• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
108
போதை காதல் 05

‘டீ மற்றும் காபி’

சாதாரண பானம், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உலகில் அனைவராலும் ஒருமுறையேனும் சுவைக்கபடும் பானம். போதை தரும் சுவைக்கொண்ட பானம். ஆனால், இந்த பானகங்கள் தான் எவ்வளவு நினைவுகளை சுமந்துக்கொண்டு இருக்கிறது அவள் வாழ்வில்.

ஒவ்வொரு முறை நினைவு வரும்போதும் அவளை குத்தி கிழித்து குற்றவுணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும், அசிங்கமான ஒரு உணர்விலும், தவிப்பது தான் அவளின் விதியோ?.

அவள் இயல்பையும் மீறி செய்த தவறின் வீரியம் புரிந்த பின் ஒவ்வொரு நொடியும் புழுவென தவிக்கும் தவிப்பு அவள் மட்டுமே அறிவாள்.

அவள் நினைத்தால், வெளியே வரமுடியும் தான். ஆனால், இது அவளுக்கு அவளே கொடுத்துக்கொள்ளும் தண்டனை அல்லவா? மனசாட்சியின் ஆழ்ந்த பிடியில் இருக்கும் அனைவரும் உணரும் வலி தான் இது. என்ன தான் மற்றவர்களுக்கு நம் தவறுகள் தெரியவில்லை என்றாலும், அவரவர் மனசாட்சிக்கு தெரியுமே? அது கேட்கும் கேள்விக்கும், கொடுக்கும் தண்டனைகளுக்கும் யாரும் தப்பிக்க முயல முடியாது.


டீயை தவிர்த்துவிட்டால் எங்கே மறந்து இந்த வலி வேதனை குறைந்துவிடுமோ என்று விடாமல் டீயை பருகி வருகிறாள். ஒவ்வொரு முறை அதன் சுவையில் கண்களை மூடும்போது, கண் வழி இதயம் அமிழத்தும் வலியையும் சேர்த்தே தான் உள் வாங்குகிறாள்.

கொஞ்சம் கொஞ்சமாக விஷமென உள்ளே இறங்கும் டீயை அழித்து காபி தன்னை அவளுள் நிறைத்து மனதிலுள்ள புற்றுநோய் என பரவியிருக்கும் அசிங்க உணர்வில் இருந்து விடுவிக்குமா?

எதிரே இருக்கும் அவளின் சோர்ந்த முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் கானகன். என்ன ஓடுகிறது இவளுள்? என்ற எண்ணமே அவனுள்.

வெறிபிடித்தவள் போல் கத்தியவளை சமாளித்து அங்கிருக்கும் அமிழிருக்கையில் கிடத்திவிட்டு, கதவை சாற்றியவன், உள்ளே சென்று சில்லென்ற தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தான். வாங்கிக் குடித்துவிட்டு தான் இப்போது விட்டத்தை வெறித்தபடி சாய்ந்து இருக்கிறாள்.

ஏனோ பேச்சுக் கொடுக்க சற்று தயக்கமாக இருந்தது. எங்கே தான் ஏதேனும் பேசி, அவளுக்கு மீண்டும் பேனிக் அட்டாக் வந்து ஏதாவது ஆகிவிடுமோ என்று அமைதியாக அமர்ந்திருந்தான். அவனுக்கென்ன கொடுத்த சோபாவில் தான்.

“அவ்வ்...ஒவ்....” அசையாமல் அமர்ந்திருக்கும் தன் எஜமானியின் கால்களை சுற்றி சுற்றி வந்தார்கள், அந்த விசுவாசிகள்.

அதில் நினைவு திரும்பியவள், முதலில் நிமிர்ந்து பார்த்தது, தன்னேயே கவலையோடு பார்த்தவனின் முகத்தை தான். ஏனோ அவனின் கரிசனமும் சமாதானமும், அதை வெளிப்படுத்தும் பார்வையும் பேச்சும் அவளுள் அமைதியை நிறைத்தது.

மெதுவாக புன்னகைத்தவள், “ஐ மேட் யு ஸ்கேர்ட்” என்று கூற,

“ம்ம்... லேசா... என்னாச்சு?” என்று கேட்டான்.

மீண்டும் நினைவுகளில் அமிழ ஆரம்பித்த தன் மனதை அடக்கி புன்னகைத்தவள், “நத்திங். தெரியல” வேண்டுமென்றே அலட்சியத்தை குரலில் தத்தெடுத்தவள் கூறிவிட்டு நகர, சட்டென எக்கி அவள் கையை பிடித்துவிட்டான்.

பிடியில் இருக்கும் அழுத்தமும் கண்களில் தெரியும் உரிமையும் ஒருநிமிடம் அவளை திகைக்க செய்ய, அவள் பார்வையில் தன்னை சுதாரித்தவன், “உட்காரு, யு ஆர் நாட் வெல் நவ்” என்று கூறி மெதுவே கையை விடுவித்தவன்,

“எப்படியும் தூங்க மாட்டேன்னு நினைக்கிறேன், உள்ளே போய் வேலை செய்ய வேண்டாம்” அவன் முயன்று மறைத்தாலும் வெளிப்படும் அந்த உரிமையை யோசனையோடு பார்த்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துக்கொண்டாள்.

“காபி...?” அவளை அது பாதிக்கிறது என்று தெரிந்தே மீண்டும் கேட்க, தன்னை வெகுவாக நிலைப் படுத்தியிருந்தவளை, முன் அளவிற்கு அந்த கேள்வி பாதிக்கவில்லை தான். ஆனால், தைரியமாக மீண்டும் சீண்டும் அவனின் குரலை ஆச்சர்யமாக பார்த்தாள்.

“வேண்டாமா?” குழந்தைக்கு கொடுக்கும் ஐஸ்கிரீம் என ஆசைக்காட்டினான்.

வேண்டும் – வேண்டாம் என எதுவும் சொல்லாமல் அவனையே சுவாரஸ்யமாக பார்த்தவளை நெருங்கி கோப்பையை நீட்ட, சில நொடிகள் யோசித்தாலும் வாங்கிக்கொண்டாள்.

அதன் வாசத்தில் மயங்கியவள், ஒரு சொட்டை ருசிக்க, எப்போதும் போல் ஒரு நொடி ருசியை அனுபவித்து மூடி திறந்த கண்களோடு கண்ணீர் வழிந்தது. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவன், அவள் கண்ணீரை உணர்ந்தாலும், என்ன ஏது என்று கேட்டு தொல்லை செய்யவில்லை.

அவரவருக்கு என இருக்கும் தனிமனித மனநிலையை எப்போதும் யாராக இருந்தாலும் தூண்டி துருவி கேள்வி எழுப்புவதில் அவனுக்கு விருப்பமில்லை.

“மணி அஞ்சு ஆச்சு. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்புறேன்” அறிவிப்பு போல் கூறியவனை கண்டவள், வெளியே பார்க்க, விடாது அடித்து பெய்துக்கொண்டு இருந்த மழை சற்றே தன் ஆதிக்கத்தை குறைத்து இருந்தது. இருந்தும் பலமான மழை தூறல்கள் நிற்கவில்லை.

அவள் பார்வையை உணர்ந்தாலும், தன் காபியை ருசித்தவன், கண்களாலேயே அவளையும் குடிக்கும்படி பணிந்தான்.

“எப்படி இருக்குனு சொல்லவே இல்லையே?”

“ரொம்ப நாள் கழிச்சு ருசிக்கிறேன், ஏனோ ஒரு அமைதி உள்ளே பரவுற மாதிரி பீல் ஆகுது. தேங்க்ஸ். ஆனா”

“ஆனா...?”

“மழை இன்னும் விடலையே?”

“ஹாஹாஹா யாரோ விடிஞ்சதும் மூட்டை முடிச்சை எடுத்துட்டு கிளம்ப சொன்னதா ஞாபகம்”

“ஷ்...ஜோக்ஸ் அபார்ட், எப்படி போவிங்க?” அவன்மேல் திடீரென தோன்றிவிட்ட நல் விதை அவளை அக்கறை கேள்வி எழுப்ப தூண்டியது.

“ஜீப் எடுத்துட்டு ரோட் எண்டுக்கு வர சொல்லிருக்கேன். ஒன்னரை கிலோமீட்டர் தானே தாண்டிட்டா அப்புறம் டவுன் போயிடுவேன்”

“ஒ..ஓகே...”

‘இவனை மறக்க முடியாது தான்’ - அவள்.

சிலர் நம் வாழ்வில் மிக சொற்ப நேரமே பங்கு வகிப்பார். ஆனால், அவர் நிகழ்த்தும் மாயம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படி ஒரு மாற்றம் தான் அவளுள் நிகழ்ந்தது. முழுதாக ஒரு வருடம் அனுபவித்த வலியை தவிர்த்து சற்று அமைதியை உணர்ந்திருந்தாள். டீயை தவிர்த்து காபியில் மூழ்க முதல் அடி எடுத்து வைத்திருந்தாள்.

‘இவள் நினைவில் இனி நான் மட்டுமே இருக்க வேண்டும்’ - அவன்.

அவளை பற்றி அறிந்துக்கொள்ள தான் வந்தான் அவன். ஆனால், அறியாமலேயே அவளுள் மூழ்க முடிவெடுத்துவிட்டான். மூழ்கியபின் ஒவ்வொரு விஷயமாக முத்தெடுக்க முடிவெடுத்தவன், வெளியே வர போகும் சுனாமியை கடந்து அவளை புரிந்துக்கொள்வானா?

***************************

“சரி கிளம்புறேன்... இதுபோல் வேறு யாராவது வந்து உதவி கேட்டாலும், ஜாக்கர்தையாக இருக்க பார். எப்போதும் பிஸ்டல் உதவாது. விதி இருந்தா இணைவோம்.” என்று கூற திகைத்து நிமிர்ந்தவளை பார்த்தவன், “ஐ மீன் சந்திப்போம்” மெதுவாக கூறி விலகினான்.

அதே உடையுடன் கிளம்பியவன், மேலே அந்த கருப்பு ஜெர்கினை அணிந்து ஹூடி போல் இருந்த அதனை தலையிலும் மாட்டிக்கொண்டபடி அவனின் பைகளை தோளில் மாட்டிக்கொண்டான்.

“சரி போய் வரவா?” திரும்பி சிரித்தவன், வெளியே செல்ல, பின்னோடு சென்று அந்த கயிற்று ஏணியை எடுத்து கீழே போட்டாள்.

“ஹே...இட்ஸ் ஓகே... நான் இதுலேயே இறங்கிடுவேன்”

“பரவாயில்லை. மழை இருக்க நேரம் ரிஸ்க் வேண்டாம்” கூறியவளை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன், அதனை பிடித்துக்கொண்டு இரண்டு அடி கீழே இறங்கி மேலே நிமிர்ந்து பார்க்க,

வெள்ளை நிற கவுனின் விரித்துவிட்ட முடியுடன் அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். முகத்தில் தெளிவையும் தாண்டிய கண்களின் சோகம் அவனை ஏதோ செய்தது.

சட்டென மீண்டும் மேலே ஏறி வந்தவன், “சில சமயம் நம்மை சூழ்ந்த பிரச்சனையும் அதன் வலியும் நம்மைவிட்டு எப்போதோ விலகி போயிட்டு இருக்கும். மீதம் இருப்பது எல்லாம் அதனின் தாக்கம் மட்டுமே! நாம தான் அதை விடாம பிடிச்சிட்டு மேலும் மேலும் ரணப்பட்டு போவோம்.

சோ சிம்ப்ளி அசெப்ட் தி பிளோ ஒப் லைப். சீக்கிரம் டீயை ஒதுக்கிவிட்டு காபி கனவின் பின் முழுமூச்சாக ஓட ஆரம்பி” கை நீட்டி அவள் கன்னங்களை தட்டியவன், கடகடவென கீழ் இறங்கி விலகி சென்றுவிட்டான்.

போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள், வளைவில் திரும்பி மறைந்தவனை கண்டு ஒரு புன்னகை பூக்க அந்த கயிற்று ஏணியை மேலே இழுத்துப்போட்டாள். அவனின் வார்த்தைகளே அவள் மனதில் வளம் வர ஆரம்பித்தது.

உள்ளே வந்தவள், அனைத்து விளக்குகளையும் அமிழ்த்திவிட்டு படுக்கையில் விழுக, என்றுமில்லாது அன்று அவளை சுகமாய் உறக்கம் ஆட்க்கொண்டது. மனதில் புதிதாக மீண்டும் தோன்றிய அமைதியும் நிம்மதியும் அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டு சென்று தள்ள, எப்போதும் இரண்டு மணி நேரத்தில் எழுந்துவிடுபவள், அன்று பிற்பகல் வரை தூங்கிக்கொண்டு இருந்தாள்.

கனவில் அவன் வந்தான்.

அரக்கனான அவனின் அழகான பொய் முகமுடியை நம்பி அருகே சென்றவள், அவனை நிமிர்ந்து பார்க்க, கை விரித்து அவளை அருகே அழைத்தான். மயங்கும் புன்னகையோடு சுற்றம் தடுப்படதை உணராது அருகே சென்று அவன்மேல் சாய போகும் கடைசி நொடி அவளை இழுத்தது கானகனின் கை.

அதிர்ச்சியோடு அவள் கைகளை விடுவிக்க போராடிக்கொண்டு இருக்கும்போதே அவளை பின்னே தள்ளி, முன் சென்றவன், நொடியில் அந்த அரக்கனின் முகமுடியை விளக்கி அந்த கோர முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டான்.

பயந்து கத்தி மயக்கமானவளை பூப்போல தூக்கிய கானகன், “மதனா உனக்கு ஒன்றுமில்லை டா... என்னை பாரு, இங்கே பாரேன்” என்று மடியில் சரித்து அவள் கன்னம் தட்ட,

பதறி எழுந்தவள் முன் குனிந்து அவள் கன்னத்தில் நிஜமாகவே தட்டிக்கொண்டு இருந்தான் கானகன். கனவில் இருந்து இன்னும் மீளவில்லையோ என்று நினைத்தபடி கையை நீட்டி அவன் முகம் தொடவும், வதனம் தொடுமுன் அவனின் சூடான சுவாசத்தை அவள் கைகள் உணரவும் சரியாக இருந்தது.

பட்டென விலகி எழுந்தவள், பேய் முழி முழித்தாள்.

அவளையே வித்தியாசமாக பார்த்த கானகன், “ஆர் யு ஆல்ரைட்?” என்று கேட்க மெதுவாக தலையாட்டியவள், அவனை பார்த்தபடியே படுத்திருக்க,

அந்த ஹீட்டர் மோடில் இருந்த எ.சியினலோ, அவ்வளவு நேரம் கண்ட கனவலோ தெரியவில்லை, அவள் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்த்திருக்க, இன்னுமும் தெளியாத அவள் முகத்தை பார்த்துக்கொண்டு நின்றான்.

இரண்டு முழு நிமிடம் முடிந்தும் அப்படியே இருப்பவளை பார்த்து மீண்டும் ஆரம்பித்தான், “என்ன மேடம், அறை நாளில் என்னை மறந்துட்டீங்களா? இல்லை இன்னும் தூக்கம் தெளியலையா?”

அவன் கிண்டல் குரலில் சுதாரித்தவள், தான் மெல்லிய உடையில் இருப்பதை உணர்ந்து, கழுத்து வரை போர்த்திய கம்போட்டரோடு எழுந்து அமர்ந்தாள்.

அவள் எழுந்தமரவும் தானும் நிமிர்ந்தவன், சட்டென சூழ்ந்துவிட்ட அசௌகர்யத்தொடும, அந்நியமாகிவிட்ட குரலில், “நான் வெளியே இருக்கேன், வாங்க” என்று கூறி இங்கிதமாய் விலகி சென்றான்.

போகும் அவனையே யோசனையோடு பார்த்தவள், தன்னை சுத்தப்படுத்தி அந்த உடையின் மேலேயே ஒரு ஓவர் கோட்டை எடுத்து அணிந்தவள், வெளியே வர, அவன் கைபேசியில் யாருக்கோ முயன்றபடி அமர்ந்திருந்தான்.

அந்த பிற்பகல் நேரத்தை இரவாக்கும் முயற்சியில் இருண்டு போன சூழலில் மழை இன்னுமும் வலுத்துக்கொண்டு இருந்தது. புயலின் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை வலுக்கும் என்பதை காலை செய்தியில் பார்த்தது ஞாபகம் வந்தது.

“ச்சே...” அவனின் குரலில் கவனம் திருப்பியவள், “என்னாச்சு?” என்று கேட்டாள்.

“நல்ல வேளை ஏன் திரும்ப வந்தேன்னு கேட்காம இருக்கியே தேங்க்ஸ்” என்று பெயருக்கு புன்னகைத்தவன், தன் காலை காட்ட அங்கே போட்டிருந்த கட்டையும் மீறி ரத்தம் கசிந்து வெளியே எட்டி பார்த்தபடி இருந்தது.

அருகே சென்று பார்த்தவள், அதன் ஆழம் உணர்ந்து, “எப்படி? நல்லதானே போனிங்க? காயம் ரொம்ப ஆழமா இருக்கும் போல இருக்கே”

“ப்ச்... மெயின் வழியில் போகாமல் குறுக்கில் போகலாம் என்று சின்ன அருவி பின் பக்கம் போகும் வழியில் போனேன். அங்கே மூணு மரம் ஒன்றில் மேல் ஒன்று விழுந்து கிடக்க தாண்டிவிடலாம் என்று நினைத்து ஏறிவிட்டேன். குதிக்கும்போது அங்கிருந்த கூர் மர கம்பு காலில் ஏறிடுச்சு”

“வாட்... நீங்க என்ன சின்ன பிள்ளையா? உலகம் முழுக்க சுத்திட்டு இந்த சின்ன காட்டை தாண்ட குறுக்கு பாதையில் போனேன்னு சொல்லுறீங்க?”

“விதி” ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டவனை நேராக முறைத்து பார்த்தவள், “உங்களை கூட்டிட்டு போக வந்த டிரைவர் எங்கே?”

“அவனால தானே எல்லாம்...சச் எ ஈரிடேடிங் பெர்சன்” என்று திட்ட கேள்வியாக பார்த்தவளை நோக்கி, “வண்டியை பள்ளத்தில் விட்டுட்டானாம், அதான் சீக்கிரம் இறங்கி நடந்தே ஊருக்குள்ள போயிட்டா ஏதாவது வண்டி பிடிச்சிக்கலாம்னு பார்த்தேன். அதுக்காக குறுக்கு வழில போகும்போது தான் இப்படி...” என்று கூறி அவனின் வழக்கமான செயலான தோளை குலுக்கினான்.

சும்மா பெயருக்கு சுற்றப்பட்டு இருந்தது அந்த துணி என்று பார்த்தாலே தெரிந்தது.

“எப்போ வந்தீங்க மறுபடியும்?”

“வர எட்டு எட்டரை ஆகிடுச்சு”

“என்னை எழுப்பி இருக்கலாமே?”

“நீ தூங்கிட்டு இருந்த, எனக்கு வேற செம்ம வலி, எழும்பினதும் நீ வெளியே போ முதலனு கத்தினா? அதான்” தோள்களை குலுக்கினான் மீண்டும்.

அவனை முறைத்தவள், “நான் ஒன்னும் அவ்வளோ கொடுமைக்காரி இல்லை” என்று உதட்டை சுழித்தாள். லேசாக சிரித்தான்.

பின் மீண்டும் யோசனையோடு, “இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க?” என்று கேட்க

“ஐ வாஸ் ஜஸ்ட் ட்ரையிங் போர் கேப். அப்புறம் பிரஸ்ட் எய்ட் செய்து கொஞ்ச நேரம் உட்கார்ந்தா அப்படியே தூங்கிட்டு இருக்கேன். ஆனா, நான் எழுந்த அப்புறம் கூட நீ செம்ம தூக்கம் போ, கும்பகர்ணி. யாராது மேலே ஏறி உள்ள வந்து கொள்ளை அடிச்சா கூட தெரியாது உனக்கு” இயல்பான அவன் கிண்டலில் சிரித்தவள்,

“கொழுப்பு கூடி போயிருக்கு” என்று கூறி நகர்ந்தாள்.

“பசிக்கிது, சாப்பிட எதுவுமில்லை என்கிட்டே... சமைக்கவும் முடியும்னு தோணலை”

“ம்ம்... செய்யுறேன். முதல குளிச்சிட்டு ஒழுங்க கட்டை பிரிச்சு டிரேசிங் பண்ணிட்டு வாங்க”

“ஒகே....”

எதுவும்... எதுவுமே அங்கு வித்தியாசமாக உணரவில்லை இருவரும். அவன் ஏதோ எப்போதும் பழகும் நபர் போலவும், அவள் ஏதோ எப்போதும் வரும் நபர் போலவுமே பேசிக்கொண்டனர்.

அந்த இயல்பும் உரிமையும் எப்படி ஏன் வந்தது என்று அவன் அறிவான். ஆனால் அவள்? அறியும்போது அதனை ஏற்கும் பக்குவம் அவளிடம் இருக்குமா?

தீராது போதை காதல்...!!!
 
Top