• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

60. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"ஓ மை காட்...! மிஸ்டர் முகிலன் இவங்களோட நிலமையில தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து.


எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அந்தளவு வேகமா குழந்தையை வெளியே எடுத்தாகணும்,

இவங்க இரத்த அழுத்தம் கூடினா குழந்தை வயித்திலேயே இறந்து போறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்கு.

அதனால அம்மா உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்,
அதுக்குள்ள உங்க மனைவிக்கிட்ட பேசி சம்மதிக்க வைங்க.


எல்லாத்தையும் விட முக்கியம், அவங்கள பயப்பட விடாம தைரியமா வச்சிருக்கிறது,

பயந்தா இரத்த அழுத்தம் அதிகமாகிடும், நின்னு நேரத்தை வீணாக்காம போங்க." என்று அவனை விரட்டியவர்,


அங்கு நின்ற நர்ஸிடம் "சிசேரியனுக்கு சீக்கிரம் ரெடியாகுங்க," என விரட்டினார்.



வைத்தியர் கூறியதுமே எங்கு மேகலா இழந்துவிடுவேனோ? என்ற பயந்தவன், அவள் இருந்த அறைக்குள் நுழைந்தான்.


மூச்சுக்கு சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு, கண்கள் மூடிய நிலையில் வலியை பொறுத்திருப்பது அவள் கண்களில் ஓரம் வடியும் கண்ணீர் துளியே சொல்லியது.


அவள் அகில் சென்றவன், "கலை!.." என்று அழைத்தான்.


அவன் குரலை கேட்டு கண் விழித்தவள், கலங்கிய கண்கள் வழியே அவனைப்பார்த்து தன் கையை அவனிடம் நீட்டினாள்.

அதை ஆதரவாய் பற்றிக்கொண்டவனோ,

"நான் உன்னோட இருக்கிறேம்மா! பயப்படத, உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்னு தான் சொல்லியிருக்கேனேடா! அப்புறம் பயப்படலாம?" என்றான் தன் பயத்தினை மறைத்து.


தன் மூக்கிலிருந்த குழயினை எடுத்தவள்,
அவனை தோற்றுப்போன பார்வை பார்த்தவாறே,

"என்னால வலியை தாங்க முடியலங்க,
உங்களையும், உங்க அன்பையும் முழுசா அனுபவிக்காம போயிடுவனோன்னு ரொம்ப பயமா இருக்குங்க, அது தான் கடைசியா உங்களை பாத்திட்டு சர்ஜரி செய்துக்கலாம்னு தாங்க நீங்க வந்ததும் செய்துக்கலாம்ன்னு சொன்னேன்" என்றாள் மூச்சுக்கு இடையில் வெகு சிரமத்தோடு.


"கலை ப்ளீஸ்டா.....
இப்பிடில்லம் பேசி என்னை அழ வைக்காதடா.... எனக்கு பயமா இருக்கும்மா.... எனக்கு நீ வேணும்.
என் பிள்ளையோட நீ நல்லபடியா என்கிட்ட மறுபடியும் வருவ,
எதை பத்தியும் கவலைப்படாம நீ சர்ஜரி பண்ணிக்கோ, உன் கூடவே நானும் இருப்பேன்.


என்மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, உனக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துப்பேன்னு?" என்று ஆற்றாமையோடு கேட்டவன் கண்களும் குளம் கண்டிருந்தது.


எங்கே தான் அழுதால் தன் கலையும் மனம் தளர்ந்து விடுவாளோ? என்று தன் கண்ணீரை அவளிடமிருந்து மறைப்பதற்காக கண்ணீரை உள்ளிளுத்தவன், அவள் கைகளை இறுக்கமாக பற்றினான்.


அந்த வலியோடும் எழுந்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தவளுக்கு நம்பிக்கையில்லை.
மீண்டும் இதே போல் முத்தத்தினை தான் அவனுக்கு வைப்பேன் என்று..

அவன் கையை இறுகப்பற்றிக் கொண்டவளோ!

"எனக்கு உங்க கூட நூறு வருஷம் வாழணுங்க, என் பிள்ளையை பாக்கணும், அதுக்கு சாப்பாடு ஊட்டணும், அதோட சின்ன சின்ன குறும்புகளை ரசிக்கணும், இப்பிடி நிறைய ஆசையிருக்கு,

ஆனா இப்போ என்னால மூச்சு கூட சரியா எடுத்து விட முடியாம இருக்கிறப்போ,
திரும்ப வருவேனான்னு கூட தெரியல்ல, எனக்காக உங்க கடவுள்கிட்ட வேண்டிக்கிறீங்களா?
எனக்கும் பிள்ளைக்கும் எதுவும் ஆகக்கூடாதுன்னு.

உங்க கடவுள் கிட்ட சொல்லுங்க, நான் உயிராட வந்தேன்னா வாரத்தில ஒரு தடவையாவது குடும்பத்தோட கோவிலுக்கு வருவேன்னு.

என் பிள்ளையோட முடி கூட அங்க தான் இறக்குவேன்,

ப்ளீஸ்ங்க.... நான் என் குடும்பத்தோட சந்தோஷமா வாழணும்." என்று அவள் சொல்லிக்கொண்டே போக,

அவள் பேச்சில் அவனுக்கு பயம் உண்டானது.

அவள் இறுதியாக கூறிவது சாதாரண பெண்களுக்கு இருக்கும் ஆசை தானே!
அதைக்கூட அவளை அந்த ஆண்டவன் பிச்சை கேட்க வைத்துவிட்டானே என்று அவள் பேச்சில் இடையில் புகாது இருந்தவன்.


"கலை உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காதடா! நான் இருக்கேன்ம்மா....
நீ சொல்லியிருக்கல்ல,
எனக்கு என்னை வளத்த அப்பா அம்மா தர முடியாத உணர்வை நான் தந்திருக்கேன்னு,


அதே போல தான்ம்மா இதுவும்.
நான் இருக்கேன்டா உனக்கு.

அப்பிடி என்னால உன்னை காப்பாத்த முடியாம போன, நானும் உன்கூடவே வந்திடுவேன். அப்பிடி ஒரு நிலமை வராதுன்னு நம்பிக்கையோட போடா! நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேன்." என்றவன் அவள் நெற்றிமீது தானும் இதழ் பதித்து எழுந்து,

"மீதி முத்தம் வேணும்னா சீக்கிரம் குழந்தையாேட ஓடி வா!." என்று கண்ணடித்து கூறி, வராத புன்னகையை கடினப்பட்டு வரவழைத்தவன்,


"நான் இங்கேயே நின்னா, ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியாதுடா, நான் வெளியே தான் நிற்பேன், எதுக்கும் பயப்பிடதேம்மா, உனக்கு சர்ஜரி முடிஞ்சு, நீ நல்லாகிட்டன்னு சொல்லும் வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்.

என்னை ஏமாத்தாம வந்திர்றா" என்றவன் வெளியேற,
போகும் அவனையே பார்த்தவாறு படுத்திருந்தவளை சூழ்ந்து கொண்டது வைத்தியகுழு.



அதற்குள் இரு குடும்பத்தாரும் வந்து விட,
அத்தனை மணிநேரம் தன்னை அழுத்திக்கொண்டிருந்த கண்ணீர் சுந்தரியை கண்டதும் மடை திறந்த வெள்ளமாய் வெளியேற, . அவரின் மடிதேடி ஓடிப்போனவன் தாயை அணைத்துக்கொண்டு கதற ஆரம்பித்தான்.


இதுவரை அழுதறியாதவனை தேற்றும் விதம் தெரியாது ஆறுலாய் அணைத்திருந்தார் சுந்தரி.

அதற்குள் நடந்தவற்றை முகிலனின் ஆட்கள் கூறியதும்,
எல்லோரிடமும் மேகலாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.


ஒவ்வொருவர் முகமும் ஒரு வித பீதியுடன் காணப்பட, பானு மட்டும் அமைதியாய் அமர்ந்து புஷ்பாவை தேற்றிக்கொண்டிருந்தாள்.


"எதுக்கும்மா அழுகிற? உன் பொண்ணுக்கு எதுவும் ஆகாது.

அவளோட குழந்தையை கொண்டு உனக்கு உதைக்க வைப்பா, நீ வேணும்னா பாரு, நான் சொல்லுறது நடக்கும்" என்று கூறிக்கொண்டு அவரை சமாதாணம் செய்துகொண்டிருக்கும் சமயம்,

சற்றுத்தள்ளி ஸ்ட்ரெச்சரில் யாரையே முகம் முழுவதும் வெள்ளை துணியால் போர்த்தி தள்ளிச்செல்ல, பின்னால் சென்ற குடும்பத்தினரோ,


"ஐயோ என் பொண்ண இப்பிடி பறிகொடுத்துட்டேனே..!" என்று கத்திக்கொண்டு போக,
இத்தனை மணிநேரம் அழாமல் இருந்த பானுவும், அவரின் அலறல் கேட்டு, அடக்கி வைத்திருந்த மொத்த குழுறலையும் வெளிக்கொண்டுவந்தாள்.

"அம்மா அவளும் இதே மாதிரி என்னை விட்டு போயிடுவாளாம்மா!" என்று ஆரம்பித்தவள் தான். அவள் புலம்பலும் கண்ணீரும் ஓய்ந்தபாடில்லை.


மற்றவர்களுக்கு உண்மையில் இப்படி ஒரு பாசப்போராட்டத்தை பார்த்திருக்க மாட்டார்கள். அப்படித்தான் கரைந்தாள்.


இறுதியில் கண்களை அழுத்தி துடைத்தவள்,

"நானும் பாக்கிறேன் என்னை விட்டு போகட்டும், அப்புறம் அவளை சும்மா விடமாட்டேன்."


"என்னதான் நினைச்சிட்டிருக்கா அவ மனசில,
எப்பவுமே எங்கள அழவைச்சு பார்க்கிறது தான் இவ வேலையம்மா? நாங்க பயந்து அழுதிடாடிருக்கணும், எங்களுக்கு பயத்தை காட்டிட்டு அப்புறம் சிரிச்சிட்டு வருவா,


என் பிள்ளையோட அவ நல்லபடியா வருவாம்மா!" என்றவள்,
மற்றவர்களை பார்த்துவிட்டு,

வேகமாக கன்டீன் பக்கம் சென்று ஒரு தண்ணீர் பாட்டிலோடு வந்தவள், தானும் குடித்து,

"நீயும் குடிம்மா! " என்று தாயிடம் நீட்டியவளை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர்,


" இங்க என்ன பார்வை? தண்ணி வேணும்னா கேக்க வேண்டியது தானே?"என்றவர், அதை அவர்கள் புறம் நீண்டனாள்.


அவர்கள் எல்லோரும் வாங்க மறுக்க,

"வேணாம்னா போங்க,
அக்கா குழந்தையோட வரபோ நீங்க மயங்கி விழுங்க, நான் முதல்ல பாப்பாவ தூக்குவேன்." என்று சந்தோஷமாய் சொல்ல,


அவளுக்கிருக்கும் நம்பிக்கையை பார்க்க சந்தோஷமாக இருந்தாலும், மறுபுறம் பயமும் வந்தது.

இப்படி இவள் நம்பிக்கொண்டிருக்க, அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் இவள் நிலமை?

மன அழுத்தத்தால் பைத்தியம் கூட ஆவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

யாரை தேற்றுவது?
முகிலனையா? பானுவையா? இல்லை தம்மையா? என்று ஒவ்வொருவரும் குழம்பியிருக்க,
வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்த நர்ஸிடம் கூட நிறுத்தி ஒரு வார்த்தை கேட்கமுடியவில்லை.



அவர்கள் முகத்தை பார்த்தும் எதையும் கணிக்கவும் முடியவில்லை. அத்தனை பரபரப்பு அவர்களிடத்தில்.


ஒன்றரை மணிநேரமிருக்கும் உள்ளிருந்து வந்த வைத்தியரை கண்டதும், எழுந்து சென்றான் முகிலன்.


"ஓகே மிஸ்டர் முகிலன்.

குழந்தைங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பட் உங்க ஒய்ஃப்க்கு தான் கொஞ்சம் பிபி லெவல் அதிகமாகிடிச்சு,


மயக்கம் தெளிஞ்சதும் தான் எதுவும் சரியாக சொல்லமுடியும்.


இப்படி நிறைய கேஸ் நாங்க பாத்திருக்கோம். அதனால பயப்பட தேவையில்லை.
இப்போ குழந்தைங்களை போய் பார்க்கலாம், பட் ஒவ்வொருதங்களா போய் பாருங்க." என்றவர் விலகிச்செல்ல,


உள்ளே யார் முதலில் செல்வது என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க,


"நான் போகட்டுமா?" என்றாள் தயங்கியவாறு பானு.


"மாப்பிள்ளையே முதல்ல போகட்டும்." என்றார் புஷ்பா.


"இல்லத்தை கலை முழிச்சதும் நான் போறேன். நீயே போய் பாரு"என்றதும் துள்ளிக்குதித்து உள்ளே சென்றவளை வரவேற்றது ஒரே தொட்டிலில் கிடந்த இரண்டு ரோஜா குவியல்கள்.

சொல்ல அவளிடம் வார்தையில்லா சந்தோஷம்!

தமக்கையை திரும்பி பார்த்தவள், அவள் உடல் பூரகவும் பல வர்ண வயர்கள் மாட்டப்பட்டு, தலை பகுதியில் டீவி போல் ஒன்று பொருத்தி அதில் அலையலையாய் கோடுகள் சத்தமிட்டவண்ணம் விழுந்துகாெண்டிருக்க,
அந்த சத்தையும் மீறி தூங்கிக்கொண்டிருந்தாள் மேகலா.


"நீ பெரிய கில்லாடி தான்டி!
பாரு ரெண்டும் உன்னோட கலர்லையே இருக்குதுங்க.


ஏய்....! எழுந்து குழந்தைங்கள பாருடி! என்ன தான் உன் கலரா இருந்தாலும், அத்தான் சாயல் தான் போ." என்றவாறு ஒரு குழந்தையை தூக்கி அவள் அருகில் வைத்தவள்,


"இங்க பாருடி உன் குட்டி முகிலனை." என்று அவளை எழுப்ப. அது தன் கையையும், காலையும் அசைத்து மேகலாவை தொட்டுப்பார்த்தது.


"டேய் குட்டியா.... அம்மாவ எழுப்பிறியா? கொஞ்சம் பொறுத்துக்கோ! அம்மா இப்போ எழுந்துப்பாங்க.

நீ நம்ம இனமில்லை, மற்றவங்க யாரு இனம்ன்னு பார்த்திடலாமா?" என்று தூக்கிய குழந்தையை அதே இடத்தில் வைத்தவள், மற்றைய குழந்தையை தூக்கி மேகலாவின் அருகில் வைத்து விட்டு பார்த்தவள்,


"ஐ.... இவ நம்ம இனம்டி! எழுந்து பாத்தேன்னா அவ்ளோ சந்தோஷ படப்போற, நான் போய் மத்தவங்கள அனுப்புறேன்." என்று குழந்தைகள் இருவரின் கன்னங்களிலும் தன் இதழை அதற்கு வலிக்காது ஒற்றி எடுத்தவள், மேகலாவின் நெற்றி மீதும் வைத்துவிட்டு.
வெளியே வந்தவள்,

"ஒன்னில்லைம்மா ரெண்டு குட்டிங்க.

ரெண்டுமே அத்தான் சாயல்ல அக்கா கலர்ம்மா." என்று சந்தோஷத்தில் துள்ள,

முகிலனுக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.


ஆனால் தன் மனைவியோடு சேர்ந்தே பார்ப்போம் என்று தன்னை அடக்கிக்கொண்டான்.


ஒவ்வொருவராக அவளை சென்று பார்த்த விட்டு வந்தவர்கள் முகிலனிடம்,


"முகில் போய் உன் பிள்ளையை பாருடா! அப்பிடியே உன்னை போலவே இருக்காங்க" என்று பேரபிள்ளைகளை கண்ட சந்தோஷம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


"இல்லம்மா நான் கலை எழுந்ததும் பாக்துக்கிறேன்." என்றவன்.

அவள் எப்போது எழுந்து கொள்வாள் என தவமிருந்தான்.
 
Top