• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
104
தூறல் 50 - 02

இன்று திருவிழாவின் விடியல்! நர்த்தன கிருஷ்ணர் முன்பு சுற்றி இருந்த ஊர் மக்கள் அனைவரும் கூடியிருக்க முன்னின்று ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்தார், சேனாம்மா. அவர் கண்களால் இடும் கட்டளைகளை, சிரம் தாழ்த்தா குறையாக செயல்படுத்திக்கொண்டு இருந்தனர், ஆண்மக்கள். பக்கத்தில் அஸ்வந்தை அடக்க மயூரிக்காவின் உதவியோடு போராடிக்கொண்டு இருந்தாள், மதுரினி மாயாதேவி. அன்றைய நாளின் முடிசூடா ராணி.

வேலைகளை முடித்து ஓடி வந்து ஜேகப், அஸ்வந்தை வாங்கிக்கொண்டான். அவன் அடங்கும் மூன்றே ஆட்கள்! அதிதேவ், ஜேகப், மற்றும் சம்யுக்த்தை. அதிதேவ் ஆழ்ந்த அன்பாலும், ஜேகப் நட்பாலும், சம்யுக்த்தை பாசத்தாலும் அவனை கட்டிப்போட்டு வைத்திருந்தனர்.

அவன் வந்து வாங்கிக்கொள்ள, பெருமூச்சை விட்ட மதுரினி, ‘அக்காடா’ என்ற நிலைமைக்கு தள்ளபட்டாள். பின்னே? இந்த மூன்று மாதங்களில் அந்த குடும்பமே அவனை இளவரசனின் நிலையில் இருத்தி வைக்க, நாட்கள் செல்ல செல்ல அவனின் பிடிவாதங்கள் அதிகமாயிற்று. அதை கண்டு கவலைக்கொள்ளும் மதுரினியை சமாதானம் செய்யும் வேலை சௌந்தர்யாவின் பொறுப்பு.

“எல்லாம் ரெடி சேனாம்மா” அருகே வந்து அதிதேவ் கூற, தலையசைத்தவர், “மது...வா...” என்று கூறி அழைத்து போனார்.

பூஜை செய்துக்கொண்டு இருந்த பதினொன்று ஐயர்களில் மூத்தவர் இறங்கி வந்து மலர்கள் நிறைந்திருந்த நீண்ட தட்டை அவள்முன் நீட்ட, கிருஷ்ணாதேவ் கொடுத்த உறையை வாங்கியவள், அதை பிரித்து உள்ளே இருந்த வாளை அந்த தட்டின் மீது வைத்தாள்.

அதற்கான மரியாதையாய், பூஜைகள் அனைந்ததும் எந்தவித தடங்கலுமின்றி நடந்து முடிய, அங்கிருக்கும் மேடைமேல் வான்நோக்கி நிறுத்தப்பட்டது அந்த வாள். இரண்டு நாள் பார்த்த மதுரினிக்கும் எனக்கும் சற்றும் சம்மந்தமில்லை என்பது போல் இன்றைய மதுரினி – மதுரினி மாயாதேவி கம்பீரத்தின் முழு உருவமாக பட்டுசேலை சரசரக்க, தேஜஸ் மின்னும் விழிகளோடு அதன் அருகே சென்றாள்.

வானை நோக்கி உயர்ந்த கைகள் அந்த நர்த்தன கிருஷ்ணரை வணங்கி இறங்கி, வாளை நோக்கி நகர்ந்தது. அவள் குருதி நனைந்து சாந்தி அடைந்த வாளிற்கு குளிர்ச்சியூட்டும் வகையில் அதனை பிடித்து கைகளை சரேலென மேலே இழுத்து வீச அவளின் தைரியத்தின் சுடராக அது கிருஷ்ணனின் நெற்றியில் தெறித்து விழுந்தது.

அனைத்தும் முறையாக நடந்தாலும், இந்த நடைமுறையை பழக்கத்தை தவிர்த்துவிட கூறியிருந்த அதிதேவ், அதிர்ச்சியில் பதட்டத்துடன் அருகே ஓட, மற்றவர்களும் இதனை எதிர்பார்க்கவில்லை. அனைத்து முத்தவர் கண்களிலும் மதுரினி மாயாதேவி மறைந்து, ராணி அஹிலாவதி மாயாதேவி தோன்றுவதுபோல் இருக்க, அவர்களை நிகழுக்கு கொண்டு வந்தது சடசடவென தூர ஆரம்பித்த மழை.

காக்கும் தெய்வம், வீரத்தின் ஆயுதம், வாழ வைக்கும் மழை, உணவு கொடுக்கும் மண், இவையனைத்திருக்கும் சேர்த்து கொடுக்கபடும் இவர்களின் நன்றினவிலான திருவிழா இனிதே தொடங்கி வைக்க பட, இக்காலத்திற்கு ஏற்றவாறு சந்தோசங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பம் ஆகியது...

“உனக்கு இன்னும் அந்த பேய் பிடிச்சது போகவே இல்லைடி” நக்கலாக திட்டியபடி மானா அவள் கைகளுக்கு கட்டு போட்டுக்கொண்டு இருந்தாள். ஏனோ சற்றும் வலி தெரியவில்லை அவளுக்கு.

அவளும் செய்யவேண்டும் என்றெல்லாம் செய்யவில்லை. ஏனோ அங்கு சென்று நின்றதும், தன்போல ஒரு உத்வேகம் கிளம்ப செயல்படுத்திய பின்பே செய்த காரியம் உரைத்தது. தூரத்தில் முகத்தை கல் போன்று இறுக்கி வைத்துக்கொண்டு வேலைகளை மூழ்கியபடி அனைவரையும் கவனித்துக்கொண்டு இருந்த அதிதேவை பார்த்தாள்.

‘இன்னைக்கு செத்தோம்...’ மனதில் பயத்தின் அலாரம் அடிக்க, ‘ப்ச்...எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா சமாளிச்சிக்கலாம்’ தனக்கு தானே கூறியபடி மற்றவர்களுடன் இணைய ஆரம்பித்தாள்.

“சரி சரி செல்லாகுட்டி...சாரி...விடு..வா... உனக்கு குச்சி ஐஸ் வாங்கி தரேன்” எந்த காலம் என்றாலும் மாறாத திருவிழா என்றால் கூடும் அந்த குச்சி ஐஸ் மற்றும் பஞ்சுமிட்டாய் இருக்கும் இடத்தை நோக்கி, அவளை இழுத்த்க்கொண்டு சென்றாள்.

பூஜை முடிந்ததும், வாள் பாதுக்காப்பாக எடுத்து வைக்கப்படுவது போகும் வழியில் தெரிந்தது. ஆங்காங்கே நின்றுக்கொண்டு இருந்த ஸ்ரீஜனின் ஆட்களும், அவர்களுக்கு பயம் என்பதை நினைவில் இருந்து அகற்ற, திருவிழாவின் இயல்போடு இருந்தது, அந்த சூழல்.

“ஏன் என்னை பிடிக்கலை உங்களுக்கு?”

“ச்சு... நான் எப்போ உன்னை பிடிகல்லைன்னுலாம் சொன்னேன்? நீ என் தங்கையின் நாத்தி, என் அத்தை பெண் நீயா ஏதாவது நினைச்சிட்டு இருக்காதே” அவள் நினைப்பை புரிந்து வந்தது குரல்.

“அப்போ இது தவிர உங்களுக்கு என்மேல எதுவுமில்லைனு சொல்லுறீங்களா?”

“நான் வளர்ந்த விதமும் சூழலும் வேறே! என் வழியும் வேற... நீயோ தங்கத்தில் செய்யப்பட்ட கூண்டில் வாழும் கிளி... வாழ்கை ரொம்ப நீளம்...உனக்கு சரிபட்டு வராது”
“எது சரிபட்டு வரும் வராதுன்னு எங்களுக்கு தெரியும்” சீற்றமாய் அந்த குரல்.

“எப்படியோ போ...இந்த மாதிரி இனி என்கிட்டே பேசாதே...யார் காதிலாவது விழுந்தா பிரச்சனை”

விழுதுகள் சூழ்ந்த மரத்தின் நடுவே இருக்கும் இடுக்கின் பின் இருந்து கேட்ட குரலை, சேமியா ஐஸை ருசித்தபடி கேட்டுக்கொண்டு இருந்த மானா, மினியா, மற்றும் மதுரினி கிண்டல் சிரிப்பு முகத்தில் மின்ன கேட்டுக்கொண்டு – ஒட்டு கேட்டுக்கொண்டு இருக்க, சட்டென மரத்தின் பின் இருந்து வெளியே வந்த ஜேகபின் முகம் பேய் முழி முழித்தது என்றால், அவன் பின்னோடு ஏதோ கூறி சண்டையிட வந்த மயூரிக்காவின் முகம் ஒருநொடி அதிர்ந்தாலும், பின் பிடிவாதமாய் மாறியது.

சட்டென தானும் முகத்தை இறுக்கமாக மாற்றியவள், “என்ன இதெல்லாம்” என்று அதிகாரமாக கேட்க,

“மதும்மா..அவ ஏதோ சின்ன பொண்ணு புரியாம பேசிட்டு இருந்தா யு டோன்ட் வரி”

“அஹான்....” கோரசாக வந்த குரலில், அடுத்து என்ன கூற என்று தெரியாமல் அமைதியாகினான்.

“மன்னி... எனக்கு உங்க அண்ணாவ பிடிச்சிருக்கு... என்னைக்கா இருந்தாலும் அவரை கட்டி மேய்க்க போறது நான் தான், சோ நீங்களே கட்டி வைத்துட்டா உங்க அண்ணனுக்கு அடி கொஞ்சம் கம்மியா விழும்” அடங்காமல் கூறிவிட்டு விடுவிடுவென ஓடிவிட்ட மயூரிக்காவை கண்டு தலையில் அடித்துக்கொண்டான், ஜேகப். பின்னே இந்த ஐந்து மாதங்களாக அவனை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டு இருப்பவளை என்ன செய்ய?

“ஏன்டா? உனக்கு அவளை பிடிக்கலையா?” கேட்ட மதுவை கண்டு மெதுவாக புன்னகை பூக்க அதை மறைத்தவன், “இதெல்லாம் சரி வராது மதும்மா... நான் நான் வளர்ந்த மதம் வேறு...எப்படி என்றாலும் என்னால அதையெல்லாம் ஒரேடியா விட்டுட முடியாது...இங்கோ நம் குடும்ப சூழல் வேறு...பெரியவங்க எல்லாம் எண்ண நினைப்பாங்க?”

தங்கை மற்றும் குழந்தையை பார்க்க அடிகடி இங்கே வந்துவிட்டாலும், இன்னுமும் சரியாக ஒட்டவில்லை அவனுக்கு. அலுவலகத்திலும் தன் உரிமையை நிலைநாட்டி கொள்ளாதே இருந்தான். அதே வேலையையே அனுபவம் தேவை என்று பிடிவாதத்துடனும், எனக்கு இது தான் பிடித்திருக்கிறது என்று கெஞ்சலுடனும் தொடர்ந்தான்.

“அப்போ உனக்கு ஒகே தானே?” கெடுக்கு பிடி கேள்வி எழுப்பி, அடுத்த திருமணத்தை உறுதி செய்தாள், மதுரினி. அதனை தன் செயலிலும் காட்டினாள்.

அன்றைய மாலை அனைவரும் ஊர் திரும்ப, “கண்டிப்பா அடிகடி வரணும்... தயங்கிக்கொண்டு இருக்க கூடாது. என்னைக்கா இருந்தாலும் நீங்களும் இந்த வீட்டு பிள்ளைகள் மாதிரி தான்” அன்பில் குளித்த வார்த்தைகளோடு, நண்பர்கள் பயணபட, அவர்களோடு சேர்த்து தானும் புறப்பட்டு தப்பித்தான், ஜேகப்.

“போடா போடா எப்படி இருந்தாலும் இங்க வந்து தானே அகனும்” மனதில் எண்ணியபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த மதுரினி மற்றும் மயூரிக்கா, தங்கள் கெத்தை விடாது எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.

அன்றைய இரவு, அஸ்வந்தை மிரட்டி உருட்டி உணவு கொடுத்து தூங்க செய்தவள், போட்ட ஆட்டத்தின் விளைவால் சீக்கிரமே உறங்கிவிட்டவனை தூக்கி அவனுக்கான படுக்கையில் விட்டாள்.

அடுத்த நிமிடம் என்ன நடந்தது என உணருமுன் அந்த உருவத்தின் மேல் உருண்டுக்கொண்டு இருக்க, எலும்புகள் உடையும் அளவிற்கு இறுக்கும், அந்த உருவத்தின் கைகளை விலக்க போராட ஆரம்பித்தாள்.

“உனக்கு எவ்வளவு தடவ சொல்லுறது? என் உணர்வுகளோடு விளையாடாதேனு...கேட்கவே மாட்டே இல்லை? உன்னை யாரு அப்படி பண்ண சொன்னா? என் துடிப்பு உனக்கு ஒரு பொருட்டே இல்லாம போச்சு”

‘காதில் ரத்தம் வரும்வரை நிறுத்தமாட்டானே’ அலறும் மனதை அடக்கியபடி அவனை அடக்கி, தன்னை ஆள வைத்து, ஒருவழியாக அவனை அமைதியாக்கினாள்.

இறுக்கிய பிடியை விலக்காமல் இடையில் தவழும் அவன் கைகளை பார்த்தபடி அவனுக்கு முதுகு காட்டி படுத்திருக்க, ஒரே இழுப்பில் தன்னோடு நெருக்கியவன், “ஒரே ஒருமுறையாவது சொல்லேன்டி” என்று கேட்க,

“ஏன்?”

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? ப்ளீஸ்...என் செல்லகுட்டி மதுக்குட்டி இல்லையா? என் அம்மு பாப்பா தானே? ப்ளீஸ்... ஒரே ஒருமுறை சொல்லு” மிரட்டலில் ஆரம்பித்து இறுதியில் கெஞ்சிக்கொண்டு இருந்தான் அந்த ஆறடி மனிதன், அவளின் காதலை வார்த்தை வழி கேட்டுவிடும் ஆசையோடு.

“ஹுகும் முடியவே முடியாது” குறும்பில் கூத்தாடும் விழிகளை மூடிக்கொண்டு கூறியவளின், முகம் முழுவதும் பிரகாசிக்க, வளைந்த இதழ்களை வன்மையாய் சிறை செய்து தன் தண்டனையை வழங்கினான். எவ்வளவு தண்டனைகள் கொடுத்தாலும் சுகமே என்பது போல் அதனை ஏற்றவள் மட்டும் எப்போதும் கூறமாட்டேன் என்னும் சிறுபிள்ளை பிடிவாதத்துடன் இருந்தாலும், அவளின் அவன் நோக்கிய ஒவ்வொரு நகர்விலும் தெறிக்கும் நேசத்தை அவன் தான் அறிவானே? இருந்தும் ஒரு அடங்காத ஆசை.

**************

வருடங்கள் நகர...

“பேபி...கேர்புல்...” என்று கூறியபடி, ஐந்து வயது ஆஹர்ஷிகா மாயாதேவியின் கைகளில் சுழன்றுக்கொண்டு இருந்த கிளறி கத்தியை பயத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தான் பன்னிரெண்டு வயதிலேயே வர்மத்தில் மொத்தமும் அறிந்த அஸ்வந் தேவ வர்மன். இரண்டு வயது முதலே தீக்ஷண்யம் மிகுதியாக இருக்கும் குழந்தையாகவே வளர்ந்தாள், அஹர்ஷிகா, அவளை பாதுக்காப்பாக பார்ப்பதை விட, அவளிடம் இருந்து மற்ற குழந்தைகளை பாதுகாப்பாதே அஸ்வந்தின் வேலையாகி போனது, பள்ளியில்.

அவள் பிறந்தது முதல் பிருந்தனுடனே சுற்றியவள். அவளை அடக்க தெரிந்தவனும் அவன் தான். இப்போது மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று இருந்தவனை மிகவும் மிஸ் செய்தாள், அஹர்ஷிகா. அவனுக்கு பின் அஸ்வந்திடமே சற்று அடங்குவாள், மற்றபடி ‘வீட்டின் அடுத்த மாயாதேவி நான் என்னும் ஏத்தம் அதிகம்’ என்று கிண்டலாக மானா கூறும் அளவு வளைய வருவாள், குட்டி மாயா.

தாய் தந்தையை இழந்து தங்களுடனே வளர்ந்த பிருந்தனை யாரும் வேற்றாளாக பார்க்காமல், அவர்களுள் ஒருவனாகவே நினைத்தனர்.

பத்தடி தொலைவிலேயே அமர்ந்திருக்கும், மதுரினியை பார்த்தாள். அவள் பிடியில் அண்ணன் பிள்ளையான ஆறு வயது அமைதியான க்ரிதயா தேவியை முறைத்துக்கொண்டு இருந்தாள். கையில் இருக்கும் கம்பை பிடித்துக்கொண்டு பயந்தபடி, க்ரிதயா.

தன் பிள்ளையில் தவிப்பை சற்றும் கணக்கில் எடுக்காது, ‘எல்லாம் மன்னியின் செயல்’ என்ற நினைப்போடு, தன் இரண்டாம் அண்ணனின் மகன், அந்த குடும்பத்தில் இப்போதைய இளைய வாரிசு, இரண்டு வயது வனமாலினியை கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.

அதிதேவ் மற்றும் கிருஷ்ணா தேவ் ஊரில் இருக்கும் தொழில்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க, ஜேகப் அந்த வருடத்தின் எஸ்கபேட் டிஆர்பி கோப்புகளை பார்வையிட்டு முடித்து, அடுத்ததாக, போர்ட் மீடிங்கில் பேச வேண்டிய விஷயங்களை மூன்று பேருக்கும் சேர்த்தே தயார் செய்ய ஆரம்பித்தான்.

இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாது, அந்த காலைவேளையில் கொட்டாவி விட்டபடி பாதி தூக்கத்தோடு அமர்ந்துக்கொண்டு இருந்தாள், மானா. ஆம், கிருஷ்ணா தேவின் மனைவியாகிய மானா.

எது அவனை சாய்த்தது என்றே தெரியாத அளவிற்கு, ஒவ்வொரு சந்திப்பிலும் அவளை திரும்பி பார்க்க வைத்தவளையே கை முடித்து, இரண்டு வயது பிள்ளையையும் பெற்றவன், இருந்தும் காதல் கிறக்கம் இறங்காமல், இரவெல்லாம் தூங்கவிடாது செய்துக்கொண்டு இருக்கிறான்.

அவளின் தூங்கி வழியும் முகத்தை பார்த்து சிரித்த மற்ற பெண்கள், நமுட்டு சிரிப்பு சிரிக்க, அவர்கள்மேல் பக்கத்தில் இருக்கும் பந்தை தூக்கி வீசினாள், மானா. “நானா கேட்டேன்...இப்படி கூட்டிட்டு வந்து காதல் கொடுமை படுத்துறானே” வெளிப்படையாய் புலம்பும் அவளை கண்டு தலையில் அடித்துகொண்டனர்.

சிறிது நேரத்திலேயே, பெரியவர்கள் வர, அவர்களை தொடர்ந்து பணியாளர்கள் கஞ்சியுடன் வந்தனர்.

இது தினமும் காலை நடக்கும் விஷயங்கள்...!!! காலை உடல் பயிற்சியை ஒன்றாக முடிக்கும் அதிதேவ், கிருஷ்ணாதேவ், மற்றும் ஜேகப், பின் ஹெட்விக்வுடன் சற்று தங்கள் மீன் விளையாட்டை முடித்துக்கொண்டு அங்கேயே அமர்ந்து காபி அருந்தியபடி தொழில் விஷயங்களை ஆலோசிப்பார்.

மதுரினி, சிறுவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுகொடுக்க, மானா மற்றும் மயூரிக்கா சிணுங்கும் சிறுவர்களை சமாளித்தபடி சின்னவளுடன் நேரம் கழிப்பர். தொடர்ந்து வரும் பெரியவர்களுடோடு உடலுக்கு சக்தி சேர்க்கும் காலை கஞ்சியை அருந்தியபடி அவர்களோடு சற்று நேரம் அளவளாவி முடிக்க, எட்டு மணிப்போல் கிளம்பி உணவுண்டு அவரவர் வேலைகளை பார்க்க சென்றுவிடுவார்கள். அதற்கு மேல் சுற்றுல்லா பயணிகள் அங்கே கூட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆம்! மாயா அரண்மனையை தனியாக பிரித்து ஒதுக்கி, மாயவாளை உரிய பாதுக்காப்போடு வைத்தவர்கள். அதனை சுற்றுலா தளமாக அதுவும் அரசாங்கம் சார்ந்த சுற்றுலா தளமாக மாற்றிவிட்டனர். அதில் மாயறை மட்டும் விதிவிலக்கு. அறுபது சதவிதம், மாயா குடும்பத்தின் கட்டுபாட்டில் இருக்க, நாற்பது சதவிதம் அரசாங்கத்தின் கட்டுபாட்டில் இருந்தது.

ஆதித்திய வர்மன் அரண்மனையிலேயே இருந்தபடி மேற்பார்வையிட, சேனாம்மா, சௌந்தர்யா, சம்யுக்த்தை என பெண்கள் எப்போதும்போல் அரண்மனை மற்றும் தோப்பு வேலைகளை பார்த்துக்கொண்டனர். என்றாலும் பெரியவர்கள் அனைவருக்கும் பேர பிள்ளைகளுடன் நேரம் போவதே தெரியாது.

மினியாவிற்கு திருமணமாகி வெளிநாடு சென்றிருக்க, ஜித்தன் மற்றும் ஜுவாலினி சென்னை கிளையில் தேங்கிவிட்டனர்.

ஏனையவர்கள், கோயம்பத்தூர் கிளையில்! அதில் மானா மற்றும் மதுரினியும் சேர்த்தியே...!!! என்றும் தங்கள் வேலை மீதிருக்கும் ஆசையை விட மனமில்லாதவர்களை குடும்பத்திலும் யாரும் தடுக்கவில்லை. போன மாதம் தான் தென்னிந்தியா எல்லையில் கிடைத்த ஐம்பொன்னாலான ராமர் சிலை ஒன்றை கண்டுபிடித்து தங்கள் ‘தி சிகிரேட்ஸ் ஆப் அஜநபவர்ஷா’ பட்டியலில் பன்னிரெண்டாவது ப்ராஜெக்ட்டாக சேர்த்திருந்தனர்.

அவர்கள் செய்யும் நிரலின் பெயர் அது. அஜநபவர்ஷா என்பது இந்தியாவிற்கு இடப்பட்ட முதல் பெயராக உலகத்தால் கருதபடுகின்றது. அதன் புதையல்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி என்பதால் அப்படி பெயரிட்டு இருந்தனர். எப்போதும் போல் மதுரினி எடுத்து நடத்தும் அந்த நிரலால் டிஆர்பி ஹிட் அடிக்க, சேனல் அலுவலர்கள் அவளை முதாலாளி என்பதையும் தான்டி ஹீரோயின் வொர்ஷிப் (ஏன் ஹிரோவ தான் வொர்ஷிப் பண்ணனுமா?) செய்தனர்.

எப்போதும் எங்கு என்றாலும் சூழ்ந்திருக்கும் நபர்கள் மத்தியில் இப்போதெல்லாம் தனிமையே கிடைக்காதவர்களுக்கு இரவும், இருளும் மட்டுமே உதவி செய்தது.

கோடை காலம் தான் என்பதால், அந்த பிரெஞ்ச் டோரை திறந்து வைத்துக்கொண்டு நின்றிருந்தாள், மதுரினி. இருந்தும் லேசான குளிர் தழுவ அதுவும் உடலுக்கு இதமாக இருக்க கைகளை கட்டியபடி வெளி இருள் வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தவளின் கன்னத்தில் அழுத்தமாக – தீவிரமாக தன் கன்னம் அழுத்தி, அவனையும் சற்று பார்க்க செய்தான், அதிதேவ்.

“ஷ்...என்ன”

“என்னை கண்டுக்கவே மாட்டியாடி நீ?”

“கண்டிக்காம தான் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்களோ?” வேண்டுமென்றே சீண்டியவளை, தன்னை நோக்கி இழுத்து இறுக்க,

“அப்பாபாபா.... இப்படி இறுக்கினா நான் சத்தம் போட்டுடுவேன்...அப்புறம் குழந்தைங்க முழிச்சா நான் பொறுப்பில்லை...”

‘பதினைந்து வயது வந்த பின் தனி படுக்கை கொடுத்தாள் போதும், குழந்தைகள் பெற்றோருடன் இருப்பது தான் நல்லது. ஏற்கனவே பாதி நாட்கள் ஊரில் இருப்பதில்லை’ இப்படியான காரணங்களை அடுக்கி, அவர்களோடு தேங்க வைத்திருந்தனர் பிள்ளைகளை. குழந்தைகளுக்கு அதில் ஏக கடுப்பு என்று கொஞ்சமுமில்லாது, பெற்றோருடன் கிடைக்கும் நேரங்களை சொர்கமாக அனுபவித்தனர்.

அவர்கள் அறையில் - அந்த பெரிய அறையில் அடுத்த மூலையில் இரட்டை அடுக்கு படுக்கையில் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளை ஒருமுறை திரும்பி பார்த்தவன், மீண்டும் அவள் முகத்தில் தன் முகத்தை புதைத்தவன்,

“ஹூம்? எங்கே கத்து?” என்று அவள் இடையை கைகளால் வன்மையோடு அளக்கிரானா இல்லை அள்ளிக்கொள்கிறானா என்று தெரியாத அளவிற்கு அவன் செயல்கள் இருக்க, வேண்டுமென்றே கத்துவது போல் வாயை திறந்தவளின் இதழ்களும் அளக்கப்பட்டது/அள்ளிக்கொள்ளப்பட்டது அவன் இதழ்களால்.

ஏனைய ஜோடிகளும் காதலில் லயித்திருக்க, பெரியவர்கள் நிம்மதியில் ஆழ்ந்திருக்க, சிறியவர்கள் அமைதியில் உறங்கியிருக்க, அந்த அரண்மனை குடும்பத்தை வேடிக்கை பார்த்த நாமும் ஒரு சுற்றுலாவாசியாக வெளியேறுவோம், அவர்கள் அடுத்த விதியை நோக்கி ஓடுமுன்...!!!
நன்றி
மகிழ் குழலி

தங்கள் கருத்துக்களை, நிறை - குறை என தோன்றும் இந்த கதை மற்றும் எழுத்தை பற்றிய எவ்வித எண்ணங்களையும் இங்கே பகிரலாம். என் எழுத்து பாதையை மேலும் மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும். நன்றி.
 
Top