• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
108
தூறல் 35

சம்யுக்த்தையின் நிலையில் அவரை தனியே விட இயலாமல் அவருக்கு ஆறுதலாக சமாதானம் செய்தபடி சேனாம்மாவும் உடனே இருக்க, விசுவாசமான வேலையாள் மூலம் விஷயம் அறிந்து இவர்கள் தடுக்குமுன், ஜெயதேவ் அரண்மனையை வாசலை நெருங்கியிருந்தார்!

படிகளின் மேலிருந்தே இதனை கண்டுவிட்ட சேனாம்மா, “ஜெயா நில்லு.” என்ற உத்தரவு குரல் இதற்குமேலும் அவரை நிறுத்துமா என்ன? விடுவிடுவென வெளியேற முயன்றவரை அங்கே விளையாடிக்கொண்டு இருந்த குட்டி மாதவன் ஓடி வந்து தடுக்க,

தன் அத்தை கொடுத்த புது பொம்மையான குழந்தையை எடுத்து போகும் மாமனை கண்டு பதறிய மாதவன், “மாமா...மாமா...பாப்பா...கொடு...பாப்பா...” என்று அவர் கையை எக்கி இழுக்க முயல, இருந்த கோவத்தில் அவனை பிடித்து ஒரே தள்ளாக தள்ள, அங்கிருந்த பெரிய பித்தளை குத்துவிளக்கின் அடியில் இடித்து கீழே விழுந்தான்.

தலையில் ரத்தம் கொட்ட கொட்ட அவனை தூக்கிக்கொண்ட ஆதித்தியன், “ஜெயா என்ன காட்டுமிராண்டிதனம்? என்னாயிடுச்சு உனக்கு?” என்று கோவமாக கேட்க, ஒரு நிமிடம் சிறுவனிடம் கோவத்தை காட்டிய குற்றவுணர்ச்சியால் நின்றாலும் பின் அதை கண்டுக்கொள்ளாமல் வெளியே போகும் ஜெயதேவ் நகர, மாதவன் தலையில் ஏற்ப்பட்ட பெரும்காயத்தால் பயந்து அழுது அழுது லேசான மயக்கத்திற்கு சென்றுக்கொண்டு இருந்தான். இந்த களேபரங்களில் கத்தி கத்தி அழுத மாயாவை, பிறந்த குழந்தை என்றும் பாராது தூக்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார், மொத்தமாக!!!

மயங்கி விழுந்த மாதவனை ஆதித்தியன் தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்ல, அரண்மனையிலேயே இடிந்து தூணோடு அமர்ந்துவிட்டார் சம்யுக்த்தை. தான் செய்த முட்டாள் தனம் தன் வாழ்க்கையையே பலியாக்கிவிட்டதே என்பது மட்டுமே அவர் மனதில் ஆழ பதிந்து போனது.

மருத்துவமனையில் இருந்து வந்த மாதவனோ தன வலியையும் மீறி மாயாவின் பிரிதலை எண்ணி எண்ணி அழுது உடம்பு வர வைத்துக்கொள்ள, சிறுவனிடம் என்னவென்று கூறி சமாதானம் செய்ய என்று தெரியாமல் அனைவரின் துவண்டிருந்த மனது மேலும் துவண்டது. சேனாம்மாவின் நிலையை கேட்கவே வேண்டாமென்றாலும் அவர் மற்றவர்களை போல் சமைந்துவிடவில்லை. அவர் வயதையும் மீறின பல விஷயங்களை கையாண்டுவிட்டவருக்கு, அடுத்து என்ன என்பதே எண்ணத்தில்!

ஆனால், ஜெயதேவோ தான் அவர் மகன், தாய் எட்டடி பாய, பிள்ளை நான் பதினாறு அடி பாய்வேன் என்பதை போல் கையோடு வெளிநாடு சென்றவர், அதன்பின் வரவேயில்லை. மாதவனின் மனத்திலும் ஜெயதேவின் மேல் தீராத வெறுப்பு வளர ஆரமித்தது.

வருடங்கள் நகர, கிருஷ்ணாதேவும், மயுரிக்கா தேவியும் பிறந்து அந்த குடும்பத்தை பெருக்க, மூவரும் வளர வளர, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அரண்மனையின் கலகலப்பு திரும்பியது. என்னதான் அதிதேவ் மாதவ வர்மன் சகஜமாய் இருந்தாலும், அவனின் இந்த சிறுவயது நிகழ்வும் அவனின் இயல்பையே சற்று மாற்றி தான் விட்டதோ என்னமோ?

அந்த மாற்றமும் நல்வகையிலேயே அமைந்தது என்பதைவிட, சம்யுக்த்தை அவனை செதுக்கினார் என்று தான் சொல்ல வேண்டும். தேவைக்கு அதிகமான முதிர்ச்சியும், அமைதியும், ஆழ்ந்த சிந்திப்பும் அவனோடு வளர்ந்தது. அதனாலேயே என்னவோ, சிறுவயதிலிருந்தே சௌந்தர்யாவை விட சம்யுக்த்தையிடமே அவனிற்கு ஒட்டுதல் அதிகம்.

மேற்படிப்பிற்கென வெளிநாடு சென்றவன், வந்தது என்னவோ பாட்டியின் அவரச அழைப்பின் பேரில் தான். ஏன் எதற்கு என்று எதையும் தெளிவாக சொல்லாமல் “நீ வரவில்லை என்றால் நம் பரம்பரை மானமே போய்விடும், இவ்வளவு நாள் கட்டி காத்த மரியாதையும், தாங்கிய சோதனைகளும் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிடும்” என்று அழாமல், ஆனால், துக்கம் தொண்டையை அடைக்கும் குரலில் கூற,

ஒரு பக்கம் அவன் அத்தை சம்யுக்த்தையும் “மாதவா... என் பொண்ணையும் நம் மண்ணையும் எப்படியாவது காப்பாத்திடுடா” என்று கதற, ஒன்றும் புரியாமல் அடித்து பிடித்து இந்தியா வந்து சேர்ந்தான்.

வந்ததும் வராததுமாய் மாடியில் இருக்கும் ஒரு அறைக்கு வருமாறு கூறிவிட்டு பணியாள் விலகி செல்ல, எதற்கு அழைக்கிறார்கள் என்று புரியாமல் அங்கே சென்றவனுக்கு, அங்கே படுக்கையில் இருந்த ஜெயதேவை கண்டதும் விஷயம் பெரியது என்று விளங்கியது ஒரு பக்கம் என்றால், தன் போல் அவன் வலது கை உயர்ந்து நெற்றி தழும்பை வருட, மனதில் இருந்த வெறுப்பு ஒரு பக்கம் காய்ந்தியது. அதுவே அடுத்தடுத்த நாட்களில் அவன் மாயாவை சந்திக்கும்போது அவள்மீதும் அதன் சிதறல்களை சிந்தியது.

அனைத்தையும் ஜெயதேவ் மற்றும் சேனாம்மா மூலம் அறிந்துக்கொண்டவன், இனி தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையேல் அனைத்தும் வீண் என்பதை தெளிவாக புரிந்துக்கொண்டான்.

எனவே தான், சில சமயங்களில் தீராத கோவம் சமந்தமே இல்லாது மாயாவின் மேல் எழுந்தாலும், அதை ஓர் அளவிற்கு கட்டுக்குள்ளேயே வைத்து சமாளித்தான், என்றாலும், எந்த இடத்தில், எந்த கட்டத்தில் அவள்மீது அவனுக்கு எழும் உரிமை உணர்வு தன் எல்லையை கடக்க முயன்றது என்று அவனே அறியான்.

அவர்களுள் நடந்த திருமணம் திட்டமிட்டு தான் என்றாலும், அந்த திட்டத்தை சிதறவிடாமல் தீட்டியவனும், அதிலேயே கவிழ்ந்து விழுந்தது, காதல் சதி தவிர வேறென்ன?

**********************

போஸ்ட் லஞ்ச் பின்னான மீட்டிங்கில் அனைவரும் அமர்ந்திருந்தனர், மதுரினி அளவுக்கு அதிகமான அமைதியுடனும், அதிதேவ் அளவுக்கு அதிகமான இறுக்கத்துடனும் அமர்ந்திருக்க, மீதி அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி திருதிருத்துக்கொண்டு இருந்தனர்.

ஒருவழியாய் அதிதேவ் தன மடிகணினியை இயக்கியவன் மீண்டும் அந்த பிரம்மாண்டமான அரண்மனையின் நிழற்படத்தை சுவர் முழுவதும் விழுமாறு ப்ராஜெக்ட் செய்ய, தெரிந்தே தடுமாறுவது முட்டாள்தனம் என்பதை உணர்ந்தவள் போல், மனதை திடபடுத்திக்கொண்டு நிமிர, இப்போது முழுவதுமாய் இறுகிபோய் அமர்வது இவள் முறையாயிற்று.

பாலை பருகினாலே பற்று வந்துவிடுமோ என்று காலையில் அவளுக்கு கரிசனமாய் வழங்கப்பட்ட பாதாம் பாலை சீண்டாமல் தவிர்த்தவள், இப்போது, பார்வை முழுவதும் நிரம்பி, ஏற்கனவே ஊன் மற்றும் உயிர் முழுவதும் கலந்துவிட்டிருந்த கணங்களை எங்கே சென்று தொலைக்க என்று தெரியாமல் தடுமாறினாள்.

அதிதேவோ ஒவ்வொன்றாய் அவர்கள் முயற்சியை பற்றியும் அவர்கள் போட்டிருக்கும் திட்டம் பற்றியும் மேலோட்டமாக கூறிக்கொண்டே வந்தாலும், பார்வை முழுவதும் மதுரினியையே துளைத்துக்கொண்டு இருந்தது. அவனின் பங்கு முடிந்ததும், ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டனர்.

எப்படியாவது இந்த சக்ரவியுகத்தில் இருந்து தப்பிவிட துடிக்கும் மனதோடு எதிரே தெரியும் பழைய அரண்மனையை வெறித்தபடி இவளும், எப்படியாவது உட்புகுந்து அவளையும் கைப்பற்றி, தன்னையும் காப்பாற்றிக்கொள்ள போராடும் எண்ணத்தோடு அவளையே பார்த்தபடி அவனும், வெவேறு சிந்தனையில் சிக்கியிருக்க, மீதி அனைவரும் அடுத்ததாக அவர்களுக்கு கொடுக்க பட்டு இருக்கும் புது வேலையை பற்றி பேசிகொண்டு இருந்தனர்.

பிடித்த வேலை, பிடித்த வகையில் செய்ய அங்கு தடையே இல்லை என்பதால் இந்த புது ப்ராஜெக்ட் அவர்கள் அனைவருக்கும் ஒரு வகையில் உற்சாகத்திலும், அடுத்து என்ன என்ற ஆர்பரிப்பிலும் ஆழ்த்தி இருந்தது.

சிறிது நேரம் முன்பு அதிதேவ் சொன்ன விஷயங்கள் அப்படி...

“லுக் கைஸ், இந்த ஒரு வாரம் எடுத்த வாம்அப் மூட் இத்தோடு முடியுது. இனி கொஞ்சம் சிரியஸா நம்ம வேலையை கவனிக்க ஆரமிக்கணும். இதுவும் கிட்டத்தட்ட வான்டர்லாஸ்ட் போல தான், ஆனா, கொஞ்சம் ரிஸ்க் நிறைந்த வேலை” என்று நிறுத்தி அனைவர் முகத்தையும் ஒரு முறை பார்க்க, என்னவென்று கேள்வி அனைவர் முகத்திலும் தொக்கி நின்றது.

“இது நாம கவர்ன்மென்ட் ஓட சேர்ந்து செய்ய போற ஒரு முக்கியமான ப்ராஜெக்ட். அதாவது, நம் மூலமா நடக்குற ஒரு வித இரகசிய ஒபேரேசன். ஆனா நம்ம நாட்டோட பெருமைகளை தூக்கி நிறுத்தபோற ஒரு ப்ராஜெக்ட். மக்கள்கிட்ட இதுக்கு நிறைய நிறைய கொஞ்சம் நெஞ்சமில்ல நிறைய எதிர்ப்பு கிளம்பும். ஏனா இதுபோன்ற விஷயங்கள் எல்லாமே ரூரல் அதாவது, கிராமிய திசைகள தான் அதிகமா புதைஞ்சிருக்கு”

“நம்ம நாடுனு மட்டுமில்லை, வடநாடு, ஏன் அடுத்த நாடு, அடுத்த கண்டம்னு ஊருக்கு ஊரு ஏதாவது ஒரு ரகசிய பாதுகாப்பு நிறைஞ்ச விஷயங்கள் இருக்கும். அது பொருளா இருக்கலாம், வளமா இருக்கலாம், முக்கியமான விஷயங்களை தாங்கிய ஓலைகளா இருக்கலாம், சிலை, கலை இப்படி எதுவாவேனா இருக்கலாம்.

எனக்கு தெரிந்து ஒரு ஊருல அக்கால மனித ஸ்பரிசம் படாத மூலிகைகளாலான சிலை ஒன்னை அந்த ஊரு பெரியவரு வீட்டு சுரங்கத்துலேயே வைத்து பூஜை செய்துட்டு வந்திருக்காங்க. அதோட பயன்பாடு, நலன், எதுவும் தெரியாம வெறும் கடவுளா மட்டும் வைத்து வழிபட்டுட்டு வந்துட்டு இருக்காங்க.

அதில் அபிஷேகம் செய்து எடுக்குற பாலை அருந்தினா காலத்துக்கும் கான்செர் போன்ற பயங்கர செல்களையே எதிர்த்து போராடும் இம்முயுன் நம் உடலில் சுரக்கும் என்று பேசப்படுது!? ஆனா, இது எல்லாம் செவி வழி செய்தி தான். அதுக்கான ஆதாரம் என்று ஒண்ணுமே இல்லை!

வெளி மனிதர்கள் யாராவது போய் கேட்டா கூட அப்படி எதுவுமே இங்கே இல்லையே என்று சாதிச்சிடுவாங்க. இந்த மாதிரியான விஷயங்களை தேடி கண்டு பிடித்து ஆதாரத்தோட அரசாங்கம் முன்னாடியும், மக்கள் முன்னாடியும் காண்பித்து அதை அதிகாரபூர்வமா சட்டபூர்வமா மாத்தி அந்தந்த ஊரு மக்கள்கிட்டயே சேக்குறது தான் நம்ம வேலை.

இதில் இருபது சதவீதம் தான் அரசாங்கம் கைகோர்க்குறாங்க மீதி மொத்தம் நம்ம வேலை, இது நம்ம எஸ்கபெட்காக மட்டும் ஆரம்பிக்க போகிற வேலையில்லை, நம்ம நாட்டுக்காகவும், மக்கள்காகவும், அரசாங்கத்துக்காகவும் ஈடுபட போகிற வேலை. இத்தனை வளங்களும் அமிழ்த்தி வைத்திருப்பது, அந்நிய மனிதர்கள் அதை சிதைத்துவிட கூடாதுன்னு தான், அதே பயம் அரசாங்கத்திடமும் இருக்கு.

இப்போவே இதுபோல மறைத்து வைத்திருக்க வளங்களை கண்ணுக்கு தெரியாம நம்ம நாட்டு ஆட்களே, அரசியல்வாதிகளே களவாண்டு வெளி தேசங்களுக்கு விக்குறாங்க இதையெல்லாம் தடுக்கவும் தான் இந்த அசைன்மென்ட்.” என்று நீண்ட பேச்சை முடித்து அனைவரையும் ஒருமுறை பார்த்து இறுதியில் மதுரினியை நேர்பார்வையாக பார்த்தவன்,

“இது எல்லாத்துக்கும் தொடக்க புள்ளியா அமைய போறது தான், ‘மாயசேக்த்திரம்’ மாய வால்” என்று கூறி, துளைத்தெடுக்கும் பார்வையை மதுரினியின் மீது செலுத்த, ஒரு நிமிடம் நெற்றியை சுருக்கியவள், பின் எனக்கும் இதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதுப்போல் இருந்துக்கொண்டாள்.

இடைவெளிக்கு முன்னான பேச்சில், அதிதேவ் அனைவரிடத்திலும் ஒரு வகையான சுவாரஸ்யத்தை கிளப்பினான் என்றால், அதற்க்கு பின்னான மதுரினியின் பேச்சு அனைவரையும் திகிலடைய செய்வதாக இருந்தது.

மழை தூறும்...!!!
 
Top