• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

8. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
8. அம்புத நல்லாள்
இருவரும் செய்கையில் பேசுவதை எதேச்சையாக கவனித்த பிரதியுமன் "என்ன நீங்க இரண்டு பேரும் தனியா ஏதோ செய்கை எல்லாம் செய்றீங்க? என்கிட்ட இருந்து எதையாவது மறைகிறீங்களா?"

இதை அவன் கேட்டதும் இருவரும் என்ன சொல்வது என்பதைப்
போல் பார்த்து கொண்டனர்.. மைத்ரேயனால் அவனிடம் இதை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை உண்மையை சொல்ல முனைந்த போது அம்புத்ரா" அது ஒன்னும் இல்லை பிரதி அவரோட சட்டை பாக்கெட்டில ஏதோ இருந்தது அதை தான் சொன்னேன் நாங்க என்ன மறைக்க போறோம்"

"அப்படியா மைத்து.. ஏன்டா இருக்க குப்பை எல்லாம் உன்கூட எடுத்துட்டு வர..?"


இதைக்கேட்ட அவனோ " ஹான் வேண்டுதல்டா எனக்கு இன்னைக்கு வீட்டுக்கு குப்பையை எடுத்துட்டு வரனும்னு" என்றான் எரிச்சலாய்.

பிரதியுமன் ஏதோ பேச வாயெடுக்கும் முன் அம்புத்ராவின் கைபேசி அழைத்தது.. யார் என்று பார்த்த அவளின் இமைகள் அதிர்ச்சியில் உறைய ஆரம்பித்தது ஏனெனில் அழைத்தது கமிஷனர் 'ஐய்யயோ கமிஷனர் கால் பண்றாரே என்ன பிரச்சனைன்னு தெரியலையே.. இவர் எதிரே பேசினா தப்பாயிடுமே' என்று யோசித்து கொண்டு இருந்தவள் அழைப்பு நின்று விடவே அவசரமாக பிரதியிடம் "பிரதியுமன் நான் அவசரமா இப்ப கிளம்பனும் என் நம்பர நோட் பண்ணிக்கோங்க நான் அப்பறம் கால் பண்றேன்" என அவளது எண்ணை அவனிடம் கொடுத்து விட்டு செல்பவளை "அம்புத்ரா உன்னோட நம்பரை என்கிட்ட கொடுத்த ஆனா என் நம்பர் இல்லாம எப்படி கால் பண்ணுவ?"

அவனுடைய எண் விக்ரமனிடம் இருந்து அவள் ஏற்கனவே பெற்றிருந்தாள் அதனால் பின்னர் அழைப்பு விடுப்பதாய் அவனிடம் உளறி விட்டு இருந்தாள் அதை எண்ணி தன்னுடைய ஆர்வ கோளாரை நொந்தவளாய் தலையில் அடித்து கொண்டு" ஆமால்ல நம்பர் சொல்லுங்க இல்லன்னா ஒரு மிஸ்டு கால் தாங்க யுமன் நான் சேவ் பண்ணி வச்சிகிறேன்"

அவனும் ஒரு மிஸ்ட் கால் தரவே அவளுடைய கைபேசியில் "மை யுமன்" என்று அவனுடைய படத்துடன் மிளிர்ந்தது..

அதேநேரம் மைத்ரேயன் "ஆமா அது என்ன யுமன் யாரு அது?" என்றான் புரியாமல்.

இவளோ வெட்கத்துடன்" அது அவர் தான்"

" எவரு? "


"அவர் தான் பிரதியுமன்.. உங்க கசின்"

"ஏன்மா இன்னைக்கு தானே பார்த்த.. அதுக்குள்ள என்ன செல்ல பெயர் வேண்டிகிடக்கு"

அவளோ எதுவும் பேசாமல் பிரதியுமனைப் பார்த்தவாறே இவனிடம் போய் வருவதாய் சொல்லி விட்டு சென்று விட்டாள்..
அவள் சென்று விட்டாள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு பிரதியுமனிடம் திரும்பிய மைத்ரேயன் " பிரதி ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே?"என்றான் புருவத்தை உயர்த்தியவாறு.

அவன் எவ்வாறு கேட்கிறான் என்று அறியாத பிரதியோ "ஆமா டா எத்தனை மாசமா தேடிட்டு இருந்தேன் இன்னைக்கு நான் நினைச்சு கூட பார்க்கல என் கண் எதிரே.. அதுவும் நம்ம ஏரியால.. உன் கூட வேற வேலை செய்யுறா.. இதுக்கு மேல என்ன இருக்கு? கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆக வேண்டியது தான்" என்று அவனின் எதிர்காலத்தைப் பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டே இருந்தான்.

"எல்லாம் சரி பிரதி ஆனா இதெல்லாம் எந்த பொண்ணு கூட வாழ போற? மாமி பார்த்த பொண்ணு கூடவா இல்ல அம்புத்ரா கூடவா?" என்றதும் அதிர்ச்சி அடைந்தவனாய்" என்னடா இப்படி கேக்குற அம்புத்ரா கூட தான்"


" ஓஓ அப்ப நேற்று நைட் மாமி கிட்ட நீ கால் பண்ணி அவங்க பார்த்த பொண்ணுங்க ஓகே சொன்னீயே அது என்ன கதை? இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஆசை இருக்கோ சார்க்கு?" என்றான் ஏளனமாய்.

" ஏய் என்னடா இப்படி அசிங்கமா பேசுற? அம்புத்ரா கிடைக்க மாட்டான்னு ஒரு முடிவு பண்ணிட்டு அந்த பொண்ணுக்கு ஓகே சொன்னேன் இன்னும் அந்த பொண்ணு முகத்தை கூட பார்க்கலையே பெயர் கூட தெரியாதேடா.. நிச்சயம் கூட ஆகல அம்மா கிட்ட சொன்னா புரிஞ்சிப்பாங்க.. ஒரு வேளை என்னால அந்த பொண்ணு மனசுல ஏதாவது எதிர்பார்ப்பு வந்து இருந்தா கூட நான் மன்னிப்பு கேட்க ரெடியா இருக்கேன்" என்று தன்னிலை விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தான்.

"ஓ அப்படி சொல்ற.. சரி சரி உனக்கு ஒரு புது நியூஸ் தரவா?"


"நீ கேட்குற ஸ்டைலே சரியில்லையே.. என்ன நியூஸ் அது குட் நியூஸா இல்ல பேட் நியூஸா?"
"ஹும் இட்ஸ் டிபண்ட்ஸ் அபான் யூ மை டியர்(it depends upon you my dear).. அதாவது.. அது என்னன்னா.. என் ஆசை மாமா பையன்.. அதாவது உனக்கும் மாமி பார்த்து இருக்காங்கள அந்த பொண்ணு அவங்களுக்கும் நிச்சயம் பண்ண முடிவு பண்ணி இருக்காங்களாம்.. இன்னும் இரண்டு வாரத்துல..பொண்ணுக்கு உன்னை ரொம்ப பிடிச்சி போச்சாம்.. ஏற்கனவே உன்னை பலதடவை இங்க பார்த்து இருக்காங்களாம்.. ஆனா நீ தான் கண்டுக்கவே இல்லையாம்.. என்ன பிரதி இது ஹாப்பியா இல்ல பேட் நியூஸா?" என்றவனை முறைத்தவன்"


என்னடா விளையாடுறீயா? ஏய் அந்த பொண்ண நான் பார்த்தது கூட இல்லடா ஈவன் போட்டோ கூட பார்க்கல எப்படிடா அம்மா ஏன் என்கிட்ட எதுவும் கேட்காம இப்படி? அட்லீஸ்ட் உன்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல.. இப்ப என்ன பண்றது? அம்மா கிட்ட பேசினா சரிவராது இதுக்கு அப்பா தான் சரியான ஆள்.. நீ என்ன சொல்ற மைத்து?"

அவனோ சிரித்தவாறே" அந்த பொண்ணு பெயர் அம்முன்னு சொன்னாங்க.. வீட்ல அப்படி தான் கூப்பிடுவாங்கனு மாமி சொன்னாங்க..என்றவன் மனதிலோ 'அவளுக்கு அம்மு ன்னு ஒரு பெயர் இருக்கறதே இப்ப தானே தெரியுது நானும் வேற வேற பொண்ணுன்னு தானே நினைச்சிட்டு இருந்தேன் எல்லாம் ப்ராடு கூட்டு களவாணிங்க இப்ப என்னையும் இவங்க கூட சேர்த்து வச்சி இருக்காங்க யோசிச்சி யோசிச்சி இவன்கிட்ட பேச வேண்டியதா இருக்கு மத்தவங்க கிட்ட சாதரணமான வர பொய் இவன்கிட்ட பேசும் போது வரல கடவுளே நீ தான் பார்த்துக்கணும்' என்று யோசித்து கொண்டு இருந்தவன் பிரதியின் தொடுதலில் சுயநினைவுக்கு வந்தான்.

"என்னடா யோசிக்கிற?"

"பிரதி எனக்கு உன்னோட நிச்சயம் விசயம் தெரியும்.. நேற்று நைட் நீ மாமி கிட்ட ஓகே சொன்னதும் அவங்க என்கிட்ட பேசினாங்க அப்பவே இந்த விசியத்தை பொண்ணு வீட்டுல சொல்லி நாள் பிக்ஸ் பண்ணதையும் சொன்னாங்க.. அக்ஷுவலி இது உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்ன்னு சொன்னாங்க பட் இப்ப இருக்க சுஷுவேஷன்ல( situation) அது அவசியம் இல்லன்னு தோணிச்சு அதான் சொன்னேன்.. அண்ட் இது உன்னோட லைப் சோ முடிவு நீ தான் எடுக்கனும்.. அம்புத்ராவா இல்ல அம்முவா? சாய்ஸ் இஸ் யூவர்ஸ்" என்று அவன் தோளோடு அணைத்தவன்" யோசி.. பிரச்சனைன்னு ஒன்னு இருந்தா அதுக்கான தீர்வு ஒன்னு இருக்கும் தானே.. இன்னைக்கு ஆபீஸ் போகாத பொறுமையா யோசி பிரதி.. எனக்கு டைம் ஆச்சு இன்னைக்கு அமைச்சர் இன்டர்வியூ இருக்கு"என்று அவனைத் தனித்து விட்டு விட்டு அலுவலகம் சென்றான் மைத்ரேயன்.

தனித்து இருந்தவன் மனதிலோ என்னற்ற கேள்விகள்.. 'நான் அம்புத்ராவை திருமணம் செய்தால் எத்தனை பேர் மனதைப் புண்படுத்த நேரிடும்? ஒருவேளை நான் பெற்றவர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்தால் அம்புத்ரா மனது நோகாதா? மத்தளம் போல் இருபுறமும் அடி வாங்குவேனோ? தந்தையிடம் இப்பொழுதே பேசலாமா? அவர் சம்மதம் சொல்வாரா? இதுநாள் வரையில் தாய் சொன்னதை அவர் மீறியதாக வரலாறே இல்லை.. எனினும் வேறு வழி இருக்கிறதா பிரதி என்றது மற்றொரு மனம்'.

பலமணி நேரமாக சிந்தித்தவன் தனது தந்தையிடம் பேசுவதை தவிர வேறு வழி இல்லை என தோன்ற அழைப்பெடுத்தான் ஒரு முடிவெடுத்தவனாய்.

என்றும் இல்லாத திருநாளாய் தன் மகனின் முகம் தொடுதிரையில் பார்த்ததும் ஏதோ பிரச்சனை என்று யுகித்தவர் அதற்கு மேலும் தாமதிக்காமல் அவனது அழைப்பை ஏற்றார் "சொல்லுப்பா பிரதி நல்லா இருக்கியா சாப்பிட்டியா?" என்பதாய் ஒலித்தது கந்தசாமியின் குரல்.

"நல்லா இருக்கேன்ப்பா நீங்க எப்படி இருக்கீங்க? உடம்பு எப்படி இருக்கு?"
"என் உடம்புக்கு என்ன நல்லா தான் இருக்கு.. உனக்கு என்ன வேணும்.. எதாவது காரியம் ஆகனும்னா தானே உன் கண்ணுக்கு நான் இருக்கறதே தெரியும்"


"அப்படி எல்லாம் எதுவும் இல்லப்பா நீங்க பார்த்து இருக்க பொண்ணு.. அது வந்து.. என்ன சொல்ல வரேன்னா"என்று வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.

"பிரதி பீல் ப்ரீ நான் உன்னோட அப்பா தான் பேய் இல்ல.. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. உன் பிரச்சனை என்ன?"


அதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு" அப்பா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் நீங்க பார்த்து இருக்க பொண்ண என்னால கல்யாணம் செய்துக்க முடியாது அவங்க வீட்ல சொல்லிடுங்க" என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான்.

அம்புத்ரா முன்னரே இதைப் பற்றி சொல்லி இருப்பதால் அதனை நினைத்து உள்ளுக்குள் சிரித்து கொண்டாலும் அவனிடம் அதிர்ச்சியடைந்தவராய்" என்னப்பா இப்ப வந்து இப்படி சொல்ற? உனக்கு நிச்சிய தேதி கூட குறிச்சாச்சுப்பா நீ சரின்னு சொன்னதும் தானே அம்மா அவங்க வீட்ல பேசி இந்த முடிவ எடுத்தா இப்ப போய் நாங்க என்ன சொல்றது அந்த பொண்ணோட அப்பா வேற என் பிரண்ட் அசிங்கமா போய்டும் பிரதி"

"என்னப்பா பேசுறீங்க நேத்து ராத்திரி தானே ஓகே சொன்னேன் அதுக்குள்ள என்கிட்ட கூட சொல்லாம ஏன் இப்படி பண்ணீங்க?"


"இது என்னடா வம்பா போச்சி? நீ எப்ப ஓகே சொல்லுவன்னு எதிர்பார்த்து இருந்தாடா உன் அம்மா.. நீ சொன்ன அடுத்த நிமிஷம் நேரம் காலம் கூட பார்க்காம அவங்க வீட்டுக்கு கால் பண்ணி பேசிட்டா.. என்னை என்ன பண்ண சொல்ற? எனக்கே இது காலையில தான் தெரியும்..ஆனா உன்கூட சுத்திக்கிட்டு இருக்கானே ஒரு களவாணி அவனுக்கு தெரியாம உன் அம்மா எதுவும் செய்ய மாட்டா இந்த விசியத்தை அவன் தான் உனக்கு சொன்னானா?"

"ஆமாம்ப்பா.. அப்பா ப்ளீஸ் எனக்கு அந்த பொண்ணு வேண்டாம்ப்பா.."
"இதை என்கிட்ட சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல பிரதி.. உனக்கே தெரியும் நம்ம வீட்ல அதுவும் உன் விசியத்துல அம்மா தானே முடிவெடுப்பா? சோ அவளுக்கு கால் பண்ணி பேசு..சரி இத்தனை நாள் சொல்லாம இப்ப வந்து லவ் பண்றேன்னு சொல்ற? முன்னவே சொல்லி இருக்கலாம்ல? நாங்க காதலுக்கு எதிரி இல்ல ஏன்னா நாங்களே லவ் மேரேஜ் பண்ணவங்க தான்.. பட் உனக்கு அம்முவ விட நல்ல பொண்ணு கிடைக்கமாட்டா பிரதி..என்ன நான் இவ்வளவு பேசுறேன் நீ பதிலே சொல்லாம சைலண்டா இருக்க?"
"அப்பா என்னை பேசவிட்டா தானே நான் பேசுவேன்.. நான் லவ் பண்ண பொண்ண இன்னைக்கு தான் பார்த்தேன்" என்று அன்று முதல் இன்று வரை நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவர் வீடியோ கால் செய்தார்.. எதற்காக அழைக்கிறார் என்று அறியாதவன் அழைப்பை ஏற்றான்" பிரதி நீ பொறுப்பான பையன் நல்லது கெட்டது உனக்கு நல்லா தெரியும்.. நீ யோசி இன்னைக்கு பார்த்த ஒரு பொண்ணுக்காக என்னையும் அம்மாவையும் இன்னொரு குடும்பம் முன்னாடி தலைகுனிய வைக்க போறீயா? அம்மாக்கு முன்ன மாதிரி உடம்பு இல்லப்பா அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை உனக்கு தெரிய கூடாதுன்னு இருக்கா.. அதுக்காக உன்னை பேச வேண்டாம்னு நான் சொல்ல மாட்டேன்.. இது உன் வாழ்க்கை உன் சந்தோஷம் சோ பேசு.. நான் உனக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் பண்றேன்.. பாய் டேக் கேர்" என்றவாறு அழைப்பைத் துண்டித்து விட்டார்.

தாயிடம் எவ்வாறு பேசுவது என்று அவன் யோசித்து கொண்டு இருக்கட்டும் நாம் மற்ற இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு வருவோம் வாருங்கள்.

பிரதியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கமிஷனர் வெற்றிமாறன் வீட்டிற்கு அவர் வரசொன்னதால் விரைந்தாள் அம்புத்ரா.. அங்கே " குட் மார்னிங் சர் என்னை அவசரமா வர சொன்னீங்க அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?"
அவரோ சிரித்தபடி "உட்கார்ந்து பேசு அம்புத்ரா இந்த சர் மோரு எல்லாம் ஆபிஸ்ல தான்.. இங்க எப்பவும் போல அப்பானே கூப்பிடுடா அம்மு"


(வெற்றி- மீனா தம்பதியின் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போய் தனது 6 வயதில் இறந்த விட்டாள் அச்சமயத்தில் அவர்கள் விக்ரமன் முதலில் இருந்த வீட்டின் அருகே இருக்கவும் அவ்வப்போது இவள் அங்கே சென்று வருவாள்.. ஏனெனில் அவரின் அந்த தொப்பி அவளை மிகவும் ஈர்க்கும்.. குழந்தையை பறிக்கொடுத்த அந்த தம்பதிக்கு இவளின் வருகை மிகவும் ஆறுதலாக இருந்தது.. அதுநாள் முதல் இன்றுவரை அவர்களையும் அப்பா அம்மா என்றே அழைப்பாள்..ஏனோ இவளுக்கு இந்த காவல்துறை பணி பிடித்து இருந்தது அதனால் விக்ரமன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்பணியில் சேர்ந்தாள்..)

அவளும் புன்முறுவல் பூத்தவாளாய் "சரி வெற்றிப்பா சொல்லுங்க என்ன விசியம்? நீங்க இந்த டைம்ல வீட்டுக்கு வர சொல்ல மாட்டீங்களே.. மீனாம்மா இல்லையா?"
"அவ இல்லடா பக்கத்துல கோவில் வரை போயிருக்கா உனக்கு நிச்சயம் ஆக போகுதுன்னு விஜி கால் பண்ணி சொன்னா அதனால மேடம் ரொம்ப ஹேப்பி என்றவர்" அம்மு அந்த மான்ஸ்டர் குரூப் ரொம்ப பண்றாங்கடா அவங்களோட முக்கிய டார்கெட் உன்னை அழிக்கறதுன்னு ஸ்பை(spy) மூலமா தெரிஞ்சிது.. அண்ட் முன்ன எல்லாம் அவங்க வேலைக்கு ஒத்து வராத ஆபிசர்கள கொன்னவங்க இப்ப கொஞ்சம் கொஞ்சமா மக்கள் பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்களாம்.. நீ ஏற்கனவே மான்ஸ்டரோட ஆளுங்க இரண்டு பேர கொன்னதுனால அந்த சிட்டி போலீஸ் உன்னையும் இந்த ஆபரேஷன்ல சேர்க்கனும்ன்னு ரிக்வஸ்ட் பண்ணி இருக்காங்க.. அண்ட் இப்ப பத்து நாளைக்கு முன்னாடி ஒரு டீம்ம அங்க அனுப்பி இருக்காங்க பட் அன்பார்சுனேட்லி(unfortunately) அவங்கள ஒருத்தன மட்டும் விவரம் சொல்ல அனுப்பி வச்சிட்டு அவனையும் கொன்னு இருக்காங்க அதுவும் கொடூரமா அவங்க குடும்பம் முன்னாடியே" என பேசி கொண்டு இருந்தவர் அவளின் முகம் பார்த்தார் அதில் அப்படி ஒர் ஆக்ரோஷம் எதிரில் அவர்களை கண்டால் இப்பொழுதே மிகவும் கொடூரமாக அந்த கூட்டம் மொத்தமாய் அழித்திருப்பாள்..அவளின் அதிரடியை கண்டவர் தான் ஆனாலும் இன்று ஏனோ அது பலமடங்காக இருப்பதாய் உணர்ந்தார்.. அது ஏன் என்று புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவளே தன்னை சமாதானம் செய்து கொண்டு "வெற்றிப்பா ஆனா இப்ப எப்படி என்னால போக முடியும்? நிச்சியம் கழிச்சி போகவா?"
"இல்ல அம்மு நீ இப்ப ஜஸ்ட் அங்கே போய் நிலைமை என்னனு பார்த்துட்டு வா.. மீதியை நல்லா பிளான் பண்ணி செய்யனும் அண்ட் இது ரொம்ப ரகசியம் யார்கிட்டயும் பகிர்ந்துக்க கூடாது சரியா?"

"வெற்றிப்பா இது கூட எனக்கு தெரியாதா?" என்றாள் சிரித்தபடி.

" தெரியும் தெரியும்.. சரி நீ நாளைக்கே கேரளா போகனும் அதற்கான ஏற்பாட்டை நான் கதிர பார்க்க சொல்லி இருக்கேன் அண்ட் கதிர் உன்கூட வருவான்"

" ப்ச் கதிர் எதுக்கு? எனக்கு தனியா போக தெரியாதா?"

" நீ போய்ட்டு வருவ அது ஒரு கமிஷனரா புரியுது ஆனா அப்பாவா உன்னை தனியா அதுவும் இந்த சமயத்துல அனுப்ப மனசு வரல அம்மு ஒத்துக்கோடா" என்று இறைஞ்சினார் அவளிடம்.

அவரின் முக பாவத்தில் வாய்விட்டு சிரித்தவள்" சரிப்பா நான் கிளம்பறேன்.. டீடைல்ஸ் எல்லாம் கோட் பண்ணிடுங்க எப்பவும் போல அம்மாவோட மெயில்க்கு" என்றவள்" மீனாம்மா வந்தா சொல்லுங்க நான் அப்பறம் வந்து பார்க்கறேன்னு"
அவரும் சரியென தலையசைத்து மற்ற வேளைகளை செய்ய ஆயத்தமானார்.

அங்கே.. விக்ரமனின் செய்தி அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.. மைத்ரேயனும் விக்ரமனும் இன்று அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர்.. விக்ரமன் ஏற்கனவே அவர் செய்யும் ஊழல்களை பற்றி நிறைய கேள்விகளை எழுதி வைத்திருந்தார்.. ஆனால் அவனோ தெரிந்து செய்யும் ஊழல் அனைவருக்கும் தெரியும் ஆனால் அமைச்சர் இன்னும் சில சட்டவிரோத செயல்களை செய்துக் கொண்டிருக்கிறார் அதைப் பற்றி கேட்டால் சேனலின் நற்பெயர் மேலும் உயரும் என்று வாதிட்டு கொண்டிருந்தான்.. அரை மணி கடந்து பின்னர் அந்த வாதத்தில் மைத்ரேயனின் வாய்ஜாலமே ஜெயித்தது.. அவன் நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கி விட்டதை அவனின் உதவியாளர் தெரிவிக்கவே விட்டால் போதும் என்று அவ்விடம் விட்டு சென்று விட்டான்.

நேரம் போக போக மைத்ரேயன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜனின் முகம் கோபத்தில் கொத்தளிக்க துவங்கியது.. அவர் மீது சுமத்தப்பட்ட அத்தனையும் ஜோடிக்கப்பட்டது பொய் என்றும் நிகழ்ச்சி முடிவு பெறாமலேயே மைத்ரேயனை முறைத்தவாறு சென்று விட்டார்..

முறைத்தப்படி செல்லும் அவரையே பார்த்த விக்ரமனின் மனமோ மைத்ரேயன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மன்றாடியது..
 
Top