• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

54. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
விட்டத்தை பார்த்து, கால்களை ஆட்டியவாறு யோசனையில் கிடந்தவன், மேகலாவின் அரவம் கேட்டு திரும்பி அவளையே பார்த்தவனது விழிகளில் தன்னுடன் பேசிட மாட்டாயா என்ன ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.



அவனருகில் வந்தவள், தானக்கான இடம் விட்டுத்தருவான் என்று பார்த்தால், அவனோ அவளையே விழியசையாது பார்த்திருந்ததால்,



அவளுக்கு இடம் விட்டுக்கொடுக்கும் சிந்தையே இல்லாது படுத்திருக்க,



அவனை முறைத்தவள்,



'கொஞ்சமாச்சும் அசைஞ்சு படுக்குறானா பாரு? விட்டா கண்ணாலையே முழுங்கிடுவான்.'



என்று மனதிலே புழுங்கியவள், நேரம் அந்த இடத்திலே நின்று பார்த்தாள்.



அப்படி ஒரு எண்ணமே அற்று அவன் படுத்திருக்க,



இருந்த சிறிய இடத்தில் அவனுக்கு முதுகு காட்டு படுத்துக்கொண்டவள், வசதியாக படுக்க முடியாததனால் பின் பகுதியால் அவனை தள்ளினாள்.



அவள் செயலிலே தன்மேல் அவளுக்கு கோபம் இப்போது இல்லை என்பதை உணர்ந்தவன்.



தன் மேல் கோபமாக நடிப்பவளை ஏமாற்ற விரும்பாதவனோ,



அவள் வசதியாக படுத்துக்கொள்வதற்கு இடம் விட்டு, தானும் முன்னர் படுதனதது போலவே விட்டத்தை பார்த்து, முகத்தை ஊர் என்று வைத்துக்கொண்டு படுத்தான்.



தலையினை மட்டும் திருப்பி அவனை பார்த்தவள். அவன் ஊர்... என்று இருப்பதை கண்டதும்,



அவனை போலவே தானும் நிமிர்ந்து படுத்தவள், மேடிட்ட வயிற்றை தடவியவாறு அவனை பார்ப்பதை தவிர்த்து,



"எதுக்கு இப்போ மூஞ்சி அவ்ளோ உயரத்துக்கு நீண்டிருக்கு?



அவனும் அவளை பார்காமலே.



பெண்டாட்டி என்கூட பேசலன்னா வேற எப்பிடி இருக்கும்?



"ஓ.... அப்போ நீங்களா பேசமாட்டிங்க? நீங்களே தப்பு பண்ணாலும் நானே வந்த பேசினாத்தான் பேசுவிங்க?" என்று இம்முறை அவனை முறைத்தவாறே கேட்டாள்.



அப்படி கேட்டதும், அவள் புறம் திரும்பி படுத்தவன்,



"விடிஞ்சதில் இருந்து என்னை ஒரு பார்வை பாத்தியா? எப்போ பாரு முறைச்சிட்டே திரியிறவகிட்ட எப்பிடி பேசமுடியும்?



நானே அத்தனை பேர் முன்னாடி உன்னை அடிச்சிட்டேன்னு வேதனையில இருக்குறபோ எப்படி பேச்சுவரும்?



பானு ஒரு பக்கம், உன்னை கூட்டிடு போயிடுவேன்னு சொல்லிட்டு போயிட்டா! அது வேறு பயமா இருந்திச்சு, நான் அடிச்சதனால நீ அவங்க கூப்பிட்டதும் போயிடுவியோன்னு." என்றவன்,



"சாரிடி......" என்று அவள் கைகளை பிடித்து முத்தம் வைத்தவாறு மன்னிப்பு கேட்க.



"கோபம் வந்திச்சு தான். எப்பிடி அத்தனை பேர் முன்னாடி நீங்க என்னை அடிக்கலாம்?



அதுவும் உங்க அத்தை முன்னாடி!



நான் அவங்களுக்கு எதுவுமே செய்யல, ஆனா அவங்க என்னை பார்த்த அந்த நொடியில இருந்து காரணமே இல்லாம என்மேல வஞ்சத்த வளர்த்திட்டு என்னை குற்றம் சொல்லிட்டிருக்காங்க.



நீங்க அடிச்சதும் அவங்க பேச்சை கேட்டு தான் என்னை அடிக்கிறீங்களோனு நானும் தப்பா தான் நினைச்சேன்,



அப்புறம் தனியா வந்து யோசிக்குறப்போ தான் புரிஞ்சுது.



நீங்க எதுக்கு அவங்க பேச்சை கேக்கணும்? நான் வந்ததும் மதியை விட்டுட்டு எங்க மேல குத்தம் சொல்லுறப்போவே, நாங்க இல்லாத நேரம் என்னை எந்தளவு தப்பா பேசிருப்பாங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்." என்றாள்.



'ஆமா கலை.... அவங்க உன்னை தப்பு தப்பாவே பேசிட்டிருந்தாங்க, எல்லாம் சேர்ந்து கோபமா மாறிடிச்சுடா.



அவ்வளவு இக்கட்டில கூட நான் உன்னோட நினைவுக்கு வரலையா கலை? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு கூட தோணலையா?



மதி என்னோட தங்கை கலை!



அவ நல்லது கெட்டதில எனக்கும் பங்கிருக்கு,



நீ மட்டும் இவ்ளோ பெரிய ஆபத்தை எதிர்த்து போயிருக்கிறியேம்மா! உனக்கு ஏதாவது ஆயிருந்தா, அப்புறம் என்னோட நிலமை....?



எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு நேத்து நீ காணம போன அந்த கொஞ்ச நேரத்தில தான்டி உணர்ந்தேன்.



எல்லாருமே நான் உன்னை புரிஞ்சுக்கல, புரிஞ்சுக்கல என்கிறாங்களே தவிர, யாருக்கும் நீ தான் என்னை புரிஞ்சுக்கலன்னு தெரியல.



ஏன் கலை அப்பிடி பண்ணா?" என்று முதலில் குற்ற உணர்வோடு ஆரம்பித்து . ஆதங்கத்தோடு முடித்தவன் கண்களானது கலங்கி போக,



அதை இமை தாண்டுவதற்குள் அழுத்தி துடைத்தவன்,



இன்னும் பேசினால் ஆண் என்பதை மறந்து அழுது விடுவோம் என்று எண்ணி, தொண்டையோடு அழுகையை அடக்கிக்கொண்டு



அவள் பதிலுக்காய் காத்திருந்தான்.



அவளோ அவன் புறம் திரும்பு, அவனை இறுக அணைத்து,



நெற்றியோடு நெற்றியை முட்ட வைத்து,



"சாரிங்க...... தப்புத்தான். உங்க கிட்ட சொல்லக்கூடாது என்றில்லங்க. சொல்லுறத்துக்கான சந்தர்ப்பம் அமையல,



அவ வீட்டை விட்டு வெளியே போறப்ப தான், இந்த ரூம்ல ஜன்னல் வழியா கண்டுட்டு, ஹால்ல வந்து பார்த்தா யாரையும் காணல.



எல்லாரையும் நின்னு கூப்பிட்டு இருக்குறப்போ அவ அதுக்குள்ள போய்ட்டா எப்படி கண்டு பிடிக்க முடியும்?



அதான் எதையும் யோசிக்காம ஓடிட்டேன். அப்புறம் எப்படி உங்ககிட்ஞ சொல்ல முடியும்?"



என்றாள்.



"ஏன் கலை நீ போன ஆட்டோ டிரைவரிட்ட கூடவா போன் இல்லை? இல்லன்னா என் நம்பர் நினைவில்லையா?" என்றவும்.



சிறிது நேரம் அமைதி காத்தவள்,



"நான் உடனே மதியை அழைச்சிட்டு வந்திடலாம்ன்னு தானன நினைச்சேன்க, ஆனா இப்படியானதில அவளை காப்பாத்தணும் என்கிறதில மாத்திரம் என் கவனம் இருநதரே தவிர, வேறு சிந்தனையே வரல்ர," என்று தன் உண்மை நிலையை எடுத்து கூறியவள்,



"சாரிங்க..... நீ்ங்க இப்படி உடைஞ்சு போவிங்கன்னு நினைக்கவேயில்ல." என்று அவனை சமாதானம் செய்யும் விதமாய்,



அவன் தலையை பற்றிக்கொண்டு மூக்கும் மூக்கும் உரச செய்ய,



இத்தனை மணிநேரம் இருந்த தவிப்பு விலக, அவளை இழுத்து அணைத்து கொண்டவன்,



அவழிதலை தன் உதட்டினால் சிறைபிடித்து கொண்டான்.



அதே நேரம் அவன் போன் இடைவிடாது சிணுங்க.



மனமே இல்லாது அவளை விடுவித்தவன்,



" யாருக்கோ நாம ரொமான்ஸ் பண்றது பிடிக்கல போல." என்வாறு. மொபைலை எடுத்து இலக்கத்தை பார்த்தவன்,



"இது யாரு நம்பர்? புதுசா இருக்கே!" என்றவாறு காதில் பொருத்தினான்.



"மிஸ்டர் முகிலன்" என்று மறுமுனையில் உறுதி செய்து கொள்ள,



"ஆமா நீங்க?"



"நான் திருமூர்த்தி சார்! கோப்பாய் போலீஸ் டேஷன்ல இருந்து பேசுறேன்."



"சொல்லுங்க சார்.... நேத்து சொன்ன இடத்துக்கு போனிங்களா? அவங்களை பிடிச்சாச்சா?"



"ஆமா சார்! நீங்க சொன்னது போல ரெண்டு பேர் மாத்திரம் தான் இருந்தாங்க.,



அவங்களும் போதையில் இருந்ததனால எந்த சிரமமும் இல்லாமல் புடிச்சிட்டோம்.



காலையில் தான் அவங்களை விசாரிக்க முடிஞ்சிது,



ஆனா நீங்க சொன்னது போல அவங்க ரொண்டுபேரும் காரணம் சொல்லல,



உங்க தங்கையை தொழில் ரீதியான எதிரிங்க தான் கடத்தினதாயும்,



நாலு மணியளவில யாரோ அங்க வரதாயும் சொன்னிங்க.



ஆனா அப்படி யாரும் வரவுமில்ல, நாங்க அவங்கள பார்க்கவும் இல்லை முகிலன்.



நாங்க அவங்கள தனித் தனித்தனியா அடிச்சு விசாரிச்சதில



அவங்க சொன்ன காரணம்,



அவங்க உங்க தங்கைன்னு முன்னாடியே தெரியும்ன்னும், பணத்துக்காகத் தான் கடத்தினதாயும் சொல்லுறாங்க." என்றவர்.



"நீங்க சொன்னது போல நாங்களும் மூணு மணிக்கே அங்க போய் யாரு வராங்கன்னு மறைஞ்சிருந்து பார்த்தோம்,



அப்படி யாரும் வந்தது போல தெரியல. அங்கேயே இருந்து ரெண்டு நாளைக்கு நோட்டமிட ஆள் வற அனுப்பியிருக்கோம்.



சந்கேப்படும்படி அங்க யாராவது நடமாடினா அவங்கள எந்த கேள்வியும் இல்லாம பிடிக்க உத்தரவு போட்டிருக்கோம்.



நீங்க சொல்லுறது போல இருந்தா நிச்சயம் அந்த நபர் வர வாய்பிருக்கு. இல்லன்ன இது பணத்துக்காக கடத்தினாங்கன்னு விடவேண்டியது தான்" என்றவர்.



"நீங்களும் ஒரு வாட்டி வந்து அவங்கள பாருங்க." என்க,



"ஓகே சார்..! நான் இப்பவே வரேன்." என்றவன் போனை வைத்துவிட்டு,



"நான் போலீஸ் டேஷன் வரை போயிட்டு வரேன் கலை.



மதிய கடத்தினவங்க பிடிச்சிட்டாங்கறாம்."



"அப்படியா? சரி போயிட்டு வாங்க" என அனுமதி தந்தாள்,



இங்கு தீபனோ கொலை வெறியுடன் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் கைகளில் இருந்த ஜூஸ் கிளாஸ் உடைந்து சிதறியது.



"யாரது என் திட்டத்தை பாழாக்கினது?



என் கையில மட்டும் அவன் கிடைகச்சான்....., இந்த கிளாஸோட நிலமைதான் அந்த பரதேசிக்கும்.



எத்தனை நாள் காத்திருட்டிருந்திருப்பேன் அவனை தோக்கடிக்ம, ஒரே இரவில எல்லாம் போச்சு,



இதுக்காகவா இத்தனை நாள் காத்திருந்தேன்?



எல்லாமே என்னோட தப்பு!



அந்த நாய்கள காவலுக்கு வைச்சா குடிச்சிட்டு என் கனவை எல்லாம் நாசம் பண்ணிட்டு, போலீஸில சிக்கிட்டானுங்க,



சும்மாவா பெரியவங்க சொல்லி வைச்சாங்க பழமொழிய,



தான் தலையிடாக்காரியம் தன் பிடரிக்கு சேதம்னு,



நானே நின்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திருக்கணும், தடியங்களா இருக்காங்களே, இதையே தொழிலா செய்யிறாங்க, தப்பு பண்ண மாட்டாங்கன்னு நம்பி வந்ததுக்கு நல்ல வேலை பண்ணிட்டாங்க,



வெளிய வரட்டும், இவனுங்களை முதல்ர கவனிச்ச பிறகுதான், என் திட்டத்த நாசம் பண்ணவன் யாருன்னு கண்டுபிடித்து தீர்த்து கட்டணும்.



அந்த நேரம் அங்க யாரு வந்திருப்பாங்க?



அது யாருக்குமே சந்தேகம் வராத இடமாச்சே!



நிச்சயம் அது முகிலனில்லை.



மதிய என் இடத்திற்கு வர வைச்ச நொடியில் இருந்து என்னோட ஆள் அவன் எங்க நிக்கிறான்னு நிமிஷத்துக்கு ஒரு அப்டேட் தந்திட்டு இருக்கிறப்போ ஆவனா இருக்க வாய்ப்பில்ல.
அப்போ இங்க வந்தது யாரு?



அது யாரா இருந்தாலும் சும்மா விடமாட்டேன்.

அவனை


பழிவாங்க இருந்த, கடைசி ஒரே வாய்ப்பையும் கெடுத்தவனை சாதாரணமாக எல்லாம் கொல்ல கூடாது.



சித்திரவதை செய்தே கொல்லணும்." என்று அந்த அறை அதிருமளவு கத்தியவன்,



நல்ல வேளை அந்த தடியங்க சுயநினைவோட இருக்கிறப்போ விசாரிச்சாங்க, போதையில விசாரிச்சிருந்தாங்க, உண்மையை உலறி என்னை மாட்டி விட்டிருப்பாங்க.



கெட்டதிலும் ஒரு நல்லது தான் நடந்திருக்கு,
ஏற்கனவே பேசி வைச்சது எந்தளவு உதவுது?

ஆம்


அவன் வைத்த அடியாற்களின் குணமே இதுதான்.
ஏதாவது சந்தர்ப்பத்தில் பிடிபட்டு விட்டால் வேலை கொடுத்த முதலாளியை காட்டிக்கொடுக்காது சமாளித்து விடுவார்கள்.


மேகலா மதியை அழைத்து வந்ததும்,



அவர்கள் ஜாக்கிறுதையாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்கு அவர்களில் ஒருவனுக்கு தீமன் போன் செய்தான்.
அடிபட்டவன் மயங்கிக் கிடக்க,



போதையில் புரண்டு கொண்டிருந்தவனோ



கையிலிருந்த மொபைலை பல முறை தடவியபிறகுதான் மறுபக்கம் பேசுபவரின் குரல் கேட்டது.



அவனோ "அல்லோ...." என்று இழுவையாக கூறியதில் விஷயம் புரிந்தவன்,

"


என்னடா செய்ற?. ஏன் வாய் குலறுது! என்ன குடிச்சிருக்கியா?" என்றவன்,
"மதி என்ன செய்திட்டிருக்கா" என்றான்.

"


யாரு மதி? ஓ..... அந்த பெண்ணா? அவ எங்க போனான்னு யாருக்கு தெரியும்?" என்றான்.

"


டேய்.... என்னடா உலர்ற?
வந்தேன்னா உலர்ற வாயை உடைச்சு வைச்சிடுவேன்." என்றான்.

"


வா...வந்து உடை! ஏற்கனவே ஒருதன் அவன் மண்டையை உடைச்சு மயக்கத்தில கிடக்கான், நீ வந்து என் வாயை உடை!" என்றான்.

"


யாருடா உடைச்சான்? அப்போ மதி.....?"

"


யாருன்னு யாருக்கு தெரியும்?
என்னால கண்ணே திறக்க முடியல. இதில் யாருன்னு நான் பார்க்க?



யாரோ இவனை அடிச்சிட்டு அவளை அழைச்சிட்டு போயிட்டாங்க." என்க,

"


என்னடா குடிச்சிட்டு உலறிட்டிருக்க? அங்க என்னதான் நடக்குது? உனக்கு எப்பிடி பீர் கிடைத்தது?" என்றான் ஆத்திரமாக,

"


இங்க பாரு...! எனக்கு ஒன்னும் தெரியாது. கேள்வி கேட்டு தொல்லை பண்ணாத, ஆமா நீ யாரு என்னை கேள்வி கேட்க?"என்று முதலில் கேக்க வேண்டிய கேள்வியை இறுதியில் கேட்க.

"


டேய் நாயே! உன் பாஸ்டா" என்று தீபன் கோபமாக கர்சிக்க.

"


பாஸும் லூஸும் வைய்யா! நான் தூங்க போகிறேன்." என்று போனை தூக்கி போட்டவன் தூங்கிப்போனான்.



அவன் எறிந்த போன் மாத்திரம் புல் தரையினில் சறிக்கிக்கொண்டுபாேய், அரலிக்காட்டு சருகிற்குள் மறைந்து கொண்டது.



என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த தீபன்,

'என்னன்னு


நேரில போய் பார்த்து விடுவோம்." என்று வேகமாக நடந்தவன் மூளையில் மின்னலடிக்க,



இப்போ போனா தப்பிச்ச மதி கட்டாயம் முகினுக்கு தகவல் கொடுத்து, அவன் போலீஸில் சொன்னால், இப்போ போலீஸ் அங்கு போயருக்கும், அவர்களுடன் சேர்த்து தானும் மாட்டிக்கொண்டு விடுவோம்.
எப்படியும் காலையில் திருமணம் என்ற விஷயத்தையும் மதி சொல்லியிருப்பாள். நிச்சயம் என்னை பிடிப்பதற்காகவே போலீஸ் வேகு பார்க்கும்.



நானா போய் மாட்டிக்க கூடாது' என்று நினைத்தவன், விடியலுக்காக காத்தருந்தான்.



காலையில் அவன் அன்னை காஃபியுடன், பத்திரிகையும் அவனிடம் கொடுப்பது வழக்கம். இன்றும் அதையே செய்துவிட்டு போக,



பத்திரிகையின் முன் பக்கத்திலே.



பிரபல தொழிலதிபர் தங்கை கடத்தல்.
இருவர் கைது என்ற தலைப்பை பார்த்தவன் கீழ் இருந்த புகைப்படத்தை பார்த்தான்.
அது அவன் ஏற்பாடு செய்ய அடியாற்களே தான்.



எங்கே தன் பெயரும் வந்திருக்குமோ? அவர்கள் தன்னையும் மாட்டி விட்டார்களோ என்று பயந்தவன், கீழிருந்த செய்திகையும் படித்தவனும் எந்த இடத்திலும் அவன் பெயர் வராதது கொஞ்சம் நிம்மதியளிக்க,
இனி தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவன்,
அடுத்த கட்டம் தன்னால் நகரமுடியாது இருக்கவே



வெறி பிடித்தவன் போல் தான் திரிகிறான்.



ஆனால் தன் திட்டத்தை பாழாக்கியவன் யாராக இருந்தாலும் தான் தான் அவன் பூமியில் இருக்கும் கடைசி நிமிடத்தை தீர்மாணிப்பது என்று எண்ணிக்கொண்டு அந்த நொடிக்காக அடுத்த தவத்தில் இறங்கினான்.



இங்கு போலீஸ் டேஷன் வந்த முகிலன்,
அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பேசினான்
அவர் போனில் கூறியதையே கூற,

"


சார் அவங்கள நான் ஒருதடவை விசாரிக்கலாமா? அதுக்கு ஒரு வாய்ப்பு தரமுடியுமா?" என்றான்.

"


சட்டத்தில் அதுக்கு இடமில்லை.
ஆனா நான் உங்களுக்கு அனுமதி தரேன்.

ரொம்ப


முரட்டுதனமாக நடந்துக்காதிங்க, அப்புறம் சட்டம் எங்க பக்கம் திரும்பிடும்." என்க.

"


நன்றி சார்!" என்றவனை இரண்டு காவலதிகாரிகள் உற்புறமாக இருந்த விசாரணை அறைக்கு அழைத்து சென்று கதவை திறந்து விட்டவர்கள், வெளியில் நின்று கொள்ள,



ம அவர்களை நெருங்கிய முகிலன்,

"


நீங்க யாரு? எதுக்கு என் மதியை கடத்தினீங்க?" என்றான்.

"


அது தான் ஏற்கனவே போலீஸ்கிட்ட சொல்லிட்டோமே.. பணத்துக்காகத் தான் கடத்தினோம்" என்ற,
ஏற்கனவே காவல் துறை அவர்கள் மேல் காட்டிய வித்தையில் வாயோரம் வடிந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைத்து விட்டபடி திமிராகவே பதில் தந்தான் ஒருவன்.

"


ஓ...... அப்படியா? பணத்துக்காகத்தான் கடத்தினாயா? நீ கடத்தினது யாரை என்கிறது தெரியுமா?"

"


தெரியாமலா கடத்தியிருப்போம்? நம்பர் ஒன் பிஸினஸ் மேன் முகிலனோட தங்கச்சிய என்குறது கூடவா தெரியாது.
அவனை யாருக்காவது தெரியாம இருக்குமா?
"ஆமா முதல்ல நீ யாரு? நீ ஏன் எங்ககிட்ட கேள்வி கேட்கிற?
சும்மா போறவன் வரவன் கேட்குற கேள்விக்கெல்லாம் எங்களால பதில் சொல்ல முடியாது.



யாரு வந்து கேட்டாலும் எங்க பதில் ஒன்னு தான். அது தான் உண்மையும்" என்று திமிராக சொல்னவன், மூலையில் இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொள்ள,
இருவரையும் பார்த்து பெரிதாக சிரித்தவனோ,

"


ஏன் என்னை தெரியலையோ..." என்றவனை கேள்வியாக பார்த்தனர் இருவரும்.

'


என்னா? இப்படி சிரிச்சா உன்னை பார்த்து பயந்து போயிடுவோமா? உன்னை நாங்க தெரிஞ்சுக்கிற அளவுக்கு நீ என்ன நாட்டோட பிரதமரா,
பொது கக்கூசில கூட உன் போட்டோ மாட்டி வைக்குறதுக்கு" என்று கேலி பேஞி சிரிக்க,
அவனை முறைத்தவாறு அருகில் சென்றவன்.

"


ஏன் என்னை பத்தி சொன்ன அந்த தீபன், என் படத்தை உங்களுக்கு காமிக்கலையா?" என்று தன்னோடு வாய் பேசியவனின் சட்டையின் காலரை பிடித்து கேட்டவன்,
"நான் தான்டா மதியோட அண்ணன் முகிலன்.
தி கிரேட் பிஸினஸ் மேன் நானே தான்" என்றவன்,

"


இது தான் என்னை பத்தி தெரியாதவங்க யாராவது இருக்க முடியுமான்னு கேட்டதோட லச்சனமா? உண்மையை சொல்லு, அந்த தீபன் தானே உங்கள அனுப்பி வைச்சான்" என்க,



முதலில் முழித்தவன்.

"


யார் அந்த தீபன்? நாங்க ஏன் அவன் மேச்ச கேட்கணும்? எனக்கு அவசரமாக கொஞ்ச காசு தேவைபட்டிச்சு, இவன்கிட்ட கேட்டப்போ, உன்னோட பெயரை சொல்லி உனக்கு ஒரு தங்கை இருக்கா,
அவளை கடத்தினா கேட்கிற பணத்த நீ கொடுதுடுவேன்னு ஐடியா தந்தான். அது தான் கடத்தினோம்." என்றான் வாய் கூசாது.



"உனக்கு பணம் தான் வேணும்னா கடத்தி அவ்ளோ நேரம் ஆகியும் ஏன் என்னை தொடர்பு கொல்லேல?" என்று கேள்வியால் அவனை மடக்க.

"


ஏதோ அவசரத்தில் கடத்திவிட்டாேம். ஆனால் உன் தனிப்பட்ட நம்பர் எங்ககிட்ட இல்லை. காலையில் எப்படியும் கண்டுபிடிச்சு, பண்ததை பிடிங்கிடுவாம்ன்னு தான் நினைத்தோம்." என்றான்.

"


பரவாயில்லை.... நல்லாத்தான் ட்ரெயினிங்க் குடுத்திருககான் அந்த தீபன்



எந்த வழியில மடக்கினாலும், சட்டு சட்டுன்னு பதில் வருதே! பயங்கர திறமை சாலிங்க,"என்று வஞ்சகமாய் புகழ்ந்தவன்,



வெளியி வந்து என் கண்ணில பட்டீர்கன்ன, என் திறமையையும் பார்க்கலாம், ஏவியவனை விட்டுட்டு அம்பை நோகக்கூடாதேன்னு நினைக்கிறேன், அதனால இங்க எதுவும் செய்யாம போறேன்.



ஆனால இதை போல எப்பவும் விட்டு விடுவேன்னு கனவு கண்டுட்டு வெளிய எங்கேயாச்சும் கண்டேன்,
கடைசி நாள் அதுவாத்தான் இருக்கும்."



என்று கண்களில் கணல் தெறிக்க, கைகளை மடக்கி கோபமாக அவன் இருந்த பெஞ்சை உதைந்தான்.



ஏற்கனவே பென்ஷன் கேட்டிருந்த பெஞ்ச் அவன் கோபத்தில் முழுவதுமாக நொருங்கி தன் ஆயுளையே முடித்திருந்தது.



அவன் உதைந்த வாங்கின் நிலையை பார்த்த இருவரும் ஒரு நொடு வெலவெலத்து போனவர்கள்,
ஒரு வித நடுக்கத்துடனே அவனை பார்க்க,
அதே கோபத்தோடு திரும்பி வாசலை நோக்கி சென்றவன்,

"


எத்தனை நாளைக்கு அவ என்கிட்ட மாட்டாம இருந்திட போறான்? எப்பவாச்சும் மாட்டுவான்ல அப்போ அவனுக்கும் இதே நிலைதான்." என்று பெஞ்ச்சை காட்டியவன், அதே வெறியுடன் கதவை திறந்து வெளியேறினான்.



அவனுக்கு தீபன் மீது தான் சந்தேகம்.
தொழில் ரீதியாக அவனுக்கு எதிரிகள் உண்டுதான்,
ஆனால் இப்படி கேவலமாக தரக்குறைவான எதிரிகள் அவனுக்கு தீபனை தவிர வேறு எவருமில்லை.

அதாேடு


இதுவரை தனக்கும், ராகுலுக்கும், வர்ஷாவுக்கும் தெரிந்த காதல் விஷயம் யாருக்கும் தெரியாது.



ஆனால் நேற்று பானு தன்னை ஏசிம்போது தன் வாழ்க்கை நாசம் பண்ணியது நீதன் என்று பானு வர்ஷா பெயரை கூறியது முதல் அதிர்ச்சியாக இருந்தாலும்,



அவள் அன்று தீபன் என்று கூறியது தன் கல்லூரி எதிரிதான் என்பது இப்போது நிருபனமானது.
ஆனால் பானு மேகலாவிடம் அன்று பேசும் போது எதற்காக தீபன் அப்படி நடந்ததற்கு அன்றே காரணம் தெரியாதவள் என்றவள்,



நேற்று அத்தனை பேர் முன்னாடி முகிலன் காதலினால் தான், தன் நிலமை இப்படியானது என்றது அவனுக்கு மதியை கடத்தியது தீபனாகத்தான் இருக்கும் என்பதன் சந்தேகத்தை உறுதி செய்தது.



இருந்தும் வீட்டில் இருக்கும் பிரச்சினையில் இதை இன்னும் கிழறக்கூடாது என்று அமைதி காத்தான்.



ஆனால் தீபன் போட்ட திட்டத்தில், அவன் தான் நேரடியாக கழத்தில் இறங்கி மதியை கடத்தினான் என்பது மட்டும் தெரியவில்லை.



ஏனென்றால் தன் மனைவியோ, மதியோ இருவர் என்று தான் சாட்சி சொன்னார்கள்,



ஆனாலும் அவனுக்கும் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று உறுத்தாமலில்லை.



யார் மூலமாக இவர்களுக்கு தம் காதல் கதை தெரியும் என்று.



ஒருவேளை இந்த இருவருக்கும் தீபன் கூறி. அவர்கள் மூலமாக தான் தன் தங்கை உட்பட பானு கலைக்கு தெரிந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டான்.



எதுவாக இருந்தாலும் அந்த தீபனை நான் சந்திப்பானேயானால் அவன் உயிர் என் கையால் தான் போகும் என்று தீர்மானமே எடுத்தே விட்டான்.








சங்கமிப்பாள்.......
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
Ithunga3num unmaya sollallaam deeban thaan mathiya varavachannuvaravachann
சொல்லிருக்கலாம் ஆனா மதியினால யோசிக்கிறா நன்றி சிஸ்
 
Top