• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

49. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
670
மதியால் அவன் மாற்றங்களை நம்ப முடியாது மிரட்சியாய் பார்த்திருந்தவள்,



பயத்தில் அவன் கையை விடுத்து, சற்று தள்ளியே நின்று கொண்டாள்.



"என்ன மாட்டிக்கிட்டேன்னு பயமா இருக்கா?



கவலையே படாத!



நீ நினைக்கிறது தான் நடக்க போகுது." என்று அந்த இடமே அதிருமளவு சிரித்தவன்,



உன்னை என் திட்டத்துக்கு ஏன் யூஸ் பண்ணேன்னு தெரிய வேண்டாமா?



நான் யாருன்னு தெரியுமா? இல்ல என் நிலமை தான் தெரியுமா?



ரொம்பவே வசதியான குடும்பத்து ஒரே வரீசு நான்.



என் சந்ததியே பரம்பரையா முடிசூடா அரசவம்சம்.



என்னை விட திறமையானவன் யாருமில்லன்னு இருந்தவன் நான், ஆனால் உன் கருவாய்பய அண்ணன்....." என்று தன் கதையை ஆரம்பித்தான்.



உண்மையில் தீபன் பெரும் செல்வந்தரின் வாரீசுதான்.



தந்தை பெரிய தொழிலதிபர்.



அவர்களுக்கு ஒரே மகன், ஒரே மகன் என்பதனால் அந்த குடும்பமே அவனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது.



அவர்களது அளவுகடந்த செல்லத்தினாலே அவன் பிடிவாதமும் அதிகமானது.



எல்லாவற்றிலும் தனக்கு கீழ் தான் மற்றவர்கள் என நினைப்பவன்,



அவனை விட யாராவது சிறமையானவர்களாக இருந்துவிட்டால் அவர்களுடன் சண்டைக்கு போவான்.



பணத்தை வைத்து அவர்களை விலைக்கு வாங்கிவிடுவான்.



அப்படியும் அவனுக்கு பணியவில்லை என்றால் தகராறில் இறங்கி சட்டத்தில் சிக்கிக்கொள்வான்.



மகன்மேல் உள்ள பாசத்தால் தந்தையும் அவனை மீட்டுவிடுவார்.



அவன் வளரவளர அவனது இந்த குணமும் வளர்ந்து கொண்டே போனது.



அவன் பெற்றோரும் வளர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கவனிக்க தவறி விட்டனர்.



இவனுக்குமே பொறியியல் துறைக்கு மொறட்டுவ பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது.



ஆனால் இவன் நினைத்தது போல் அங்கில்லை.



அவனை விட பல திறமையானவர்கள் அங்கிருந்தனர்.



அப்படி இருந்தால் தான் அவனுக்கு பிடிக்காதே!



அதுவும் முகிலனை சொல்லவே வேண்டாம்.



மற்றவர்களை மிரட்டுபவனால் முகிலனை எதுவும் செய்யமுடியவில்லை.



ஏன் விளையாட்டில் கூட அவனே முன்னிலையில் வந்தான்.



எதற்கெடுத்தாலும் யாராக இருந்தாலும் முகிலனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அவனை தான் கைகாட்டுவார்கள்.



எந்த ஒரு போட்டி நடந்தாலும் அதில் முகிலனது பங்கேற்பில்லாமல் அந்த நிகழ்வு இருந்ததில்லை.



முதல் ஆண்டு மாணவனாக இருந்தாலும் அனையே தலமைதாங்க அழைப்பார்கள்.



அன்று கிரவுண்டில் முகிலன் புட்போல் விளையாடிக்கொண்டிருக்க, அவனை கண்ட தீபனுக்கு, அவனை விட தான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்,



சொல்லப்போனால் தன்னை விட, வசதியிலும் சரி, அழகிலும் சரி



தன்னை எட்டிப்பாடிக்க முடியாதன் தனக்கு போட்டியா? என நினைத்தவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
தானும் விளையாட போவதாக கூறி, பந்தை தாறுமாறக அடித்தான்.

அவனது தாறுமாறான அடியில் முகிலனுக்கு அடிபட்டது


.
மற்றவர்கள் தீபனை குற்றவாளியாக்க,



அவனோ தன் தவறை ஒப்புக்கொள்ள மறுத்தோடு, முகிலனையும் அவர்களையும் தாக்கத்தொடங்கினான்.

அதை கண்ட சிங்கள மாணவர்கள்,


அவனை பொலீஸில் பிடித்து கொடுத்தனர்.



அதன் பிறகு அவன் முகிலனிடம் பிரச்சினை வைத்துக்கொள்வதில்லை.
அந்த கல்லூரியில் அவனுக்கு செல்வாக்கு அதிகம் என்பதால், நேரடியாக முண்டினால் தனக்குத்தான் ஆபத்து என அறிந்தவன் அவனை பழிதீர்ப்பதற்கு தகுந்த சமயம் எதிர்பாத்திருந்தான்.



எப்படியோ ஒருவருடம் ஓடி விட அன்று புது மாணவர்கள் உள்வாங்கும் நாள்.

அங்கிருந்த தன்


பெஞ்சில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த திபன் எதேற்சையாக நிமிர்ந்த போதுதான் அவளை கண்டான்.



பிங்க்கலர் சுடிதார் அணிந்த தேவதை, பயந்தில் மெல்ல மெல்ல நடந்து வருவதை பார்த்தவன் அவள் அழகில் மெய்மறந்து நின்றான்.



அவளை பார்த்த மறுநொடியே அவளை தன் மனைவி ஆக்கிடவேண்டுமென்று முடிவெடுத்து விட்டான் .



அவனை கடந்து முன்னே சென்றவளை,
"ஹேய்... பியூட்டி" என்று அழைப்பதற்கு வாயெடுத்த நேரம்.



வர்ஷா.. என அழைத்தவாறு அவள் அருகில் வந்தான் முகிலன்.



வந்திட்டிங்களா முகில்....? நான் பயந்திட்டே வந்தேன், எப்பிடியும் நீங்க உதவி பண்ண வருவீங்கன்னு தெரியும், இருந்தும் இனம் புரியாத பயம்,
சரி வாங்க போகலாம்." என்று அவனை அழைத்து சென்றவளையே வெறித்திருந்தான் தீபன்.

'


இவளை இவனுக்கு முன்னாடியே தெரியும்..?



இதில கூட என்னை முந்திட்டல்ல? விடமாட்டேன்டா!



இவ உனக்கு யாராக இருந்தாலும் உன்கிட்டயிருந்து நான் பிரிக்கிறேன்." என்றவன்,



அவர்கள் உறவு என்னவெனாபதையும், ஒரு வாரத்துக்குள் கண்டுபிடித்தான்.



யோகலிங்கம் உதவி செய்த மாணவர்களில் வர்ஷாவும் ஒருத்தி.

முகிலனிலும் ஒருவயது இளமை!


முதலில் நற்பாகியவர்கள், ஆண்டுகள் நகர காதலானது.



முகிலன் தான் முதலில் தன் காதலை வெளிப்படுத்தினான்.

'உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை

அதோடு
அவன் தந்தை அரசியல்வாதியும் கூட,
நாளை படிப்பு முடிந்ததும் தன் செல்வாக்கை பயன்படுத்தி வேலையில் சேர்ந்து கொள்ளலாம்' என அந்த வயதிலேயே சுயநலமாக நினைத்து முகிலன் காதலுக்கு சம்மதித்தாள்.



முகிலன் ஊரிலிருந்து வருவதற்கு மறுத்ததே தன் காதலை பிரிந்து வர முடியாமல் தான்.
ஆனால் அவளோ,
"போய் வா முகில், நான் உனக்காக காத்திருப்பேன். தினமும் கடிதம் போடு, நானும் போடுறேன்" என்று அவனை சமாதாணம் செய்து அனுப்பினாள்.



அதன் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை, கடிதம் தான் அவர்கள் இருவரின் மனங்களை பறைசாற்றும்.



முகிலன் எழுதும் கடிதத்தில் அத்தனையும் உணர்வு பூர்வமாகவும், அவளை காணாத ஏக்கங்களையும் சுமந்துநிற்கும்.



வர்ஷா எந்த உணர்வும் இல்லாமல் ஏதோ கடமையெனவே எழுதுவாள்.

அவனது பொறியியல் கல்வி கூ வர்ஷாவின் ஆசையே!


அவளது புகைப்படங்கூட அந்த கடிதம் தான் சுமந்துவரும்.



அதை வைத்து தான் முகிலன் அவளை அடையாளம் கண்டு கொண்டதே.



முகிலனது புகைப்படம் இதுவரை வர்ஷா கேட்டதில்லை. அவனும் தன்னை அவர் பாரத்தால் ஏற்பாளோ என்ற பயத்தில் அனுப்பவும் இல்லை.



அந்த கல்லூரியில் யாரையும் அவளுக்கு தெரியாது, தன் பெயரை கூறி இங்க அழைப்பதென்றால் அது முகில் தான் என்று சரியாக கணித்தவள், தன் முகச்சுழிப்பை அவனிடம் காட்டிக்கொள்ளாது இயல்பாகவே பேசினாள்.
இந்த ஒருவாரமாக முகிலனிடம் அவள் பேசி தீபன் காணவில்லை.



இவர்கள் கதையறிந்தவன், வர்ஷாவின் செயல்களை கண்டு தனக்கிருக்கும் சந்தர்ப்பத்தை இந்த இதே இடைவெளியில் நிரப்பவேண்டுமென நினைத்தவன், தன் சதி வலையை பின்ன தொடங்கினான்.



தினமும் பலவித தோறணையுடன் வர்ஷா முன் செல்பவன், அவளை கவனிக்காதவன் போல அவளை கவர்வதற்காகவே பல வித்தைகள் செய்வான்.
தன் தோற்றத்தை முகிலன் தோற்றத்தொடு ஒப்பிட்டு தன் நண்பர்களிடம் கேவலமாக பேசுபவன், தன் செல்வச்செழிப்பினையும் அதே சமயம் எடுத்துரைப்பான்.
இன்று ஒரு காரில் வந்தால், நாளை வேறொரு காரில் வருவான், இப்படி வர்ஷாவின் கவனம் தன்மேல் படும்வரை தன் முயற்சியை கைவிடவில்லை.



ஒரு மாத காலம் வரை அவன் போராட்டம் தொடர்ந்து,
அதில் வெற்றியும் கண்டான்.



முதலில் ஹாய் என்றவள், பின் ஹலோ கூறி, காதலாய் மாறியது.



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசுப்பொருள் கொடுத்து, அவளை அசர வைப்பான் தீபன். அதில் வைரமோதிரமும் உள்ளடக்கம்.



இப்படியே இரண்டு மாதங்கள் கடந்திருக்க,



இதை எதையும் அறியாத முகில் படிப்பிலே கவனம் செலுத்தியதால் இவர்கள் காதல் கதை அறியவில்லை.

தீப


ன் வர்ஷாமேல் காதல் கொண்ட விஷயம் அவன் நெருங்கிய நண்பன் ராகுல் மாத்திரமே அறிவான்.



அவனும் பவித்ரா என்ற பெண்ணை இந்த ஒரு ஆண்டாக உயிராக காதலித்து வந்தான்.
அவள் மூலமாக தான் இந்த விஷயமும் ராகுலுக்கு தெரியவந்தது. தன் நண்பனை நினைத்து கவலை கொண்டவன், தனக்குள்ளே மறைத்து வைக்க தெரியாது முகிலனிடம் கூறினான்.



அவனோ நம்பாமல் ராகுலிடம் தான் சண்டைக்கு போனான்.



அதன் பிறகு அந்த பேச்சை ராகுல் எடுப்பதில்லை. ஒரு நாள் இடைவேளை நேரம் கிரவுண்ட் பக்கம் போகும் போது தான் அந்த காட்சியை கண்டான்.
ஆம்...
இருவரும் படிகளில் நெருங்கி இருந்து, வர்ஷா கையில் தீபன் முத்தம் வைத்த காட்சியை கண்டவன் அப்படியே இடிந்து விட்டான்.
தான் காண்பது உண்மை தானா என்பதை இப்போதும் கூட அவனால் நம்ப முடியவில்லை.



ராகுலின் குரல் பின்னாலிருந்து அவனை அழைத்ததும் தான் அவனால் உண்மையை உணர முடிந்தது.



ஆத்திரம் பொங்க அவர்கள் அருகில் சென்றவன்,
வர்ஷா..... என்று சத்தமாக அழைத்தான்.



அவன் கத்தலில் அவர்கள் மட்டுமல்ல, அங்கு விளையாடிக்கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் அதிர்ந்து என்னானது என்று ஓடி வந்தனர்.

"


என்ன வர்ஷா இதெல்லாம்...?" என்றான் கோபமாக.




"எது முகில்?" என்றாள் அவளும் அலட்டிக்கொள்ளாது.

"


நீ இப்போது பண்ண காரியம்"

"உ


னக்கு நான் விளக்கம் சொல்லணும்ன்னு எந்த கட்டாயமும் எனக்கில்ல முகில்? இருந்தாலும் என்னோட இந்த நிலைக்கு உன்னோட அப்பா காரணமா இருந்ததனால அவர் மகன் நீ என்கிறதனால சொல்லுறேன்." என்றவள்,

"


நானும் தீபனும் விரும்புகிறோம்." என்று அவனை கேவலமான பார்வை பார்த்தவாறு.



அவனோ கலங்கிய விழிகளுடன்,
'அப்போ நான்.....?"

"


நீயா......?
என்ன முகில் விளையாடுகிறாயா...? நான் உன்னை கதலிக்கிறதா..?"
என அவன் கையை பிடித்தவள், கையை திருப்பி காட்டி, இந்த கைக்கும், அந்த கைக்கும் ஒத்துப்பே்குதா? அண்டங்காக்கா கலரில இருந்திட்டு, உனக்கு நான் கேட்கிறேனா?. என்றாள் ஏழனமாக,



அவள் பேச்சில் குறுகிப்போனவன்,
"அப்போ சின்ன வயசில இருந்து உன்னையே நினைச்சிட்டு, ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேனே வர்ஷா!
நீ கூட என்னை காதலிக்கிறதா வாக்கு குடுத்தேல்ர, அதுக்கு பதில் என்ன வர்ஷா?"
"நல்லி இருக்கு உன் பேச்சு!
சின்ன வயதில் அதுவும் அறியா வயதில் ஆயிரம் பேசியிருப்போம். அதை இப்பவும் உண்மைன்னு நினைச்சிட்டிருக்கிறது உன்னோட தப்பு.
சின்ன வயசில நிறைய பேரு ஓலையில தாலி கட்டி விளையாடியிருக்காங்க, அவங்க எல்லாரும் இப்பாே தாலிகட்டி குடும்பமா நடத்திட்டிருக்காங்களா?



சுத்த பைத்தியகார தனமால்ல இருக்கு." என்றாள்.

"


அது..... அதை விடு வர்ஷா! இத்தனை நாளன என்கூட கடிதத்தில பேசிட்டு இருந்தியே, அதோட அர்த்தம் என்ன?"

"


நீ கேட்டதிலே உலுப்படியான கேள்வி இது தான் முகில்,

என்னோட


கடிதத்தில எந்த இடத்திலயாவது உன்னை நான் கல்யாணம் செய்துக்கிறேன்னோ, காதலிக்கிறேன்னோ எழுதியிருந்தேனா?" என்றள் கேள்வியாய்.



அவள் கேள்வியில் இல்லை என்பதாய் அவன் தலையசைக்க,

"


இப்போது புரியுதா...? நீ தான் என்மேல ஆசைப்பட்ட, நான் இல்லை.



கொஞ்சம் யோசிச்சு பாரு முகில், உனக்கும் எனக்கும் பொருத்தம் வருமா?



ஒட்டகச்சிவிங்கிபோல வளர்ந்து வளைஞ்சிருந்த போததாது.. என்னை விரும்புற அளவுக்கு உனக்கும் தகுதி இருக்கான்னு யோசிக்கணும்,



வேற்று கிரகவாசிபோல இருக்குற உனக்கு என்னை பிடிக்கிறதில ஆர்ச்சரியமில்ல. அழகான பொண்ணை பார்த்து ஆசை வரதும் வழமைதான், ஆனால் நீ யோசிக்க வேண்டாமா? இவ நாம அவளுக்கு தகுதியானவனான்னு.



இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்,
இதுவரை நீ கண்ணாடியே பார்க்கலையா முகில்? ஏன் கேட்கிறேன்னா,
உன்னை சாதாரண பொண்ணுங்களே திரும்பி பார்க்க மாட்டாங்களே, நான் எப்பிடி பார்ப்பேன்னு நினைச்ச?
நீ தூரத்தில் வரதை கண்டுட்டு உன் முகத்த பார்க்ககூட பிடிக்காம தலைகுனிஞ்சு தான் போவாங்க முகில்.
இதுவரைக்கு ஒரு பொண்ணு உன்னை காதலிக்கிறதா சொல்லியிருக்காளா...? இல்லை அப்படி ஒரு பார்வை தான் பார்த்திருக்காங்களா?,
இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு மூஞ்சி உன் முஞ்சி,



இதில நான் மட்டும் காலம் பூரா உன்முகத்தை பார்கணுமா?" என்றவள் பேச்சில் அவன் குன்றிப்போய் தலை நிமிராது நின்க,

"


எவ்வளவு பேசுகிறேனே எதுக்காவது பதில் சொல்கிறானா?
காசுமில்லை..., அழகுமில்லை...., இதில இவருக்கு காதல் ஒரு கேடு!" என்றவள்,
"நீ வா தீபன்!. சாக்கடை பக்கத்தில நின்னா அதோட நாத்தம் நம்ம மேலயும் ஒட்டிக்கும்" என்றவள் அவனை கடந்து செல்ல,



நின்று முகிலனையே வஞ்சமாய் பார்த்து சிரித்த தீபன்,




"சரியான தண்டனை! எப்படி என் திட்டம்?
உன் காதலியையே உனக்கு எதிரா எப்பிடி திருப்பி விட்டேன் பார்த்தியா? எல்லாம் எதனாலன்னு நினைக்கிற? பணம் பாதாளம் வரை பாயும்.
உன்னோட காதல் வரை பாயாதா என்ன?" என மட்டும் கேட்க்கும் குரலில் கூறியவனும் விலகிச்சென்றான்.

அத்தனை பேர் முன்பும் வர்ஷா கேவலமாக பேசிவிட்டு போனதன் பின்னர் இத்தனை நாள் இருந்த


நற்பெயர் அடியோடு அற்றுப்போனதை போல் உணர்ந்தவன், தலை குனிவுடனே விலகிச்சென்றான்.



மனம் பூராகவும் வலி.
'இதற்குமேல் வர்ஷா படிக்கும் கல்லூரியில் தான் படிப்பது சரிவராது.' என நினைத்தவன் தன் பெட்டியை கட்ட,



அவன் பின்னால் வந்த ராகுல்.
"எங்கட கிளம்பிட்ட? உன்னை அசிங்க படுத்தினவளுக்கு எந்த விதத்திலும் நீ குறைஞ்சவனில்லன்னு காட்டணும்டா, அதுக்கு நீ நல்லா படிச்சு பெரிய பதவிக்கு வரணும், இது தான் நீ அவளுக்கு கொடுக்குற பதிலடி. இதைவிட்டுட்ஞு ஓட பார்க்கிற?" என்றான்.

"


என்னால முடியாதுடா! ஏற்கனவே அவளோட பேச்சில செத்துட்டேன், இனி படித்து என்னத்த சாதிக்க போறேன்.



நம்பினேன்டா....! முழுசா அவளை நம்பினேன். பணமும் தோற்றமும் தான்டா இப்போ பெருசா போச்சு, மனசெல்லாம் செல்லா காசா போச்சு.." என்று உடைந்து அழுதவனை தேற்ற வழி தெரியாது திணறியவன், அவன் குடும்பத்தை காரணங்காட்டியே தங்க வைத்தான்.



ஆனால் ஒரு இயந்திரமாகவே மாறினான்.



படிப்பு, படிப்பு முடிந்தால் ரூம்... இது தான் அவன் வாழ்கையானது.
அதனாலேயே நண்பனது மாற்றங்களை கவனிக்க தவறிவிட்டான்.



இரண்டு மாதங்கள் கடந்து விட்டிருந்தது.


வர்ஷாவின் வார்த்தைகள்


எப்போதும் அவன் எண்ணத்தில் வந்து போவது வழமையானது.
அவனை அவனே பட்டை தீட்டிக்கொள்ள தூண்டும் வார்த்தைகள் தான் அவை.



கனவில் கூட அதே வர்த்தைகளை கேட்டு கண்விழித்தவன், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ராகுலது உடலில் தான் விழித்தான்.

அதிர்ச்சியில்


அவன் மேல் இருந்து கண்ணை அசைக்க முடியவில்லை.
முதலில் கண்டது கனவா? இல்லை இது தான் கனவா? என்று சிலைபோல் சிறிது நேரம் உறைந்து போனவன், தனக்கிருக்கும் ஒரே அறுதலானவன் இந்த நொடி இல்லை என்பதை தாங்காது,
"ராகுல்......." என்று அலறினான்.



அவன் கத்திய கத்தலில் பக்கத்து அறையில் இருந்த மற்றைய மாணவர்கள் எல்லாம் ஒன்று கூடி அவன் அறை கதவை தட்ட, வேகமாக ஓடிசென்று திறந்தவன், மீண்டும் அவன் காலை கட்டிக்கொண்டு கதறியழத்தொடங்கினான்.

"


என்னடா ஆச்சு...? எதுக்குடா இப்பிடி பண்ணா...?
நீ தான் எதுக்குமே கவலைபட மாட்டியேடா?
உன்னோட இந்த முடிவுக்கு என்னடா காரணம்?
நான் உடைஞ்சு போய் இருக்குறப்போ கூட நீ தானேடா ஆறுதல் சொன்னா?
அவ்வளவு தைரியம் எல்லாம் எனக்கு சொல்லிட்டு நீ இப்படி பண்ணிட்டியேடா?
இனி எங்க வந்துடா உன்னை நான் பாப்பேன்?
இனி எனக்கு ஆறுதல் சொல்ல யார்டா இருக்காங்க..?" என்று கதறியழுதவனை அவன் ஆண்டு மாணவனே ராகுலிடம் இருந்து பிரித்தான்.

"


டேய் முகில்! இது போலீஸ் கேசுடா! நீ அவனை இப்பிடி கட்டி பிடிச்சு அழுது, உன் கைரேகை எல்லாம் படிஞ்சா உன்மேல தான்டா பழி விழுகும். கொஞ்சம் பொறுமையாக இரு! போலீஸ்க்கு தகவல் சொல்லியாச்சு வந்திடுவாங்க" என்றவும்.

"


அவன் உயிர் நண்பன்டா! அவனை இந்த நிலையில என்னால பார்க்க முடியலைடா! முதல்ல அவனை கீழே இறக்குங்கடா... ப்ளீஸ்.... என்க,

"


அவனை வெளியே கூட்டிட்டு போங்கடா!" என்றனர் மற்றைய மாணவர்கள்.
அங்கு பெரும் மாணவ கூட்டமே கூடிவிட்டது.
முகிலனுக்கு இத்தனை நாள் ஆறுதல் கூறியவன் இன்று இறந்து கிடக்க, இப்போது ஆறுதல் கூறி தேற்ற எவருமின்றி அழுதே கரைந்தான்.



பாவம் எதை நினைத்துத்தான் அவனால் அழமுடியும்?



காதலையும் , நட்பையும் ஒரே நேரத்தில் தாரைவார்த்து விட்டானே!
சிறிது நேரத்தில் அங்கே வந்த போலீஸ் அவனது உடலை இறக்கி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியவர்கள், அவனுடன் யார் தங்கியது என்று கேட்டனர்.



எல்லாேரது கையும் முகிலனையே காட்ட, அவனிடம் வந்த போலீஸ்மா அதிபர் அவனை பார்த்துவிட்டு,



"


நீ தமிழா..?" என்று சிங்களத்தில் கேட்க.



அவனும் ஆம் என்பதாய் தலையசைத்தான.
தன்னோடு வந்த மொழிபெயர்பாளரை அழைத்தவர், சிங்களாத்தால் சொல்ல. அவர் மொழிபெயர்த்து சில கேள்விகளை அவனிடம் கேட்டார்.



அவனும் தடுமாறாமல் பதிலழிப்பதையும் அவனையுமே பார்ததவர், அந்த அறை பூராகவும் அவன் இறப்புக்கான காரணம் ஏதாவது இருக்கிறதா என்று தேடும் போது அவன் பெட்டியில் இருந்து இரண்டு கடிதங்கள் விழுந்தது.



ஒன்று என் உயிர் நண்பன் முகில் என்று எழுதப்பட்டிருக்க,
மற்றையது பொதுவாக,
தான் இறப்பதற்கு யாரும் காரணங்கிடையாது, எனக்கு மூன்று நாட்களாக தாங்க முடியாத வயிற்று வலி, அதனால் என்னால் அதை தாங்க முடியவில்லை. அதனாலயே தான் இந்த முடிவை எடுத்தேன்." என்பது எழுதியிருக்க,



அதை படித்த மொழிபெயர்பாளர், சிங்களத்தில் சொல்ல. அவனது கல்லூரி குறிப்பு புத்தகங்களை எடுத்து கையொழுத்து சரியாக இருக்கிறதா? என்று பார்த்தவர்கள், அந்த நோட்டினையும் கையோடு எடுத்து கொண்டு முகிலனுக்கு எழுதிய காகிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.



அதை பிரித்து படித்தவனோ அதிர்ந்தான்.

'


என் நேசத்தை பங்காளனான நண்பனுக்கு' என்று ஆரம்பித்தருந்தவன்,

'


நீ இதை படிக்கும்போது நான் இருக்க போவதில்லை....



என்னவோ தெரியவில்லைடா!... எனக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை.



எனக்கென்று இருந்த என் பவித்ராவிற்கு என்னை பிடிக்கவில்லை. என்னை வேண்டாம் என்றுவிட்டு, வெளிநாட்டில் யாரோ ஒருவனுடன் அவளுக்கு திருமணமாம், இதை கேட்ட நாளிலிருந்து என்னால் இயல்பாக இருக்கமுடியவில்லை.



ஏன் உன்னிடம் கூட சொல்லி ஆறுதல் தேட எனக்கு முடியவில்லை, நீயே உன் காதலியின் வார்த்தை நத்த வலியில் சுற்றும் போது, என் வலியையும் உன்மேல் திணிக்க எனக்கு இஷ்டமில்லை.
அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்.



மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் போது இருக்கும் தைரியமும், தன் நம்பிக்கையும் தனக்கென்று வரும்போது அதை மனம் ஏற்க மறுக்கிறது.
நீ எந்தளவு வலியுடன் இருக்கிறாய் என்பது இப்போது தான் என்னால் உணரமுடிகிறது.
இருந்தாலும் உன்னை பாராட்டித்தான் ஆகவேண்டும்,

ஒரு வடிடக்காதலே இந்த அளவிற்கு வலி தரும்போது,


உனக்கு எந்தளவிற்கு வலித்நிருக்கும்?



இனியும் உனக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்க மாட்டேன், மனம் உடைந்து நீ கலங்கும் போதெல்லாம், என்னைப்போல் கோழையாய் முடிவெடுக்காது, இந்த கடிதத்தை படித்து உன்னை நீயே திடப்படுத்தி கொள்ளுடா! என் உயிர் என்றும் உன்னுடன்...



இப்படிக்கு உன் ஆருயிர் தோழன் ராகுல்...' என்றெழுதியிருக்க.
முகிலனோ முற்றிலுமாக உடைந்தே விட்டான்.



தன் அறையையும் அவன் தொங்கிய இடத்தையும் பார்த்து பல மணி நேரமாக அழுதவன்,
ஒரு முடிவெடுத்தவனாக இந்த பெண்களே பணம் என்ற ஒன்றையும், அழகையும் வைத்துத்தான் அவர்கள் மனங்களையே கணிக்கிறார்கள் என்றவாறு அந்த கல்லூரியிலே இருந்தால் தான் தோற்று விடுவேன் என்ற வெறியோடு கிளம்பியவன் தான்,

அவன்


தொடங்கிய புடவை வியாபாரமே தீபனது கம்பனியை உடைக்கத்தான்.



இப்படியே ஒவ்வொன்றாக தாெடங்கியவன், தீபன் தந்தையினது அத்தனை பிஸினஸ் அனைத்தையும் உடைத்து தரைமட்டமாக்கி உச்சத்தை அடைந்தான்.



தீபனது தந்தையினது கம்பனி முகிலனது வளர்சிக்கு முன் காணமல் போனது.



அவரும் கடனையுடனை வாங்கி மீண்டும் தொடங்கினால், அதையும் காணமல் செய்வது தான் முகிலன் வேலையே.
தீபனது பணத்திமிரை அடக்கவேண்டும் என்பது தான் அவன் லட்சியம்.



நாள்கள் கடந்து போக, சரிவிற்கு யார் காரணம் என்பதை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருக்கும் முகிலனே காரணங்காட்ட, இத்தனை காலமாக தொழிலுக்கு வாராதவன், முகிலன் பெயரை கேட்டதும் தானாகவே முன்வந்து தந்தை தொழிலை ஏற்று நடத்தினான்.
ஆனால் பலன் என்னவோ பூச்சியம் தான்.



அப்போது தான் தன் கம்பனியில் வேலை செய்யும் பெண்ணிற்கும், முகிலனுக்கும் திருமணம் என்று மேகலா கூற,

பெண்


யார் என்பதை ஆராய்ந்த போது, ஏற்கனவே தான் அவளிடம் தான் காதலைசொன்னதும், அவள் நிராகரித்ததும் நினைவு வந்தது.
அவளை வைத்தே முகிலனை அத்தனை பேர் முன்பும் அசிங்க படுத்த வேண்டும் என்று நினைத்தவன்,
தன் நாடகத்தை முகிலன் கெட்டவன் போல் பானுவிடம் அரங்கேற்றினான்.



அவன் திட்டமே மணமேடையில் முகிலன் தாலி கட்டும் சமயம், அதை தடுத்து பானு கழுத்தில் தான் தாலி கட்டி அவனை ஜெயிக்க வேண்டும்,
இந்த அசிங்கத்தால் காலம் பூரகவும் அவன் ஒன்டிக்கட்டையாக வாழவேண்டும் என்பது தான்.



ஆனால் மண்டபத்துக்கு வந்தவன் மதியை பார்த்து விட்டு, பானுவை திருமணம் செய்வதை விட மதியை செய்து காலம்பூராகவும் தன் அடிமையாக வைத்திருந்தால் முகிலன் ஆணவத்தை அடக்குவதுடன், இத்தனை காலமும் சோமித்த முதலிடத்தையும் மதியை காட்டியே முகிலனிடம் இருந்து பிடுங்கிவிடலாம்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய். என்று நினைத்தவன் பானுவை விட்டு விட்டு, மதியிடம் தன் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினான்.



தன் கேவலமான சுயசரிதையை மதி கேக்காமலே சொல்லிக்கொண்டிருந்தவனை, நம்பவே முடியாமல் ஒரு வித பயத்தில் அந்த மங்கல் வெளிச்சத்தில் அவனை முகத்தையே ஊடுருவியவளுக்கு அவனது அத்தனை கோபமான வெறிகொண்ட முகமே சொன்னது அவன் தன்னை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை.



அத்தனையும் உண்மை, உன்னை வைத்தே உன் அண்ணனை பழிதீர்க்க போகிறேன் என்று.



இருந்தும் அவன் சொன்ன கதையில் ஏதோ ஒரு விடையம் அவளை குடைய தயங்கியவாறே அவனிடம் கேட்டாள்.



"அப்படின்னா அந்த வர்ஷா இப்போ...?"
அவளை என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்...?



எனக்கு அவள் தேவைப்பட்டதே முகிலனை பழி தீர்க்கத்தான்.
அவன் காதலி எனக்கு மகாராணியா இருக்க முடியுமா?



என் பருவப்பசியை அவகிட்ட தீர்த்துக்கிட்டேன், அவ்வளவுதான்....



சொல்லப்போன அவ ஒரு லைன் பஸ் போல,
என்னோட இடம் வந்திச்சு, நான் இறங்கிட்டேன்." என சாதாரணமாக சொன்னவனை அருவருப்பாக பார்த்தாள்.



'இவனையா


இத்தனை நாளன காதலிச்சேன்.



இவன் பொண்ணுங்கள பத்தி என்ன நினைச்சிட்டிருக்கான்?



தன்னோட தேவைக்கு போட்டுட்டு தேவையில்லா நேரம் கழட்டிவிடுற ட்ரெஸ்ன்னா..?
இல்லை...



இவன் திட்டம் நடக்காது.



அண்ணனை நீ பழிவாங்க போறியா? அதையும் தான் பார்க்கிறேன்.' என்று தனக்குள் சபதமெடுத்தவள்,

"


உன்னோட கேவலமான எண்ணத்துக்கு தான்டா நீ இப்படி இருக்க,

அப்பவும்


அண்ணி உன்னை பத்தி எடுத்து சொன்னாங்க,



உன்னை நம்பி நான் தான் அவங்களை கடைசிவரை புரிஞ்சுக்கல,



இனி அவங்களை நான் பார்பேனான்னும் தெரியாது,



அவங்ககிட்ட கேட்க முடியாத மன்னிப்பை அந்த ஆண்டவன்கிட்ட கேட்டுக்காறேன்.


ஆனால் நீ நினைக்கிற எதையும் நடக்க விடமாட்டேன்.



இங்கயிருந்து போறதுக்கு எனக்கு வழியும் தெரியாது, நீயும் போக விடமாட்ட,
ஆனா இந்த உலகத்தை விட்டு நான் போறதை உன்னால தடுக்க முடியாது." என்றவள்,



அருகில் இருந்த அரலிமரத்தின் காயை பிடிங்கி கடித்து மெல்லவதற்கு முன் அந்த உடைந்த வீட்டில் மறைவிலிருந்த அவனது அடியாற்கள் இருவர் ஓடிவந்து, அவள் வாய்க்குள் கைவைத்து அதை முழுங்குவதற்கு முன்னர் வெளியே தூக்கி போட்டவர்கள்,

கையில் இருந்ததையும் பிடிங்கி எறிந்துவிட்டு,
இரண்டு பக்கங்களிலும் அவளை அசையவிடாது பிடித்திருந்தனர்.



சங்கமிப்பாள்.....
 
Top