• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
108
தூறல் 36

“வணக்கம், நம்ம மிஸ்டர்.அதிதேவ் சொன்ன மாதிரி இது சுவாரஸ்யமான, நாட்டுக்கு தேவையான ஒரு வேலை என்றாலும், இது ரொம்ப ஆபத்து நிறைந்த ஒரு வேலை என்பத நாம கவனத்துலகொள்ளனும்! எப்படின்னு கேட்டிங்கனா!? இப்போ சமீபத்துல ஒரு கொலை, அதுவும் கொடூரமான ஒரு சம்பவமா நிகழ்ந்தது. சென்டினல் ஐலாண்ட் அத்து மீறி நுழைந்த வெளியால பழமை ஆதிவாசிகள் எல்லாம் சேர்ந்து துண்டு துண்டா வெட்டி போட்டுட்டாங்க.

அவங்க ஆதிவாசிங்க பல்லாண்டு காலமா வெளியுலகத்தோட தொடர்புல இல்லாதவங்க அதுனால அப்படின்னு நாம நினைக்கலாம்

ஆனா, அந்த அளவுக்கு மூர்க்கம் இல்லனாலும், தங்களோட ஒரு பொருள், அதுவும் காலம் காலமா ரகசியமா பாதுகாத்துட்டு வர ஒரு பொருளுக்கு வெளி ஆட்கள் மூலமா ஆபத்து வருதுனா அதே அளவுக்கான மூர்க்கம், ஏன் இன்னும் வில்லங்கமா-கொடூரமான-இந்த காலத்துக்கு ஏத்தமாதிரியான யுக்திகளோட தாக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவம் இது, ரொம்ப பரபரப்பா பேசப்பட்டுது. இதோ நம்ம நாட்டுல, நம்ம ஊர் பக்கம் நடந்தது தான், தாங்கள் பதுக்கி வைத்து வழிபடுற ஓலை சுவடிகள ஆராய்ச்சி பண்ண கேட்டு போன, இரண்டு அரசு வேலையாட்கள உயிரோட எரிச்சு விபத்துன்னு சாதிச்சிட்டாங்க! இதுபோல பல வெளியுலகத்துக்கு தெரிய வந்த சம்பவமாகவும் சரி, வெளில வராத மறைச்சிட்ட சம்பவங்களும் சரி உதாரணமா காமிக்கலாம்”

உயிரோட எரிச்சிட்டாங்க என்று தான் கூறும்போது அனைவர் கண்களிலும் வந்துபோன பீதியை கண்டு லேசாய் சிரித்தபடி கூறி முடித்தவள், மீண்டும் தன பேச்சை தொடர்ந்தாள்.

“இப்போ நாம முதல போக போற ‘மாயஷேக்திரம்’ அந்த ஊர்ல அந்த ஊர் மக்களுக்கே எங்க இருக்குனு தெரியாத ஒரு மாயவாள், அதை தேடி போக போறோம் இல்லையா? அந்த வாள் எங்க இருக்குனு அந்த ஊர் மக்களுக்கே தெரியாது! அந்த அரண்மனை மக்களுக்கே தெரியாது! ஆனாலும் அந்த வாள் பத்தி கேட்டு நம்மளால அந்த ஊர் எல்லையை தாண்டி ஒரு அடி கூட உள்ளே எடுத்து வைக்க முடியாது! அதையும் தாண்டி பல மர்மங்களும், ஆபத்துக்களும் நிறைந்த இடம் மாயஷேக்திரம்

நான் சொல்லுறது பொய்னு நினைத்திங்கனா இது எல்லாம் தெரிந்த அந்த ஊர் சேர்ந்த, அந்த அரண்மனையை சேர்ந்த ஆள், இங்க நம்ம கூடவே இருக்காங்களே அவங்ககிட்டயே கேட்டு தெரிந்துக்கலாம்” என்று தைரியமாக அங்கே கால்மேல் கால் போட்டு இமைகூட சிம்மிட்டாது அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்த அதிதேவை தைரியமாக கை காட்டினாள்.

அப்படி தன்னை சட்டென வெளிபடுத்துவாள் என்று நினைக்காத அதிதேவ் ஒரு நொடி அழுத்தமாக கண்களை மூடி திறந்தாலும், தைரியமாகவே அனைவரையும் எதிர்க்கொண்டான்.

அனைவரின் பார்வையும் தன மீது இருப்பதை ஒருவித ஆழத்துடன் பார்த்தவன், அமைதியாகவே அமர்ந்திருக்க, ஒரு நொடி மேடையிலேயே நின்று அவனை கூர்ந்தவள், தோளை குலுக்கிக்கொண்டு கீழ் இறங்கி தன இடம் வந்து அமர்ந்துக்கொண்டாள்.

“மது சொல்லுறதுலாம் உண்மையா” என்று மானா அவனை நேரடியாக கேட்க,

“வெல், எஸ், அது என்னுடைய ஊர், என்னுடைய ராஜ்ஜியம், என்னுடைய வம்சத்தில் வாள் தான்” என்று ஒப்புக்கொண்டவன், மேலும் தொடர்ந்து,

“இந்த ப்ராஜெக்ட் என்னில், எங்க ஊரில் இருந்து தொடங்கட்டும் என்று நினைத்தேன், அவ்வளவு தான்.” என்று கூறிவிட்டு விடுவிடுவென வெளியேறிவிட்டான். அனைவரும் அதன்பின்பு களைந்து செல்ல, மதுரினி இறுதியாக வெளியேறி தங்கள் வீடு வந்து சேர்ந்தாள்.

எப்போதும் போல் ப்ரீ-ஸ்கூல் சென்று தன் மகனை அழைத்து வர சென்றவள், அங்கே அவனை காணமல், அவனின் மகி மிஸை கேட்க, அவரோ அவனை அவனின் அப்பா வந்து அழைத்து சென்ற கதையை கூற, அதில் கோவம் உச்சிக்கு ஏறியவள், அந்த ஆசிரியரை ஒரு வழியாக்கிவிட்டு, கோப மூச்சுக்களுடன் தங்கள் வீடு நோக்கி திரும்பினாள்.

வீட்டிற்க்குள் நுழைந்தவள், உடையை கூட மாற்றாமல், உக்கிரமாய் சோபாவிலேயே அமர்ந்திருக்க, அப்போது தான், தன் தந்தை தேவாவுடன் கொஞ்சி குலாவி, ஐஸ் கிரீமை முழுங்கிவிட்டு கை நிறைய விளையாட்டு பொருட்களுடன் உள்ளே நுழைந்த அஸ்வந் அங்கே கோவமாய் அமர்ந்திருக்கும் தாயை கண்டு மெதுவாக அவளிடம் செல்ல, பளீர் என்ற அறையில் தரையில் சுருண்டு விழுந்த குழந்தையை பதறிபோய் ஓடி வந்து அள்ளி தூக்கினான், அதிதேவ்.

“ஹொவ் டேர் யு...” கண்களில் ரௌத்திரம் பொங்க அவளை அடிக்க நெருங்கியவன், குழந்தையின் தொடர்ந்த அழுகுரலில் தன்னை தானே கட்டு படுத்தியவனாய், அஸ்வந்தை சமாதனம் படுத்த ஆரம்பித்தான்.

அடித்த பின்பே தான் செய்த செயலின் வீரியம் உணர்ந்த மதுரினியோ தலையை பிடித்தபடி அப்படியே கீழே அமர்ந்துவிட, தன்னை அடித்த தாயிடமே தஞ்சம் புக விரும்பிய குட்டியோ தந்தையை விட்டு நெளிந்து கீழிறங்கி மதுவை சென்று கட்டிக்கொண்டு ஒ என்று அழுதது. மூன்று வயதை மட்டுமே நெருங்க போகும் குழந்தைக்கு என்ன தெரியும்? என்ன சமாதனாம் செய்தும் தாய் தன்னை முதல் முறையாய் அடித்ததில் பயந்து, துக்கம் பொங்க இதழ் பிதுக்கி அழுது அழுது தூங்கி போனது.

அதுவரை அமைதியாய் இருந்த அதிதேவ், வேகமாக அவளை நெருங்கி அவள் மடியில் இருக்கும் குழந்தையை அள்ளிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான். அவ்வளவு நேரம் சுயம் மறந்து குற்றவுணர்வில் இருந்தவள், அதிதேவின் உரிமையான அந்த செயலில் மீண்டும் பழைய மதுரினியாய் கோவமாய் எழுந்து அவன் பின்னோடு போக, அதே நேரம் உள்ளே குழந்தையை படுக்க வைத்துவிட்டு வெளியே வர, இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டனர்.

சட்டென விலகியவள், நகர்ந்து நிற்க, மீண்டும் வேண்டும் என்றே அவளை இடித்துக்கொண்டு நகர்ந்தவன், கூர்மையாக அவள்மேல் பார்வையை நிலைக்கவிட்டான்.

“அவன்கிட்ட நெருங்க முயற்சி செய்யாதிங்கனு உங்களுக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? ஏன்? இன்னும் ஏன் எங்களை தொரத்திட்டே இருக்கீங்க? போயிடுங்க” கை கூப்பி கெஞ்சும் குரலில் கேட்டுவிட, அவனுக்கு வந்ததே கோவம்,

“என்னடி? இல்லை என்னனு கேட்க்குறேன்? என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? வேண்டாம் என் கோவத்தை கிளராத அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்” வெறி பிடித்தவனை போல் கத்தும் அவனை வெறித்து நோக்கினாள்.

எப்போது இருந்து இவனுக்கு இவ்வளவு உரிமை எண்ணம் தோன்ற ஆரம்பித்தது என்கிற எண்ணம் தான் அவளுள். அவனின் எப்போதுமே இருக்கும் உரிமை உணர்வை அவள் உணர்ந்திருந்தால் தானே?

“என் உயிர் தானே உங்கள் தேவை? அதை...அதை...இந்த ப்ராஜெக்ட்...இந்த பயணத்துலேயே உங்களுக்கு கிடைத்துவிடும். எனக்கு தெரியும், ஆனா, நானே இல்லனா கூட என் மகனுக்கு உங்க யாரோட உறவும் வேண்டாம்” வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு செல்லும் அவளை புயல் வேகத்தில் நெருங்கியவன், அவளின் கழுத்தை நெருக்கிவிட்டான்...

“எதுக்கு? எதுக்கு அவ்வளவு நேரம்? இங்கே இப்போவே உன்னையும் கொன்னுட்டு நானும் செத்துடுறேன், அங்க ஒரு ஊரும் காவு வாங்கபடட்டும்” தானும் கோவத்தில் என்ன பேசுகிறோம் என்றில்லாமல் கத்தினான், மீண்டும்.

அவனிடமிருந்து விடுபட முயன்றுக்கொண்டு இருந்தவள், மூச்சுக்கு திணற ஆரம்பிக்க, சட்டென அவளை விடுவித்தவன், அப்படியே விலகி சென்று அமர்ந்தான். சிறிது நேரம் அங்கே மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய,

“நம்ம விதி, நம்ம தலைல என்ன எழுதியிருக்குன்னு நமக்கு தெரியும். இது விடுபட முடியாத ஒரு பாதை. இந்த பயணம் எப்படி முடியும்னு நமக்கு தெரியும். ஆனா, இதோட ஆரம்பமும் நகர்வும், நிம்மதியும் சந்தோசமுமா தான் இருக்கணும்னு நினைக்கிறேன். அஸ்வந் நம்ம கூட தான் வருவான், அவனை எங்கேயும் விடும் ஐடியா இருந்தா அதை இப்போவே அழித்திடு. நமக்கு என்ன ஆகினாலும், என் மகன், ஹூம் நம் மகன், நம் மகனா தான் வளருவான். தேவையில்லாத எதையாவது பேசி, செய்து என்னை முழுசா மிருகமாக்காத” என்று அழுத்தமாக கூறியவன், பின்,

“நான் அன்னைக்கு சொன்னதே தான் இன்னைக்கும் சொல்லுறேன். உன்னை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது, யு ஆர் மைன், விலகினாலும் என் நினைவுகள் உன்னை துரத்தும். பின்னோடு நானும் வருவேன்... இறப்பு என்றாலும் சரி!” அவனின் பேச்சை, அதே ஆழமான பேச்சை கேட்டவள், அவனின் கடைசி வரியில் விக்கித்து நிமிர,

“இது இப்போ இல்லை. நீ பிறந்த ஹூம், நீ பிறப்பதற்கும் முதல் இருந்தே முடிவு செய்யப்பட்ட ஒன்னு. அதை மாத்த முயற்சி செய்தா அது வீண் தான்” என்று கூறியவன், எழுந்து பால்கனியில் சென்று நின்றுக்கொண்டான்.

அவளோ நகரமால் அப்படியே அமர்ந்துவிட்டாள். இவன், அவள் உணர்ந்த தேவா இல்லை. இவனில் உண்மையும் நேசமும் வெளிப்படுகிறது, அது அவளையும் பாதிப்பதை உணர்ந்தாள். என்றாலும், வீம்பிற்க்கென்றே, அவன் நடிப்பதாக எண்ணிக்கொண்டாள். விதி அவளின் முகத்தில் அறைந்தாலும், அவனிடம் அடிவாங்க அவளின் தன்மானம் இடம் தரவில்லை.

அப்படியே கண்மூடி இருக்கையில் சாய, அதிதேவும் கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றான். இருவர் இருண்ட கண்களிலும் அன்றைய இருண்ட பக்கங்கள்.

*********************

உண்மை மொத்தம் தெரிந்த பின் அமைதியாகிவிட்டாள், மதுரினி மாயாதேவி. அப்படி தான் நினைத்தார்கள் தேவாவும், சம்யுக்த்தையும். உணர்வுகள்-உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தன அறையில் தனியாகிவிட்டவளை மீண்டும் யாராலும் நெருங்க முடியாது போயிற்று.
அவள் மனமெல்லாம் ரணமாக, ஏதேதோ யோசனைகள் அவளை விரட்டிக்கொண்டே இருந்தது. “ஐந்து தலைமுறையாய் இழப்புகள் நேர்ந்தும், அடுத்தது காவு கொடுத்திருக்கிறார்கள்...ஊருக்காக என் அப்பா என்னை விட்டு சென்றுவிட்டார்...உடலை பற்றி மட்டுமே எண்ணம் கொண்ட ஒருவனிடம் வாழ்க்கையை பகிர்ந்துவிட்டேன் இந்த பாழாய் போன விதியால்...பாட்டி, அம்மா, உறவுகள் யாருக்கும் பாசம் என்பதே இல்லாது போனதே...ஒருவேளை அம்மா அன்னைக்கு அப்படி செய்திராமல் இருந்தால், இன்னைக்கு எனக்கு ஒரு அண்ணா இருந்திருப்பான்...

அப்பாவும் அம்மாவும் ஒன்றாக நானும் அண்ணாவும் கூடவே... சந்தோசமாக... அனைவருக்கும் பேராசை இப்போது சாபத்தைவிட அந்த வாள் தான் அனைவருக்கும் முக்கியமா இருக்கு போல...பாட்டிக்கு அவர்கள் கடமை தான் முக்கியம்....அப்பா கூட இல்லை...அம்மாவிற்கு பாசம் இருந்தாலும் ஊர்தான் முக்கியம்...பெண் இருந்தா போதும் திருமணம், தாலி கட்டினால் போதும் மனைவி என்னும் கணவன்...இன்னும் எதற்கு இங்கேயே இருக்கணும்.

இந்த ஊரிற்க்காக என்னை பலி கொடுத்து...ஒருவேளை இது அனைத்தும் கட்டு கதையாக இருந்தால்? நான் இறந்தால், ஒரு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பார்களா? அதன்பின்பு? இல்லை என் அப்பா என்னை இங்கிருந்து தூக்கிக்கொண்டு தானே சென்றுவிட்டார்? இதெல்லாம் உண்மையாக இருந்தா அப்பா அப்படி எப்படி செய்வார்...ஆம், இதெல்லாம் இவர்களின் பேராசையால் நடக்கும் சதி...”

பதின் இறுதிகளில் இருக்கும் மங்கை அவளுக்கு, அதற்க்கு மேல் யோசிக்க தெரியவில்லை. இப்படி பலதும் சமந்தம் சமந்தமில்லாமல் யோசித்தவள், அங்கிருந்து தப்பி செல்ல இரண்டு முழு மாதங்கள் எடுத்தது. அதற்க்கு முழுமையாக அவளிற்கு உதவியதோ...

ஹெட்விக்!

ஹெட்விக் அவளின் அறையை விட்டு நகரக்கூட இல்லை. இரவுகளின் நிசப்த்தத்தில் அவள் துயிலில் ஆழ, ஹெட்விக் அந்த ஊரையும் அரண்மனையையும் விடாமல் சுற்றி சுற்றி வந்தது. விடியலில் ஒரு புது செய்தி மாயாதேவிக்கு கிட்டும்.
ஆனால், இறுதி சில நாட்களில் ஹெடிவிக்கின் செய்திகள் அவளுக்கு புரியாமல் போனது மீண்டும் விதி செய்த சதி என்பதை தவிர வேறென்ன சொல்ல?

இப்படியாக இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள், மதுரினி மாயாதேவி அந்த அரண்மனையை விட்டு, மாயக்ஷேக்த்திரத்தை விட்டு காணாமல் போனாள். அதுவும் ஹெட்விக்கின் துணையை தவிர்த்து! அவனுக்கு கூட தெரியாமல் மாயமாக மறைந்தாள்!

தகவல் தெரிந்த அதிதேவ் மாதவ வர்மன், கிஞ்சிதும் அவளை தேடும் வேலையை செய்யாமல் சமைந்துவிட்டான். மீண்டும் ஒரு ஜெயதேவ் மற்றும் சம்யுக்த்தை உருவாகிவிட்டதாகவே அவனுக்கு தோன்றியது.
சேனாம்மா மட்டுமே அவளை விடாது பின் தொடர்ந்தது. அதிதேவின் விட்டுப்போன உணர்வு புரிந்தாலும், நம்பிக்கையுடன் செயல்பட்டது அவர்மட்டுமே!

****************************

இன்று!

இரவு கவிழ்ந்ததும் தெரியாமல் இருவரும் நினைவுகளில் மூழ்கி இருக்க, தூக்கம் களைந்து எழுந்து வந்த அஸ்வந், சற்று தெளிவாக இருந்தான் போலும், அன்னையின் அருகில் வந்து அவள் மடிமீது ஏறினான். அவனின் வரவை உணர்ந்து அதிதேவும் உள்ளே வர, அவர்களின் அமைதியான பேச்சு அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.

“சாரி அம்மா, தேவா கூதவே இருக்கணும் போல இதுக்கு. அதான் அவங்க கூட போனேன்” என்று கூறி செல்லம் கொஞ்ச, எதுவும் சொல்ல தோன்றாமல் அமைதியாக அவனை அணைத்தபடி அமர்ந்திருந்தால், மதுரினி.

இனி என்ன என்கிற எண்ணத்துடன், அனைவரின் விடியலும் காத்திருக்கிறது.

******************************

அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் ஒரு பயணம் அனைவருக்கும் தொடங்கியது, அதில் அஸ்வந்தும் அடக்கம். இதுவரை இப்படியெல்லாம் குடும்பத்தை அதுவும் குழந்தைகளை இணைத்துக்கொண்டு அவர்களின் அலுவல்கள் நிகழ்ந்ததில்லை.

அதுவும் அதிதேவ், அஸ்வந்தை கீழே இறக்காமல் தாங்க அதுவேறு தனியாக தெரிந்தது. கூடவே, ஜேகப் இணைந்துக்கொண்டதால், அது யாருக்கும் விகல்ப்பமாக தோன்றவில்லையோ அல்லது யாரும் அப்படியான எண்ணங்கள் கொண்டவர்கள் இல்லையோ. ஏதோ ஒன்று அதனை திரித்து பேச யாரும் முயலவில்லை.

எனவே, அனைவருமே ஒருவித ஆச்சர்ய பார்வை மது மற்றும் அஸ்வந்த் மீது செலுத்தினாலும், அனைவரும் குழந்தையோடு ஐக்கியமாகிவிட்டனர்.

மழை தூறும்...!!!
 
Top