• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

50+ காதல் அதிகாரம்.

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
எத்தனை புரிதல்களை...
கடந்து நிற்கிறது நம் காதல்...!!

அதிகபட்ச ஆசையாய்...
எனக்கிருப்பது எல்லாம்...
ஒன்றே ஒன்று தான்...!!
ஏதோ ஒரு சூழ்நிலையில் ...
நான் மீண்டும் உன்னை
பார்க்க நேர்ந்தால்....
இம்மியளவும் குறையாமல்....
அதே காதலுடன் நீ என்னை
பார்க்க வேண்டும்...!!

விளக்கிச் சொல்லாத
வார்த்தைகளை தன்னகத்தே கொண்டு....
ஆர்ப்பரிக்கும் ஆழி,
அமைதியை கட்டியணைக்கும் நேரம்...
நான் மீண்டும் உன்னைப்
பார்க்கும் தருணம்....!!

எதை எதையோ சொல்லியும்...
செய்தும்...
காதலை வளர்த்திருக்கலாம்...!!
நீயோ...
என் காதலை மௌனமாகவே
வளர்த்தெடுத்தாய்...!!
ஒருமுறை சொல்லியிருக்கலாம்..!!
இப்போது மீண்டும் பயணிக்க
முடியாத பாதைகளை வாஞ்சையுடன்
வெறித்துப் பார்க்கிறேன்...!!

உன் ஒற்றை தரிசனத்திற்காகவே...
நான் மட்டுமின்றி...
என் வீட்டு முற்றமும்...
கால நேரமின்றி தவமிருந்ததை
நீ அறிவாயா??
காலம் கடந்த பின்...
முற்றத்தைப் போலவே...
என் மனமும் இடிக்கப்பட்டுவிட்டது...!!
அதை மீண்டும் கட்டிப்பார்த்திட
ஆசைகொண்டே நித்தமும்...
ஏங்கிக் கொண்டிருக்கிறேன்..!!

நீயில்லாத வாழ்க்கைத் தருணங்கள்
எத்தனை கசப்புகளை எனக்குள்...
வாரியிறைத்திருக்கும் என்பதை
என் ஆழ்மனம் மட்டுமே...
அறிந்திருக்கும்...!!
இன்றுவரை தலைவனை பிரிந்த
"காதலி"க்கு ...
யாராலும்..."மனம் ஏற்றுக்கொள்ளும்"
விளக்கத்தைக் கொடுக்க
முடியாதது...
"இயல்பின் உச்சமே.."..!!

என் நரை எட்டிப்பார்க்க....
உன் முட்டி வலுவை இழக்க...
அதே அதீத காதலுடன்..
உன் தூரத்து ஸ்பரிசத்துடன்..
என் காதலை அப்படியே...
நகல் எடுத்து காட்டிப்போக,
இப்பொழுதும்....
யாரும் அறியாவண்ணம்....
உன் வருகையை எதிர்பார்த்து
காத்துக் கிடக்கிறேன்..!!


மிகைப்படுத்திச் சொல்லவோ....
நடந்ததை விளக்கவோ....
இந்த காதலில் என்ன இருக்கிறது...?
நீண்டநாள் காத்திருப்பு தவத்தின்
பலனாய்...
சிப்பியை உடைக்கும்போது
வெளிப்படுவது "முத்துக்கள்"
மட்டுமல்ல....
நான் காப்பாற்றி வைத்திருந்த
"என் காதல் ஆன்மா"வும் தான்..!!
"சில காத்திருப்பும் காவியமாவது- இயல்பே"
- எல்லா புகழும் இறைவனுக்கே!
சரண்யா ராஜ்.