• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 46

முகத்தில் ஊசியென விழுகும் தூறலை வழித்துவிட்டவள், தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பிக்க, அனைவரும் கூட தத்தம் உடைமைகளை பொருத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.

தலையில் மழையில் இருந்து தப்பிக்க, குடை போன்ற ஒரு அம்சம் தலையோடு சேர்த்து மாட்டியிருந்தனர், நெற்றியில் ஒரு ஹெட் டார்ச், கையில் ஒரு நீண்ட ஹான்ட் சிக்னல் லைட்டை ஒத்திருந்த ஒரு ல்.இ.டி ரோட் லைட், அது அந்த இருட்டை கிழித்தபடி பகலுக்கு நிகராக வெளிச்சத்தை பரப்பிக்கொண்டு இருந்தது. மற்றொரு கையில் பெரிய தடி, தோளில் தங்களின் பேக்பாக் சகிதம் அனைவரும் அந்த மலையை ஏற ஆரம்பித்தனர்.

ஜித்தன் தடி மற்றும் லைட் இல்லாது வந்தவன், அதற்கு பதிலாக கூடுதலாக ஹை வாலியு லென்ஸ் பொருத்திய தன் ஹைடடெக் கேமிராவுடன் நடந்து வந்தான். அவனுக்கு விரிசித்திரமாக தோன்றிய விஷயங்களையெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தான்.

மினியா கையில் லைட்டை வைத்திருந்தவள், கழுத்தில் அவளும் ஒரு புகைப்பட கருவியுடன் வந்தவள், ஆங்காங்கே ஓரிரு நிமிடம் நின்று மானா தொகுத்து பேசுவதை, ஆவண பதிவு செய்தபடி வந்தாள்.

அந்த இரவு நேரத்தில், மழை தூவ, காட்டு செடிகள் புடை சூழ, இருட்டை உடையாக போற்றியிருந்த அந்த மலையில் அப்படி என்னத்தை புகைப்படம் எடுப்பனோ என்ற எண்ணத்தோடு அவனை அவ்வபோது பார்த்துக்கொண்டு வந்தாள், ஜுவாலினி.

கிருஷ்ணா தேவ், சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி, மிகவும்...மிகவும் ஜாக்கிரதை உணர்வோடு முன்னே நடக்க, அவனை தொடர்ந்து அதிதேவ் மற்றும் மதுரினி வந்தனர். பிடித்த கைகளை விடவில்லை இருவரும். உண்மையை முழுதாக அறிந்தவர்களாயிற்றே?
அவர்களை தொடர்ந்து ஜித்தன், ஜுவாலினி, மினியா, மானா வர இறுதியாக ஜேகப் மீண்டும் கிருஷ்ணா தேவிற்கு நிகரான பார்வை சுழற்சியுடன் வந்துக்கொண்டு இருந்தான். கூடவே, அவன் கைகளில் இருந்த சிறு பெயிண்ட் டப்பாவை கொண்டு பத்தடிக்கு ஒரு மார்க் கொடுத்துக்கொண்டு வந்தான்.

திடீரென தங்கள் முன் இரண்டு மூன்று முள்ளம்பன்றிகளை கண்டு அசையாமல் அப்படியே நின்றான் கிருஷ்ணா தேவ். அவனின் நிதானத்தை உணர்ந்து பின் வந்தவர்கள் என்னவென்று முன்னே வர, சட்டென இருபக்கமும் கைகளை நீட்டி அவர்களை தடுத்தவன், “ஷ்ஷ்... முள்ளம் பன்றிகள்... தேவையற்று அசையாதீர்கள்...ஒருவரை தவிர மீதி பேர் எல்லாரும் விளக்குகளை அணையுங்கள். அதையும் மேல் நோக்கி திருப்பி பிடியுங்கள்” என்று கூற,

சட்டென தன் கைகளை மேலே தூக்கியபடி தன் ஹெட் டார்ச்சை அணைத்தான், அதிதேவ். எனவே, மற்றவர்கள் அனைவரும் தங்கள் கருவிகளை அணைத்துவிட்டு அமைதியாய் இருக்க,

“நிறைய காலதட சத்தம் கூட எழுப்பாம மெதுவாக வாங்க. பத்தடி தள்ளி தான் இருக்கிறோம், இன்னும் அதுங்க கவனம் நம் பக்கம் வரலை. அதே டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுங்க... ஸ்லொவ் அண்ட் ஸ்டெடி... “ மெதுவான குரலில் தெளிவாக முணுமுணுக்க, அனைவருக்கும் அங்கிருந்து நகர்ந்து முன்னேருவதற்க்குள் சற்று திணறிவிட்டனர்.

சற்று அதற்கு தீங்கு என்பது போல் உணர்ந்தாலும் அதனின் முள் உடலை வைத்து தாக்க ஆரம்பித்துவிடும். இப்போது இருக்கும் சுழலில் அதனை எதிர்க்கொள்ள யாராலும் முடியாது. கைகளில் பாதுக்காப்பிற்காக கொண்டு வந்த துப்பாக்கி இருக்கிறது என்றாலும், மற்றைய கருவிகளை கொண்டே அதனை அடக்கிவிட முடியும் என்றாலும், தேவையற்ற நேர விரயம் என்பது போலவே அனைவரின் எண்ணமும்.
மேலேறி அந்த பெரிய மரத்தை... மரத்தின் இருந்த ஆளுயர பொந்தை அவர்கள் அடையும்போது மழை வலுத்திருந்தது. முழுக்க நனைத்திருந்த உடலோடு அனைவரும் சற்று திகில் பரவும் உணர்வுடன் அந்த பொந்தை பார்க்க, தைரியமாக உள்ளே காலடி எடுத்து வைத்து எட்டி பார்த்தாள், மதுரினி மாயாதேவி.

பின்னோடு வந்த கிருஷ்ணா தேவும், உள்ளே பார்க்க, கீழே சமமாக இருந்த தரையை பார்த்தவர்கள் நிமிர்ந்து மேலே பார்க்க, இரண்டடி அளவில் மேலும் ஒரு பொந்து போன்ற ஒன்று உட்புறமாக காட்சி தந்தது. ஐந்து பேர் வரை ஒடுங்கும் அளவிற்கு பெரிய பொந்து.

கிருஷ்ணாவை விலக்கிவிட்டு உள்ளே வந்த அதிதேவ் அதனை எக்கி ஏற முயல, முடியாமல் வழிகிற்று. பாசி போன்ற ஒரு தனிமம் அந்த மரத்தின் உள்ளே பரவியிருக்க, வழிகிற்று அவனுக்கு.! உடனே கீழே குனிந்து படிபோன்ற அமைப்பை தன் உடலால் கொடுத்தபடி கிருஷ்ணா தேவ் முட்டி போட்டு அமர, அவன் மேல் ஏறி, அந்த உட்புற பொந்தை மெதுவாக பார்வையிட்டான் அவன்.

வெளிப்புறம் நீண்டு தனி மரம் போல் வளந்திருக்கும் கிளை அரிக்கப்பட்டு பொந்து போல் காட்சி தந்தது. பெருமூச்சுடன் தலையசைத்து கீழே குதித்தான்.

யோசனையோடு வெளியே வந்த மதுரினி.

சமாமாக இருக்கும் ஒரு இடத்தை பிடித்து, அதற்குள் ரெடிமேட் டென்ட்டை செட் செய்திருந்த ஜித்தன் மற்றும் ஜேகப்பை நோக்கி தலையசைத்து, உள்ளே சென்று அமர்ந்தாள், அவள்.

அதிதேவ் மற்றும் கிருஷ்ணா வெளியே வர, இப்போது மீதி நால்வரும் உள்ளே சென்று பார்க்க, “பொந்தை தவிர ஒன்றுமில்லையே அங்கே” என்று கூறியபடி டெண்டிற்க்குள் சென்றான், கிருஷ்ணா.

நள்ளிரவை நெருங்கியிருக்க, மழை சற்று விட்டிருந்தது. அந்த இரண்டாவது பெட்டகத்தில் இருந்து மீண்டும் அந்த துணியை வெளியே எடுத்தாள், மதுரினி.

மாயமுண்டு - மந்திரமுண்டு
மரமொன்றில்
மந்தமாய் காட்சி தரும் அடியொன்றில்
ஸ்ரமமில்லா சிரம் நிமிர
சிக்குமே வழியொன்று

“மாயமரம் வந்துட்டோம், இருட்டா இருக்க அத்தோட அடிவாரம், தலையை நிமிர்த்தினா வழி... பொந்து இருக்கு...ஆனா, வெறுமையா இருக்கே?” மற்றவர்களுக்கு கூறியபடி, தானும் யோசிக்க ஆரம்பித்தாள்.

“அடுத்த லைன் படிச்சு பாரு மது, வேற ஏதாவது இருக்கா?” மினியா கேட்க...

“ப்ச்... அடுத்த தடயம் கிடைக்க அது வைத்து தான், மற்ற வரிகள் தெரிய ஆரம்பிக்கும்” மெதுவாக கூறினாள்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சிது மதும்மா?” ஜேகப் கேட்க, அவள் கைகள் நீண்டு முதல் வெள்ளி பெட்டகத்தை காண்பித்தது.

“ம்ம்...”

“மாயமுண்டு - மந்திரமுண்டு
மரமொன்றில்
மந்தமாய் காட்சி தரும் அடியொன்றில்
ஸ்ரமமில்லா சிரம் நிமிர
சிக்குமே வழியொன்று”
மீண்டும் தனக்குள் சொல்லி பார்த்த அதிதேவ், “ஸ்ரமமில்லாமனா நாம இப்போ கஷ்டப்பட்டு தானே உள்ளே பார்த்தோம்? வேற எதுவோ...” என்று யோசனையோடு மரத்தின் கீழேயே நின்றபடி நிமிர்ந்து அந்த மரத்தை பார்க்க, அங்கே தொங்கிக்கொண்டு இருந்தது பழுப்பு நிற கொடிகள்...

லேசாக அதனை பிடித்து இழுத்து பார்த்தான், எந்தவித மாற்றமுமில்லை. இயற்க்கை மாறாது அப்படியே இருந்தது. வலுகொண்டு அதனை பிடித்திழுக்க... அதிலிருந்து வழிந்து வந்த சிவப்பு நிற திவரம் சொட்ட ஆரம்பிக்க, “ச்ச... “ என்று அதனின் பிசுபிசுப்பை உணர்ந்து கைகளை உதறினான்.

அது சிதறி, உள்பக்கம் சிறு துளிகள் தெறிக்க, லேசாக பிளந்தது அந்த தரை. அதன் சத்ததின் அனைவரும் வேகமாக அருகே வந்தனர். கண்கள் விரிய பார்க்கும்போதே, சடசடவென அந்த கொடிகளை இரண்டை பற்றி இழுத்தவன், அதனை முறுக்கி சாறை கீழே அந்த தரையில் விட, சற்றே சத்ததோடு பிளந்து இரண்டாக தொங்கியது அந்த தரை.

அந்த அமானுஷ்ய நேரத்தில், அமைதியான இடத்தில், அந்த சத்தம் சற்று பெரியாதாவே கேட்டு, அனைவர் உடலிலும் உதற செய்தது.

இரண்டாக பிளந்து தொங்கிய இடத்தில் எட்டி உள்ளே பார்த்தான், அதிதேவ். வட்டமாக பெரிய சைஸ் பைப் போன்ற காட்சியுடன் அதே பாசி படிந்த சுற்றுபுறம்... உள்ளே குதிக்க போனவனை தடுத்த, ஜேகப், “இருங்க...உள்ளே எப்படி என்னனு தெரியாம இறங்க வேண்டாம்” என்று கூறி தடுத்தான்.

அவனின் கூற்றை அமோத்தித்து வெளியே வந்தவன், தன் பேக்பாக்கை எடுத்து சிறிது சிறிதாக இருந்த கம்பிகளை ஒன்று சேர்த்து அதன் முனையில் சிறு புகைப்பட கருவியை பொருத்தினான். பின் அதனை ஆன் செய்து, தன் கைபேசியுடன் இணைத்தவன், மெதுவாக அதை அந்த சந்தில் கீழே இறக்கினான்.

கைபெசியிலேயே அனைவரின் பார்வையும் பதிந்திருக்க, முழுக்க முழுக்க அந்த பாசி படிந்த சுற்றம் தவிர வேறேதுமின்றி கீழே இறங்கிய கம்பி எதிலோ தட்டி நின்றது. அதன் நேரெதிரே மீண்டும் அதே போல் ஒரு வழி, அதே பாசி படிந்த சுற்றம்.

கருவியை மேலே இழுத்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், “முதலில் நானும் ஜித்தனும் உள்ளே இறங்குறோம்...ஜித்தன் நீங்க உங்க கேமிராவை கைபேசியோடு இணைத்து இவர்களிடம் கொடுங்கள்... அதன்பின் மீதியை முடிவு செய்துக்கொள்ளலாம்.” என்று கூறி தயாராக,

சற்று நேரம் அனைவரையும் தங்கள் பின் நிற்க வைத்துக்கொண்டு ஓரிரு வரிகள் பேசி பதிவு செய்துக்கொண்ட மானா மற்றும் மினியா, விலக, அனைவரும் அவர்களை அனைத்து விடுவித்து உள்ளே அனுப்பினர்.

முதலில் இறங்கிய அதிதேவ், இடுப்பில் கையிற்றை கட்டிக்கொண்டு, “எல்லாரும் கட்ட வேண்டாம்... முதல இது போதும்... பத்தலை என்றால் அடுத்தடுத்து கையிற்றை இணைத்துக்கொண்டே வாருங்கள்” என்று கூறிவிட்டு, நேரே சென்று அந்த எட்டடி முடிவில் குதிக்க,

உள்ளே மூன்றடி அகலத்தில், ஆறடி உயரத்தில் நீண்டது பாதை. மேலே நிமிர்ந்து, “ஒன்றும் பயமில்லை உள்ளே வா ஜித்தன்” என்று கூறி நகர, தானும் குதித்தான் ஜித்தன்.

இருவரும் மெதுவாக உள்ளே நகர ஆரம்பிக்க, அவர்களின் செயல்களை மேலிருந்தே பார்த்தபடி இருந்தனர் மற்றவர்கள். கையிற்றை அதிதேவ் மட்டும் கட்டிக்கொண்டு இருக்க, பின்னோடு மெதுவே அவன் தோள்களை பற்றியபடி ஜித்தன் நடந்தான்.
மீண்டும் ஒரு அடைப்பு தான் அவர்களை வரவேற்றது. இருபுற பாசி சுற்றம், வந்த வழி, எதிரே இருந்த அடைப்பை தவிர வேறேதுமில்லை அங்கே! கேமிராவை தன்புறம் திருப்பியவன், கைபேசியில் மதுவை அழைத்து, “உனக்கு ஏதும் கண்டுபிடிக்க முடியுதா?” என்று கேட்டபடி கேமிராவை சுற்றினான்.

“இல்லையே...எதுவும் தோணலை...கொஞ்சம் மெதுவாக இன்ச் பை இன்ச் காமிங்க நான் பார்க்கணும்” என்று கூறி, கவனமாக அந்த பதிவை பார்த்துக்கொண்டு வந்தவள், ஓரிடத்தில் “ஸ்ட்டோப்...” என்று பதற்றமான குரலில் கூற, அங்கே மீண்டும் திரும்பியது கேமிரா.

“அங்க பாருங்க ஒரு வெள்ளை திரவியம்...கிட்ட போங்க...” மெல்லியதாக கசிந்துக்கொண்டு இருந்ததை கவனித்தவர்கள் அங்கே செல்ல, “பார்த்து, என்னனு தெரியாம கை வைக்க யோசிங்க...ஜஸ்ட் வாட்ச் இட் அப்புறம் ஆபத்து இல்லைனா டச் பண்ணுங்க” மெதுவாக நுனி விரலால் அதனை தொட்டு பார்த்தான் ஜித்தன்.

எதுவும் ஆகவில்லை. பின் சற்று அதனை இரண்டு விரலால் தடவி எடுத்து, அந்த தடுப்பில் தடவி பார்க்க, அப்போதும் எந்த மாற்றமுமில்லை. “இல்லை மது... இட்ஸ்...இட்ஸ்...ஜஸ்ட்... ஏதோ நேச்சுரல் திங்” என்று கூறினான் ஜித்தன்.

“சரி நான் வரேன்...”

“வாட்...நோ...” “சூப்பர்... சீக்கிரம் வா” என்று இருவரின் குரலும் ஒரே சமயத்தில் ஒலிக்க, அதிதேவின் அட்சயபனையை உணர்ந்தவள், “எப்படி இருந்தாலும் நான் வந்து தானே ஆகணும்” என்று கூற அமைதியாகிவிட்டான்.

மானா மற்றும் மதுரினி உள்ளே வர, அரைமணி நேரம் கடந்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை, அவர்களால். தட்டி, தடவி, கருவிக்கொண்டு இடித்து என்று எப்படி செய்தும் எதுவும் மாற்றமில்லை அங்கே! சட்டென முகம் பளிச்சிட தன் கையில் இருந்த அந்த துணியை எடுத்து இருவர் கொண்டு விரித்து பிடிக்க செய்தவள், அந்த திரவியம் கொண்டு வந்து அதில் தடவ தேய்க்க, இப்போது அடுத்த வரிகள் தோன்ற ஆரம்பித்தது.

நடப்பதை அவர்கள் கருவிகள் பதிவு செய்துக்கொண்டே இருக்க, மானா சென்று அந்த திரவியத்தை சற்று எடுத்து சேகரித்தவள், ஏற்கனவே மேலே அந்த விழுது திரவியத்தை சேகரித்த அடுக்கில் இதனையும் பத்திரமாக சேகரித்து வைத்தாள்.

“மீட்சினியின் கரம் கொண்டு
மச்சம் வரைய
மோட்சம் அடையும் அடுத்த வழியின்
மதில்கள் மறையும்
அதனை தொடர்ந்த வரிசையின் கதவு
காலம் திறக்கும்”

வாய்விட்டு படிக்க, இங்கே இருக்கும் நால்வரோடு சேர்த்து வெளியே இருந்த நால்வரும் என கேட்ட அனைவரும் குழம்பினர்.

“மச்சமா? அதை எப்படி வரைய முடியும்?” எல்லாரும் குழம்பும்போதே கைபேசியில் வாங்கிய ஜேகப் “மச்சம்னா மச்ச அவதாரம்...மதும்மா அந்த தடுப்பில் மீன் வடிவத்தை வரைந்து பார்” என்று அவசரமாக கூற, அதை பின்பற்றினாள், மதுரினி.

சற்று நேரம் எதுவுமே நிகழவில்லை, உச்சுகொட்டளுடன் இவள் விலகும் நேரம், உள்பக்கமாக நகர்ந்தது அந்த தடுப்பு, சற்றும் சத்தமில்லாமல்.

“ஏதோ கிராபிக் மாயாஜால படம் பாக்குற மாதிரியே இருக்குல?” ஜித்தன் கூற, அனைவருக்கும் லேசாக சிரிப்பு.

ஆனால், உள்ளே பார்த்த அடுத்த நொடி முகங்கள் கும்பி போயிற்று. ஏனினில் மீண்டும் பள்ளம் இருக்க! அந்த பள்ளத்தில் குதிக்க முடியாது என்பதுப்போல அடியில் நீண்டுக்கொண்டு இருந்த குத்து பாறைகள். ஓரத்தில் மட்டுமே ஓரடி சமதரைகள் இருக்க, அந்த சமதரையின் ஈரடி கூரையாக இருந்த இடத்தில் தான் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தனர்.

மழை தூறும்...!!!
 
Top