• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

9. பால சாண்டில்யன் - காதல் என்பது எது வரை

Balasandilyan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2023
Messages
1
வைகை சிறுகதை போட்டி 2023

காதல் என்பது எது வரை
- சிறுகதை

- டாக்டர் பாலசாண்டில்யன்



"ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் ரதியைப் பார்க்க நிற்பாயா ? பார்த்தால் நீ நீ என் போல் தடம் புரள்வாய் !" முணுமுணுத்துக் கொண்டே திருமங்கலம் மெட்ரோவில் ஏறினான் அசோக். ஆலந்தூர் வரை செல்லும் டிக்கெட் வாங்கி இருந்தான். மெட்ரோ மெதுவாக நகர்ந்து மேலே பறக்கும் ரயிலாக அசோக் நகரை நெருங்குவதற்குள் இவன் நான்கைந்து கம்பிகள் கைமாறி அவள் நிற்கும் இடத்திற்கு அருகே சென்று விட்டான்.



அவள் தனது மெல்லிய விரல்களை மொபைல் மீது வைத்து மிக சுவாரசியமாக டெக்ஸ்ட் செய்து கொண்டிருந்தாள். இவனை சற்றும் கவனிக்கவில்லை. தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்று உணர்ந்து அவள் திரும்பிய போது அசோக் உஷாராக என்ன ஸ்டேஷன் என்ற போர்டை பார்க்கத் திரும்பினான். மீண்டும் அவள் மொபைலை பார்க்கும் பொழுது இவன் அவளை நோட்டம் விட்டான். அவளின் உள்ளுணர்வு அறிவுறுத்த மறுபடியும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். இப்படி நடக்கும் பார்வைப் பரிவர்த்தனையில் மூன்றாவது சுற்றில் அசோக் கண்ணோடு கண் சிக்கினான்.



அங்கே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. "எக்ஸ்கூஸ் மீ, நீங்க பவாவோட அண்ணன் அசோக் தானே?"



"ஆமாம், நீங்க?" என்று ஒன்றுமே தெரியாதது போல கேட்டான்.



"நான் ஸ்வேதா, பவாவோட கிளாஸ்மேட். உங்க வீட்டுக்கு போன மாசம் பவா பர்த்டேக்கு வந்த போது பாத்திருக்கேன்."



"ஓ சாரி, எனக்கு கொஞ்சம் கூட நினைவே இல்லை. தப்பா எடுத்துக்காதீங்க.". நன்றாக தெரிந்து இருந்தும் அப்படியே பொய்யை அசால்ட்டா எடுத்து விட்டான் அசோக்.



"பரவாயில்ல, விடுங்க. எங்கே ஆஃபீஸா?"



"ஹாங், இதோ ஆலந்தூரில் இறங்கி டிஎல்எப் போகணும்"



"நானும் அங்கே தான் போகணும். ஒரு கிளையண்ட் மீட்டிங், வாங்க சேர்ந்தே போகலாம்" இருவரும் சேர்ந்தே வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்தார்கள்.



"உங்களை அசோக்னு கூப்பிடலாமா?"



"யா அப் கோர்ஸ், நோ இஷுஸ்..."



அவள் மிக லாவகமாக அவன் மீது இடித்துக் கொண்டு ஆட்டோவில் சற்று நெருக்கமாகவே உட்கார்ந்து கொண்டாள். "டைடன் ஸ்கின் பெர்பியும் தானே ?" என்று அசோக் கேட்க அவள் அடுத்த வினாடியே "எஸ் யூ ஆர் ரைட், நானும் பவாவும் அல்மோஸ்ட் எல்லாமே ஒரே பிராண்ட் தான். அதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு போல.."



"ஹௌ அபௌட் எ காபி ? டைம் இருக்கா அசோக்?"



"நீங்க கூப்பிட்டு வராட்டா நல்லா இருக்குமா?".



ஒரு காபி, ஒரு மணி நேரம். ஒரு நூறு உரையாடல்கள். பற்பல எண்ணப் பரிமாறல்கள்.



இடை இடையே அசோக் "உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் பிடிக்கிறேன்", "நீ தானே நீ தானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம் ..அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்" என்று ஏறக்குறைய மூன்று நான்கு பாடல் வரிகளை முணுமுணுத்து காபியை குடிக்காமல் ஸ்வேதாவை உற்றுப் பார்த்தபடி இருந்தான்

அசோக். அவளும் அதை கவனிக்காமல் இல்லை. அவளுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது.



"அசோக் நீங்க ரொம்ப ரொமான்டிக்கா பாடறீங்க, உங்கள பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீங்க பாடுவீங்க, கவிதை எழுதுவீங்க என்றெல்லாம் ஸ்வேதா சொன்னதே இல்ல. ஐ ஆம் டாம் இம்ப்ரெஸ்ட்."



"இல்லை ஸ்வேதா, கவிதை எல்லாம் ஒரே பேத்தலா கிறுக்கலா இருக்கும்... நான் ஒரு பாத்ரூம் சிங்கர் தான்..."



"இந்த தன்னடக்கமும் எனக்குப் பிடிச்சிருக்கு. எங்க ஒரு குட்டி கவிதை சொல்லுங்களேன்."



"நீ முல்லை என்றால் நான் பாரி, நீ இல்லை என்றால் நான் பாதி.."



"ஓ மை காட், என்னங்க இப்படி அசத்துறீங்க....ப்ளீஸ் இன்னொரு கவிதை வரி சொல்லுங்களேன்..."



"நான் சில ஹிந்தி பாடல்களை மொழி பெயர்த்து எழுதுவேன், அதுல ஒன்னு சொல்றேன் ஓகேவா ?"



"ஹூம் "



"ஏனோ தெரியவில்லை என்னமோ தெரியவில்லை உறக்கமும்

வரவில்லை உந்தன் முகம் மறையவில்லை..." "உன் மூச்சினில் எந்தன் மூச்சு கலந்து உயிர் மூச்சாச்சு உன் பேச்சாச்சு " இது மாதிரி நிறைய எழுதி வெச்சுருக்கேன்.



"வாவ் ஆஸம், அருமையான லிரிக்ஸ், நல்ல ரசனை, நிச்சயம் நீங்க நல்ல பாடகரா, பாட்டு எழுதுபவராக, ஒரு பெரிய ரவுண்டு வரலாம். எனக்கென்னவோ ஒரு தப்பான இடத்தில உங்க நேரத்தை வீணடிக்கிறீங்கனு தான் தோணுது."



"அதுக்கெல்லாம் ஒரு லக் வேணுங்க, வெறுமனே திறமை மட்டும் பத்தாது."



"அப்படி இல்ல அசோக், நீங்க ஒரு நாள் வீட்டுக்கு வாங்க என்னோட அண்ணனுக்கு ஒரு இன்ட்ரோ கொடுக்கறேன். அவர் தான் ஜெகதீப். முன்னால மியூசிக் டைரக்டர் ஹரி நாராயண் கூட இருந்தான். இப்போ ஏதோ அவங்களுக்குள்ள பிரச்சனை, தனியா வந்துட்டான். நிச்சயம் உங்கள மாதிரி புதிய டேலண்ட் பாத்தா விட மாட்டான், ஷூர்."



"ஐயோ நாம பேச ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரம் தாண்டிடுச்சு. எனக்கு பரவாயில்லை. உங்களுக்கு கிளையண்ட் மீட்டிங் லேட்டா ஆயிட போகுது."



"அதெல்லாம் இல்ல. எனக்கு ஏற்கனவே மெசேஜ் வந்துடுச்சு, மீட்டிங் கொஞ்சம் லேட்னு. அத விடுங்க. இப்படி ஒரு சந்திப்பு கெடச்சிருக்குமா? சூப்பர் டைம்ங்க. உங்களோட இப்படி ஒரு மீட்டிங் மறுபடியும் கிடைக்குமானு தெரியலே. இட் வாஸ் வெரி இன்டெரெஸ்ட்டிங். தாங்க்யூ பார் தி டைம் அண்ட் நைஸ் மியூசிக் அண்ட் போயட்ரி"



அதற்கு பிறகு அசோக் ஸ்வேதா சந்திப்பு வாரம் இரண்டு மூன்று முறை என்று நடந்து அடுத்த ஆறு மாதங்களில் நிச்சயதார்த்தம். தொடர்ந்து அதற்கு அடுத்த மாதமே கல்யாணம். அதுவம் பவா சுரேஷ் கல்யாணம் நடந்த அதே மேடையில். ஒரு மேடை இரண்டு கல்யாணம்.



இந்த ஆறு மாதங்களில் அசோக் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் ரொம்ப பேமஸ். ஓரிரு பாடல் இமான் இசையில் மற்றும் ஜெகதீப் இசையில் மூன்று பாடல் என்று பாடி பெரிய பேர் வாங்கி விட்டான். கிட்டத்தட்ட கையில் இருந்த வேலையை விட்டுட்டு முழு நேரப் பாடகராக பாடலாசிரியராக மாறி இருந்தான். அவன் திருமணத்திற்கு வராத விஐபியே இல்லை எனலாம்.



அப்போது தான் இந்த பாழும் கொரோனா வந்தது. ஊரடங்கு. உலகடங்கு. சினிமா, தியேட்டர் எல்லாமே முடங்கி விட்டது. அசோக் பாட ஒரு விளம்பர பாடல் கூட கிடைக்கவில்லை. குடும்பமே ஸ்வேதா சம்பளத்தில் தான் ஓடியது என்றால் அது தான் உண்மை.



அசோக் பாட்டுக்கு எழுதிக் கொண்டு, வீட்டில் ஏற்படுத்திய சிறிய ஸ்டுடியோவில் பாடிக் கொண்டு பொழுதைக் கழித்தான். ஸ்வேதா எப்போதும் ஒர்க் பிரம் ஹோம். அசோக் மகா சோம்பேறி. குடித்த டீ கப், சாப்பிட்ட தட்டு என்று எதையுமே எடுத்து வைக்க மாட்டான். சில நாள் குளிக்க மாட்டான். நேரத்திற்கு தூங்க வர மாட்டான். சாப்பாடு தனது இடத்திற்கே வர வேண்டும் என்று எதிர்பார்த்தான்.



ஒரு ஸ்டேஜ்ல ஸ்வேதா வெறுத்தே போனாள். வீட்டு வேலை, ஆபிஸ் வேலை என்று தொடர்ந்து செய்து துரும்பாய் இளைத்தாள். இந்த கொரோனா சமயத்தில் குழந்தை பிளான் செய்யலாம் என்று பல முறை அசோக்கிடம் ஜாடை மாடையாக பல முறை பேசினாள். வேலையோ வருமானமோ இல்லாத நேரத்தில் குழந்தை வேறா என்று அசோக் ஒரேடியாக அந்த ஐடியாவை மொத்தமாக நிராகரித்தான்.



கடைசியில் பெரியவர்கள், பவா மற்றும் சுரேஷ், ஜெகதீப், என்று யார் சொல்லியும் கேட்காமல் 'மூயூட்சுவல் டிவேர்ஸ்' என்று முடிவாகி இருவரும் பிரிந்து வாழும் முடிவெடுத்தனர். கொரோனா காரணமாக கோர்ட் வேறு கிடையாது. அப்படியாவது இந்த இடைவெளியில் இருவரும் சமாதானம் ஆகிவிட மாட்டார்களா என்று எல்லோருமே எதிர்பார்க்கும் பொழுது, நவம்பர் 20 கோர்ட்டில் சந்திக்கலாம் என்று வக்கீல் நோட்டீஸ் வந்தது பவாவிற்கு தலையில் இடியாக வந்து விழுந்தது.



விழுந்து விழுந்து காதலித்த ஜோடி பிரிந்தது.



அடுத்த வாரமே பவாவுக்கு நாள் தள்ளிப் போனது. கர்ப்பமும் உறுதி ஆனது. அந்த நல்ல செய்தியை சொல்ல பாவாவிற்கு போன் செய்தாள் ஸ்வேதா. அந்த செய்தி அசோக்குக்கு எட்டியது. அவனுக்கு வேலையும் தொடங்கி விட்டது. குழந்தையும் பிறக்க உள்ளது. இப்படி குடு குடுவென்று டிவேர்ஸ் ஆகி விட்டதே என்று வருத்தம் அடைந்தான் அசோக்.



ஸ்வேதா நேரில் வந்து ஒரு ஷாக் கொடுத்தாள் அசோக்கிற்கு. "வாங்க நாம சேர்ந்து நல்ல நண்பர்களாக வாழலாம்" என்று. அவன் மனதிலும் அதே எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது. போட்ட ட்ரெஸ்ஸுடன் அப்படியே கிளம்பினான் ஸ்வேதா வீட்டிற்கு அசோக். அவன் வீட்டில் எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அப்போது அசோக் பாடி மிகவும் பிரபலமான "இது தான் காதல்" என்ற பாடல் டிவியில் பாடியது.
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
278
வாழ்த்துக்கள்
அருமை சகோ
 

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
குழந்தை வந்ததனால் இருவரும் திரும்ப இணைந்தாங்க ....இல்லாது போனால் ..???
அழகான கதை 😀
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 
Top