• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 49

“இன்னை...இன்னைக்கு இருக்கு அவனுக்கு...அவ்வளவு என்ன திமிர்?” உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்பது போல் அவன் வரும் வரை தூங்காது விழித்திருந்தாள்.

நேரம் கழித்து வந்த அதிதேவோ, முழித்திருந்த அவளை பார்த்து ஒருநிமிடம் திடுகிட்டாலும், பின், பிரிக்கபடாமல் இருந்த மருந்து மாத்திரைகளை ஒருமுறை பார்த்தவன் ஒன்றும் கூறாது சென்று தன்னை சுத்தபடுத்திக்கொண்டு உடைமாற்றி வந்து அவள்பக்கம் அமர்ந்து,

தண்ணீரை ஊற்றி கொடுத்தவன். மெதுவாக மருந்துகளை பிரித்து அவளிடம் ஒவ்வொன்றாக கொடுக்க, அதனை விழுங்கியபடி இருந்தவளின் விழிகள் அவனை விழுங்கிற்று. மருந்துக்களை உண்டதும் அவளை மீண்டும் படுக்கையில் படுக்க உதவ, அப்போது போலவே அவன் கழுத்தில் கைகளை கோர்த்து அவள்மேல் இழுத்து, “என்மேல நிஜமாவே உனக்கு அவ்வளவு அன்பா?” என்று விழியற்றாது கேட்க,

“ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகிருந்தா, கூடவே வர, நானும் ரெடியா நரகத்திற்கு ஈபாஸ் வாங்கி வைத்திருந்தேன்” இடக்காக பதில் கூறியவனின் ஊன்றி இருந்த கைகளில் அடித்தவள், “நான் நல்ல...சமத்து பொண்ணு...சோ...சொர்கத்துக்கு தான் போயிருப்பேன்” என்று கூற,

நக்கலாக சிரித்தவன், “ஒரு உயிரை சித்திரவதை அதுவும்...உணர்வுகளை கொன்று சித்திரவதை செய்யும் உன்னை எல்லாம் சொர்க்கத்தில் சேர்க்க மாட்டாங்க பாப்பா” என்று கூறி விலக பார்த்தான்.

விடாமல் இறுக்கிய அவளை நேர்பார்வை பார்த்தவன், “ஹேய்...விடுடி...ரொம்ப டையர்டாக இருக்கு” என்று கூற, கைகளை விலக்கினாள். அவளுக்கு பக்கத்தில் விழுந்தவன், கண்களை மூடிக்கொள்ள, அசையும் அவன் கருவிழி கொண்டு அவன் தூங்காதது உறுதியாக, லேசாக அவனை நோக்கி நகர்ந்து படுத்தவள், “சாரி...” என்று கூற,

அவள்புறம் திரும்பியவன், “உயிரே என்கிட்டே இல்லைடி...ஒவ்வொரு அணுவும் சிதறும் உணர்வு...தாங்கவே முடியலை தெரியுமா?” அப்போதும் அந்த உயிர் வலியை உணர்ந்தபடி கூறியவனை பார்த்தவள், முயன்று அவன் முகத்தை நெருங்க தானே குனிந்தவன் அவள் கழுத்தில் புதைந்துக்கொண்டான்.

சூடான கண்ணீரை உணர்ந்தவளின் கைகள் உயர்ந்து அவன் தலை கோத, ஒட்டுமொத்த வலியையும் கண்ணீர் கொண்டு அவள் கழுத்தில் கரைத்துக்கொண்டு இருந்தான்.

நிமிடங்கள் கடந்தும் அவன் நிமிராது போக, “என்ன இது சின்ன குழந்தை மாதிரி? அஸ்வந் கூட அமைதியாகிட்டான்” என்று கிண்டல் பேசி அவனை சமாளிக்க முயல,

“போடி...” என்று மேலும் புதைந்தவனை, பிடித்து இழுத்து விலக்கியவள், “எப்படி இருந்தாலும் செய்து தானே ஆகவேண்டும் என்ற நினைப்பில்...தான்”

“நான் தான் பேச வந்தேன் தானே? ஏதோ அதனை பார்க்க தான் கிட்ட போறன்னு நினைச்சி விட்ட கண்சிமிட்டும் நேரத்தில் என் உயிரை வாங்கிட்டியே பாவி” மீண்டும் தலைகேரும் கோவத்தை அடக்க முடியாமல் அவன்.

“நீ முதலிலேயே சொல்ல வேண்டியது தானே?”

“எங்க சொல்லுற மாதிரியா நீ இருந்த? பிளஸ் எனக்கே அது வொர்க் அவுட் ஆகுமான்னு டவுட் தான்”

“அதான் எல்லாம் சரி ஆகிடுச்சு இல்ல? ப்ளீஸ் ட்ரை டூ கெட் ரிலாக்ஸ்”

“அதெல்லாம் எப்படி முடியும்? உயிரே போனாலும் பரவாயில்லை என்று நீ இல்லாது போய்டுவியோனு நான் பட்ட அந்த உயிர் வலி எனக்கு தானே தெரியும்” இப்போதும் உடல் நடுங்க கோவம் குறையாது பேசினான். அவனை ஓர் பேச்சில் சமாளிப்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தாள்.

“தோ...தோமஸ் அவனை என்ன பண்ணிங்க?” என்றவளை ஆச்சர்யமாக திரும்பி பார்த்தான், “அவன் நம்மளை பின் தொடர்ந்து வந்தது எனக்கும் தெரியும்”

“ஸ்ரீஜன் கிட்ட இருக்கான்”
“ஒ...ஹி இஸ் ஹியர்?”

“அவன் கண்காணிப்பின் கீழ் தான் இத்தனை வருஷம் நீங்க பத்திரமா இருந்திங்க... அவனுக்கு உன்மேல் தனி ப்ரியமே இருக்கு... அவங்கள அனுப்பி நீ சாப்பாடு சாப்பிட சொல்லி அக்கறை காட்டினியாமே? அதுல இருந்து தங்கை பாசம் ஊத்துது...

இந்த மாதிரி நாம பண்ண போறோம்னு சொன்னதும் மொத்தமா குடும்பத்தையே அவன் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துட்டான்...இந்த ஊரே அவன் கட்ட்பாடின் கீழே வரவழைச்சி... கடைசியா தோமஸ் அவனையும் பிடித்து, இப்போ நாம சேப்”

சிறிது நேரம் அமைதியில் கழிய, மருத்தின் விளைவால் சொக்கும் கண்களை கட்டுபடுத்தியவள், சட்டென பலத்தை திரட்டி எட்டி அவன் உதடுகளில் தன்னை புதைத்தவள், “எல்லாம் சரி பண்ணிக்கலாம், இனி எப்பவும் என்னைவிட்டு விலகி இருக்க ட்ரை பண்ணாதே... இப்போ தூங்கலாம்” என்று கூறி அவன்மேல் இடதுபக்க கையை போட்டுக்கொண்டு நிமிடத்தில் துயிலில் ஆழ்ந்துவிட்டாள்.

மேலும் ஒரு மாதம் கழிய, மருத்துவமனை சென்று உச்சி முதல் நுனி வரை பரிசோதித்து அவள் திடமாக உள்ளாள், என்று மருத்துவர்கள் சத்தியம் வைக்காத குறையாக கூறும் வரை அவளை கண்ணாடி பொருளென பார்த்துக்கொண்டனர் குடும்பத்தினர்.

அவ்வபோது குதறும் குரலில் காதலை காட்டும் அதிதேவ் மட்டும் அவளுக்கு மிரட்சியை ஏற்படுத்தினான். “பகவானே...அந்த விதிய கூட ஜெயிச்சிட்டேன்...இந்த மந்தியை சமாளிக்க முடியலையே” என்று மனதில் கிண்டலடித்து கொண்டாலும் அவனின் வலியை உணர்ந்தவளாக அவனின் கோவத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

எவ்வளவோ அடிகளை வாழ்க்கையில் எதிர்கொண்டுவிட்ட மதுரினி, அதிதேவையும் அவனின் காதலை உணர்ந்தபின் அதனையும் எதிர்கொள்ள ஆரம்பித்தாள், சந்தோசமாகவே...!!! அதற்கு முயன்றால் என்று கூறினாள் சரியாக இருக்கும்.

அவனுக்கும் அவள்மேல் ஆதங்கம் உள்ளது.
அவளுக்கும் அவன்மேல் வருத்தங்கள் உள்ளது.
அவனின் வெறுப்பை காதல் மாற்றியது.
அவளின் விலகலை அவன் அக்கறை மாற்றியது.

எதையும் சிந்தித்து மேலும் சிக்காளிக்கி கொள்ளாமல், வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்க்கொள்ள ஆரம்பித்தனர் இருவரும். அதற்கு மேலும் அழகூட்டினான் அவர்களின் செல்ல மகன், அஸ்வந்.

மொத்த குடும்பமும் அவளை தங்க தட்டில் வைக்காத குறையாக தாங்க, ஒரு நாள் ஊர் மக்களின் பெரிய தலைகள் வந்து அவளை பார்த்து நலம் விசாரித்து சென்றனர். இருந்தும், தினம் யாராது குடும்பத்தோடு வந்து பார்த்துவிட்டு செல்வது வாடிக்கையானது. முதலில் முகம் மாறாமல் பேசியவள், போக போக வெறுப்பாகி போனாள்.

‘நான் என்ன நாட்டை காத்த மகானா இவனுங்க அன்பு தொல்லைக்கு ஒரு அளவில்லாம போயிடுச்சே’ என்று சலித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

“நீ எஸ்கபேட் முதலாளியின் மனைவி என்று தெரிந்தபின் இங்கே என்ன ஒரு பரபரப்பு தெரியுமா? இன்னும் கூட அதை பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றனர் எங்களை எல்லாம் ஏதோ விஐபியின் நண்பர்கள் ரேஞ்க்கு பார்க்கிறாங்க” இப்படி ஏதாவது கூறியபடி,

மினியா, ஜித்தன், ஜுவாலினி, ஏன் திவான் கூட அவளை அழைத்து தினம் பேசிவிடுவார்கள். மானா மட்டும் இவளிடம் பேசவே இல்லை... இவளே அவளுக்கு அழைத்து பேசினாலும் ஓரிரு வார்த்தைகளும் ஊம் கொட்டல்களும் மட்டுமே இருக்க, என்ன சொல்லியும் பிடிவாதமாக ஒதுங்குபவளை சமாளிக்க முடியவில்லை.

சில நேரம் என்னதான் நாம் சமாதானங்கள் கூறினாலும், நம் உணர்வுகள் கட்டுபாட்டில் வந்துவிடுவதில்லை. நமக்கு நெருங்கியவர்களுக்கு ஏதாவது ஆகினால் பதறும் நம் உள்ளம், அதையே நமக்கு அவர்கள் தெரிய படுத்தாமல் மறைத்துவிட்டாள், துன்பத்தையும் மீறி வருத்தமும் அதனை போர்த்திய கோவமாக உருமாற ஆரம்பித்துவிடும்.

அப்படி ஒரு நிலையில் தான் அதிதேவும், மானாவும் இருந்தனர். அவரவர் உறவுகளுக்கு ஏற்றபடி அதன் தாக்கம் மாறுபட்டது அவ்வளவே! போக போக சரியாகிவிடும் என்றே நம்பிக்கை வைத்தாள், மதுரினி மாயாதேவி.

காயமும் ஆரி, போட்ட தையல் வடுவாக உருமாறி நாட்கள் கடக்க, அன்றைய இரவு மீண்டும் ஒரு காத்திருப்பு.

அவனிடம் எந்த மாற்றமும் உண்டாகிவிடவில்லை. அதே சிடுசிடுப்பு – கடுகடுப்பு தான். ஆனால், விலகல் இல்லை. காதலை வெளிப்படையாக காட்டவில்லை என்றாலும் அவனின் அக்கறை குறையவில்லை.

எவ்வளவு நேரம் ஆகினாலும் அவன் வந்தபின்பே மருந்தை உண்ணுவாள் அவள். அவளின் பிடிவாதம் உணர்ந்து உடல்நிலையில் விளையாட வேண்டாம் என்று அவனும் விரைவில் வந்துவிடவே முயலுவான். வெகு சில நேரங்களில் இப்படியான காத்திருப்புகளும் நிகழும்.

“இனி இதுபோல் பிடிவாதம் பிடித்துக்கொண்டு முழிச்சிட்டு இருக்காதேன்னு சொன்னனா இல்லையா?” உள்ளே வரும்போதே கடிந்துட்டு கொண்டே வந்தவனையே அமைதியாக பார்த்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் எப்போதும் போல் உடைமாற்றி வந்து மருந்துக்களை அவள் கைகளில் கொடுக்க, இன்று சற்று எரிச்சலை வெளிபடுத்தும் செயல்களே அவனிடம். அவனை ஆராய்ச்சியாக பார்த்தவள், “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, ஆம் என்று தலையாட்டியவன், தண்ணீரை குடித்துவிட்டு தானும் பக்கத்தில் படுத்தான்.

“என்னாச்சு?”

“நிறைய வேலைகள் சமாளிக்க முடியல... ஊர்...ஊர் திருவிழாக்கு வேற ஏற்பாடு போயிட்டு இருக்கு, இதுல நீ வேற படுத்துற” சட்டென கோவம் திசை திரும்ப எப்போதும் போல் குதற தயாரானான்,

“ஷ்...இன்னும் எவ்வளவு நாள், இதையே சொல்லிட்டு என்னை வெறுப்பது போல சீன் போட்டுட்டு சுத்த போறீங்க? நான் நல்லாவே உடல் தேறிட்டேன்” என்று அவனை கண்டுக்கொண்டவளை நேராக பார்க்காமல்,

“என்ன..? என்ன??? சீன் போடுறேனா? நான் எவ்வளவு கஷ்ட்டபட்டு துடிச்சேன்னு...” போட்ட வேடத்தை கலைக்காது மீண்டும் பேசியவனின் உதடுகளை துடிக்கவிட்டாள், இந்த முறை.

ஆம், முதலில் கோவம் இருந்தாலும், நாட்கள் நகர நகர, இழந்த பொக்கிஷம் கைகளுக்கு கிடைத்துவிட்ட உணர்வு தான். அடங்கா அன்பை அவள்மீது செலுத்தியவனை ஏற்க ஆரம்பித்தவளை விட்டு தள்ளியிருக்க முடியாது, தன்னை சுற்றியே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தவனின் உயிருக்கு தெரியாதா அவன் உயிர்ப்பு எங்கே என்று?
காதல், அன்பு, அக்கறை, பாசம், கணவன் மனைவி உறவு அனைத்தும் தான்டி அவர்களுள் அழுத்தமாக வேர்விட துடங்கிவிட்ட உரிமையும் உணர்ந்தாலும், புரிதலும் அவர்களின் மனதை பின்னிபினைய வைத்தது.

அவளின் தொடக்கம், அவனின் செயலாக உருமாறி எப்போது நிலைமாறியது என்றே தெரியாமல் அனைத்தும் நிகழ, முடிந்து நிமிர்ந்தவனின் முகத்தில் குற்றவுணர்ச்சி.

“ச்சு...இப்போ என்ன?”

“இன்னும் முழுசா குணமாகாத உன்ன திரும்பவும் என் இஷ்டபடி ஆட்டுவிக்கிறேன் இல்ல?”

“லூசு...யாரு யாரு பிடியில இருக்கோம்? என் கண்ணை பார்த்து சொல்லு” என்று கேட்டவளின் கண்களை பார்த்தவன் மீண்டும் அவளுள் மூழ்க ஆரம்பித்தான்.

சட்டென விலகியவள், “அந்த வாள் எப்படி நம்மகிட்டயே இருக்கு? கவர்மென்ட் கிட்ட தருவதா தானே பேச்சு?” என்று அதிமுக்கிய கேள்வியை எக்குதப்பான நேரத்தில் கேட்டு வைக்க,

“அது நம் நாட்டு உடைமை என்று காட்டுவதாக தான் பேச்சு, மற்றபடி ஆவண செய்து அதன் உரிமையாளர்” என்று கூறி நிறுத்தி அவள் கன்னகளில் தன் மூக்கால் உரசியவன், “உன்னிடமே, நம் கோவில் பாதுக்காப்பின் கீழ் இருக்க எல்லாம் செய்தாயிற்று” பள்ளி சிறுவன் ஒப்பிவிப்பதை போல் கூறியவன், மீண்டும் அவசரமாக அவளுள் மூழ்க ஆரம்பித்தான்.

மீண்டும் விலகியபோது, உறக்கம் அவர்களை தன்னுள் இழுத்துக்கொள்ள, விடிந்த பின்பும் உறங்கும் அவனை கண்களால் நிறைத்துகொண்டாள், மாயாதேவி. பின், மெதுவாக குனிந்து அவன் கன்னத்தில் பலமாக கடிக்க, வலியில், “ஆ...” என்று கத்தியபடி எழுந்தவனின் மேலேயே விழுந்தாள்.

அவள் செய்யும் சேட்டைகளை போருக்க முடியாது, தன்னோடு இறுக்கியவன், தனது சேட்டைகளை தொடர, வெளியே தூறும் மழைபோல அவர்களின் வாழ்க்கையும் தூறும் மழையென குளுமையை பரப்பியபடி இதமான வாழ்வை அவர்களுக்கு வாரி வழங்கியது.

“மது போல பெய்த மழையே
மனசாக்கே அழகே நனையே
இணையாய சலாபம் போலே
நீயும் ஞானும் மாறும்...”

ஒலித்த அவனின் கைபேசியின் பாட்டு, அவர்களின் நிலையை இதமாய் எடுத்து கூறுவதாய்...!!!
முற்றும்...!!!

நன்றி

மகிழ் குழலி
 
Top