• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

7. திவ்யதுர்ஷி- நம் காதல் கைகூடுமோ.?

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
நம் காதல் கைகூடுமோ???

"கீதா…. கீதா….." என்ற குரலுக்கு கேட்டது கொலுசொலிச் சத்தம்… ஆம் காலினால் மட்டுமே ஒலி எழுப்ப முடியும் பாவையவளால்….

"என்னடா? எதுக்கு ஓடி வர்ற?? மெதுவாக வந்திருக்கலாமே" என்ற கேட்ட தனது தமையன் வீரவர்மனின் முகத்தை பார்த்து புன்னகை புரிந்தாள் கீதா எனும் கீதாஞ்சலி….

" அக்கா எப்போ அண்ணா நீ கூப்பிட்டா நடந்து வந்திருக்கு…. காத்துல பறந்துதானே வருவா" என்றவாறு கவிதா எனும் வந்தாள் கவிதாஞ்சலி…

அவளை பார்த்து முறைத்தாள் கீதா..
" நீ பார்த்தா பயந்திடுவனா போடி" என்றாள் கவிதா.

"கவி அக்காவை டி போட்டு பேசக்கூடாதுனு சொல்லிருக்கன் தானே"

" மன்னிச்சிடுங்க அண்ணா…. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். "

" பரவாயில்லை அண்ணா நம்ம கவிதானே சொன்னா" என்று தங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டினாள்.. இருவரது பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்தான் வீரா…

வாங்க இவங்க யாரு என்னனு பார்க்கலாம்………

நெற்கள் பொன்னைப் போல விளையும்…. அருவியோ ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்… பறவைகள் மனம் திறந்து பாடும்…. மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்….ஊர் சிறப்பாக இருக்க அருள் புரியும் மாரியம்மன்… இவ்வாறு சிறப்புக்கள் மிக்க ஊரே பொன்னூர்..

இந்த ஊரில நல்லது கெட்டது நடந்தா முதல் ஆளாக வந்து நிற்கும் குடும்பம் தான் வர்மன் குடும்பம்.. அருள்வர்மன் ஊரிலுள்ள அனைவரையும் தன் குடும்பத்தினராய் நினைப்பவர்…. இவர் மனைவி அன்புச்செல்வி பெயருக்கு ஏற்றாற்போல் அன்பானவர்…. கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர்.. அதனால்தான் கணவன் மாரடைப்பால் இறக்க அவரைத் தொடர்ந்து இவரும் அவர் பின்னே சென்றார்…

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பிள்ளை வீரவர்மன்… என்ஜினீயரிங் படித்து விட்டு தனியாக கம்பனி ஆரம்பிப்பதற்கு அனுபவம் தேவை என்பதற்காக ஒரு கம்பனியில் வேலை செய்தவன். தாய் தந்தை இறந்ததனால் ஊரிலே இருந்துவிட்டால்.இரண்டாவது பெண் பிள்ளை கீதாஞ்சலி… மூன்றாவதும் பெண் பிள்ளை கவிதாஞ்சலி..காலேஜ் முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள்… தாய் தந்தை இறந்த பின்னர் இவர்களுக்கு தாயும் தந்தையுமானவன்…

சரி வாங்க கதைக்குள் செல்லலாம்…..


"அண்ணா எப்போ எங்களுக்கு அண்ணிய அறிமுகப்படுத்தப் போற?" என கீதா கேட்டாள்..

"ஏன் அண்ணிய கேக்கறீங்க? அண்ணா வேணாமா?"

"அண்ணாவும் வேணும் அண்ணியும் வேணும். அப்படித்தானே கவி"

"ஆமா அக்கா.. அண்ணா உங்களுக்கு ஏதும் குறை வச்சிட்டனடா… ஏன் திடீர்னு இப்பிடி கேக்கறீங்க? "

" ஐயோ அண்ணா.. என்ன வார்த்தை சொல்லிட்டீங்க.. நீங்க எங்களுக்கு ஒரு குறையும் வைக்கல அண்ணா.. "என கவிதா கூற அதை ஆமோதித்தாள் கீதா.

" அண்ணி எதுக்குடா அதுதான் நான் இருக்கிறனே உங்களுக்கு.. முதல்ல நம்ம கீதாவுக்கு கல்யாணம் பண்ணிடலாம்…அப்புறம் நம்ம கவிக்கு… " கல்யாணம் என்றதும் கீதா முகம் வாடியது..

" எனக்கு கல்யாணம் வேண்டாம் அண்ணா" என்றாள் கீதா..

" ஏன்டா?"

"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்பிடி சொல்லலாம்?? "

" கீதா அதைப்பற்றி நீ கவலைப்படாத.. சரியா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை.. "

" அண்ணா அப்போ சீக்கிரமா நம்ம வீட்ல ஒரு விசேஷம் நடக்க போகுதுனு சொல்றீங்க"

" ஆமாடா.. சரி நேரமாச்சு போய் தூங்குங்க. "

இருவரும் தமது அறைக்கு சென்றனர்.. வீராவும் தனது அறைக்குச் சென்றவன்… தனது வாழ்க்கையில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

" சனா… "

" சொல்லு வீர்"

" என்ன விட்டுட்டு போயிடமாட்டீங்களே"

" ஏன் சனா இப்பிடி கேக்கிற? "

"இல்லை வீர்.. நீங்க கிராமத்து ஆளு… நான் சிட்டில இருக்கிற.. நாளைக்கு நம்ம லவ் பண்ற விசயம் எங்க வீட்ல தெரிஞ்சா பிரச்சனை வரும்… அப்போ என்ன விட்டுட்டு போயிட மாட்டீங்களே"

" என்ன பிரச்சினை வந்தாலும் உன்ன விட்டுட மாட்டேன் சனா… "

"வீர் நான் உங்கள ஏன் தெரியுமா நேசிக்கிறன்"

" ஏன்? "

"எனக்கு கிராமம்னா பிடிக்கும்… சின்ன வயசுல தாத்தா பாட்டிகூடதான் இருந்தன்… அவங்க இறந்த பிறகுதான் இங்கயே வந்தன்… அதுமட்டுமல்ல நான் ஒரே பொண்ணு அதனால நிறைய பேரு இருக்கிற குடும்பம் பிடிக்கும்… உங்களோட குடும்பத்தில நானும் ஒருத்தியாக இருக்க ஆசை… அதுதான் உங்கள லவ் பண்ண முதல் காரணம்… "

" அப்போ என்ன பிடிக்காதா? "

" உங்களை பிடிக்காமலா வீர்.. உங்களாலதானே இவங்க எனக்கு கிடைக்கப்போறாங்க"

" லவ் யூ சனா"

" லவ் யூ சோ மச் வீர்…"

" சனா உங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்காட்டி என்ன பண்ணுவ? "

" உன் கூடவே வந்திருவன் வீர்…ஆனால் நீ இல்லைன்னா எனக்கு சத்தியமாக பைத்தியம் பிடிச்சிரும் வீர்… "

" ஏய் லூசு ஏன் இப்படி பேசுற. நம்ம கல்யாணம் இரண்டு வீட்டு சம்மதத்தோட பெரிசா நடக்கும்.. "

" ம்… "

" சரி நேரமாச்சு நீ வீட்டுக்குப் போ"

" முடியாது"

" ஏன் சனா?"

" என்னவோ தெரியல்லை உங்கள விட்டுட்டு போகவே மனசில்லை வீர்.. ஒரு மாதிரி இருக்கு"

" இங்க பாரு எதையும் நினைச்சி பயப்படாத.. என்ன நடந்தாலும் நீதான் என்னோட மனைவி " என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

" சரி வீர் நான் போயிட்டு வர்றன்"

சனாவை சந்தித்து விட்டு வந்த வீராவுக்கு தாய் தந்தை இறந்த செய்தி வர ஊருக்கு வந்தவன் அங்கேயே தங்கிவிட்டான்…

திடீரென ஒரு நாள் அவனுக்கு ஒரு கல்யாண பத்திரிகை வந்தது.. அதில் அவனது சனாவிற்கும் இன்னுமொருவருக்கும் கல்யாணம் என்ற செய்தியை தாங்கி நின்றது.. அதைப் பார்த்த வீராவிற்கு சற்று நேரம் எதுவும் புரியவில்லை. பின் சனாவின் எண்ணுக்கு அழைத்தான். முதலில் அழைப்பு போய் கட்டாகியது. பின் மீண்டும் அழைத்தான்..
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
"ஹலோ"

"ஹலோ சனா"

"யாரு நீங்க?"

"சனா நான் வீர்?"

"எந்த வீர்"

"எந்த வீரா உன்னோட வீர் சனா"

"என்னோட வீர்னு யாருமில்லை"

"சனா என்ன சனா பேசுற?? விளையாடாத சனா… நம்ம லவ் பண்ணத மறந்திட்டியா?"

"ஆ… வீர் ஞாபகம் வந்திட்டு..என் கல்யாண பத்திரிகை கிடைச்சிதா? "

"என்ன சனா இப்பிடியெல்லாம் பேசுற? என்ன சனா இதெல்லாம்…என்னை விட்டுட்டு வேற ஒருத்தர எப்பிடி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச…என்னோட சனா அப்பிடி பண்ண மாட்டா… உன்ன யாரு கட்டாயப்படுத்தின சனா.. நான் நாளைக்கே வந்து உன்ன கூட்டிட்டு வர்றன் சனா"

" நிறுத்து… நீ என்ன சொல்ற நான் உன்கூட அந்த பட்டிக்காட்டுக்கு வரணுமா?? வந்து உன் கல்யாணம் ஆகாத ஊமை தங்கச்சிக்கும் வாயாடி தங்கச்சிக்கும் வேலைக்காரியா இருக்கணுமா? "

" சனா" என்று கோபத்தில் கத்தினான்.

" என்ன பற்றி பேசு ஆனால் என் தங்கச்சிங்கள பற்றி பேசாத… என்ன சொன்ன கல்யாணம் ஆகாத என் ஊமை தங்கச்சியா? அவளால பேச முடியாம இருக்கலாம்… ஆனா மத்தவங்க மனச நோகடிக்க மாட்டா… எப்போ என் தங்கச்சிங்கள பற்றி இப்பிடி பேசினயோ நீ எனக்கு வேண்டாம்.." என்று கத்தினான். இரண்டு பக்கமும் சில நிமிடங்கள் அமைதி.. அமைதியைக் கலைத்தான் வீர்..

" சனா என்னதான் நடந்திச்சி ஏன் நீ இப்பிடியெல்லாம் பேசுற? நான் வர்றன் எதுனாலும் நேர்ல பேசிக்கலாம்.. நீ இப்பிடியெல்லாம் பேச மாட்டியே சனா… யாரும் உன்னை இப்பிடி பேச சொல்றாங்க?? "

"நீங்க வரவும் வேண்டாம் பேசவும் வேண்டாம்…இனிமேல் எனக்கு போன் பண்ண வேண்டாம்.. நான் சொல்றத மீறி எனக்கு போன் பண்ணாலோ… இல்லை என்ன பார்க்க வந்தாலோ நான் உயிரோடவே இருக்க மாட்டன்.. இது சத்தியம். "என்றவள் போனை வைத்துவிட்டாள்.. வீராவுக்கு எதுவும் புரியவில்லை… சில நாட்களின் பின் அவனது நண்பர்களிடம் விசாரித்த போது சனாவுக்கு திருமணமான விடயத்தை கூறினர்.. அதைக் கேட்ட வீரா உடைந்து விட்டான்.. தனது தங்கைகளுக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறான்…

நடந்ததை நினைத்துபடி படுத்த வீரா அப்படியே உறங்கி விட்டான்…

காலைக் கதிரவன் தனது கரங்களால் மக்களுக்கு உற்சாகமூட்டியபடி எழுந்து வந்தான்…. காலையிலேயே வீராவை பஞ்சாயத்துக்கென்று அழைக்க தங்கைகளிடம் சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

"அக்கா… நான் போயிட்டு வர்றன்"

"சாப்டு போ" என்று சைகை மொழியில் பேசினாள் கீதா… ஆம் கீதாவினால் பேச முடியாது… பிறவி ஊமை அவள்.. ஆனால் குணத்தில் குணவதி..

"பசி இல்லை அக்கா… நான் போயிட்டு வர்றன்.."

தங்கை சாப்பிடவில்லை என்றதும் கீதாவின் முகம் வாடியது.. அக்காவின் வாடிய முகத்தை பார்த்த கவிதா "சரி சரி நான் சாப்பிட்டுட்டே போறேன்… நீ கவலைப்படாத அக்கா" என்றவுடன்தான் கீதாவின் முகம் மலர்ந்தது. கவிதா தன்னுடனேயே கீதாவையும் சேர்ந்து சாப்பிடக் கூற இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

"சரி அக்கா நான் போயிட்டு வர்றன் நீங்க கவனமாக இருங்க"

"சரிடா" என்று தலையாட்டினாள் கீதா.

கவிதா சென்றவுடன் கீதா தனது அறையை சுத்தம் செய்து விட்டு வீராவின் அறையை சுத்தம் செய்ய சென்றாள். அப்போது அங்கிருந்த மேசையில் ஒரு டைரி இருந்தது. "என்ன டைரி இங்க இருக்கு? அண்ணாவோடதா இருக்குமோ? சரி முதல் பக்கத்தில யாரோட பெயர் இருக்குணு பார்த்திட்டு வச்சிடலாம்" என்று டைரியை எடுத்து முதல் பக்கத்தை எடுத்து பார்த்தவள் அதிர்ச்சியானாள்..

ஆம் முதல் பக்கத்தில் வீர் சனா என்று இதயத்தினுள் எழுதப்பட்டு இருந்தது." "யாரு இந்த சனா? அண்ணா லவ் பண்ணவங்களோ?" பார்க்கலாமா வேண்டாமா" என்று யோசித்தவள் அண்ணாவுக்கு பிடிச்சவங்கள பற்றி தெரிஞ்சிக்கிட்டாதான் அவங்களையே அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்… சரி கவியும் வரட்டும் சேர்ந்து வாசிக்கலாம். என்று அதை எடுத்து தனது அறையில் கொண்டு வைத்தாள்..

பின் வீட்டு வேலைகளை முடித்து விட்டு மதியத்திற்கான உணவினை சமைக்க ஆரம்பித்தாள்.. அப்போது வாசலில் வீராவின் வண்டிச் சத்தம் கேட்டது. உடனே வாசலுக்கு ஓடி வந்தாள்..

"பார்த்து ஓடி வா கீதாமா" என்றான் வீரா"

"ம் "என்று தலையாட்டியவள் வீராவின் பின் நின்றிருந்தவனை கேள்வியாகப் பார்த்தாள்…

" கீதா இது என்னோட நண்பன் நிதன்… doctor…. நிதன் இது என்னோட தங்கச்சி கீதாஞ்சலி… அடுத்தவ கவிதாஞ்சலி schoolku போயிருக்கா"

" சரிடா"

" உள்ள வா நிதன்… கீதா நிதன் தங்கிறதுக்கு ஒரு அறைய தயார்படுத்துமா"

"சரிணா"

"நிதன் நீ வந்து என் அறையில குளிச்சிட்டு சாப்பிட வா… பிறகு உன்னோட அறையில rest எடுத்துக்க "

" சரிடா"

கீதா நிதனுக்காக ஒரு அறையை சுத்தம் செய்து விட்டு முகம் கழுவி விட்டு அவர்கள் சாப்பிட சாப்பாடு எடுத்து வைத்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் வந்தனர். அவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள்..

" வீரா சாப்பாடு சூப்பர் டா"

" கீதாவுக்கு அம்மாவோட கைப்பக்குவம் அப்பிடியே இருக்குடா ரொம்ப நல்லா சமைப்பா"

"உண்மையா இவ்வளவு ருசியாக நான் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுடா"

"சரி இனிமே இங்கதானே இருக்க போற….பிடிச்சதை கேட்டு சாப்பிட்டா"

"சரிடா… ஏன் கீதா நீங்க சாப்பிடல"

" இல்லை "என்று தலையாட்டினாள்.

" என்னடா கீதா எதுவும் பேசாமல் இருக்கிறாங்க? "

" அவளால பேச முடியாது நிதன்"

" வீரா என்னை மன்னிச்சிடு எனக்கு தெரியாது… உங்க மனச காயப்படுத்தி இருந்தா சாரி கீதா"

" டேய் நீ தெரியாம தானே கேட்ட அத விடு முதல்ல சாப்பிடு… கீதா கவி வந்ததும் அவகூட இருந்து சாப்பிடுவா"

இருவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர்.

" கீதா நான் நம்ம தோட்டம் வரைக்கும் போயிட்டு வர்றன்…சரியா "

" சரி அண்ணா"

வீரா சென்றதும் நிதன் தூங்குவதற்கு சென்றான்.. பின் கொஞ்ச நேரம் கழித்து கவிதா வந்தாள்… அவள் குளித்து விட்டு வந்ததும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்…

"கவி ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் வா" என்று கவியை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

"என்ன அக்கா எதுக்காக இப்பிடி இழுத்துட்டு வந்த?" என கவி கேட்க கீதா டைரியை அவளிடம் கொடுத்தாள்.

"அக்கா இது யாரோட டைரி?"

"பாரு"

"என்ன அக்கா வீர் சனானு எழுதிருக்கு. அப்போ அண்ணாவோட டைரியா? "

" ம்.. "

" அப்போ சனா?"

"அண்ணியாக இருக்கலாம்"

"என்ன குழப்புற "

" டைரிய படி"

" ம் "என்ற கவி டைரிய படிக்க ஆரம்பித்தாள்.


சனா… அவள முதல் முறையாக என்னோட வேலை பார்க்கிற இடத்தில்தான் சந்திச்சன்…அவளை பார்த்த அந்த நொடிய என் வாழ்நாளில் மறக்க முடியாது.. மரூன் கலர் சுடிதாரில் தலைமுடியை போனிடெயில் போட்டு முகத்தில் மேக்கப் இல்லாது சிறிய பொட்டு மட்டும் வைத்திருந்தாள். அவளது மூக்கில் மின்னிய மூக்குத்தி என அத்தனை அம்சமாக இருந்தாள்.. பார்த்த நொடி என் மனசுக்குள் வந்திட்டாள்…

இருவரும் முதலில் புன்னகைய பரிமாற அங்கே ஒரு நட்பு மலர்ந்தது… காலப்போக்கில் நல்ல நெருங்கிய நண்பர்களானோம்…. ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை எனக்கு போன் பண்ணி என்ன பார்க்கணும்னு வரச் சொன்னா நானும் ஆவலுடன் அங்கே போனேன்…எனக்கு முன்பே அவள் வந்து காத்திருந்தாள்..

"என்ன சனா நேரத்திற்கு வந்திட்ட?"

"சும்மாதான் வீர்"

"சரி என்ன போன் பண்ணி வரச்சொன்ன?"

"உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்"

"என்ன சனா?"

"அது… அது… வந்து"

"என்ன இப்பிடி தயங்கி தயங்கி பேசுற.. சொல்லு சனா"

"வீர் நான் உங்கள…. உங்கள… ரொம்ப லவ் பண்றன்… லவ் யூ வீர்" என சொன்னவள் முகத்தை மறைத்துக் கொண்டாள். வீராவுக்கு சந்தோசத்தில் பேச்சு வரவில்லை.. அவள் இப்பிடி பட்டென்று போட்டு உடைப்பாள் என்று நினைக்கவில்லை.. அவளுடன் விளையாடி பார்க்க நினைத்த வீர்

" இங்க பாரு சனா… நான் உன்ன லவ் பண்ணலனா என்ன பண்ணுவ? "

அதிர்ச்சியுடன் தனது முகத்தில் இருந்து கைகளை எடுத்த சனாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது…

"வீ.. ர்"

"எனக்கு உன்னை பிடிக்கலனு சொன்னா என்ன பண்ணுவ?"

"செத்துடுவன் வீர்… என்ன பற்றி உனக்கு எல்லாம் தெரியும் ஆனால் என் குடும்பத்தை பற்றி தெரியாது… எனக்கு அம்மா இல்லை… அப்பா ஒரு ஆயாவை என்ன வளர்க்க வேலைக்கு வச்சிருந்தாலும்.... அவருக்கு என் கூட பேச டைமே இருக்காது.. பணம் பணம்னு அத் பின்னாடியே ஓடிட்டு இருந்தாரு… அம்மா இல்லாத எனக்கு அப்பாவோட பாசமும் கிடைக்கல… பாசத்திற்காக ரொம்பவும் ஏங்கி போயிட்டு இருந்தப்போதான் நீங்க என் கூட பழக ஆரம்பிச்சாங்க.. உங்களோட குணம் உங்களோட குடும்பம் இது எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு உங்களோட நானும் சேர்ந்து வாழ ஆசையாக இருக்கு… உங்க கூட இருக்கும் போது ரொம்ப பாதுகாப்பாக இருக்கு… இது என்னோட வாழ்க்கை முழுவதும் வேணும்… அதுதான் இன்னைக்கு என்னோட லவ்வ சொன்னேன். "

" பாரு அக்கா அண்ணி எப்பிடி அவங்களோட லவ்வ சொல்லிருக்காங்க. இத வாசிக்கும் போதே ஒரு மாதிரி இருக்கு…. "

" ம்.. மீதிய வாசி"

" சரி. "

" இங்க பாரு சனா நான் உன்ன முதல் முறையாக பார்த்த போதே நீதான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்… ஆனால் ஒன்னு"

" என்னது வீர்? "

" என்னோட தங்கச்சி கீதாவுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பன்.. உனக்கு okva"

"எனக்கு ஓகேதான் வீர்… கவியோட கல்யாணம் நானும் நீங்களும் சேர்ந்து நின்னு நடத்தணும் சரியா?"

"சரிங்க மேடம்" என்று அவர்களது உரையாடல் தொடர்ந்தது.

"அக்கா அண்ணாவும் அண்ணியும் இவ்வளவு பாசமா இருந்திருக்காங்க ஆனால் ஏன் அண்ணா நம்மகிட்ட இத சொல்லல" என்று கவி கீதாவிடம் கேட்க கீதா மேல படி என்றாள்… அதில் வீர் நினைத்துப்பார்த்த விசயம் எழுதப்பட்டு இருந்தது.

அதன் பிறகு வீரா தாய் தந்தையின் மரணச் செய்தி கேட்டு ஊருக்கு வந்தவன்… அதன் பின்னர் வேலைக்குச் செல்லவில்லை… ஆனால் தினமும் சனாவுடன் பேசிக்கொண்டு இருப்பான்….

ஒருநாள் சனா போன் பண்ணி
" வீர் எங்க வீட்ல அப்பாக்கு நம்மளோட விசயம் தெரிஞ்சிருச்சி… எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடாரு… என்ன பண்றதுன்னு தெரியல "

" பயப்படாத சனா.. உன் கழுத்துல என் கையாலதான் தாலி ஏறும்"

"அந்த நம்பிக்கையிலதான் நான் உயிரோட இருக்கிறன் வீர்…"

"சனா நீ எதுக்கும் கவலைப்படாத சரியா?"

" சரி வீர் "

வீராவுடன் சனா பேசிவிட்டு திரும்ப சனாவின் தந்தை அவள் பேசியதை கேட்டவாறு நின்றிருந்தார்.

" யார்கூட பேசிட்டு இருந்த? "

" வீர் கூட அப்பா"

" நான் தான் அவன்கூட பேசாத… உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறன்னு சொல்லிருக்கன்ல"

" என்னால வீரை தவிர வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க முடியாது.."

"அவன் ஒரு கிராமத்தில இருக்கிறவன்… நம்ம தகுதி என்ன அவன் தகுது என்ன?... அதெல்லாம் சரிவராது.. "

"என்னால முடியாது அப்பா… அவரு நம்மள விட பணத்தில வேணும்னா குறைவானவரா இருக்கலாம்… ஆனால் குணத்தில் அவரு என் மேல வச்சிருக்கிற பாசத்தில உங்கள விட கோடீஸ்வரன்… "

" ஒரே பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்து தப்பா போயிடிச்சி அடுத்த வாரம் உனக்கு என் பிரண்டு பையனோட கல்யாணம்… ரெடியா இரு "

" அந்த கல்யாணம் நடக்காது"

" நடக்கும் "என்றவாறு அவர் அறையினுள் சனாவை வைத்து பூட்டி விட்டு அவளது போனை பறித்து கொண்டு சென்றார். அறைக்குள் அழுதபடி இருந்தாள் சனா….

நான்கு நாட்கள் சென்றும் சனா போன் பண்ணாததால் மிகவும் கவலையடைந்தான் வீர்… அவளது நம்பருக்கு அழைக்க switch offனு வந்தது… அவளது நிலை அறியாது தவித்தான் வீர்… அப்படி இருக்கும் போது அவனுக்கு புது நம்பரில் இருந்து போன் வந்தது… அவ் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ"

"ஹலோ வீர்… நான் சனா பேசுறன்.."

"சனா உனக்கு ஒண்ணுமில்லைதானே… என்னாச்சிடா ஏன் பேசல… நான் ரொம்ப பயந்துட்டன் சனா"

"என்ன அப்பா அறைக்குள்ள பூட்டி வச்சிருக்கிறாரு வீர்… எப்பிடியாவது வந்து என்ன கூட்டிட்டு போங்க… எனக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் நடந்திச்சி உயிரோடவே இருக்க மாட்டன் வீர்"

" சனா பயப்படாத உன்னை நான் வந்து கூட்டிட்டு போறேன் சரியா… அதுவரைக்கும் தப்பான முடிவு எடுக்க கூடாது.. "

" சரி வீர்… உங்க கூட என் ஆயுள் வரைக்கும் வாழணும்னு ஆசைப்படுறன் வீர்… நான் செத்தாலும் உங்க மனைவியா தான் சாகணும் "

" இங்க பாரு சனா நாம கண்டிப்பா சேர்ந்து வாழுவம்… நீ கவலப்படாதடா"

" சரி அவரு வந்திரப்போறாரு நான் போனை வச்சிடுறன்"

" சரி… சனா லவ் யூ "

" லவ் யூ சோ மச் வீர் "

இவ்வாறு சனா வீராவுடன் பேசிய இரண்டு நாட்களின் பின்னரே அவனுக்கு கல்யாண பத்திரிகை வந்தது… அதன் பின்னர் சனா பேசியது எல்லாம் அதில் இருந்தது..

" அக்கா அண்ணாவை தவிர வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொன்ன அண்ணி எப்பிடி அண்ணாகிட்ட அப்பிடி பேசிருப்பாங்க.. எங்கையோ இடிக்குதே…"

"ஆமா கவி… இதை நாம கண்டுபிடிக்கணும்"

"அக்கா அதுக்கு நாம அவங்க வீட்டுக்குப் போகணும்… அண்ணா நமக்காக எவ்ளோ பண்ணிருக்கிறாரு அவருக்காக அண்ணி விசயத்தில நடந்தத கண்டுபிடிக்கணும்"

" சரி கண்டிப்பா பண்ணிடலாம்"

அன்றிரவு வீட்டுக்கு வந்த வீர் நிதனுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

" வீரா.. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்"

" என்ன நிதன்? "

" நான் சொல்லுவன் ஆனால் நீ தப்பா நினைக்க கூடாது.. "

" சொல்லுடா"

" அது வந்து உன் தங்கச்சி கீதாவ எனக்கு பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம?"

"என்னடா திடீர்னு?"

"தெரியல்ல வீரா… அவங்கள பார்த்தும் ரொம்ப பிடிச்சிருச்சி… நீ என்ன நினைப்பயோனு என்னால சொல்லாம இருக்க முடியல்ல வீரா… உங்கிட்ட சொல்லிட்டேன் நீதான் முடிவெடுக்கும்"

" நான் முடிவெடுக்க என்ன இருக்கு கீதா சொன்னா சரிடா.. ஆனால் கீதாவுக்கு பிடிக்கலனா நான் எதுவும் பண்ண முடியாது"

" சரிடா கூப்டு அவகிட்டையே கேக்கலாம்"

" ரொம்ப வேகம்தான் நிதன் நீ… கீதா.. கவி இங்க வாங்க "

" என்ன அண்ணா? "

" கீதா நிதன் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான்… உனக்கு இதில சம்மதமா??"

" அண்ணா நான் என்னோட நிலமை"

" எனக்கு அதெல்லாம் பிரச்சனையே இல்லை கீதா…. உங்களை பார்த்ததும் பிடிச்சிருச்சி அதுதான் வீரா கிட்ட சொன்னேன். "

" அவனுக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லையாம் டா நீ சொல்லு உனக்கு நிதன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? "

" உனக்கும் கவிக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் ok அண்ணா"

"எனக்கு சம்மதம் அண்ணா… " என்றாள் கவி

" எனக்கும் சம்மதம் கீதா… " என்று வீரா கூற கீதா அவனிடம்" உங்க எல்லோருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம் ஆனால் ஒரு கண்டிஷன் "

" என்ன கீதா? "

" நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் நான் கல்யாணம் பண்ணிப்பன்"

" என் வாழ்க்கையில கல்யாணத்திற்கு இடமில்லை கீதா"

"ஏன் அண்ணா… சனா அண்ணி வேற கல்யாணம் பண்ணிட்டாங்களே அதனாலையா?" என கேட்டாள் கவி.

" கவி உங்களுக்கு… "

" எல்லாம் தெரியும்… உங்களோட டைரியை நானும் அக்காவும் பார்த்தம் அண்ணா… உங்களோட அனுமதி இல்லாம படிச்சது தப்புதான் அண்ணா.. ஆனால் உங்களோட வாழ்க்கை எங்களுக்கு முக்கியம் அண்ணா"

" அவளுக்கு கல்யாணம் நடந்திருச்சிமா"

" நீங்க பார்த்தீங்களா அண்ணா? "

" Friends சொன்னாங்க"

" என்ன வீரா இங்க என்ன நடக்குது? "

" அது வந்து நிதன்"

" நான் சொல்றன் மாமா"… என்ற கவி நடந்ததை சொல்லி முடித்தாள்.

" வீரா உன்ன இந்தளவுக்கு நேசிச்ச பொண்ணு வேற ஒருத்தர நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டா டா… ஏதோ தப்பு நடந்திருக்கு"

" இல்ல நிதன் நான் போன் பண்ணப் அப்பிடி பேசினா… பிறகு என் பிரண்ட்ஸ் போன் பண்ணி சொன்னாங்கடா கல்யாணம் நடந்ததை…"

"அப்போ நீ பார்க்கலதானே… நாம பார்க்காம எந்த முடிவுக்கும் வர முடியாதுடா… "

" ஆமா அண்ணா… அண்ணி நிச்சயமா கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க… உன்னோட டைரியை வாசிச்ச எங்களுக்கே அண்ணி மேல நம்பிக்கை இருக்கு… உங்களுக்கு இல்லையா? "

" எனக்கு அவ மேல நம்பிக்கை இல்லையா?? என்னோட உயிரு சனா… அப்பிடி பட்டவ நான் அங்க வந்தா செத்துருவன்னு சொன்னா… அதுக்கப்புறம் நான் எப்பிடி அங்க போவன்?? எனக்கு அவ என்கூட இல்லைனாலும் அவ உயிரோட இருந்தா போதும் "

" வீரா நீ அப்பிடி நினைக்கிற ஆனால் சனா இப்போ உயிரோட இருக்கிறாளானு உனக்கு தெரியுமா? "

" என்ன நிதன் இப்பிடி கேக்கிற… என் சனாக்கு எதுவும் ஆகாது… நிச்சயமா நல்லா இருப்பா"

" உன்கூட கல்யாணம் நடக்கலனா செத்திருவன்னு சொன்னா சனா.. அதை நீ மறந்திட்டியா? "

" நான் மறக்கலடா… "

" எதுவும் பேச வேணா நாளைக்கு காலைல நாம எல்லோரும் சனா வீட்டுக்கு போறம்…. அவ நல்லா சந்தோசமா இருந்தா பேசாம வந்திருவம் சரியா? "

" சரிடா"

பல திருப்பங்களுக்காகவும்… பல கேள்விகளுக்கு விடையளிப்பதற்காகவும் அன்றைய நாள் ஆதவன் உதித்தது…

எல்லோரும் காலை ஒன்பது மணியளவில் சனா வீட்டிற்கு வந்தனர்….

"வீட்டினுள் செல்லும் போது வீராவுக்கு பயமாக இருந்தது… "

அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தனர்… ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தார்… "நீங்க யாரு?"

"நாங்க சனாவை பார்க்க வந்திருக்கிறம்… அவங்க பிரண்ட்ஸ்.. பார்க்கலாமா?"

"உள்ள வாங்க.."

"வீட்ல யாரும் இல்லையா? சனா எங்க? "

" எல்லாரும் முதல்ல நான் சொல்றத கேளுங்க"

" இதில வீர் தம்பி யாரு?"

"நான் தான்"

"ஐயா சனாம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா உங்களையும் உங்களோட குடும்பத்தையும் கொன்னுடுவன்னு சொன்னாரு… உங்க யாருக்கும் எதுவும் நடக்க கூடாதுனு தான் அவங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சி… உங்ககிட்ட அப்பிடி பேசினாங்க…ஆனால் கல்யாணம் நடக்கல"

" என்னம்மா சொல்றீங்க இப்போ சனா எங்க? "

" கல்யாணம் நடக்கிற அன்னைக்கு காலைல சனாம்மா மயங்கி விழுந்திட்டாங்க.. நாங்க hospitalku கூட்டிட்டு போனோம்… அவங்க சாகணும்னு தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டாங்கனு doctor சொன்னாரு… அவங்க treat குடுத்தாங்க… ஆனால் சனாம்மா அவங்க குணமாக விரும்பலை… ஏற்கனவே மன அழுத்தம் அதிகமா இருந்ததாலும் தூக்க மாத்திரை அதிகம் சாப்பிட்டதாலும் அவங்க கோமாக்கு பொயிட்டாங்க… ஐயா சனாம்மாவுக்கு இப்பிடி ஒரு நிலைமைக்கு காரணமாயிட்டமே என்ற தூக்கத்திலேயே கொஞ்ச நாள்ல இறந்திட்டாரு… "

" சனா எங்க இருக்கா? நான் என் சனாவை பார்க்கணும்"

" வாங்க.. வீட்ல வச்சு treatment பண்ணலாம்னு doctor சொன்னாங்க.. இந்த நாலு மாசமா இப்பிடியேதான் இருக்காங்க " என்று வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்…

வாடிய கொடியாக கட்டிலில் படுத்து இருந்தாள்… துள்ளித் திரிந்த கால்கள் ஓய்வாக இருந்தது… கயல்விழிகள் மூடிக்கிடந்தன.. எல்லோரும் அவளை பார்த்து விட்டு வெளியே செல்ல வீரா அவளருகில் அமர்ந்தான்…

அவளது கைகளை தனது கைகளுக்கு இடையில் வைத்து" சனா… உன்னோட வீர் வந்திருக்கன்… என்னை மன்னிச்சிடு சனா… உன்ன முன்னாடியே வந்து பார்க்காம விட்டுட்டன்….என்னால்தான் உனக்கு இந்த நிலமை… சனா உன் வீர்கிட்டையே வந்திடு சனா… உன்னை என் கண்ணுக்குள்ளே வச்சி பார்த்துப்பன்… பிளீஸ் சனா எழுந்திரு… நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்காக காத்திருக்கு எழுந்திரு சனா… என்னை தவிக்க விட்டுடாத சனா பிளீஸ்… "என கதறி அழுதான் வீரா… அவனது கண்களில் இருந்து வந்த கண்ணீர் சனாவின் முகத்தில் விழுந்தது…. அவனது கதறல் அவளது காதில் ஒலித்தது… அவளுக்கு பரீட்சையமான அவனது வாசம்… எல்லாம் சேர்த்து சனாவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.. வீராவின் கைகளில் மெல்ல அழுத்தம் கொடுத்தாள்.. அவளது கையசைவில் நிமிர்ந்து பார்த்தான் வீரா… அவனை பார்க்க முயற்சி செய்தாள் சனா…

"சனா எழுந்திரு சனா… உன் வீர் வந்திருக்கன்" என்றான்.

மெதுவாக கண்களை திறந்து தனது வீரை பார்த்து சிரித்தாள் சனா…. வீரும் மகிழ்வோடு அவளது நெற்றியில் முத்தமிட்டு அவனது சனாவை அணைத்துக் கொண்டான்…சனாவும் மகிழ்வோடு அவனது அணைப்பில் அடங்கிக்கொண்டாள்.

அவர்களது காதல் கைகூடியது…..

❤️❤️ முற்றும் ❤️❤️

உங்கள் அன்புத்தோழி
✒️✒️திவ்யதுர்ஷி. ✒️✒️
 

AMMU ASKA

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 19, 2022
Messages
2
உண்மைக் காதல் என்றுமே தோற்றுப்போவதில்லை❤️
 

Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
132
மிகவும் அருமை மா
வாழ்த்துக்கள்
 

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
அண்ணன் தங்கை பாசம் அழகாக இருந்தது தோழி!
சிறுகதையில் என்பதாலா தெரியவில்லை... express speedல ஓடினா மாதிரி தெரியுது....
💕💕💕💕💕
 

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
அண்ணன் தங்கை பாசம் அழகாக இருந்தது தோழி!
சிறுகதையில் என்பதாலா தெரியவில்லை... express speedல ஓடினா மாதிரி தெரியுது....
💕💕💕💕💕
Thank you akka😍😍
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
சூப்பர் சிஸ் கதை அருமை. உண்மை காதல் தோற்றதில்லை
 
Top