• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

63. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சின்னாவை இடுப்பினின் வைத்தவாறு அவளையே பார்த்து நின்ற ஜனாவை கவனித்த தெய்வானை.





"மைலி.....! நைட் என்னை ஒருதங்க தூங்கவே விடல தெரியுமா....


உங்க கிட்ட பேசணுக்கான்னு எட்டு மணிக்கு ரூம்க்கு வந்தாங்க.


முக்கியமான விஷயம் தானேன்னு நம்பி உள்ள விட்டேன்.


அப்புறம் தான் ஏன்டா விட்டேன்னு கதர்ற அளவுக்கு,


அக்கா அப்பிடி இருக்காங்க... அக்கா இப்படி இருக்காங்கன்னு கண்ணு, மூக்கு வாய்ன்னு இஞ்ச் இஞ்சா அளந்திட்டு வந்து, விடிய விடிய அக்கா புராணம் தான்...


ஏன்டா இந்த காதை குடுத்தான்னு கடவுளையே திட்டிட்டேன்னா பாரு!


அப்புறம் பேசியே டயர்ட் ஆகிட்ட போல... அங்கேயே தூங்கிட்டா... என் தூக்கம் தான் போச்சு" கடை கண்களால் ஜனாவை பார்த்தவாறு மைலியிடம் கூறினாள்.


தெய்வானையின் பேச்சில் மைலியும் ஜானுவை ஆர்வமாக பார்க்க,


மைலி தன்னை பார்த்ததும் தன் பார்வையை சின்னாவிடம் திருப்பியவள்,


"பெரியவங்க பேசட்டும்...
வாடா நாம போய் விளையாடலாம்." அறைக்கு சென்று,
சின்னாவோடு கட்டிலில் அமர்த்தி தானும் அமர,


அவள் பின்னாலே வந்த மைலி.


"ஜனா...."


அவளது குரலை கேட்டு திரும்பி அமர்ந்தவளது செயலோ சின்னாவிற்கு நிகராக இருந்தது.

"மேடம் ரொம்பவே கோபமா இருக்கிங்க போலயே!" என்று அவளை நெருங்கி அமர்ந்தவள் தொடுகை பிடிக்காமல், சற்று விலகி அமர்ந்தாள் ஜனா.





" பார்றா....! முட்டினா கோபம் வருது...
நான் வேண்டாம்..... நான் பெத்த புள்ளை கூட என்னடி உனக்கு பேச்சு?


சின்னா வாடா நம்ம ரூமுக்கு போகலாம்." என்றாள்.


சின்னாவை நகர விடாது பிடித்தவள்,


"சின்னா உன் புள்ளை இல்லை. மாமாவோட பையன்.... வேணும்னா நீ போ! சின்னாவை தரமாட்டேன்." என்க.


"ஓ...! அப்பிடி வரீங்க... உன்னோட மாமா ஒன்னும் ஆகாயத்தால குதிக்கல... என்னை கட்டிக்கிட்டதனால தான் அவரு உனக்கு மாமா! அதனால என் பிள்ளைய என்கிட்ட குடு!" என்றாள்.


"இந்த புடி! நீயும் வேண்டாம் உன் புள்ளையும் வேண்டாம்." என சின்னாவை
அவளது


மடியில் தூக்கி வைத்தவளது

அவளது சிறுமிள்ளை தனமான கோபத்தை ரசித்தவாறு,


"சின்னா..! போய் பாட்டி கூட விளையாடுங்க. அம்மா வந்திடுறேன்." என்றவள் பேச்சில்,
"சரிம்மா!" என்று வெளியேறினான்.


அவன் போனதும் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிய மைலி.


"இப்போ சொல்லு! என்ன உன் பிரச்சினை? எதுக்கு என்கூட பேச மாட்டேன்னு முரண்டு பிடிக்கிற?"


"யார் கூடவும் பேச இஷமில்ல... முதல்ல ரூம்ம விட்டு வெளிய போ!" என்றாள் ஜனா கோபமாக.


"என் செல்லம்ல.... அக்கா தப்பு பண்ணிட்டேன். அதை தான் உணர்ந்து திரும்பி வந்துடேனே.


ஒரே தப்புக்கு எத்தனை தடவை தான் தண்டனை தருவ.?
அக்கா கூட பேசுடி!" என அவளது கைகளை பிடித்து கெஞ்சிய மைலியின் கெஞ்சலுக்கு அங்கு மதிப்பில்லாமல் போக.


"மன்னிக்க மாட்டியா ஜனா? கோபம் போற வரை என்னை அடிடி... அப்போவாவது இதே தப்பை திரும்ப செய்யாமல் இருக்க பாப்பேன்ல்ல." என்றவள்,


ஏற்கனவே பற்றியிருந்த அவள் கையினால் தன் கன்னத்தில் மாறி மாறி அடித்தவளுக்கு வலி எடுத்தது.


அவள் மெதுவாகத்தான் அடித்தாள். பின் எப்படி வலி? என அவளது கையினை விடுவிக்க. அப்போதும் கன்னத்தில் அறை விழுவை கண்டதன் பின்புதான் , தன்னை அவளே அடிப்பது உறைத்தது.

"அடி பாவி! சும்மா பேச்சுக்கு சொன்னா... நிஜமாவே அடிக்கிற...." தன்னை தாக்கிய கையை பிடித்திழுத்து அணைத்து கொண்டவள்,


"சாரிடி. சாரி....! அக்கா தெரியாத்தனமா செய்த தப்பு, எத்தனை பேரை பாதிச்சிருக்குன்னு இப்போ தான் புரிஞ்சிருக்கு." என்றவள் பேச்சிற்கு மேலாக ஜனாவின் விசும்பல் கேட்க.


"ஏய் அழறியா...?" தன்னிடமிருந்து பிரித்து கண்ணீரைத் துடைத்தவள்,


"இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்? அடிச்சு வலிச்சது எனக்கு, அழறது இவ" பொய்யாய் வருந்தினாள்.


"உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான்." என அழுகையினூடே கூறியவள்.


"மாமா தானே தப்பு செய்தாரு.... அவரை தவிக்க விட்டு போறதில நியாயம் இருக்கு. நாங்க என்னடி பண்ணோம்.? உன்னை தவிர யாரு எங்களுக்கு இருக்காங்க...?

உன்னால அம்மா பட்ட கஷ்டம் தெரியுமா? ஓடிப்போன உன்னையே நினைச்சிட்டு சாகக்கிடந்தாங்கடி!


அம்மா மட்டுமில்ல.... இந்த வீடே மூனு வருஷமா சூணியமாகிடிச்சு


எல்லாரையும் தாண்டி மாமா ஒரு படி மேல போய், ஒரு மாதமா வீட்டுக்கே வரல.


யாரோ ஒருதன் உன்னை தப்பா பேசிட்டான்னு, அவன் கூட சண்டை போட்டு, கையை உடைச்சதுக்கப்புறம் தான், மயக்கமருந்து குடுத்து, இங்க கொண்டு வந்து போட்டாங்க.


நீ இல்லாத நாள் அத்தனையும் மாமா ஜடமாத்தான் வாழ்ந்திருக்காரு.


மூனு மாசத்துக்கு முன்னாடி தான், தாத்தாக்கு உடம்பு முடியலன்னு, ஏதோ ஸ்கூல் பங்ஷனுக்கு மாமாவ, தாத்தா கட்டாயப்படுத்தி அனுப்பி வைச்சாரு.


மனமே இல்லாம வந்த மனுஷன் திரும்ப வரும் போது சின்னப் பையன் மாதிரி துள்ளி குதிச்சிட்டு சந்தோஷமா வந்தாரு.


என்னனு விசாரிச்சா..... அந்த ஸ்கூல்ல நீ டீச்சரா இருக்கேன்னு சொன்னாரு...


மாமாவை கண்டதும் அவரு கண்ணில படாமல் ஒழிஞ்சிட்டு இருந்தியாமே!


அவரிருந்த மனநிலையில நீ சாதாரணமா இருந்திருந்தாலே கண்டுக்காம விட்டிருப்பாரு...


மாமா உன்னை கண்டு பிடிச்சிருவாரோனு முகத்தை மறைச்சு மறைச்சு வைச்சிருக்கிறதை பாத்ததும் தான்,


இது யாரு..? இவங்க ஏன் தன்னை கண்டு ஒழிஞ்சுக்கிறாங்கன்னு சந்தேகம் வந்திருக்கு,


பங்க்ஷன் முடிஞ்சதும் சாறியோட கலரை வைச்சு, உன்னை பின்தொடர்ந்தா.... அது நீயாம்.


அப்புறம் மாமாக்கு சொல்லவா வேணும்...?
உன்னை பற்றிய தகவல் எல்லாம் அன்னைக்கே தேடி எடுத்துட்டாரு.


உன்னை கண்ட மறு நாளே உன்னை கூட்டிட்டு வரச்சொல்லி அத்தை சொன்னாங்க.


ஆனா மாமா தான் அவசர படவேண்டாம்.


சின்னா மனசில இடம் புடிக்கணும். திடீர்ன்னு நான் தான் அப்பான்னு அவன் முன்னாடி போய் நின்னா, அவனால ஏத்துக்க முடியாமல் பயப்பிடுவன்.


சின்னா மனசில இடம் புடிக்கிற அதே நேரம், உனக்கும் உண்மை எதுன்னு புரிய வைக்கணும்னனு, அதுக்கான நேரத்துக்கு காத்திட்டு இருந்தாரு.


உன்னால இங்க எல்லாருமே ரொம்ப மனசுடைஞ்சு போயிட்டாங்க தெரியுமா?


ஆனா நீ யாரை பத்தியும் கவலை படாமல் சந்தோஷமா இருந்திருக்க." என்றாள் குறையாக.


"சாரிடி! உங்களோட வலி புரியுது. ஆனா நான் ஒன்னும் அங்க சந்தோஷமா இல்லை.

நீங்களாவது ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் தேடியிருப்பிங்க...


ஆனா நான்...? " என்றவளால் அந்த வலியை கூற முடியாது, கண்ணீரை திறந்து விட்டவள்.


அதை ஜனா காண்பதற்கு முன்னதாக தட்டி விட்டு,


"அதான் இப்போ எல்லாம் சரியாகிடிச்சே!
இத்தனை நாள் எல்லாரும் இழந்த சந்தோஷத்தை வட்டியும் முதலுமா தரவேண்டியது அக்கா பொறுப்பு" என்க.


"போடி நீ....." என இம்முறை செல்லாமாக கோபித்தவளை
இழுத்து அணைத்து கொண்டாள்.


"அழாதடி! எனக்கு கில்டியா பீல் ஆகுது."


"ஆகட்டும்.. நல்லா ஆனாத்தான் இந்த மாதிரி ஒரு வேலை இனி பாக்க மாட்ட.." என தன் மூக்கினை அவள் புடவையில் தேய்த்தவள் செயலில்.


"சனியனே! உன் மூக்கை என் மேல துடைக்கத்தான் இந்த பாசமழை ட்ராமாவா?." என தள்ளிவிட்டவளை மீண்டும் கட்டிக்கொண்ட ஜனா.


"உன்னால தானே அழுதேன். அதனால உன்னில தான் துடைக்கணும்." என்றிட,


"சாரிடி. ரியலி சாரி!" என்றவள் தமது இத்தனை நாள் தவறவிட்ட அன்பினை அன்றே வெளிக்காட்ட தொடங்கினர்கள்.


மைலி வந்த நாளிலிருந்து, சின்னாவின் சேட்டைகளாலும், ஸ்ரீ மைலியின் ஊடல் கூடல்களினாலும் வீடே சந்தோஷமாக, நாட்கள் இறக்கை கட்டி பறந்தது.


பாதி புடவை இடையில் சொருவியிருக்க.. புடவையின் தலைப்பினை வாயிலும், கையில் வைத்திருந்து, அதனை அப்படியும் இப்படியும் பிடித்து பல மணி நேரமாய் ஆராச்சி செய்தவனையே பார்த்திருந்தவள்,


ஒரு கட்டத்திற்கு மேல் நிற்க முடியாமல்.


"உஷ்....." என்று சேர்ந்து கட்டிலில் தொப்பென இருந்தாள்.


அத்தனை நேரம் புடவையில் இருந்த கவனத்தினை மைலியின் அசைவில் கலைத்த ஸ்ரீ.
அவளது சோர்வை கண்டு, பிடித்திருந்த புடவையினை விட்டவன்♦


"என்ன செய்யுது தாரை?" என்றான்.


"முடியலங்க..." என்றார் பாவமாக முகத்தை வைத்து..


அவளது முடியவில்லை என்ற வார்த்தையில் பதறிப்போனவனாய்,


அவளது காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன்,


"உடம்புக்கு என்ன செய்யுது தாரை? வேணும்னா டாக்டரை கூப்பிட்டிடலாமாடா?" என்றான் அக்கறையாரர்.


"யோவ் லூசு புருஷா... இதுக்கு மேல உன் ரோதனை தாங்க என்னால முடியாது.


எத்தனை மணி நேரம் தான்.. ஒரு புடவையை கட்டி விடுவீங்க.
நானே கட்டிக்கிறேன்னு சொன்னாலும் கேக்கிறீங்க இல்ல.


பாருங்க.... எல்லோரா ஓவியம் மாதிரி போஸ்ட் குடுத்துட்டு ஒரே இடத்தில நிக்கிறேன்." என்று குறைபட்டவள்,


"நீங்க எல்லாம் என்ன பிஸினஸ் மேனோ! பொண்டாட்டி முந்தானையை பிடிச்சிட்டு...
யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?


பொண்டாட்டி தாசன்னு நினைச்சிட போறாங்க.
விடுங்க... நானே கட்டிக்கிறேன்." என எழுந்து கொண்டவள் கை பிடித்து நிறுத்தியவன்.


"புடவையை தொட்டா.. கை வெட்டுவேன்.
என் பொண்டாட்டிக்கு புடவை கட்டுறது என்ன? காலை புடிச்சு கூட விடுவேன்.


எவன் என்ன பேசுறான்னு பாத்திடலாம்." என வீர வசனம் பேசிட,


"சார் அதையும் தான் நைட்ல செய்றீங்க." என்று சிரித்தவள் அழகரனை ரசித்தவனோ.


"ஆமா....! புடிச்சு தான் விடுறேன். என் புள்ளைய சிரமம் பார்க்காம, சுமக்குற என் பொண்டாட்டிக்கு இதைக்கூட செய்ய மாட்டேனா?"
என்று அவள் இடையை தன்னோடு வளைத்து அணைத்தவன்.


"என்னடி இன்னைக்கு ரொம்பத்தான் சலிச்சுக்கிற.
நீ எப்பிடித்தான் சலிச்சாலும், என் பிள்ளைய பெத்து என் கையில பத்திரமா தர வரையில, ஒரு துரும்ப கூட தொடக்கூடாது.


எல்லாமே நான் தான் பாத்துப்பேன்." என்றான் காதலாய்.


"ஓ...! உங்க பிள்ளைய சுமக்குறதனால தான் இந்த தாங்கலா?


அப்போ என்னை விட உங்க புள்ளை தான் உங்களுக்கு பெருசு." என்று முகத்தை திருப்பி கொண்டவள் தாடையை பற்றி தன்புறம் திருப்பினான்.


" நீ தான்டி என் முதல் குழந்தை. உனக்கப்புறம் தான் எல்லாமே!

சின்னாவ வயித்தில இருக்கிறப்போ, இதையெல்லாம் உனக்கு என்னால தர முடியல.
அதனால தான்... இந்த குழந்தைக்காவது கூடவே இருந்து, எல்லா சந்தோஷத்தையும் தரணும்ன்னு ஆசை படுறேன் தாரை.


சின்னம்மா பாட்டி சொல்லிருந்தாங்க. நீ சின்னாவை வயித்தில இருக்கிறப்போ, வாந்தி, தலை சுத்தல்ன்னு ரொம்ப வீக்கா இருந்தன்னு.


இந்த குழந்தைக்கும் அப்பிடி எதுவும் ஆகிடக்கூடாது.. அதான் பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்கிறேன்."


அவனது பேச்சில் உருகி, அவனை இறுக அணைத்து, கன்னத்தில் பதித்த முத்தத்தின் எண்ணிக்கை அதிகமாகி, இதழ்களை கவ்விக்கொண்டவள் செயலில்,


தானும் அவளுடன் இணைந்து கொண்டான்.
மனைவியின் காதலின் ஆழம் அவளது முத்தத்தின் வேகத்தில் புரிந்தது.


அவள் ஆரம்பித்து வைத்ததை தான் கையிலெடுத்து, அவளுள் ஒன்றிப்போக.
அவனது உணர்வுகள் கட்டவிழ்ந்து, அவளது இதழ்களை தன் வாய்க்குள் புதைத்து விட நினைத்து செயற்பட்டவன் வேகத்தில் மூச்சடைத்தாள்.


தன்னை மறந்திருந்த சமயத்திலும் மைலியின் நிலை உணர்ந்தவன், அவள் இதழ்களை விடிவித்து. அவள் முகத்தினை கையில் ஏந்தியவன்,


அவள் நெற்றியோடு தன் நெற்றி முட்டி நின்று.


"லவ் யூடி பொண்டாட்டி!" என்றான் கண்ணடித்து


"ஹூம்.... ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சுதுன்னா, போய் ரெடியாகிறீங்களா சார்." வெட்கத்தில் சிவந்த கன்னங்களை மறைக்க முடியாது விரட்டிவிட நினைத்தவள் கன்னத்தை தட்டிவிட்டவன்,


"சும்மாவே ஆளை கவுத்து போடுற அழகு.... இப்போ இந்த கன்னச் சிவப்பு... செத்திடுவேன் போலயே!" என்றவன் நெஞ்சில் கைவைத்து அவனை தூர தள்ளினாள்.


"சீக்கிரம் போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க... புடவை கட்டி விடுறேன் என்கிற பேர்வழியில, நேரத்தை இழுத்தடிச்சாச்சு....


காலையிலயே விஜயாம்மா தெளிவாத்தானே சொன்னாங்க....


பத்து மணிக்கு மண்டபத்தில நின்னாணும். அந்த நேரம் தான் தயாராகுறேன்ன பேச்சே இருக்க கூடாதுன்னு." என ஸ்ரீயிற்கு நினைவுபடுத்த.


"எல்லாம் நினைவிருக்கு... இதோ பத்தே நிமிஷத்தில ரெடியாகிடுவேன். நீ வா நம்ம வேலைய தொடங்கலாம்." என புடலை தலைப்பை கையில் எடுக்க.


"அதே நேரம் மைலிம்மா!" என விஜயாவின் குரல் வெளியே கேட்டது.


"ஐய்யோ அத்த! நேரம் இப்பவே ஒன்பதரை.... நாம தயாராச்சான்னு பார்க்கத்தான் வராங்க போல...


நீங்க முதல்ல பாத்ரூம் போங்க.... நான் பாத்துக்குறேன்." என்று மைலி அவனை விரட்டினாள்.

டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் உள்ளே ஓடியவனை பார்த்து சிரித்தவள்,


"எப்போ என் பேச்சை கேட்டிருக்கிறீங்க. நல்லா வேணும்...." என அவனுக்கு கேட்பது போல் கூறிவிட்டு.


"இதோ வறேன்ம்மா!"
புடவை தலைப்பை அப்படியே அள்ளி தோளில்போட்டவாறு கதவை திறந்தாள்.


அவளது தயாராகாத நிலையை கண்டு.
"என்ன மைலி! இன்னுமா ரெடியாகல? எங்க என் பையன்? அவன் தானே உன்னை தாங்குறேன் என்கிற பெயரால ரெடியாக விடாமல் செய்தான்." என்று மைலியை விலக்க உள்ளே வந்தவர்,


"இந்தா இந்த ஜூஸை குடி!
புடவைய நான் கட்டி விடுறேன்.... இல்லனா நேரம் ஆகிடும்." என்றவாறு அவள் கையில் அதை திணிக்க.


"இத நீங்க தான் எடுத்திட்டு வரணுமாம்மா?" இப்போ தான் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சிருக்கிங்க... இந்த நேரத்தில மாடிப்படி ஏறி இறங்கணுமா?" என அக்கறையாக வினவ.


"எனக்கு எந்த சிரமமும் இல்லை மைலி! நான் இப்போ நல்லாவே நடப்பேன். என்னை பத்தின கவலையை விட்டுட்டு, உன் வயித்தில வளர்ற குழந்தைய, நல்ல படியா பெத்து குடு!


இப்போ நான் குடுத்த ஜூஸை குடி!" என்றவர் புடவை கட்டும் வேலையில் இறங்க.


மறு வார்த்தை பேசாமல் அதை ஒரே மிடரில் குடுத்து முடித்தவள்,



"ஏனும்மா நீங்களாவது சொல்லுங்களேன்.... யார் வீட்டு கல்யாணம்.! ரொம்ப நெருங்கிய சொந்தம்ன்னு இவரு சொல்லுறாரே. எனக்கு அவங்கள தெரியுமாம்மா?" என்றாள்.


"தெரியுமாவா? நல்லாவே அவங்கள தெரியுமே உனக்கு. ஸ்ரீக்கு எல்லாமே அவன் தான்ம்மா.


நட்பை தாண்டி அவங்களுக்குள்ள ஒரு உறவு.
அதை இன்னும் கொஞ்ச நேரத்தில நீயே தெரிஞ்சுக்க போற... அதுக்குள்ள என்ன அவசரம்.?" என்றவர், புடவை கட்டி முடிந்து தலையை வாரி விடுவதற்காக கண்ணாடி மேசையின் முன்பிருந்த டீப்பாவில் அமர்த்தி தலை வாரத்தொடங்கும் நேரம்.


"ம்மா...." என வேகமாக ஓடி வந்த சின்னா.


மைலியின் முன்பு வந்து,



"ம்மா தங்கச்சி பாப்பாக்கு அவ்வா குடுக்கணும்மா..." என்றான்.


"இவன் ஒருத்தன்ம்மா.... நிமிஷத்துக்கு ஒரு தடவ ஓடிவந்து தங்கச்சி பாப்பாவை பாக்கணும், தங்கச்சி பாப்பாக்கு அவ்வா குடுக்கணும்னு என்னை ரொம்ப படுத்தி எடுக்கிறான்.


நைட்டான தங்கச்சி பாப்பான்னு சொல்லி வயித்தை கட்டி பிடிச்சிட்டே தூங்குறான்.


இவன் தான் இப்பிடின்னா.... ஜனா ஒருபக்கம், இவரு ஒரு பக்கம்ன்னு, என்னை படுத்தி எடுக்கிறாங்கம்மா!." என நொந்து போனவளிடம்,


"இந்த மாதிரி உன்னை விழுந்து விழுந்து கவனிக்கிறது கசக்குதா உனக்கு?


சின்னா..! நீ அவ்வா குடுத்துட்டு போப்பா" என்றவர்,


"இந்த மாதிரியான உறவு வேற யாருக்கும் கிடைச்சிடாது. உனக்கு கிடைச்சிருக்குனு நினைச்சு சந்தோஷபடு!." என்றவர் தலையினை வாரி, பூ, பொட்டு என வைத்து விட்டு,



"இருக்கிற எல்லா நகையும் போட்டுக்கோ.... கீழே போய் மற்றவங்க தயாராகிட்டாங்களானு பாக்குறேன்." என்று இடத்தை விட்டு நகர்ந்தார்.


குளித்து முடித்து வந்த ஸ்ரீ.


"ரெடியாகிட்ட போல" என்றவாறு பட்டு வேட்டி சட்டைக்கு மாறியவன். மைலி நகைகளை ஒன்றும் விடாமல் அடுக்கிக்கொண்டிருப்பதை கண்டு.


"என்ன மைலி! உடம்பில ஒரு இடம் விடாமல் தங்கத்தை அடுக்கிற போல."


"எதையும் விடாம விஜயாம்மா தான் போட சொன்னாங்க.
ஒருவேளை நகையை போட்டாத்தான், குடும்பத்துக்கு கௌரவம்ன்னு நினைக்கிறாங்க போல.


விஜயாம்மா கிட்டை கேட்டாலும் யாருனு சொல்லுறாங்க இல்லை.
ஆனா உங்க உயிர் நண்பன்னு சொன்னாங்க.
எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு நட்பென்று செல்வம் அண்ணாவை தவிர, வேற யாரையுமே தெரியாது. இது யாரு புதுசா நட்பு?" என்றவள் நினைவோ தன் தோழி தேனுவை நாடியது


"என்னங்க தேனுவை ஒரு தடவை போய் பாக்கணும் போல இருக்குங்க.


இங்க வந்ததில இருந்து, எத்தனை தடவை கேட்டுட்டேன்.. அவளை பாக்க போகலாமான்னு.. எப்போ கேட்டாலும் அவ வீட்டில இல்ல... ஹாேஸ்டல்ல தங்கி படிக்கிறானு சொல்றீங்களே தவிர, கூட்டிட்டு போக மாட்டன் என்கிறீங்க.


நம்ம ஒரு தடவை ஹாேஸ்டலுக்கு போய் பாத்திட்டு வந்திடலாமாங்க?."


"பாக்கலாம் தாரை!" என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்தியவன்,


"முடிஞ்சுதா....? போகலாமா?" என்றான்.


தான் கேட்டதற்கு பேச்சை மாற்றிய அவன் எண்ணம் புரிந்தவளாய்.


"என்னாச்சு? எதுக்கு அவளை பத்தின பேச்செடுத்தா கதையை மாத்துறாரு?." என நினைத்தாலும் அதை அவனிடம் கேட்கவில்லை.


கீழே தெய்வானை உற்பட மொத்த குடும்பமும் தயாராகி நிற்பதை கண்டள்,

" நீங்களும் வரீங்களாக்கா?" என்றார் ஆச்சரியமாய்.


"ஏன் நான் வரக்கூடாதா? எனக்கும் நெருங்கின பழக்கம் தான். என்னையும் கூப்பிட்டிருக்காங்க." என்றாள் விதண்டாவாதமாக


"பேசினது போதும்.. நேரமாச்சு..." விஜயா அவசர படுத்தினார்.


சின்னாவை ஒற்றை கையில் தாங்கி, மற்றைய கை வளைவில் மைலியை அழைத்துக்கொண்டு மண்டபத்தினுள் நுழையும் போதுதான் மேடையிலிருந்த செல்வத்தை கண்டாள் மைலி.


"எஅண்ணாவுக்காங்க கல்யாணம்? இதை ஏங்க மறைச்சீங்க?


லூசுங்க நீங்க.... அண்ணாவுக்கு கல்யாணம்ன்னா சந்தோஷம் தான்ங்களே. இதைப்போய் மறைச்சிருக்கிங்க." என்று கடிந்தவள்,



முன்வரிசையில காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ!" என்ற ஐயரின் வழமை மாறாத மத்திரத்தில்,


முகத்தினில் திரையிட்டு, தோழிகள் புடை சூழ, அழைத்து வந்து மாப்பிள்ளை அருகில் அமர்த்திய பெண்ணின் முகத்தை காணமுடியாத ஏக்கத்தில், உதடு பிதுக்கி ஸ்ரீயை பார்த்தவள்,


"பொண்ணை நீங்க பாத்திருக்கீங்களா? அண்ணாவுக்கு ஏத்தாப்போல அழகா இருப்பாளா?" என ஸ்ரீயை குடைந்தெடுத்தவள், ஏனோ மேடையில் நின்று கன்னியா தானம் செய்தவர்களை கவனிக்கவில்லை.


பெண் திரை எப்போது விலகும்.... பெண்ணை எப்போது பார்ப்போம் என்றதிலேயே தன் கவனத்தை னவத்திருந்தாள்.


சடங்குகள் முடிந்து, கெட்டி மேளம்.... கெட்டி மேளம்.... என ஐய்யர் சொல்லுக்கு,
மேள தாளம் வாத்திய கருவிகள் முழங்க. தாலி கட்டும் நேரம், விலக்கப்பட்ட திரையில் பெண் இடத்தில் அமர்ந்திருப்பவளை கண்ட மைலியின் உதடுகள்,


"தேனு....". என ஆச்சரியத்தில் விரிந்தது.


இத்தருணத்திற்காய் மனைவியின் முகத்தினையே பார்த்திருந்தவன் உதடுகளும் விழிகளும் புன்னகையால் மலர.


ஸ்ரீயை திரும்பி பார்த்தவள்,
"இதுக்குத் தான் அந்த சீன்னா..?" என்றாள் ஸ்ரீயை முறைத்து.


"வீட்டுக்கு வாங்க.. வைச்சுக்கிறேன்." என்றுவிட்டு, மேடைக்கு பார்வையை திருப்பியவள், மீதி சடங்குகள் முடியும் வரை பொறுமை காத்திருந்தாள்.


சடங்குகள் எல்லாம் முடிந்து, படப்புடிப்பு ஆரம்பித்ததும்.


"வாங்க நாம தேனுகிட்ட போகலாம்." என்க.


"ரொம்ப நேரம் அவளை முழுங்குற போல பாத்திட்டிருக்கிற.. யாராச்சும் பார்த்தா.. பொறாமையினால முறைக்கிறதா நினைச்சுக்ம போறாங்க." என்றவாறு சின்னாவை தூக்கிக்கொண்டு மேடையை நோக்கி நடந்தவன் முன்னால் ஓடியவளை.


"தாரை! அவசரமில்ல மெதுவா போடி! ஏதாச்சும் தடுக்கிட போகுது." என எச்சரிப்பதை கூட கவனியாது தேனு என ஓடிச் சென்றவள்,
மணமேடை என்பதை மறந்து அவளை கட்டிக்கொள்ள.


ஏற்கனவே முகம் மறைத்திருந்த திரை துவாரத்தின் ஊடாக முன் வரிசையில் அமர்ந்திருந்த மைலியையே பார்த்திருந்த தேனுவும், மைலியை கட்டிக்கொண்டு.


"மைலி எப்பிடி இருக்க?" என்றவள், நினைவு வந்தவளைபோல்.
மைலியை தன்னிடமிருந்து தள்ளி விட்டு, அவள் தோள்களில் ஒரு அடி வைத்தவள்.


"ஏன்டி எரும! இந்த மாதிரி பண்ண? எல்லாரும் எப்பிடி துடிச்சு போயிட்டாங்க தெரியுமா?"
என்றாள் காரமாக.


"ஆமா ஆமா... எல்லாரும் அப்புடி துடிச்சு போயிட்டோம் தெரியுமா தாரை?


பாவம் தேனு தான், அத்தைக்கு ஆறுதல் சொல்ல வறேன் என்கிற பெயர்ல இவங்களும்.


என் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வறேன் என்கிற பெயரில என் உயிர்த்தோழனும் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து,


கடைசியில இவங்க ரெண்டு பேருக்கும் நம்ம ஆறுதல் சொல்ல வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திட்டாங்க தாரை!" என்றான் சோகமாக முகத்தை வைத்திருப்பது போல் அவர்களை கேலி செய்து.


"ஏதோ.. எங்கள காரணம் காட்டி இதுங்க செட்டிலாகிடிச்சுதுங்க... அது வரைக்கும் சந்தேஷம்.


இல்லன்னா.. என் நண்பனுக்கு எங்க கல்யாணம் என்கிற ஒன்னு நடந்திட போகுது." என மைலிக்கு அவர்கள் காதல் கதையினை சுருக்கமாக சொன்னவன்,


"தாரை இவன் என் நண்பனா கிடைக்க நான் ஏதோ பிறப்பில நல்லது செய்திருக்கேன் தாரை!


நீ கிடைச்சு என்கூட சேரும் வரைக்கும் தன்னோட கல்யாணத்தை தள்ளி போட்டிட்டிருந்தான்.


போன மாதம் தேனுவோட படிப்பு முடிஞ்சது. அடுத்த மாதமே கல்யாணத்த தள்ளி போடாமல் வாசன் அங்கிள் ஏற்பாடும் பண்ணிட்டாரு." என்க.


தனக்கு கிடைத்த அத்தனை உறவின் அன்பில் நனைந்த மைலியின்
கண்கள் கலங்க.


"நான் வீட்டை விட்டு போன இந்த முனு வருஷமும், உங்க எல்லாரோட அன்பையும் புரிஞ்சுக்க முடியாத பைத்திய காரியாட்டம் இருந்திருக்கேன்." என கண்கள் அழதொடங்கியவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்த ஸ்ரீ.


"போதும்டி!
ஒரு தடவை தெரியாம செய்த தவறுக்கு எத்தனை தடவை தான் அழுவ?


இது கல்யாண வீடு தாரை! உன் உயிர் தோழியோட வாழ்க்கையை தொடங்குற நாள்.


இப்படி இத்தனை பேரு முன்னாடி அழுதுட்டிருந்தா.. நல்லாவா இருக்கு?"


என்றவன் நெஞ்சிலிருந்து எழுந்தவள்.

தேனுவை தழுவி அவள் கன்னத்தில் முத்தம் வைத்து,


"வாழ்த்துக்கள்டி...
அண்ணாவை பத்திரமா பாத்துக்கோ!." என்க.


"அடி பாவி! என்னை பத்திரமா பாக்க சொல்லி அண்ணா கிட்ட சொல்லுவேன்னு பார்த்தா.. அவரை நான் பத்திரமா பாத்துக்கணும் என்கிற."


"அண்ணா ரொம்ப நல்லவர்டி! அவரால உனக்கு எதுவும் ஆகாது...
ஆனா நீ ஒரு ராட்ஷசி! உன்னால அவருக்கு எதுவும் ஆகிடக்கூடாதுல்ல. அதுக்குத்தான்" என்றாள்.


அவளை செல்லமாக தேனு முறைக்க.


"நான் சும்மா சொன்னேன் செல்லம்.


நீ தான் நல்ல பொண்ணுன்னு உலகத்துக்கே தெரியுமே!" என்று பேச்சினை மாற்றியவள் செயலில்,
அங்கு நின்றவர்கள் காதில் விழுந்து அனைவரும் சிரிக்க.


தம் வேலையில் சரியாக இருந்த படப்பிடிப்பு குழுவினர்.


'போட்டோ எடுத்திடலாமா? இவங்க மொத்த குடும்பத்தையும் கூப்பிடுங்க எடுத்திடலாம்." என்றதும்.


மொத்த குடும்பமும் மேடை ஏற. தெய்வானை மட்டும் ஒதுங்கி நிற்பதை கண்ட ஜனா,


" அக்கா... என்ன நீங்க மட்டும் ஒதுங்கி நிக்கிறீங்க? வாங்க நம்ம எல்லாம் ஒரே குடும்பம் தான்." என அவளயைும் தம்மோடு இழுத்து, மேடையில் போட, அங்ஙு கூட்டத்தை கண்டு விழி பிதுங்கிப் போயினர் குழுவினர்,


"நீங்க எல்லாருமே ஒரு குடும்பமா? கேமராக்குள்ள அடங்காது போலயே!"


"கண்ணு வைக்காதிங்க சார்! இன்னும் எவ்ளோ பிளான் இருக்கு. இதுக்கே வாய பிளந்தா எப்பிடி?" என கூறிய செல்வம்.


இல்லையா மச்சான! இன்னும் நம்ம குடும்பத்தை விரிவு பண்ணுறது தானே நம்ம நோக்கம்." என கேட்டதும் தான் மண்டபமே சிரிப்பொழியில் மிதந்தது.


இனி அவர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!.


சுபம்.
 

Smiley

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 28, 2022
Messages
14
அருமை அருமை அருமையான கதை...காதல் எப்டி இருப்பவனையும் மாத்திடும்.....செம டிவிஸ்ட் நம்ம செல்வத்துக்கு தேனு சூப்பர் 😅😅..ஆறுதல் சொல்ல வந்து ரெண்டு பேர்க்கும் காதலாச்சி ..Nice story sagi.nalla family story..waiting for ur next story.வாழ்த்துக்கள்
 
Top