• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

5...மனைவியின்... காதலன்!

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
5…காதல்

‘ஓ நீ அவ்வளவு ஹய் ஜீனா.. இருக்க கூடாது, அப்படியே இருந்தாலும் விடமாட்டேன்’

ராதா வில்லத்தனமாக எழுந்தவள் இருவருக்கும் சைகை காட்டிவிட்டாள். மாதவனை பிடித்துக்கொண்டனர் இருவரும்.

“ஏய் என்ன செய்றிங்க விடுங்க.. கையில் கூழ் சொம்போடு வந்த ராதாவை பார்த்து.

“ஏய் ராதா, வேண்டாம் எனக்கு பிடிக்காது”

“டேய் பட்டிக்காட்டில் பிறந்துட்டு ஏதோ பாரினர் போல சீன் போடுர” அவனது வாயை பிடித்துக்கொண்டு ஒரு சொம்பு கூழை தொண்டையில் ஊத்திவிட்டு தான் நகர்ந்தாள்.

அவனது தாடி சட்டை என அனைத்து இடங்களிலும் கூழ் சிதறியிருந்தது.

“எங்க ஊரு கூழ் டேஸ்ட் எப்படி இருக்கு?” ராதாவும் அனுவும் கேட்க.

“நல்லா தான் இருக்கு, அதுக்கு இப்படி தான் மூஞ்சி சட்டை எல்லாம் நாஸ்தி செய்வீங்களா” மூன்று பேரையும் முறைத்தான்.

“நாங்க அப்படிதான்” மூவரும் கையில் ஹைபை அடித்துக்கொள்ள.

கைக்குட்டையை எடுத்து சட்டையை துடைத்தான் அப்போதும் கூழை முழுவதுமாக துடைக்க முடியவில்லை.

“நீங்க ஹைபை செஞ்சது போதும் சுத்தம் செய்யனும் தண்ணீர் எங்க இருக்கு”

“இந்த கோவில் பின்னாடி இருக்கும்” கிருஷ்ணன் சொல்ல.

மாதவன் பின்னாடி சட்டையை கழுவி வர சென்றான். பாவம் அவன் கண்களுக்கு ஒரு குழாயும் தெரியவில்லை.

“கிருஷ்ணா.. இங்கே எந்த தண்ணீயும் இல்லை” கோவில் பின்னிருந்து சைகை காட்ட, கிருஷ்ணாவும் அனுவும் டீப் டிஸ்கசனில் இருந்தவர்கள் கவனிக்கவே இல்லை.

“டேய் மாதவன் கூப்பிடரான் போ”
“நான் பிசியா இருக்கேன்” கிருஷ்ணா திரும்பிக்கூட பார்க்காமல் பதில் சொன்னான்.

“அனு உன் அத்தை பையன் கூப்பிடுறான் பாரு”

“நானும் பிசியா தான் இருக்கேன்.. நீ போ உன் எக்ஸ் தானே” வாயில் வந்த எக்ஸை விழுங்கியவள், "உன் பிரிண்ட் தானே போ”

“இரண்டு பேருக்கும் திமிரு கூடிப்போச்சி”

ராதாதான் சற்று தயங்கிக்கொண்டே மாதவனை நோக்கி போனாள்.

“என்னாச்சி மாதவன்”

‘நான் உனக்கு மாதவனா ராதை உன் ஆசை கண்ணன் இல்லையா? நான்’ மனம் போன போக்கை நினைத்து அதிர்ந்தான் மாதவன்.

‘மாதவா.. அவள் மாற்றான் தோட்டத்து மள்ளிகை. ரசிப்பது கூட தவறு, இறந்தகாலத்தை மீட்டெடுக்காதே’ தன் மனதை அடக்கியவன்.

“தண்ணீ வரலை மா”

‘எதே மா.. வா, ஓ உனக்கும் எனக்கும் எந்த உரவும் இல்லை’ன்னு சொல்ல வர அப்படி தானே, சரி இருக்கட்டும். உன் ராதை என்ற அழைப்பை கூடவா மறந்துவிட்டாய்’

“இங்கே ஒரு டேப் இருக்குமே, எங்க போச்சி” ராதா சுற்றி தேடி ஒரு வழியாக பைப்பை கண்டுபிடிக்க.

“மாதவன் இங்கே இருக்கு பாருங்க, சீக்கரம் கழுவிட்டு வாங்க”

பைப்பை திறந்தவனுக்கு தண்ணீர் வருவதர்க்கு பதிலாக காத்து தான் வந்தது.

“ராதா தண்ணி வரலை” வழக்கமாக வசீகரிக்கும் அவனது உதட்டை பிதுக்கி சொல்ல. ஆறடி உருவம் சிறு குழந்தையின் முகம் போல தோன்றியது ராதாக்கு.

ராதாக்கு அவளது கையை அடக்குவது தான் பெரும்பாடாக போனது.

‘சோ கியூட்’

வழக்கமாக அவன் அவ்வாறு செய்யும் போது இரு விரல்கள் கொண்டு அவனது உதட்டை பிடித்து இழுத்துடுவா வழிக்கும் அளவுக்கு. பழைய நினைவுகள் இருவருக்கும் அலைமோதியது.

“வேறு எங்காவது இருக்கா பார்க்கலாம் வா” ராதா முன் செல்ல மாதவன் பின் தொடர்ந்தான்.

அவளது நீண்ட கூந்தலை பார்த்து அதிர்ந்தான்., ராதாக்கு வேகமாக முடி வளர்ந்துவிடும். அதை வளர்க்க பராமரிக்க அவ்வளவு சங்கடம் அவளுக்கு இடுப்பு வரை அளவாக வைப்பதிலேயே குறியாக இருப்பாள்.

ஒருவருடம் முன்…

“ராதை… எனக்காக ஒரு முறை முடி வளர்த்து காட்டேன், நீண்ட முடி என்றால் எனக்கு இஷ்டம்”

“உனக்கு பிடிச்சா நீ வளர்த்துக்கோ நான் ஏன் வளர்க்கனும்” விதந்தாவாதமாய் பேசுவாள் ராதா.

அவளின் துள்ளல் நடைக்கு ஏற்றார்போல அவளது நீண்ட ஜடை அசைந்தாட. மனதை கட்டுப்படுத்ததான் பெரும்பாடாக ஆனது மாதவனுக்கு.

இரண்டு எட்டில் அவளுக்கு இணையாக நடந்து வந்தான். ‘ப்பா என்ன முடி பிரவௌனும் பிளாக்கும் கலந்து கட்டையா. உனக்கு நீண்ட முடி அழகா இருக்கு ராதை’ மனதால் பேசும் அளவுக்குதான் இருந்தது இருவரின் உறவும்.

இருவரிடத்திலும் ஒரு அமைதி நிலவியது.

முதலில் யார் பேசுவது என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்தது.

இந்த அமைதி மாதவன் ஏற்கமுடியாமல், மௌனத்தை முதலில் உடைத்தான்.

“ராதா லைப் எப்படி போது எவ்ரித்திங் ஓகே”

“எஸ் மாதவன் லைப் செட்டில் எதைபத்தியும் கவலை இல்லை, என்னை தாங்கும் கணவன். நீயே பாத்த இல்ல நான் கேட்டதை எல்லாம் செஞ்சி கொடுக்கிறார். வேற புருசனா இருந்தா என்னை துரத்தி விட்டு இருப்பார். இல்லை அடித்து மூலையில் உட்கார வச்சிருப்பார். ஆனா இவர் என் ஆசைக்கு மதிப்பு கொடுத்து உன்னை கூட்டி வந்திருக்கார். அவர் கிரேட்ல?” மாதவனிடமே பதில் கேட்டாள் கிருஷ்ணா பத்தி.

“நீ மட்டும் கொடுத்து வச்சவ இல்லை, அவரும் உன்னை போல ஒரு பெண் கிடைக்க கொடுத்து வச்சவர் தான்”

ராதா முகம் மாறியது, ‘எப்படி தான் நீ உதிர்த்த வார்த்தைகள் உனக்கே மறந்துப்போகும் கண்ணா’

“ஏன் மாதவன் பொய் சொல்லூரிங்க. நீங்க பேசியது எல்லாம் மறந்துப்போச்சா?“ மாதவனின் முகமும் இருண்டது.

சொல்லி முடித்ததும் தான் ராதா செய்த முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினாள், ‘ராதா அவசரப்பட்டுட்டியே’

“அது கோபத்தில் ஏதோ..” மாதவன் மீதி வார்த்தையை விழுங்கினான்.

“விடுங்க மாதவன்… முடிஞ்சி போனதை பத்தி பேச என்ன இருக்கு, வாங்க”
சுற்றியும் பார்த்தவள் கண்ணில் தண்ணீர் இருக்குமிடம் தெரிந்தது.

“அங்க ஒரு போரிங் இருக்கு அங்கே போலாம்”

கோவிலுக்கு சற்று தொலைவில் இருந்ததை நோக்கி போனார்கள். முன்பு போல ஒரு இருக்கம் இருவருக்கும் இல்லை. நண்பர்களாக இந்த ஒரு மாதத்தை சிறப்பாக செலவளிக்க இருவர் மனதிலும் ஒரே எண்ண ஓட்டம் தான் ஓடியது.

ராதா போரிங் அடிக்க.. மாதவன் அவனது முகம் சட்டையை கழுவியவன்.

“உன் இந்த தாடி எல்லாம்”

“எனக்கு தாடி வைக்க பிடிக்கும்”

“ஓ… ஐ சீ. பாருங்களேன் எனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சி”

“என்னை பத்தி உனக்கு எதும் தெரியாது ராதா மா”

“ஆமா.. அதனாலத்தானே இன்று நான் வேறு ஒருவரின் மனைவியாக இருக்கேன்”

மாதவனிடமிருந்து அமைதிதான் பதிலாக வந்தது.

அருகில் இருந்த ரயில்வே ரோட்டை பார்த்தவன்.

“அதுக்கு மேல கொஞ்சம் நடக்கலாமா?”

“சரி..” இருவரும் சிறிது தூர நடந்தவர்கள்.

மீண்டும் அமைதி… இந்த முறை அமைதியை கலைத்தது ராதா தான்.

“கூழ் எப்படி இருந்தது”

“நல்லா இருந்தது மா. இனி எங்க பாத்தாலும் முதல் ஆளா நான் தான் போய் குடிப்பேன்”

“ஹா ஹா…” ராதா மாதவனிடம் அளவாக தான் வைத்துக்கொண்டாள்.


இருவரும் சிறிது தூரம் நடந்து சென்றவர்கள். அந்த தனிமை இருவருக்கும் நரகமாக இருந்தது.

இருவரும் வாழ்வில் ஒன்றாக சேர்ந்த பின் நடக்க வேண்டியது அனைத்தும் திட்டம் போட்டது போல நடந்தது. ஆனால் இப்போது இந்த கண்ணனின் ராதை இல்லை இவள். கிருஷ்ணனின் மனைவி ராதா உடன் அனைத்தும் சிறப்பாக நடந்தது.

எதிர் காத்து இருவர் முகத்திலும் அடிக்க.. முன் முடியை ஒதுக்கிவிட்டவர்களுக்கு இப்போதுதான் இரண்டு ஜீவனை விட்டு வந்தது நினைவுக்கு வர.

வேகமாக அவர்களை நோக்கி போக அந்த இருவரும் ஆபிஸ் பத்திதான் பேசிக்கொண்டே போனார்கள்.

“அடேய் மாமா… போதும் பேசுனது. எனக்கு பொம்மை வாங்கித்தா”

“போடி நீ என்ன குழந்தையா பொம்மை வாங்கித்தர”

விதவிதமாக கடைகள் கோவிலை சுற்றி இருந்தது.

“ராதா.. இந்த கோவிலுக்கு என்ன ஸ்பெஷல்” அனுக்கு இதுவே முதல் முறை அதனால் கேட்டாள்.

தர்மபுரியில் உள்ள அனைத்து ஊரிலும் திருவிழாக்கள் சாதாரணமாக நடக்கும் தான். ஆனா இங்க நடக்கும் திருவிழா ரொம்ப ஸ்பெஷல்”

“அப்படி என்ன ஸ்பெஷல்”

“கிட்டத்தட்ட 20 நாள் முதல் ஒரு மாதம் வரை நடக்கும்”

“இவ்வளவு நாளா? பொதுவா இரண்டு மூனு நாள் தானே நடக்கும், மிஞ்சி போனால் ஒரு வாரம் நடக்கும்” அனு வாயை பிளக்க.

“ஆமா… சினிமாவில் எல்லாம் சொல்லுவாங்க இல்ல. இந்த சுத்துப்பட்டி அப்படி இப்படி’ன்னு அதுபோல சுத்தி இருக்கும் பதினெட்டுப்பட்டிக்கும் சேர்த்து நடக்கும் திருவிழா. அனைத்து ஊருக்கும் பொதுவான கோவில் இது. முதல் நாள் தேர் இழுப்பது முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை குறையவே குறையாது. வெள்ளம் போல கூட்டம் கூட்டமா இருக்கும். பக்கத்தில் கவர்மெண்ட் ஸ்கூல் வேற சொல்லவா வேணும். யூனிபார்ம் போட்ட கூட்டம் ஒரு புறம் வலம் வரும். அதிலும் அந்த 10, 12 படிக்கும் பசங்க சேட்டை தாங்காது” ராதா பழைய நினைவுகளில் முழ்க.


“அப்படி என்ன செய்வாங்க” அனு ஆர்வமாக கேட்கும் போதே. அங்கு ஒரு இளைஞர் பட்டாளம்.. விதவிதமாக ஒளி எழுப்பும் பீப்பி‍, கூட்டமாக ஊதிக்கொண்டு கோவிலை சுற்றி சுற்றி வந்தார்கள்.

“இப்போ தெரிஞ்சதா அனு”

“செம்மையா இருக்கு இந்த கோவில் திருவிழா, இனி வருடா வருடம் வரனும்”

பேசிக்கொண்டே கரும்பு ஜூஸ் அனைவரும் குடிக்க பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டிடத்தை சுட்டி காட்டினாள் அனு.

“அது என்ன பில்டிங்.. அதியமான் பேலஸ்சா?”

“இல்லைடா… பேலஸ் எதும் இங்கே இல்லை”

“அதியமான் வாழ்ந்த இடத்தில் பேலஸ் இல்லையா!”

“ஆமா இரண்டு கரை மட்டும் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒன்னு ஏறிப்பக்கம்.. இன்னொன்னு சுடுகாட்டு பக்கம்”

“அதென்ன கரை?”

“அது ஒன்னுமில்ல, அதியமான் குறுநில மன்னன் தானே.. பெரியதா பிரம்மாண்டமான கோட்டை எல்லாம் கட்டலை. மன் கோட்டை தான் கட்டி இருந்தார். அவரது வீழ்ச்சிக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பராமறிப்பு இல்லாம அழிந்துவிட்டது. கோட்டையின் எல்லையைதான் கரை சொல்லுறாங்க’ன்னு நினைக்கிறேன்”

“அப்போ இது எதுக்கு கட்டி இருக்காங்க” அனு அந்த அதியமான் கோட்டம் பார்த்து கேட்க.

“அதுவா.. உன்னை போல ஆளுக்கு அதியமான் அரண்மனை எங்கன்னு கேட்டு கேட்டு டார்ச்சர் செஞ்சி இருப்பாங்க. ஒரு ஹால் போல கட்டி முன்னாடி அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தருவது போல ஒரு சிலை முன் வைத்து அதியமான் கோட்டம்’ன்னு பேர் வச்சிட்டாங்க”

“பாருடா… ராதாக்கு நிறைய விஷயம் தெரிந்து இருக்கு”

“எல்லாம் எங்க மாமா சொல்லித்தந்தது”

“எங்க நைநா எனக்கு ஒன்னுமே சொல்லித்தரலை பாரேன்”

“நீ வெத்து வேட்டு’ன்னு எங்க மாமாக்கு தெரிந்திருக்கு என்ன செய்ய”

ராதாவின் பதில் கேட்ட கிருஷ்ணா செல்லமாக கொட்டிவிட்டு அந்த கோட்டம் நோக்கி நடந்தார்கள் அனைவரும்.

மாதவன் மனதில் இருவரது சேட்டையை ரசித்தாளும் அவனது மனதில் ஒரு ஏக்கம் இருக்கதான் செய்தது
 

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
நன்றி தோழி😍
 
Top