• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
மௌனமாய் ஓர் யுத்தம் என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த சிறுகதையை நாவலாக எழுத ஓர் அவா..
அதிலிருந்து ஓர் குட்டி டீசர்


"அம்மா ஏன் மா இப்படில்லாம் பேசுற..?" என கசந்து வெளிவந்தன மதிநிலாவின் வார்த்தைகள்.

"பின்ன எப்படி பேச சொல்லுற..? காலாகாலத்துல கல்யாணம் பண்ணினா தானே உண்டு. அத விட்டுட்டு வர்ர வரன் எல்லாத்தையும் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?" என ஆதங்கமாய் அவளது தாய் பத்மாவதி பேச்சில் காரத்தை அள்ளித் தெளித்திருந்தார்.

பரிதாபமாக தந்தையை திரும்பிப் பார்த்த மதியின் முகத்தை காண சகிக்காத அவளது தந்தையும் எழுந்து அறைக்குள் சென்று விட தனித்து விடப்பட்ட நிலை அவளது. கண்களும் அதன்பாட்டில் கலங்க தாயிடம் ஏதோ சொல்ல வாயெடுக்க அதற்குள் பத்மாவதி "இந்தப் பையன கல்யாணம் கட்டிக்க ஒத்துக்கிறதுன்டா இங்க என் மகளா இரு. இல்லன்னா இன்னைக்கே உன்னை தலை முழுகிறோம்..." என இடியைத் தூக்கி தலையில் இறக்க செய்வதறியாது தவித்தவளின் பார்வையில் விழுந்தனர் அவளது தங்கையும் தம்பியும். அவர்களோ வீட்டில் நடப்பது புரியாது பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க கண்களில் இவ்வளவு நேரமும் தேக்கி வைத்திருந்த கண்ணீர் மதியின் கன்னத்தை தொட்டது.

முயன்று உள்ளிழுத்துக் கொண்டவள் வழமை போல தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராடி அதில் வெற்றியும் கண்டு விட்டாள். மனதில் என்ன நினைத்தாளோ தன்னையே கோபமாக பார்த்துக் கொண்டிருந்த பத்மாவதியிடம் "நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒ..ஒத்துக்கிறேன்.." என்றதுடன் தன் நடையைக் கட்டியிருந்தாள். சந்தோசத்தில் அவளருகில் ஓரெட்டு வைத்த பத்மாவதியை அவள் கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. போகும் அவளையே வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவர் "என்னாச்சு இவளுக்கு..?" என்றவாறு தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டார்.

தன் கூரிய வார்த்தைகளால் தன் மகள் செத்து விட்டாள் என்ற நிதர்சனம் மட்டும் அவருக்கு புரியவேயில்லை.

அப்போது அறைக்குள் தஞ்சமடைந்தவள் தான். அதன் பின்னர் வெளியில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அது பெற்றவர்களை பாதிக்காவிட்டாலும் கூடப்பிறந்தவர்களை நன்கு பாதித்திருந்தது. மதிநிலா அவர்களுக்கு சகோதரி மட்டுமல்ல அவர்களின் இன்னொரு தாயுமானவள். தான் அனுபவிக்காமல் விட்ட சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அவர்கள் பெற வேண்டும் என தன்னை வருத்திக் கொள்பவளாயிற்றே. மனதில் ஆயிரம் கவலைகளும் ரணங்களும் இருந்தாலும் சிரிப்பையே பரிசாக தருபவளை இந்த வாழ்க்கை மிகவும் ஒடித்திருந்தது. அப்படிப்பட்டவள் இன்று அறையே கதியென கிடக்க இருவரும் தங்கள் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்து விட முடியாத நிலை.

இதுவே மதிநிலாவின் உதிரத்தில் உறைந்து போன வடுக்கள்.


தீரா.
 
Top