Home Antiheroதளிர் – 07

தளிர் – 07

by Vathani S

தளிர் 7

நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த உஷாவிற்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிய ஆரம்பித்தது. கண்களை மூடித் திறந்து இருளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்தியவள் மனதில் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு.

இருள் சூழ்ந்திருந்தாலும் அவளால் அந்த வீட்டை உடனே கண்டுபிடிக்க முடிந்தது. மூன்றே நாட்கள்தான் அவள் இந்த வீட்டில் இருந்திருந்தாலும், அவளால் அத்தனை சீக்கிரம் அந்த வீட்டை மறந்திட முடியுமா?

இதயத்தைப் பிளந்துகொண்டு பெருவலி ஒன்று புறப்பட்டது. கண்களை இறுக்க மூடி அந்த வலியை தனக்குள் அடக்கியவள், பழக்கப்பட்ட வீடுதான் என்பதால், கட்டிவைத்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தாள் உஷா. திடுமென அந்த வீட்டின் ஒரு அறைத் திறக்கப்பட, தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

அவளைக் கடத்தும் போது எப்படி இருந்தானோ, அப்படியே அவள் முன் வந்து நின்றவனின் முகம் மட்டும் உணர்வுகளைத் தொலைத்திருந்தது.

உஷாவின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி வாயில் ஒட்டியிருந்த ப்ளாஸ்டரைக் கழட்டினான். அதில் வலியில் முகம் சுளிக்க, அப்போதும் அவன் முகத்தில் உணர்வுகளின் சாயல் ஒன்றும் தென்படவில்லை.

நாற்காலியைச் சுற்றிக் கட்டியிருந்தக் கயிற்றை மட்டும் கழட்டியவன் பக்கத்தில் இருந்த ஜூஸ் க்ளாசை எடுத்து நீட்ட, அவனைப் பார்க்காமலே வேண்டாமெனத் தலையசைக்க, க்ளாஸ் ஒரு மூலைக்குச் சென்று விழுந்தது.

அதன் சத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்க்க, “உன்னை எல்லாம் இத்தனை நாள் விட்டு வச்சதே தப்புடி. பேச ஒரு மைக்கும் எழுத ஒரு பேனாவும் கிடைச்சா என்ன வேணும்னாலும் செய்வியா?” என்ற நரேன்,

உஷாவின் கையில் கட்டியிருந்த கயிற்றை மேலும் இறுக்க, “ஷ்ஷ்…” என்றவள், அதுவரை என்னவென்றே அறியாத, அவன் மேல் இருந்த சிறுதுளி உணர்வும் சுத்தமாக மறைந்துவிட, அவனை முறைத்துப் பார்த்தாள். அந்தப் பார்வையே சொல்லியது ‘நீ இன்னும் பொறுக்கித் தான்டா’ என.

அவள் பார்வையைப் படித்தவன் முகத்தை தனக்கு அருகில் இழுத்து, இரு கன்னத்தையும் அழுத்திப் பிடித்து, “நீ என்ன நினைச்ச என்னைப் பொறுக்கின்னுதானே, ஹான்… பொறுக்கித்தான்டி. நான் எப்போ இல்லைன்னு சொன்னேன். அப்படி இல்லைன்னா உன்னை மாதிரி ஒரு ரவுடிய மேய்க்க முடியுமா?” என்றவாறே இதழ்களை வருட, அதுவரை அவனையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் இதழில் கை படவும் அவனை நிமிர்ந்து, ‘இதைத் தவிர உன்னால் வேறு என்ன செய்திட முடியும்’ எனத் திமிராகப் பார்த்தாள்.

அதில் கடுப்பானவன் தன் ஒட்டு மொத்தக் கோபத்தையும் காட்டும் பொருட்டு, அவளை அப்படியே கட்டி வைத்த சேரோடு கீழே தள்ளிவிட்டான்.

“இதத் தவிர உன்னால வேற பண்ண முடியும்னுதான பார்க்குற? என்ன பண்ண முடியும்னு காட்டுறேன், அதுக்குப் பிறகும் நீ இப்படித்தான் பார்க்குறியான்னு எனக்குத் தெரியணும்.” என நக்கலாகப் பேசியவன், தன் சட்டைப் பட்டனில் கை வைக்க நரேனின் போன் அலறியது.

அதை எடுத்துப் பார்த்தவன் அழைத்தது விக்ரம் என்றதும், அட்டெண்ட் செய்து காதில் வைக்க, “உஷா வீட்டுக்குப் போயாச்சா?” என்றான்.

“எஸ் பாஸ்.” என்றான் நரேனும் அமைதியாக.

“உன் வீட்டுக்கு இல்லடா, அவ வீட்டுக்கு. விட்டாச்சா இல்லையா, இன்னும் டென் மினிட்ஸ்ல உஷா அவ வீட்டுல இருக்கணும்.” என்றான் விக்ரம் கட்டளையாக.

“பாஸ் இதுவும் அவ வீடுதான்.” என்று அழுத்தமாக சொன்னவன், “அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியல, தெளிஞ்சதும் கொண்டு போய் விடுறேன். ஓவர்டோஸ் போல இன்னும் அப்படியேதான் இருக்கா.” என்றான் பிசிரற்றக் குரலில்.

“ஓ…” என்ற விக்ரம் தன் நாடியைத் தடவியபடியே, “இதை என்னை நம்ப சொல்றியா இடியட். முதல்ல அவளைக் கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு ஹாஸ்பிடல் வா. இங்க அந்த ப்ளடிகூட யாரும் இல்ல. எனக்கு ஒரு எமெர்ஜென்சி வொர்க் இருக்கு கிளம்பணும்.” என கோபத்தில் கத்த,

அதில் என்ன கண்டானோ வேறெதுவும் பேசாமல், “எஸ் பாஸ்.” என்று போனை வைக்கப் போக,

“நரேன் நிலைமை கை மீறிப் போயிடல தானே…” என்றான் இப்போது கொஞ்சம் பதட்டமாக.

அந்தக் கேள்வியில் நொடி நேரம் அமைதி காத்த நரேன், பின் ஒரு பெருமூச்சோடு, “நோ பாஸ்.” என்றுவிட்டு போனை அணைத்துவிட்டு அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

கீழேக் கிடந்தவளைத் தூக்கவும் இல்லை, அவளைப் பார்க்கவுமில்லை, பார்வை நிலத்தைத் தாங்கியிருந்தது.

“என்ன சொன்னான் உங்க பாஸ்? செஞ்சிடுனு சொன்னவனே செய்யாதன்னு சொன்னானா?” எனப் படு நக்கலாக புருவம் உயர்த்தி உஷா கேட்க,

அதுவரைக் கட்டுப்படுத்தியிருந்தக் கோபம் அணை மீற, கீழேக் கிடந்தவளின் அருகில் வேகமாக வந்தவன் அவளது கன்னத்தை வலிக்கப் பிடித்து, “இந்த வாய்க்குத்தான்டி உன்னை இப்படி வச்சிருக்கேன், அப்பவும் நீ திருந்தல இல்ல.” என்றவன், அவள் சுதாரிக்கும் முன் இதழ்களைக் கவ்விக்கொள்ள, திமிறித் திணறியவளைத் தன் வன்மையான அணைப்பில் அடக்கினான்.

தேன் சிந்தும் அவளின் அதரங்களை சுவைத்து நாட்களாகிப் போனதாலோ என்னவோ, சுவை கூடிப் போயிருந்தது. அதன் போதையில் அவனது வேகம் கூடக்கூடப் பொறுக்க முடியாதவள், தன் வேகம் மொத்தத்தையும் கொடுத்து அவனைத் தூரமாகத் தள்ளிவிட,

அவளின் உதாசீனத்தில் கோபம் இரட்டிப்பாக வர, “ஏய்…” என்று வேகமாக வந்தவன் பின் நொடிகளுக்குள் தன்னைக் கட்டுப்படுத்தி, தன் முழு நீளத்திற்கும் நிமிர்ந்தவன், “ஃபைவ் மினிட்ஸ், ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்தான் உனக்கு டைம். அதுக்குள்ள கார்ல இருக்கணும். அப்படி இல்ல, முடியாதுன்னு நீ சொன்னா, நடக்கப் போற விபரீதத்துக்கு நான் பொறுப்பாக முடியாது. என் எக்ஸ்ட்ரீம் லெவல் என்னனு உனக்கேத் தெரியும்.” என்றுக் கட்டுப்படுத்தப்பட்டக் கோபத்தில் கத்திவிட்டு விறுவிறுவென வெளியில் சென்றுவிட்டான்.

நரேன் நடந்துகொண்ட விதத்தில் உண்டான அவமானமும், அதைத் தடுக்க முடியாத தன் இயலாமையும் சேர்ந்து அழுகை வந்தது உஷாவிற்கு. பொங்கி விழுந்த நீரைப் புறங்கையால் துடைத்தவள், அந்த அறையை வேகமாகப் பார்வையிட்டாள். அவளுக்குத் தெரியும் தன் எதிர்பர்ப்பு ஏமாற்றத்தைத்தான் தரும் என்று. ஆனாலும் மனம் எதிர்பார்க்கத்தான் செய்தது. காதல் மனம் அல்லவா? மானம் ரோசத்தை விடுத்து எதிர்பார்த்தது.

அவள் எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைத்து விடாதா என்ற ஆசை அவளை உந்த, அறையை மீண்டும் மீண்டும் பார்வையிட்டாள்.

இல்லை! எதுவுமில்லை! அவள் எதிர்பார்த்த எதுவுமே அந்த அறையில் இல்லை. காதல் கொண்ட மனம் ரணமாக வலித்தது. வலித்த நெஞ்சைத் தடவியபடியே நின்றாள்.

வெளியில் கேட்ட தொடர் ஹாரன் ஒலி நிமிடம் ஐந்தைக் கடந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்ல, கட்டப்பட்ட கைகளுடனும், ஏமாற்றத்தில் உண்டான ஆத்திரத்துடனும் கண்களில் துளிர்த்த நீருடனும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

அடுத்து அவள் வீட்டிற்குச் செல்ல ஆன இருபது நிமிடங்களும் அமைதியிலேயேக் கழிய, எண்ணங்கள் பின்னோக்கி கடந்தக் காலத்தை அசைப்போட்டாலும், இருவரின் பார்வையும் நேர்கொண்ட சாலையை நோக்கியே இருந்தது.

அவளது வீட்டின் முன்னே கார் நிற்க இறங்கப் போனவளைப் பார்த்தவன், “வெயிட்…” என்றுவிட்டு அவளைத் திருப்பி அவளின் பின்பக்க ஜீன்சில் கைவிட்டு, பாக்கெட்டில் இருந்த பென்னை எடுத்து, அதைத் திருக கத்திமுனை முன்னே வந்தது.

அதை வைத்து கைக்கட்டை வெட்டி அவிழ்த்தவன் அதேக் கையில் அந்தக் கத்தியைக் கொடுத்துவிட்டு, “கோ.” என்றுவிட்டு ஆக்சிலேட்டரை அழுத்த, பொருள் விளங்காப் பார்வையோடு அவனைப் பார்த்தவள், வேகமாக இறங்கி வீட்டிற்குள் கிட்டத்தட்ட ஓடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தன் அழுகையை அவனுக்குக் காட்டக்கூடாது என்ற மனைவியின் ஒட்டம் அவனுக்குப் புரியாதா என்ன? உதட்டில் தோன்றிய விரக்திப் புன்னைகயோடு மருத்துவமனையை நோக்கிப் பறந்தான் நரேன்.

***

இங்கு மருத்துவமனையில் ரேணுகா சொன்னதைப் போலக் குழந்தையுடன் நிசப்தியின் அறைக்குப் போனவன், மயக்கத்தில் இருந்தவளை வலி நிறைந்த கண்களோடுப் பார்வையிட்டான்.

குழந்தை அவளைப் பார்த்ததும் அருகே செல்ல எத்தனிக்க, அதை உணர்ந்தவன் கட்டிலுக்கு அருகே கொண்டு செல்ல, தாயின் கன்னங்களை வருடி, “ம்மா… ம்மா… எந்து… எந்து…” என மழலையில் உதடுப் பிதுக்கி அழுகைக்கு ஆரம்பமாகியபடியே அழைத்தது.

அதைப் பார்த்ததும் விக்ரமின் கண்களும் கலங்க, குழந்தையின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டவன், “நோ பேபி அம்மா தூங்குறா. தூங்கி எழுந்ததும் பேபியைத் தூக்கி விளையாடுவா. இப்போ நீங்க பாட்டிக்கிட்ட போய் இருங்க.” என வெளியில் கொண்டு வந்து தாயிடம் கொடுத்துவிட்டான்.

அழுதக் குழந்தையை வாங்கி சமாதானம் செய்தவர் மகனின் கலங்கிய முகத்தைத் திருப்தியுடன் பார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இருவரும் கிளம்பவும் மருத்துவரின் அறைக்குள் செல்ல, இவனுக்காகவேக் காத்திருந்தது போல அவரும், “கமான் விக்ரம், ப்ளீஸ் சிட்.” என்றதும்,

“எஸ் முகுந்த் ரிப்போர்ட் என்ன வந்திருக்கு?”

“யூ ஆர் கரெக்ட் விக்ரம். புல்லட் இம்போர்டேட்தான். கண்டிப்பா நம்ம பசங்க செய்யல, நீங்க சொன்ன உங்காளும் இல்ல. உங்க கெஸ் படி வேற யாரோ இதை செய்றாங்க. யாருன்னு நீங்கதான் கண்டுப்பிடிக்கணும்.”

“ம்ம்… வேற யாரு? எல்லாம் ஸ்வாதிதான். அவளோட விஸ்வாசிகள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க முகுந்த். சடனா யார் மேலயும் கை வைக்க முடியாது. பட் எனக்கொரு கெஸ் இருக்கு. ஐ வில் செக்.”

“ஓகே விக்ரம், டேக் கேர். நீங்க சொன்ன மாதிரியே இன்னைக்கு முழுக்க ஷீ இஸ் அன்டர் சடேஷன். டுமாரோ ஷீ வில் பீ ஆல்ரைட். பட் கன்டின்யூஸ் ரெஸ்ட் தேவை. அதை எடுக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு.

“எஸ் முகுந்த். ஐ கேன் டூ இட். நான் சடேஷன்ல வைக்கச் சொன்னதே இதுக்குத்தான். மயக்கம் தெளிஞ்சிருந்தா டுடே ஷீ வில் கம் இன் கோர்ட். அதனாலதான் சொன்னேன்.”

“ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் விக்ரம். சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. எவ்வளவு நாள் நீங்க இப்படி அலார்ட்டாவே இருக்க முடியும்?”

“ம்ம்… எஸ் முகுந்த். ஓவரால் ஆப்ரேஷன் சக்ஸஸ்தான். இன்னும் சில எவிடென்ஸ் கிடைச்சிட்டா ஷீ வில் ஃப்ரீ பேர்ட். நானும் பேபியோட ரிலாக்ஸாகிடுவேன். பார்ப்போம், ஓகே முகுந்த் தேங்க்ஸ்… தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க்.”

“என்ன விக்ரம் இது தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு? நீங்க எனக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கீங்க, அதைவிட நான் செஞ்சது ஒன்னும் பெருசு இல்ல.”

“ஓகே முகுந்த், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்? பேபி ரொம்ப அழறாளே…”

“கண்டிப்பா த்ரீ டேய்ஸ் என் கன்ட்ரோல்ல இருக்கணும் விக்ரம், மெடிசின் சைடெஃப்க்ட் செக் செய்யணும். அதுக்குப் பிறகுதான் டிஸ்சார்ஜ். பேபி ஏன் அழறா? ஆன்ட்டிக்கிட்ட, ரித்திக்கிட்ட எல்லாம் நல்லா ஒட்டிக்கிட்டாளே…”

“ம்ம்ம்… ஆமாம். ஆனா அம்மா இங்க இருக்கணும் இல்லையா? ரித்தியும் இப்போ நைன்த் மன்த். அவளுக்கும் சிரமம். ரவி அம்மாவை சுத்தமா நிசப்திக்கு பிடிக்காது. அதான் யோசனை…”

“அப்போ உஷாவைக் கூப்பிடலாமே… நிசப்தியோட ஃப்ரண்ட் தானே. ரெண்டு பேரும் டச்லதானே இருக்காங்க.” என்று முகுந்த் சொன்னதும்தான் விக்ரமிற்கு உஷாவைக் கடத்தச் சொன்னதே ஞாபகம் வந்தது. முகுந்த் இருப்பதையும் மறந்து நரேனுக்கு அழைத்து உடனே அவளை வீட்டில் விடச் சொல்லிவிட்டு முகுந்திடம், “நிசாவுக்காக ஓவர் டியூட்டி பார்க்குறா, அதான் நரேனை விட்டுக் கொஞ்சம் மிரட்டச் சொன்னேன்.” என்றான் விக்ரம்.

“ம்ம்… அவங்க கேஸ் என்னாச்சு? மியூச்சுவலா கன்செர்ன் தானே…”

“அப்படியெல்லாம் விடமுடியாது முகுந்த். நான் செஞ்சு வச்ச கல்யாணம். தோத்துடக்கூடாது. அப்படி தோத்துட்டா நானே தோத்துட்ட மாதிரி. உஷாவுக்கு அவன் மேல லவ் இருக்கு. நரேன்தான் முரண்டுப் பிடிக்கிறான். அவனோட பெர்சனல்ல நான் அளவுக்கு மீறித் தலையிட முடியாது இல்லையா. பட் சரி செஞ்சிடலாம். அதான் அவனோட நிஷா இருக்காளே, சரி செஞ்சிடுவா.”

“ம்ம்… எல்லாம் சரியானா சந்தோசம்தான். இனி எல்லாமே நல்லதாகவே நடக்கட்டும்.”

“எஸ் முகுந்த், நல்லதாகவே நடக்க வச்சிடலாம். ஓகே முகுந்த் நான் நிசாகூட இருக்கேன். யூ கேரியான்.” என்று முகுந்த்திடம் கை குலுக்கிவிட்டு விக்ரம் வெளியேற, முகுந்தின் போன் அலறியது. அழைத்தது வேறு யாருமல்ல ரவிதான்.

‘இவனுங்க ரெண்டு பேர் கூடவும் படிச்சு ஃப்ரண்டானதுக்கு நல்லா செய்றாங்கடா’ எனப் புலம்பியவாறே போனை எடுத்துக் காதில் வைக்க, “போன் எடுக்க எவ்வளவு நேரம்டா உனக்கு?” என ரவி கத்த,

“ம்ம், ஏன்டா சொல்லமாட்ட? இவ்வளவு நேரம் அவன் இங்க இருந்தான், இப்போ நீ. சரி சொல்லு என்ன விஷயம்?”

“என்ன சொல்லணும்? நீதான்டா சொல்லணும். நிஷாவுக்கு எப்படி இருக்கு?” என்று அதட்ட,

விக்ரமிடம் சொன்னதையே இவனிடமும் சொல்லிவிட்டு, “ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் ரவி. இன்னும் இதுபோல அட்டாக் நடக்க வாய்ப்பிருக்குன்னு விக்ரம் சொல்றான்.”

“ம்ம் என் கெஸ்ஸும் அதுதான். செக்யுரிட்டி அரேஞ்ச் செய்றேன். ஓகே முகுந்த் நான் அப்புறம் பேசுறேன்.” என்ற ரவியின் முகத்தில் பலத்த யோசனை.

ரவியின் முகத்தில் தெரிந்த யோசனையில் “என்னாச்சு ரவி? முகுந்த் அண்ணா என்ன சொன்னாங்க?” என்ற ரித்தியிடம், அனைத்தையும் சொன்னவன், “எனக்கு என்னமோ பேபிக்காக விக்ரம் டபிள் கேம் ஆடுறானோ என்று தோனுது.” எனவும்,

“விக்கி அப்படி எல்லாம் செய்யமாட்டான் ரவி. பட் நடந்ததை எல்லாம் பார்த்தா அப்படியும் இருக்குமோன்னுதான் எனக்கும் தோனுது.” என ரித்தியும் சொல்ல,

“ம்ம்… அது மட்டும் உண்மைன்னு தெரிஞ்சது, உன் அண்ணன் சாவு என் கைலதான்.” என்ற ரவியின் முகத்தில் நொடியில் ரௌத்ரம் தோன்றி மறைந்தது.

***

You may also like

1 comment

mriomrio28399 February 4, 2026 - 7:29 pm

ஆமா, எனக்கும் விக்ரம் மேலத் தான் டவுட் வருது, பேபிக்காகவும், நிசாப்தியை தன்னோட வாழ்க்கையில இருந்து நிரந்தரமா விலக்கி வைக்கவும் இப்படியெல்லாம் பண்றானோன்னு டவுட் வருது.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured