• வைகையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

NEN - ஜானகியின் அண்ணன் (அத்தியாயம் 12)

Veera

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
26
ஜானகியின் அண்ணன்:அத்தியாயம் 12ராகுலும் மெல்லமாக எழுவதற்கு முயற்சி செய்யும் அச்சமயத்தில் அறையினுள் நுழைந்தாள் ஜானகி."டேய் ,ராகுல் இதோ வந்துட்டேன் ,"ராகுல்,இவ்வளவு நேரமா?,கூப்பிட்டுகிட்டே இருந்தேன். நீங்க எல்லாரும் எங்க தான் போனீங்க, அப்பாவை எங்கே?, என்றான்.ஜானகி, "உனக்கு மருந்து வாங்க அப்பா மெடிக்கல் வரைக்கும் போயிருக்காங்க!, டாக்டர் என்னை வரச் சொல்லியிருந்தாங்க, அதான் பேசிட்டு இருந்தேன். இப்ப எதுக்காக எங்கள கூப்பிட்ட,ராகுல், "அம்மா கனிஷ்காவை நான் இப்பவே பார்க்கனும், அவ மேல ஏதோ லாரி மோதுகிற மாதிரி ஒரு கெட்ட கனவு, தயவுசெய்து அவளுக்கு போன் பண்ணி தாங்க ,அவ குரலையாவது கேட்கனும் என கெஞ்சினான்.ஜானிகியும் ராகுலிடம் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றாள்.ராகுல், "அம்மா என்னாச்சு, உம் முகமே சரியில்லையே?கனிஷ்காவிற்கு ஏதாவது பிரச்சினையா,ஜானகி, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கோவிலுக்குப் போகும்போது அவ போனை எடுத்துட்டு போகல, என்றாள்.ராகுல், "எனக்கு தெரியாது. அவ இப்ப இங்க வரனும் ".இல்லையென்றால் நானே ஹாஸ்பிட்டலை விட்டு எழுந்து அவளைத் தேடி போவேன் என்று சத்தமிட்டான்.தாமு, "ஏம்மா என்னாச்சு, ராகுல் எதுக்காக கோபப்படுகிறான்.ஜானகி, ஏங்க கனிஷ்காவுக்கு ஏதோ ஆகுற மாதிரி கனவு கண்டுள்ளான். அதனால் அவளை இப்பவே பார்த்தே ஆகனும் இல்லை அவளுடைய குரலை கேட்டு ஆகனும் என்கிறான். "இப்போது என்னங்க பண்றது "ஆரம்பத்திலேயே விஷயத்தை சொல்லியிருந்தா அவன் இந்த மாதிரியெல்லாம் சொல்ல மாட்டான். வாங்க இப்பவே போய் சொல்லுவோம் என்றாள்.தாமு, "உனக்கு அறிவு இல்ல?, நம்ம பையனோட நிலைமையை யோசித்து பாரு. நீ கனிஷ்கா நம்மள விட்டு போயிட்டா என்று சொல்லி பாரு. மறுநிமிஷமே அவன் நம்மள விட்டு போயிடுவான் என்றார்.டாக்டர், "கட்டாயம் உங்க மகன் எந்த ஒரு விபரீத முடிவும் போக மாட்டான். நீங்க உண்மையைச் சொல்வதற்கு இது தான் நல்ல சமயம். நாளடைவில் இந்த விஷயத்தைப் மறைத்தால் அது வேற மாதிரி முடிஞ்சுடும். நீங்க இப்பவே போய் சொல்லுங்க என்றார்.ராகுல், "அம்மா கனிஷ்காவுக்குப் போன் செய்து பார்த்தீயா?,அவ எங்க இருக்கிறாள் என ஆர்வமாக கேட்டான்.டாக்டர், "ராகுல் நாங்க சொல்ற விஷயத்தைக் கேட்டு உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருக்கனும்.ராகுல் ,"மும்ம்.. சொல்லுங்க டாக்டர் "கனிஷ்காவின் உடலை போஸ்ட் மாற்றம் செய்து அவங்க வீட்டிற்கே கொண்டுச் செல்ல வேண்டும் எதிர்ப்பார்த்து காத்திருந்த சமயத்தில் நரஸ் வந்து வீட்டிற்கு கொண்டு செல்லவும் கூடாது என டாக்டர் உங்களிடம் கூறச் சொன்னார்...தனம் மனசு தாங்க முடியல, செய்ய வேண்டியதை இங்கேயே செய்து முடித்து விடுவோம்... வீட்டுக்குக் கொண்டு போனால் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு நோகடிப்பார்கள்ம்மா!... இங்கேயே சம்பிரதாயங்களை முடித்து விட்டு செல்வோம் என்றார் சபரிதாஸ்...இறுதிச்சடங்கை முடித்து விட்டு வீடு திரும்பினார்கள்..டாக்டர் என்னாச்சு!.. கனிஷ்கா எங்கே சென்றிருக்கிறாள்.அவளுக்கு ஏதாவது பிரச்சினையா என்று பதற்றமாக கேட்டான்.

.

நாங்க சொல்ற விஷயங்களைக் கேட்டு மனம் தளர கூடாது... இதெல்லாம் இயற்கையின் நியதி... அத கண்டு வெறுப்பாகவும் கூடாது...டாக்டர் சீக்கிரமாக சொல்லுங்க!.. இல்லையென்றால் தலையே வெடித்திடும் போல,..ராகுல் உனக்கு இதயம் கொடுத்தது யாரென்று கேட்டாயே!..ராகுல்,"டாக்டர் எனக்கு யாரு இதயம் கொடுத்தாங்க!,டாக்டர்,"வார்த்தைகளை மென்று விழுங்கி உன் மனைவி கனிஷ்கா தான்.அதை கேட்ட ராகுலுக்கு பதறி போய் தலை சுற்றியது... டாக்டர் இதயம் கனிஷ்காவா?என்றவன் மயங்கி விழுந்தான்.ஜானகியும் ,தாமுவும் பதற்றமடைந்து அவனை தண்ணீர் தெளித்து எழுப்பினர்.ராகுலும் மெல்லமாக கண்களைத் திறந்து, கனிஷ்கா இதயம் கொடுப்பதற்கு அவங்க அப்பா,அம்மா.. எப்படி ஒத்துக்கிட்டாங்?என அடுத்த கேள்வியை எழுப்பினான்.டாக்டர், "உனக்கு இதயம் கொடுத்ததே அவங்களுக்கு தெரியாது...ஆப்ரேஷன் செஞ்சு முடிச்ச பிறகு தான் சொல்லனும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள்...என்னால் ஒன்னும் செய்ய முடியல.. கனிஷ்கா கடைசியாக என்ன சொன்னால் தெரியுமா?. அவள் எப்போதும் உன்னுடன் இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டே மாய்ந்து போனாள்... அவளின் ஆசையே நீ எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே அவளுடைய ஆசை. நீ அழுவதை விட்டுட்டு மன தைரியத்தோடு வாழனும் என்றார். டாக்டர்…ராகுல், "ஐய்யோ! ஐய்யோ!, என. தலையில் அடித்தபடியே கதறி அழுதான். அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியலயே என்றான்.டாக்டர், ராகுல் கனிஷ்கா இந்த கடிதத்தை உன்னிடம் கொடுக்க சொன்னாள். இது அவள் உனக்காக மட்டுமே எழுதியது என்றார்.அந்த கடிதத்தை பிரித்து படித்ததும், அதை இதயத்தோடு ஒத்து வைத்து அழுதான்.அம்மா, நான் கடைசியாக கனிஷ்கா முகத்தைப் பார்க்க முடியுமா? ப்ளீஸ் எனக் கெஞ்சினான்.ஜானகி, "டேய்?,ராகுல் அவளது உடலை உன்னிடம் காட்டாமலேயே இறுதி சடங்கை முடித்து விட்டார்கள் என வருத்தமாக கூறினார்கள்.அவ முகத்தை பார்க்க முடியாத. அளவுக்கு பாவியாகிட்டேனே?,.டேய், ராகுல் அழாதே.. அழாதே!, என ஜானகியும், தாமுவும் ராகுலுக்கு ஆறுதல் சொன்னார்கள்.... ராகுலின் மனசிலே

கனிஷ்கா என்னை விட்டுப் பிரிந்தாலும்!..

இந்த உலகத்தை விட்டே போனாலும்!..

அவளுது இதயத்தை எனக்கு கொடுத்துட்டு அவளின் பாதி உயிரை

எனக்கு தந்து விட்டாள்...அவளை நினைத்த மனசு இனி எந்த ஒரு பெண்ணையும் ஏற்காது என்று இதயத்தில் மேல் சத்தியம் செய்தான்.... உனக்காக மட்டுமே வாழ்வேன் கனிஷ்கா என்று கூறி முடிவெடுத்தான்.பரதனும் ராகுலின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தான். அச்சமயம் பவதாரணியும் ,ஜானகியும் சாப்பாடு எடுத்துட்டு வந்தாள்.ராகுலுக்கு உணவு ஊட்டும் போதெல்லாம் கனிஷ்காவைப் பத்தியே பேசிக் கொண்டிருந்தான். அந்ந நேரத்தில் ராகுலின் மாமா கிருஷ்ணனும் ,வித்யாவும் உள்நுழைந்தார்கள்.கிருஷ்ணன், ராகுல் அனைத்து விஷயங்களையும் அறிந்தேன்.நீ எதை பத்தியும் கவலைப்படாதே!நீ வருத்தப்பட்டால் உனக்குள் துடித்துக் கொண்டிருக்கும் இதயமும் பலவீனமாகும்.ஜானகி, அண்ணி ஸ்ரேயாவை எங்கே? அவளையும் உங்களுடன் அழைத்து வர வில்லையா?,வித்யா, "இல்லங்க மதினி அவ இப்ப நிறுவனத்தை கவனிச்சுட்டு இருக்குறா?, வேலைப்பளு அதிகம். அதனால் தான் வரவில்லை.ஜானகி, "அண்ணே சாப்பிடுறீங்களா?, வித்யா நீயும் சாப்பிடும்மா?,கிருஷ்ணன், "இல்லம்மா இப்ப தான் நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்தோம் என்றவரோ ராகுலின் அருகில் அமர்ந்து தலையை வருடி விட்டார்.ராகுல், "மாமா.. எனக்காக அவ இதயத்தை கொடுத்துட்டு போயிட்டா? என்று அழுதான்.பரதன், "ராகுல் சார், நீங்க இப்படி நித்தமும் அழுகிறதால் கனிஷ்கா மேடம் வரப் போறதில்ல, நீங்க சந்தோஷமாக இருக்கனும் என்பதற்காக தான் அவங்க இதயத்தை உங்களுக்கு கொடுத்து இருக்காங்க, இதுக்கு மேலயும் அழாதீங்க?, இது நீங்க அவங்களேயே கஷ்டப்படுத்துற மாதிரி என்றான்.ராகுல், "ஸாரி, பரதன் இதுக்கு மேலயும் நான் அழமாட்டேன் என கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.கிருஷ்ணன், ஜானகி நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதே?, இந்த நினைப்புல இருந்து மீண்டு வருவதற்கு எப்படியும் ஒரு வருடம் ஆகிடும். நீங்க அதுவரைக்கும் எங்க வீட்டுல வந்து இருங்கம்மா?, நம்ம எல்லாரும் ஒன்னா இருக்கலாம் என தயக்கத்துடன் கூறினார்.ராகுல், "மாமா நாங்க எப்படி உங்க வீட்டுல வந்து இருக்க முடியும். அது தப்பு...மாமா என்றான் .தாமு, இல்ல ராகுல், நீங்க அங்க போயி இருப்பது தான் சரி. ஏனென்றால் நம்ம வீட்டுக்கு வந்தால் நீ எப்போதும் கனிஷ்காவை பத்தியே நினைச்சுட்டு இருப்பாய். அவளை மறக்கவும் முடியாமல் ரொம்ப வேதனைப்படுவாய்.அவளை நினைத்து ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் வருந்தி கஷ்டப்படுவாய்.அதனால் உன்னுடைய உடம்பு தான் பாதிக்கும். நீயும் அம்மாவும் ஹாஸ்பிட்டலில் இருந்தே உங்க மாமாவோட கிளம்புங்க என உத்தரவிட்டார்.ஜானகி, "ஏங்க உங்கள விட்டுட்டு நாங்க எப்படிங்க போறது "பரதன் ,"அம்மா, நீங்க கவலைப்படாதீங்க?,தாமு ஐயாவை நானும் பவதாரணியும் பார்த்துக் கொள்கிறோம். இன்னும் கொஞ்ச நாள் தான் இங்கு இருப்போம் என நினைத்தேன்.ஆனால் தாமு ஐயா, எங்களை இங்கேயே இருக்க வேண்டும் என கட்டளை இட்டார். அவர் பேச்சை மீறி எங்களால் ஒன்னும் செய்ய முடியல. ராகுல் சார் எம் பொண்ணுக்கு குரல் வரனும் என்பதற்காக எங்களை இங்க அழைச்சு வந்தாங்க ,அவரோட மகனுக்காக நாங்க இத கூட செய்யாமல் இருந்தால் நல்லா இருக்காது. எம் பொண்ணு தீனுஷிகாவிற்கு ஆப்ரேஷன் பண்ணி நல்லா அவ பேசிய பிறகு தான் ஊருக்குப் போகனும்.ஜானகி, "அண்ணா டாக்டர் வந்ததும் தம்பியை டிஸ்சார்ஜ் பண்ணலாம்மா?, என்று கேட்டுட்டு கிளம்புவோம்.வித்யா, "ஏங்க ஒரு நிமிஷம் தனியாக வாங்க "கிருஷ்ணன், "என்னங்க மேடம் எதுக்காக தனியாக கூப்பிட்டீங்க?, ஏதாவது முக்கியமான விஷயமா?,வித்யா, "அட என்னங்க நீங்க ,என்னை போய் மேடம்னு கூப்பிட்டுட்டு இருக்குறீங்க, நீங்க நம்ம பொண்ணு ஸ்ரேயாவிடம் கேட்காமல் ராகுலை எதுக்காக கூப்பிடுறீங்க, அவ ஏற்கனவே ராகுலை கல்யாணம் செய்யலேயே என்ற வருத்தத்தில் இருந்தாள். இப்ப இவனை வேற அங்க அழைத்து சென்று அவளுடைய சந்தோஷத்தைக் கெடுக்கனும்மா என்றாள்.கிருஷ்ணன், "ஹேய் உம் பொண்ணு தான் ராகுலை எப்படியாவது நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க ,பார்த்துக்கலாம்னு சொன்னாள்.வித்யா, "ஓ.. நீங்களும் ஸ்ரேயாவும் கலந்து பேசிட்டு தான்

இங்க உங்க தங்கச்சியிடம் பேசியிருக்கீங்களோ!,சரிங்க முடிவு பண்ணியாச்சு.. இன்னும் நம்ம பேச்சு எடுபடாது என்றாள்.செக் கப் செய்து முடித்ததும் இனியும் ராகுலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்களெல்லாம் ஆசைப்படுகின்ற மாதிரியே வெளியூருக்கு அழைத்துச் செல்லலாம். நீங்க கொஞ்ச நாள் நான் எழுதிக் கொடுக்கிற மருந்தை சரியான நேரத்துக்கு கொடுத்து விடுங்கள் என்றார் .ராகுலும் ஜானகியும் ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே அவங்க மாமாவின் வீட்டுக்குச் சென்றார்கள்."ஹாய் ! ஆன்ட்டி வெல்கம் ,மை ஹவுஸ்"என புன்னகையோடு வரவேற்றாள்.ஸ்ரேயாவைப் பார்த்த ஜானகி கட்டி தழுவி முத்தமிட்டாள்.ராகுல் உடம்புக்கு இப்போது பரவாயில்லையா?, என பரிவுடன் கேட்டாள்.ராகுல், "இட்ஸ் ஓ. கே.. "அத்தை வாங்க இங்க உட்காருங்க, என்றவளோ ஜீஸ் எடுத்துட்டு வரும்படி வேலைக்காரன் காசியிடம் உத்தரவிட சற்றென்று நேரத்தில் அனைவருக்கும் கொடுத்தான்."நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க இதோ வந்துடுறேன்"ஸ்ரேயா, "அப்பா.. என ஓடி வந்து கட்டி அணைத்தாள்.கிருஷ்ணன், என்னம்மா இப்போது ஹேப்பியா?, நம்ம நினைச்சபடியே எல்லாமே நடந்து முடிஞ்சது. இனி நடக்கப்போவதை நமக்கு சாதகமாக மாத்திக்கனும் என்றார் ..இனியும்தொடரும்..
.

..
 
Top