• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
எபிலாக்

ஐந்து வருடங்களின் பின்பு

"நவீன் எங்க இருக்குறீங்க.. வாங்க.." என பாத்ரூமிலிருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் அமர்த்திக்கா.

"என்னம்மா.. என்னாச்சு..?" என்றவாறு உள்ளே வந்த நவீன் மனைவி இருந்த கோலம் கண்டு திகைத்து பின் குறும்பாய் பார்த்து "காலைலயே டெம்ட் பண்ணுறடி..." என்றவன் சட்டென உள்ளே வரப் பார்க்க அவளோ அவன் செய்ய இருக்கும் காரியம் புரிந்து கொண்டு வேகமாக கதவை அறைந்து சாற்றினாள்.

அவனோ இதனை எதிர்பாராமல் கதவில் மோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் "மனுஷனா உசுப்பேத்தி விட்டுட்டு ஏன்டி கதவ மூடின..? தெறடி..." என கத்திக் கொண்டிருந்தான்.

"உங்களுக்கு ஒரே இது தான் வேலையாப் போச்சு. போய் பாப்பாவ பாருங்க அவ அத்தைக்கிட்ட இருக்கா
.." என்றதும் கோபமாகவே அவனும் "மொதல்ல என் பேபிய பார்த்துட்டு வந்து நெக்ஸ்ட் உன்னைய வச்சுக்கிறேன்டி..." என்றவன் சென்று விட்டான். அவள் தான் அவனது கோபத்தில் பொங்கி வந்த சிரிப்பை அடக்க வேண்டியதாகிற்று. இல்லாவிட்டால் அதற்கும் சேர்த்து வச்சு வாய் கிழிய பேசுவான் இல்லையா.

..

இங்கே படியிறங்கி வந்தவனின் காலைக் கட்டிக் கொண்டது ஓர் வாண்டு. "சித்தப்பா தூக்கு..." என்ற மழலை மொழியில் குனிந்து பார்த்தவனுக்கு அந்தப் பால் முகத்தைப் பார்த்து அப்படியே உருகிற்று.

அவன் ஆதித்யா. ஆத்விக் மற்றும் சத்ய ஸ்ரீயின் மூத்த புதல்வன். வயது நான்கு.

"வாடா கண்ணா.." என அவனுத் தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன் அவனை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனோ கன்னத்தை துடைத்து விட்டு "சித்தப்பா டேட்டி பண்ணாத.." என்கவும் வீம்புக்கு இன்னும் அவனுக்கு அழுந்த முத்தம் கொடுக்க அவனோ அதோ தன் அலம்பலை ஆரம்பித்து விட்டான். அவனது சத்தத்தில் வெளியே வந்த சத்யா தன் நிறைமாத வயிற்றை தாங்க முடியாமல் தடவிக் கொண்டே நேரே வந்து "என்ன கண்ணா சத்தம்.. யாரு என் செல்லத்த கோபப்படுத்துனது..?" என்றவாறு ஆதித்யாவைப் பார்க்க ஆதியோ நவீனிடமிருந்து விடுபட்டு அவளிடம் ஓடினான்.

தன் தாயிடம் "மம்மி இந்த சித்தப்பா மோசம். என் ஃபேஸ டேட்டி பண்ணிட்டாரு..." என புகார் வாசிக்க நவீனோ முந்திக் கொண்டு தன்னையே முறைத்த தன் நண்பியிடம் "ஹேய் பார்க்க உன்ன மாதிரி இருந்தாலும் அப்படியே அவன் அப்பன் புத்தி மாறாம இருக்குடி. ஹைஜீனிக்கா இருக்கிறவன பார்த்திக்கேன். ஆனால் இவன் அவன் அப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுப்பான் போல் இருக்கு... பாரு மூஞ்சிய தேய்க்கிற தேய்ல கன்னம் பிஞ்சு கைல வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.." என்று வாயில் கை வைத்தவனின் கையில் சுளீர் என அடியொன்று போட்ட சத்யா "குழந்தைகிட்ட பேச்சுற பேச்சாடா இது.. இன்டீசன் ஃபெலோ..." என கடிந்து கொண்டாள்.

அந்த வாண்டோ நவீனுக்கு பலிப்புக் காட்ட அவனும் பதிலுக்கு பலித்துக் காட்ட இருவரையும் பார்த்த சத்யா தலையில் அடித்துக் கொண்டாள். இப்படி இருப்பவர்கள் சிறிது நேரத்தில் அப்பன் பிள்ளை போல அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். ஆதிக்கு நவீன் என்றால் போதும். ஆத்விக் பாசமாக இருந்தாலும் சற்று கண்டிப்புடன் இருப்பவன். ஆனால் அந்த கண்டிப்பு நவீனிடம் இருக்காததால் அவன் இவனிடம் கூடுதல் ஒட்டுதல். நவீனுக்கும் அப்படியே. தன் நண்பியைப் போல துறுதுறுவெனவும் பால் நிறமாகவும் இருப்பவனைப் பார்க்கப் பார்க்க அத்தனை பிடித்தம் அவனுள். அதிலும் அவன் தன்னை சித்தப்பா என்று அழைக்கும் தொனியில் அப்படியே உருகி விடுவான். என்ன, ஆதி கொஞ்சம் சுத்தம் பார்ப்பவன்.

நவீன் பலிப்புக்காட்ட சத்யாவிடம் திரும்பிய ஆதி "மம்மி இந்த சித்தப்பா வேணாம் மம்மி. ஹீ இஸ் நாட் குட். நாம வேற சித்தப்பு வாங்கிக்கலாம்.." என பெரியவன் போல தலையை ஆட்டி ஆட்டி பேசியவனின் பேச்சில் ஜெர்கான நவீன் "எதே வேற சித்தப்பாவா...?" என்றவாறு அவன் திமிறத் திமிற தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டவன் "இந்த ஜென்மம் மட்டுமில்லை. இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு நான் மட்டுந் தான் சித்தப்பா...என்ன சொன்ன வேற சித்தப்பா வேணுமா" என அவனை சோஃபாவில் போட்டு கூச்சமூட்ட ஆதியின் சிரிப்பில் அந்த வீடே நிறைந்திருந்தது.

அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு திடீரென அடிவயிற்றில் சுளீரென வலியெடுக்க "அம்மாமாமா..." என்று கத்திய கத்தில் திடுக்கிட்டு திரும்பினான் நவீன்.

தன் நண்பி பிரசவ வலியில் துடிப்பதை பார்த்த நவீனிற்கு நெஞ்சம் அதிர்ந்தது. சட்டென கலைந்தவன் "ஹேய் பேபி...." என்றவாறு அவளை நெருங்கியவன் அவளது கன்னத்தைத் தட்டி "பேபி என்னடா... எ..என்ன..?" என்றவாறு என்ன செய்வதென தெரியாத அதிர்ச்சியில் உறைந்திருந்தவன் அவள் வலியில் அலற பயந்தவனாய் "அமர்த்தி...ஏய்..." என அந்த பங்களாவே அதிர கத்தினான். அவ்வளவு நேரமும் உள்ளே தன் பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த ப்ரனீத்தா அந்த சத்ததில் அடித்து பிடித்துக் கொண்டு அங்கே ஓடி வந்தார். அதற்குள் அமர்த்திக்காவும் வந்து விட்டாள்.

சத்யாவோ அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு "ந..நவீன் வ..வலிக்குதுடா.. எ..என் ஆ.. ஆத்விக்..." என்று அவனை நினைவுபடுத்த அப்போது தான் அவனுக்கும் அவனது நினைப்பே வந்தது.

ஆம் ஆத்விக் முக்கிய அலுவல் காரணமாக காலையிலேயே ஆபிஸ் சென்று விட்டான். எழுந்ததிலிருந்து அவனது மனதை ஓர் பாரம் அழுத்த நெஞ்சை தடவிக் கொடுத்தவனுக்கு என்னவோ செய்தது. அதே மனநிலையில் திரும்பிப் பார்க்க மனைவி நிர்மலமான முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் ஆதித்யா அவளது கழுத்தை கட்டிக் கொண்டு தூக்கத்தில் இருக்க, அதனைப் பார்த்தவனுக்கு உதட்டில் ஓர் கீற்றுப் புன்னகை. ஆனால் அது கண்களை எட்டவில்லை. தன் மனைவியின் வயிற்றை கண்டவனுக்கு அது இறுதி மாதம் என்பதால் அவளை தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் பிரசவ தேதியை மருத்துவர் கொடுத்திருக்க அந்தப் பயம் தான் அவனுள். ஏனென்றால் இவள் இலகுவில் வலியைத் தாங்குபவள் அல்ல. அதனை முதல் பிரசவத்தில் கண்டதுமில்லாமல் அவளது வலி முழுவதையும் அவனே அனுபவித்திருந்தான் மனைவியை நெஞ்சில் சுமக்கும் கணவனாய். அப்படியே அவளருகில் சென்றவன் அவளது வயிற்றில் கையை வைத்துத் தடவ அதில் லேசாக விழிப்புத் தட்டவும் கண்களைத் திறந்த சத்யா அது தன்னவன் என்றதும் உதட்டை விரித்து விட்டு மீண்டும் உறங்கிப் போனாள்.மனைவியின் அந்த ஒற்றைச் சிரிப்பில் மனம் சற்று லேசாக குனிந்து அவளது பிறை நெற்றியில் முத்தமிட்டவன் தன் மனைவியைப் போல அழகாய் தூங்கும் தங்கள் காதலின் முதல் அத்தாட்சிக்கும் ஓர் முத்தத்தை கொடுத்து விட்டு எழுந்து சென்றான்.

நவீனிற்கோ இருந்த கலவரத்தில் அவனது நினைவு வராமல் இருக்க, சத்யா நினைவு படுத்தவும் அப்படியே மனைவியைத் திரும்பிப் பார்த்தவன் "அவசரமா தேவையான பொருட்களை எடுத்துட்டு வா" என்று கட்டளை இட்டவன் அலேக்காக சத்யாவை தூக்கிக் கொண்டு ஓட எதிரில் நடப்பது புரியாமல் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு நின்றிருந்த ஆதியைப் பார்த்து என்ன நினைத்தானோ "அமர்த்தி நீ குழந்தைங்கள வச்சிட்டு இங்க இரு. அம்மா நீங்க வாங்க என் கூட ஹாஸ்பிட்டலுக்கு" என்றவன் நண்பியின் சத்தத்தில் "ஒன்னும் இல்லடா. இ..இதோ ஹாஸ்பிட்டல் போய்றலாம் ஒன்னும் ஆகாது" என்றவன் தனக்கும் சேர்த்தே ஆறுதல் கூறிக் கொண்டான். ஆதி பிறந்த சமயம் தன் உயிர் நண்பி செத்துப் பிழைத்ததை கண் கொண்டு பார்த்தவன் அல்லவா. அந்தப் பயம் அவனுள்ளும் இருக்கத்தான் செய்தது.

அவளை அவசரமாக காரில் கிடத்தியன் ப்ரனீத்தாவையும் பின்னாடி ஏற்றிக் கொண்டு சிட்டென பறந்தான் ஹாஸ்பிட்டல் நோக்கி. இடையில் ப்ளூதூதில் ஃபோனை கனெக்ட் பண்ணியவன் ஆத்விக்கிற்கு அழைக்க ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர எடுபடவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து தோல்வியில் முடிய "ஷிட்" என ஓங்கி குத்தியவனுக்கு "ஹலோ" என்ற குரல் கேட்க அவசரமாக "ஹ..ஹலோ மச்சான்..டேய் பேபிக்கு பிரசவ வலி வந்துட்டுடா.. நாங்க *ஹாஸ்பிட்டல் போய்க்கிட்டு இருக்கோம். உன்னைய தான் அவ கேட்டுட்டு இருக்கா..சீக்கிரம்.." என்று அவன் கூறியதைக் கேட்க அவன் அங்கே இருந்தால் தானே. அவன் தான் பேபி என்ற அவனது பதற்றமான குரலிலே கட் பண்ணிவிட்டு காரை நோக்கி ஓடி விட்டானே.

காரை மின்னல் வேகத்தில் ஓட்டிக் கொண்டு வந்தவனுக்கு மனம் நிலையில்லாமல் தவித்தது. தான் நினைத்ததைப் போலவே நடந்து விட்டது. தன் மனம் தன்னை எச்சரித்தது உண்மையே என கலங்கியவனின் கண்களும் கலங்கின தன்னவளை நினைத்து. அவளை தனியே விட்டு விட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.தான் வரும் வரை நவீன் அனைத்தையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தாலும் நிமிடத்திற்கு நிமிடம் அவனது கையில் கார் சீறிப் பாய்ந்தது.

க்ரீச் என ஹாஸ்பிட்டல் வளாகத்தினுள் காரை நிறுத்தியவன் அவசரமாக இறங்கி ஓடினான். அதற்குள் சத்யாவை ஐ.சீ.யூ இனுள் அனுமதித்திருக்க அங்கே கலைந்து போய் ஓடி வந்த தன் நண்பனை அணைத்தவனை தடுத்து நிறுத்திய ஆத்விக்கின் கண்களில் தான் எத்தனை தவிப்பும் பதற்றமும். அவனது பார்வையை உணர்ந்து சத்யா இருந்த அறையைக் காட்ட சிலையாகி அவன் நின்றதெல்லாம் ஓர் கணம் தான். அதற்குள் தன்னவளின் ஈனமான குரலில் திடுக்கிட்டவன் புயலென உள்ளே நுழைந்தான். அவனைத் தடுத்த தாதியர்கள் அவன் பார்த்த உக்கிரப் பார்வையில் கப்சிப்பாகி விட்டனர். அவஸ்தையுடன் அவர்கள் மருத்துவரைப் பார்க்க அவரோ வரட்டும் என கண்களால் அமைதிப் படுத்தினார். அவரும் தான் பார்க்கிறாரே சத்யா படும் பாட்டை. அவள் வலி தாங்க முடியாமல் அலறியது மட்டுமல்லாமல் திரும்பித் திரும்பி வாசலைப் பார்த்து அழுபவளை நெற்றி சுருக்கிப் பார்த்தவர் பின்னர் திடீரென்று உள்ளே நுழைந்த ஆத்விக்கைப் பார்த்து அவளது முகத்தில் வந்து போன நிம்மதியில் அவரும் புரிந்து கொண்டவராய் அவனை உள்ளே அனுமதித்தார்.

பின் "மிஸ்டர், உங்க மிஸிஸ் காப்பரேட் பண்ண மாட்டிக்காங்க. கொஞ்சம் புஷ் பண்ண சொல்லுங்க.." என்றதும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் இப்போது தன்னவளுக்கு தனது தைரியமான வார்த்தைகள் அவசியம் என புரிந்து கொண்டவன் அவளருகில் வந்து நெற்றியில் வலித்து விடுமோ என முத்தம் ஒன்றை வைத்து "கண்ணம்மா நம்ம குழந்தை இந்த உலகத்துக்கு வந்து நம்மள பார்க்கனுமில்லையா. அதுக்கு நீ ஸ்ரோங்கா இருந்தா தான் முடியும். ப்ளீஸ் டா, நீ என் தைரியமான பொண்ணாச்சே. புஷ் பேபி.." என்றதும் இவ்வளவு நேரமும் மயக்கத்திற்கு கெஞ்சிக் கொண்டிருந்த அவளது விழிகள் கணவனது பேச்சுத் தந்த தைரியத்தில் புதுத் தெம்பு வந்தவள் போல வயிற்றில் கை வைத்து ஆஆஆஆஆஆஆ என்று கத்தி அவனது கையை அழுந்தப் பிடித்ததில் அவனுக்கே எழும்பு உடைந்ததைப் போன்ற வலி... அவளது ஆவேசத்தில் அவனது உயிர் நீரில் உதித்த இரண்டாவது பெண் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து அந்த புது உலகைக் கண்ட மகிழ்ச்சியில் வீழிட்டு அழ அதே சமயம் ஆத்விக்கின் கண்களிலிருந்து வடிந்த சொட்டுக் கண்ணீர் சத்ய ஸ்ரீயின் கன்னத்தில் விழ அப்படியே மயங்கிப் போனாள்.

அடுத்து செய்ய வேண்டிய அனைத்தும் துரித கதியில் நடக்க தன்னவளின் கையில் இதழை ஒற்றி எடுத்தவனின் கைகள் தன் மகளைத் தாங்க பரபரத்தன. அதனை உணர்ந்து கொண்டது போல தாதியும் அந்த அழகான குழந்தையை கொண்டு வந்து அவனது கையில் தர குனிந்து பார்த்தவனின் உதடுகள் ஆனந்ததில் விரிந்தன. அப்படியே அவனை உரித்து வைத்தாற் போன்று பிறந்திருந்தான் அவனின் செல்ல மகள். அந்தப் பிஞ்சின் கன்னத்தில் உதட்டைக் குவித்தது முத்தம் வைத்தான் தகப்பன்.

வெளியே கொண்டு வந்தவனைச் சுற்றி ஓடி வந்த நவீன் பிஞ்சுக் குழந்தையின் அழகில் சொக்கித் தான் போனான்.

"டேய் மச்சி அப்படியே உன்ன மாதிரியே இருக்காடா என் குட்டி.." என்றவாறு குனிந்து அவன் பங்கிற்கும் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டான். அவனது கண்களில் வந்த கனிவில் ஆத்விக்கின் இதழ்களும் இன்னும் விரிந்தன.

தாயிடம் குழந்தையை நீட்ட அவரோ தன் இரண்டாவது பேத்தியை கொஞ்சித் தீர்த்து விட்டார். சிறிது நேரத்தில் தாதி வந்து குழந்தையை தாயிடம் பாசியாத்தக் கேட்க அவனே குழந்தையை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

வாடிய கொடி போல் கிடந்த உயிரானவளை வாஞ்சையுடன் பார்த்தவன் அவளிடம் சிறு அசைவு தெரியவும் குழந்தையுடன் சென்று அவளருகில் நிற்க கண்களை மெல்லத் திறந்து பார்த்தவள் கணவனைக் கண்டதும் அவனது முகத்தில் சந்தோஷத்தையும் மீறித் தெரிந்த வாட்டத்தை கண்டு கொண்டாள். அது தனக்கான வெளிப்பாடு என்பதை அவனவள் அறிவாள். அவனை மாற்றும் பொருட்டு குறும்பாய் கண்சிமிட்டி சிரிக்க, அவள் சிரித்த பின்னர் தான் அவன் முகம் தெளிவானது. "கண்ணம்மா நம்ம பேபி" என்றவாறு குழந்தையை அவளருகில் கிடத்த சிவந்த நிறத்துடன் தன்னவனின் மொத்த அழகையும் சேர்த்துப் பிறந்திறந்த மகளைக் கண்டதும் கணவன் மேல் இன்னும் காதல் பெருகியது. அதே புன்னகை மாறாமல் மகளது கன்னத்தை தடவிக் கொடுத்தவள் "அப்படியே டாடியப் போல பிறந்திருக்கா..." என்றதும் அவனும் ஆசையாய் தன்னவளையும் தன் குழந்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் தன் வாழ்க்கை முழுமையடைந்த திருப்தி. அது அவனது முகத்திலே பிரதிபலித்தது.

அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என வாழ்த்தி நாங்களும் விடைபெறுவோம்.


முற்றும்.


தீரா.
 
Top