• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

59. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சாமியை கும்பிட்டு உடனே வந்துவிடுகிறேன். என்று போனவளை இருபது நிமிடங்கள் ஆகியும் காணவில்லை.



"அண்ணா இவ்வளவு நேரமாகியும் மதியை காணலையே.... ஏதாவது நடந்திருக்குமோ?" என்று பதட்டமானாள்.



அவளுக்கு என்கே மீண்டும் மதியை யாராவத கடத்தியிருப்பார்களோ என்ற பயம், அவள் செக்கப் நேரம் வேறு நெருங்குகிறது,



போன் செய்தால் அதிக கூட்டம் என்பதால் சரியாக டவர் கிடைக்கவில்லை.



"அண்ணா தப்பாக எடுக்காமல, ஒரு தடவை என்னன்னு பார்த்திட்டு வரீங்களா?" என்று டிரைவரிடம் அவள் கெஞ்ச.



அதே நேரம் காரின் அருகில் வந்த பெண்ணொருத்தி,



"நீங்க தானே மேகலா?." என்றாள்.



"ஆமா நான் தான்! நீங்க?" என்று அவரை அடையாளம் தெரியாமல்,



உடனே பதட்டமாக அந்த பெண்,



"நான் யாரு இருக்கட்டும், உங்ககூட வந்தவங்க பெயர் மதியா?" என்றாள்.



அவள் பதட்டம் கண்டு பயந்தவள்,



"ஆமா அவளுக்கு என்ன?"



"அவங்க கோவிலோட பின் வீதியில மயக்கம் பாேட்டு விழுந்துட்டாங்க, இப்ப தான் தண்ணீர் தெளித்து குடிக்க சோடவும் கொடுத்துட்டு, பக்கத்தில் இருந்த கடையில உக்கார வைச்சிட்டு வரேன்,



பாவம் அவங்களால நடக்க கூட முடியல, சரி உன்ககூட யாரு வந்தாங்கன்னு விசாரிக்கிறப்போ தான் உங்க பெயரை சொல்லி காரில இருக்கிறதா சொன்னாங்க.



அது தான் சீக்கிரமா உங்களை கூட்டிட்டு போலாம்ன்னு வந்தேன்"



"ஏம்மா அவ்வளவு தூரம் தேடி வந்தியே அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?" என்று டிரைவர் கேட்க,



"ஆமால்ல.... உண்மையில அந்தப்பொண்ணு மயங்கினதை பார்த்ததும், மூளை வேலைசெய்யல, பதட்டத்தில இதை யோசிக்காம வந்துட்டேன்" என்க.



"அவ அங்க எதுக்கு வரணும்? சாமிய கும்பிட்டு உடனேயே திரும்பிடுறதா சொன்னாளே" என்று சந்தேகமாய் வினவ.



"இந்தாம்மா! ஏதோ நான் பொய் பேசுறது போல ரெண்டுபேரும் ஆராஞ்சிட்டு இருக்கிங்க,



ஏதோ மனிதாபிமானம் பார்த்து உதவி செய்யலாம்னு வந்தா, கேள்விமேல கேள்வி கேக்குறீங்க". என்று கோபமாக பேசியவர்,



"உன்கூட வந்த பொண்ணுமேல அக்கறை இருந்தா வா!



அவ எங்க இருக்கான்னு காட்டுறேன். இல்லன்னா எனக்கென்ன வந்திச்சு,



கோவில் வந்தோமா, சாமியை கும்பிட்டோமா, வரத்தை வாங்கினோமான்னு போயிட்டே இருக்கணும்.



இல்லாட்டா இப்பிடித்தான் அசிங்க படணும்" என்று அவர்களிடமிருந்து விலகியவள் கையை பிடித்தவள்,



"சாரி அக்கா! மதி எங்க இருக்கான்னு காட்டுங்க வாங்க" என்று தானே அந்த நெருசலிலும் தன் வயிற்றை கூட கருதாது போனவளை பார்த்துக்கொண்டிருந்தார் கார் டிரைவர்.



அவருக்கு எதுவோ ஒன்று சரியில்லை என்றே தோன்றியது.



அந்த நேரம் அவரது போனும் இடைவிடாது அடிக்க,



அதை எடுத்துப்பாத்தவர் முகிலன் நம்பர் எனத்தெரிந்து கொண்டு பச்சை பொத்தனை அமத்தியவர் காதில் வைத்ததும் தான்.



"ஹாலே.... அண்ணா நீங்க எங்க இருக்கிங்க?" என்ற முகிலனது குரல் அவசரத்தில் கேட்பதை உணர்ந்தவர்,



"நாங்க கோவிலில் இருக்கோம் தம்பி!"



"அண்ணா மேகலாவும் மதியும் எங்க?" என்றான் பதட்டமாக.



"மதிம்மா கோவிலோட பின்புறத்தில மயக்கம் போட்டு விழுந்திட்டங்களாம், அதனால் மேகலாம்மாவை ஒரு பொண்ணு வந்து இப்போ கொஞ்சம் முன்னாடி தான் கூட்டிட்டு போறா" என்றவர் நிமிரும் போது மதி அவர்கள் காரை நாடிவருவதை கண்டவர்,



"தம்பி.... எனக்கு எதுவோ சரியில்லாததைப்போல தோணுது.



மதிம்மா மயங்கிட்டதா, மேகலாம்மாவ யாரோ கூட்டிட்டு போனாங்க, ஆனா மதிம்மா கோவில்ல இருந்து இப்போ வந்திட்டிருக்காங்க... எனக்கு பயமா இருக்கு.



நான் எதுக்கும் ஒரு தடவை பின்னாடி போய் பார்க்கிறேன்." என்று முகிலனை பேசவிடாது போனை வைத்தவர்,



மதியிடம்,



"நீங்க காருக்குள்ளேயே இருங்க, யார்வந்து, என்ன சொன்னாலும் அவங்ககூட போகாதீங்க." என்று அரைகுறையாக சொன்னவர் மேகலா சென்ற திசைப்பக்கம் வேகமாக ஓடினார்.



இங்கே மேகலாவை அழைத்து வந்த பெண், ஒரு கடையின் முன் சென்று,



எங்கே மயக்கம் போட்ட பெண் என்று கேட்க,



"அவங்களுக்கு இப்போ தான் மூச்சு திணறி, அதோ அந்த காரில ஏத்திட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகப்போறோம்ன்னு சொன்னாங்க,



உடனே போனா பார்க்கலாம்" என்று அந்த கடையில் இருந்தவர் கூறவும்,



"ஐயோ மதி என்னடி ஆச்சு அதுக்குள்ள? வரப்போ நல்லாத்தானே இருந்த?" என்று புலம்பியவாறு காரை நோக்கி தன்னால் இயன்றளவு கூட்டத்தை பிளந்தவாறு ஓடிச்சென்று காரிற்குள் பார்க்க.



அங்கு மதியை காணவில்லை.



இரண்டு தடியர்கள் ஒரே நிற உடையில் இருக்கவும், தன் பின்னால் வந்த பெண்ணை பார்த்தாள், அவளையும் காணவில்லை.



அவள் கூட்டத்தோட கூட்டமாக காணமல் போயிருந்தாள்.



அப்போது தான் மேகலாவிற்கு ஏதோ தவறென்று மூளை உரைக்க, அவள் சுதாரிக்கும் முன்னார்.



அவள் கையை பற்றி உள்ளே இழுத்து அமர்த்திய மறு நொடி கார் பறந்தது.



தூரத்தில் வரும்போதே மேகலாவை கண்டுவிட்டார் டிரைவர். ஆனால் அதற்குள் காருக்குள் அவளை இழுத்து கார் பறக்க, காரின் நம்பரை குறிப்போம் என்று பார்த்தால் அந்த இடம் வெற்றாக இருந்தது.



உடனே முகிலனுக்கு அழைததவன் நடந்ததை கூற,



"பயப்படாதிங்க நான் பார்த்துக்கிறேன். மதியை மட்டும் ஜாக்கிருதையா வீட்டுக்கு அழைச்சந்திடுங்க" என்றவன், போனை வைத்து விட்டு இன்னொரு இலக்கத்திற்கு அழைத்து விபரம் கேட்டான்.



ஆம் மதி கடத்தப்பட்ட நாளிலிருந்து அவளை கடத்திய மூவரையும் கண்காணிப்பதற்காக சிலரை நியமித்திருந்தான்.



முக்கியமாக தீபனை கண்காணிப்பதற்கு சிலரை ஏற்பாடு செய்திருந்தான். அவள் வெளியூர் சென்றதிலிருந்து அரலிக்காட்டில் ஆராச்சி படலம் மேற்கொண்டது வரை, உடனுக்குடன் தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.



இன்றும் அதே போல் அவனை கண்காணிக்கும் போது தான் காரினுள் இருந்த பெண்ணை அவன் படம் பிடிப்பதை பார்தவர்கள், தாமும் அந்த பெண்ணை படம்பிடித்து முகிலனுக்கு அனுப்பி வைத்தனர்.



"தீபன் இப்போது இந்த பொண்ணை படம் எடுத்து யாருக்கோ அனுப்பியிருக்கான்" என்க,



"அது என் ஒய்ஃப் தான், இன்னைக்கு தீபன கவனிக்கிறத விட்டுட்டு, அவளை மட்டும் கவனியுங்க, அவ எங்க போனாலும் பின்னாலே போய் உடனுக்குடன் தகவல் தாங்க, நான் இப்பவே கிளம்பிடுறேன்." என்றவன்,



மீட்டிங்கை இடையில் நிறுத்திவிட்டு மேகலாவை தேடி புறப்பட்டும் போது தான் டிரைவர் அழைத்தார்.



மேகலா இப்போது எங்கிருக்கிறாள் என கேட்பதற்கு தான் ஏற்பாடு செய்தவர்களில் ஒருவருக்கு அழைத்தவன்,



"சொல்லுங்க சார். நாங்க உங்க மனைவியைத்தான் பின் தொடர்ந்து பருத்துறை றோட்டால போயிடாடிருக்கோம், இவங்க போறத பார்த்தா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத்தான் கூட்டிட்டு போவாங்க போல,



நீங்களும் வந்திட்டிருக்கிறீங்களா...? " என்க.



"ஆமா.... ஆனா என்னவா இருந்தாலும் உடனுக்குடன் தகவல் தாங்க" என்றவன் வேகமாக பருத்துறை சாலையில் தன் காரை சீறவிட்டான்.



அவர்கள் கணித்ததைப்போலவே மக்கள் நடமாட்டமே அற்ற கடற்கரையை அண்டியவாறு காரை நிறுத்தியவர்கள்,



கடலில் இருந்து இருநூறு மீற்றருக்கு மேகலாவை வயிற்றுப் பிள்ளைக்காரி என்று இரக்கமே இல்லாது, தற தறவென இழுத்துக்கொண்டு, அங்கிருந்த நீளமான கட்டடம் ஒன்றுக்குள் இழுத்துச்சென்றனர்.



கடத்தல் காறர்களுக்கு அரைமணி நேரத்துக்குள் வந்துவிடுவதாக கூறியவன், எங்கு அன்று போல் அடியாற்களை நம்பி மதியை தவறவிட்டதை போல், இவளையும் தவறவிடக்கூடாது என்று நினைத்தவன்,



தன் வேலையினை விட்டுவிட்டு அவர்களுக்கு முன்னரே அங்கு வந்து நடு நாயகமாக இருந்த மேசை மேல் ஏறி அமர்ந்தவன், கையிலிருந் கட்டையை அக்குளுக்குள் முண்டு கொடுத்தது ,மேகலாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான்.



உள்றே வந்ததும் அவனை கண்டள், 'இவன் தான் இதற்கெல்லாம் காரணமா?' என ஒரு நொடி அதிர்ந்தவளுக்கு நாற்றம் குடலை புடுங்க,



'என்ன இடம் இது?' என்றவாறு சுற்றிப் பார்த்தாள்.



மண்டபம் போல் நீண்ட கட்டிடம் அது.



ஆனால் அங்கு மறைவதற்கோ, தப்பிப்பதற்காே வந்த பாதையை தவிர, வேறு வழியிருப்பதைப்போல் தெரியவில்லை.



சுற்ற வர ஓரளவு நீளம் கூடிய அகலமான பெஞ்சுகள் அடுக்கப்பட்டு, அது முழுவதும் பெரிய வகையிலான பலவகை மீன்கள் பரப்பப்பட்டு இருக்கும் தோற்றமே சொன்னது, அது ஒரு மீன்கள் பதப்படுத்தும் நிறுவனம் என்று.



'இது இவன் கம்பனியா இருக்குமோ?' என நினைத்தாள்.



சற்று முன்னர் வரை அங்கு பலர் வேலை பார்த்திருப்பார்கள் போல,



மேகலாவை இங்கு கொண்டுவருவதை யாரும் அறியக்கூடாது என்பதற்காக, அங்க வேலை பார்த்தவர்களை அவசரமாக அனுப்பியிருப்பான் போல.



புதிதாக பிடித்து வந்திருந்த மீன்களை துண்டுகளாக்கிய அரையும் குறையுமாக கிடக்கும் காட்சியே அதற்கு சாட்சி கூறியது.



"வாங்க...வாங்க.. மிஸஸ் மணிமேகலை. சுகமா இருக்கிங்களா?



உங்கள தான் எதிர்பார்த்து காத்திட்டிருக்கேன்." என்று தன் உதட்டை பிதுக்கியவன்,



" என்ன....? இந்த இடத்தை பார்த்தா பயமா இருக்கா? பரவாயில்ல ,பரவாயில்ல பயப்பட்டுக்கோ!



பயப்பட்டுத்தானே ஆகணும்,



தனிமையில சிக்கினா எப்படி இருக்கும் என்கிறதை உன்னை பார்த்தே தெரிஞ்சுக்கிறேன்." என்று பெரிதாக சிரித்தவனை பார்க்க பயமாக இருந்தாலும் அதை முகத்தில் பிரதிபலிக்காதவள்,



"எதுக்குடா என்னை தூக்கிட்டு வர சொன்ன?" என்றாள் கோபமாக,



"எதுக்கு இப்போ கோபப்படுற?



சரி நல்லா தான் கேள்வி கேட்கிற, ஆனா அந்த கேள்விக்கு நான் பதில்சொன்னா பயந்திடுவியே!



சும்மா சொல்லக்கூடாது, ரொம்ப தைரியசாலிதான். தனிய வந்து சிக்கியும் துணிஞ்சு கேள்வி கேட்கிற,



இருக்காத பின்னே!



முகிலன் பொண்டாட்டின்னா சும்மாவா?



உங்க ரெண்டுபேரையும் பார்த்தா, நடுக்கம் கூட நடுங்கிப்போகுமாமே!



அப்புடியா?" என்று தனியாக நிற்கும் பெண்ணிடம் வேண்டுமென்று கேலி பேசி வம்பித்தவன்,



"பெரிய ஜான்சி ராணி போல இரவுன்னு கூட இல்லாம யார் யாருக்கோ உதவி செய்யப்போய், பாவம் உன் முடிவை நீயே தேடிக்கிட்டியே பேபி!



உனக்கு இது தேவையா?



எதுக்கு அந்த மதியை காப்பாத்தின?



பாரு ஒரு உயிரை குறி வைச்சேன், இப்போ ரெண்டு உயிர் சிக்கிடிச்சு.



ஆமா எனக்கெதுக்கு ரெண்டு உயிர்? ஒரு உயிர் போதுமே,



ஆனா உன்னை கொன்னா அதுவும் சொத்துடும்ல,



உன்னை உயிரோட விட்டா எப்பிடியும் இன்னொன்னுக்கு ஏற்பாடு பண்ணுவீங்க.



அது கூடாது. எனக்கு தேவை அந்த முகிலனோட சந்ததியே இருக்க கூடாது. அதுக்கு நீ சாகணும்." என்று தலை சரித்து பயமுறுத்துபவனை போல் கூறுபவனையே பார்த்தவள்,



"வர வர யார் யாரு வீர வசனம் பேசணும்னு இல்லாம போச்சு.



எதிரியை துணிஞ்சு எதிர்க்க தெரியாம, கோழை போல மறைஞ்சிருக்கிற உனக்கெல்லாம் எதுக்குடா இந்த வசனம்?



என்கிட்ட காட்டுற உன் வீரத்தை என் புருஷன்கிட்ட காட்ட வேண்டியது தானே!



பொண்ணுங்கள கடத்தி உன் பழிய தீர்த்துக்கிற உன்னைப்போல தரக்குறைவானவன் எல்லாம் என் புருஷனுக்கு எதிரின்னு சொல்லுறதுக்கே வெட்கமாக இருக்கு."



"நீ இப்போ என்னைப்பார்த்து பெரிசா சிரிச்சியே அது எப்படி தெரிஞ்சிச்சு தெரியுமா?



பொண்ணுங்கள கடத்தி பழிய தீர்க்குற பொட்டப்பய மாதிரி இருந்திச்சு, இதுக்குமேல உன்னை வர்ணிக்க என்னால முடியாது. அந்தளவுக்கு கேவலமானவன், என்றவள் தன்னை பிடித்திருந்தவர்கள் கையை உதறியவள்,



"ஏற்கனவே மீசையில மண் ஒட்ட விழுந்தவனை ஏறி மிதிச்சிட்டு போறது எங்க வழக்கமில்லை." என்றவள்,



உன்னால என்னை என்ன செய்திட முடியும் என்ற தோறனையில் நின்று கொண்டாள்.



"என்னடி? விட்டா பேசிட்டே போகிற?



ஓ........ மறந்துட்டேன் பார்த்தியா?



நீ ஏற்கனவே ரெண்டு பயில்வான்கள் மண்டையை உடைச்சு, நாத்தனரை கூட்டிட்டு போவ தானே!



அதே வீரத்த என்கிட்டையும் காட்டலாம்னு நினைச்சு தான் இந்த ஆனவ பேச்சோ!



போதையில இருக்கிறவனை அடிச்சது வீரமில்லம்மா!



நீ அடிச்சிட்டு போக, நானும் போதையில இல்லை,



உன்னோட சதி என்கிட்ட செல்லாது" என்றவன்,



"எனக்கும் இப்பவரை கவலையாத்தான் இருந்திச்சு,



அப்பாவிப்பொண்ணை கொல்லப்போறேன்னு,



பட் உன் பேச்சு ஒன்னு போதும், நீன்னா முகிலனுக்கு உயிராமே!



எனக்கும் அந்த உயிர் தான் வேணும்.



உன்னோட கொடூரமான சாவினால, என்னை அவன் சாகுற வரை மறக்க கூடாது" என்றவன்.



கையிலிருந்த கட்டையை உறுட்டியவாறே,



"முதல்ல யாரு உயிரை எடுப்போம்? வயித்தில இருக்கிறதோட உயிரை எடுப்போமா?



இல்லை அப்புறம் இந்த படங்கள்ல வர மாதிரி, நீ செத்தாலும் உன் குழந்தை உயிராட இருந்து அதை காப்பாத்திட்டா,



இல்லை... அவனுக்கு வாரிசே இருக்க கூடாதுன்னு இவ்ளோ கஷ்டப்படுற என்னோட நிலமை என்னாகிறது?



நான் அவன்கிட்ட தோற்க மாட்டேன்,



எத்தனை தடவை தான் அவன்கிட்ட தோத்துட்டே போறது.?" என்றவன் கையிலிருந்த கட்டையை மேகலாவின் வயிற்றை நோக்கி எறிய,



அவன் எண்ணம் உணர்ந்தவளோ!



அதன் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக வந்த பாதையினை நோக்கி ஓடுவதற்காக திரும்பியவள் காலை அவனது அடியாளின் ஒருவனது காலா தட்டிவிட, தடுமாறிப்போய் சற்று தள்ளியிருந்த மேசையோடு மேல் வயிறு மோதுண்டு வலியில்,



"அம்மா...." என்று அலறியவாறு தரையில் விழுப்போனவளை ஒரு கை தாங்கிப்பிடித்து.



"மேகலா.... மேகலா..." என்று பெரிதாக கத்தியவாறு கன்னம் தட்டியவன் குரலில் கேட்டு, வயிறு மோதுண்டதில் மூச்சுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவள்,



"முகில்...." என்று வலியில் முணங்கிட,



"பயப்படாதடா... நான் வந்துட்டேன். சாதாரணமா மூச்சு எடுத்து விடும்மா, உனக்கு எதுவுமில்லை... " என்று அவன் அவளை எழுப்புவதிலே குறியாக இருந்தது.



திடீர் என முகிலன் அங்கு வருவான் என்று எதிர்பார்க்காதவர்கள், அவனது கவனம் முழுவது மேகலாவிடம் இருக்கவே, இது தான் முகிலனை பழிதீர்க்க சரியான நேரம் என நினைத்து, அருகில் இருந்த மீன் வாளினை எடுத்து அவனை நோக்கி ஓங்கிய சமயம் வேகமாக உள்ளே வந்த இருவர் அதை சட்டென தட்டி விட்டு,



நாலு காட்டும் காட்டினர்,



புதுதாக அங்கு நுழைந்தவர்களை எதிர்பாக்காதவன் அவர்களின் தீடீர் தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.



"சார் மேடத்திற்கு அடி பட்டுடிச்சு போல, சீக்கிரம் ஹாஸ்பிடல சேர்கணும், நீங்க கிளம்புங்க, நாங்க இவனை கவனிச்சுக்கிறோம்." என்றனர்,



பதில் பேசாது மேகலாவை தூக்கி வந்தவன் ஒருவனின் கையில் கொடுத்தவன்,



"எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் இவளை ஹாஸ்பிடல சேர்த்துட்டு எந்த ஹாஸ்பிடல் என்டு கால் பண்ணி சொல்லுங்க. அதுக்குள்ள இவங்களை சரிக்கட்டிட்டு வரேன்.



என் பொண்டாட்டியோ இந்த நிலமைக்கு காரணமானவன் உயிரோட இருக்கவே கூடாது. சீக்கிரம் கிளம்புங்க." என்று அவர்களை அனுப்பினான்.



கண்கள் சிவந்து நரம்புகள் புடைமட ரௌத்திரமாக திபன் புறம் திரும்பியவன்,



"இன்னைக்கு நீ உயிரோட இருக்கிறதுக்கு காரணமே அவ தான்,



அன்னைக்கே அவ மட்டும் என்கிட்ட சத்தியம் வாங்கலன்னா இன்னைக்கு அவ இவ்ளோ கஷ்டம் பட்டிருக்க தேவையில்ல,



அப்பிடி பட்டவமேலயே எப்போ நீ கை வைச்சிட்டியோ அதுக்கப்புறமும் நீ உயிரோட இருக்க கூடாதுடா" என்றவன்,



இரண்டு தடியர்களில் ஒருவனை தன் கைவளைவிற்குள் சிறைபிடித்தவன், அருகில் இருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து, மற்றவனிடம்,



" நீ இப்போ திபனை கொல்ற!



அப்பிடி அவனை கொல்லரன்னா இவனை நான் கொன்னுடுவேன்.



இவனை மட்டுமில்லை உன்னையும் தான், நீயா அவனை கொல்லலன்னாலும் , என்னோட எதிரியான அவனையும் கொல்லுவேன்,



எதுக்கு மூணு உயிர் போவான்னு தான் யோசிக்கிறேன்.



நான் எப்பிடின்னு தெரிஞ்சிருக்கும்ன்னு நிகை்கிறேன், தெரியலன்னாலும் இவனே சொல்லிருப்பான்,



உங்க உயிர் உங்களுக்கு வேணும்னா அவனை கொல்லு!



இல்ல அவனுக்கு நான் விசுவாசமா இருப்பேன்னு சொன்னா எனக்கு ஓகே தான், மூணு கொலை பண்ணாலும் சட்டத்தோட ஓட்டைகளில இருந்து எப்பிடி வெளிய வரதுன்னு எனக்கு தெரியும்" என்றான் கய்ஜனையாய்.



"என்னடா...! பூச்சாண்டி காட்டுகிறாயா? அவங்க என் ஆளுங்க, எனக்கு எதிராக எதையும் செய்ய மாட்டாங்க" என்றவனை பரிதாபமாக பார்த்தான்.



"உன்னோட காசு அவங்களுக்கு உயிரை தராது தீபன்.



உங்க மூணு பேரு உயிரும் இப்போ என்னோட கையில, வேணும்னா ஒரு ரயர் பார்த்திடுவோமா!." என்றவன்,



தன் பிடியில் இருந்தவன் மணிக்கட்டில் ஆழமாய் ஓர் கீறல் கீற,



நரம்பு அறுந்து இரத்தம் சீறியது.



அதை கண்டதும் மற்றையவனுக்கு வெலவெலத்துப்போக.



"நீ எவ்வளவு தாமதிக்கிறியோ இவன் வாழ்ற காலம் குறைஞ்சிட்டே வருது.



அதுக்காக இவனை நான் இனி ஒன்னுமே செய்யப்போறதில்லை, இன்னும் கொஞ்ச நேரத்தில ரத்தம் முழுதும் ளெியேறி இவனே செத்துடுவான்.



இப்போ கதை என்னன்னா, நான் இவனை கொல்லல, நேரத்தை மினக்கடுத்தி நீ தான் இவனை கொன்டுட்டிருக்க,



இப்போ நீ தீபனை கொன்னேன்னா, தாரளமா இவனை அழைச்சிட்டு போய் ஹாஸ்பிடல சேர்த்து ட்ரீட்மென்ட் செய்துக்கலாம்." என்றான்.



ஒருமுறை தீபனை திரும்பி பார்த்தான்.



அவன் பார்த்த பார்வையில், முகிலன் கூறியதை கேட்டு, மற்றையவன் தன்னை கொல்லப்போகிறானே என்று பயந்தவன், வேகமாக முகிலனை தாண்டி ஓடி எத்தணிக்க,



முகிலனிடம் அகப்பட்டிருந்தவனோ 'தன் உயிர் போவதைக்காட்டிலும் அவனை கொல்வோம்.' என்று நினைத்து, முகிலன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி தீபன் கழுத்தை நோக்கி எறிந்தான்.



வேகமாக ஓடிய தீபன் கழுத்தை எறிந்தவன் குறி தப்பாமல் தாக்க, அதே இடத்தில் நின்று முகிலனை திரும்பிப் பார்த்தவாறே கீழே விழுந்தான்.



தன் கையிலிருந்தவனை விடுவித்தவன்,



"நல்லா தான் பயிற்சி எடுத்திருக்க." என்று மெச்சியவாறு அவர்களை அடிக்க கையினை ஓங்கியவன் சட்டை பையிலிருந்த போன் அழைக்க,



அதை எடுத்து காதில் பொருத்தியவன்,



"இப்பவே வரேன்." என்றவன்,



அவர்களை அப்படியே விட்டவன்,



"இன்னைக்கு உங்களுக்கு ஏதோ நல்ல நேரம் போல, இனி என் கண்ணில பட்டிங்க.... அவ்வளவு தான்." என்றவாறு காரை நோக்கி வேகமாக ஓடியவன் காரில் ஏறி புயல் வேகத்தில் அருகில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனையை அடைந்தான்.



அங்கு மேகலாவை ICU வில் சேர்க்கப்பட்டிருந்தாள்,



முகிலனை கண்டதும் அவனை நேராக வைத்தியர் அறைக்கு அழைத்து சென்ற அந்த இருவரும்,



"சார் இவர் மனைவி தான் அவங்க." என்றனர்.



"நல்லது.. உங்க நேம்"



"முகிலன் டாக்டர்!



ஏதோ என்கிட்ட அவசரமாக பேசணும்னு சொன்னீங்களாம்" என்றான் மேகலாவிற்கு ஏதோ என்ற பயத்தில்,



"ஆமா மிஸ்டர் முகிலன்.



உங்க ஒய்ஃப்



அடுத்தமாதம் தான் டெலிவரி டேட் என்கிறாங்க, ஆனா இப்போ வயித்தில பலத்த அடி பட்டிருக்கிறதனால அவங்களால அந்த பெயின தாங்க முடியல,



மூச்சு விடுறதுக்கே ரொம்ப சிரமப்படுறாங்க, உடனடியாக சர்ஜரி செய்து, குழந்தைய வெளிய எடுத்து ஆகணும். இல்லனா இரண்டு உயிர்களுக்கும் ஆபத்து.



இதை உங்க மனைவிகிட்ட சொல்லி குழந்தையைவெளியே எடுத்திடலாம் என்டதுக்கு,



இல்ல.. நீங்க வரணும், உங்ககூட பேசணும்னு அடம்பிடிக்கிறாங்க, அதுவும் நல்லது தான் , அப்புறம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திட்டா உங்க கையெழுத்து முக்கியம்ல" என்றவர்,



"அவங்க ரிப்போர்ட்ட எடுத்திட்டு வந்தீங்களா? " என்றார்.



"இல்ல டாக்டர் அவங்க மந்த்லி செக்கப்புக்கு போறப்போ தான் இப்படியாகிடிச்சு,



இப்போ ரிப்போர்ட் கைல இல்ல, போன்ல படம் பிடிச்சு வைச்சிருக்கேன்." என்றவன்,



அதை எடுத்து காட்டினான்.



அதை பார்த்ததும் அதிர்ந்தார் மருத்துவர்.
 
Top