• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

58. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
ஒரு புடவையை கொடுத்து,

"இதை கட்டிட்டு வா! அதுக்குள்ள காஃபி கலந்து வைக்கிறேன், அதை எடுத்துட்டு போய் அவங்களுக்கு குடு" என்க,.

"சும்மா இரும்மா!. புடவை காஃபின்னு பழைய பஞ்சாங்கம் பாடிட்டு,

அது தான் ஏற்கனவே என்னை தெரியுமே, பிறகு எதற்கு இந்த சம்பிரதாயம்?"

அவள் நடு மண்டயில் ஒரு கொட்டு வைத்தவர்.

"இனியாவது வாய்கு வாய் பேசாம, அடக்க ஒடுக்காமாக கல்யாணபொண்ணு போல நடந்துக்க, போற இடத்தில் வாயை காட்டி, சந்தி சிரிக்க வைச்சிடாத, சொன்னதை செய்!" என்றார்.

"யாரும்மா அந்த சந்தி? எதிர்த்த வீட்டு ஆன்ட்டியா?

அவங்கசிரிச்சா சிரிச்சிட்டு போகட்டுமேன், எங்களுக்கென்ன? " என்று வெகுலிபோல் கேட்டு, இன்னும் இரண்டு கொட்டுக்களை அதிகமாக வாங்கிக்கொண்டு தலையை தேய்தவள்,

" போம்மா....! போய் காஃபிய கலக்கு, நான் ரெடியாகிட்டு வரேன்." இன்னும் அவர் இங்கிருந்தால் அடித்தே மண்டைமேல் கொண்டை முளைக்க வைத்துவிடுவார் என்று நினைத்து தாயை வெளியே துரத்தியவள்,

தயாராகிவந்து புஷ்பா கலந்து கொடுத்த காஃபியுடன் வெளியே வந்தவளையே ஆர்வமாக பார்த்தான் மயூரன்.

மாப்பிள்ளை தான் தான் என்றதால் தனக்குத்தான் முதல் காஃபி என்று நினைத்திருந்தான்.

பானுவும் அவனை நோக்கித்தான் தட்டையும் கொண்டு சென்றவள், அவன் கையை நீட்டி கப்பை எடுக்க போகும் நேரம் அருகிலிருந்த சுந்தரிக்கு நீட்டியதும் ஏமாற்றமாக உணர்ந்தவன், மற்றவர்கள் பார்க்கும் முன் வெடுக்கென கையை உள்ளிழுத்துக்கொண்டான்.

'ராட்சசி! இப்பிடி அசிங்கப்படுத்திட்டாளே!

யாராவது பார்த்தாருப்பாங்களோ!' மற்றவர்களை திரும்பி பார்த்தான்.

யாரும் அவனை கவனித்தது போல் இல்லை.

'அப்பாடா....!' என்று அவன் பெரும் மூச்சொன்றை இழுத்து விடும் நேரம், அவன் அருகில் இருந்த முகில்,

"நான் பாராத்திட்டேன். "என்று அவனிடம் திரும்பாமலே வாயசைல் கூியவனை திரும்பி பார்த்தவன், புரியாது புருவம் சுருக்க,

இம்முறை அவன்புறம் திரும்பியவன்,

" நீ அசிங்கப் பட்டதை நான் பார்த்திட்டேன்...ஈ....." என சிரிக்க,

அவன் செயலில் மண்டையை சொரிந்தவன், தானும் அவனைப்போலவே சிரிக்க,

"வழியுது துடைச்சுக்கோ....!, எதுக்குடா இப்பிடி அலையுற? உனக்கும் உண்டு அமைதிய இரு வரும்"

"இது என்னண்ணா நியாயம்? நான் தானே மாப்பிள்ளை, எனக்குத்தானே முதல்ல தரணும்"

"இரு நான் இப்போ அவகிட்டையே நியாயம் கேக்கிறேன். அது எப்படி உனக்கு தராமல மத்தவர்களுக்கு கொடுக்கலாம்?" என்றவன்,

இந்தாம்மா.... என்ன நீ... என்று பானுபுறம் கைநீட்டியவாறு எழுந்த முகிலன் வாயை மீதியை சொல்லவிடாது பொத்தி, அவனிடத்தில் அவனை இருத்தியவன்.

"ஏண்ணா நீங்க வேற.... அவ வாயத்திறந்தா பராசக்தி படத்தில சிவாஜி கணேசன கூண்டில நின்னு நீதிகேட்டது போல மூச்சுவிடாம பேசுவா,

எப்போ காஃபா வந்தா என்ன? வந்த வேலைய முடிஞ்சா போதும்" என்றவன்,

"அது ஒன்னுமில்லை அண்ணனுக்கு பாத்ரூம் போகணுமாம், எந்த பக்கம் போகணும்ன்னு கேட்கிறாரு, அவ்வளவு தான்" என்றான்.

"அவ்வளவு தானா? வாங்க மாப்பிள்ளை நான் காட்டுகிறேன்" என்ற வேலுவிடம்,

"இல்லை மாமா..! நான் வீட்டிலேயே போயிட்டு வந்திட்டேன். மறந்துபோய் இவனை கேட்டுட்டேன். சமாளிப்பதாய் நினைத்து முகிலன் உலறிக்கொட்ட.

அவன் பேச்சை கேட்டதும் மயூரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வாயை பொத்திக்கொண்டவன்,

'செமயா மாட்டிட்டாரு, தொழிலதிபர் இப்படியா என்ன பேசுகிறோம்னு தெரியாம பேசுறது' என்று பொத்திய வாய்குள் சிரிக்க,

அவனை முறைத்தவன், அவன் பினனந்தலையில் ஒன்று விட்டு,

" என்னை உலற வைச்சிட்டு பல்லையா காட்டுற, நல்ல வேளை மாமா என்ன சொன்னேன்னு புரியல, புரிஞ்சிருந்தா அசிங்கமா போயிருக்கும்."

"சரி விடுங்கண்ணா" என்றவன் பார்வை பானுவிடம் திரும்பியது.

எல்லோருக்கு கொடுத்துவிட்டு அவனிடம் தட்டை நீட்ட, அவளை பார்த்தவாறே காஃபியை எடுத்தவன் கையில் காஃபி சுட்டுவிட,

"உஷ்..... "என்று கையை இழுத்தவனை என்ன? என்பதாய் பானு பார்த்தாள்,

எதுவும் இல்லை என்பதாய் தலையசைத்தவன், தன் உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல் செய்து கொண்டே காஃபியை எடுத்தான்.

அவனை முறைத்த பானு, தட்டை வேகமாக இழுத்து சற்று தள்ளி நின்றும் அவனையே முறைத்தாள்.

அதன் பிறகு தட்டுகள் மாற்றப்பட்டு, கல்யாணம் அடுத்த மாத இறுதியில் என்று நாளும் குறிக்கப்பட்டது.

நாட்கள் அதன் பாட்டில் நகரவ, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணமென்று ஆனது.

அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.

முகூர்த்த புடவை எடுப்பதற்கு பானுதான் வரவேண்டும்.

அவள் உடுத்துக்கொள்ளும் புடவை அவள் தேர்வாகத்தான் இருக்க வேண்டும்,

நாள் குறித்துவிட்டால் வெளியில் வரவே கூடாது என்று சொன்னவர்களா புடவையை உடுத்துக்கொள்ள போகிறார்கள்?

அது இது என்று வாதாடி, பானுவையும் புடவை எடுக்க வருவதற்கு அனுமதி வாங்கிவிட்டான்.

ஆனால் அவனுக்கு அன்று முக்கியமான ஒரு மீட்டிங்க் இருக்கவே, என்ன செய்வது என்ற யோசனை. 'முகிலனை நாளைய மீட்டிங்கை கவனித்து கொள்ள சொல்லி கேட்கலாம் தான்,

அவனும் மாட்டேன் என்று மறுக்க மாட்டான்.

ஆனால் நாளை அண்ணிக்கு மாதமாதம் செக்கப் நாள். என்ன செய்யலாம்?' என்று யோசனையில் இருந்தவன் முதுகை யாரோ தட்டுவது போலிருக்க, திரும்பி பார்த்தான் முகிலன் தான்.

" என்னடா கடும் யோசனை போல"

"ம்..." என்று பெரிதாக மூச்செடுத்து விட்டவன்,

"நாளை முகூர்த்த புடவை எடுக்கணுண்ணா!"

"அது தான் தெரியுமேடா? அதில என்ன யோசனை?"

"ரொம்ப நாள் ஆச்சுண்ணா பானுவை பார்த்து,

நாளைக்கு அவளும் ட்ரெஸ் எடுக்க வரா, நாளையக்கும் அவளை பார்க்க முடியாம போயாடும் போல"

"ஏன்டா! நீயும் தானே போற? "

"அப்பிடித்தான் இருந்திச்சு, ஆனா நாளைக்கு கட்டாயம் கலந்துக்க வேண்டிய ஒரு மீட்டிங்க் இருக்கு,

நாளை அண்ணிக்கி மந்த்லி செக்கப் வேற, நீங்களூம் அவங்ககூட போயிடுவிங்களே! நான் தான் அட்டென்ட் பண்ணணும்" என்க,

"அது பறவாயில்லடா!

நாளை ஒரு நாள் தானே மதியை கலைகூட அனுப்பிட்டு, மீட்டிங்க்க நான் கவனிச்சுக்கிறேன்,

நீ உன் ஆளை கவனிச்சுக்கே" என்றான் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாமல்.


மறு நாள் காலையிலேயே வீடு பரபரப்பானது.



பத்து மணியளவில் மீட்டிங்க் என்பதால், ஒன்பது மணியளவில் தயாரகிய கணவனிடம் அது சம்மந்தமான பைல்லை கொடுத்தவள் மனதிலே ஏனென்று அறியாத சஞ்சலம்.



'எங்கு அதை முகிலனிடம் கூறினால் பயந்து விடுவான்' என நினைத்தவள்,



"மீட்டிங்க் வேளைக்கே முடிஞ்சா நீங்களும் அங்க வந்திடுங்க,



இந்த மாதத்தோட உங்களுக்கு எந்த அலைச்சலுமில்லை, அடுத்த மாதமே உங்கள் பிள்ளை உங்கள் கையில் இருப்பான்" என்க.



"ஏன்டி இப்படி பேசிற? உனக்காக ஒவ்வொன்னா பார்த்துப் பார்த்து செய்யிறதில எனக்கு சந்தோஷம் தான்.



இதில என்ன அலைச்சல் வந்திச்சு? " என்றவாறு அவள் அருகில் வந்தவன்,



அவள் முன் மண்டியட்டு அமர்ந்து,



" பாப்பா.... அப்பா பேசுறது கேட்குதாடா?



அப்பாவால இன்னைக்கு அம்மாவுக்கு துணையாக வர முடியல,



எந்த கஷ்டமும் குடுக்காம அம்மா கூட போய் வாங்க." என்று அவள் வயிற்றில் இதழ் பதித்தான்.



அதற்காகவே காத்திருந்திருந்தது போல அவன் பிள்ளை,



அவன் முத்தம் வைத்த இடத்திலேயே இடித்தது,



"என்னடி உன் பிள்ளை பெரிய அடி தடி காரனா வருவான் போலயே!



இந்த இடி இடிக்கிறான்."



"நீங்க என்கூட துணைக்கு வரலன்னு கோபம்.. இல்லையாடா செல்லம்" என்று தன் பானை வயிற்றை தடவியவாறு கேட்கவும், மீண்டும் அது உதைத்தத.



" என்னமோ தெரியல,



இன்னைக்கு கோபமா இருக்கான்.



இப்பவே இப்பிடி இடிக்கிறான்னா, வெளியே வந்தா அப்பாவை போல கோபக்காரனாட்டம் இருக்கப் போறான் போலயே!



அடி விழும்.... எல்லா கோபத்தையும் அங்கேயே விட்டுட்டு வந்திடணும்"



"என் பிள்ளை என்னை மாதிரித்தான் இருப்பான்.



நீ கோபப்பட்டுக்காே செல்லம், யாரு என்ன பண்றாங்கன்னு பார்த்திடலாம்" என்றவன்,



"சரி கலை! என் வேலையை முடிச்சிட்டு, வரமுடிஞ்சா வரேன், போறப்போ போனை மறக்காம எடுத்திட்டு போ!



இன்னும் ஒருமாதம் தான் இருக்கிறதனால இந்த மாத செக்கப்பையும், மயூ கல்யாணத்தையும் முடிச்சிட்டு, கொழும்புக்கே கிளம்பிடுவோம்.



எதைப்பற்றியும் கவலை படாம போடா! நான் செக்கப் முடியிறதுக்குள்ள வந்திடுறேன்." என தைரியம் கூறியவன், அவளை அணைத்து முத்தம் வைத்து,



"நீயும் இனி ரெடியாகு நேரம் சரியாக இருக்கும் "என்றவன் பல முறை எச்சரித்து விட்டே விடை பெற்றான்.



நல்ல நேரத்திற்குள் புறப்படவேண்டுமென்று மற்றவர்கள் சென்றுவிட,



மதியும் புடவைகட்டி கிளம்புவதை பார்த்த மேகலா,



"என்ன மதி என்கூட வரதுக்கு ஏன் புடவை?" என்றாள்.



"இல்ல அண்ணி! இன்னைக்கி பிள்ளையார் கோவில் தேர் தெரியும்ல,



போற வழியில என்கிறதனால



ஒரு எட்டுப்போய் கும்பிட்டு வந்தா இரண்டு வேலை முடிந்தது,



அதான் கோவில் போகணும்னே புடவை கட்டினேன்.



அழகாக இருக்கேனா அண்ணி?" என்று தன்னை திருப்பி திருப்பி காட்டியவளிடம்,



"உனக்கென்ன? நீ எப்போதும் அழகு தான்.



சரி வா போகலாம், கோவில் போயிட்டு, செக்கப்புக்கு போக நேரம் சரியாக இருக்கும்" என்றவள் நடையை கட்டினாள்.



"அண்ணா அந்த கோவிலுக்கு கிட்டவா காரை பார்க் பண்ணுங்க,



நான் கும்பிட்டு ஓடி வந்திடுறேன்." என்றாள் டிரைவரிடம் மதி.



"தேர் தன்னோட இருப்பிடத்துக்கு வருது போல மதிம்மா,



இவங்க தேரை பார்க்க கூடாது, அது நல்லதுமில்லை, நான் கொஞ்சம் முன்னாடி தள்ளி காரை பார்க் பண்ணுகிறேன்". என்று முன்னால் இடம் பார்த்தவர்,



"அதோ அந்த மரத்தடியில கூட்டமில்ல, அங்கேயே காத்திருக்கோம், நீங்களும் அங்கேயே வந்திடுங்க"என்றவர், மதியை இறக்கிவிட்டு றோட்டோரமாகவே காரை நிறுத்தினார்.



"எதுக்குண்ணா நான் தேர் பார்க்க கூடாது " என்று விளக்கம் கேட்க.



"ஏன்னம்மா நீங்கள் படித்த பிள்ளை என்னிடம் போய் விளக்கம் கேட்கலாமா?.." என்றார்.



"உண்மைக்கும் எனக்கு தெரியாதே! உங்களுக்கு காரணம் தெரியுமா?"



"காரணம் இருக்கும்மா! காரணமில்லாம எந்த வழக்கமும் தமிழர் பண்பாட்டில இருந்ததில்லை,



சாதரணமா எங்க நாட்டின் வழக்கப்படி புதிதாக திருமணம் செய்த பெண் ஒரு வருஷத்துக்கு தேரை பார்கவே கூடாதாம், முக்கியமாக கற்பமா இருக்கிறவங்க.



அது ஏன்னா, கொடி ஏற்றத்திருவிழா என்கிறது, ஐந்தொழில்களையும் குறிக்கும்.



அதாவது படைத்தல், காத்தால், அழித்தல், அருளல், மறைத்தல் இந்த ஐந்தொழில்களை அடிப்படையாக வைச்சுத்தான் வருஷம் ஒருமுறை மகோற்ச்சவ பூஜை நடக்கும்,



கடைசி இரண்டு நாளும், அழித்தல், அருளல் தொழில்களை குறிக்கிது,



தேர் உற்சவம் அழித்தலையும், தீர்த்த உற்சவம் அருளலையும் குறிக்கின்றது.



தேர் உற்சவத்தப்பாே சாமி உக்கிரமாக தேரில் ஏறி அரக்கர்களை வதம் பண்ணுவாரு, அதாவது மனித மனங்களில் உள்ள கெட்ட அரக்க எண்ணங்களை அழிக்கிறதா நம்பிக்கை.



மனுஷனா பிறந்திட்டா அந்த எண்ணம் இல்லாம இருக்காதே!



அதனால தேரில ஏறி வர சாமி கண்ணில கற்பவதியான பெண்கள் பட்டா வயித்தில இருக்குற சிசு எப்படின்னு நமக்கு தெரியாது,



ஆனா சாமிக்கு தெரியுமே!



உயிரா உருவெடுத்திட்டா நிச்சயம் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும்,



எங்கே அதை கெட்டதுன்னு கருவிலே அழிச்சிடுவாரேன்னு பயந்து தான் முன்னோர்கள் அப்படி ஒரு சாஸ்திரத்தை கொண்டுவந்தாங்க, என அதற்கொரு நீண்ட விளக்கம் தர,



"அது சரியண்ணா... ஆனா புது மணப்பெண் தேர் பார்க்க கூடாதுன்னு சொன்னீங்களே!



"அதுக்கும் இதே விளக்கம் தான்ம்மா..



எல்லோருக்குமே வயித்தில குழந்தை உண்டான விஷயம் உடனே தெரியிறதில்லை, சிலருக்கு மூணு மாதம் கழிஞ்சதுக்கப்புறம் தான் தெரியும்,



சிலருக்கு நாட்கள் தள்ளிப்போனதற்காக காரணமே கூட தெரியாமல் கோவில் அது இதுன்னு திரிவாங்க,



அதனா பொதுவா திருமணமான புதிதில் ஒரு வருடத்திற்கு தேர் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.



"ஓ.. இதுக்கு இவ்ளோ பெரிய விளக்கமிருக்கா?" என்றவள்,



"எனக்கு இதில எல்லாம் நம்பிக்கையில்லை." என்றாள் தான் அவனை நம்பும் நாள் தொலைவில் இல்லை என்பதை அறியாமல்.



பேச்சின் சுவாரசியத்தில் வெளி காற்றை சுவாசிப்பதற்காக கண்ணாடியை திறந்து விட்டு பேசிக்கொண்டிருந்தாள் மேகலா.




சன நெரிசல் காரணமாக ஊந்து கொண்டே சென்ற காரிலிருந்த தீபனது கண்ணில் பட்டாள், காரிலிருந்து டிரைவருடன் கதைபேசிக்கொண்டிருந்த மேகலா.



அப்படியே அவளை ஒரு படம்பிடித்தவன், யாருக்கோ அழைத்து அந்த புகைப்படத்தையும் அவள் நிற்கும் இடத்தையும் கூறி,



"உடனே வா! அவசரமா நான் ஒரு வேலையா போயிட்டிருக்கேன், ஒரு அரைமணி நேரத்துள்ள அங்க நிற்பேன்,



அதுக்குள்ள வேலையை முடிங்க" என்றவன் பார்வையோ மேகலாவை ரௌத்திரமாக பார்த்தது.



தான் போட்ட திட்டத்தை இவர்கள் முகிலனிடம் கூறி, அவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் ஊரில் இல்லாது ஓடி ஒழிந்தவன்,



முகிலன் தன்னை தேடக்கூட இல்லை என்பதை, கடந்த இருவாரங்களுக்கு முன்னர் தான் உறுதியாக தெரிந்து கொண்டான்.



அப்படி எனறால் தன்னை பற்றி மதி எதுவும் கூறவில்லை போல என நினைத்தவானு மீண்டும் ஊர் திரும்பியவனுக்கு, முகிலனை பழி தீர்பதற்கான நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டேனே என்பது வேதனையானது.



அதற்கு காரணமாக இருந்தவரை விடப்போவதில்லை என்று வெறியோடு இருந்தவன்,



'இப்படியே இருந்தால் தன் திட்டத்தை யார் நாசமாக்கியது என்று தெரியவராது,



கட்டிப்போட்ட இடத்தில் ஆராய்ந்தால் ஏதாவது தடையம் கிடைக்கும்' என்று நினைத்தவன் நேராக வந்தது அங்குதான்.



ஒரு இடத்தில் நெருப்பு மூட்டப்பட்டு இன்னமும் சாம்பல் அங்கேயே குவிந்து கிடக்க, இரண்டு மது போத்தல்களுடன், மதி அணிந்திருந்த கண்ணாடி வளையலின் உடைந்த பாகங்களும் சிதறிக்கிடந்தது



அது மதியினுடையது என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.



அந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தவன்,



அடர்ந்த அரலிச்செடியின் அருகில் இன்னமும் சில கண்ணாடி வளையலின் துண்டுகள் காணப்பட, அது வேறு ஒரு நிறத்தில் இருப்பதை பார்த்தவன்.



"இது மதியோடது இல்லையே!



அப்பாே மதிய காப்பாத்தினது ஒரு பெண்ணா?



இந்த இடத்தில தான் மறைஞ்சிருந்து எல்லாத்தையும் கவனிச்சிட்டு, இந்த வேலை பண்ணியிருக்கா,



அது யாரா இருக்கும்?. " என இன்னமும் வேறு ஏதாவது தடையம் இருக்க கூடும் என்று தேடுதல் நடத்தினான்.



அந்த வளையல் உடைவுகள் பானுவுடையது தான்.



அவள் தீபன் கூறிய கதையில் ஆத்திரம் கொண்டு, அவனை அடிக்க வேகமாக எழுந்த போது மேகலா அவள் கையை பற்றியதும், கையில் இருந்த வளையல் உடைந்து விழுந்தததை இருவரும் கவனிக்கவில்லை.



ஒவ்வொரு இடமாக தேடியவன் காலில் எதுவோ ஒன்று சறுக்கென மிதுபட,



காலால் சருகுகளை விலக்கிப் பார்த்தான்.



அதே போன் தான்.



"யாரு போன் இது?



மதி போன் இது இல்லையே. ஒரு வேளை காப்பாத்தினவ போனாக இருக்குமோ?" என்ற அதை உயிர்பித்துப்பாத்தான்.



எங்கு ஆனாவது,



சார்ஜ்ஜே இல்லாது உயிரை விட்டிருந்தது.



அதை தன் சட்டை பாக்கெட்டினுள் போட்டவன் வேறு ஆதாரம் கிடைக்கிறதா? என்று தடவியவனுக்கு எதுவுமே அகபடவில்லை.



"சரி இது யாரோடதுன்னு முதல்ல கண்டு பிடிப்போம்" என்றவாறு வீடுவந்தவன் முதல் வேளையாக சார்ஜரை மாட்டி விட்டு காத்திருந்தான்.



சிறுது நேரத்துள் அதை உயிர்பிக்க தேவையான அளவு சார்ஜ் ஏறியிருக்க, அதை உயிர்த்தபித்தவன் அந்த போனுக்கு சாதாரண லாக்கே இருக்கவும் அதை விலக்கியவன்,



எதற்குள்ளும் நுழையாமல் நேரடியாக கேலரியினுள் தான் நுழைந்தான்.



நிச்சயம் அந்த பாேனில் இருக்கும் நம்பர்கள் தனக்கு தெரியப்போவதில்லை,



ஆனால் இப்போது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், நிமிடம் என்றென செல்லி எடுத்துக்கொள்வது தான் வாடிக்கையாகிவிட்டதே!



அதனால் நிச்சயம் அந்த போனுக்குரியவர்கள் படம் இருக்கும் என்று, கேலரியில் ஆராய்ந்தவனது முகம் ஒடு நொடி ஏமாற்றமடைந்தது.



ஏனென்றால் அது மதியை பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்தத்தடியர்களே!



இருண்ட காட்டிற்குள் நெருப்பு வெளிச்சத்தில் மதுபான பாட்டிலோடு பல்லை காட்டியவாறு தலையிரண்டையும் ஒட்டிப்பிடித்தபடி எடுத்த செல்பி அது.



"அட ச்சை! இந்த நாதாரிங்க போனா? இவனோடத தான் ஆர்வமா எடுத்திட்டு வந்தேனா?



என் நேரமெல்லாம் வீணா போச்சே!



போஸ்ட்ட பாரு, ஏதோ பெரிய லவ்வேட்ஸ் கணக்காய் முகத்தை ஒட்டி வைச்சு பல்லைக்காட்டிட்டு,



அவளை பத்திரமா பாருங்கடான்னு காவலுக்கு வைச்சா, குடிச்சிட்டு கூத்தடிச்சிருக்காங்க." என்று போனை தூக்கி எறிய போனவனுக்கு அந்தப்படத்தில் எதுவோ உறுத்துவதை போல் இருக்க,



மீண்டும் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்தான்.



அவர்கள் பின்புறம் ஒரு பெண்ணின் உருவம் முழுமையாகத் தெரியந்தும், முகம் அவ்வளவாக தெரியவில்லை.



அந்த உருவத்தை மட்டும் போன் திரையை தொட்டு பெரிதாக்கியவனுக்கு அது யார் என்பது இப்போது கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது.



"மேகலா.... உன்னால் தான் என்திட்டம் நாசமாச்சா? எப்போ பார்த்தாலும் நீ என் வழியில குறுக்கிட்டுட்டே இருக்க,



இதுக்கு உனக்கு நிச்சயம் தண்டனையுண்டு,



அந்த முகிலன் பாதுகாப்பில இருக்குற வரை உன்னை நான் எதுவும் செய்ய முடியாது, ஆனா எனக்கான நேரம் கண்டிப்பா வரும் அப்போ நீ உயிரோட இருக்க மாட்ட" என்று அந்த புகைப்படத்தை வெறி கொண்டு பார்த்தவாறு கூறியவன், போனை ஏறிந்தே நொருக்கினான்.



அன்று தொடக்கம் மேகலா எப்போது தனிமையில் அகப்படுவாள் என்று எதிர்பார்த்திருக்க,



அவசரமாக எங்கோ கிளம்பியவன் கண்களில் மேகலா காரில் டிரைவருடன் கதைபேசியவாறு இருப்பது தெரிந்தது.



ஏற்கனவே அவனுக்கு தெரிந்த அடியாற்களை இனி வரவழைத்தால் முகிலன் அவர்களை நோட்டமிட்டவாறு இருப்பான்,



அதனால் தானும் அகப்படுவேன் என்று தெரிந்து புதிதாக ஒருவனுக்கு அழைப்பெடுத்து மேகலாவின் புகைப்படத்தை அனுப்பியவன்,



"இவளை யாரும் அறியாமல் தூக்கினால் போதும்,



மீதியை அரைமணி நேரத்துள் வந்து கவனித்துக்கொள்கிறேன்." என்றவன். அவள் இருக்கும் இடத்தையும் கூறி அவ்விடத்தை விட்டகன்றான்.
 
Top