• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

61. நதியறியா பயணமிது.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
இரண்டு மணி நேரம் கடந்தும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை அவன்.


சிறுது நேரத்தில் அங்கு வந்த நர்ஸ் அவர்களையே பார்த்தவாறு உள்ளே சென்றவர்,

அதே வேகத்தில் வெளியே வந்து வைத்தியர் அறை புறம் ஓடியதை பார்த்து ஏதாவது விபரீதம் நேர்ந்து விட்டதோ? என்று பயந்து போயிருக்க,


அவர்கள் இருந்த அறையின் முன் வந்த வைத்தியர் அவர்கள் அனைவரையும் பார்த்து உதட்டளவில் சிரித்தவாறு உள்ளே சென்று அவளை பார்த்தார்.


கண்களை கடினப்பட்டு திறந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"என்ன மேகலை வலி இப்போது ஓகேவா?"

ம்ம்.. என தலையசைத்தவாறு தொட்டிலை தான் ஆராய்ந்தாள்.


"சொல்ல மறந்திட்டேன்,
உங்களுக்கு ஒன்னில்லை ரெண்டு குழந்தைங்க.


இவ்ளோ அழகான பிள்ளைங்களை பெத்தெடுக்கத்தான் இவ்வளவு பயமா?" என்றவாரு ஒரு குழந்தையை கையில் ஏந்தியர் அவள் முன் நீட்ட,


அவர் நீட்டிய குழந்தையை பார்க்காமல் மறுபுறம் திரும்பிக்கொண்டவள்,


"நான் முகிலை பார்க்கணும்." என்றாள்.

"அனுப்பி வைக்கிறேன்." என்றவர் அவளருகிலே குழந்தையை கிடத்தி விட்டு, அவளை சோதித்துவிட்டு
வெளியே வந்தவர்,


"உங்க மனைவி கண்முழிச்சிட்டாங்க முகிலன். இப்போ எல்லாம் சாதாரணமாகிடிச்சு,

பட் இருபத்தி நான்கு மணிநேரம் அவங்க இரத்தழுத்தம் செக் பண்ணணும், அதனால ரெண்டு நாளைக்கு எங்க ஹாஸ்பிட்டல்லையே வைச்சிருக்கணும். மற்றம் படி எந்தபிரச்சினையுமில்லை.

எழுந்ததும் குழந்தையை கூட பாக்காமல் உங்களை தான் பாக்கணும்னு சொல்ருறாங்க போய் பாருங்கள்" என்றவர் வாழ்த்துக்கள் கூறி விலகிச்சென்றார்.


மேகலாவை காணும் ஆவலில் உள்ளே ஓடிடந்தவனை பார்த்திருந்தவள், அவன் அருகில் வந்து அவள் உடல் முழுவது இருபத்தி நான்குமணிநேர பிபி செக்கப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த வயர்களை பார்த்துப்பயந்து அவளருகில் சென்றான்.


"கலை இப்போ நீ நல்லா இருக்கல்ல"
என்று பதறியவன் கையை இறுகபற்றியவள், தனக்கு எதுவுமில்லை என்பதாய் தலையசைத்து விழிகள் மூடித்திறக்க.


அவள் நெற்றிமேல் இதழ் ஒற்றி எடுத்தவன்.


"பயந்துட்டேன்டி..... எதுக்குடி சாகப்போறேன், அது இதுன்னு சொல்லி பயமுறுத்தினா?" என்க,

தனக்கா துடிக்கும் கணவனையே பார்த்திருந்தவள் தலையினை மிருதுவாக வருடிவிட்டவன்,

"ரொம்ப வலிக்குதாடா? ஒரு பிரசவத்துக்கே என்னை கொண்டுட்ட, பாரு எப்பிடி படுத்திருக்கேன்னு.
இவங்க ரெண்டு பேருமே நமக்கு போதும், இனி ஒரு பிரசவத்தை நான் நினைச்சுக்கூட பாக்கமாட்டேன்." என்றான்.


"அதுக்குத்தான் தான் ரெண்டா பெத்து தந்திருக்கேனே" என்றவள் சிரிக்க.


"என் பிள்ளைங்களை நான் இன்னும் பாக்கலை தூக்கி காட்டுங்க" என்றதும் தான்.
தானும் அவர்களை பார்க்கவில்லை என்பது நினைவு வர. திரும்பியவன் விழிகள் தன் இரண்டு பூக்குவியலையும் ஆசையாக வருடியவாறு.


" தூக்குறதுக்கு பயமா இருக்குடி! எங்க விழுத்தி விடுவேனோன்னு" என்றவாறு மெதுவாக ஒரு குழந்தையை தூக்கி அவள் அருகில் கிடத்தினான்.


என்னதான் பெரிய அனுமன் போல மலையையே புரட்டிப்போட்டாலும், பெற்ற குழந்தையை தூக்கும் போது தந்தைக்கு வரும் பயமிருக்கிறதே அது அவர்களால் கூட வரணிக்க முடியாது.


இது உண்மையில் எல்லா ஆண்களுக்கும் வரும் உணர்வுதான்.


தான் தூக்கும் போது தன் குழந்தைக்கு வலிக்கக் கூடாது என்று தன் முரட்டுத்தேகத்தை கூட மென்மையாக மாற்றி, மற்றைய குழந்தையையும் தூக்கியவன். தன் முகத்துக்கு நேர கொண்டுவந்து நெஞ்சோடு அணைத்து தன் முதல் முத்தத்தை அந்த பஞ்சு பிஞ்சிற்கு கொடுக்க, அது அவன் முகத்தை தன் கையால் தட்டி விட்டது.


"கலை இவன் தான்டி காலையில கொஞ்சுறப்போ உதைச்சிருக்கான், அவனுக்கு இப்ப கூட நான் தான்னு தெரியுது பாரேன்" என்று தன் மனைவியை ஆர்ச்சரியமாக பார்த்தவாறு கூறினான்.


தன் பிள்ளையை ஆசையாக தூக்கி கொஞ்சும் கணவனைப்பார்த்திருந்தவள், அவனை தன் பிஞ்சுக் கையால் குழந்தை அடிப்பதையும், அதற்கு கணவன் கூறியதையும் கேட்டு சிரித்தவள்,


"அவனை இப்பிடி என்கிட்ட தந்திட்டு இவளை தூக்கி கொஞ்சுங்க" என்றவள்,

பக்கத்தில் இருந்த பெண் குழந்தையை ஆசையாக தன் கையால் வருடிப்பார்த்தவாறு கன்னத்தல் தன் இதழ் பதித்தவன்,
முகிலன் மற்றைய குழந்தையையும் தன் அருகில் வைக்க.


அதையும் கொஞ்சிவிட்டு. "ரெண்டு பேருமே உங்களைபோலவே இருக்குறாங்கல்லங்க." என்று குழந்தைகள் மேல் வைத்த கண்கள் எடுக்காமலே கேட்டாள்.


"எனக்கு ஒரே பிரசவத்தில மூணு குழந்தங்க கலை." என்று அவள் நெற்றியில் மீண்டும் இதழ்பதித்தவன் நிமிர்ந்தான்.


"உங்க கொஞ்சல்கள் முடிச்சுதுன்னா நான் உள்ள வந்திடுவேன்" என்று கதவிற்கு அந்தப்பக்கம் இருந்து தலையை மட்டும் உள்ளே விட்டு கேட்டாள் பானு.


"வாடி என்ன கேட்டுட்டிருக்க." என்று அழைத்தாள் மேகலா.


அவளருகில் வந்தவள் அவள் கையில் ஒரு அடி போட்டு,

"ரொம்பவே பயமுறித்திட்டாடி. அதுக்குத்தான் இது." என்று கூறியவாறு.
தன் கையின் சின்ன விரலை குழந்தை கையில் திணித்து அதன் கையை இரண்டு புறமும் மாறி மாறி அசைக்க,


"முகூர்த்தப்புடைவை எல்லாம் எடுத்தாச்சா?." என்றாள்.


"ம்ம்... எடுத்தாச்சு எடுத்தாச்சு....." என்று சலித்தவாறு சொன்னவள்,

"அனால் இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்டி.... நீ முதல்ல சரியாகி வா! அப்புறம் நாள் பாத்து கல்யாணத்தை வைச்சுக்கலாம்." என்றாள்.


"இது நல்ல கதையா இருக்கே....! என்ன மேடம், இந்த காரணமெல்லாம் சொல்லி உன் பிள்ளைங்ககிட்டருந்து தப்பிச்சுக்கலாம்னு பார்க்கிறீங்களோ?


அந்த கதைக்கே இங்க இடமில்லை. மரியாதையா குறிச்ச நாள்ல மயூ கையால தாலியை வாங்கிட்டு வந்து, உன் பிள்ளைங்களை நீ தான் வளர்த்து தரணும்,


என் புருஷன் என்கூட இருந்து என்னை பாத்துப்பாரு, நீங்க கல்யாணத்துக்கு தயாராகுங்க. "
அவனும் இருவர் அன்பைப்பார்த்து சிரித்துக்கொண்டே,


"ஆமா " என்பதாக தலையசைத்தான்.


இத்தனை மணிநேரம் பானு தமக்கைக்கு ஒன்றென்றதும் எப்படி கலங்கியழுதாள் என்பதை நேரடியாக பார்த்தவனாயிற்றே. அவனுக்கு அவர்கள் அன்பின் மீது சிறிது பொறமை வந்ததும் உண்மைதான்.


"நான் என் பொண்டாட்டிய பாத்துக்கிறேன் பானு. நீ கல்யாணத்தை தள்ளிப்போடுறத,
கல்யாண பேச்சு வார்த்தை முடிஞ்சாலே நீயும் வீட்டுக்கு வரமுடியாது. தாலி கட்டினால் மாத்திரம் தான் உன் அக்காவை பார்க்கவே வரமுடியும்." என்றவும்.


அரைமனதாகவே "சரி" என்றாள்.


எல்லோரும் வந்து மேகலாவை பாத்து பேசி செல்ல,
நீண்ட நேரம் முகிலனிடம் கேட்க வேண்டும் என்றிருந்தவள். குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தவன் கையை இறுகபற்றி, அவன் முகத்தை ஏறிட்டாள்.


"என்ன கலை"


"அது ..... அது அந்த தீபனை" என்று அவள தடுமாற,

குழந்தையுடன் விளையாடியவாறே.


"அவனை நான் எதுவுமே செய்யல, அவனோட ஆளுங்களே கொண்டுட்டாங்க" என்றவனை நம்பாது பார்த்தாள்.


"என்னை நம்புடி!" என்று அவள் பார்வையில் சிரித்தவன்,


"உண்மைக்கும் நான் அவனை தொடக்கூட இல்லடா!. அவனோட அடியாளையே, நீ அவனை கொல்லலனா, நான் உன்னை கொண்டுடுவேன்னு சும்மா மிரட்டினேன். அவ்ளோ தான்." என்று சுருக்கமாக தீபன் முடிந்த கதையை முடித்தான்.


இரண்டு நாட்களில் அவளை வீட்டிற்கு அனுப்பிவிட,
பானு மயூவின் திருமணமும் குறித்த நாளில் பானுவின் சங்கு கழுத்தில் மயூரன் மங்களநாண் அணிவித்தான்.
என்ன பானுவின் திருமணத்திற்கு மேகலா வரவில்லை என்ற குறைதான் பானுவிற்கும் கலைக்கும்.


காலையிலேயே பரபரப்பாக இருந்தது.


"எல்லாருமே சீக்கிரம் எழுந்து தயாராகிட்டிருக்கோம், உங்களுக்கு தூக்கம் ஒன்னு தான் இப்போ குறையா?


வயசான என் அம்மா, அப்பா கூட காலையிலேயே தயாராகி அங்கயிருந்து வந்து காத்திட்டிருக்காங்க, முதல்ல எழுந்து ரெடியாகிற வழியை பாருங்க, பூஜைக்கு நேரமாகிறது." என்றவாறு ஆரைமணிநேரமாக தன் கணவனை எழுப்புவதற்கு போராடிக்கொண்டிருந்தாள் மேகலா.


அது ஒன்றுமில்லை.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இன்று தான் முடியிறக்கும் நாள்.


வைத்தியசாலையில் மேகலா தன் கணவனிடம் தான் வாழவேண்டும் என்ற ஆசையில் இறைவனிடம் வேண்டச்சொன்ன வேண்டுதலின் பெயரில் தான் இன்று இந்த பரபரப்பு.


இப்போதெல்லாம் வாரம் ஒரு நாள் கோவில் தரிசனமில்லையென்றால் மேகலாவிற்கு ஏதோ அங்கம் குறைவது என்றாகிப்போனது.


இருக்காத பின்னே!


சாவின் விளிம்பு வரை சென்று வந்தவளாயிற்றே!

மனிதன் என்றாலே கஷ்டம் ஒன்று வரும்போது தானே கடவுள் ஒன்று இருப்பதையே நினைக்கின்றோம். இதில் மேகலா மட்டும் விதிவிலக்கா என்ன?


"இப்போ எழும்ப போறீங்களா..? இல்லையா?
பானு பாவம்! இந்த நிலையில கூட உங்க பிள்ளைங்ககூட மல்லுக்கட்டிட்டிருக்க, நீங்க என்னன்னா, குப்பறவாக கிடந்து மெத்தைமேலே நீச்சலடிச்சிட்டிருக்கிங்க." என்று கவிழ்ந்து கிடந்தவனை தன் பலம் எல்லாம் திரட்டி நிமிர்த்தியவளை கண்கள் மூடியிருந்த படியே,


"ஏன்டி காலங்காத்தால தொல்ல பண்ணுற? கொஞ்ச நேரம் தூங்க தான் விடேன்." என்றவன், மீண்டும் கவுந்து படுக்கப்போக,


"இப்படியே விட்டா சரி வராது இருங்க" என்று அருகில் இருந்த நீர்கப்பை எடுத்து வருவதைப் பார்த்தும் பார்க்காதவன் போல படுத்திருந்தவன், அவள் அருகில் வருந்ததும் வேகமாக எழுந்து தன் கைவளைவில் அவளை கொண்டுவந்து, நெற்றியோடு நெற்றி முட்டி,


"இப்பல்லாம் தூங்கவே விடுற இல்லடி." என்றான் செல்லம் கொஞ்சி.


"ரெண்டு பிள்ளைங்களுக்கு பொறுப்பான அப்பன் பேச்சுற பேச்சா இது? போய் குளிச்சிட்டு கிளம்புங்க. நேரமாகுது" என்க.


"அது எங்களுக்கும் தெரியும்." என்றவாறு அவளை தன்னோடு இறுக்கியவன், அவள் இதழை நாடிச்செல்லும் சமயம்.


"அக்கா... இங்க வாடி.. உன் பெண்ணு அவ அப்பன் மாதிரியே, நீ வந்தாத்தான் சட்டை போட்டுக்கும் போல,

வந்து நீயே மாட்டிவிடு" என்று கத்த,

"உன் தங்கை இருக்காளே சரியான ரெடியோ!
நிம்மதியா ரெமான்ஸ் கூட பண்ண விடமாட்டா,
போ... போய் என்னன்னு பாரு?" என்று அவளை விடுவித்தவனை பார்த்து கிண்டலாக சிரித்தவாறே வெளியேறினாள் மேகலா.


"என்னடி ஆச்சு?"

" என்ன ஆச்சா? இந்த பிடி!
நீயே உன் பொண்ணை ரெடி பண்ணு, சரியா அப்பனை போலவே குணம், பெத்து போட்டு, நீயே வளர்த்து தான்னா எப்பிடி?

இதை என்னால சமாளிக்க முடியாதுப்பா,
அந்தாளிட்டையே கொண்டு போய் குடு! சரியான பொம்பிள ரௌடி.." என்று அவள் கையில் சட்டையை திணித்தவள்,


"நீ வாட குட்டிப்பையா! நீ தான்டா சித்தி செல்லம்" என்றவாறு தன் ஐந்து மாத குழந்தை வயிற்றோடு அக்காள் மகனை தன் அறைக்குள் தூக்கிச்சென்றவள் கட்டிலில் கிடத்தினாள்.


"என்ன பானு சித்தியை ரொம்ப தொல்ல பண்றாங்களாடா குட்டிப்பையா?" என்றவாறு கண்ணாடி முன் நின்று தலைசீவிய மயூரன், பானு அருகில் வந்து அவளை அணைக்க போக,


"தள்ளியே நில்லுங்க. கிட்டவந்த கொன்னுடுவேன்.

நேத்து பனங்கிழங்கு வேணும்னு கேக்குப்பாே, வாங்கித்தாறேன்னு சொன்னீங்கல்ல.

அப்புறம் வரும் போது வாங்கிவராம வெறுங்கையை வீசிட்டு வந்து என்னை ஏமாத்திட்டு, இப்போ எதுக்கு கிட்ட வரீங்க?"


"நானும் வாங்கிட்டுத்தான்டா செல்லம் வந்தேன். உனக்குத்தான் கூடாது அப்பிடினு அம்மா தரவேண்டாம் என்டுட்டாங்கடா, நம்பும்மா." என்று கெஞ்ச,


"உண்மையா வாங்கிட்டு வந்திங்களா? ஏன் நான் சாப்பிடக்கூடாதாம்."


"அதை அவங்கள தான்டா கேக்கணும்" என்றவாறு அவளை அணைக்க,


"அப்போ இன்னைக்கு சோளம் வாங்கித்தரீங்களா?" என்றாள்.


"கறுமம்டா!" தலையிலடித்தவன்,

"போம்மா... போ! நீ கொட்டிக்கிறத்துக்கு வாங்கித்தரத்தானே நான் இருக்கேன்". என்று இருகையையும் வழியை காட்டி குனிந்து நின்றவன்,


"இந்த திண்ணிப் பண்டாரத்துக்கிட்ட ரொமான்ஸ் பண்ணனேன் பாரு, என்னை சொல்லணும்,
காலங்காத்தால திங்கிறதை பத்தியே பேசி கழுத்தறுத்திட்டு,


அன்னைக்கு தட்டு நிறைய போட்டு கொட்டிக்குறப்பவே சுதாரிச்சிருந்தா, இன்னைக்கு இப்பிடி தனியா புலம்பியிருப்பேனா?


என்னை சொல்லணும், போய்
உன் அக்கா பையனை ரெடி பண்ணு, நானும் ரெடியாகிறேன்." என்று கடுகடுத்தான்.



குடும்பமாக அனைவரும் தயாராகி கோவில் சென்றவர்கள் குறிக்கப்பட்ட நேரத்துக்குள் முடியிறக்கி, குழந்தைகள் இருவருக்கும் முதல் உணவு ஊட்டப்பட்டது.


மேகலாவும் முகிலனும் தம் இரு குழந்தைகளையும் தூக்கியவர்கள், சாமியின் முன் நின்று,

இந்த சந்தோஷம் வாழ் நாள் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொள்ள,
அதே போல் பானுவும் மயூரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்ட நேரம்,

தன் இனிமையான குரலால் அன்று முகிலன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அம்மன் பாடலொன்றை பட,

அவள் குரலில் கண்விழித்தவன், அவளையே மெச்சுதலாய் பார்த்திருந்தான்.


அவர்கள் அன்பையும் ஒற்றுமையையும் கண்ட கரு மூர்த்தியான பார்வதியன்னை, அவர்கள் அனைவரையும் தன் புன்னகை படிந்த முகத்தினால் அருள் புரிந்தார்.

நாமும் அவர்கள் சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக்கொண்டு விடைபெறுவோம்.
👨‍👩‍👦‍👦❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👨‍👩‍👦‍👦

சுபம்.


இது என் கற்பனைகளுடன் ஒன்றினைந்த ஓர் உண்மை கதை...

இதுவரை ஒவ்வொரு பகுதிகளுக்காகவும் காத்திருந்து படித்த அனைத்து வாசக சொந்தங்களும்கும் மிக்க நன்றி.


அப்பிடியே கதையை பத்தி சின்னாதா கமெண்டில் ரிவ்யூ தந்தா இன்னும் சந்தோஷ படுவேன்.
இவள் பாலதர்ஷா
 

dharsh

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 27, 2022
Messages
21
Semma semma 👌 bozzz Evlo time read pannaalum pudhusa padikara maariyeh oru feel.... Chance eh illa......
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
Semma semma 👌 bozzz Evlo time read pannaalum pudhusa padikara maariyeh oru feel.... Chance eh illa......
Thank you da
 
Top