• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

7. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
7. அம்புத நல்லாள்

அம்புத்ராவைப் பார்த்த மகிழ்ச்சியில் பிரதியுமன் முன்னே சென்று கொண்டிருக்க இங்கே மைத்ரேயன் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.. இந்த ஒரு மாத காலத்தில் விக்ரமன் தனக்கிட்ட பணியான அம்புத்ராவின் நேர்காணலை முடித்து விட்டு இருந்தான்.. அதில் இவனின் குறும்புத்தனத்தால் அவளிடம் நற்பெயரை பெற்று அவளுடன் நட்பாக பழகிக் கொண்டு இருந்தான்.. அவள் செல்லும் இடங்களுக்கு அவள் பின்னோடு சென்று செய்திகளை சேகரித்தான்.. அதில் அவர்களின் நட்பு பலமாகி கொண்டு இருந்தது.. அம்புத்ரா பொறுத்த வரை மைத்ரேயன் பிரதியுமனின் நெருங்கிய சொந்தம் அதுமட்டுமின்றி அவள் அப்பாவிடம் நற்பெயரை வாங்கி இருந்தான்.. பிரதியுமனை தன் வழிக்கு கொண்டு வர மைத்ரேயனின் சகாயம் மிக அவசியமாக இருந்தது.. முதலில் சுயநலமின்றி அவனுடன் நட்பாக பழக ஆரம்பித்தவள் விக்ரமன் பிரதியின் குடும்பத்தை பற்றி சொல்லவும் அப்பொழுதே மைத்ரேயனை எப்படியாவது தன் திட்டத்திற்கு உதவி செய்ய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்..

மைத்ரேயனோ செல்லும் அவனிடம் அம்புத்ராவை பற்றிய உண்மையை சொல்லி தன் மாமி பார்த்திருக்கும் அப்பெண்ணையே திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்ல வைக்க வேண்டும்.. அவளை பார்த்த மகிழ்ச்சியில் தலைக்கால் புரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறான் உண்மையை தெரிந்து கொண்டால் அவள் இருக்கும் திசைப் பக்கம் கூட தலை வைத்துப் படுக்க மாட்டான் என்று யோசித்தவன் ஓர் அடி முன்னே எடுத்து வைக்க அவனை தடுத்தது பெண் குரல் அது "மைத்ரேயன் ஒரு நிமிஷம்" என்றது.. அக்குரல் அம்புத்ரா என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது இல்லை..

அவள் குரலைக் கேட்டு திரும்பியவன் எதுவும் பேசாமல் என்ன என்பது போல் அவள் முகத்தை நோக்கினான்..

"நீங்க என்ன கேட்க நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும்.. அதுக்கான பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்"

அதில் கோபம் கொண்டவன் "என்ன சொல்ல போற அம்புத்ரா என்ன சொல்ல போற? இத்தனை நாளா என்கிட்ட பொய்யா தானே நட்புன்னு பழகி இருக்க? உனக்கு பிரதி பற்றி என்ன தெரியும்? இல்லை தெரியாம தான் கேட்குறேன் உனக்கு அவன எப்படி தெரியும்?என்னவோ ரொம்ப நாள் பழகின மாதிரி நடு ரோட்டல கட்டிப் பிடிச்சிட்டு நிக்கற? அவனுக்கு தான் அறிவில்லை உனக்குமா இல்லை? அவனுக்கு வேற பொண்ணு கூடக் கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க.. இத்தனை மாசமா அவன் உன்னை தான் தேடி அலைஞ்சான் எனக்கு முன்னவே தெரிஞ்சி இருந்தா அப்பவே இதுக்கு ஒரு புல் ஸ்டாப் வச்சி இருப்பேன்.. அவன் வாழ்க்கையில இப்படி விளையாடாம இப்பவே இங்க இருந்து போ.. அவன் நிம்மதியா அவன் அம்மா பார்த்த பொண்ணோட சந்தோஷமா வாழ்க்கைய தொடங்குவான்"என்று செல்பவனை தடுத்தாள் அவள்.

"என்ன விட்டா ரொம்ப பேசுறீங்க? நான் உன்கிட்ட பொய்யா நட்புன்னு பழகினேனா? பிரதியுமனைப் பற்றி கண்டிப்பா உன்னை விட எனக்கு தெரியாது அதை ஒத்துக்கிறேன்.. ஆனா அவன் வாழ்க்கை முழுக்க இப்படியே பழசையே நினைச்சிட்டு போலீஸ்க்கு பயந்து வாழணுமா? அப்பறம் எனக்கு அவர கொஞ்ச மாசம் முன்னாடி தெரியும்.. இத்தனை மாசமா என் வேலையை பார்த்தத விட இவர தேடினது தான் அதிகம்.. முதல்ல இவர பார்த்து நன்றி சொல்ல தான் தேடினேன் ஆனா எப்ப என் அப்பா இவர் போட்டோவ காமிச்சு இவர்தான் எனக்கு பார்த்த மாப்பிள்ளைனு சொன்ன போது தான் எனக்கே புரிஞ்சுது நான் அவரை எவ்வளவு விரும்பறேன்னு.." என்றதும்

அவன் பார்த்த பார்வையே சொல்லியது அவன் அவள் சொல்வதை நம்பவில்லை என்று" நான் சொல்றது உண்மை தான்.. வேணும்னா உங்க கையில இருக்க பிரிண்ட்ட சேர்த்து வச்சி பாருங்க உங்களுக்கே புரியும்.. பிரதிக்கு உங்க மாமி பார்த்த பொண்ணும் நான் தான் அவர் தேடின பொண்ணும் நான் தான்" என்றவளை ஒருமுறை முறைத்து விட்டு அவள் சொன்னபடி இவளைப் பார்த்த சந்தோஷத்தில் அவன் தவற விட்டு போன மீதியையும் ஒன்று சேர்த்து பார்த்தவன் அதிர்ந்து போனான்.. ஏனெனில் அவள் சொன்னதும் அத்தனையும் உண்மை தானா? எப்படி மாமி இவனுக்கு போலீஸ் என்றால் பயம் என்று தெரிந்தும் இவளை இவனுக்காக பார்க்க முடிந்தது? இவனுக்கு தான் இவளை பற்றிய உண்மை தெரியாது? ஆனால் அவர்களுக்கு? என்ன எண்ணம் கொண்டு இவளை திருமண செய்ய பேசி இருக்கிறார்கள்? அவனை பொறுத்த வரை அந்த பெண்ணும் அவன் தேடிய பெண்ணும் வேறு வேறு என்றல்லவா நினைத்து கொண்டு இருக்கிறான்? இப்பொழுது உண்மை தெரிந்தால்? அவனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? இதெல்லாம் சரி வராது பிரதியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்வதே சிறந்தது.. அவனிடம் பொய்யுரைக்க என்னால் இயலாது'என்று யோசித்தவன் நடக்க எத்தனிக்க

"இன்னும் என்ன மைத்ரேயன்? பிரதியோட மனநிலையை மாற்ற எனக்கு உதவி செய்வீங்க தானே?" என்றவளை,
முறைத்தவன்

"லீசன் அம்புத்ரா இதுவரை பிரதி கிட்ட நான் பொய் சொன்னதே இல்லை.. என்னால அவன்கிட்ட பொய்யா நடிக்க முடியாது.. நான் போய் உண்மைய சொல்ல தான் போறேன்.. அதுக்கு அப்புறம் நடக்கறது நடக்கட்டும்" என கூறி விட்டு செல்பவனை" உங்க கசின் நல்லா இருக்கும்ன்னு எண்ணமே இல்லையா?"

"என்ன பேசுற அம்புத்ரா நீ? அவன் நல்லா இருக்கும்னு தான் உண்மைய சொல்ல போறேன்.. நீ இந்த சிட்டிக்கு அசிஸ்டெண்ட் கமிஷனரா இருக்கலாம் உன்னோட மிரட்டல் உருட்டல் எல்லாம் ரவுடிங்க கிட்ட தான் என்கிட்ட வேண்டாம்.. இவ்வளவு நேரம் உன்னோட நண்பனா பேசிட்டு இருந்தேன்.. ஆனா இனி நமக்குள்ள இருந்த நட்பு முடிஞ்சி போச்சி.. அவன் வாழ்கையை விட்டு விலகி போயிடு"

" நான் இப்ப அசிஸ்டெண்ட் கமிஷனரா பேசல மைத்ரேயன்.. ஒரு சராசரி பொண்ணா என் வாழ்க்கையை வாழ உங்ககிட்ட உதவி கேட்டு நிக்கிறேன்.. நீங்க போய் நான் போலீஸ்ன்னு பிரதி கிட்ட சொன்னா என்ன நடக்கும்? அவர் பயம் போயிடுமா? எப்பவோ நடந்த ஒரு கெட்ட விஷயத்தை மறக்க வைக்கனும் அது தான் நல்ல நட்பு.. எனக்கு தெரியும் நீங்க அவருக்கு கசின் மட்டும் இல்ல சின்ன வயசுல இருந்து ஒரு நல்ல நண்பனும் கூட.. இதுவரை நல்லது கெட்டது பார்த்து பார்த்து செய்து இருக்கீங்க ஆனா அந்த பயத்தைப் போக்க மட்டும் நினைக்கல ஏன்? அதுக்கான ஒரு அடி கூட நீங்க எடுத்து வைக்கல அது தான் நிஜம்.. இதை நீங்க யோசிச்சி பார்த்தா உங்களுக்கே புரியும்.. இனி முடிவு உங்க கையில தான் இருக்கு.. நான் அவரை பார்க்க போறேன்.. உண்மைய சொல்லனுமா வேண்டாமானு நீங்க முடிவு பண்ணிக்கோங்க"என்று அவள் சென்றுவிட்டாள்.

'என்ன சொல்லி விட்டு போகிறாள் இவள்? அவள் சொல்வது உண்மைதானா? நான் பார்த்து பார்த்து அவனுக்காக எவ்வளவோ செய்தேன்.. ஆனால் இந்த பயத்தைப் போக்க நான் என்ன செய்தேன்? அவன் பயம் கொள்ளும் போதேல்லாம் நான் அவனை ஆறுதல் சொல்ல அணைத்தேனே தவிர அதனை எதிர்கொள்ள சொல்லவில்லையே? இது என் தவறு தானே? இனியும் அவன் இப்படியே இருக்க வேண்டுமா? இதனால் தானே தொலைக்காட்சி பார்ப்பதை கூட தவிர்த்தான்..எத்தனை இரவுகளை பயத்தினால் தூங்காமல் கழித்தான்.. இது தேவையா? வேண்டாம் வேண்டாம் அவன் மற்ற பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வது போல் இதையும் எதிர்கொள்ள செய்ய வேண்டும்.. அதற்காக என்னால் அவனிடம் பொய்யுரைக்க முடியுமா? வேலை நேரத்திலும் ஏன் என் தாய் தந்தையிடம் கூட பொய்யுரைத்து இருக்கிறேன்.. ஆனால் இவனிடம்.. அது கடினம் தானே? இரு தலை கொள்ளி எறும்பாய் இருக்கிறதே என் நிலைமை..அவனின் மற்றொரு மனமோ

"டேய் இத்தனை வருடம் இப்படியே இருந்த இனியாவது அவளுக்கு உதவி செய் அவன் மனசு மாறும்ல்ல.. மரியாதையா போ அங்க என்ன நடக்குதுன்னு பாரு.. அவள் போக்கிற்கு விடு.. பழைய எண்ணத்தை விட்டுவிட்டு வெளியே வரட்டும்' இவ்வாறு தனக்குள் ஒரு போரையே நடத்தி முடித்தவன் ஒரு முடிவெடுத்தவனாய் தன் இல்லம் நோக்கி சென்றான்..

உள்ளே.. இவன் வந்ததை கூட கவனிக்காமல் பார்வையால் ஒருவரை ஒருவர் விழுங்கும் அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.. அதை பார்த்த அவனோ' என்னடா இதுங்க இரண்டு இதுவரை எதுவுமே பேசல போல இருக்கே..இப்படியே பார்த்துக்கிட்டே இருந்தா எப்ப பேசுவாங்க?' (உனக்கும் லவ் வந்தா தானே தெரியும்) என யோசித்தவன் பத்து நிமிடமாக காத்திருந்தான் ஆனால் அவர்களின் செயலில் எந்த முன்னேற்றமும் இல்லை.. பொறுத்திருந்து பார்த்தவன் அருகில் இருந்த பூ ஜாடியை கீழே போட்டுடைத்தான் அதில் கவனம் சிதறி திரும்பியவர்களின் முகத்தில் தான் எவ்வளவு அசட்டு சிரிப்பு..

சூழ்நிலையை சீராக்க எண்ணிய பிரதியுமன் "ஹே மைத்து வா வா.. இது அம்புத்ரா நான் தேடிட்டு இருந்தேனே அவ தான்.. இத்தனை நாள் தேடலுக்கு இன்னைக்கு தான் பலன் கிடைச்சது"

சலித்து கொண்டவனாய் "தெரியும் தெரியும்.. இவங்கள நல்லாவே தெரியும்" என்பதில் மட்டும் சற்று அழுத்தம்.

இதை கேட்டு அவர்களை இருவரையும் பார்த்தவன்" ஓ ரியலி உனக்கு இவன ஏற்கனவே தெரியுமா அம்புத்ரா?"என்று அவன் கேட்ட கேள்வியில் அவள் என்னவென்று சொல்வாள்? திரு திருவென்று முழித்தாள்..

இவளின் கண்களை கண்டவனது கண்கள் கூர்மையான ஊசி போல் அவளது கண்களை துளைத்தது.. கண்டிப்பாக உண்மையை சொல்ல முடியாது இவனுக்கு என்ன சொல்லி சமாளிக்க என்று யோசித்து கொண்டு இருந்த நேரம் "இவங்க என்கூட தான் வேலை செய்றாங்க பிரதி" என்ற மைத்ரேயனின் குரலில் அவனுக்கு ஆச்சரியமும் அவளுக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

"ஓ நைஸ்.. இத்தனை நாளா நீ ஏன் சொல்லவே இல்ல?"

"ஏது? டேய் மஷ்ரூம் தலையா நீ தேடுற பொண்ணோட பெயர் கூட தெரியாம தேடு தேடுன்னு தேடுன.. இதுல ஒரு போட்டோ கூட இல்லை இதுல இவ தான்னு நான் என்ன வெத்தலைல மை போட்டா பார்க்க முடியும்.. மவனே டென்ஷன் பண்ண அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. எனக்கே அம்புத்ரா சொன்னது எல்லாம் புதுசா இருக்கு" என்று அவளை நோக்கியவன் தான் அவளோடு இருப்பதாய் தன் நெஞ்சின் ஓரம் கைவைத்து அவனின் சம்மதத்தை தெரிவித்தான்.

இதை கவனித்த பிரதியோ" இங்க என்ன நடக்குது மைத்து? என்கிட்ட இருந்து எதையாவது மறைகிறீங்களா? என்றதும் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்..

உண்மைகளை அறிவானா பிரதியுமன்? என்ன செய்வார்கள் இருவரும்?
 
Top