• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

9.அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
தன் தாயிடம் நேரடியாக பேசினால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் எனத் தோன்றவே உடனடியாக தனது உடைகளை எடுத்து வைத்து கொண்டவன் மைத்ரேயனை கைபேசியில் அழைத்தான்" மைத்து நான் போய் அம்மாவ பார்த்துட்டு வரேன் அம்புத்ரா பற்றி பேசணும்.. பிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன் இன்னும் இரண்டு மணி நேரத்துல டேக்ஹாப் நான் போய்ட்டு கால் பண்றேன்" என்று அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டு இருந்தான்..

அங்கே அம்புத்ராவோ தான் கேரளா செல்வதை பற்றி பிரதியுமனிடம் தெரிவிக்க வேண்டும் ஆனால் அவனிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வானா? இன்று தான் பார்த்துக் கொண்டோம் என்னிடம் நிறைய பேச எண்ணி இருப்பான் தானே? இப்பொழுது நான் இரண்டு நாட்கள் அங்கே பயணமாக போகிறேன் என்று சொன்னால் என் மீது கோபித்து கொள்வானா? அவனின் முக பாவனைகள் எவ்வாறு இருக்கும்? அதை காண என் மனம் ஏங்கி தவித்தாலும் இன்று தானே அவனை விட்டு பிரிய மாட்டேன் என்று வேறு சொல்லி இருக்கிறேன்.. அதை பற்றி கேட்டால் என்னவென்று சொல்வது? யுமனை பொறுத்த வரை நான் மைத்ரேயனுடன் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் என்றல்லவா நினைத்து கொண்டு இருக்கிறான்?" ஆஆஆவென தலையை பிடித்த வேலை அவளின் அந்த குழப்பத்திற்கு காரணமான மன்னவனே அழைப்பை விடுத்தான் அலைபேசியில் அதனைக் கண்டு பூரித்தவளாய் அவசரமாக அழைப்பை ஏற்றாள்" சொல்லுங்க யுமன்?" என்றவளின் குரலில் இருந்தது மயக்கமோ என்று எண்ணும் அளவிற்கு இருந்தது..

அதில் கிறங்கிய அவனின் குரலோ அதை விட மென்மையாக "அம்பு" என்றது.

"சொல்லுங்க யுமன் ஏதாவது பேசுங்க"

"ஹான் ஆமா பேசனும் அம்பு உன்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றதும் அவன் தங்களின் திருமண குழப்பத்தை பற்றி பேச போகிறான் என்று அவள் நினைத்தால் ஏற்கனவே கந்தசாமி இவ்விசியத்தை அவளிடம் தெரிவித்து இருந்தபடியால் கேட்க தயாரானாள்.. அவளை பொறுத்த வரை அவனின் குரல் அதனைக் கேட்க வேண்டும் அவ்வளவே.

" என்ன பேசனும்னு சொல்லிட்டு சயிலண்டாவே இருக்கீங்க யுமன்? என்றது இவள் தான்.

" அம்பு நான் இரண்டு நாள் ஊருக்கு போறேன்.. இன்னும் 2 மணி நேரத்துல டேக்ஹாப்" என்றதும் இவளுக்கு ஹாப்பாடா என்றிருந்தது.. தான் செல்ல போகும் விசியத்தை சொல்லாமல் எவ்வளவு விரைவாக முடித்து விட்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக வந்துவிட வேண்டும் என்று யோசித்தவள் அவன் எங்கு செல்கிறான் என கேட்காத அவளின் மடத்தனத்தை எண்ணிக் கொண்டு" யுமன் எங்க போறீங்க? இரண்டு நாள்?"

"சென்னைக்கு தான்.. அம்மாவ பார்த்துட்டு வர போறேன்"

"ஏது? சென்னைக்கா இப்ப எதுக்கு போறீங்க.. அதான்.." என பேசிக் கொண்டே சென்றவளுக்கு அப்பொழுது தான் உறைக்கிறது தான் இவனிடம் பேசும் போது உளறி கொட்டி விடுகிறோம் என்பது.

"என்ன அம்பு? ஏதோ சொல்ல வந்த அப்பறம் ஏன் சயிலண்டா இருக்க? சென்னைக்கு தான் போறேன் அதுக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி? நான் என்ன காட்டுக்கா போறேன்?"

" இல்ல.. அது.. அது வந்து நீங்க இன்னைக்கு தானே என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு சொன்னீங்க அப்பறம் இப்படி?" ஒருவாறு சமாளித்தாள்.

"ஒரு முக்கியமான வேலை இருக்கு அம்புத்ரா.. நம்ம வாழ்க்கையே இதுல தான் இருக்கு.. சோ இரண்டு நாள் அதுக்குள்ள எல்லா பிரச்சனையும் சரியா போய்டும்.. நான் போய்ட்டு வரேன்.. நீ பத்திரமா இரு.. நான் அங்க போய்ட்டு கால் பண்றேன்" என்று அவன் அழைப்பை துண்டித்த அடுத்த நொடி இவள் அழைப்பெடுத்திருந்தால் தெய்வானைக்கு..இந்த ஒரு மாதத்தில் அவள் தெய்வானையிடம் நன்றாக பேசி பழகி இருந்தாள்.. விக்ரமன் அம்புத்ராவை பற்றி சொன்னதும் முதலில் தயங்கிய தெய்வானை கந்தசாமி அவனின் பயத்தை போக்க இவளே சரியான ஆள் என்று எடுத்துரைத்த பின்னர் அரை மனதாக சம்மதம் சொன்னவர் நாளாக நாளாக அம்புத்ராவின் மனது புரியவே அவளை மனமாற ஏற்றுக்கொண்டார்.

அவளின் முகத்தை தொடுதிரையில் பார்த்த தெய்வானையோ" அடி அம்மு செல்லம் ஏன்டா அத்தைக்கு இரண்டு நாளா போன் பண்ணவே இல்ல?அத்தைய மறந்துட்டியா?" என்று கோபித்து கொண்டார் அவர்.

" அய்யோ அத்தை அதெல்லாம் ஒன்னும் இல்ல..இன்னைக்கு ஏதேச்சையா உங்க பையன் கண்ணுல மாட்டிக்கிட்டேன்" என்று இன்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சொல்லி முடித்தாள்..அதைக்கேட்டு மகிழ்ந்தவர்" சூப்பர் என் பையன் என்ன சொன்னான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னானா? கட்டி பிடிச்சானா முத்தம் கொடுத்தானா? என்றதும் அவளுக்கு வெட்கம் பிடித்துக்கொள்ள "அய்யோ அத்தை என்ன பேச்சு பேசுறீங்க போங்க என்றவள்"உங்க கிட்ட சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாருங்க நான் இன்னைக்கு கேரளா போறேன் அப்பறம் உங்க பையன் சென்னை கிளம்பிட்டாரு" என்றதும்

"அடப்பாவி என்னடி இப்படி சொல்ற? அண்ணா வந்து என்கிட்ட பேசும் போது உன்னை நினைச்சு எவ்வளவு பெருமைப்பட்டேன்.. என்ன பொண்ணு நீ லவ் பண்ற பையன உன் கைகுள்ள வச்சிக்க வேண்டாமா? இப்படியா அவன இங்க வரவரை விட்டு வைப்ப? இப்ப அவன் இங்க வந்தா இரண்டு பொண்ணும் நீ தான்னு நானே உளறிடுவேன் அம்மு.. எனக்கு அவனப் பார்த்தா பொய் சொல்ல வரும்மான்னு தெரியலையே"

"ஏது? அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க தான் உங்க பையன் கிட்ட ஏதாவது பேசி சாமாளிக்கனும்.. இந்த நேரம் ஏர்போர்ட் போய் இருப்பார்.. இப்ப நான் அவர இங்க வர சொல்லவும் முடியாது பிகாஸ் நானும் கேரளா கிளம்பனும் அத்தை.. அவர் இங்க இருந்தா என் வேலைய பற்றி தெரிய வரும்.. சோ என் செல்ல அத்தைல நீங்க என்ன பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது உண்மை தெரிய கூடாது முக்கியமா என் வேலை.. நான் அப்பறம் கால் பண்றேன் அத்தை" என்றவாறு அழைப்பை துண்டித்து விட்டு இருந்தாள்..

அவள் அழைப்பை துண்டித்தும் தலையில் கைவைத்து அமர்ந்துகொண்டார்‌.. அதேநேரம் அனன்யா கல்லூரியை முடித்து விரைவாக வீட்டிற்கு திரும்பி இருந்தாள்..எப்பொழுதும் அவள் கல்லூரியை முடித்து நேராக அவள் வீட்டுக்குச் செல்லாமல் தெய்வானையை பார்த்துவிட்டு தான் தன் வீட்டிற்கு செல்லும் வழக்கம் அதே போல் இன்றும் அவள் வந்திருந்த நேரம் இவர் கைப்பேசியை பிடித்துக்கொண்டு தலையில் கைவைத்து அமர்ந்திருந்த கோலத்தை கண்டு சற்றே நடுங்கிக் தான் போனாள்.. அவசர அவசரமாக தன்னுடைய பையை சோபாவில் கிடத்தி விட்டு தனது மாமியிடம் விரைந்தாள்..

" மாமி என்ன ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க உடம்புக்கு ஏதாவது செய்யுதா? மயக்கமா இருக்கா இல்ல ஏதாவது பிரச்சனையா? மாமா கூட ஏதாவது சண்டையா? நான் எத்தனை கேள்வி கேட்கிறேன் நீங்க ஏதாவது வாயை திறந்து பேசுறீங்களா?"

" அடியேய் கொஞ்ச நேரம் வாயை மூடு இங்க என்ன பிரச்சனை என்று தெரியாமல் நீ பாட்டுக்கு ஏதாவது கேட்டுட்டு இருக்க.. அம்மு போன் பண்ணா.. பிரதி சென்னைக்கு வரானாம்"

அதைக் கேட்டு ஆசுவாசம் அடைந்தவள் "இதுக்கா இவ்வளவு பில்டப்பு? அண்ணா தானே வராங்க.. அதுக்கு என்ன? என்னவோ கல்யாணமே நின்னு போனா மாதிரி தலையில் கையை வைத்துக்கொண்டு உக்கார்ந்து இருக்கீங்க? போங்க போய் பிரதி அண்ணாக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு வைங்க அவங்க பிளைட்ல தானே வராங்க சீக்கிரமா வந்துருவாங்க எனக்கும் சேர்த்து சமைச்சி வைக்கணும் நான் போயிட்டு ஓடி வந்துடறேன்"

" அடியே லூசு பொண்ணு உன்னை இங்க எதுக்கு வரான்னு தெரியுமா? நாம பாத்திருக்க பொண்ணு வேண்டாம் அம்புத்ராவ தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு என் கிட்ட பர்மிஷன் கேட்க வரானாம்.. நான் பார்த்திருக்க பொண்ணும் அவளும் ஒண்ணுதானே இவன்கிட்ட நான் சொல்லக் கூடாதுன்னு என்னை அவ வேற மிரட்டுறா.. நானே என்ன செய்யட்டும் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் நீ வேற ஓடி போ"

"ச்சே இவ்வளவு தான் பிரச்சனையா இதெல்லாம் பிரச்சனையே இல்லை.. அண்ணாவை சமாளிக்கிறது எல்லாம் ஒரு பெரிய வேலையே இல்லை.. நான் சொல்லுற மாதிரி செய்யுங்க அதுக்கு அப்புறம் அவர் வந்த விசயத்தையே மறந்திட்டு ஊருக்கு கிளம்பி போய்விடுவாரு" என்று அவளின் திட்டத்தைப் பற்றி தெய்வானையிடம் விவரித்துக் கொண்டிருந்தாள்.. அதைக்கேட்ட அவருக்கும் இது சரிவரும் என்று தோன்றியது..

இங்கே வரை இருக்க அங்கே என் மைத்ரேயனோ ' என்ன இவன் திடீர்னு ஊருக்கு கிளம்பி போறேன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான்.. இவனுக்கு உண்மை எல்லாம் தெரிந்திடுமா? அப்பறம் அவன்‌ எப்படி அம்புத்ராவை கல்யாணம் செய்துப்பான்? அதுவும் நல்லதுக்கு தான் எவ்வளவு நாள் தான் உண்மையை மறைக்க முடியும்? நான் உன்கிட்ட பொய் சொல்ல வேண்டியதே இல்லை.. மாமி என்ன பண்ணுவாங்க? இவை ஏதாவது கெஞ்சிக் கேட்ட உடனேயே பூம்பூம் மாடு மாதிரி தலைய ஆட்டி ஆட்டி உண்மைய மொத்தத்தையும் சொல்லிடுவாங்க..இவங்க என்ன செய்வாங்க? மாமாவாவது கொஞ்சமாவது சமாளிப்பார்.. சரி நான் ஏன் இதெல்லாம் யோசிச்சிட்டு இருக்கேன் இருக்கிற வேலையை பார்ப்போம்' என்று அவன் பணியை தொடரலானான்.

அங்கே அஸ்வின் நிர்குணாவை முறைத்து கொண்டு நின்றிருந்தான்..

"குணா என்ன இது? ஏன் பார்க்குற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க? என்ன பிரச்சனை தான் உனக்கு? அப்பாவும் அம்மாவும் ரொம்ப கவலைப்படுறாங்க குணா"

"எனக்கு எந்த பிரச்னையும் இல்ல அண்ணா.. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்களேன் நான் மேல படிக்கணும்" என்றாள் கெஞ்சும் தோணயில்.

" ஷட் அப் குணா.. உனக்கு வயசுகுறது தெரியுமா தெரியாதா? நம்ம சொந்தகாரங்க எல்லாம் நம்ம பேரண்ட்ஸ் கிட்டயே உங்க பொண்ணுக்கு ஏதாவது குறையா அதான் இன்னும் கல்யாணம் ஆகலையான்னு கேக்குறாங்கடா.. நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் இன்னும் ஒரு மாசம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள நீ உன் கல்யாணத்தை பற்றி ஒரு நல்ல முடிவ சொல்லனும் அது நாங்க பார்க்குற பையனா இருந்தாலும் சரி இல்ல மைத்ரேயனா இருந்தாலும் சரி" என்றவனின் முகத்தை திடுக்கிட்டு நோக்கினாள்.

மேலும் அவனே தொடர்ந்தான்" எனக்கு தெரியும் குணாம்மா நீ அவன பார்க்குற பார்வையிலேயே புரிஞ்சது இல்லன்னா நான் எப்படி இத்தனை கேர்ல் பிரண்ட என் ப்பேனா வச்சி இருக்க முடியும்? என்று கண் சிமிட்டியவனை தலையணை கொண்டு அடிக்க ஆரம்பித்தாள்.. சில நிமிடங்கள் அந்த விளையாட்டில் கழிய மூச்சிரைக்க நின்றனர் அண்ணனும் தங்கையும்.. "ஒரு மாசம் டைம் உனக்கு நீ என்ன முடிவு எடுத்தாலும் என் சப்போர்ட் உனக்கு இருக்கும்" என்றவனை தோளோடு அணைத்தவள் "ரொம்ப தாங்க்ஸ் அண்ணா.. எனக்கு டைம் ஆச்சு இன்னைக்கு நைட் டியூட்டி எனக்கு" என்று அவள் கிளம்பி விட்டாள்..

தனது ஸ்கூடியை எடுத்து கொண்டு வந்து கொண்டிருந்தவளின் மனமோ அஸ்வின் சொன்னதையே அசைப்போட்டுப் பார்த்தது..அதில் அவனிடம் அவளது காதலை சொன்ன கணமும் வந்து இம்சிக்கவே வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினாள்.. அங்கே அவள் கண்ட அந்த காட்சியில் சப்தமும் அடங்க செய்வதறியாது திகைத்து நின்றாள்..

தொடரும்..
 
Top