• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 32

யாருமற்ற அந்த மலைபகுதியில், தன் எஜமானி – நிறை மாத கர்ப்பிணி பெண் இருயிருக்கு போராடியபடி துடித்துக்கொண்டு இருப்பதை கண்ட அந்த பணிப்பெண், ரோஜா சும்மாவா இருப்பாள்? அந்த இருபத்தி நான்கு வயதிலேயே மூன்று குழந்தைகளுக்கு தாய் அவள். பாதி விவரம் மட்டுமே புரிந்தாலும், உடனடியாக தான் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். சற்று அவரை தோள் வழி பிடித்து பக்கத்தில் இருக்கும் குன்றுக்குள் அழைத்து சென்றவர், சட்டென அவரை சோதிக்க ஆரமிக்க, குழந்தையின் தலை பாதியளவு வெளியே வந்துவிட்டு இருப்பதை கண்டு,

‘பிரசவ வலிய பொருத்துக்கிட்டா இவங்க மலையேறினாங்க’ என்று உடல் நடுங்கினாலும், இது விவேகமாக செயல்பட வேண்டிய நேரம் என்பதை புரிந்தவளாய்,

“அம்மா...அம்மா...கொஞ்சம் கண்ண தொறங்க” மயங்கிக்கொண்டு போன சம்யுக்த்தையின் கண்ணத்தில் தட்டி அவரை சுயம் இழக்க செய்யாமல் செய்தவள்,

“ம்ம்....” என்று பெரிய மூச்சை இழுத்துவிட்ட படி துடித்தவரை மேலும் நெருங்கி அமர்ந்தவள் “அம்மா, கொஞ்சம் வலிய பொறுத்து முக்குங்கம்மா..வயிற கீழ் பக்கமா தள்ளுங்க, நல்ல முக்குங்க” என்று கதறினாள்.

“ஹும்க் மு...முடியலை...” உளரும் உதடு பிரிய மெதுவாக கூறியவர், வயிற்றை தள்ளினாலும் வலு இல்லா நடுங்கும் கைகள் அதற்க்கு ஒத்துழைக்க மறுத்தது.

“அம்மா...ரெண்டு உசுரா இருக்கீங்க, புள்ள முக்கியம் ராசி, கொஞ்சம் பொறுத்துட்டு செய் தாயி, பாதி தல வெளிய வந்துடுச்சு, இப்போ எடுக்கலைனா மூச்சு முட்டி செத்து போயிரும்மா, உன் புள்ள...கொஞ்சம் பாரு” அரையுயிர் ஆகி, மரணம் நோக்கி நகர்ந்துக்கொண்டு இருந்த சம்யுக்த்தையை தட்டி தட்டி முழிக்க வைத்து தாய் பாசம் தூண்டி ஏதேதோ செய்து ஒரு வழியாக குழந்தையை வெளியே எடுத்தாள்.

“அம்மா....மா.......” என்ற தாயின் கதறலை சமாதானம், அவள் முகத்தில் புன்னகையை பூக்க செய்ய சேயின் அழுகை குரல் அந்த தாய்க்கு கிட்டவில்லை.

குழந்தை பிறந்துவிட்டதென்ற சுகத்திலேயே மனம் அமைதியாகிவிட, பிரசவ வலி பொறுத்த உடல் தன் ஓய்வை எடுத்துக்கொள்ள, தன்னாலேயே கண்கள் சொருகி மயக்கமானார். மழைவிட்டு தூறிக்கொண்டு இருக்க, அந்த இடமே நிசப்த்தத்தில் மூழ்கியது.

உண்மை நிலைமை புரிந்த ரோஜா, முற்றிலுமாக ஸ்தம்பித்து போனாள். இருட்ட ஆரமித்துவிட்ட அந்த இரவு நேரத்தில் உச்சி குன்றில், ஏதோ குகைக்குள் இப்படியான ஒரு சூழலை அவள் கனவிலும் நினைக்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ? நிதர்சனம் புரிய, ஆக வேண்டிய காரியங்களை பார்க்க ஆரமித்தாள். சம்யுக்த்தை கொடுத்த, தன்னோடு எடுத்து வந்திருந்திருந்த பையை தேடி பிரித்தவள், அதில் பிரசவத்திற்கு பின் தேவையான அனைத்தையும் இருப்பதை பார்த்தவள், ‘இந்த அம்மா என்ன நினைப்போடு இந்த காரியம் செய்ய துணிந்தார்கள்?’ என்ற எண்ணம் உதித்தாலும், அடுத்தடுத்து முகம் சுளிக்காமல் சம்யுக்த்தையை சுத்தம் செய்தவர். பின், பையை படுக்க போட்டு அதன்மேல் துணியை போர்த்தியவர், பச்சிளம் உடம்பை அந்த கெட்டியான துணியால் சுற்றி அதன்மேல் படுக்க வைத்தார்.

அமைதியாய் ஒரு ஓரம் அமர்ந்தவர், சம்யுக்த்தை கண் திறப்பதற்காய் காத்திருக்க, அடுத்த இருபது நிமிடங்களில் லேசாய் முனகலோடு தன் எஜமாணி முழிப்பதை கண்டவள் அவரிடம் நெருங்கி அமர, மெதுவாக கண் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தார் சம்யுக்தா.

“கோ...கொழந்த...கா..காமி...”

“அம்மா...” என்று தயக்கமாக ஆரமித்தவள், சற்று தள்ளி இருந்த அதனை பார்க்க, “ஏன்? தூங்குறானா?” வேலேந்தியாய் கேட்டு வைத்த அந்த பெண்ணை பார்த்து அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“அம்மா...” அழுகும் கண்களோடு தன்னை வேதனையாய் அழைத்தவளை பார்த்தவள், “என்ன...என்னாச்சு...” என்று இவளை தள்ளிவிட்டு விட்டு நகர்ந்து குழந்தையின்புறம் நகர, சாந்த்தமாக தூங்குவது போல் தான் இருந்தது அதுவும், ஆனால், உடலில் உயிர் தான் இல்லை.

கண்களில் நீர் வழிய அப்படியே மடிந்து அமர்ந்தவர் தான். திக்பிரம்மை பிடித்தவர் போல் அசையாமல் இருக்கும் அவரை கண்டு மேலும் பயம் பிடித்தது ரோஜாவிற்கு.

தான் துணை வந்ததால் தானோ இப்படியான ஒரு சூழலில் அவரை நிறுத்திவிட்டோம். இல்லையேல் இப்படி தைரியமாக அவர் வெளிவந்திருக்க தான் முடியுமோ? இப்படி தன் உயிரை இழந்து தான் தவிக்கும் நிலை வந்திருக்குமா? இது ஊரிற்கும், அரண்மனைக்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தை விட, தங்களை காக்கும் குலத்தில் ஒரு உயிர் இப்படி பறிபோனது நினைத்து மனம் வெதும்பியது அவளுக்கு.

விடியலுக்காய் வானம் பார்த்தபடி, காத்திருக்க ஆரமித்தாள்.

விடியும் முன்பே இரண்டொரு பேச்சு குரல் கேட்க, உடம்பில் சட்டென ஒரு நடுக்கம் ஓடியது. திரும்பி சம்யுக்த்தையை ஒரு நொடி பார்த்தவள், தன் இடுப்பில் எப்போதும் இருக்கும் வெட்டு கத்தியை ஒரு கையால் கெட்டியாக பிடித்தபடி பாறை பின் இடுக்கில் மறைந்து, மெதுவாக தலையை மட்டும் நீட்டி வெளியே பார்க்க,

அங்கே சேனாம்மா கையில் தீவெட்டிவெளிச்சம் ஒன்றுடன் கூடவே இரண்டு காவலாளிகளுடன் வந்துக்கொண்டு இருப்பது தெரிய, அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் உடல் முழுவதும் வியாபித்தாலும், ஒரு நொடியில் சுதாரித்து தபதபவென அவரை நோக்கி ஓடினாள்,

“அம்மா...அம்மா...இங்க...இங்கன இருக்கோம்” என்று கத்தியபடி தங்களுக்கு கை காட்டிக்கொண்டு இருந்தவளை கண்டு அதுவரை பிடித்திருந்த மூச்சை முழுமையாக வெளியிட்டார்.

அடுத்த நாள் மாலை தான் தன்மனை திரும்பிய சேனா, இருவரையும் தேடிக்கொண்டு வர, பணியாள் மூலம், ஏதோ இரவு நேர ஒளிபதிவிர்க்காய் ஜெயதேவ் வெளியே கிளம்பி இருப்பதாக தெரியவர, சம்யுக்த்தையை பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இண்டு இடுக்கை விடாமல் ஆட்கள் விட்டு தேடியும் அரண்மனை எங்கும் சம்யுக்த்தை இல்லாததை உணர்ந்தவர் மனமும் உடலும் விலுக்கென பயத்தில் உறைந்தது.

வீட்டிலேயே தங்கியிருக்கும் பெண், தேவை என்றால் கூட லேசில் வெளியே செல்லாத, வெளியுலக அனுபவம் இல்லாத இந்த பெண், இன்று நிறைமாத கரப்பிணியாய் எங்கே சென்றிருக்க முடியும்?

கடைசியாய் மலைதிசை நோக்கி, இரு பெண்கள் நடந்து சென்றதை தூர இருந்த கண்டதாக சிலர் கூற ஒருவேளை சம்யுக்த்தையாக இருக்குமோ என்ற நினைவுடன் எதற்கும் காத்திராமல் காவலுக்கு இரண்டு பேருடன் கிளம்பிவிட்டார்.

உண்மை நிலவரத்தை அறிந்தால் என்ன ஆகுமோ? தங்கள் வம்சத்தில் அடுத்த வாரிசு – முதல் வாரிசு, பிறக்கும்போதே இறந்து தான் பிறந்தது, அதுவும் ஒரு அவசர முட்டாள் தனத்தினால் நிகழ்ந்தது என்பதை அறிந்தால் முடிவு என்னவாக இருக்கும்?

உயிர் வதை என்பது நம்மை உயிர் விட வைப்பது அல்ல, நம்மை சார்ந்தோரின் உயிரை பறித்து பறித்து நம்மை சகிக்க வைப்பது. அம்மாதிரியான உயிர் வதையை தான் இப்போது சேனாம்மா அனுபவித்துகொண்டு இருந்தார். பிறப்பு முதல் இறப்பு வரை, அவரை கல் போன்று வைத்திருந்து, அவரை சார்ந்தோரை அழிப்பது தான், அதை இவர் சகித்து ஏற்ப்பது தான் அவருக்கு விதிக்கப்பட்ட விதியோ என்று எண்ணங்களே மனம் முழுவதும் உழன்றுக்கொண்டு இருந்தது.

குகைக்குள் வந்து அமர்ந்தவர் தான். ஒரு மணி நேரம் கடந்தும் அந்த சிற்றுடலை தன் மடியில் வைத்தபடி அமர்ந்துவிட்டவர் தான். சம்யுக்த்தையையும் என்ன ஏது என்று பார்க்கவில்லை. காவலாளிகள் இருவரும் வெளியேயே நிற்க வைத்திருந்தவர், அவர் மட்டும் உள்ளே வந்திருந்தார்.

தன் எஜமானிகளின் நிலையை கண்டு செய்வதறியாது, தானும் அந்த கொடுமையான அமைதியை ஏற்றுக்கொண்டு இருந்தாள் ரோஜா.

எவ்வளவு மணி நேரம் கடந்ததோ? மெதுவாக அந்த சிசுவுடலை உச்சி முகர்ந்தவர், ஆழ்ந்து மூச்சை வெளியிட்டு பின் மீண்ட கம்பீர குரலில் அழைத்தார், “ரோஜா”

அவரின் அந்த குரலில் பக்கத்திலேயே இருந்தாலும் விழுந்தடித்துக்கொண்டு ஓடிய ரோஜா அவரருகில் மண்டியிட “இந்தா.” ஒற்றை வரியோடு பச்சை உடலை அவள் கையில் வைத்தவர், இனி இந்த ஊர் உனக்கு சொந்தமில்லை. இதை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே மாயாறு அருகே போ, உன் குடும்பத்தையும் அனுப்பி வைக்கிறேன்.” என்று அழுத்தமாக கூறியவர், தனது கழுத்தில் இருந்த ரெட்டை ஆரம், கையில் இருந்த நான்கு வளையல், இரண்டு மோதிரம் என அனைத்தையும் கொடுத்து, “சென்றுவிடு” என்று கூறிய நொடி, எப்படி தான் சம்யுக்த்தை சூறாவளியை போல் எழுந்து அவர்கள் அருகே வந்தாரோ

ஒரே இழுவாய் சிசுவுடலை பறித்தவர் இரண்டு பேரையும் பயத்தோடு பார்க்க, “சம்யும்மா...அதை இவளிடம் கொடுத்துவிடு. இது உன் வாழ்க்கையையே...இந்த ஊரின் சொச்ச நிம்மதியையும் பறித்துவிடும்டா. வேண்டாம், சொன்னா கேளு.”

“அத்தை...அத...இது...இவன்...என் குழந்தை அத்தை...நம்ம வீட்டு வாரிசு...இவனை போய் ஒரு வேலைக்காரியிடம் கொடுக்க சொல்லுறீங்க...நான்..நான் இங்க நம்ம ஊரு சாபம் போக்க தான் வந்தேன் இது..இவன் நான் நிறைய மழைல நனைஞ்சி...மலைலாம் ஏறினதால...நாம அரண்மனைக்கு போனா சரி ஆகிடுவான்” சித்தம் கலங்கியவர் போல் பிதற்ற ஆரமிக்க ‘என்ன சொல்லி தேற்ற அந்த பைத்திய பெண்ணை’ என்று தெரியாமல் கலங்கிப்போனார்.

அறையும் குறையுமான கலையறிவால், அசட்டு துணிச்சலால் அன்று சுபத்திரையின் மகன் இறந்தான். இன்று, அதே போல் ஒரு விஷயத்தால் சம்யுக்த்தையின் மகனும் இறந்தான். ஒரே ஒரு வித்தியாசம் தான் அங்கு மகனின் செயல், இங்கோ தாயின் செயலே. அது தான் இருப்பதிலேயே கொடுமையான விஷயமாக இருந்தது.

“சம்யுக்த்தா...சம்யுக்த்தா.........” என்று கத்தி அவரை உலுக்கியவர், மீண்டும் அவரிடமிருந்து உடலை பறித்து ரோஜாவிடம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார்.

அவ்வளவு தான்..அவ்வளவே தான்...!!! அப்படி தான் நினைத்தார், ஆனால் சோதனைகள் இன்னும் முடியவில்லை என்று விதி ஒரு பக்கம் நின்று அவரை பார்த்து சிரித்ததோ?

யாருக்கு பயந்து உடலை கூட அடக்கம் செய்யும் கதியற்று பாவத்தை சேர்த்துக்கொண்டு பணிப்பெண்னிடம் கொடுத்து அனுப்பி வைத்தாரோ, அவர் விபத்தில் சிக்கியிருந்தார். ஆம், ஜெயதேவ் மலை பக்கம் அருவி காட்டில் தன் வேலைக்காய் சென்றிருந்தவர், சரிவில் சிக்கி விழுந்திருந்தார்.

ஒரு பக்கம் பேரனின் இழப்பு, ஒரு பக்கம் மருமகளின் நிலை, மறுபக்கம் எப்படி மகனை சமாளித்து இந்த குடும்பத்தையும், ஊரையும் காப்பாற்ற போகிறோம் என்று கலக்கத்துடன் வந்தவர் மனம் இந்த செய்தியில் முற்றிலுமாக உடைந்தது. கலக்கம், பயம், சோகம் அனைத்தையும் தாண்டி புத்திர சோகம் அவரை வாட்டியது.

இந்நிலையில் மருமகளை தனியே விட விருப்பமற்று, கூடவே அழைத்துக்கொண்டு பெரிய மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

கை கால் உடைந்த நிலையில் தலையிலும் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக செய்தி அவர்களை வந்து சேர, பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டு இருந்த சம்யுக்த்தை மயங்கி சரிந்தார். உருக்குலைந்து இருந்தவர், உயிரை விடவே துணிந்துவிட்டார் மனதால்.
‘எழுப்ப முடியாத நிலையது’

அது கொடுமையான காலம், முழுதாக மூன்று நாட்கள் உயிருடன் நரக வேதனையை அனுபவித்தார் சேனாம்மா. என்ன பாவம் செய்தேனோ என்று பரிதவித்து, என்ன செய்தால் துன்பம் கழியும் என்ற நிலைக்கு தள்ளி, கடைசியில் அனைவரும் உயிரும் பறிபோவதை காண்பதற்கு தன் உயிர் பிரிந்துவிடலாமே என்று கதறியது அவர் மனம்.

எதற்கு இந்த பிறவி?
எதற்கு இத்தனை வேதனை?
எதற்கு இந்த சாப வாழ்வு?
எதற்கு இந்த அற்ப சந்தோசங்கள்?
எதற்கு இந்த தேடல்?
எதற்கு இந்த போராட்டம்’?
எதற்கிந்த கடமை?
எதற்கு இந்த பிணைப்புகள்?
எதற்கு? எதற்கு? எதற்கு?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்துவிட்டால், நாம் கடவுளை மறந்துவிடுவோமே? செய்த பாவம் பழி தீர்க்காமல் விடாதமே? அப்படி என்ன பூர்வஜென்ம பாவத்தை சுமந்து இத்தனை வேதனையை கொடுத்துக்கொண்டே இருக்கிறது இந்த விதி?

முடியா கேள்விகளுக்கு விடை தெரியாமல், தனியாக தத்தளித்தது அந்த உள்ளம்.

அவர் வாழ்வே ஒரு போர்க்களம்!!! பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் கட்டிகாக்க வேண்டிய நிலை. தலையில் சுமை ஏந்தினாலும், காலில் முற்பாதை குத்தினாலும், நிமிடம்தோறும் குருதி வழிந்தாலும், அவர் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்விதாகி போனது.

வெளியிலிருந்து பார்போருக்கு இது எல்லாம் பைத்தியகாரதனமாக தோன்றும். ஆனால், இதுவோ மாயசேக்திரம்! அந்த குருசேக்திரம் நடந்ததும் விதியே – கடமைகளால் கட்டப்பட்டு, பாசத்தால் பிணைக்கப்பட்டு, பற்றுதலால் தோற்கபட்டு, ஆசைகளால் கட்டப்பட்டு, சதிகளால் சாய்க்கப்பட்டது. இதுவும் அதுபோன்ற ஒரு போர்களமே.

சாபமா? பைத்தியகாரதனம், பந்தமா? முட்டாள் தனம், பிணைப்பா? அற்பத்தனம், என்று கூறுபவர்களுக்கு இது புரியாத புதிர் தான். இவர்கள் கட்டுப்பட்டவர்கள்! கட்டுபடாதவர்கள் ஓடி ஒளிந்தாலும் நடக்க வேண்டியது நடந்தே ஆகும்.

தன் பசி தீர்க்காது ஓயாதாம் வஞ்சிக்க பட்ட வாழ்வு!

முழுதாக மூன்று தினங்கள் கடந்த பின்பே கண் விழித்தார் ஜெயதேவ். அன்னையை கண்டு அமைதியடைந்த அவர் மனம், தன்னவளை தேடியது. எங்கே? காணுமே! அவர் தான் உலகை துறக்க முடிவெடுத்துவிட்டவரே?

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தால், ஜெயதேவின் முடிவு?

மழை தூறும்...!!!
 
Top