? ஏதாச்சும் எடக்கு மடக்கா செய்தியா"
இல்லை என அவள் தலையசை
க்க.


"என்னடி இல்லை என்கிற? நீ தப்பு பண்ணாமல் திட்டியிருக்க மாட்டாங்க." என மீண்டும் உறுதியாகக் கூறியவன் விழிகளையே ஊடுருவுவது போல் பார்த்தவள்,


"அப்போ நான் தான் பொய் சொல்லுறேன் என்றீங்களா?
நேத்து உங்கம்மா என்னை ஏசினாங்க... நம்பலன்னா நீங்களே கேட்டு பாருங்க.


அம்மா கிட்ட கேக்க சங்கடமா இருந்த தேனுவ வேணும்னா கேட்டுப்பாருங்க." என சிறுமி போல் உதட்டை பிதுக்கி சொன்னவள் உதட்டினை சப்பித்தின்றால் என்னவென்றிருந்த உணர்வினை அடக்க சிரமம் கொண்டவனாய்.


"சரி நம்புறேன்.. எதுக்கு திட்டினாங்கனு மட்டும் சொல்லு?"
என்றான்.


"அது.. அது.." என அவன் பன்னியனை இழுத்து விளையாடியவள், அவன் நெஞ்சினில் முகத்தினை வைத்து அழுத்தியவாறு,



"உங்க அம்மாவுக்கு சீக்கிரம் பேரன் இல்லனா பேத்தி வேணுமாம்.... நம்ம தான் முயற்சி பண்ணலையே! அப்புறம் எப்பிடி அவங்க கேட்டதை தர முடியும்?" என்றவள் அவன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.


அவனிடமிருந்து பதில் வராது போகவே ஸ்ரீயை நிமிர்ந்து பார்த்தாள்.


இது தாரை தானா? என்ற சந்தேகத்தில் நெஞ்சில் மீது கிடந்தவளைய நம்ப முடியாது பார்த்திருக்க,


"என்னங்க.. அத்தைக்காக மாத்திரமில்ல.. எனக்கும் பாப்பா வேணும்." என்றவள், வெட்கத்தில் அவன் மார்புக்குள் தன்னை ஒழித்து கொண்டவள் தாடையினை பற்றி தன்னை பார்க்க வைத்தவன்,



"தாரை!.." என
அழைத்தவாறு
அவளை இறுக கட்டிக்கொண்டு,


"உண்மையாவே இது என் தாரை தானா? என்னால நம்பவே முடியல" என கட்டிலில் அவளை புரட்டி போட்டவன், அவளது கண்களையே ஊடுருவி,



"நிஜமாவா தாரை நீ கேட்டது?" என்றான் சந்தோஷத்தோடு.
வெட்கத்தில் முகம் சிவந்து போனவள் வார்த்தையாய் பதில் கூற முடியாமல் ஆம் என்பதாய் தலையினை அசைத்தவள் அவனுக்குள்ளேயே ஒழித்துக்கொண்டாள்.



"அப்போ உனக்கு சம்ம....." என்ன கேட்க வருகிறான் என புரிந்து கொண்டவள், அவன் வாயில் கை வைத்து பேச விடாது மூடியவள் கைகளை கடித்தான்.

கைகளை இழுத்து கொண்டவள்,


"ச்சீ.. விடியப்போகுதுடா பொறுக்கி!" என்றாள்.


"அடியேய்...! என் செல்ல ராட்ஷசி! இன்னுமாடி என்னை பொறுக்கி என்கிறத விடல.." அவளை இறுக கட்டிக்கொண்டவன்
,


"இன்னைக்கு காட்டுறேன்டி இந்த பொறுக்கி எப்பிடி என்கிறத..." அவள் உதடுகளை முற்றுகையிட்டான்,


உதட்டினில் ஆரம்பித்த முத்த வேட்டையானது வேட்கையாகி.... அவள் உடல் முழுவதும் தன் உதடுகளால் ஓவியம் வரைந்
து,
முதல் கூடலினை கவியாய் வடித்தே விடுவித்தான்.



அத்தனை நேரமும் போராடிய போராட்டத்திற்கு நிதானமாக மூச்சினை உள் வாங்கிக்கொண்டவன்,
தன்னவளை நெஞ்சினில் போட்டு, உச்சம் தலையில் முத்தம் வைத்தவன்.


"தாரை! என அழைத்தான்.


"ஹூம்...." என முணங்கலை பதிலாக அளித்தவள் தாடைமேல் கை கொடுத்து தன்னை பார்க்க வைத்
து கண்ணடிக்க.


"ச்சீ... போடா பொறுக்கி" என்றவாறு அவன் நெஞ்சின் முடியினை பற்கலாய் கடித்திலு
க்க.



"ஏய்....! வலிக்குதுடி" என்றவனை.


"இதை தானே நானும் சொன்னேன். கேட்டியாடா பொறுக்கி!" என குற்றம் சட்டியவள் பேச்சில் பெரிதாக சிரித்தவன்,



"வலிக்குதுனு சொல்லுற நேரமாடி அது?" என்றவன் அவள் முதுகினை வருட,
அவன் கையினை தட்டி விட்டவள்
,


"போடா பொறுக்கி! பொறுக்கி!" என்று சிணுங்கினாள்.


"என்னடி ஆச்சு திடீர்ன்னு? இதை நான் கொஞ்சமும் எதிர் பாக்கலையே!" என இப்போதும் நம்ப முடியாமல் கேட்க.


"சொல்ல மாட்டேன் போடா!"
என்றாள் மீண்டும் சிணுங்கி.


"சரி விடு சொல்லாத."


"இல்லை நான் சொல்லுவேன்." என சிறு பிள்ளை போல் மாற்றி மாற்றி பேசியவள்.


"லவ் யூ டா பொறுக்கி." என்றாள்
.
முதல் முறை அவள் வாயால் காதல் வார்த்தை கேட்டவன்,



"லவ் யூ டி ராட்ஷசி! என்னால இதை எல்லாம் நம்ப முடியலையே! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தராளே!
எப்பவுமே வில்லனை பாக்கிறது போல தானே பொண்டாட்டி பாப்ப..., இன்னைக்கு லவ் மூடுக்கு எப்பிடி வந்த?"


"அது தான் சொன்னேனே! உங்க அம்மா தான் காரணம்னு." என்றவள் நடந்த எல்லாவற்றையும் சுருக்கமாக கூறிவிட்டு.



"தேனு மட்டும் சரியான டைம்க்கு எனக்கு புரிய வைக்கலனா கடைசி வரைக்கும் மக்காவே இருந்திருப்பேன்.



எனக்கே இப்போ தான் புரியுது. என்னையே அறியாமல் உங்களை எந்தளவுக்கு விரும்பியிருக்கேன்னு.
என்னடா பொறுக்கி பண்ணா என்னை?
அத்தானையே மறக்க வைக்கிற அளவுக்கு என்கிட்ட பொறுக்கிதனம் பண்ணியிருக்கியா?" என்று செல்லக் கோபம் கொண்டாள்.

"நான் எதுவுமே பண்ணலையே! நீ தான்டி அந்த கண்ணால என்னை கவுத்துட்ட..
உன்னை எப்போ பாத்தேனோ அப்பாே கவுத்தவன்
தான்...
உன்னை தொட்ட இந்த கையால வேற பொண்ணை தொடவே பிடிக்கலடி." என்றவனை மைலி முறைக்க.


" சத்தியமாடி... உன்னை பாத்த அன்னையில இருந்து எந்த பொண்ணையுமே நான் தொட்டது கிடையாது.


அன்னைக்கு என்னோட அறையில நீ பார்த்த பொண்ணை கூட நான் தொடல." என்றவனை நம்பாது பார்த்தாள்.
 
Top