• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
"என் பின்னாடி எப்படிஅலைந்து திரிந்து... இப்போ வேற பொண்ணுகூட....."

போன வாரம் வேற கல்யாணம் பண்ணைப்பாத்தான், இன்னைக்கு வேற ஒரு பொண்ணு கூட சூத்ரன், என்னை என்ன பொம்மை என்று நினைச்சி இருக்கான். இன்று உன்னை அடிக்கற அடிலே சும்மா கூட யாரையும் பார்க்க கூடாது.. படத்துல கூட ஹீரோயின் பார்க்க கூடாது" என்று சபதம் எடுத்தாள்.

அவன் வருவான் என்று வெகுநேரம் பார்த்துகொண்டு இருந்தாள் சாரா, அவனோ பொறுமையாக ஆடி அசைந்து ஒருமணி நேரம் தாழ்த்தி வந்தான்.

"நீங்கள் செய்வது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல..." சாரா அர்ஜுன் வந்ததும் பொரிந்து தள்ளினாள்.

"அதற்கு? " என்றான் அர்ஜுன் சாதாரணமாக.

"இனி இப்படி செய்யாதே.. யாரிடமும் பேசாதே முக்கியமாக அந்த பொண்ணுகூட..." என ஆணையிடும் தோரணையில்.

"அது என்னுடைய இஷ்டம் அதை கேட்க நீ யார்?" என்றான் அர்ஜுன்.

இப்படி பேசும் அவனிடம் எது பேசியும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்து, அர்ஜுனை முறைத்தவாறு அவள் வகுப்புக்கு சென்றாள்.

அவளின் எண்ண அலைகளில் சிக்கி தவித்தாள், ஒருவழியாக வகுப்பை முடித்து, அவளின் அலுவலக அறைக்கு வந்தாள்....

அர்ஜுன் அவளை எதிர் புறம் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.

அவன் முதுகை வெரிக்க பார்த்து கொண்டு இருந்தாள் கோபத்தோடு.

ஏதோ குறுகுறுப்பு ஏற்பட...வேகமாக திரும்பி பார்த்தான் அர்ஜுன்.

என்ன என்பது போல புருவம் உயர்த்த.... அவளையும் மிறி அவனை நோக்கி நடந்தாள்.... அவன் புருவ வெட்டுதளும்பை வருட.... இதுவும் சாராவால் ஏற்படது தான்.

அன்று தான் சாரா புரிந்துகொண்டாள் "விளையாட்டு வினையாகும்" என்று,

அவளோ தூக்கி எரிவதில் கை தேர்ந்தவள் ... ஸ்டீல் ஸ்கேல் தூக்கி போட்டு விளையாடி கொண்டிருந்தாள், அதை கவனிக்காமல் அந்த பக்கம் சாராவை ரசித்தவாறு வந்தவனுக்கு, அந்த ஸ்டீல்ஸ்கேல் புருவத்தை நன்கு பதம் பார்த்தது.

"அப்போ ரொம்ப வலிய இருந்ததா, இரத்தம் கூட அதிகமா வந்தது..." அன்று நடந்ததை எண்ணி இப்போது வருந்தினாள்.

சாரா புருவத்தை பற்றியிருந்த கையை வேகமாக தட்டி விட்டான், 'செய்வது அனைத்தும் செய்துவிட்டு இப்போ என்ன இவளுக்கு கொஞ்சல் வேண்டிக்கிடக்கு'. என்று நினைத்தவன்.

"ஸ்டே யுவர் லிமிட் சாரா"என்று அவளை தள்ளி நிறுத்தினான்.

"விலகி விலகி போனவளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு, இப்போது நீ செய்வது சரி இல்லை அர்ஜுன் "

சாராவை..தினமும் சீண்டி விளையாட அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவன் எதிர்பார்த்த ஒன்று அவளாக அவனை நெருங்கிய நின்றவது பேசமாட்டாளா என்று எங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இப்போது? இவன் வேறு அர்ஜுன்.

'எனக்கு எதாவது நடந்தால் தான் உனது பாசம், அக்காரை கிடைக்குமா....? அது எனக்கு தேவை இல்லை எப்போதுமே' என்றான் கொஞ்சம் வருந்துகிறேன் நிறைய கோபத்தோடு.

"முன்னாடி என் புருவம் இப்போ என் கண்ணை குறிவைத்து இருகிறாய் சரிதானே..." வார்த்தையால் அவளை வதைத்தான்.

'அவள் மனமோ கனத்தது. என்னால் இவனுக்கு எப்போதும் ஆபத்து என்று கூறுகிறானா?'

சாராவை வார்த்தையால் வதக்கிவிட்டு... அவனது தனிப்பட்ட அறையில் நுழைந்தான் அர்ஜுன.

இரண்டு மணி அகிவிட்டது வகுப்பு முடியும் சமயம்... எந்த தொந்தரவும் இருக்காது, ஒரு பெருமூச்சோடு அவனது மெத்தையில் சரிந்தான்.

ஒரு ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று வந்ததால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் கண்களை மூடினான்...

அந்த பக்கம் சுற்றி திரிந்து இருந்த குட்டிப்பாப்பா. இவன் தூங்க செல்வதை பார்த்து ஒடி வந்து அவன் மேலே விழுந்தாள் .... "அஜூ அஜு" என்று அவன் மீது அமர்ந்து குதிரை ஓட்டினால் அவன் கழுத்தை பிடித்து கொண்டு.

அவள் எங்கே அவனை தூங்க விட்டாள்...அங்கு இங்கு கையை காட்டி... "அது என்ன இது என்ன?" கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டு.... அர்ஜுனை படுத்தி எடுத்தாள்....

"விடிய விடிய என்னை தூங்க விடாது இந்த ராட்சச பொம்மை" செல்லமாக கடிந்துகொண்டான்.

அவளை அணைத்தவாறு தட்டி தூங்க வைக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான், குட்டி தூங்காமல் அவனுக்கு கண்களை அவன் கழுத்தில் வைத்து சிமிட்டி சிமிட்டி கிச்சிக்கிச்சி மூட்டிக்கொண்டு இருந்தாள் அவளின் இமைகளால்.

அந்த குறுகுறுப்பில் அர்ஜுனன் தூங்க முடியவில்லை...இவளை தூங்க வைக்க வழிதெரியாமல் பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு இருந்தான்.

"குட்டிக்கு பாட்டு வேணுமா ? " என்றான்.

அர்ஜுன் வயிற்றின் மீது நன்கு ஏறி உட்கார்ந்து....கை தட்டி....சிரித்தாள் வேணும் என்பதுபோல,

"என்ன பாட்டு....வேணும் ?" ஒரு புருவத்தை உயர்த்தி கேட்க,

குட்டி அவன் கேட்ட அழகில் மயங்கிய... அந்த வெட்டு புருவத்தில் எட்டி ஒரு முத்தம் கொடுத்தாள்.

குட்டியின் செயல் சாராவை நினைவூட்ட... தலையை இருபக்கம் குலுக்கி மனதை சமன்செய்து...

" என் தங்கத்துக்கு என்ன பாட்டு வேணும் ".

இங்கு நடக்கும் அனைத்தும் கணினியில் பார்த்துக்கொண்டு இருந்தவன் வாய் தானாகவே முணுமுணுத்தது...

"ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லை" அங்கு ஒருவன் மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தான்.

இங்கு அர்ஜுன் கேட்ட கேள்விக்கு தாரா அவளது குருவி வாயை குவித்து...

"பாப்பா பாட்டு..." என்று தன்னை சுட்டிக்காட்டி சொன்னாள்.

கண்களை மூடி... பாட துவங்கினான் இருவரை நினைத்து...

"பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...

வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு

பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு

காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு

வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு

போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே

நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா...."

அவனுக்கு பாட தொடங்கியதும் சிறிது நேரத்தில். தூக்கம் தாராவின் கண்களில் தெரிய ஆரம்பித்தது..

அவளை அவன் மார்பில் போட்டுகொண்டு தட்டி கொடுக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.

அந்த பிஞ்சி கைகள் அவனையும் தட்டி கொடுத்தாள். இதை பார்த்த அந்த உருவம் அந்த குட்டி பூவை எடுத்து அணைக்க கைகள் பரபரத்தது.

அவனின் பாடலுடன் சேர்த்து....அவனின் இதயத்தின் ரிதத்தை கேட்டுக்கொண்டு.....தூங்க அந்த மென்மையான பூவின் ஸ்பரிசத்தில் அவனுக்கு அழ்ந்த துக்கத்துக்கு கொண்டு சென்றது .

'கனவில்கூட உன்னை சுமந்தேன் . என்னை ஏன் நம்பவில்லை என்னவளே ........

நாம் பழகிய நாட்கள்.... மற்றும் நம் காதலை பொய்த்து போகவைத்து விட்டாயே ....."

மனது ஒருபுறம் கூவியது அவன் துங்கையில் கூட.

போதும் எந்திரிப்போம் ...... அவன் உடலை அசைக்க கூட முடியவில்லை .

'குட்டி இன்னும் தூங்கி கொண்டுதான் இருக்கிறாள் போல ' என்று சிறிது நேரம் கண்மூடி படுத்து இருந்தான், வரமான காலங்கள் குழந்தை பருவம்.....சிறிது நேரம் அவளை தட்டி கொடுக்க.... பாரம் எறிகொண்டே போக "பாப்...இல்லை இது...இவ்வளவு வெயிட் இல்லையே அவள் "

கண்களை வேகமாக திறந்து பாத்தான்.

சாராவின் மொத்த பாரமும் அவன் மேல ..... "வேலை நேரத்தில் எதுக்கு தூங்கிட்டு இருக்க இவள்... " என்று நேரத்தை பார்க்க, பேய்கள் அலையும் நேரம் ஆனது.

"ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல..."

இந்த இடியட் எதுக்கு இங்க படுத்து இருக்கா. ஒரு நிமிடம் அவளின் செய்கைகள் நினைத்து சிரித்தவன் மறுநோடியே சிரிப்பு மறைந்து கோபம் அவனை ஆட்கொண்டது .

"சாரா எந்திரி..." அவளின் வெண்ணிற கன்னத்தை வருட....

எழுப்புவது போல தெரியலையே ஹீரோ சார்..... என்றது அவனது மனசாட்சி.

"இந்த கொசு வேற எனக்கு கிஸ் கொடுக்குது... " என்று தூக்கத்தில் சிணுங்கியவாறு அவன் மீது இன்னும் வசதியாக படுத்து கொண்டாள் .

சிறிது நேரம் அவளை ரசித்தவாறு படுத்திருந்தவன். சிறிது நேரத்தில் பழைய நினைவுகள் மேலோங்க,

சற்று முன்பு இருந்த காதல் வானிலை மாறி.... கோபப்புயல் அவனது மனதை ஆட்கொண்டது.

புயல் வேகத்தில் அவளை.... படுக்கையில் இருந்து தள்ளிவிட்டு விட்டு விறுவிறுவென்று..... எழுந்து சென்றான்.

திடிரென்று விழுந்தவள் திடுக்கிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கினாள்.

அந்த இடத்தை விட்டு போகும் முன்பு அர்ஜுன் காதில் சென்றடைந்தது அவளின் பிதற்றல்.

"இப்போ எதுக்கு ஆர்ப்பாட்டம் பன்ற வாயில கைவை...." என்று மிரட்டினான். எதுக்கு இந்த அழுகை கிழவிழுந்துள்ள பெருசா அடிபட்டு இருக்காது. இன்னும் ஒரு சொட்டு கண்ணிர் வந்தது நாலு அறைவிலும்.

மிரண்டவள் அழுது கொண்டே அவள் ரோஜா இதழின் அவளது வெண்டை விரலை வைக்க.

அவளை பார்த்து சொக்கித்தான் போனான் .

"காலைல நீ கேட்டதா நான் தரவா இப்போ" தன்னிலை மறந்து...

திருதிரு முழியோடு அவனை பார்த்தாள்.

பேச்சிக்கு இங்கு இடமில்லை.. அவளின் இதழை சிறைபிடித்தன்......அவளுக்கு மூச்சி முட்டும் வரை தொடர்ந்தது அந்த இதலனைப்பு.

சாரா முகமோ அழுகையில் சிவந்த முகம் இப்போது வெட்கத்தில் சிவந்து கிடந்தது... அந்த அணைப்பு முற்றுப்பெற்றதும் அவளைவிட்டு அவ்வறையை விட்டு நகர்ந்தான்..

விடியற் காலை முன்று மணி....

இதற்கு மேலே அவளுக்கு தூக்கம் வந்தாள் தானே..... சிறிது நேரம் முன்பு நடந்ததை, பலமுறை நினைத்து..... வெட்கப்பட்டு கொண்டு இருந்தாள் தூங்கா இரவானது.

அவனின் அன்னையோ அவனின் வருகைக்காக இரவு முழுவது வாசலை காவல் காத்து கொண்டு இருந்தார்.

"இப்போ என்ன டைம் எதுக்கு இவளோ லேட்டா ஆச்சி" கேள்வி மேல் கேள்வி கேட்க.... அணைத்து ஆத்திரமும் அண்ணைமேல் காண்பித்துவிட்டு.

"என்னால் தான் இவை அணைத்தும், நான் அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைத்து இருந்தால் அவனுக்கு நன்றாக இருந்து இருப்பான்..." நடந்த எதும் மாற்ற முடியாது ஆனால் இவர்களை சரிசெய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் அர்ஜுனின் அன்னை மீரா.

அவனின் அப்பாவி அன்னைக்கு தெரியவில்லை, என்னதான் திடீர் திருமணம் என்றாலும்.... அவனின் உயிர் காதலோடுதான் சேர்ந்துவைத்துள்ளார் என்று.
 
Top