• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 44

அந்த அதிகாலை பொழுதில், காட்டு தோட்டமதில், தன் ஓவர் கோட் லேசாக பறக்க நடந்துக்கொண்டு இருந்தாள், மதுரினி மாயாதேவி. ஒரு ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் தொளதொள முக்கால் பேன்ட் அவளின் இரவு உடையாக இருக்க, அதற்கு மேலே ஒரு ஓவர் கோட் போட்டுக்கொண்டு கீழே இறங்கிவிட்டாள், அவள்.

முன்பிருந்த நினைப்புடன் இறங்கிவிட்ட பின்பே அவளின் மடத்தனம் புரிந்தது. சென்னை வெயிலுக்கு பழக்கப்பட்ட அந்த உடலை தண்டிக்கும் வகையில், அந்த சாட்டின் துணி, அவளின் உடலை போர்த்த முடியாது, அந்த குளிர் காற்றை அவளுடலில் ஊடுரவ வழிவிட்டபடி இருந்தது.

அப்போதும் திரும்பி செல்ல மனமில்லாது, கைகளால் லேசாக தன்னையே வளைத்துக்கொண்டவள், வளைய வர ஆரம்பித்தாள். ஏனோ தூக்கமே பிடிக்கவில்லை அவளுக்கு.

‘இனி மொத்தமாக தூங்க போகிறேன் என்று இந்த ஒரு வாரம் காலம் உனக்கு உலகை நன்றாக அனுபவித்துக்கொள்ள அனுமதி தருகிறதடி பெண்ணே’ தனக்குள் நக்கலாக பேசிக்கொண்டாள்.

மூக்கு நுனி செம்பருத்தி நிறத்தை பூசிக்கொள்ள, முகம் சோபையில் மின்ன அந்த வளைவில் திரும்பியவளின் கண்கள் வட்ட வடிவை தத்தெடுத்துக்கொள்ள, ‘பே’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள். (அங்கிருப்பவனை சைட் அடித்தாள் என்றும் கூறலாம்)

மேற்சட்டை இல்லாது அந்த குளிர் காற்றிலும் லேசாக வேர்த்திருந்த உடலுடன், அடுத்த மீனை கையில் தூக்கியவன் தன்னால் முடிந்த மட்டும் தூக்கி ஏறிய, மேலே பறக்கும் அந்த மாமிசமோ, கண்களை விட்டு அகலும் அளவு உயர்ந்து மீண்டும் கீழே விழ ஆரம்பிக்க, அது கீழே விழுமுன், வேகமாக பறந்து வந்த ஹெட்விக், அதனை தன் அலகால் கொத்தியபடி மீண்டும் உயர்ந்து மேலே பறந்தது.

மேகத்தை தாண்டி பறந்து மறைந்த ஹெட்விகை தலையை நிமிர்த்தி பார்த்தவள், மீண்டும் இவனிடம் பார்வையை திருப்பினாள்.

அது சென்று திரும்பும் வரை, மீண்டும் தன் உடற் பயிற்சியை ஆரம்பித்தான் அவன். அந்த இருபக்க கூர்முனைக்கொண்ட களறி கத்தியை வைத்தபடி அவன் ஏதோ எதிரே அவனின் வாழ்நாள் எதிராளி இருப்பதுப்போலவும், அவனை தாக்குவது போலவும் புயல் வேகத்தில் சீறிக்கொண்டு இருக்க,

இவள் மெதுவாக அவன் பின் சென்று நின்றாள். இவளுக்கு முதுகு காட்டி பயற்ச்சியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தவன், சட்டென சுழன்று இவளையும் ஒரு சுழற்று சுழற்ற, அந்த கத்தி ஏந்திய கைகள் கத்தியை விடாது அவள் கழுத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக தவழ்ந்து தஞ்சமானது.

இதனை சற்றும் எதிர்பாராமல், பதட்டத்தில் மூச்சு திணற ஏறியிறங்கும் உடலோடு, அவனிடமிருந்து விலக முயல, “இந்த கலை கற்றவனுக்கு ஐபுலன்களின் ஆதிக்கம் அதிகம். நீ வந்து நின்ற நொடியே உன்னை உணர்ந்துட்டேனே” என்று சிறுகுழந்தை போல் கூறியவனின் குரலை எதிர்க்கொண்டாள்.

அவள் தான் பேசுவதில் ககவனாக இருக்கிறாள் என்று நினைத்து இவன் அவளில் கவனமாக இருக்க, அவள் இடையில் தஞ்சமான தன் வலதுகையில் சுரீர் என்று உணர்ந்த அந்த வலியில் சட்டென பின் வாங்கினான், அந்த வர்மம் கற்ற அழகியிடமிருந்து.

இப்போது திரும்பி தெனாவட்டாக அவன்மீது ஓரவிழி வீசியவள், வளையும் இதழ்களுடன் அவனை பார்க்க, “ம்ம்....குட்...” தாக்கியவள் தன் நங்கை என்பதால் அமைதியாய் அடக்கமான புன்னகையுடன் சான்றிதழ் வழங்கினான், மாதவன்.

கூடவே, “வர்மனை நுனி தொட்டு அடி வரை அறிந்தவளாயிற்றே” என்று விஷமமாக கூற, அவன் வர்மம் என்று கூறினானா அல்லது வர்மன் என்று கூறினானா என்று புரியாமல் அந்த மாதவ வர்மனை துளைக்கும் பார்வை பார்த்தாள்.

அப்போது சரியாக பறந்து வந்த ஹெட்விக், வேகமாக அவர்களை மோதுவது போல் வர, “ச்ச...” என்று குரல் கொடுத்தவன், சட்டென மீன் அடங்கிய குடை எங்கே என்பது போல் பார்க்க, இரண்டடி தள்ளி இருந்த மீனை எடுப்பதின் நேர விரயம் புரிந்தது. இதனைத்தும் அரைவிநோடியில் அவன் மனம் கணக்கிட, அடுத்த நொடி அவளை இழுக்க முயல,

அன்று போல் இன்றும் உடல்பட மறுத்தவள், இந்தமுறை சட்டென அவனை விட்டு விலகி, நேராக நிற்க, பறந்து வந்த ஹெட்விக், சற்றும் தடுமாறாது அவள் இடது தோளில் வந்து அமர்ந்தது.

இப்போது ‘பே’ என பார்ப்பது அவன் முறையோ? ஆனால், அதனை வெளிகாட்டிகொள்ளவில்லை அவன்.

“சாரிடா உன்ன இங்கு தனியா விட்டுட்டு போயிட்டேன்” வருத்தமாக பேசியபடி தனது வலதுகையை உயர்த்தி அதை கோதிவிட, வாகாக அவளுக்கு வளைந்த ஹெட்விக்கோ, சுகத்தை அனுபவித்தபடி இருந்தது.

“துறத்தும் உன் நினைவுகளில் இருந்து சமன்பட பெரிதும் எனக்கு உதவியவன் இவனே” அவர்கள் முன் கையை நீட்ட, அந்த திடகாத்திரமான கையை அவள் பார்க்கும்போதே, இவளிடமிருந்து விலகி அவன் கைகளில் ஏறியது ஹெட்விக்.

“வெறும் நான்கு வருடம் உடனில்லை என்றதும் கட்சி மாறிவிட்டாயா? பாவி” என்று மனிதர்களை குட்டுவது போல் அதன் தலையில் குட்டினால் மாயாதேவி. தலையை சில்லுப்பவதை தவிர, வேறெந்த எதிர்வினையும் இல்லை ஹெட்விக்கிடம். லேசாக சிரித்தபடி அவனும் விலகியவன்,

“கோ...” என்று அழுத்தமாக கூற, மீண்டும் பறந்த ஹெட்விகிற்கு, சற்று நேரம் கொடுத்தவன், அது மேலே பறந்ததும், அடுத்த மீனை அவன் கைகளை எடுத்தது.

“இப்படி எல்லாம் வேட்டையாடும் பயிற்ச்சியை அவனுக்கு நாங்கள் கொடுத்ததில்லை.”

“சில நேரம் அவரவர் இயல்பை இயற்க்கைக்கு எதிராக மாற்றாமல் இருப்பது தான் நல்லது” பொறி வைத்து பேசியபடி, இதழ் பிரியாது சிரித்தவனை, திரும்பி பார்க்க, அவன் மீண்டும் மீன் மாமிசத்தை வீசினான். உயரும்போது தெரிந்த அவன் படிக்கட்டு உடலில் அவள் பார்வை வினோடி நேரத்தில் படிந்து விலக, கண்டுக்கொண்டவனின் கண்களில் ரசனை ஏறியது.

“ஆமாம், இன்னுமும் இப்படியெல்லாம் ட்ரெஸ் பண்ணுவதை விடவில்லையா நீ?” அவன் குரலில் என்ன இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள முயன்றபடி,

“ஏன்? இதற்கென்ன?” என்று கேள்வி எழுப்பியவளை, மேலிருந்து கீழ் அலைந்தவனின் பார்வை, ஒரு இன்ச் அளவு பளீரென்று தெரிந்த அவள் வயிறு மற்றும் இடுப்பில் தேங்கி நிற்க, சட்டென மேலாடையை இழுத்து உடலை மூடினாள். ஓவர் கோட்டை சுற்றி சுருக்கு போட்டவள், அமைதியாய் திரும்பி நடக்க, அவளோடு தானும் நகர்ந்தவன், அவள் பின்னோடு சென்றபடி,

“நாளை அஷ்டமி” என்று மெலியதாக கூற, ஒரு நிமிடம் தடுமாறி அப்படியே நின்றவள், மீண்டும் உறுதியுடன் முன்னேற, அது அடுத்த அவர்கள் குழு சந்திப்பிலும் தெரித்தது.

“சோ இது தான் நமக்கு கிடைத்த ப்ரோபோகேன்டா கருவி” என்று கையில் வைத்திருக்கும் இரண்டு பெட்டகத்தை காண்பித்தான், மாதவ வர்மன்.


“இந்த ஊரின் நம்பிக்கையை சம்பாதித்தவர்கள் நாங்கள்! என்றாலும் எங்களாலேயே கூட வெளியாட்களை சில இடங்களுக்கு அழைத்துக்கொண்டு சென்றுவிட முடியாது. ஊர்மக்களுக்கு கட்டளைகள் என்றால், ராஜ்யத்திற்கு கட்டுப்பாடுகள்” கூறியபடி, வெள்ளி பெட்டகத்தை ஏதோ செய்துக்கொண்டு இருந்தான்.

“என்னதான் நம் நிறுவனத்தின் டாப் ஸ்கோட் நீங்கள், மதுவின் நெருங்கிய நட்புகள் என்று பல காரணங்கள் கூறினாலும், இது எல்லாவற்றிற்கும் போர்வையாக உங்களை அனைத்து பிடிப்பது, எங்களுக்கும் நம்பிக்கையை கொடுத்தது எது தெரியுமா?” யாரையும் நிமிர்ந்து பாராமல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தவனை நோக்கி,

“என்ன” என்று அனைவரும் கேட்க,

“நேர்மை” ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது, ஆனால், வந்த திசை தான் வேறு.!

ஆம், வாயிலருகில் இருந்து வந்த குரலை கேட்டு திரும்ப, அங்கே நின்றுகொண்டு இருந்த கிருஷ்ணதேவை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிதேவ் மட்டும் நிலை மாறாமல் அப்படியே தன வேலையை தொடர, சட்டென அனைவரும் எழுந்து நின்றனர்.

அதிதேவ் வேலையில் கெட்டி என்றால், கிருஷ்ணா தேவ் கெடுபிடியில் கெட்டி! அவனுக்கு தெரியாது ஒரு சிறு விஷயமும் அவர்களின் எஸ்கபெட்தில் நடக்க வாய்பில்லை. அதே போல் ஒரு சிறு தவறு என்றாலும் தன்னை வெளிபடுத்தாமலே, அவன் பேரை கேட்டாலே நடுங்க செய்துவிடுவான்.

அப்படி பட்டவன், “ஹாய் மன்னி... எப்படி இருக்கீங்க” என்று உள்ளே வர, அவன்மேல் கையில் வைத்திருந்த மார்கர் பென்னை வீசினால், மாயாதேவி.

“மன்னி...இன்னுமா? என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ்...” கெஞ்சிக்கொண்டு நின்றான். மற்றவர்கள் முன் எதுவும் காண்பித்துக் கொள்ளாமல் திரும்பிகொண்டவளை பரிதாபமாக பார்த்தவன், தானும் சென்று அவர்களோடு இணைந்து அமர்ந்துக்கொண்டான்.

“சோ அந்த நம்பிக்கையை இந்த மக்களிடம் கொண்டு போக போவது தான் இந்த இரண்டு பெட்டகமும்” என்று எதுவுமே அங்கே நடக்காதது போல் தன பேச்சை தொடர்ந்தான் மாதவன்.

திறந்துக்கொண்ட வெள்ளி பெட்டகத்தில் இருந்து அந்த ஓலை சுவடியை வெளியே எடுக்க, ஒரு வகையான வாசம் அந்த அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஒரு மாதிரி அமானுஷ்ய உஷ்ணம் பரவுவது போல் உணர்ந்த மாயாதேவி, தன்னையும் மீறி அதிதேவுடன் நெருங்கி நின்றாள்.

அவளின் முக மாற்றம் அனைவருக்கும் வித்தியாசமாக இருக்க, கேள்வியாக அதிதேவை அனைவரும் பார்க்க, ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்து மறுத்தவன்,

அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டபடி, மெதுவாக படிக்க ஆரம்பித்தான்.

“தன் குலத்திற்கே சாபமிட்டு

உயிர் துறந்த – மங்கையவளோ,
கடமையில் கட்டபட்டிருந்த
கடவுளுக்கே – கட்டளையிட்டவளோ,
காதலில் கரைந்து
கறைபடிந்தவருக்காய் – கணமிழந்தவளோ,
அவளின் சாபம் குலைக்கும் வழி
யிதுவோ?
சாபமிட்டவரின் எண் தொடர்ந்து
வம்சத்தில் –
மூன்றாம் கன்னிகையின் மூலம்
விமோச்சனம் பெறுவிராக...
கன்னிகையின் மூன்றாம் வயமுன்
கழிந்தன
அல்லது,
மூஎண்ணில் எட்டாது பெருக்கல்
தொடங்குமுதல் முடிவுமுன் கழித்திட...

அவளின் குருதி நனைந்து”

தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் தன்னையும் மீறி அவன் வாய் விட்டு படிக்க, மற்றவர்களுக்கு முணுமுணுப்பாக தெளிவில்லாது கேட்ட வரிகள், அருகிலேயே நின்றுக்கொண்டு இருந்த மதுரினிக்கு தெளிவாக கேட்டது.

மூன்றாம் முறையாக இந்த வார்த்தைகள் அவளை நெருங்குகிறது. உடலில் லேசாக உதறல் எடுப்பதை உணர்ந்தவள், அவனின் பூஜ்ஜியங்களை பற்ற, அப்போதே அவளின் நிலை உணர்ந்து, தன்னிலை மீண்டவன், சட்டென மற்றவர்களுக்கு காண்பிக்காது அதனை மீண்டும் உள்ளே வைத்து பூட்டினான்.

பூட்டினான் என்பதை விட, ஓலையை அதன் இடத்தில் வைத்த கணம் அந்த பெட்டகம் தானாக முடிக்கொண்டு சில கீறல் சத்தத்துடன் பூட்டிக்கொண்டது, தானாகவே!

“இது இதுவரை நானுமே பார்த்ததில்லை” என்று உரைத்தபடி மினியா கைகளில் இருந்த அந்த விசித்திர பெட்டகத்தை பார்த்தான், அதிதேவ்.

அடுத்த பெட்டகமோ யாராலும் திறக்க முயன்றும் முடியாமல், மதுரினி, அதிதேவ், கிருஷ்ணா தேவை தவிர அனைவர் கைகளிலும் மாறி இறுதியா மானா கைகளில் வந்தது.

அவளோ கையில் வைத்து, அதனை எப்படி திருப்பது என்று யோசித்தபடி லேசாக மேஜையில் வைத்து தட்டி பார்த்த மானாவை திரும்பி கேவலமாக ஒரு பார்வையை பதித்த கிருஷ்ணா தேவ், திரும்பிக்கொள்ள, அதனை கையில் வாங்கிய மதுரினி மாயாதேவி, அவர்களிடமிருந்து விலகி சென்று தான் கொண்டு வந்த பொருட்களுடன் கீழே அமர்ந்தாள்.

அவளின் செயல்களை குழப்பத்துடன் பார்த்தனர் அனைவரும், அதிதேவ் மாதவன் உட்பட!

அந்த வெற்று தரையில் ஒரு பாயை விரித்தவள், கையில் இருந்த அரிசிமாவை கொண்டு அதன் எதிரே சக்ரம் வரைந்தாள். அந்த சக்ரத்தின் ஆறு முக்கோண முடிவிலும் அந்த செஞ்சான உருண்டைகளை சற்றும் முக சுளிப்பில்லாது வெறும் கையோடு எடுத்து வைத்தவள், அதன்மீது எல்லாம் வெள்ளை சங்கு பூக்களை தூவி ஆர்ச்சனை செய்து, பின் நடுவே ஒரு பெரிய எலுமிச்சம் வைத்துவிட்டு அதற்கு முன் அந்த பெட்டகத்தை வைத்தாள்.

பின் சென்று, அந்த பாயில் சம்மணமிட்டு அமர்ந்து, ஏதோ மந்திரத்தை கூறி, பக்கத்தில் இருந்த குண்டூசியை எடுத்து தன வலது கையில் குத்தி, வெள வந்த துளி ரத்தங்களை, ஒற்றை கையால் அந்த பெரிய பெட்டகத்தை பக்கத்தில் இழுத்து அதன் துளையில் விட, படக் என்ற சத்தத்துடன் திறந்துக்கொண்டது, அந்த விசித்திர பெட்டகம். (ஐம்பொன், பதினோரு மூலிகை, சிரசெலும்பு கொண்டு செய்யப்பட்ட அந்த பெட்டகம்)

மெல்லிய புன்னகையோடு நிமிர்ந்து அனைவரையும் பார்க்க, அனைவரும் பிரம்பிப்புடன் அவளை பார்த்தனர்.

உண்மை புரிந்த அதிதேவ் மாதவ வர்மனின் அதிர்ச்சியையும் மீறிய துளைக்கும் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் வேறுபக்கம் பார்த்தாள், மதுரினி மாயா தேவி...!!!

மழை தூறும்...!!!
 
Top