• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
"இங்க எதுக்கு சாரா வந்து இருக்க.. அங்க நடிச்சுட்டு இங்க வந்து டிராமா செய்கிறாயா?" என்ற குரல் வந்த திசையை நோக்கினாள்.

"எக்ஸாக்ட்லி ஒரு பொண்டாட்டிய நான் எதுவும் செய்ய மாட்டேன் மாட்டேன் ஆன இங்க உன்னுடைய அசிஸ்டன்ட் ஆ நான் எது வேண்டுமெனாலும் செய்வேன்" என்றாள் குறும்பு மின்ன...

"இதற்கு முன்பு நீ செய்த அனைத்தும் செய்வேன்..." அவனை வெறுப்பேற்றும் குரலில் அவள் கூறினாள்.

இதுக்கு முன்னாடி நீங்க என்னை என்னவெல்லாம் செய்திர்கள் என்று நினைவு இருக்கிறதா.... அது அனைத்தும் நானும் இனி செய்வதன் நோக்கோடு உன்னை தேடிவந்துவிட்டேன் மை டியர் "சுகர் லிப்ஸ்".

"என்னது சுகர் லிப்ஸ்?" புரியாமல் அர்ஜுன் சாராவை நோக்கினான்.

சாரா அவனை நெருங்கி நின்றவாறு அவனது இதழ்களை சுட்டிக்காட்டி... "இதற்கு நான் வைத்த செல்ல பெயர் என்றாள் மயக்கும் குரலில்.

சாரா சொன்ன மறு நொடி அவளை விட்டு விலகி நின்றான் அர்ஜுன்.

"இந்த செல்ல பெயர் வைத்து கூப்பிடுவதற்கு இனி நீ இங்கு இருந்தால்தானே" என்றான் நக்கலாக.

"இப்போ உன்னுடைய வேலையை காலி செய்கிறேன் பார்...உன்னை இப்போது என்னால் தூக்கி போட முடியும்.."

அவளிடம் இருந்த நகளை எடுத்து காண்பித்தாள்... "நானும் வேலையை விட்டு போகமுடியாது நீங்களும் எனன்னை போக வைக்க முடியாது... "அனைத்தும் தாங்கள் செய்த வேலை என்னவரே" என்று நக்கல் குரலில் அவனை வெறுப்பேற்றினாள்.

அவன் செய்தது அவனுக்கே திருப்பி அடித்தது...

அந்த அகிரிமெண்ட்... அவனாக நினைத்தாலும் அவளை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதாகும்...

ஆரம்பத்தில் அர்ஜுன் செய்த டார்ச்சர் தாங்காமல் வேலையை விட்டு செல்ல இருந்தாள்....சாரா,

அதற்கு அர்ஜுன் அவளிடத்தில் ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டான். அதில் இரண்டு வருடங்கள் அவளாகவோ அல்லது அவனாகவோ எந்த காரணத்தை கொண்டும் வேலையைவிட்டு நீங்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தான்.

...ஒரு :வாரம் தான் முடிந்தது ஆனால் இன்னும் இரண்டு வருடம் பாக்கி இருந்தது. தான் செய்த செயல் திருப்பி அர்ஜுனுக்கு அடிக்கும் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இது மேல் கோபம் வந்து அந்த அகிரேமெண்ட் கிழித்து எறிந்தான்...

அவளோ சளைக்காமல் "என்னிடம் நிறைய காப்பி இருக்கிறது" என்று இன்னோரு நகலை அவனது மெயில்... வாட்சப்.. டெலெக்ராம்... என்று அணைத்து சோசியல் மீடியாவில் அவனுக்கு அனுப்பி வைத்தாய்... கூறி அவனை வெறுப்பேற்றுவதில் குறியாக இருந்தாள் சாரா.

"ரித்திகா..." என்று அர்ஜுன் அழைத்த அழைப்பில் பதறி அடித்து வந்தாள், 24 வயதாகும் அவனின் காரியதரிசி.

"அர்ஜுன் என்னாச்சு எதுக்கு இவ்ளோ சத்தம் போட்டா காது வலிக்குதுடா"என்று அவனை திட்டிகொண்டே அருகில் வந்தாள்.

"என்ன சாரா லீவ் சொல்லாம எங்கே போன எனக்கு பொழுதே போகவில்லை நீ இல்லாமல்" என்றாள் வருத்தமாக.

இவன் அடுப்பில் இருக்கும் கடுப்பு தெரியாமல் சாரா விடம் பேசிக்கொண்டு இருந்தாள் ரித்திகா.

"இந்த பொம்பளையை வெளிய போக சொல்லு ....அர்ஜுன் ஆக்ரோஷமாக கர்ஜித்தான்.

"என்னடா பொம்பளைய!!!" ரித்தி அதிர்ச்சியாக அர்ஜுனை பார்த்தாள்.

"நான்... பேபி தங்கம் சுகர் லிப்ஸ்" என்று கொஞ்சிவிட்டு இப்போ இவ்வாறு அழைப்பது நல்லது இல்லை என்று ஆக்ரோஷத்தில் சாரா அர்ஜுனிற்கு சளைக்காமல் சண்டையை தொடங்கினாள்.

இந்த முறை முறைபது ரித்திகா....

'இதுங்களுகு இதே வேலையா போச்சு',

"அர்ஜுன் என்ன ஆச்சு கேட்டுட்டே சாராவை" ஒரு பார்வை பார்த்தாள்.

எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இருந்தது அவளின் பார்வை.

"அர்ஜுன் என்ன ஆச்சு லவ் பேர்ட்ஸ்க்கு சண்டை இப்போ ஒடைய போறது என் மண்டை...... " அவளின் கோர்வையான வாக்கியத்தை ரசிக்கும் நிலையில் இவர்கள் இல்லை.....

' என்ன இந்த நேரத்துக்கு சிரிச்சி இருக்கணும் அப்போ விசயம் பெரியது போல. என் தலை உருளுது நான் தப்பிக்க வேண்டும்'.

அங்கு ஒரு மாணவன் வந்து

"குட்டி பாப்பா அங்கு ஓடி கொண்டு இருக்கு மேடம் பிடிக்கவே முடியல என்னை கடித்துவிட்டாள்".

'அந்த ராட்சசியை சமாளிக்கவே முடியல அப்படியே அப்பன் புத்தி'.

குழந்தையை திட்டும் நோக்கில் அவளது மணவாளனை திட்டியவாறு.

"அர்ஜூன் நான் அவளைப் பார்க்கிறேன் கிளாஸ் ஸ்டாப் பண்ணிட்டுவா அழுது ஆர்ப்பாட்டம் செய்து .....நான் சென்று துக்கிட்டு வரேன்."

அர்ஜுன் மெல்லிய புன்னகையோடு "அவளுக்கு அனைவரையும் தொந்தரவு செய்வதை விட என்ன வேலை ...." அப்படியே அவளின் தந்தையை போல என்று முணுமுணுத்தான்.

ரித்திகா பின் இரண்டு வயதான தாராவை தூக்கிக் கொண்டு வரவும்.

அர்ஜூனை பார்த்ததும் தாவி கொண்டு அஜு அஜூ கத்திக் கொண்டு அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு ...இடைவிடாது கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள் அந்த ரோஜமோட்டு.

இது அனைதும் ரகசிய கேமரா வழியாக பார்த்துகொண்டு இருந்த ஒருவன்... வஞ்சத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டு இருந்தான்...அர்ஜுன் மீது.

"இப்போ சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தலை போகிற பிரச்சினை" ரித்திகா வினவ.

ரித்திகா கொஞ்சம் பொறுமையாக இரு சொல்லி முடிக்கும் வரை இடையே பேசாதே அர்ஜுன் அவளுக்கு ஆணையிட...

அவளும் பொறுமையாக கவனிக்க தொடங்கினாள்.

"இவளை நான் ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டேன் அதனால் மேடம் என்னை விட்டுவிடு போகிறாள்,

அவளுக்கு விவாகரத்து வேண்டுமாம் நடந்ததில் கொஞ்சம் சேர்த்து சொன்னான்.' உனக்கு மட்டும் தான் சேர்த்துச் சொல்ல தெரியுமா எனக்கும் தெரியும் ' என்பதுப் போல சாராவை பார்த்தான் அர்ஜுன்.

"அடிப்பாவி இது எப்ப நடந்தது

கல்யாணமே பண்ணிட்டாங்களா சொல்லாம கொள்ளாமல் சூப்பர்டா சாரா செம தூள்".

ஆன எதுக்கு விவாகரத்து... இதுங்க எப்போ எனக்கு புரிவது போல பேசாதுங்க ரித்திகா அவளுக்குள் பேசிக்கொள்ள.

ரிதிகா விடம் எப்படி பந்து எரியவெண்டும் என்று அர்ஜுனுக்கு தெரியும்.

தன் பக்கம் அவளை வைத்து கொள்வது அவனுக்கு பலம் என்பது அர்ஜுனுக்கு தெரியும்.

உண்மையை திரித்து அவளிடம் கூறிவிட. அதையும் நம்பினாள்... அப்பாவி ரித்திகா.

சாரா இணைந்த உடன் பிரிந்து செல்ல நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டாள்.

"என்ன சாரா இதெல்லாம்.. இடியட் ஒழுங்கா வாழ பாருங்கஅவளோ இடைவிடாது சாரா வை திட்டிக்கொண்டு ...இருக்க,

'அவன் எது சொன்னாலும் நம்பி என் உயிரை வாங்குகிறாள் இவள் வேறு என்று சாரா ரித்திகா மீது கடுப்பானாள்'.

"குட்டிமா வா நாம போலாம் மாமாவும் மாமியும் சமாதானம் ஆகட்டும்."

குட்டி அவன் கழுத்தை இருக்கமாக கட்டிக்கொண்டு விடவே இல்லை.

ரித்திகா எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை.

சாரா வை முறைத்து பார்க்குது அந்த குட்டி வண்டு. குட்டி கண்களை வைத்து முறைக்க...

அவள் அர்ஜுனிடம் குரலை உயர்த்தவும்.

குட்டி சாராவை ஒரு விரல் நீட்டி "ஏய்ய்ய்ய்ய்...." என்று மிரட்டினாள்.

இவளுக்கு எகிறிவிட்டது கோபம் அந்த குட்டி வண்டு மீது.

என்ன வாழ்க்கை என்று ஆகிவிட்டது நேத்து முளைத்த வண்டு என்னை முறைக்கிறது கொஞ்சியாவாரு சாரா அவளை மிரட்ட...

இவனோட ஜெராக்ஸ் மாதிரியே இருக்கு சாராவின் பார்வைக்கு.

"குட்டி பிசாசு உனக்கு ஒரு நாள் இருக்கு அப்போ ஒரு கை பார்கிறேன் டி" அந்த குழந்தையிடம் குழந்தையாக சண்டைக்கு நின்றாள்.

அர்ஜுனோ " என்ன நீ என் குழந்தையை சத்தம் போட்டு பேசுகிறாய்... தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ".

அவன் சொல்லி முடிப்பதற்குள்

தாராவின் கையிலிருந்த பீடிங் பாட்டில் அவள் கன்னத்தை நன்கு பதம் பார்த்தது.

'என்னதான் இருந்தாலும் நம்மாளுக்கு நம்ம மேல பாசம் ஜாஸ்தி தான்' எனக்கு அடி பட்டுவிட்டது என்று ஓடிவரும் அவனை பார்த்தாள்.

அர்ஜுன் சாராவை நெருங்கிவர சாரவிற்கோ ரெக்கை கட்டி மனது பறக்க...

'என் மேல உனக்கு அவ்வளவு லவ்வா அர்ஜுன்' நினைத்து முடிக்கும் முன்பு.

தள்ளிப்போய் விழுந்த பீடிங் பாட்டிலை எடுத்து அர்ஜுனை பார்த்து வைத்தாள் சாரா இவனை வெட்டவா....குத்தவா என்று பார்த்தாள்.

அர்ஜுன பார்த்து ஃபீடிங் பாட்டில் கை காமிச்சு அழுக ஆரம்பிக்கவும்.

பாவம் இவளுக்கு தெரியவில்லை அவன் சமாதானம் படுத்த போறது குட்டியை என்று.

இந்தமுறை ஏமாந்தது சாரா... இவனை கொல்லாமல் விட கூடாது மனதில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தாள்.

அர்ஜுன் அவனை தாண்டி சென்று பாப்பாவின் பீடிங் பாட்டிலை எடுத்து.

அழுதுகொண்டிருந்த தாராவின் கையில் திணித்தான். விசும்பல் குறைந்தது. அவளை தட்டி சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டே....அவளோ அவனை முறைத்தாள்.

'அடப்பாவி என்னடா இப்படி பண்றீங்க இரண்டு பேரும் அடி விழுந்தது எனக்கு ஆனால் கொஞ்சுவது அவளை.....'

அந்த குழந்தை மீது பொறாமை அவளுக்கு வரதன்செய்தது.

தரவோ அவனுக்கு உதவிய அர்ஜுன் கன்னத்தில் அன்புகொடுக்க தொடங்கினாள் கன்னத்தில் மாற்றி மாற்றி முத்தம் குடுத்துகொண்டு இருந்தாள்.

இவனோ ஆசையாக இன்னும் வேண்டும் என்பதுபோல கன்னத்தை மாற்றி மாற்றி கண்பித்துகொண்டு இருந்தான்.

ரித்திகா அந்த இருவரும் செய்யலை மெய்மறந்து ரசித்துக்கொண்டு கேமராவில் வீடியோ பதிவு செய்துகொண்டு இருந்தாள்...

எனக்கு உரிமையான பொருளை பிரித்து எடுத்த உன்னை நிம்மதியாக விடமாட்டேன் என்று கருவிகொண்டு இருந்தது இதை பார்த்துகொண்டு இருந்த வேறு ஒரு முகம்.

எனக்கு வலிக்குது யாராவது ஒருத்தராவது இருக்கிறார்களா இந்த இடத்தில புலம்பிக் கொண்டு இருக்க அவளை யாரும் இப்போது கண்டுகொள்ள தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டு... இந்தமுறை அழுக சாரா தயாராகி நின்றாள்.

"வா வா மம்மிட்ட வா அங்கிள் வேலை பார்க்கட்டும்".

பாப்பா ரித்திகாவிடம் தவினாள்.

அர்ஜுனை பார்த்துட்டு பாய் பாய் பாய் கையசைத்து கொண்டே சென்றார்கள் இருவரும்.

சாராவை பாத்துட்டே "இவங்க இரண்டு நம் மண்டையில் கொளுத்திவிட்டு வாங்க நாம எஸ்கேப் ஆகிவிடுவோம்" வாங்கியவாரு பாபாவிடம் கூறிக்கொண்டே சென்றுவிட்டாள் ரித்திகா.

"இந்த இடத்தை விட்டு கிளம்பு சரோஜா".

வேனா அர்ஜுன் சரோஜா சொல்லாத எனக்கு கோபம் வரும்.

"சரோஜா கூப்பிடாதடா கால் மீ சாரா.... " என அர்ஜுனை முறைக்க.

" என்னது சாராவா ஐ ரிமெம்பர் உன்னோட சர்டிபிகேட் பெயர் சரோஜா என்று இருந்தது".

"நோ அர்ஜுன் எனக்கு கோபம் வரும் அப்படி கூப்பிடாதே எனக்கு அந்த பெயர் பிடிக்காது".

"உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன..." எனக்கு என்ன உன்னோட நேம் என்னவோ அதை தான் கூப்பிடுறேன்.

நீ இங்க இருந்து கிளம்பு... காத்துவரட்டும்.

"முடியாதுடா சாரா சொல்லு அப்பதான் நான் போவேன்" என்றாள் பிடிவாதமாக.

"உனக்கு சாராவை விட சரோஜா பெயர் சூப்பரா இருக்கு " என்று அர்ஜுன் கூறினான் மயக்கும் குரலில் ...

"ஆனா ஒன்னு உனக்கு பெயர் வைத்தவர்களுக்கு... கோவில் கட்டி கும்பிடனும்".

"உனக்கு சரோஜா விட சொர்ணா அக்கா னு பேரு வச்சா இன்னும் சூப்பரா இருக்கும்" என்று கூறி பெருங்குரலில் சிரித்தான்.

"அடிச்சிடுவேன் டா அப்படி கூப்பிடாதே" அர்ஜுனை அடிக்க கை ஒங்க...

"என்னையே அடிப்பயா வந்த அடிச்சு பாரு". என்று அர்ஜுன் சாராவிடம் மல்லுக்கு நின்றான்.

"நேத்து வாங்கினா அடி எல்லாம் பத்தலையா"அர்ஜுன் அவளது கன்னங்களை பார்த்தவாறு வினவினான்.

"எனக்கு கீழ் வேலை செய்யும் நீ என் பெயர் சொல்லி அழைக்க யார் உனக்கு அனுமதி குடுத்தது?" என்றான்.

"சரோஜா அப்படி கூப்பிடாதீங்க சரோஜா குப்பிடுங்க". பதற்றத்தில் அவளே அவனுக்கு எத்தவாரு தவறுதலாக மாற்றி கூறிவிட்டாள்...

"ஹாஹா நீயே சொல்லிவிட்டாய் இனி அப்படியே அழைத்துத்துவிடலம்" என்றான் நக்கலாக.

"சார் நான் எதோ மத்தி சொல்லிட்டேன்" என்றாள் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு.

"சரி இனி அப்படி சொல்லல"அர்ஜுன் குரலைமாற்றி பேசினான்.

,"சரி இங்க வா சொர்ணாக்கா....."

அவளின் கோபத்தை எத்திவிட ....அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"நான் உனக்கு அக்கவாடா.... ''என்று

இவள் கையில் வைத்திருந்த கிளிப்பை தூக்கி மூஞ்சியில் அடித்தாள்.

இந்த பாப்பா இவளை பார்த்து தான் தூக்கி எறிஞ்சி இருக்கும் டார்கெட் சரியாக அடித்தது.

அவளின் ஹேர்க்கிளிப் அவனின் கண்ணின் ஓரத்தில் பட்டதும் அலறிவிட்டான்.

வேகமாக எழுந்த அர்ஜுன் அவள் கழுத்தை அக்ரோசமாக ஒற்றைகையல் பிடித்தான். வலி பொறுக்காமல் சாரா திணறினாள்.
 
Top