• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

51. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
டோய்! வாய மூடு...! ஏர்போட்ன்னு பார்க்கிறேன்.... இல்லன்னா கல்யாணத்துக்கப்புறம் நடக்க வேண்டியது நடக்க கூடாதுன்னு சாபம் போட்டிடுவேன்...


கன்னிப்பையன் சாபம்டா நிச்சயம் பலிச்சிடும், என் முன்னாடியே கொஞ்சுறியே..... என் மனசு என்ன வேதனை படும்னு யோசிச்சியா? இதெல்லாம் என் வாழ்க்கையில நான் அனுபவிப்பேனான்னு கூட தெரியலையே!" என அவர்கள் நெருக்கம் கண்டு பொங்கிய விக்னேஷ்,


"அங்கிள்.....! முதல்ல அவனை இங்க வரச்சொல்லுங்க, ரொம்பத்தான் உரசிட்டு இருக்கான்." என ரவீந்திரவிடம் சிறுவன் போல் புகாரளிக்க,


"ஏன்டா பொறாமை புடிச்சவனே..... நீ மட்டும் சரியான வயசில கல்யாணம் செய்திருந்தா குட்டிம்மா வயசில உனக்கும் குழந்தை இருந்திருக்கணும், இப்பிடி என்னை பாத்து பொறாமை படத்தேவையில்லை." என காலை வார,


"நானாடா மாட்டேன்னு சொன்னேன், நீயெல்லாம் என்னை பாத்து கேலி பண்ற அளவுக்கு ஆகிடிச்சு என்நிலமை! எல்லாம் எங்க வீட்டில ஒரு அடங்காபிடாரி இருக்காளே, அந்த பிசாசினால வந்திச்சு.

தன்னால தான் கீதா வாழ்க்கையே பாழாகிடிச்சு, அவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு நான் மட்டும் சந்தோஷமா வாழ்றதான்னு கேக்கிறா....., அவ வாழ்க்கை சரியானதும் தானும் தன்னோட வாழ்க்கையை அமைச்சுக்கிறேன் என்குறா.....


சரிஅவ தான் வேணான்னு சொல்லுறாளே நமக்காவது செய்து வைப்பாங்களோன்னு பாத்தா, அவளே இருக்கும் போது உனக்கு என்ன அவசரம்னு கேட்டு அனாதை மாதிரி தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க," என வராத கண்ணீரை துடைத்தவனை பார்த்து மற்றவர்கள் நகைக்க,



சூரிய மட்டும் நண்பனின் அன்பை கண்டு பூரித்தான்.


அவனுக்குத்தான் தெரியுமே! கீதா வாழ்க்கை சரியாகும் வரை திருமணம் வேண்டாம் என்று கூறியது துர்கா மாத்திரமில்லை.... சூரியவை கீதாவுடன் சேர்த்து வைக்கும் வரை தனக்கும் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருந்தான்.



"போதும் போதும்..... முதல் அங்கயிருந்து எழுந்திரிங்க. இது பெரியவங்க எடுத்த முடிவு.

கீதா கழுத்தில தாலி இல்லாமல் இருக்கிறத பார்க்க நல்லாவா இருக்கு?
புதுசா வாழ்க்கையை தொடங்க போறவங்க எல்லாத்துக்கும் நல்ல நேரம் பார்க்க வேண்டாமா?
முதல்ல கட்டின தாலி நிலைக்காம போனதுக்கு இதுகூட காரணமா இருக்கலாம்.


இனியாவது உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும் அண்ணா!
இனியும் இவ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது." என்று இம்முறை சீரியஸாகவே துளசி பேசினாள்.


அவள் சொல்வதும் சரியாகத்தான் பட்டது.
இருந்தும் மனமில்லாது முன்னைய இருக்கையில் சென்று அமர்ந்தான்.


வண்டி கிளம்பியதும் பின்னர் தான் 'எப்படி இது சாத்தியம்?' என்ற கேள்வியே வதனிக்கு எழுந்தது.
யாரிடம் கேட்பதென்று விழித்தவள் கையினை பற்றிய துளசி,


"என்னடி? எல்லாம் தான் சரியாகிடிச்சே! இன்னும் எதுக்கு முழிக்கிற?" என்றாள் மெலிதான புன்னகையோடு.


"அது...... சூரிய எப்பிடி......?" என எப்படி கேட்பதென தெரியாது அவள் தடுமாற,


"நினைச்சேன்..... என்னடா கேக்கலன்னு....
ப்ளைட் ஏறபோனவரு, வண்டிக்குள்ள எப்பிடின்னு தானே கேக்குற?"


ஆம் என்பது போல் தலையினை வேகமாக ஆட்டியவளைப்பார்த்து சிரித்தவாறு,


"எல்லாமே இந்த புடவை செய்த மாயாஜாலம் தான்"
அவள் கூறுவது புரியாமல் இமைகள் இடுங்க வதனி பார்க்க,

"ஆமாடி!
எனக்கும் இந்த புடவையை அண்ணா தான் தந்தாருன்னு தெரியும். ஆனா தெரியாது போல நடிச்சேன்...
அந்த புடவை நீ ஏக்கமா பார்த்ததும், அதை வருடின விதமுமே சொல்லிச்சு, உன் மனச..


சரி இவளை நம்பி அவசரப்பட்டு ஒரு முடிவு வரக்கூடாது.. கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு இருந்துட்டேன்.

நீ கண்ணாலயே அண்ணாவ தேடின பாரு..!
நிஜமா சொல்லுறேன்டி! என் பொண்ணு நினைவு வந்திடிச்சு. அவளும் புதுசா ட்ரெஸ் எடுத்து தந்தா இப்பிடித்தான் ஆர்வமா போட்டிட்டு வந்து காமிப்பா,
அதை பாத்து நாங்க எதுவும் சொல்லலன்னா அவ முகமும் உன்னோட முகம் மாதிரியே வாடிப்போகும்." என சிரித்தவள்,

"நீ நினைச்சது போல சூரிய அண்ணணும் மயங்கிட்டாரு...... தன்னை கண்ரோல் பாண்ணிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாரு தெரியுமா? வண்டியில ஏறினதும் தான் எதுக்கு இந்த புடவை நீ கட்டின?, அதுவும் நாட்டை விட்டு கிளம்பு நேரம் இதை கட்டணும்னு சந்தேகம் வந்திச்சு.


அது தான் உனக்கு தெரியாமலே உன்னை கவனிச்சாரம், நீ ரொம்ப பதட்டமா அழுதிட்டிருந்தது,
அப்புறம் சாப்பாடு வேண்டாம் என்டதுன்னு முதல் நாள் வரை ஒவ்வொன்னா யோசிச்சு பாத்தவருக்கு தன்னை நீ விரும்பிறியோன்னு சந்தேகம் வந்திருக்கு.

ஏர்போர்ட்ல வந்ததும் என்னை தனிய கூப்பிட்டாரு, எனக்கும் அவர்கூட பேச இருந்ததனால சரின்னு போனப்ப தான், உன்னோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்குறதா சொன்னாரு.


நானும் அவர்கிட்ட அதையே சொன்னேன். அதோட உன் மனசு மாறி தன்னோட தவற உணர்ந்து திரும்பி வார நேரத்தில இப்பிடி நீங்க விட்டுட்டு போனா ரொம்ப உடைஞ்சிடுவன்னதும் தான்,
நான் ஊருக்கு போகல, அவ என்னை உதாசினப்படுத்தினாலும் அவளை விட்டு எங்கேயும் நான் போக மாட்டேன்னே டிக்கட்ட கிழிச்சிட்டாரு.


அப்புறம் உண்மையில உன் மனசில என்ன இருக்குன்னு தெளிவா தெரிஞ்சிக்கிறதுக்காகத்தான் இந்த நாடகம் எல்லாம்"
என்றாள்.


"ரெண்டு பேரும் சேர்ந்து என்னை நல்லா ஏமாத்திட்டிங்க போங்க", என கோபித்துக்கொண்டவள், ஏதோ தோன்ற,


"வரும் போது தான் சூரிய என்னை பார்க்கவே இல்லையே...! அப்புறம் எப்பிடி அழுதேன்னு சொன்னாரு?" என்று தன் சந்தேகத்தை கேட்க்க.


அவள் மண்டை மேல் ஒரு கொட்டு வைத்தவள்.

"அவன் பாக்கலன்னு உனக்கு எப்பிடி தெரியும்?"

"நான் தான் அவரையே பாத்திட்டே இருந்தேனே! அவரு திரும்பி கூட பாக்கல...." என்றாள் உறுதியாக.

"நீ அவனோட பின்பக்கத்தை பாத்தா எப்பிடி அவன் உன்னை பாத்தது தெரியும்?.."



"அவரு பின்னாடி இருந்த அவரோட பின்பக்கம் தெரியாம, முன் பக்கமா தெரியும்?"


"என் அறிவு கொழுந்தே..... அந்த கண்ணாடிய பாரு!
உன்னோட முகம் மட்டும் தெரியிறது போல திருப்பி வைச்சிருக்காரு, இது கூட தெரியாமல் நீ யெல்லாம் ஒரு குழந்தைக்கு அம்மா? " என திட்ட
,

அவளோ துளசி திட்டியதற்கு எதிர்மறையாக கன்னங்கள் சிவப்பேறி, வெட்கமதை சூடிக்கொண்டு தலை குனிந்து அமர்ந்திருக்க, அதை பார்த்த துளசி.


'இந்த லூசு எதுக்கு இப்போ வெட்க்க படுது? இவ வெக்கபடுற அளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன்? அசிங்கமா திட்டினா இவளுக்கு வெக்கம் வருமோ?
இது புது வித நோயால்ல இருக்கு.' என நினைத்தவளாய் அவளை ஆயாந்தவாறு இருக்க,
வண்டி ஓட்டிக்கொண்டிருந்த விக்னேஷோ திடிரென.


"சூ.... சூ.... ரொம்ப சேட்டை பண்ணுது இந்த கொசு!
எப்பிடித்தான் வண்டிக்குள்ள வந்திச்சோ?
உயிர் நண்பன் என்கிறதனால உன் சேட்டை எல்லாம் பொறுத்திட்டு இருக்கேன். இப்பிடியே சேட்ட பண்ணினேன்னு வையி, அடுத்தவாட்டி நசிக்கிடுறேன் பாத்துக்கோ!" என்ற விக்னேஷ் மண்டை மேல் ஒரு கொட்டு வைத்த சூரிய,


"ஒழுங்கா பாதையை மட்டும் பாத்து ஓட்டு! " என்று கூறிதும் தான் துளசிக்கு புரிந்தது.


'ஓ...... அந்த கொசு தானா இந்த வெட்கத்துக்கு காரணம்'


ஆம்....
கண்ணாடியினை காட்டி அதுவழியாத்தான் அவளுடைய நடவடிக்கைகளை கவனித்தான் என்று துளசி கூறும்போது அந்த கண்ணாடியினை பார்த்தவள், இப்போதும் அதே கண்ணாடியில்
அவளையே பார்த்து கொண்டிருந்தவன், அவளும் தன்னை பார்த்து விட்டாள் என்றது,
அது வழியாக முத்தம் கொடுப்பதைப்போல் உதட்டை குவித்து சின்ன சின்ன சேட்டைகள் செய்து அவளை சிவக்க வைத்து கொண்டிருந்தவன் செயலை விக்னேஷ் கண்டு விட்டான்.


அதனால் வந்த வயித்தெரிச்சல் தான் அது.


பெரியவர்களுக்கும் இவர்கள் கிண்டல் பேச்சுக்கள் புரியாமலில்லை. இருந்தும் அதை கருத்தில் கொள்ளாது தங்களது பேச்சினை தொடர,
வீட்டை நோக்கி வண்டி புறப்பட்டது.


பல கேலிகள் கிண்டல்கள் நடுவே இரவு ஒன்பது மணியினை தாண்டியே வீடு வந்து சேர்ந்தார்கள்.


கீதா, அவளது பொற்றோரையும், துளசியையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டவர்கள், குட்டிம்மா கமலி மடியில் தூங்கவும்,
தங்களுடனே அழைத்து கொண்டு போவதாக கமலி சொல்ல, கீதாவிற்கு அவளை பிரிந்து இதுவரை இருந்து பழக்கமில்லாததனால், துளசியை ஒரு மாதிரியாக பார்த்தாள்.


அவளது பார்வையின் அர்த்தம் புரிந்த கமலி.

"இன்னைக்கு ஒரு நாள் மட்டும்மா!
சூரிய தான் எங்ககூட வரானே. அவளை அழவிடாமல் பாத்துப்பான்." என்றார் கெஞ்சலாய்.
அப்படி கமலி சொன்ன மறு நொடியே,


"எதுக்கு நான் உங்க கூட வரணும்? என்னோட வீடு இது தான்.
நான் எங்கேயும் வரமாட்டேன்." என்று சிறுபிள்ளை போல் அடம்பிடித்து கார் கதவினை திறந்து கொண்டவன் சட்டை காலரினை இறங்க விடாது பிடித்தவன்.


"உன் பிளான் என்னான்னு எங்களுக்கு தெரியும் ராஜா....!
நாங்க இருக்கோம்ன்னு அடக்கி வைச்சிருந்த உன் சேட்டைய தனிய இருக்க சின்ன பொண்ணுட்ட காட்டி, அவ மனசையும் கெடுக்க பாக்கிறியா?


நீ தலைகீழாவே நின்னாலும் கல்யாணம் முடியிறவரை இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. இது பெரியவங்க முடிவு." என கூற,


"என்னம்மா இது? முடிவெடுக்க முன்னாடி எங்கிட்ட சொல்ல மாட்டிங்களா?"


"இது தான்டா சம்பரதாயம். கல்யாண பேச்சு ஆரம்பிச்சாலே பொண்ணும், மாப்பிள்ளையும் பாத்துக்கவே கூடாது. அதனால தான் அப்பிடி." என்றார் கமலி.



"என்ன சம்பிரதாயமோ!
எப்போ தான் கல்யாணம்? அதையாவது சொல்லி தொலைங்க,"


"அது உன் மாமா நாளைக்கே நாள் பாத்து சொல்லிடுவாராம்" என்க.


"மாமா ப்ளீஸ்... ரொம்ப நாள் எல்லாம் தள்ளி போடாதிங்க மாமா.
நாளைக்கு கூட நாள் நல்லம்னா தாலி கட்ட தயாரா தான் இருக்கேன்." என்று வழிந்தவனை அருவருப்பு பார்வை பார்த்த விக்னேஷ்.


"ரொம்ப வழியுது, தாெடைச்சுககோ," என்றவன்,

"ஆன்ட்டி காரை எடுக்கவா? விட்டா ஊர் வெள்ளக்காடாகிடும்." என்று கேலி பேச.


"ம்ம் சரிப்பா எடுப்பா!" என்றதும். எல்லோரிடமும் போய் வருகிறோம் என விடைபெற்றவர்கள், சூரியவையும்,
"சொல்லிட்டு வாடா" என்க.


"அம்மா கீதாவ தனிய கூட்டிட்டு போய் சொல்லிக்கவா?"

"நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். உனக்கும் சேர்த்து நாங்களே சொல்லிக்கிறாேம்.
ஏன்ம்மா....! உன் வீட்டுக்காரன் போயிட்டு கல்யாணத்துக்கப்புறம் வரானாம். இப்போ ஓகே வாடா!" என்ற விக்னேஷ் மண்டைமேலே ஒன்று போட்டவன்.


"போ போய் தொலை!.." என்றான்.

பெரியவர்கள் அவர்களது விளையாட்டினை பார்த்து சிரிக்க, கீதா தான் சூரியவின் செயலினால் அத்தனை பேர் மத்தியிலும் தலை குனிந்து நின்றாள்.

மறு நாள் காலையில் சங்கரர் திருமணத்திற்கான முகூர்த்த நாளினை குறித்து கூறினார்.

திருமணத்தினை எந்த வித ஆடம்பரமுமின்றி, சிவன் கோவிலில் மிக எழிமையாக செய்ய நினைத்ததனால், திருமணம வீடு எந்த விதமான சலசலப்பில்லாமல் இருக்க, கீதாவின் உயிர் தோழியான துர்காவை விக்னேஷ் அழைத்து வந்தான்.


கீதாவை கண்டதும் இத்தனை நாள் காணாத ஏக்கத்தில் அணைக்க ஓடி வந்த துர்காவினை அலர்ச்சிய படுத்தி முகம் திருப்பி சென்றவளைப் பார்த்து கண்கலங்கி அவள் நிற்க,


அவளை அணைத்து விடுவித்த துளசி.
"அவ அப்பிடித்தாம்மா. உண்மை எல்லாம் தெரிஞ்சும் நீ ஒரு வார்த்தை சொல்லலன்னு கோபம்" என சமாதானம் செய்தாள்.


"அக்கா அவ தான் புரிஞ்சுக்கலக்கா! நான் அவளோட நல்லதுக்குத்தான் எல்லாம் செய்தேன்.
எப்பிடியும் இவள் ஊருக்கு வந்து சேந்ததும், உண்மை எல்லாம் சொல்லி, உதய கூட சேர்த்து வைக்கிறது தான் என் நோக்கமே தவிர, கடசி வரை இவளுக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு நினைக்கல.

ஆனா இவ காணமல் போவான்னு சத்திய நான் நினைக்கவே இல்லக்கா!"
என தன் தோழியினது உதாசினத்தை தாங்காதவளாக அழத்தொடங்கினாள்.


என்ன தான் கோபம் இருந்தாலும் இவளை கண்டதும் காஃபி போட்டு எடுத்து வந்தவள்,

"இந்தா இதை குடிச்சிட்டு அழு, தென்பா இருக்கும்." என்க.

"என்மேல கோபம் இல்லன்னு சொல்லு எடுத்துக்கிறேன். இல்லனா இப்பவே ஊருக்கு கிளம்புறேன்."


"ஆ... போ! எனக்கு என்ன வந்தது? உன் தோழி கல்யாணத்தை பார்க்க விருப்பமில்லனா என்னால தடுக்கவா முடியும்?" என தர்கம் புரிந்த கீதாவின் மனம் புரிந்தவளாய்,

கலங்கிய விழிகளோடு ஓடி வந்து இறுக அணைத்து கொண்டவள்,


" ரொம்பவே பயந்துட்டேன்.... வழி தெரியாம தான் போயிட்டியோன்னு. எங்க தேடினாலும் என் ரவுடி தோழி போல யாரும் எனக்கு கிடைக்கமாட்டாங்க." என அவள் கன்னத்தில் முத்தம் வைத்து பிரிந்தவள்,


"உன்னோட கல்யாணத்தை பார்த்தே ஆகணும்னு வீட்டில அடம்பண்ணி வந்திருக்கேன்.
ஆனா இது கல்யாண இது வீடு மாதிரியா இருக்கு?" என்றவள்,


"நான் தான் வந்துட்டனே! இனி கல்யாண பொண்ணு என்ன பாடு படப்போறான்னு" என்றாள் துளசியிடம்.


சூரியவை வைத்து கிண்டல் செய்தே கல்யாண நாள் வரை
அவளை வெட்கத்தில் குளிக்க வைத்தாள்.


அவர்கள் எதிர் பார்த்த அந்த நாளும் வந்து.

காலையில் தான் அவளது இஷ்ட தெய்வமான லிங்க வடிவில் காட்சி தரும் சிவன் முன்னர் இரு குடும்பமும் அர்ச்சதை தூவ, பல வாக்குறிதியின் மத்தியில் கீதாவின் சங்கு கழுத்தினில் சூரிய மாங்கல்யம் சூடினான்.




சூரிய வீடு வந்தவர்கள், வீட்டினில் செய்ய வேண்டிய சடங்குகள் முடித்து விட்டு, தனித்தனி அறையினில் அவர்களை விட்டதும். சூரிய இன்றைய இரவினை எதிர்பார்த்து காத்திருந்தான்.


வதனிக்கோ என்னவென்றே தெரியாமல் உடல் பதட்டம் கண்டது.

சற்று தூங்கி எழுந்தால் சரியாகி விடும் என்று நினைத்து கண்கள் மூடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை, தட்டி எழுப்பிய துளசியை பார்த்து முழி பிதுக்கியவளிடம்.


"என்னடி இந்த முழி முழிக்கி? இப்போ எட்டு மணி தானேடி ஆகுது.
இன்னைக்கு தூங்குற இரவா? எழும்பி குளிச்சிட்டு இந்த புடவையை கட்டிகிட்டு வா!" என்று ஒரு புடவையை கொடுக்க,


"அதுக்குள்ள எட்டு மணியாச்சா?" என அதிர்ந்தவளாய் பயத்தில்
முழித்தபடி இருந்தவள் முன் வந்த துர்கா,


"ரொம்ப முழிக்காத கல்யாண பொண்ணே!
உன் முழியை பாத்தே அண்ணா உன்மேல பாஞ்சிட போராரு." என்று இத்தனை நாள் அவளை தொல்லை செய்தது போதது என்று இன்றும் தன் பங்கை ஆரம்பிக்க.


"அக்கா பாருங்க இவளை....! சும்மா இருக்க சொல்லுங்க." என சினுங்க.


"ஏய் நீ சும்மா அவகூட வம்பு பண்ணாத.... இனி அண்ணன் மட்டுந்தான் வம்பு பண்ணணும். அவருக்கு மட்டும் தான் உரிமை இருக்கு". என அவளுக்கு சப்போர்ட் பண்ணுவதைப்போல பேசி, கீதா காலை வாரி விட்டவளை, முறைத்தவாறு எழுந்து குளியல் அறைக்கு சென்று வரும்போது அழகாக புடவை கட்டி வந்தவளை பார்த்த துர்கா,


"எனக்கொரு சந்தேகம்க்கா. இந்த முதலிரவில எதுக்கு பட்டு புடவை, கையில பால், பழம், மல்லிகைப்பூ எல்லாம் வைக்கிறாங்க?
புடவையே அங்க தேவைப்படாதே! அலங்காரமெல்லாம் தூக்கி போட்டுட்டு நைட்டியோட போகலாம். பால் பழமா சாப்பிட அந்த நேரம் தோணும்?" என ஓரக்கண்ணால் கீதாவை பார்த்தவாறு துர்கா கேட்க.


கட்டிலில் இருந்த தலகணியை எடுத்து அவள் மேல் எறிந்தவள்.

"உனக்கும் இதே மாதிரி நடக்கும்ல்ல, அப்போ உன்னை வைச்சிக்கிறேன்." என்றாள்.


"எனக்கு இப்பிடி நடக்கும் போது எதுக்குடி நீ? என் புருஷனையே நான் வச்சுப்பேன்." என்று தோழிகள் சண்டை போட.

"ஏய் ச்சீ... மூடுங்கடி வாய!
எங்கடி இந்த சந்தைக்காரிய தோழின்னு பிடிச்சா? சுத்த மானங்கெட்டவளா இருக்கா! அவ கிடக்கா நீ வா நேரமாகுது." என அழைத்து, அவளை அலங்கரித்தவள்,
சூரிய அறை வாயிலில் விட,

ஏற்கனவோ இதை நினைத்து பயந்தவாறு இருந்தவள், இப்போது உடல் நடுக்கம் கண்டுடது.

அவளது நடுக்கத்தை பார்த்த துளசி, "என்னடி... நடுங்கிட்டு நிக்கிற?"
சும்மா பயப்பிடாமல் போ கீதா! நம்ம அண்ணா தானே" என்க.


"ம்ம்." என தலையாடினாலும் பயம் தெளியவில்லை. விட்டால் விடிய விடிய வாசலிலேயே நிற்பாள் என நினைத்தவள், கதவினை திறந்து அவளை உள்ளே தள்ளி விட்டு கதவினை அடைத்து சென்று விட்டாள்.


துளசியின் திடீர் செயலினை எதிர் பாக்காதவள், தனியே தன்னை தள்ளி விட்டு செல்பவளை,


"அக்கா!" என மூடிய கதவினை பார்த்து அழைத்தவள் பின்புறமிருந்து இறுக அணைத்த சூரிய, அவளது கழுத்து வளைவில் தன் இதழ்கள் உரசவிட்டு,


"என் பொண்டாட்டிக்கு என்னோட அறைக்குள்ள வர என்ன பயமாம்?" என கஸ்கி வாய்ஸ்சில் கேட்டான்.


என்ன தான் ஒரு பிள்ளைக்கு அன்னையே என்றாலும், ஏற்கனவே சூரியவுடன் ஒரே அறையில் இருந்திருந்தாலும். இப்படி ஒரு சூழலில் இருப்பது என்பது அவளுக்கு புதிது தானே!

இவனது செய்கையில் இன்னும் அவள் உடல் நடுங்குவதை உணர்ந்தவன், அவளை தன் புறம் திருப்பி,


"எதுக்குடி பயப்பிடுற? உனக்கு இது பிடிக்கலையா? உனக்கு பிடிக்கலனா வேண்டாம்." என்றவனை இடைமறித்து,

"இல்லை... இல்லை.. அப்பிடில்லாம் ஒன்னுமில்லை..." என்று அவசரமாக அவனது பேச்சில் குறுக்கிட்டவள், அவனை பார்க்க வெட்கம் கொண்டவளாய் தலைகுனிந்து,

"அது.... இதெல்லாம் எனக்கு புதுசு..... அதனால பயம் அவ்வளவு தான்." என்று தன் விரல்களில் எதையோ தேடியவாறு சொன்னவளை ரசித்தவனோ அவளை இறுக்கி அணைத்து,

"அப்பிடினா ஓகே!" என்றவாறு அவளைத்தூக்கி கொண்டு சென்று கட்டிலின் மேல் போட்டு, அவளது இதழ்களை கவ்வி சுவைக்கத் தொடங்கியவன், கைகள் அவள் தேகம் தீண்ட, தன் இரண்டரை வருடகாத்திருப்பின் பலனாக அவளை அணு அணுவாக ஆழத்தொடங்கினான்.




முற்றும்.

என்றும் அன்புடன்.
இவள்💗பால தர்ஷா.💗
 
Top