• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
"என்னது கண்ணை நோண்டி எடுக்குறியா...... அர்ஜுன் என் தங்க குட்டி இல்ல கண்ணு இல்லமா எப்படி பார்க்க முடியும் ப்ளீஸ் வேண்டாம் அர்ஜுன்..." என்று பதுங்கியவாறு பேசினாள்.

அவள் பேசுவதை காதில் வாங்காது நெருங்கி வந்தான்.

"சாக்லேட் வாங்கி தரேன் ப்ளீஸ் வேண்டாம் குட்டி பாப்பா......பெரிய பாப்பாக்கு வாங்கி தருமாம் குட்டி பாப்பா சாப்பிடுமா எப்படி டீல் ஓகே தானே".... அனைத்தும் மறந்து அவனிடம் பேரம் பேசினாள்...

இவள் கூறுவதை எதையுமே காதில் வாங்காமல் அவள் முகத்தில் மறைத்திருக்கும் கைகளை விலக்கி கண்களுக்கு இடையே இரண்டு விரலை கொண்டு போனான்...

இவர்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டைகளை மறந்து இவள் பேசிக்கொண்டே இருந்தாள்... அடிக்கடி எல்லாம் மறந்து.... லூசு தனமா பேசவும்....இவன் அவளை வித்தியாசமா பார்க்க.

அதுவும் சிறிது நேரம் மட்டுமே....

"ஓ அப்படி பேசிபேசி,உன்னிடம் மயங்கி இருக்க நான் என்ன பூனைக்குட்டியா? நினைச்சியா போடி".

"ப்ளீஸ் ப்ளீஸ் நா ரெண்டு சாக்லேட் வாங்கி தரேன்" என்றாள்.

அவளின் கொஞ்சும் மழலையின் குரல்கேட்டு நிகழ் காலத்து சண்டையை அர்ஜுனுக்கு மறக்கடித்தது.

இப்பொழுது இருக்கும் நிலையை அவனும் மறந்தான்... இது என்னவோ மாயம்.

"கண்டிப்பா இரண்டு சாக்லேட் வாங்கி தருவியா". இவன் அவளிடம் இறங்கி பேரம் பேச...தொடங்கினான் வழக்கம் போல.

"ரெண்டு என்ன கடைக்கு கூட்டீட்டு போய், எல்லாம் வாங்கித்தரேன்" என்று வாக்கு கொடுத்தாள்.

அவன் சமாதானம் ஆனதும், அவள் தலையை ஒரு புறம் சாய்ந்து கேட்கும் அவளை அவன் அந்த கோவத்திலும் ரசிக்கதான் செய்தான்.

அவனின் பார்வை அவளின் கன்னத்தின் மீது இருந்தது மீண்டும் கன்னத்தை கைகளால் பொத்திக் கொண்டாள்.

இந்தமுறை அவன் அறையும் நோக்கத்தில் பார்க்கவில்லை.....

சற்றுமுன்பு மறந்ததை அவள் செய்கையால் நினைவு படுத்த.... அந்த செயல் அவனை நிகழ்களத்துக்கு கொண்டு வந்தது.

இந்தமுறை அறையும் நோக்கத்தோடு பார்த்தான்.

அவனின் நிலையை மீண்டும் புரிய கன்னத்தில் இன்னும் ஒன்னு விட்டான் அவள் பொத்திய கைகளோடு.

'என்ன இவன் அண்ணியன் மாதிரி பண்றான் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கான்"... இவள் குழப்பத்தோடு அவன் முகத்தை பார்க்க.

"இந்த பப்பி ஃபேஸ் காட்டாத டி அடி பின்னி எடுத்துடுவேன்" என்று மிரட்டினான்.

அர்ஜுன் செய்வதை பொறுத்து கொள்ள முடியாதவளாக அவனிடமே கேட்டுவிட்டாள், "ஏன் இப்ப புதுசா வேற மாதிரி பிஹேவ் பண்ற".

"இப்படிதான் இனிமேல் நான் செய்வேன்" என்றான் திமிராக.

"அதான் எதுக்கு இப்படி செய்றா எனக்கு ஒன்றும் புரியல "என்று சாரா அர்ஜுனிடம் வினவ.

"என்ன பாத்து ரெண்டு கல்யாணம் பண்ண ட்ரை பண்ணேன் சொல்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சு இருக்கணும் "திஸ் இஸ் டூ லேட் பேபி". இனி நீ விலகி இருப்பது தான் சரி." என்றான் வேண்டாதவர் இடம் பேசுவது போல.

"இந்த வார்த்தை என்ன பாத்து சொன்னதுக்கு நீ எதிர்கொள்ள நிறைய இருக்கு இனி.." என்று எச்சரித்துவிட்டு சென்றான்.

"இது எல்லாம் நான் மட்டும் செய்தது போல சொல்கிறான் இவன். நடந்தது அனைத்துக்கும் இவனுக்கு அதிகப் பங்கு இருக்கிறதுதனே..."

"டாக் ....பன்னி.... உன்ன ....வாய்ல வரும் அனைத்து அர்த்தமற்ற வர்தையாள அர்ச்சனை செய்ய துவங்கினாள், அவள் மனசாட்சி பக்கம் இருக்கும்போது சொல்லி பாரு என்று அவளை கேலி செய்தது.

எதுக்கு நான் நல்லா திரும்ப அடி வங்கவா இனிமேல் இங்க வராத நீ எப்ப பாத்தாலும் அவனுக்கு சப்போர்ட் செய்கிறாய் நீ.... என் மனசாட்சி இல்ல அவன் மனசாட்சியா எனக்கு சந்தேகமா இருக்கு.

"பொறுக்கி என்ற வார்த்தை சாதாரணமாகவே திட்டுவேன் இப்ப மட்டும் ஏன் வேற மாதிரி அர்த்தம் எடுத்துக் என்ன இருக்கு இவன் நடவடிக்கை புரியல மண்டை காயுது".

"இவ்ளோ கோவம் கூட உனக்கு வருமா சாக்லேட் பாய் மாதிரி இருந்தான் இப்பொது, என்னடா டெரர் பீஸ் அக .... எதுக்கு எடுத்தாலும் எரிந்து விழுகிறான் ...ஒரு வேளை நாய் கடித்து இருக்குமோ..."

"டாக்டர் ட பார்ப்பது நல்லது என்று நினைத்துக்கொண்டே....

சிறிதுநேரம் அவனின் குண மாற்றத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள் சில மணித்துளிகள் கடந்து பட்டு சட்டையோடு அவன் அறைக்குள் நுழைந்தான் எங்காவது வெளிய அர்த்தராத்திரியில் போகிறது...போல டிரஸ் பண்ணி இருக்கான் என்று நினைத்தவள்.

"என்ன தயாராகலாய? காலையிலே சொன்னது நினைவு இல்லையா?" என்றான் காரியத்தில் கண்ணாக.

"அட பாவி இதுக்கு தான் ரெடியாக சொன்னியா" திருதிரு என்று முழித்தாள்.

திடீரென்று பதட்டம் தொற்றிக்கொண்டது அவள் மனதில் "எதற்காக" என்று ..... பாவமாக கேட்டாள்

உனக்கு தெரியாது தெரியாதா ? அவள் மனம் கேலி செய்தது சாராவை.

இவனிடம் பேசவே பயமா இருக்கு திடீர்னு அறைந்து விடுவானோ என்ற கன்னம் என்ன ஆகிறது.

திரும்பவும் அடிவாங்கிய உடம்புல தெம்பு இல்ல சாமி என்று நினைத்தவள். தைரியத்தை வரவைத்து கொண்டு ஒருவழியாக கேட்டு விட்டாள் அர்ஜுனிடம்.

அவனின் மிக சாதாரணமாக "அதுவா ஃபர்ஸ்ட் நைட் ரெடியாயிட்டு வா". ஏதோ ஷாப்பிங் போலாம் வா என்று கூப்பிடும் தோரணையே கூப்பிடும் அவனை.

"இவளோ ஓபன் கூடவா பேசுவாங்க...விவஸ்தை கெட்டவன்..''

'என்ன இப்படி பேசுறா இந்த மூஞ்சை வச்சிக்கிட்டு ஃபர்ஸ்ட் நைட் ஒன்னுதான் கொண்டாடுவது தான் இப்போ ரொம்ப முக்கியமான விஷயம் பாரு.'

"என்ன இது யோசித்து மாசமாசனு நின்னுட்டு இருக்க கேலம்பு டைம் ஆச்சி".

"எங்கயோ வெளிய போவது போலவே கிளம்பு... சொல்கிறான்.இவனை தலையே அடித்துக்கொண்டு".

தலைமட்டும் அசைத்துவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி சென்றாள்.

"மாடு மாதிரி தலை ஆட்டுவதை பாரு வேண்டா வெறுப்பாக யாருக்கோ கல்யாணம் நடந்த ரேஞ்சுல சுத்திட்டு இருக்கிறது".

முழுதாக இரண்டு மணி நேரம் தாண்டியது இவள் தயார்ஆகி வரவில்லை.

அவனின் பொறுமை காற்றில் பறந்து சென்றது..... இன்னும் வரல என்ன பண்ணிட்டு இருக்க அவளைத் தேடி அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்றடைந்தான்.

அவளோ எந்த கூமுட்டை பின்னாடி லேஸ் வச்சது இடியட் கஷ்டப்பட்டு போடுறதுக்கு ஒரு மணி நேரம் போச்சி... எப்போது புடவையை உடுத்துவது.

இந்த சாரி கட்ட தெரியும் ஆனா ரைட் சைடில் இருந்த இல்லை லெப்ட் சைட்ல இருந்த ஆரம்பிக்கனுமா எதுவும் மண்டை குழம்புது . தெளிவா இருந்த பாபாவை குழப்பிவிட்டான் இந்த அர்ஜுன்.

'நம்ம பொண்ணுதான, எனக்கே சந்தேகமாக இருக்கே. . .'

அவன் பொறுமை இழந்து காலால் கதவை உதைத்தான் ரெடியா இருக்கியா என்ன பண்ணிட்டு இருக்க.

மீரா இவர்களுக்கு தனிமை வழங்க உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.... இவன் செய்வதை மீரா பார்த்து இருந்தாள் நன்றாக அடிவாங்கி இருப்பான் அர்ஜுன்...

"இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் ரெடி ஆகல".

'இவன் வேறு அத்தை இல்லை உடனே சத்தம் எல்லாம் பலமாக இருக்குது '.

வேணும் என்று செய்வது போல இருக்கே.

"என்னடி இரண்டு மணி நேரம் ரெடியாக... இல்லங்க நிஜமாவே ரெடி ஆகல " அறையின் அந்த பக்கமிருந்து மெல்லிய குரல் வந்தது.

"பொய் சொல்லிட்டு இருக்காத கதவ திறந்து விடு இல்ல உடைச்சு உள்ள வருவேன்" என்றான் கடுமையாக.

"இருங்க வரேன் கதவை உடைத்து விடாதே". வில்லன் செய்வது போலவே செய்கிறான்.

'எனக்கு சந்தேகமா இருக்கு இவன் ஹீரோ? ஆர் வில்லன்?'

"கொஞ்ச நேரம் இருங்கள் ரெடியாயிட்டு வந்திடறேன் ஒரு பத்து நிமிஷம்" என்றாள்.

"பொய் சொல்லிட்டு இருக்காத கதவை முதலில் திறந்துவிட்டு... உடைச்சிட்டு உள்ள வந்துடுவேன்" என்று மறுபடியும் மிரட்டினான்.

வேகவேகமாக புடவையை சுற்றி கொண்டு கதவை திறந்தாள் மெதுவாக தலையை வெளியில் நீட்டினாள்.

என்ன இவ்ளோ நேரமா நீ ரெடியாக போது ரெடியானதும் முழுசா கதவை திறந்து அவளை தாண்டி உள்ளே சென்றான்.

இல்லங்க அவ சொல்லி முடிக்கும் முன்பு அறையின் உள்ளே சென்றுவிட்டான்.

அவள் புடவை முந்தானை தடுக்கி அர்ஜுன் சாரா மீது விழுந்தான்.

கட்டின சேலையின் லட்சணம் இதிலிருந்து அவனுக்கு தெரிந்தது இடுப்பு சுளுக்கு.....ஆ

"அர்ஜுன் வலிக்குது எந்திரிடா முடியல சுளுக்கு நினைக்கிறேன்".

"இரு கத்தாத என்னாச்சுன்னு பார்க்கலாம்" என்றான் ஆறுதலாக.

எங்க சுளுக்கு அவள் இடுப்பில் கை வைக்க.

அவன் கைகள் அவள் சேலையை ஒதுக்கி விட அவன் கையைப் பற்றினாள்.

"வேணாமுங்க ஒரு மாதிரி இருக்கு என்றாள் வெட்கம் கலந்த குரலில்.

"பாருடா மரியாதை எல்லாம் தூள் பறக்குது" .

"ஏய் கையை எடு ஏதோ இதற்கு முன் பார்க்காதது போல செய்கிறாய்" என்றான்.

"இப்படியா பேசுவா பொறுக்கி உன்னையே..." அடிக்க கை ஓங்கியவள் அவனது முகத்தை பார்த்ததும் அவளுக்கு வெட்கம் அவளை தின்றது.

எனது பொறுக்கி அவனின் கோபம் எக்குத்தப்பாக எகிறியது அவன் மேல் இருந்த அவளை தள்ளி விட்டான் கருணையே இல்லாமல்.

"பொறுக்கி எப்படி ட்ரீட்மென்ட் பண்றது இனி நீ பார்க்க தயார இரு" என்று கர்ஜித்தான்
 
Top