- Joined
- Jul 23, 2021
- Messages
- 104
தூறல் 45
அந்த நள்ளிரவில் அவனுக்கு கீழ் நசுங்கியபடி அவள் தவித்துக்கொண்டு இருந்தாள். மூச்சுக்கு தவிக்கும் அவள் நுரையீரலின் தவிப்பை முகத்தில் காண்பித்தபடி இருந்தவளை தான் அவனும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
கண்கள் விடாமல் படபடக்க, உதடு துடிக்க, அதன் துடிப்பை நிறுத்த கீழுதடை பற்களால் கவ்விக்கொண்டு, கன்னதசைகள் தவிக்க, அவனை பார்த்தாலும், வாயை திறந்து எதுவும் பேச முயலவில்லை அவள். அதில் மேலும் வெறுப்பாகியவன், சற்றும் உடலை தளர்த்தாது அவளை அழுத்தமாக பார்த்தான்.
‘அவனும் இப்படிதானே இத்தனை ஆண்டுகள் துடித்தான், சற்று துடிக்கட்டும்’ என்று அவனுள் இருக்கும் அரக்கன் வெளியே வந்து அவனை உசுப்பேற்ற, பத்து நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல், வாயை திறந்தாள், அவள்.
“கீழே இறங்குடா எருமை”
“முடியாதுடி”
“ப்ளீஸ்... சுத்தமா முடியலை, நாளைக்கு சாக வேண்டிய நான் இப்போவே செத்துடுவேன்”
சட்டென அவளை விட்டு விலகி பக்கத்தில் விழுந்தவன், “நான்கு வருஷம்...முழுசா நான்கு வருஷம் நான் நொடிக்கு நொடி செத்துட்டு இருக்கேன். அது உனக்கு தெரியும்” குற்றம் சாட்டும் பாவம் அவன் குரலில்... “தெரிந்தும், ஓடி போனாய் நீ. எல்லாம் புரிந்தும்...”
“ச்சு...இல்லைனா நம்ம பாப்புவும் நானும் இப்போ இருந்திருக்க மாட்டோம்”
“பொய் சொல்லாதே...உனக்கு அப்போ நீ பிரெக்நென்ட் என்று தெரியாதுன்னு எனக்கு தெரியும்”
“எனக்கு தெரியும்!” அழுத்தமாக ஜன்னலை வெறித்துக்கொண்டு முணுமுணுத்தவளை, மீண்டும் தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான்.
மீண்டும் முட்டும் மூச்சை வாயை திறந்து காற்றை உள்ளிழுத்து சமாளித்தபடி அவனை பார்த்தவள், குற்றவுணர்ச்சி கண்களை நிறைத்தாலும் நேரான பார்வையுடன் சொன்னாள், “நான் ஜெயதேவ் பொண்ணாக ஓடி போகும் முதலே, சம்யுக்த்தையின் மகள் என்று நிரூபித்துவிட்டேன்” ஒற்றை இழையாய் வளைந்தன, அவள் உதடுகள்.
அப்படியே அவள்மேல் படர்ந்து, கழுத்தில் முகம் புதைத்தவன், “என்னை உயிரோட சித்திரவதை பண்ண என்றே அந்த ஆண்டவன் உன்ன அனுப்பிருக்கான் போலடி” கடித்து துப்பப்பட்ட வார்த்தைகளில் இருந்த வெறுப்பை உள்வாங்கியவளின் விழிகள் கண்ணீரை உகுத்தது.
வழிந்த கண்ணீர் துளிகளோடு சேர்ந்து அன்றைய நினைவுகளும் மனதிலிருந்து வெளியே கசிய ஆரம்பித்தது.
********************
எல்லாம் அறிந்த பின் அவளின் அமைதிக்கு காரணம், முதலில் ஊரை விட்டு செல்வது அல்ல! அந்த மாயமலைக்கு செல்வதே!
பகலில் அறையில் அடங்கி இருப்பவள், இரவுகளில் அதிதேவ் கூட அறியாமல் அந்த மாயறைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஒருபக்கம் ஹெட்விக் ஊரை சுற்றி திரிந்தான்.
விடியலில் இருவருமாக சேர்ந்து உணர்வது ஒரு புது செய்தியாக அவளிடம் சேகரிக்கப்படும்.
அன்றைய நாள், அந்த வருடத்தின் அஷ்டமி – கோகுலஷ்டமி! இன்னுமும் சேலையில் இயல்பாக இருக்க தடுமாறிக்கொண்டு இருந்தவள், அன்றைய இரவு அவள் மாயறைக்கு செல்லும் அவசரத்தில், தொங்கும் பாலத்தில் சிக்கிய முந்தானையை அறுத்தெறிந்துவிட்டு விடுவிடுவென அடுத்த மாளிகைக்கு சென்று மறைந்தாள்.
அந்த பாதாள அறையில் இருந்த வெள்ளி பெட்டகத்தை திறந்து ஓலையை வெளியே எடுத்தவள், மீண்டும் ஒருமுறை படித்து பார்த்தாள்.
எதற்ச்சையாக அதனை கீழே தவறவிட்டவளின் கண்கள் அகல விரிந்தது. அதன் பின் ரத்த மை கொண்டு ஏதோ வரி வரியாக இருப்பதை அப்போது தான் நன்றாக கவனித்து பார்த்தாள்.
ஓலையை பிரித்தவள், அனைத்தையும் தனியே எடுத்து பின் பக்கம் திருப்பி ஒன்றாக்க, அங்கே கிடைத்தது துருப்பு! அதனை கொண்டு அடுத்த பெட்டகத்தை திறந்தவளிற்கு, ஒரு பெரிய மடிக்க வைக்கப்பட்டு இருந்த பட்டு துணியே கிடைத்தது.
கைகள் நடுங்க அதனை திறந்தவளுக்கு, வாளிருக்கும் இடம் பளிச்சிட, ஏனோ மனம் முழுவதும் பயத்தில் துடித்தது அந்த பதின்பருவ பெண்ணிற்கு. தனது வயிற்றை தடவிக்கொண்டவள், அனைத்தையும் சேகரித்தபடி, தன் செயல்களை தொடங்கவும், பின்னிருந்து அவள் தோள்கள் பற்றபடவும் சரியாக இருந்தது.
விதிர்த்து திரும்பியவளை தான் சம்யுக்த்தை விடுவிடுவென இழுத்துக்கொண்டு அவள் அறையில் சென்று தள்ளினார். அப்போதும் அழுத்தமாக இருந்தவளை, உடனடியாக ஊரைவிட்டு கிளம்பி போய்விடும்படி மிரட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்து அவள் கால்களில் விழ, பதறி விலகியவளின் முடிவே, தப்பி சென்றதாக ஆனது.
***********************
எதுவும் பேச தோன்றாமல் “ஐ நீட் யு...நொவ்...” என்று கூறியபடி அவளின் மூழ்க ஆரம்பித்தவனின் ஸ்பரிசத்தை ஏற்றபடி அமைதியாக இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அமைதியை உணர்ந்தவன், “ஏன்?” என்று கேட்க, “முடியல... தொண்டையை அழுத்துது... நாளைக்கு இந்நேரம் நான் உயிரோ...”
“ஷ்...” என்றவன் இந்த முறை அவளின் எதிர்வினையை எதிர்ப்பார்க்கவில்லை. அவளையும் எதையும் யோசிக்க முடியாத / யோசிக்க விடாத அளவிற்கு அவனின் செயல்கள் மாற, தானும் அவனில் மூழ்க ஆரம்பித்தாள்.
மணி இரவு இரண்டை நெருங்க, அருகருகே படுத்துக்கொண்டு இருந்தவர்கள், உடலோடு மனமும் பின்னி பிணைந்திருக்க, “இந்த நேரத்தில் இது தான் முக்கியமா போயிடுச்சோனு தோணுச்சா?” என்று கெட்டவனை பார்த்தவள் பதில் கூறாது இருக்க, “நான் தான் சொன்னேனே... இறப்புகூட நம்மை ஒன்றாக தான் எடுத்து போக முடியும்... அப்போ இருக்குற ஒரு ஒரு நிமிஷமும் நான் உன்னோட வாழ்ந்துடனும்னு தோணுது”
அவன் இப்படியெல்லாம் காதல் வசனம் பேசாதிருந்தால் நன்றாக இருக்கும், அக்கறை எடுக்காமல் இருந்தாள் சுலபமாக இருக்கும் என்று எண்ணும்படி வினோடி நேரம் விணாக்காமல் அவளையும் அஸ்வந்தையும், ஒரு ஆக்டபஸின் உறுதியுடன் வளைத்துக்கொண்டான் அவனுள்.
அஸ்வந் சிணுங்க, “நீ இரு, நான் பார்க்கிறேன்” என்று கூறி அவனை தூக்கி வந்து பால் புகட்டி, அவர்கள் இருவருக்கும் நடுவில் படுக்க வைத்துக்கொண்டவன், குழந்தையை தட்டிகொடுத்து மீண்டும் தூங்க வைத்தான்.
“யாருக்கும் எதுவும் சொல்லலை... அஸ்...அஸ்வந் அவனை நல்லா பார்த்துகோங்க”
“ம்ம்...”
“இந்த டைலாக் எல்லாம் விட்டுவிட்டு நான் இல்லை என்றாலும் கூட இருந்து அவனை உங்களை போல் கண்டிப்பாக வளர்க்காமல், நல்ல முறையில் முன்னேற்றனும்?”
“ம்ம்...”
“இங்கே வேண்டாம்... அவனுக்கு உண்மைகள் தெரிய வேண்டாம்... சென்..சென்னையில் இருக்க முடியும்னா அங்கேயே போயிடுங்க”
“ம்ம்...”
“ஆனா, விடுமுறை எல்லாம் இங்கே வந்துடுங்க...அவனுக்கு உறவுகள் வேண்டும்”
“ம்ம்...”
“என்னோட இதெல்லாம் முடியட்டும். வேற...வேற யாருக்கும் இனி எந்த பிரச்சனையும் தீண்டாம பார்த்துக்கோ”
“ம்ம்...”
இப்படி பல வரிகளும், பல ‘ம்ம்’க்கொட்டல்களுக்கும் இடையில் அந்த நாளும் மந்தமாக விடிந்தது.
நண்பர்களுக்கு உண்மை நிலைமை தெரிவிக்காதே அனைத்தையும் நிகழ்த்தினார்கள். இதுபோன்ற விஷயங்களை எவ்வளவு தூரம் ஆதரிப்பார் என்று அறியவில்லை, எனவே ரிஸ்க் எடுக்க முயலாது, அவளின் சாபத்தை பற்றி விரிவாக விளக்கம் அள்ளிக்கபடவில்லை.
ஆனால், அன்று குடும்பத்தால் அளவுக்கு மீறி தாங்கபடும் செயல்களை விசித்திரமாக பார்த்தனர். அடிகடி அனைவர் கண்களும் கசிவதும், ஒருவர் முகத்திலும் புன்னகை என்ன, சாதாரண பாவம் என்பது கிஞ்சிதுமின்றி இருப்பதை உணர்ந்தே இருந்தனர்.
ஊர் பெரிய தலைகளை அழைத்து, காலையே அனைத்தையும் பேசி முடித்திருந்தனர். முதலில் விபரீதம் உணர்ந்து முழித்தவர்கள், வெளியாட்களை இதிலெல்லாம் உள்நுழைக்க இடம் தரவில்லை.
“இது தான் ஒரே வழி, அந்த அம்மா அஹிலாவதி மாயாதேவி சாட்சியாக, நர்த்தன கிருஷ்ணனின் துணையோடு நான் எடுத்த முடிவிது. என் கடமை என்னவென்று இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். அதை செய்யவிடுங்கள். இது எல்லாம் அதற்க்கான வழிமுறையை கூறும் விஷயங்கள்” என்று அதிகாரமும், அழுத்தமும், ஆளுமையும் நிறைந்த குரலில் கூறி முடித்தார். அதிதேவின் கண்கள் காட்டிய பாவம் அவரை பேச வைத்தது.
ஒருவழியாக ஊர் மக்களை சமாளித்து முடித்திருந்தனர்.
அன்று மாலை ஆறு மணி போல் அவர்கள் பயணம் தொடங்க இருந்தது.
மானா மற்றும் மினியா முன் நின்று வழி நடத்த போகிறவர்கள். அதாவது அந்த ப்ரொஜெக்ட் டோகுமென்ரியின் ஹோஸ்ட். அவர்களுக்கு அசிஸ்ட் செய்தபடி ஜுவாலினி. தயாராக இருந்த கேமிராக்களை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துகொண்டு இருந்தான் ஜித்தன். மேற்பார்வையிட்டபடி கிருஷ்ணதேவ்.
அதிதேவ் மற்றும் மதுரினி எதிலும் தலையிடாமல் ஏதோ யோசனையிலேயே இருக்க, அதே அறையின் மேற்கூரை கம்பி ஒன்றில் தொத்தியபடி ஹெட்விக்.
அவர்களை இப்போதைக்கு தனியே விட முடியாது என்பது போல் அதே அறையில் அந்த மொத்த குடும்பமும்.
சற்று விசித்திரமாக உணர்ந்தாலும், அமைதியாய் அனைத்தையும் கவனித்தபடி நண்பர் குழு. எதையும் கவனிக்கும் நிலையில் இல்லாது குடும்பத்தினர். இந்நேரம் எதையும் ஏற்க முடியாதபடி, அதிதேவ் மாதவ வர்மன் மற்றும் மதுரினி மாயாதேவி. யார் நிலையும் அறியாது தன் உலகத்தில் சந்தோசமாக இருக்கும் அஸ்வத்.
அவர்கள் குழு சந்திப்புக்காக எப்போதும் கூடும் அறையில்லை அது. இது கீழேயே இருக்கும் பெரிய காலி அறை. அந்த காலத்தில் பால் டேன்ஸ் ஆட பயன்படுத்தும் அறைப்போல் இருந்தது.
“ஏதாவது இன்னுமும் எங்களுக்கு தெரிவிக்கபடாமல் இருக்கா மது?” மானா சரியாக பாய்ன்ட் பிடித்து கேள்வி எழுப்ப, அவள்மேல் விழுந்த பார்வையை எப்போதும் போல் நிமிடத்தில் அலட்சியாமாக திருப்பினான், கிருஷ்ணா தேவ்.
பின் மீண்டும் சட்டென திரும்பியவன், “உங்களுக்கு தேவைப்படும் என்ற விஷயங்கள் கண்டிப்பா தெரிவிப்போம். மற்றபடி சொல்லும் வேலையை சரியாக செய்தால் சரி” அதிகாரமாக வந்து விழுந்தன அவன் வார்த்தைகள், தவிப்போடு இருந்த மதுரினியை பார்த்தபடி.
“வேலை செய்யாமல் தான் டாப் ஸ்கோட் அவார்ட் கொடுத்தீங்களா?” பட்டென கேட்டுவிட்ட மானாவின் வாயை மினியா அவசரமாக மூடினாள்.
விட்டாள் எரித்துவிடுவேன் என்பதுப்போல அவளை முறைத்த கிருஷ்ணா தேவ், பின் தேவையில்லாது சர்ச்சையில் கிளப்ப விருப்பமற்று அமைதியானான்.
‘முதலாளி என்ற பயம் சற்றுமில்லாது எப்படி ஏன் இப்படி பேசுகிறேன் நான்’ என்று ஒரு நிமிடம் யோசித்த மானா, பின் அலட்சியம் உனக்கு மட்டும் சொந்தமா என்பதுப்போல திரும்பி தன் வேலையில் ஆழ்ந்தாள்.
மலை ஏற வேண்டும் என்பதால், முன்பே மானா, மினியா, ஜுவாலினி, ஜித்தன் நால்வரையும் உணவுண்ண வைத்து ஓய்வெடுக்க அவரவர் அறைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், ஒரு வாய் கூட வீட்டு மனிதர்களுக்கு உள்ளே இறங்கவில்லை.
சௌந்தர்யா தான், அதிதேவ், கிருஷ்ணாதேவ், மற்றும் மதுரினியை அதட்டி உருட்டி உணவுண்ண வைத்து அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அறைக்கு வந்ததும் அதிதேவோ, ஹெட்விகிற்கு உணவு கொடுத்தவன், அவனில் ஏதோ செய்தபடி பேசிக்கொண்டு இருந்தான். அதனை கவனிக்கும் நிலையில் இல்லை அவள்.
அஸ்வந்தை மடியில் வைத்துக்கொண்டு அவனை அனைத்தபடியே அவள் அமர்ந்து ஒருமணி நேரம் ஆகிற்று. முதல் பத்து நிமிடம் அமைதியாக இருந்த குழந்தை பின் கீழிறங்க துடிக்க, அவனை சமாளித்து கொஞ்சியபடி இருந்தவள் சற்று நேரத்தில் அமைதியாகிவிட, நெளிந்து நெளிந்து சோர்ந்த அஸ்வந் அப்படியே தலை தொங்கி உறங்கி போனான்.
அப்போதும் அவளை கலைக்காமல், மேலும் அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகளை ஆரம்பித்தான். யார் யாருக்கோ அழைத்து பேசியபடி இருந்தவன், மேலும் ஒருமணி நேரம் கடந்த பின்பு திரும்பி பார்க்க, அதே நிலையில் மதுரினி.
பெருமூச்சை வெளியேற்றி அவர்களை நெருங்கியவன், அஸ்வந்தை தன கையில் ஏந்திக்கொள்ள, அப்போது தான் கலைந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
குழந்தையை படுக்கையில் கிடத்திவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர்த்தி அவள் கைகளை பற்றியபடி அப்படியே சாய்ந்து அவளையும் தன்மீது சாய்த்துக்கொண்டான். மறுக்காது தன்னோடு ஒன்றியவளுக்கு வார்த்தைகளில் தரமுடியாத தைரியத்தை, தன ஸ்பரிசத்தின் மூலம் அவளுக்கு கிடத்த முயன்றான்.
அங்கே மௌனமே ஆட்சி செய்தது.
***************
இன்னும் அரைமணி நேரமே இருந்தது அவர்களுக்கு. அவர்களின் பயணம் இப்போது தொடங்குகிறது. அஸ்வந்தை கீழே இறக்கிவிடாது பிடித்துக்கொண்டு இருந்தாள், மாயாதேவி.
என்ன தோன்றியதோ? “அம்மா... னோ வாரி...அம்மா வர வரைக்கும் பாப்பு பாட்டிக்கூட சமத்து” என்று முழுமையாக விலகாத மழலை குரலில் கூறி அவள் கன்னத்தில் முத்தம் பத்திது, மூக்கால் உரசினான், அஸ்வந்.
கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல், “என் தங்கமே...” என்று அவனை அனைத்து தன்னுள் புதைத்தாள். அவளிடமிருந்து அவனை வாங்கிய அதிதேவ் உச்சி முகர்ந்து, சம்யுக்த்தையிடம் கொடுத்தவன், “கிளம்பலாம்” என்று கூற, அந்த வேனில் அனைவரும் ஏற ஆரம்பித்தனர்.
லேசாக தூறும் மழை நிற்காமல் இருக்க, மங்கிய நேரமதில் அவர்கள் பயணம் தொடர்ந்தது.
“எதுவும் பிரச்சனை இல்லை தானே சார்” இப்போது நேரடியாகவே அதிதேவிடம் கேட்டாள், மானா. மினியா கூட ஏதோ அழுத்தமாக உணர்ந்தவள், மானாவை தடுக்காமல் அவனை பதிலுக்காக பார்க்க,
“ஒன்றுமில்லை... கவலை வேண்டாம். உங்களை விட உங்க எல்லாரோட பாதுக்காப்பும் எனக்கு முக்கியம் தான். டோன்ட் வாரி” ஏதோ கூற வந்த கிருஷ்ணாவை பார்வையால் அடக்கியவன், அவர்களுக்கு நம்பிக்கையூட்டினான்.
இந்த முறை ஓட்டுனர் இருக்கைக்கு எதிரே இருந்த மூன்று இருக்கையில் அமர்ந்திருந்தனர், ஜேகப், மதுரினி, அதிதேவ், என்று மூவரும்.
பக்கத்தில் அமர்ந்து தன் இருபக்கமும் அமர்ந்திருந்த ஆண்களின் கை அவளின் இரண்டு கைகளையும் ஆதரவாக பற்றியிருக்க, பதட்டத்தில் நெருக்கினாள் பதிலுக்கு அவர்களின் கைகளை. அவளின் உணர்வை புரிந்தது போல், சூழ்நிலை கூட அங்கே அழுத்தமான கணமானதொரு அமைதியை நிலவ துடித்தது.
அதை உடைப்பது போல் வெளிப்பட்டது, பதட்டத்துடன் ஓட்டுனரின் குரல், “சா...சார்...” என்று தந்தியடித்தவரை தொடர்ந்து அவர் பார்வை சென்ற திசையில் தாங்களும் பார்க்க, சாவகாசமாக எதிரே நடந்து வந்துக்கொண்டு இருந்தார், காட்டுக்கு ராஜா.
ஆம், பிடரி அசைய கம்பீரமாக எதிரே சிங்கமொன்று நடந்துவர, உயிர் பயத்தில் பம்பியபடி இருக்கையின் மேல் தன்னை அறியாமல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு அதிதேவை அழைத்திருந்தான், அந்த ஓட்டுனர்.
சென்னைவாசியான அவனுக்கு, அந்த ஊரே விசித்திரமாக இருக்க, இப்போது சிங்கத்திடம் கோர்த்துவிட்டிருக்கும் இவர்களை, மனதினுள் திட்டிக்கொண்டு இருந்தான் அவன். பின்னே வெளியேவா திட்ட முடியும்?
மலையடி வாரம் வரை மட்டுமே அவன் வர அனுமதி! அவர்களை விட்டுவிட்டு மீண்டும் அழைக்கும்போது வந்தால் போதும் என்று கூறியிருந்தனர்.
வந்த சிங்கத்தை முன்பக்க கண்ணாடியில் நெருங்கி நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள், மதுரினி. அவர்களுக்கு இதெல்லாம் புதிதாக இல்லை, இதைவிட ஆபத்தான சூழ்நிலையையே சாதாரணமாக கையாண்டு இருக்கின்றனர் அந்த குழு. ஏனினும் இன்று அனைவர் மனத்திலும் லேசாக பயம் எழவே செய்தது.
நடந்து வந்த சிங்கமோ ஒரே ஏக்கில் அந்த முன் கண்ணாடியின் விளிம்பை பற்றிக்கொண்டு உள்ளே பார்த்தது. சற்றும் பின்னே நகராது அதன் கண்களை நேராக பார்த்தாள், மதுரினி.
பயத்தில் கண் மூடிக்கொண்டு இருந்த ஓட்டுனரோ, இவளுக்கு என்ன லூசா என்பது போல் பார்த்த ஜித்தனோ, பயத்தோடு பார்த்த பெண்களோ, இந்த பக்கம் அவ்வளவாக சிங்கத்தின் நடமாட்டம் எல்லாம் இல்லையே என்று யோசனையோடு பார்த்த கிருஷ்ணா தேவோ, அவளை காக்கும் துடிப்போடு ரெடியாக இருந்த அதிதேவ் மற்றும் ஜேகபோ அவளின் கவனத்தையோ சிங்கத்தின் கவனத்தையோ கவரவில்லை.
கண்ணாடியில் ஊன்றி இருந்த அவள் கைகளின் மேல் தன் வலது முன்பக்க காலை கொண்டு அழுத்திய சிங்கம், நழுவி கீழே இறங்கி, அவர்கள் வண்டியை தாண்டி சென்றேவிட்டது. ‘என்ன நடந்தது’ என்று தனக்கே புரியாமல், மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
“சிங்கம் போய் சிறுத்தை வருவதற்குள் வண்டியை கிளப்புங்க அண்ணா, அப்புறம் சீட்டில் இருந்து தாவி மேல் கூரையில் ஏறிவிட போகிறீர்கள்” கிண்டலடித்து நிகழ்வுக்கு அனைவரையும் திருப்பிய ஜித்தன், நிலைமையை சீராக்க, மீண்டும் அமைதி.
சிறிது நேரத்திலேயே வந்துவிட்டனர் அந்த மாயமலைக்கு. அனைவரும் இறங்க, சற்று பெரிய அளவில் இருந்த குன்றை கீழிருந்து பார்க்க, அந்த இரவு நேர மழை காலத்தில் அமானுஷ்யமாக காட்சியளித்தது.
அதன் உச்சியை நிமிர்ந்து பார்த்தாள், மதுரினி மாயாதேவி. உச்சியில் இருக்கும் அந்த பெரிய ராட்சச மரத்தையே விழியசைக்காது பார்த்தவளின் பார்வையை தொடர்ந்து, அதிதேவின் பார்வையும் அதனை பார்த்தது.
மழை தூறும்...!!!