• வைகையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

NEN - ஸ்ரேயாவின் வீடு (அத்தியாயம் 13)

Veera

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
26
ஸ்ரேயாவின் வீடுஅத்தியாயம் 13ஸ்ரேயா,"ஆமா ,"அப்பா ,நம்ம. இரண்டு வருஷமா இதுக்கு தான் காத்திருந்தோம். எப்படியாவது கனிஷ்காவை இவனிடம் இருந்து பிரிக்கனும் என்பதற்காக பல முறை திட்டம் போட்டேன். ஆனா எதுவுமே நடக்கல, கடைசியாக ராகுல் நமக்கு இல்லை என்று மனசு சொல்லும் போது என்னால் அத ஏத்துக்க முடியாமல் இருந்தேன்.. ஆனா இப்ப என்னோட ராகுல் என்னுடைய வீட்டுல அத நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்குது.கிருஷ்ணன், "சரிம்மா,ஏற்கனவே ராகுல் கனிஷ்கா இறந்ததை நினைச்சு மனமுடைந்து துக்கத்தில் இருக்கிறான் .அவனை தொந்தரவு செய்யாமல் இருந்துக்கோ என அறிவுரை சொன்னாள்.ஸ்ரேயா, "சரிங்கப்பா அத பத்தி எதுவுமே பேசமாட்டேன்.கிருஷ்ணன், "நம்ம கம்பேனி வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.ஜானகி, "அவளை பத்தி பேசுனா பேசிக்கிட்டே இருக்கலாம்.வீட்டுல உள்ள எல்லாரிடமும் அன்பா பேசுவா, அவங்களுக்கு பிடிச்சது எல்லாமே செஞ்சு கொடுப்பா என கனிஷ்காவைப் பத்தி பேசிக் கொண்டே இருந்தார்கள்.ஸ்ரேயா, "அத்தை நாங்க உங்க மருமகளை பார்க்க கொடுத்து வைக்கல, உண்மையா சொல்லனும்னா ராகுலுக்கு ஏற்ற ஜோடி. கனிஷ்கா தான் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாள்.வித்யா, "ஸ்ரேயா இங்ங கொஞ்சம் வாம்மா ""என்னம்மா ,சொல்லு.. இந்த நேரத்துல எதுக்காக கூப்பிட்ட "வித்யா, "நீதானே கனிஷ்காவைப் போட்டோவில் பார்த்துருக்க, இப்ப தெரியலனு சொல்ற"ஸ்ரேயா, "ஆமா, நான் பார்த்தது அத்தைக்கும் ராகுலுக்கும் தெரியாதே,?அம்மா நான் அத்தை மனசுல ஆழமா இடம் பிடிக்கனும். அதுக்காக தான் கனிஷ்காவைப் பத்தி அவங்களுக்கு ஆதரவாக பேசி, அவளை பற்றி பெருமையா சொல்லிட்டு இருக்கேன். நீ இந்த மாதிரி என்னை தனியா அழைத்து பேசுவது இது தான் கடைசி. நம்ம இரண்டு பேரும் ஏதோ பேசுறோம்னு அத்தை தப்பா நினைச்சுட கூடாது .ராகுல், "அம்மா கொஞ்சம தண்ணீர் கொடுங்க என கேட்டான்.ஸ்ரேயா, "அத்தை இருங்க நானே எடுத்து தருகிறேன் என்றவளோ அவனருகே சென்று மெல்லமாக கொடுத்தாள். அந்த நேரத்தில் ராகுலுக்கு இருமல் வர தலையில் தட்டி விட்டாள்.அடர்ந்த காட்டினிலேயே மனிதர்கள் நடமாட்டமில்லாத ஒரு பாலடைந்த வீட்டில் அங்குமிங்குமாக சிதறிக்கிடந்த இலைகள், ஓடி ஒளிந்து கொல்லும் சுண்டெலிகள்,உடைந்த கண்ணாடி பொருள்கள் அதன் நடுவில் கைகள் ,கால்கள் கட்டப்பட்டு, அடைந்து கிடக்கும் ஒரு பெண் .அவள் வாயைத் திறந்து பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டி வைத்திருக்கின்றன். இருட்டறையினில் அவளது முகம் வாடிப் போய் கிடந்தது. அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். அதுவும் ஒரு வழியாக கையில் கட்டிய. கயிற்றை அவிழத்து அதன்பிறகு வாயினில் உள்ளதை எடுக்கின்றாள் கனிஷ்கா மாதிரியே உருவம் படைத்த ஒரு பெண்.அந்த காட்டினில் இருந்து வெளியே ஓடி வருகிறாள். சாலையோரமாக நடந்து வர சட்டுன்னு. மயங்கி கீழே விழுந்து விட்டாள்.நரேந்திரன், சிவானி இப்ப ஹேப்பியா "சிவானி, "ம்ம்ம் ...இப்ப ஓ. கே.. டாடி.. அம்மா தான் என்னை திட்டிக்கிட்டே இருக்கிறாங்க,நரேந்திரன், "ஏன்டி நம்ம பொண்ண திட்டுற "சிவகாமி, "ஏங்க அவ தான் சொல்றானா?,நீங்களும் எங்கிட்ட கேட்குறீங்க "அவ பொய் சொல்றா,சிவானி, "அய்யய்யோ!,மம்மி பேட் மம்மி பொய் சொல்றாங்க டாடி,நம்ம பீச்சுல வைச்சு அம்மாவிடம் ஐஸ்கிரீம் கேட்டேன். அதுக்கு தான் என்னை ரொம்ப நேரமா திட்டுனாங்க,நரேந்திரன், "சிவானி குட்டி ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டேனு தானே எங்கிட்ட சொன்ன?, பிறகு எதுக்காக அம்மாவிடம் கேட்டிருக்க,அச்ச்ச்சோ, நானே சொல்லிட்டேனா?,என தலைகுனிந்தாள் சிவானி.சிவகாமி, "இது தான் தன்னுடைய வாயாலேயே கெடுறது 'இதுக்கு தான் அமைதியா இருந்தேன் என காதைத் திருகி சிவானியிடம் சொன்னாள்.சிவானி, "அப்பா துரத்துல யாரோ மயங்கி கிடக்குற மாதிரி இருக்குது. "நரேந்திரன், "அட ஆமா ,நீங்க காருக்குள்ளே இருங்க முதலில் நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்.சிவகாமி, "என்னங்க என்னாச்சுங்க…நரேந்திரன், :இந்த பொண்ணு மயக்கத்துல தான் இருக்குது.சிவகாமி, "ஏங்க நம்ம வீட்டுக்கு போகிற வழியில் ஒரு சித்த மருத்துவம் பாக்குறாங்க, அங்க வேணா கூட்டிட்டு போவோம் என்று சொல்லி அந்த பெண்ணைக் காரில் ஏற்றினர் .ஸ்ரேயா, "அப்பா வாங்க நம்ம எல்லாரும் ஒன்னா சாப்பிடுவோம். "கிருஷ்ணன், "இல்லம்மா, அப்புறமா சாப்பிடுறேன் என்று ஒரு மாதிரியாக சொன்னார்.ஸ்ரேயா, "உங்க முகமே சரியில்லையே"ஏதாவது பிரச்சினையா?, என பதற்றமாக கேட்க…கிருஷ்ணன்," இவகிட்ட விஷயத்தைச் சொன்னால். ரொம்ப பயப்படுவா?"அதனால் இந்த விஷயத்தைப் பத்தி நம்ம பொண்ணுக்கிட்ட சொல்லாமல் இருக்கிறது தான் நல்லது.ஸ்ரேயா, "அப்பா.. அப்பா உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என தோளை தொட்டாள்.கிருஷ்ணன், "அதெல்லாம் ஒன்னுமில்ல டா "வா நம்ம எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்று கூறினார்.கிராமத்தில் உள்ள ஒரு ஓலைக் குடிசை வீட்டிற்கு சிவகாமியும், கிருஷ்ணனும் அந்த பெண்ணை தூக்கிட்டு வந்தார்கள்.நாடிப்பிடித்து பார்த்த சித்தர், எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சுய நினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருக்கிறாள். இந்த மருந்தை தண்ணீரில் கலந்து மூன்று நாட்களுக்கு இரு வேளை கொடுங்கள்.அதன் பிறகு இங்க கூட்டிட்டு வாங்க என்றார்.சிவகாமி, "ஏங்க இந்த பொண்ணுக்கு சுயநினைவு வருகிற வரைக்கும் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு போவோம்மா? .நரேந்திரன், "இல்ல அம்மா ஏதாவது சொல்வாங்களே அதான் யோசித்தேன்.சிவகாமி, "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இந்த பொண்ணை அப்படியே விட்டுட்டு போக மனசு இல்ல ,அதனால் தான் சொன்னேன்.சிவானி, "அப்பா எனக்கு இந்ந ஆன்ட்டியைப் பார்த்தாலும் பாவமா இருக்குது .இவங்கள நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போவோம் என்றாள்.நரேந்திரன், "சரி..சரி.. போகலாம்.ராகுல், "கனிஷ்கா உன் நினைவுகளை மறக்க என்னை இங்க அழைச்சுட்டு வந்துருக்காங்க, ஆனாலும் கண்டிப்பா உன்னை மறக்கவே முடியாது என்று தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான்..ஸ்ரேயா, "ராகுல் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய நினைவுகளை மறக்க வைக்கிறேன் என நினைத்தாள்.ஜானகி, "ஹலோ பவதாரணியா?,பவதாரணி, "ஆமாம் .அம்மா.. நான் தான் பேசுறேன் ."ஜானகி, "ஐயாவிடம் போனைக் கொடும்மா "பவதாரணி, "அம்மா ஐயா இப்ப தான் சாப்பிட்டுட்டு தூங்குறாங்க"ஜானகி, "சரிம்மா தீனுஷிகா என்ன பண்றா?பவதாரணி அவ தூங்கிட்டாம்மா, ராகுல் சாருக்கு இப்ப எப்படி இருக்கு?ஜானகி, "அப்படியே தான் இருக்குறான்.இன்னும் அவளை தான் நினைச்சுட்டு இருக்கிறான் .பவதாரணி, "கவலைப்படாதீங்க, அம்மா. எல்லாமே சீக்கிரத்தில் சரியாகி விடும்.நீங்க அத நினைச்சு சாப்பிடாமல் இருக்காதீங்க என அன்பாக சொல்லி அழைப்பை துண்டித்தாள்.சிவகாமி, "மெதுவாக வாங்க, என்று அழைத்தபடியே அந்த பெண்ணை இன்னொரு அறையில் படுக்க வைத்தனர்.பங்கஜம்மாள், "யாரு? இந்த பையன் என கண்ணாடியைப் படாமல் கேட்க,சிவானி, "பாட்டியம்மா, அது பையன் இல்ல பொண்ணு என புன்னகையிட்டாள்.பங்கஜம்மாள், "விரைவாக சென்று கண்ணாடியைப் போட்டு பார்த்தாள் .இந்த பெண்ணை எதுக்காக நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருக்கீங்க ,சிவகாமி, "அத்தை இந்த பொண்ணு நாங்க வருகிற வழியில் சாலையோரமாக மயங்கிய நிலையில் கிடந்த இவளை சித்தரிடம் காட்டி விட்டு நம்ம வீட்டுக்கு அழைத்து வந்தேன். அதுவும் இரண்டே நாளில் சுய நினைவுக்கு வந்துருவா?அப்புறம் இவ யாரு என்னவென்று விசாரித்து விட்டு இவளை இவுக வீட்டுல சேர்த்து விடுவோம் அதுவரைக்கும் ஏதுவும் சொல்லாமல் இருங்க என்றாள் .சிவானி, "அப்பா.. அப்பா அந்த ஆன்ட்டி எப்போது கண்விழிப்பாங்க,நரேந்திரன், அந்த ஆன்ட்டி கண் விழிக்க இரண்டு மூன்று நாட்கள் ஆகும் .மணி வேற ஒன்பது ஆயிடுச்சு .நீ போயி தூங்கு.காலையில் எழுந்து ஸ்கூலுக்கு கிளம்பனும் ..சிவானி, மும்ம்.. குட்.நைட்...டாடி,நரேந்திரன் ஒரு பக்கம் வேலையின் கவனத்தில் இருக்க, இன்னொரு பக்கம் சிவகாமியும் மெளனமாக உட்கார்ந்து இருந்தாள்.நரேந்திரன், "உம் முகமே சரியில்லையே?சிவகாமி, "ஆமாங்க, எல்லாமே அந்த பொண்ண நினைச்சு தான் வருத்தப்படுறேன். அவுக வீட்டுல இந்த பொண்ண எங்கெல்லாம் தேடுவாங்களோ?, அத நினைச்ச தான் ரொம்ப கவலையாக இருக்குது.நரேந்திரன், "இங்க பாரமம்மா, இன்னும் இரண்டே நாளில் அந்த பொண்ணு கண் விழித்ததும் அவங்க வீட்டுக்கு முதலில் தெரியப்படுத்துவோம். நீ அத நினைச்சு வருத்தப்படாதே என அறிவுரை சொன்னான்.காலையிலேயே எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்தி பூஜை அறையில் விளக்கு ஏற்றி மங்களரமான பாடலோடு வேலையைத் தொடங்கினாள் ஸ்ரேயா.ஜானகியும் மங்களரமான பாடலைக் கேட்டு எழுந்து சமையல் அறையை நோக்கி வந்தாள். ஸ்ரேயா பரபரப்பாக வேலையைச் செய்து கொண்டிருக்கையில் ஆச்சரியமாக பார்த்தாள்.ஸ்ரேயா, "அத்தை நீங்க எப்ப வந்தீங்க "ஜானகி, "ஏம்மா இது நீதானா,காலையிலேயே எழுந்து கோலமிட்டு பக்தி பாடல் ஒலிக்கிறதே,ஸ்ரேயா, "அத்தை காலையில் எழுந்ததுமே இது தான் என்னோட வழக்கம்..சின்ன புள்ளையாக இருக்கும்போதே எனக்கு பழகிடுச்சு ..இந்தாங்க அத்தை காபி குடிங்க என நீட்டினாள்.ராகுலின் கனவிலேயே கனிஷ்கா,..வானில் விடிவெள்ளி மின்னிடும்

மின்னிடும் நேரம்..

வாசலில் மாப்புள்ளி வைத்திடும் வைத்திடும் நேரம்..

அதிகாலை சுபவேளை உறங்காதே

கண்ணா!,,

கண்ணா… என கனிஷ்கா அழைத்தது போல் இருந்ததும் சட்டென்று எழுந்தான்.ச்சே, எல்லாமே கனவு தானா, என்றவனோ எழுந்து அறையை விட்டு மாடிக்குச் சென்றான்.ஜானகி, "காபி ரொம்ப சூப்பராக இருக்குது.. "ஸ்ரேயா, "சரிங்க அத்தை நீங்க போய் தூங்குங்க, மற்ற வேலைகளை நானே பார்த்துக்கிறேன்.ராகுல், "பனி விழும் வேளையிலேயே

..நின்றிருந்தான். அச்சமயம் அவனுடைய நினைவில் ஒரு கவிதை கனிஷ்காவைப் பற்றியே தோன்றியது ." உனக்கு விருப்பமான ஒன்றையே!

…...எனக்காக விட்டு கொடுத்தாயே!

இறுதியாக உன்னையே தந்துவிட்டு

…..மாய்ந்து போனாயே என்னுயிரே!."ஜானகியும் அறைக்குள்ளே நுழைய, ராகுல் கட்டிலில் இல்லை எனத் தெரிந்ததும் ,பதற்றப்படாமல் மாடிக்குச் சென்றாள்.ஸ்ரேயா "அத்தை இந்நேரத்துல மாடிக்கு எதுக்காக போறீங்க "ஜானகி ,"ராகுல் மாடிக்குப் போயிருக்கான், அதான் அவனை கூப்பிட போறேன் .ஸ்ரேயா, "ஆஹா, ராகுல் மாடியில் இருக்கிறான். இப்போது அவனிடம் பேச நல்ல வாயப்பு இருக்குது. அத்தை நீங்க இருங்க நானே போய் கூப்பிட்டு வந்துடுறேன் .ஜானகி, "ஹேய் பார்த்து போம்மா,ஸ்ரேயா, "ராகுல் இங்க என்ன பண்ற "அதுவும் பனி விழும் போது நின்னுட்டு இருக்குற,ராகுல், "இல்லை சும்மா தான் இயற்கை காற்றை ரசிக்கனும்னு தோணுச்சு,ஸ்ரேயா, "அதுக்கு என்னையும் கூப்பிட்டு இருந்தா நானும் வந்துருப்பேனே என்றாள்.இனியும் தொடரும்…
 
Top