- Joined
- Jul 23, 2021
- Messages
- 104
தூறல் 43
காலை உணர்விற்காக அனைவரும் கீழே வரும்போதே கூறிவிட்டான். இன்று ஒரு ஒருமணி நேரம் தள்ளி தான் காலை உணவு என்று, முழுவுடல் மருத்துவ பரிசோதனைக்கு வந்திருப்பதாகவும்!
யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. ஜேகப் முதல்கொண்டு அனைவரும் ஒவ்வொருவராக உள்ளே செல்ல பத்து - பத்து நிமிடத்தில் மருத்தவர் தனக்கு தேவையான சோதனைகளை எடுத்துக்கொண்டு வெளியே அனுப்பிவிட்டார்.
இறுதியாக மாயாதேவி செல்ல, வெளியே இருந்த அதிதேவ், “நீங்க எல்லாம் போய் சாப்பிடுங்க, மதுவ நான் அழைத்து வரேன்” என்று கூறி, ஜேகபிற்க்கும் கண்காட்ட, அவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு விலகினான்.
ஒருமணி நேரம் கழித்து மதுவை கை தாங்களாக வெளியே அழைத்து வந்தான், அதிதேவ். “என்னாச்சு மாதவா? ஏன் இவ்வளவு நேரம் ஆகிருக்கு. எனக்கு தலை பயங்கரமா வலிக்குது வேற” என்று கேட்க,
“ஒண்ணுமில்லை, என்னனு தெரியலை பிரசர் செக் பண்ணும்போதே மயங்கிட்ட, சரியா தூங்காம சாப்பிடாம இருந்ததால அப்படி ஆகிருக்கலாம் நல்ல ரெஸ்ட் எடுக்கும்படி சொன்னார், டாக்டர்” பூசி மொழுகி அவன் கூறியதை, நம்பியவள், உணவறைக்கு வர, அங்கே அனைவரும் உண்டு முடித்து வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
உணவறையில், அந்த பெரிய மேஜையில் ஓரம் அஸ்வந்தை அமர வைத்தபடி, காலை கஞ்சியை ஓட்டிக்கொண்டு இருந்தார், சௌந்தர்யா.
இவர்கள் இருவரும் அமர, அந்த பெரிய வெள்ளி தட்டை பார்க்க... பார்க்கவே, பயமாக இருந்தது அவளுக்கு. ஆனால், இப்போது முன் மாதிரி அதட்டி உருட்ட முடியாது என்ற எண்ணத்துடன், அமர்ந்திருந்தவளின் எண்ணத்தில் மண்ணை போட்டான், அதிதேவ்.
“ஒன்னு விடாம எல்லாத்தையும் முழுசா சாப்பிடணும்” கடித்து பற்களுடன் அன்னையின் கவனத்தை கவராது, சிரித்தபடி கூறியவனை திரும்பி முறைத்தாள்.
‘போடா டேய்’ என்கிற எண்ணம் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
ஒரு பக்கம் மூன்று இடியாப்பம் தேங்காய் பால் வைத்திருக்க, புட்டும் கடலை கறியும் இருந்தது, அடுத்த பக்கம் தேங்காய் எண்ணை கமகமக்கும் உத்தாப்பம் இரண்டு. நடுவே வாழை இல்லை சுற்றப்பட்டு ஏதோ இனிப்பு பதார்த்தம் வேறு, சற்று பெரியதாக இருந்தது! அதில்லாது ஒரு பெரிய டம்ளர் நிறைய பானகம் ஏதோ வைத்திருந்தனர்.
சாப்பாட்டை பார்த்து திருதிருவென முழிக்க ஆரம்பித்தவளை பார்த்ததுமே புரிந்துவிட்டது அவளின் நிலை. இருந்தும் என்ன செய்கிறாள் என்று பார்க்க அப்படி மிரட்டி வைத்தான்.
முன்பு இங்கு இருக்கும்போதும் சரி, அலுவலகத்திலும் சரி, அவள் சரியாக சாப்பாடிற்கு முக்கியத்துவம் தராதது போல் தான் இருக்கும். இங்கு இருக்கும்போதாவது, வர்மம் கற்க, சில பல உணவு கட்டாயத்தின் பேரில் உள்ளே செல்லும்.
“இப்போ நல்ல சாப்பிட்டு என்ன ஆக போகுது?”
“என்ன ஆகினாலும் ஆகலனாலும்..சாப்பிடு! உணவை இங்கே வேஸ்ட் பண்ண முடியாது. புரியுதா?” கோவமாகவே வெளிப்பட்டது குரல்.
அவனை அதை விட கோவத்தோடு நிமிர்ந்து பார்த்தவள், நிமிர்ந்து அஸ்வந் எங்கே என்று பார்த்தாள். அவனுக்கு உணவு முடித்து இப்போது வாய் துடைக்க உள்ளே அழைத்து போயிருந்தார். அவளும் அவனும் மட்டுமே அமர்ந்திருக்க, சட்டென தன் தட்டில் இருந்ததை, அந்த பெரிய இனிப்பு பதார்த்த வாழை இலையை எடுத்து அவன் தட்டில் மாற்றிவிட்டு எதுவும் தெரியாதது போல் அமர்ந்துக்கொள்ளவும் சௌந்தர்யா அஸ்வந்வுடன் வரவும் சரியாக இருந்தது.
அவன் தன்னை வெளிப்படுத்திவிட மாட்டான் என்று நினைத்தபடி அவள் இடியாப்பத்தில் இருக்கும் சிக்கலை பிரிக்கும் முயற்சியாக ஒரு ஒரு நூலிழையாக பிரித்து உண்டபடி இருக்க,
“அம்மா... இவளை பாருங்கம்மா சரியா சாப்பிடாமல் உங்க ஸ்பெஷல் வாழை கோதுமை அல்வாவ எனக்கு மாத்தி விட்டா” என்று போட்டு கொடுக்க (உடைக்க)
சௌந்தர்யாவோ, ‘என்ன இது’ என்பதை போல் பார்த்தவர், அவர்களின் விளையாட்டு புரிய சிரித்தபடி நிற்க,
“அம்மா சி மை டம்மி பாப்பு குட்டா சாப்பிட்டேன், நீயும் நல்லா சாப்பிடு, மாதவாக்கு கொடுக்காதே” என்று நிலைமை தெரியாது கூற,
“டேய்... போடா...” என்று கூறிவிட்டு எதுவும் நடக்காதது போல், திரும்பி அமர்ந்து, குனிந்த தலை நிமிராது உண்ண ஆரம்பித்தாள்.
*************
அந்த தாழம்பூ காட்டிருக்குள் இறங்காமல், சுற்றி நடந்தபடி இருந்தனர் இளையவர்கள். மயூவின் பார்வை அடிகடி தன் பக்கம் விழுவதை கவனித்தும் கவனிக்காதது போல் மதுரினி மாயாதேவி பின்னே சுற்றிக்கொண்டு இருந்தான் ஜேகப்.
அவர்களுக்கு தனிமையை கொடுத்தபடி, அஸ்வந்தை தோளில் சுமந்தபடி முன்னே நடந்துக்கொண்டு இருந்தான் அதிதேவ் மாதவன்.
“சாரி மதுக்குட்டி....ப்ளீஸ்...” என்று அவள் கைகளை பிடிக்க, உதறினாள், அவள்.
“ப்ளீஸ்... புரிஞ்சிக்கோயேன்”
“ரெண்டு வரஷமா நீ என்னை புரிஞ்சிக்கிட்டியா என்ன?”
“நீ எப்படி எடுத்துப்பனு தெரியலை... உன்னை சுத்தி நிறைய ஆபத்து...”
“ஆமா, இப்போ மட்டும் இல்லையா?” நக்கலாய் அவனை திரும்பி பார்த்து கேட்டவள், அப்போது தான் மயூரிக்காவின் பார்வையை கவனித்தாள்.
“ஒய்... இங்கே வா” தன்னை கவனித்துவிட்ட மதினியிடம் எதுவும் காண்பித்து கொள்ளாது அப்படியே நழுவ பார்த்தவளை, அதட்டி அழைத்தாள்.
அருகே வராமல், திருதிருவென முழித்தபடி நின்றுக்கொண்டு இருந்தவளை “இப்போ நீ வரியா இல்லை...” என்று கண்களை உருட்டி மிரட்ட, மயூவை பார்க்க பாவமாக தான் இருந்தது ஜேகபிற்கு.
பயந்தபடி அருகே வந்தவளை, “இவன எல்லாம் பார்க்காதே... ஒன்னும் ஒருத்தரையும் புரிஞ்சிக்காம உன் அண்ணன் மாதிரியே உயிரை வாங்குவான்” பட்டென கூறியவள், இவர்கள் நிற்ப்பதை பார்த்து அருகே வந்த அதிதேவ் கையில் இருந்து அஸ்வந்தை வாங்கிக்கொண்டு முன்னே நடக்க,
‘சிவனேன்னு தானே டா நடந்து போயிட்டு இருந்தேன்’ என்ற லுக் கொடுத்து, “என்னடா நடக்குது இங்க?” என்று மீதி இருவரையும் பார்த்தான்.
“ஒன்னும்...ஒண்ணுமில்லை அண்ணா” உதடுகள் தந்தியடிக்க ஓடிவிட்டவளை பார்க்க சிரிப்பு வந்தது ஜேகபிற்கு.
அவன் தோளில் தட்டியவன், “என்னடா” என்று கேட்க, “ஒண்ணுமில்லை மாமா, இவ்வளவு நாள் அவள்கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டேன்னு கோவம்” என்றவனின் தோளில் தட்டி, இருவரும் பேசியபடி நடக்க ஆரம்பித்தனர்.
“யாரும் கீழே இறங்க கூடாது, தார் பாதை விட்டு மண் பாதையில் தள்ளி நடக்க கூடாது” என்று முதலிலேயே கூறி இருந்தனர். முன்னே பின்னே என்று இருவர் பெரிய ஏழு அடி தடியுடன் நடந்து வந்தனர், பாதுக்கபிற்க்காக.
ஜுவாலினி வெளியே நீட்டிக்கொண்டு இருந்த ஒரு தாழம்பூவை இழுக்க மண் பாதையில் சற்றே கால்களை ஊன்றி எட்டி பார்க்க, பின்னாடி நின்றுகொண்டு இருந்த ஜித்தன், விளையாட்டிற்காய் அவளை சீண்ட தள்ளுவது போல் பயம் செய்ய, அதே நேரம், ஒரு பெரிய பாம்பு சீறியபடி அவள் முகம் முன் தோன்றியது.
ஏற்கனவே ஜித்தன் செய்த செயலில் பயந்து இருந்தவள், இப்போது உடல் நடுங்க, அந்த பாம்பின் மேலேயே நிலையில்லாது விழ போக, அப்படியே அவள் இடையில் கைகொடுத்து தூக்கி நிறுத்தினான், ஜித்தன்.
இன்னுமும் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தவளை தன்னோடு அனைத்து பிடித்தவன், அவளை சமாதானம் படுத்தும் நோக்கில், முதுகை தடவிக்கொடுக்க, உடனடியாக பாதுக்காப்பிற்கு வந்த இருவரும் அந்த பெரிய தடி கொண்டு பாம்பை மீண்டும் உள்ளே தள்ளினர்.
அனைவரும் ஓடி வந்து அவர்களை சுற்றிக்கொள்ள, சட்டென ஜித்தனை தள்ளிவிட்டு ஒதுங்கி நின்றவள், கண்கள் கலங்க ஒதுங்கிவிட, அதை கண்ட ஜித்தன் மனதில் கோவம்.
‘என்னவோ இவளை வேணும்னே இழுத்து ஹக் பண்ணது போல பண்ணுறா’ என்று எண்ணிக்கொண்டு அவனும் விடுவிடுவென நகர்ந்தான். அவனுக்கு தெரியவில்லை, அவள் பாம்பை கண்டு எவ்வளவு பயந்து போயிருக்கிறாள் என்று.
****************************
அந்த பின் மாலை பொழுதில், வழி தெரியாது சுற்றிக்கொண்டு இருந்தாள், ஜுவாலினி.
மானா மற்றும் மினியா இரவு உணர்விற்காக கீழே இறங்கியிருக்க, அழுது அழுது தூங்கியவள், நேரம் கழித்து கிளம்ப, வெளியே வந்தவளை ஈர்த்தது அந்த தொங்கும் பாலங்கள். அதில் இறங்க போனவள், பின் தனியாக செல்ல பயமுற்று திரும்பி வர, வழி தெரியாது அந்த இருட்டில் தவித்தபடி ஒரு ஒரு படிகளாக எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அதே நேரம் வெளியே வந்த ஜித்தன், ‘இவள் என்ன செய்கிறாள்’ என்பது போல் முழித்தவன், பின் தோள்களை குலுக்கியபடி கண்டுக்கொள்ளாது விலகி போனான்.
நேரம் கழித்தே அவனை பார்த்தவள், தானும் இடைவெளிவிட்டு அவன் பின்னோடு சென்றாள். சிறிது நேரம் நடந்துவிட்டு வருவதற்காக பின் பக்க படிகளில் இறங்கி போனவனை, கீழே குனிந்தபடி அவனின் கால்களை பார்த்துக்கொண்டு வந்தவள், வெட்டவெளியை பார்த்து திகைத்தாள்.
கீழே படிகளில் இறங்கிவிட்டு திரும்பி அவளை பார்த்தவன், “இப்போ மட்டும் எந்த நம்பிக்கைல என்கூட நடந்து வந்த?” தெளிவாக கேட்டவனின் கேள்வி புரியாது அவனை பார்க்க,
“என்னமோ உன்ன ரேப் பண்ண கட்டிபுடிச்ச மாதிரி அப்படி தள்ளிவிட்டு போன அத்தன பேர் முன்னாடியும்? காப்பாத்த தானே பிடிச்சேன்? அப்படியே விழுந்து சாகுனு விற்றுகனுமோ?” தெறித்து விழுந்த வார்த்தைகளில் திகைத்தாள் அவள்.
‘எப்படி எல்லாம் பேசுறான் பாரேன்’ வாயை பொத்தியபடி பார்த்தவள், பின் கோவத்தோடு விடுவிடுவென கீழே இறங்கியவள், சுற்றிக்கொண்டு முன்பக்க வரவேற்ப்பறை போய்விடலாம் என்ற நினைப்புடன் அவனை தாண்டி போக, தான் பேச பேச முறைத்துவிட்டு செல்ல போகும் அவளை பிடித்து இழுக்க, அவன் மேலேயே வந்து விழுந்தாள்.
அவனுக்கே தெரியாது நிகழ்ந்துவிட்டது. என்றாலும், விலக்கிவிட தோன்றவில்லை. அவனின் முன் கோவம் அவனை நிலையிழக்க செய்தது. “பதில் சொல்லிட்டு போ” என்று கடித்த பற்களுக்கிடையே சீற...
“என்...என்னோட அக்க..அக்கா பாம்பு கடிச்சி தான்...யாரும் பார்க்கல... தனியா போய்...செத்து...” உதடுகள் படபடவென துடிக்க கண்களில் கண்ணீர் வழிய சொன்ன அவளை தள்ளி நிறுத்தினான்.
“வா... போலாம்...!!!” கூறிவிட்டு வந்த வழியே திரும்பி நடக்க, எதுவும் கூறாது அவள் சுற்றிக்கொண்டு போய்விடலாம் என்ற நினைப்போடு பிடிவாதமாக நடக்க,
“அந்த பக்கம் போனா, அந்த பக்கம் பில்டிங் தான் வரும்” நக்கலாக கூறிவிட்டு மீண்டும் கண்டுக்கொள்ளாமல் நடக்க, முயல்குட்டி போல் பயந்துக்கொண்டு அவன் பின்னோடு திரும்பியும் சென்றால், தன் இருட்டை கண்டு நடுங்கும் பயத்தை நொந்தபடி.
‘அடுத்த ஜோடி புறா’வாடா’ என்று நினைத்தபடி தனித்தனியே மேலே அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஹெட்விக்.
இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து நக்கலடித்துக்கொண்டு இருந்த மானாவை சமாளித்தபடி உண்டுக்கொண்டு இருந்தாள், மினியா. பெரியவர்கள் உண்டுவிட்டு பொதுவாக பேசிக்கொண்டு இருக்க, சிறுவர்கள் மெதுவாக உண்டுக்கொண்டு இருந்தனர்.
அங்கிருந்த ஆளுயர அளவில் இருந்த பெரிய பெட்டகத்தினுள் சிரித்தபடி புகைப்படமாக இருந்த அஹிலாவதி மாயாதேவி, தேஜஸான கண்களோடு இவளையே பார்ப்பது போல் இருந்தது. ‘எல்லாம் சரியாகிட்டா... எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று நினைத்தபடி மதுரினி மாயாதேவி பதிலுக்கு அதையே பார்த்துக்கொண்டு இருந்தாள், அவளும்.
மழை தூறும்...!!!