• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

6 மனைவியின்...காதலன்!

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65


6… காதலன்

பேசிக்கொண்டே கோட்டம் சுத்தி பார்த்தார்கள். முகப்பில் தங்க நிற சிலை மின்னியது… அதியமான் மரியாதையாக தட்டில் நெல்லிக்கனி வைத்து கொடுப்பது போல ஆளுயர சிலை இருந்தது.

அனு அந்த சிலையை சுத்தி சுத்தி பார்த்தவள்.

“ராதா எனக்கு ஒரு டவுட்டு”

“ஆஆ… சாகடிக்கரா டவுட் கேட்டு கேட்டு நீயும் இந்த ஊரில் தானே பிறந்த”

“அதான் ஸ்கூல் முடிஞ்சதும்… வெளியே போயிட்டேன். உனக்காவது மாமா சொன்னாங்க, எனக்கு எங்க இந்த ஹிட்லர் அப்பா சொல்லுச்சி. ஓரே அராஜகம் தான், சரி என் சோக கதையை விடு எதுக்கு தட்டை வச்சி கொடுத்தார்”

“நெல்லிக்கனியை கையில் இருந்து கொடுக்கும் போது.. யாசகம் கொடுப்பது போல ஆகிடும் அது ஔவைக்கு கொடுக்கும் மரியாதையில்லையே அதான் பிளேட்டில் வைத்து மரியாதையா கொடுத்தாங்க”

“பாரேன் எவ்வளவு ரெஸ்பெக்ட் கொடுத்து இருக்கார் அதியமான் கிரேட் தான்”

“ஆமா குறு நில மன்னனா இருந்தாலும் மரியாதை தெரிந்த மனுசன். என்ன கோட்டையை கல்லுவச்சி கட்டி இருந்தா நம் ஊரில் இன்னும் சுற்றிப்பார்க்க ஒரு பாரம்பரிய இடம் கிடைச்சி இருக்கும். அந்த மனுசர் மன்னில் கட்டி எல்லாம் சுதப்பிட்டார் அது இல்லை நா என்ன.. சில கோவில் இருக்கு அவரது பேரை சொல்லும் வகையில்”

“அப்படியா அந்த இடத்தை எல்லாம் பார்த்தே ஆகனும்” நால்வரும் சுவாரசியமாக பேசிக்கொண்டே வர.

கண்களில் எங்கும் போட்டி தேர்வுக்கு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் நிறைந்து இருந்தார்கள். திருவிழா என்றால் சொல்லவா வேண்டும் சத்தம் காதை கிழித்தது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிக்கும் வெவ்வேறு வயதில் இருக்கும் மாணவர்களை பார்த்து வியந்தார்கள்.

அங்கு சுற்றி முடித்ததும் கடைகள் போட்டிருக்கும் ஓவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டும் பிடித்த பொருட்களையும் அள்ளினார்கள் இரண்டு பெண்களும்.

“அடிப்பாவிகளே.. டெல்லியில் வாங்கியதை இன்னும் ஒன்னு கூட உபயோகிக்கலை. அதுக்குள்ள அடுத்த ரவுண்டா? நான் சம்பாரிச்சது எல்லாம் இங்கவே காலி ஆகிடும் போல”

“மாமா நைநை’ன்னு பேசாத… வளையல் செலக்ட் செஞ்சி கொடு”

“எனக்கு செலக்ட் செய்ய தெரியாது” கிருஷ்ணா அங்கிருந்து நகர பார்க்க.

“என் மாமா இருந்து இருந்தா ஒரு வளையல் கடையே வாங்கி கொடுத்து இருப்பார். அவர் ஒரு கொடைவள்ளல்…”

“போதும் இதோட நிறுத்திக்கலாம் வந்து தொலை”

வளையல் பாட்டி அருகில் உட்கார்ந்த கிருஷ்ணா.

“பாட்டி இந்த வளையல் உடைஞ்சா கையில் ரத்தம் கித்தம் வராதில்ல”

அனு சாதாரணமாக தான் நின்றிருந்தாள்.

மாதவனோ.. ’ப்பா… இது அல்லவா குடும்பம், எவ்வளவு ஒரு பாசம் மனைவி மீது’ என்று நினைத்து முடிக்கலை,

“வர வாய்ப்பு இருக்கு அப்பூ. புதுசில கொஞ்சம் சூதானமா இருக்கனும், போக போக சரியா போயிடும்”

“அப்போ இத அள்ளி இந்த பிசாசு கையில் போட்டு விடுங்க என் ரத்தத்தை குடிச்சிட்டிருக்கா. அவளோட ரத்தத்தை இந்த வளையல் குடிக்கட்டும்”

அவன் பேசுவதை கேட்ட ராதா… புகை வண்டி போல புஸ் புஸ் என்று காற்றை விட்டாள்.

அருகில் நின்றிருந்த ராதா நங்கென்று கொட்டு வைத்தாள்.

சற்று முன் மெச்சிய மாதவன்… கிருஷ்ணா பதில் கேட்டு கோபம் தான் வந்தது, ‘பொண்டாட்டிக்கிட்ட எப்படி பேசனும் எப்படி நடந்துக்கனும்’ன்னு, ராதை எதுக்கு இவனை செலக்ட் செஞ்சா?’

“என்ன மாதவா.. மனதில் என்ன ஓடிட்டு இருக்கு”

“ஒன்னுமில்ல அனு”

“இவங்க இப்படித்தான் அடிச்சிப்பாங்க. அடுத்த நிமிசம் சேர்ந்துப்பாங்க” அனு சொல்வதை காதில் கேட்டாலும்.

மாதவனின் பார்வை இருவரையும் தான் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான். அனு சற்று முன் சொன்னது உன்மை என்பது போல்தான் இருவரும் நடந்து கொண்டார்கள்.

என்னதான் வேண்டா வெறுப்பாக அவளுக்கு வாங்கித் தந்தாளும் பொறுப்பாக அருகிலிருந்து நாலு அடி வாங்கிக்கொண்டே அவளுக்கு கருப்பு கலரில் கண்ணாடி வளையலை செலக்ட் செய்து கொடுத்தான்.

அந்த பாட்டி கடவுளை மனதில் நினைத்துவிட்டு ராதாவின் கையை பிடித்து அளவு பார்த்தவர். அவளுக்கு அடுக்கி வைத்திருந்த வளையல்களை பக்குவமாக எடுத்து கீழே வைத்துக்கொண்டு.

அந்த நடுவயது பெண்மணி..

“பாப்பாக்கு எந்த ஊரு”

“இந்த ஊரு தான் பாட்டி..”

“அம்மா அப்பா பேர் என்ன”

“அம்மா மதி, அப்பா சரவணன்… ஆனா வளர்த்தது எல்லாம் மாமா தான்”

“எந்த கிழமை தங்கம் பிறந்த..”

“ஞாயிறு பிறந்தேன்.. வயசுக்கு வந்தது முதல் நடந்த எல்லா நல்ல காரியமும் ஞாயிறு தான் நடந்தது”

பல நாள் பழகியது போல இருவரும் பேசினார்கள்.

“உனக்கு என்ன பிடிக்கும் மா”

“எனக்கு கதை எழுதுறது.. பெய்ன்ட்டிங் என்றால் ரொம்ப பிடிக்கும்” ராதா தான் வரைந்து வைத்திருந்த ஒரு ஓவியத்தையும் எடுத்து காட்டினாள்.

ஒரு பாடல் பாடிக்கொண்டே வளையலை போட்டுவிடத் தொடங்கும் அறிகுறி தெரிய. ராதா பிறந்த இடம் தாய் தந்தை பெயர் மாமனின் பெயர் தொடங்கி.. அவளது வாழ்க்கை பயணத்தை கேட்டுவிட்டு. அந்த வளையல்கார அம்மா இரண்டு வளையல்களை எடுத்து வானத்தை நோக்கி ஏதோ வேண்டினார்.

மாதவன் அழகாக படம் பிடிக்க தயாராக இருந்தான்.

ராதா முகத்தில் அவ்வளவு ஆர்வம்.. இதுவே முதல் முறை கண்ணாடி வளையல் அணிவது.

பாட்டி குரலை சரி செய்தார். ராகமாக பாட துவங்கினார்கள். ராதாவின் கைகளை பதமாக பிடித்தவர்.

“இந்த… தகடூர் மன்னன் கால் பதித்த ஊர்ல… மகராசிபோல… லோலோ.

சரவணன் உயிரில்… மதியின் மடியில் உருவான முதல் காதல் இவளே… தங்கரதம் இவளே… ஓஓஓய்

மருத்துவமனை வேண்டாம் மரத்தின் நிழலில் பிறக்கும் வரம் பெற்ற மகள்.. பூக்களின் அரவணைப்பில் பிறந்த பூமகள் இவளே… ஓஓஓய்

தந்தையின் பெயரை உசத்த வந்த தவப்புதல்வி இவளே… ஓஓஓய்

ஞாயிரில் பிறந்து.. அதே கிழமையில் பெரியவளான, தங்கை தாரகை இவளே… ஓஓஓய்

கலைமகளின் கைகளோடு பிறந்தவள் கை பட்ட இடம் வண்ணங்களால் நிறைத்தவள் இவளே… ஓஓஓய்

சுற்றி இருப்பவர்களும் அடாவடி பாசத்தால் கட்டி இழுக்கும், இம்சை அரசி இவளே… ஓஓஓய்

பிடித்த மனாளன் வருவான்.. வந்து இவளது விழி அசைவில் இவளுக்கு சேவைப்புரிய… வருவான் ராசகுமாரன்.

"அருள் புரிய வேண்டும்… இயற்க்கை தாயே…”

அந்த பாட்டியின் கணிர் குரலிலும் ராகத்திலும் மெய் மறந்து தான் போனார்கள் அனைவரும். அந்த கணிர் குரலுக்கு ரசிகர்களாக ஆனார்கள்.

கைநிறைய வளையலை போட்டுக் கொண்டவள், தன் கையை ஆசையாக பார்த்தாள்.

அதனின் அழகில் மெய்மறந்து புதிதாக இவ்வளவு வளையல் அணிந்தவள்.. கைகளை காதுக்கு நேராக வைத்து குழுக்கி சிரித்தவளின் சிரிப்பு ஒளியையும் வளையளின் சத்தத்தையும் பிரித்து காண முடியாத அளவுக்கு கலகலவென சிரித்தாள் ராதா.

“நான் கூட உன் கைக்கு கண்ணாடி வளையல் நல்லா இருக்காதுன்னு நினைத்தேன் பரவாயில்ல சுமாரா இருக்கு” கிருஷ்ணன் அவளது கையில் உள்ள வளையல்களை வருடிவிட்டான்.

மாதவன் அவளது கரங்களை ரசித்தான், சிறு பரிசம் தீண்டிவிடமாட்டேமா என்று சலனம் கொண்டது அவனது மனம்.

“டேய் ஓவரா பேசாத புரியுதா. மாமா…” ராதா துவங்கும் முன்பே கைகளை கூப்பி நின்றான் கிருஷ்ணா.

“தெய்வமே என்னை விடு நான் பாவம்.. போதும் அந்த டயலாக்கை விட்டுடு பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்குது”

“சரி போ.. போய் ஐஸ் வாங்கிட்டு வா, பசிக்குது”

“அதானே பார்த்தேன் சண்டையை அமைதியா அடக்கிட்டா’ன்னு வா மாதவா வாங்கிட்டு வரலாம்”

“அவ்வளவு சீக்கரமா உன்னை விட மாட்டேன்” சுற்றி எதாவது அடிக்க கிடைக்குதா என்று பார்த்தவள் கண்களுக்கு அங்கு குச்சோடு வந்து கொண்டிருந்த திருநங்கை கூட்டம் கண்ணில் பட.

ராதா அருகில் அவர்கள் வரும் போது,

“அக்கா ஐஸ் சாப்பிடுறிங்களா?” திரும்பி பார்த்தவர்கள்.

“சாப்பிடலாமே தங்கச்சி” அவர்களும் சிரித்த முகமாக சொல்ல.

“ஏனுங்க மாமா… எங்க அக்காங்களுக்கு ஐஸ் வாங்கி வாங்க”

“எதுக்கு மாமாவ தொந்தரவு செஞ்சிட்டு நாங்களே போய் வாங்கிக்கிறோம்”

“சரிங்க கா…” போனவர்கள் சும்மா இல்லாமல் இருவரையும் உரசி வெறுப்பேற்ற. இருவரும் நெளிந்து கொண்டிருப்பதை லைவில் போட்டாள் ராதா.

“ஏனுங்க மாமா… இரண்டு ஐஸ் வாங்கி தரது” அவர்கள் இருவரையும் தொட்டு தொட்டு பேசினார்கள்.

அனுவும் ராதாவும்.. அக்காவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இருவரை பார்த்து வயிறு வலிக்க சிரித்து முடித்தவர்கள்.

அவர்களுக்கு ஐஸ் வாங்கி கொடுத்து தூரம் வருவதற்க்குள் ஒரு வழியாக ஆகினார்கள்.

அவர்கள் கிளம்பும் போது, “தங்கச்சிங்களா… உங்க மாமா கூட சேர்ந்து நூறு வருசம் வாழனும்’ன்னு வாழ்த்திட்டு போனார்கள்”

“நன்றி அக்கா….” ராதா அனு தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்து போனார்கள்.

அனுவும் ராதாவும் லைவ்வை ஆப் செய்தவர்கள் ஒன்றும் அறியாத சிறு குழந்தையாக நின்றிருக்க.

“இவளுங்க பார்வையே சரியில்லையே” கிருஷ்ணா இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்க்க.

“கிருஷ்ணா அப்படி எல்லாம் இல்லை அக்காங்க கிட்ட மாட்டிவிட்டதுக்கு இப்படி மூஞ்சை வச்சி இருக்காங்க”

அடுத்து தோடு கடைகள் இருக்கும் பக்கம் போனார்கள்.

ராதா ரசிப்பதோடு நின்று கொண்டாள் அனு பிடித்ததை எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் வாங்கி குவிக்க.

மாதவன் ராதாவை விசித்திரமாக பார்த்தான். ‘இந்த நேரத்துக்கு கடை காலியாகி இருக்குமே? என்ன இவ அமைதியா நிக்கிரா’

“அனு இது உனக்கு செட் ஆகும்”

“ராதா உன் செலக்சனே தனி தான். சூப்பரா இருக்கு”

“ஹா ஹா ஐஸ் வைக்காத டி பக்கி” எதர்ச்சையாக மாதவனை பார்க்க.

“என்ன மாதவன் புதுசா பார்க்கறது போல பார்க்கறிங்க”

“நீ எதும் வாங்களையா?”

“இல்லை மாதவன்… இந்த ரிங்க் தவிர எதும் போடுறது இல்லை, ஏற்கனவே வாங்கி வைத்ததே வீட்டில் தூங்குது”

‘ஏன் ராதை இப்படி மாறிட்ட பிடிச்சதை எல்லாம் எதுக்கு விட்டுட்ட’ அங்கிருந்த ஹார்ட் பிள்ளோவை பார்த்த ராதா… அதனை நோக்கி ஓடினாள் கிருஷ்ணா கையை பிடித்து இழுத்துக் கொண்டு.

ஹார்ட் பிள்ளோவை கையில் எடுத்தவள்.. கிருஷ்ணாவை அருகில் அழைத்தாள்.

“இரண்டு பிள்ளோ வேண்டும்”

“எடுத்துக்கோ… வேண்டாம்’ன்னு சொன்னா விடவா போற”

கிருஷ்ணாவும் அதற்கான பணத்தை கொடுத்தவன்.

“மாதவன்... இது உங்களுக்கு”

“இல்லை வேண்டாம்” அவன் தயங்கி நின்றான்.

“இல்லை, தப்பான எண்ணத்தில் இல்லை. இதை வச்சி பிளாக் மெயில் எல்லாம் செய்ய மாட்டேன் பிரண்ட்லி கிப்ட் சரியா”

“சரி…” என்றவன் வாங்கிக் கொண்டான்.

கிருஷ்ணன் தான் இருவரையும் முறைத்து பார்த்தான். இங்கு வெட்டவெளியில் ராதாவிடம் சண்டைப்போடவும் எண்ணமில்லை அவனுக்கு.

அடுத்த கடைக்கு நடந்து போக.

அங்கிருந்த பொம்மையை பார்த்து ராதா மட்டுமல்ல மாதவனும் அதிர்ந்து நான்றான்.

டாம் அன் ஜெர்ரியில் வரும் கூண்டில் இருக்கும் பறவை அது.
 
Top