• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

55. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
போலீஸ் டேஷனில் இருந்து எவ்வாறு வெளியேறினானோ அதோ போபத்தோடு வீடு வந்தான்.



சுந்தரியும் மேகலாவும் ஹோலில் இருந்து ஏதோ சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க, அவர்கள் முன் கொண்டு வந்த பத்திரிகையை போட்டன்.



"பருங்க என்ன மாதிரி செய்தி வந்திருக்குன்னு." என்று கோபமாக கூறியவன்,



"இது எதுவும் உண்மையில்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்,



இது எல்லாமே அந்த தீபனோட வேலை.



அவன் தான்னு உறுதியாச்சு, என் கையால தான் அவனுக்கு சாவு." கோபத்தில் கண்கள் சிவக்க கூறியவன் இறுகிய கைகளின் நரம்புகள் எல்லாம் பச்சை பாம்புகளாக தசைகளின் மேலெழுந்து அவன் ஆத்திரத்தை பிரதிபலிக்க, பயந்தே போனாள் மேகலா.



இதுவரை இப்படி ஒரு முகிலனை மேகலா கண்டதில்லை.



கோபமென்றால் அவன் சத்தமாக பேசுவது மட்டும் தான் கோபம் என்று நினைத்தவளுக்கு, ருத்திரமூர்த்தியாக தன் முன் நின்றவளை கண்டு வெகுண்டவளாக சுந்தரி பின்னால் ஒரு நொடி மறைந்தவள்,



முகிலன் தன்னையே சந்தேகமாய் பார்த்திருப்பதை கண்டதும், வெளியே வந்து சாதாரணமாக நின்பதை போல் நின்று கொண்டாள்.



அவள் முன் வந்தவன்,



அவள் கண்களையே ஊடுருவியவாறு,



"உண்மையை சொல்லு....



மதிய கடத்தினது இந்த பத்திரிகையில இருக்கிற இந்த ரெண்டு பேரும் தானா, இல்லன்னா, இவங்ககூட இன்னொருத்தனுமா?" என்றவன்.



"ஐ மீன்.... நான் கேட்டது உன்னோட பழைய முதலாளி பையனுமா?" என்றான் அதே சூடு தணியாது.



அவனது கோபத்தை பார்த்ததும் பயத்தில் ஒரு நொடி உண்மையை சொல்ல வாய் எடுத்தவள், இவன் இருக்கும் வெறியில் அந்த தீபனை கொன்று விட்டு சிறைக்கு போக கூட அஞ்சமாட்டான்,



அதுவுமில்லாமல் பத்திரிகையில் இருந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தவள்,



'மதியினது வாழ்க்கைக்கு அந்த செய்தி பாதகமாக இருக்காது அதுவே உண்மையாகட்டும்,



இவனிடம் உண்மை சொன்னால் இவன் அவனை எதற்கு கொலை செய்தான் என்ற கேள்வியை மீண்டும் வரும் போது கடத்தியதன் உண்மையும் வெளியில் வரும்.



இப்போது தீபனை காட்டிக்கொடுத்தால், அவனை முகிலன் கொலை செய்து ஆயுள் தண்டனை கைதியாவன்.



நான் என் வாழ்க்கையை இழந்து, கொலைகாரன் மனைவி என்ற பட்டத்தோடு வாழ்வேன், மதி ஊரார் மத்தியில் விதம் விதமாக சித்தரிக்க படுவாள்,



வேண்டாம்.... உண்மை எதுவாக இருந்தாலும். இப்போதிருக்கும் மனநிலையில் உண்மை கூறுவது ஆபத்தானது,



ஒரு பொய்யால் மூன்று பேர் வாழ்க்கை காப்பாற்ற படுமேயானால் அது ஒன்றும் தவறில்லை.'



'கொஞ்ச நாள் போனா இவன் கோபம் குறைந்து விடும், அப்போது சாகவாசமாக சொல்லிக்கொள்ளலம். அப்போது புரிந்து கொள்வன்.' என்று நினைத்தவள்.



அவனை பார்ப்பதை தவிர்த்து



"நான்... நான் இவங்க ரெண்டு பேரும் கடத்தினத தான் கண்டேன்,



ரொம்ப இடைவெளி விட்டு பின் தொடர்ந்ததால ஆவங்க பேசினது எனக்கு கேக்கல,



அதே போல காட்டுக்குள்ளையும் ரொம்ப தூரத்தில தான் இருந்தேன்.



ஏதோ போசினாங்க தான்



ஆனால் என்னென்னு என்னால கணிக்க முடியல்ல" என்று தட்டு தடுமாறி கூறியவள், பயத்தில் தரையையே பார்த்திருக்க,



அவளை நம்பாமல் அதே கொதிநிலையில் இருந்து சற்றும் இறங்கி வராதவன்,
" மதி...... மதி...." என்று வீடே அதிருமளவு அழைத்தான்.



அவன் குரலின் கோபமுதர்ந்த மதி, அறையிலிருந்து வெளியே வந்தவள்,
அவன் கோபத்தின் காரணம் புரியாமல்,
கேள்வியாய் மேகலாவை பார்க்க,

அங்கிருந்த பத்திரிக்கையை அவளிடமா நீடாடியவன்,

"
இதை சரியாக பார்த்து சொல்லு, இதில இருக்கிறவனுங்க தான் உன்னை கடத்தினாங்களா?

அவளும் பத்திரிகையை பார்த்து


விட்டு, "ஆமாண்ணா....! இவனுங்க தான்." என்றாள்.



இம்முறை மதியை ஊடுருவம் பார்வை பார்த்தவன்,
இவனுங்க ரெண்டு பேரும் தானா? இல்லன்ன கூட யாரும் இருந்தாங்களா?" என்றான் அதே பார்வையோடு,



ஒரு நெடி அண்ணணுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பயந்தவள்,



மேகலாவை திரும்பி பார்த்தாள்.



அவளோ முகிலன் தன்னை பார்கிறானா என்பதை உறுதி செய்து மதியிடம் இல்லை என்பதாக தலையசைத்தாள்.
தான் கேட்டதும் மதி மேகலாவை திரும்பி பார்த்ததும், அதற்கு மேகலா தலையசைத்ததையும் கண்டவன் ஏதோ புரிந்நவனாய்,

"


நான் தான் உன்னை கேள்வி கேட்டேன் மதி! அங்க என்ன பார்வை?"

"அ


.... அண்ணா....அ..அது...அது வந்து" என்று பிதற்றியவள்.
"இல்லண்ணா இவங்க ரெண்டு பேரு மட்டும்தான். வேற யாருமில்லை" என்றாள்.



ஓ..... அப்படியா? அப்போ அந்த தீபனுக்கும் இந்த கடத்தலுக்கும் சம்மந்தமில்ல என்கிறீங்க"
"
அது எங்களுக்கு தெரியாது. ஆனா நான் இவங்ககிட்ட இருந்து மட்டும் தான் காப்பாத்தினேன்."

"


அப்போ கடத்தினவனை நீ பார்க்கல அப்படித்தானே?"
"அது வந்து.." என்றவள்.
"இல்லை இவங்க தான் கடத்தினாங்க" என்க,

"


அப்போ நான் வர்ஷாவை காதலிச்சது பானுக்கு எப்படித்தெரியும்? உனக்கும் தெரியும் என்டாளே!
அது எப்படி?



"இது என்னை கேட்கவேண்டிய கேள்வியில்லையே! பானுவை தான் கேட்கணும், எனக்கும் அவள் தான் சொன்னா" என்று ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்யை போர்வையாக்கினாள் மேகலா..
அவளை ஆழமான பார்வை பார்த்தவன்,
"அதெப்படி கலை...! எனக்கும் தீபனுக்கும் அந்த வர்ஷாவிற்கும் மட்டும் தெரிந்த விஷயம் உன் தங்கைக்கு தெரிஞ்சிது? ஒன்னு நான் சொல்லியிருக்கணும், நிச்சயம் நான் சொல்லல்ல, எனக்கு குடிக்கி பழக்கமுமில்ல போதையில் உலர்றதுக்கு.



நான் இல்லன்னா வர்ஷா தான் சொல்லியிருக்கணும்,. அதுக்கும் வாய்ப்பில்ல,
ஏன்னா அந்த வர்ஷா யாருன்னே உங்களுக்கு தெரியாது.



அப்படின்னா தீபன் தான் அவளுக்கு சொல்லியிருப்பான். ஆனா இது நம்மளோட கல்யாணதனதுக்கு முன்னாடி சொல்லல என்கிறத பானுவே ஹோட்டலில் வைச்சு உன்கிட்ட சொன்னாத நானே கேட்டேன்.



அதுக்கப்புறம் அவங்க சந்தித்திருக்க வாய்ப்பு அமைஞ்சிருக்காது.



அப்படின்னா நேத்துத்தான் இது செரிஞ்சிருக்கணும், மதிய கடத்திட்டு போன தீபன் தான் சொல்லியிருக்கான்" என்றவன்,

"


என்னை பழி தீர்க்கிறதுக்காக மதியை கடத்தியிருக்கான். இது தான் உண்மை" என்றான் அறுதியாய்.
அதை கேட்டு இருவரும் அமைதி காக்க,

"அப்போ நான் கணித்தது சரி அப்படித்தானே?,"
என்றவன் கேள்விக்கு பதில் கூறாது இருரும் அமைதியா தலை குனிந்து நின்று கொண்டனர்.
அவன்
உண்மையை கண்டு கொண்டான் என்றாலும், அவன் அழைத்ததும் மதியாகவ விரும்பி சென்ற விபரம் முகிலன் அறியவில்லை என்பது சிறு மகிழ்ச்சியை தந்தது.



என்ன அமைதியா இருக்கிங்க?
உண்மை எதுன்னு தெரிச்சிடிச்சுன்னா?
இனி மறைக்க எதுவும் இல்லை,
இனியும் நீங்க சொல்லுற பொய் நான் நம்புறதா இல்லை,
"சொல்லு மேகலா



எதுக்கு மறைச்சா?" என்றான்.



மேகலாவிற்கு ஐயோ என்றானது.



எதை மறைக்கவேண்டும் என்று நினைத்தாளாே, மீண்டும் விடை மதியே தீபனை தேடிச்சென்றாதாக அமையும் கேள்வியாக இருக்க,
அவள் என்ன கதை சொல்வாள்?

"


உன்னைத்தான் மேகலா?" என்று அவள் காதருகே கத்தியவனை மிரட்சியாய் பார்த்தாள்.



"என்ன காரணத்துக்காக உண்மையை மறைச்ச?



அப்படி மறைக்குன அளவுக்கு என்ன நடந்திச்சு? என மிரட்டியவன் சத்தத்தில் கண்களில் திரையிட்ட நீருடனே,

"நாளைக்கு


மதியோட வாழ்க்கையும், பானுவோட வாழ்க்கை போல,
எங்க என்னோட பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சிடாதான்னு, என்னோட பெத்தவங்கள மாதிரி, அத்தையும் ஏங்கிட்டிருக்க கூடாதுன்னு தான் மறைச்சேன்." என்றாள்.

"


நான் என்ன கேட்டுட்டிருக்கேன், நீ என்ன உலர்ற?"


"ஆமா..


உலர்றேன் தான்......" என்று மதி தீபன் காதலை கூறியவள், நேற்று நடந்தவற்றையும் மறைக்காமல் கூறும்போது முகிலனது கொதிநிலை இன்னும் உச்சம் தொட்டதையும் கவனிக்காமலில்லை.



அவள் சொல்லி முடிக்கும் வரை அமைதி காத்தவன்,

"


படிக்க அனுப்பினா படிப்பை விட்டுவிட்டு இந்தவேலை தான் பார்த்துட்டு திரிஞ்சியா?



என்ன தைரியத்தில அவன் கூப்டதும் என்ன? ஏதுன்னு கேட்காம போயிருப்ப?
அப்படியா உன்னை வளர்த்தோம்?



ஏடா கூடமாக ஏதாவது ஆகியிருந்தா என்னாகியிருக்கும்?



எல்லாமே நான் தந்த இடம்.
மத்த வீடுங்கள போல, உன்னையும் அடைச்சு வைச்சு வளர்த்திருக்கணும்,
பிறந்த வீட்டில இருக்குற வரைக்கும் தான் சுகந்திரமா இருப்பேன்னு நினைச்சு சுகந்திரம் தந்தது எந்தளவு தவறென்று புரியவைச்சிட்ட" என்றவன்.



"என்னோட தங்கச்சின்னு தெரிஞ்சும் இவமேல கைவைச்ச அவனை?......." என்று கோபமாக திரும்பியவன் கையை இறுக பிடித்தவள்.



ப்ளீஸ்ங்க... நான் சொல்லுறதை கொஞ்சம் கேட்டுட்டு அந்த தீபனை என்ன வேணும்ன்னாலுய் செய்யுங்க" என்று கெஞ்சுபவள் பேச்சை காது கொடுத்து கேட்காமல் அவள் கையை தன் யைிலிருந்து உருவுவதிலே குறியாக இருந்தவன் கையை அதற்குமேல் தடுக்க முடியாது விட்டவள்,

"


போங்க... போய் உங்க ஆத்திரம் தீருற வரை அவனை கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்கு போங்க,
அந்த அவமானம் தாங்காம நாங்களும், தூக்கு மாட்டிட்டோ, இல்லன்னா மருந்த குடிச்சோ செத்துடுறோம்." என்றதும் சட்டென நின்றான்.

அவன் தன் பேச்சை கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டவள்,


இந்த சந்தர்ப்பத்தை


விட்டால் இவன் கோபத்தை குறைக்க முடியாது என்று உணர்ந்து,



உங்களுக்கு பழி வாங்கிறது தானே முக்கியம்?



நாங்க யாரும் முக்கியமில்லை தானே!



நாளைக்கு மதி பெயர் கெட்டுப்போறதோ,. இல்லன்னா உங்களை நம்பி வந்த நான் கையில பிள்ளையோட நடுத்தெருவில நிற்கப்போறேன் என்கிறதப்பத்தி எல்லாம் எந்த கவலையுமில்லை.
அப்பிடி மட்டும் ஆச்சு.....! அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்,



ஏற்கனவே நான் அனுபவிக்கிறதெல்லாம் அனுபவிச்சிட்டன்,
என் பிள்ளையையும் அதே போல நரகம் அனுபவிக்க விடாம ஆத்திலயோ, குழத்திலயோ விழுந்து செத்துவிடுவேன்.

உங்கள பெத்த பாவத்துக்கும், கூடப்பிறந்த பாவத்துக்கும் உங்களை நினைச்சிட்டே அவங்களும் போய் சேரட்டும்.






போங்க.... எதுக்கு இன்னும் நின்னுட்டு, நான் இப்படித்தான் உலறிட்டிருப்போன்,

இங்க


நின்னு உங்க நேரத்தை வீணாக்காதீங்க,

உங்க தங்கைன்னு செரிஞ்சும் அவமேல கைவைச்சவன


சும்மா விடலாமா? அவனை பழி வாங்க வேண்டாமா? என்று இம்முறை கோபத்தை தன் கையில் எடுத்தவள், ஆற்றமையோடு அழுகையும் சேர்ந்து கொள்ள, கன்னங்களில் வடிந்த கண்ணீரை துடைத்தவாறு வேகமாய் படியேறி கதவடைத்து கொண்டாள்.



அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் கேட்டவன்,



அவள் கூறிய



ஏன்கனவே நான் அனுபவித்த நரகத்தை என் பிள்ளைக்கு கொடுக்க மாட்டேன். ஆத்திலயோ குலத்திலயோ விழுந்து செத்துவிடுவேன் என்ற வார்த்தையின் பின், கண்களை துடைத்தபடி அறைக்கு ஓடியவள் ஏதாவது செய்து கொள்ள போகிறாள் என்று பயம் வர அவள் பின்னாலே ஓடியவன்,

"


கலை கதவை திற....."

ராங்கியாகத்தான்.






எதிர்புறம் எந்த பேச்சுமில்லை.



கலை கதவை திறன்னு சொல்லுறேன்ல" என்றான் மீண்டும் அதே பாணியில்.
..............



கலை கதவை திறடி!. என்று கெஞ்சலில் இறங்கி விட்டான்.



கலை ப்ளீஸ்டி... நான் யாருக்கும் எதுவும் பண்ணல வீட்டிலயே இருக்கேன்.... திறடி...



அது தான் சொல்லுறேனே!



எதுக்குடி கொல்லுறாஎன்னை?



இப்பிடி என்னை பயமுறுத்தி சாவடிக்கிறத பார்க்க, ஒரேயடியா கொன்னுடு. .... என்று அழுபவன் போல் கெஞ்சவும்,



கண்களை துடைத்தவாறே வந்து கதைவை திறந்து விட்டவள் அவனை பாராமல் உள்ளே போனவள் பின்புறம் ஓடிவநனது கட்டிக்கொண்டு,



அவள் தோள்களின் தன் முகம் புதைத்து நின்றவன் பதட்டம் இன்னும் தெளியாது அவள் பரிசத்தையே உணர்ந்தவாறு நின்றவன்,



அவளிடமிருந்து விலகி தன்னை பார்க்க வைத்தவன்,

"ஏன்டி


வேகமா வந்து கதவ சாத்தின?." என்றான் கோபம் போல்.

"நீங்க


ஏன் இங்க வந்தீங்க? நீங்க தான் பெரிய ரெளடியாச்சே!
போய் உங்க ஆத்திரத்தை திபன்கிட்ட காட்ட வேண்டாயது தானே!"

"ஏன் .....? என்னை துரத்திட்டு


நீஎன்ன பண்ண போறியாம்?" என்றான் அவளை போலவே.

"


உங்களுக்குத்தான் எங்கள பற்றி கவலையே இல்லையே! நாங்க என்ன பண்ணா உங்களுக்கென்னா?" என்றவள்



தோள்களை பற்றியவன்.
"என்னை பாரு கலை" என்று
அவளை தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்,
"இப்ப சொல்லு..... எனக்கு யாரை பத்தியும் கவலையில்லையா? மத்தவங்கள விடு!
உன்னை பத்தி நான் கவலையே பட்டதில்லையா?" என்று காலையில் அப்படி தன் நிலமையை கூறியும், இப்போதும் தன்னை புரிந்து கொள்ளாது அவள் கூறுவதை தாங்காதவனாய் மனமுடைந்து கேட்டான்.



அவனை இறுக அணைத்துக் கொண்டவள்,
" எனக்கு நீங்க வேணும்க. யாரோ ஒரு பரதேசியை கொன்னுட்டு நீங்க போயிட்டா என்நிலமையை யோசிச்சு பாருங்க,
சின்ன வயசில இருந்து நான் அனாதையாத்தான் வளர்தேன்.
என்னதான் எனக்கும் அப்பா, அம்மான்னு சொந்தம் அமைஞ்சாலும் ஏதோ என் மனசில ஒருவித ஒதுக்கம் எப்பவுமே இருக்கும், அதை மாத்தணும்னு நிறைய தடவை முயன்று தோத்துட்டேன்..



இப்போ கொஞ்ச நாளாத்தான் உங்கள என் மனசு கணவரா ஏத்துக்க தொடங்கி எந்த ஒதுக்கமும் இல்லாம இருக்கிறேன்,
நீங்களும் என்னை இடையில விட்டுப்போனா திரும்பவும் நான் அவனாதையாகிடுவேனோன்னு பயம் வந்திடுச்சு" என்று அவன் நெஞ்சின்மேல் தன் கண்களால் வடிந்த கண்ணீரை துடைத்தவள்,


"


எனக்காக ப்ளீஸ் அவனை எதுவும் செய்து போலீஸ்ல மாட்டிக்காதிங்க. எனக்கு நீங்கவேணும், என் பிள்ளைக்கும் நீங்கவேணும்." என்று கதறியவளை தன்னோடு சேர்த்து இறுக்கியவன், அவள் தலையை வருடிக்கொடுத்து உச்சி மீது முத்தம் வைத்தவன்,

"


சரிடா தங்கம்.... நான் யாரையும் எதுவும் செய்யல, நீ அழதே!" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
"என் கைமேல அடிச்சு சத்தியம் பண்ணுங்க." என்றான்.

"


என்னடி இது சத்தியத்திற்கு வந்த சோதனை?" என்றவும்,
அவனை செல்லமாய் முறைத்தவள்,

"


இப்போ சஎதுக்கு சொன்னீங்க? அப்போ சத்தியத்தை காப்பாத்த மாட்டீங்களா?"

"அடியே


லூசு பொண்டாட்டி! நான் அதை சொல்லல,
நானே பொய் பேசாதவன், சத்தியம் தவறாம நடக்கிறவனை நம்பாம, சத்தியம் பண்ண சொல்லுறியேன்னு சொன்னேன்." என்றவன்,



அவள் நீட்டிய கையின் மேல் தன் கையை வைத்து,

"


சத்தியமாய் நான் அவன் வழிக்குப்போக மாட்டேன்.



ஆனா இனி என் முன்னாடி அவன் வந்தாலோ இல்லை என் விஷயத்தில அவன் தலையிட்டான்னா தெரிஞ்சாலோ அவன் உயிருக்கு நான் உத்தரவாதம் தரமாட்டேன். இது சத்தியம்" என்றவன்,

"போதுமா.....?" என்றான்.

"


இதையா நான் கேட்டேன்?"

"


இதை பாரு கலை. எல்லாத்துக்கும் பயந்திட்டு இருக்க முடியாது, இது கூட உன் திருப்திக்கு தான். அவன் எப்போவும் எனக்கு கெடுதல் நினைப்பான், நான் அதை கையாலாகாதவன் போல வேடிக்கை பார்க்க சொல்கிறாயா?
நீ கேட்ட சத்தியம் முடிஞ்சிது. இப்போவாவது சிரி" என்க.

"


போடா......" என்றவள் வாசலை நாடிசெல்ல.



அவளை போகவிடாது மீண்டும் பின்புறமாக அணைத்தவன்,
"நானும் பார்த்திட்டிருக்கேன், வர வர தாலி கட்டின புருஷன் என்கிற மரியாதை இல்லை.



எப்போ பாரு என்னை மிரட்டிட்டே வாயாடிட்டு இருக்க," என்று பற்களை கடித்தவாறு செல்லமாக அவளை திட்டியவன்,

"


அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு போய், கட்டிலில் கிடத்தி அவளை செல்லம் கொஞ்சிக்கொண்டே,



கலை நாளை மறுநாள் ஒரு பங்க்ஷன் இருக்குடா... நீயும் என்கூட வரணும்." என்க,

"நான்


எதுக்கு? நான் வரமாட்டேன்...
இந்த வயித்தோட உங்ககூட வந்தா ஒரு மாதிரியாக இருக்கும்"

"


ஏன்டி! என் பிள்ளை சம்சாரத்தோட நான் போறேன், யார் என்ன சொல்லறது? நீ வந்து தான் ஆகணும்" என்றவன்,
"என் தொழில் நண்பர்கள் உன்னை பார்க்கணும் என்கிறாங்கடி! ப்ளீஸ்....." என்று கெஞ்ச,

"


யாராவது ஏதாவது நினைச்சா..?"

"


யாரும் எதுவுமே நினைக்க மாட்டாங்கடி! நீ வா!"
"
யாராவது வித்தியாசமா பார்த்தா கூட நான் வந்திடுவேன்." என்றாள்.
'சரி... யாராவது வித்தியாசமா பார்த்தா தானே?" என்றவன்,
"எனக்கு வெளிய கொஞ்ச வேலை இருக்குடா, நான் போய் வரவா?" என்றவனை சந்தேகமாக பார்த்தவாறு அவன் கையை பிடிக்கவும்,

"


மறுபடியுமா......? நிஜமா வேலையாகத் தான்டா போறேன். அந்த தீபனை எதுவும் செய்யல." என்று சிரித்தவன்,

"


கண்டதை எல்லாம் யோசிச்சு, ஏதாவது நோயை கூட்டிவந்து, எனக்கு வேலை வைச்சிடாதடி" என்று அவள் இதழில் ஆராய்ச்சி செய்த பின்பே வெளியேறினான்.



மயூரன் பாடுதான் பெரும் திண்டாட்டமானது.



அலுவலகம் வந்தவன் அலுவல்கள் தான் நடந்தபாடில்லை.
நேற்றைய பொழுது சலங்கை கட்டியாடியது தான் கண்முன் இப்போதும் வந்து போனது.



நேத்துத்தான் அப்படி என்றால், காலையிலும் அதே கோபம்.

'


என்ன ஒரு கோபம்....! இவளுக்கு வம்பிழுக்க மட்டும்தான் தெரியும்ன்னு பார்த்தா, நல்லா சண்டையும் போடுறாளே!
என்நிலமை அதோ தானா....?



ஏதாவது என்னையறியாம தப்பு பண்ணிட்டேன்னா சம்காரம் தானா...?



அண்ணனே அவகிட்ட வாய் திறக்க முடியாம நின்னாரே!
அப்போ என் நிலமை?
அண்டவா நீ இருக்கியா? இல்ல அவ வாயை பாத்திட்டு நீயும் பயந்து ஓடிட்டியா?"
என்று மேலே பார்த்து கைகளை உயர்த்தி கேட்டவன்,

'


இந்த பச்சை மண்ணோட மனசில காதலை விதைச்சியே! அப்பவே ஏதாவது கோவிலின் ஒரு மணியடிச்சு. உன் நிலமை இது தான் என்று புரியவைச்சிருக்க கூடாதா?



இப்போ நீதிமன்றத்தில கேள்வி கேட்கிறது போல பாயின்ட் பாயின்ட்டா எடுத்து தள்ளி கேள்வி கேட்கிறாளே!' என்று இத்தனை மணிநேரம் கடவுளுள் மேல் குற்றத்தை சாட்டி புலம்பியவன்,



நாளைக்கு நான் தப்பு பண்ணிடடு முழி பிதுங்கி நின்டா கண்டு புடிச்சுடுவாளோ?"
என்று சந்தேகமாக வினவியவன்,

'


நான் என்ன அண்ணன் மாதிரியா எல்லார் முன்னாடி தட்டிக்கேட்டு வம்பில மாட்டிக்க போறேன்?. ரூம்க்கு அழைச்சிட்டு போய் கொஞ்சி கொஞ்சி... வேணும்னா நானே தப்ப ஒத்துக்கிட்டு அடிவாங்கிப்பேன்.' என்றவன்,

'


எப்போ அதெல்லாம் நடக்க போகுதோ?' என்று ஏக்கமாக நினைத்தவன்,

'


அந்த மரமண்டைக்கு தான் எதுவுமே புரியிதில்லையே! திங்கிறதையும், வாயாடுறதையும், சொர்ணாக்கா மாதிரி புடவையை இடுப்பில சொருகி சண்டை போடுறதையும் தவிர எதுவும் தெரியாது.



ஒரு ஆண் எப்பிடி நேரடியா போய் நான் உன்னை லவ் பண்றேன், நீ என்னை லவ் பண்றியாணு கேக்க முடியும்?



பெண்ணு நீ தானே புரிஞ்சுக்கணும்...



சரியான லூசு.... மரமண்டை.
சரி லவ்வுதான் பண்ணலன்னாலும் பறவாயில்லை,



வீட்டில சொல்லி அவளை எனக்கு கட்டிவைய்யுங்கன்னு கேப்போம்னு பார்த்தா,



இந்தியா பாக்கிஸ்தான் சண்டை போல எப்பவும் சேரமுடியாத மாதிரி சண்டையை இழுத்து வைச்சிருக்கா.

இனி


அண்ணாவும் உதவுவானோ தெரியலையே!
இந்த வாயாடி உனக்கு வேண்டாம், வேற நல்லபொண்ணா கட்டிக்கடா என்பானே!
அப்புறம் மத்தவங்க எப்படி சம்மதிப்பாங்க?
ஐயோ இப்பிடி புலம்ப வைச்சிட்டாளே!



யாரை நான் சமாளிப்பேன்? சொர்ணாக்காவையா? இல்லனா எங்க வீட்டுக்காரங்களையா?



இவ வேற.அண்ணாவை பார்த்து நானும் அப்பிடித்தான்னு வேற நினைச்சிருப்பா,



சும்மா சொல்ல கூடாது அண்ணி மேலே ரொம்ப பாசந்தான், அதில கொஞ்சமாவது என்மேல வைச்சிருந்தாலும் நானும் சந்தோசபட்டிருப்பேன்.



ஐயோ ஆண்டவா! என்னை இப்பிடி புலம்ப விட்டிட்டியே! என்ன செய்யாறது இப்போ?



அத்தைகூட பேசிபார்ப்போமா?
வேண்டாம்..... இவளுக்கு காதலும் வாராது, கத்தரிக்காவும் வராது.
என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்னா?



முதல்ல அண்ணாவை சரிகட்டணும். அப்புறம் அண்ணி பானுவை சரிகட்டுவாங்க.
அவளும் ஓகே சொல்லிட்டான்னா, ரெண்டுபேரும் சேர்ந்து வீட்டுகாரங்க கிட்ட பேசி சம்மதிக்க வைச்சிடுவாங்க,

நாள் கடத்திட்டே போனோம்,


அக்கா பாசத்தால சண்ட மேல சண்டை போட்டு எங்க வீட்டுக்காரங்களுக்கு வில்லியாகிடுவா,
அப்புரம் காலம் பூரகவும் நீ தாடி வைச்சிட்டு தேவதாசா திரியவேண்டியது தான்.



இன்னைக்கே ஒரு முடிவெடுத்தாகணும்' என்று முடிவே செய்துவிட்டான்.



சங்கமிப்பாள்......
 
Top