• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 39

சிறிது நேரம் மௌனத்தில் கழிய, மாயாதேவியின் தவிப்பை நிறுத்தும் வகையில் மாதவனின் வாய் திறந்தது. “ஒன்று தோமஸ்...மற்றொன்று ஜேகப்” என்று அவன் கூறி முடிக்கவும், வெளியே கதவை தட்டியபடி ஜேகப் காத்திருக்கவும் சரியாக இருந்தது.

அவர்களையே பார்த்துகொண்டு அமர்ந்திருந்த ஹெட்விக், புதியவனை கண்டதும் ஆர்பரிக்க, இருவரும் திரும்பி பார்க்க ஜேகப் நின்றுக்கொண்டு இருந்தான்.

“உள்ளே வா ஜேகப்” என்று தானே எழுந்து சென்று அழைத்து வந்தான் அதிதேவ். ஹெட்விக் உடனே இருவருக்கும் அருகே சென்று நிற்க, ஜேகப் அதன் தலையை கோதி கொடுக்க, அதுவும் அமைதியாக கோதலை அனுபவித்தபடி நின்றுக்கொண்டு இருந்ததை அதிசியமாக பார்த்தாள், மாயாதேவி.

“ஜேகப்... ஹுகும்....டேய்...நீயே சொல்லுடா” என்று கூறிவிட்டு அமைதியாய் அமர்ந்துவிட, ஹெட்விகை விலக்கி அவளருகே வந்தவன், வட்டமான மேஜையில் அமர்ந்திருந்த இருவருக்கும் இடையே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவளின் கைகளை தன்னுள் எடுத்தபடி சற்று நேரம் அமைதியாய் இருந்தவன், “மதுமா...நா...நான்... உன் அண்ணன்.” என்று கண்களில் தவிப்பும் அன்பும் கலந்து அவளிடம் கூற, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு.

எப்படி? சாத்தியமா? இல்ல என்று தானே நினைத்தாள்? அவளின் அப்பா கூட கூறியிருந்தாரே? இங்கே கூட சொன்னார்களே? அவள் அண்ணனா? திரும்ப அவளுக்கே கிடைத்துவிட்டானா? இது நாள் வரை இல்லை என்று நினைத்திருந்த ஒரு உறவு மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்வதா இல்லை அதனின் உண்மை தன்மையை ஆராய்வதா என்று கூட தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள், மதுரினி மாயா தேவி.

அதை நிருபிப்பது போல் ஒரு மருத்துவ கடித்தத்தை எடுத்து மேஜையில் வைத்தான் அதிதேவ். டின்ஏ டெஸ்ட் என்று பார்த்ததும் புரிந்தது.

“ரோஜா, அவங்க தான் அன்றைக்கு அத்தையம்மா கூட இருந்தவங்க... சடலம் என்று நினைத்து தான் அவர்களிடம் ஒப்படைத்து ஊரை விட்டே ஓடி போக சொன்னார்கள். அவர்களும் கணவன் – ஜோஷ் உடன் அவர்களின் பிள்ளையுடன் அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே வடமாநில பேருந்து ஒன்றில் ஏறிவிட்டனர்.

பாதி தூரம் போகும்போது எங்காவது மரியாதையுடன் பிஞ்சுடலை எரிகாட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணமே! ஆனால், பாதி வழியிலேயே விரல்களின் அசைவு அவர்களுக்கு உண்மையை உணர்த்தியது. ஒரு கிராமத்தில் பெயர் கூட தெரியாத ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை மேற்க்கொண்டு உயிரை மீட்டனர்.

ஆனால், அவர்களை திரும்பி வரவிடாமல் தடுத்தது இரண்டு விஷயங்கள்! ஒன்று பணம்! ஆம், வறுமையில் இருக்கும் அவர்களுக்கு சேனாம்மா கொடுத்தனுப்பிய பணம் அவர்கள் பிள்ளையில் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் என்பது உண்மையே! அவ்வளவு பணம்! அடுத்தது...முக்கியமானது! அவர்களின் மூத்த பிள்ளையை காய்ச்சலுக்கு தூக்கி கொடுத்துவிட்டு இருக்க, அவர்கள் பிள்ளையாகவே இவனை மனதளவில் எண்ணிவிட்டவர்களுக்கு திரும்ப இந்த ஊருக்கு வரும் எண்ணமில்லை.

இவனை பற்றி நீ இங்கு வருவதற்கு சில நாட்கள் முன்பே தெரிய வந்தது. ஏதோ வேலையாக வடக்கு பக்கம் சென்ற நம் ஊர் மாரிமுத்து அண்ணன் ஜோஷ் மற்றும் ரோஜாவை இனம் கண்டுக்கொண்டு உள்ளார், உடனே என் அப்பாவிற்கு தெரிய படுத்தியும் உள்ளார்கள்.

அதே சமயம் ஒரு வேலையாக தமிழ்நாடு கேரளா எல்லையில் வந்திருந்த உங்கள் அப்பா அதிதேவ் பற்றியும் தெரிய வந்துள்ளது.
இத்தனை காலம் கழித்து அனைத்தும் நல்ல செய்திகளாக கிடைக்க கிடைக்க, அப்பா, சேனாம்மா, அத்தையம்மா, சௌந்தர்யாம்மா என அனைவருமே இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று மிகவும் நம்பினார்கள்.

ஜேகப் பற்றி தீர விசாரித்துக்கொண்டு உன் அப்பாவை அழைத்து விஷயத்தை கூறி மீண்டும் அனைத்தையும் சரி செய்வதற்குள் தான், தோமஸின் நடவடிக்கைகள் எங்கள் அனைவரையும் ஆட்டி படைத்துவிட்டது.

தோமஸ்! ஜோன்ஸின் மகன்!

ஆம்...வாளிற்கு ஆசை பட்டு உயிரை விட்ட அதே மார்கின் பேரன்.

இங்கிருந்து தப்பி சென்ற ஜோன்ஸ் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வர மிகவும் பாடுபட்டுவிட்டாலும், ஒரு கை – ஒரு கால் இழந்த அவருக்கு வாழ்க்கை கொடுக்கும் தொடர் அடிகள் அனைத்தும் எங்களின் மீதான வன்மமாக, இந்த ஊரின் மீதான வெறுப்பாக, இன்னும் அந்த வாளின் மீதான பேராசையாக மாறிற்று. அதனை கிஞ்சிதும் சிந்தாமல் தன் மகன் தோமஸ் மீதும் ஏற்றி வைத்திருக்கிறார் ஜோன்ஸ்.

ஏற்கனவே தாமத திருமணத்தில் தோமஸ் பிறந்ததும் அவரின் அன்னை இறந்துவிட, மேலும் உடல்நலம் பாதிக்க பட்ட ஜோன்ஸ் படுத்த படுக்கை ஆகிவிட தோமஸின் மனதில் ஒரு பக்கம் வன்மமும் மறுபக்கம் பேராசையும் விருட்சமாக வளர ஆரம்பித்தது.

ஏனினில் இப்போதிருக்கும் நிலவரப்படி கூட அந்த வாளின் மதிப்பு சாதாரண மனுஷர்கள் எண்ணி கூட பார்க்க முடியாத அளவு!

அதனை தேடி வந்த தோமஸ், எதிர்பாரா விதமாக ஜெயதேவை கண்டுக்கொள்ள, அவரால் நிகழ்ந்ததே உன் அப்பாவிற்கு நடந்த விபத்து!”

ஏதோ கதை கூறுவது போல் அவள் வாழ்க்கையில் அவளுக்கே தெரியாது நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்தான். அது அத்தனைக்கும் அத்தாட்சியாக அவள்முன் உயிருடன் அவளின் அண்ணன் அமர்ந்திருந்தான்.

“இதில், சற்று கவனம் விட்டு போயிற்று உன் அண்ணன் ஜேகப்பை பற்றி! முதலில் உங்களை பாதுகாத்து இந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவதே முக்கியமாக பட்டது. அதற்குள் அவனையும் உள்ளே இழுத்து புது பிரச்னையை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை யாரும்.

அவசரமாக வரவழைக்க பட்ட எனக்கு இது அனைத்தும் வாய் வார்த்தையாக தான் கூறினார்கள். உன் அப்பாவின் நிலைமை எனக்கு இரக்கத்தை கொடுத்தது, அதனையும் மீறி உனக்கு இருக்கும் ஆபத்து என்னை தடுமாற வைத்தது! எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம் உன்னை ரோஜா பூபந்தாய் கையில் வாங்கிய தருணம் தான்!

பின், உன் தந்தையின் பெயர் கொண்டே உன்னையும் இங்கே வரவழைத்தோம். முதலில் பாதுக்காகவே அழைக்கபட்டாய். எனக்குமே அப்படி தான் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே உன்மீது அத்தனை நாள் தேக்கி வந்த வெறுப்பை வெளிப்படையாகவே காண்பித்தேன்.

ஆனால், இங்கிருக்கும்போதே உள்ளே நுழைந்த தோமஸின் ஆட்களால், உடனடியாக உனக்கும் எனக்கும் திருமணம் நிச்சயம் ஆகியது. சற்று உனக்கு புரிய வைத்து எங்காவது சிறிது நாட்கள் என் பாதுக்காப்பின் கீழ் வைத்துக்கொள்வோம் என்று எண்ணினோம். ம்ம்....அப்படி தான் அனைவரிடமும் கூறி வற்புறுத்தினேன்...!!! ஆனால், அது உன்மீது இருந்த உரிமையுணர்வு என்று நான் மட்டுமே அறிவேன். உனக்கு ஒரு ஆபத்து என்றதும், உன்னை என் கைக்குள் பொத்தி பாதுக்காக துடித்த என் மனதை அடக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று கூறி தன் உணர்வுகளை பற்றி கோடிட்டு காண்பித்து முடிக்க,

“நீ இங்கிருந்து சென்ற பின் தான் நான் இங்கே வந்தேன்” என்று ஜேகப் ஆரம்பித்தான். “ஏற்கனவே இவ்வூர் ஆட்களை எங்களை சுற்றுவதை கவனித்து எனக்கு சந்தேகமே, அப்போது தான் சில வருடங்களாகவே உடல் நிலை சரி இல்லாத ரோஜாம்மா, என்ன நினைத்தார்களோ
அன்றைய இரவு தான் அனைத்து உண்மைகளையும் என்னிடம் கூறினார்கள்! அடுத்த நாளே உலகத்தை விட்டு அவரின் உயிர்பிரிய, எங்கள் குடும்பத்தை நிலை நிறுத்தவே எனக்கு காலம் பிடித்தது.

என் தம்பி, ஜெரி அப்போது தான் வெளிநாட்டில் வேலையில் சேர்ந்திருந்த நேரம், எனவே அனைத்தையும் முடித்து ஜோஷ்ப்பாவையும் ஜெரியுடன் சிறிது காலம் இருக்க அனுப்பி வைத்துவிட்டு இங்கே வந்தேன்.

நடந்த அனைத்தும் கேள்விப்பட்டு, உன்னை தேட கிளம்பிய என்னை தடுத்தது சம்யுக்த்தாம்மா தான். அவர்கள் தான் உன் தப்பி செல்லும் திட்டங்களை எங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது”

எப்படி சம்யுக்த்தை தான் தன்னை தப்பிக்க உதவினார் என்று மாதவன் கூறினான் என்பது இப்போது விளங்கிற்று அவளுக்கு.

“கடைசியாக நீ நர்ந்தன கிருஷ்ணரின் ஆலயம் செல்ல ஆசைப்பட்டது வரை கூறினார். அங்கே தானே ஹெட்விக் உன்னை விட்டு பிரிந்து ஆலயத்தை விட்டு வர மறுத்தது?” என்று கேள்வி எழுப்பினாலும் பதிலை எதிர்பாராமல் தொடர்ந்தான், “என்ன சொல்ல? நீ எங்கே? என்ன என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய் என்று அனைத்தும் அறிந்தும் எங்கள் யாரையும் உன்னை நெருங்க விடவில்லை அதிதேவ்... ‘அவ நிம்மதியா இருக்கணும்னு தானே போயிருக்கா...அப்போ கொஞ்ச நாள் அவ இஷ்டபடி இருக்கட்டும்’ அப்படினு சொல்லிட்டாங்க!!! அவரை எதிர்த்து செயல்பட எங்கள் யாருக்கும் விருப்பம் இல்லை” என்று முடித்து அவள் முகம் பார்க்க, அவளோ மாதவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்...

“மதும்மா....” என்று அவள் தோளை பிடித்து உலுக்கிய ஜேகப், கைகளை விரித்து காண்பிக்க அவனுள் தஞ்சமானாள், மாயாதேவி. என்னமோ ஒவென்று அழ வேண்டும்போல் ஒரு உணர்வு அவளை அழுத்த, அண்ணன் தோளிலேயே சாய்ந்து கண்ணீர் உகுத்தாள்.

என்னமோ... அனைத்தும் அவள் வாழ்வில் மீண்டும் கிடைக்கும் நேரம், அவளை அந்த விதி, சாபத்தின் சதி, அதனை தடுக்க முடியாத துதி, அவள் ஆன்மாவை இந்த உலகத்தை விட்டு பறித்துக்கொள்ள போகிறது என்னும் எண்ணமே அவளை ஏதேதோ செய்தது.

மழை தூறும்...!!!
 
Top